அதிமுக பிரமுகரிடம் பிக்பாக்கெட் அடித்த நடிகர் கைது!



சென்னை: அதிமுக பிரமுகரின் கிரடிட் கார்டை திருடிய காதலும் கற்று மற பட ஹீரோ கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.


தஞ்சையை அடுத்த கடம்பங்குடியைச் சேர்ந்தவர் ரஞ்சன் (வயது 54). இவர் ராயப்பேட்டை லாயிட்ஸ் ரோட்டில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தார். அப்போது அவர் வைத்திருந்த பையை யாரோ திருடிச்சென்று விட்டனர். அதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செக் புக் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருந்தார்.

இது குறித்து ரஞ்சன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்தார். உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கிரெடிட் கார்டை திருடியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர் போலீசார்.

அப்போது ரஞ்சனிடம் திருடப்பட்ட கிரெடிட் கார்டை பயன்படுத்தி சென்னையில் உள்ள பல்வேறு கடைகளில் எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இளைஞர் ஒருவர் அந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருவதும் தெரிய வந்தது. முகப்பேரில் உள்ள ஒரு கடையில், விலை உயர்ந்த டி.வி. மற்றும் மைக்ரோ ஓவன் அடுப்பு ஆகியவற்றை வாங்கியபோது பிடிபட்டார்.

சினிமா ஹீரோ

ரஞ்சனிடம் கிரெடிட் கார்டை திருடி பொருட்களை வாங்கி வந்தவர் கார்த்திக் என்ற சினிமா நடிகர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

மகளிர்க்காக, காதலும் கற்று மற ஆகிய தமிழ் படங்களிலும், சனம் என்ற தெலுங்கு படத்திலும் கார்த்திக் நடித்துள்ளார்.

திருத்தணியைச் சேர்ந்த இவர், தற்போது முகப்பேரில் வசித்து வருகிறார். மெக்கானிக்கல் என்ஜினீயரிங் முடித்துள்ள இவர், அ.தி.மு.க. அலுவலகத்தில் வைத்து ரஞ்சனிடம் பையை பிக்பாக்கெட் அடித்துள்ளார்.

இவரது சகோதரர் சென்னையில் பல்வேறு கிளைகளுடன் இயங்கி வரும் பிரபல ஓட்டல் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Karthik, hero of films like Kadhalum Katru Mara and Magalirkkaga has arrested by Chennai police for pickpoketing ADMK functionary. Karthik's brother is the owner of popular Restaurant chain in Chennai.
 

ரசிகர் மன்றங்களை அஜீத் தொடரக் கோரி போராட ரசிகர்கள் முடிவு

Tags:

Ajith
ரசிகர் நற்பணி மன்றங்களைக் கலைக்கும் முடிவை நடிகர் அஜீத் மறு பரிசீலனை செய்யக் கோரி அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட சிவகங்கை மாவட்ட அஜீத் ரசிகர் மன்றத்தினர் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ் திரைப்படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களையும், ரசிகைகளையும் கவர்ந்தவர் நடிகர் அஜித்குமார். இந்தநிலையில் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டதாக நடிகர் அஜித்குமார் தனது 40வது பிறந்தநாளில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு ரசிகர், ரசிகைகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித பலனையும், எதிர்பாராமல் சமூக தொண்டுகளில் அஜித்குமார் ரசிகர் மன்றத்தினர் ஈடுபட்டு வந்தனர். குறிப்பாக தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜித்குமார், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளை மையமாக வைத்து அஜித்குமார் மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என சந்தேகப்பட தேவையில்லை.

ஏன் எனில் இந்த மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு நலத்திட்டங்களை செய்து வந்தவர்கள் என்பதை இந்தநாடும் அஜித்குமாரும் அறிந்த ஒன்று இந்த நிலையில் இதுபோல அவர் எடுத்து இருக்கும் முடிவை எங்களது சிவகங்கை மாவட்ட அஜித்
குமார் ரசிகர் மன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அஜித்குமார் முடிவை மறுபரிசீலனை செய்து நற்பணி இயக்கம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம். 15 நாட்களில் அஜித் குமார் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம்.

அறிவிக்காத பட்சத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இருந்து அனைத்து ரசிகர்களும் சென்னை சென்று அவரது இல்லத்தை முற்றுகையிட்டு எங்களது கோரிக்கையை வலியுறுத்துவோம் என்று அவர் அறிவித்துள்ளார்.

நடிகர் அஜீத் தனது ரசிகர் நற்பணி மன்றங்களைக் கலைத்து அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை பெரும் சோகத்திலும், வேதனையிலும் அதிருப்தியிலும் தள்ளியுள்ளது. இருப்பினும் அவரைத் தொடர்ந்து கொண்டாடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

அதிமுகவில் சேர கோவை ரசிகர்கள் முடிவு

அஜீத்தி முடிவைத் தொடர்ந்து கோவை மாவட்ட நற்பணி இயக்க அவரச ஆலோசனைக் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் அதிமுகவில் இணைவது என்ற முடிவை எடுத்துள்ளனர்.

மன்றத் தலைவர் அசோக்குமார் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து செயலாளரான நாகராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

நடிகர் அஜீத்தின் இந்த அறிவிப்பு கோவை மாட்ட ரசிகர்களின் இதயங்களில் இடி இறங்கியதுபோல் உள்ளது. ரசிகர்கள் ஆழ்ந்த மனவருத்ததில் உள்ளனர். நாங்கள் என்றுமே அஜீத்தின் கட்டளைபடி செயல்படுபவர்கள். அவரது முடிவை மாற்றிக்கொள்ளும்படி நெருக்கடி கொடுக்க மாட்டோம். ஆனாலும் அஜீத்தின் முடிவை கோவை மாவட்ட ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எங்களுக்கு சென்னையில் இருந்து தொலைபேசி மூலம் தகவல் வந்தது. நற்பணி இயக்கத்தை உடனடியாக கலைத்துவிடும்படி தெரிவித்தனர். நற்பணி இயக்கம் கலைக்கப்பட்டாலும் அஜீத் ரசிகர் மன்றத்தில் நாங்கள் செயல்படுவோம். தலைவர் அஜீத் சொல்லும் வழியில் நடப்போம்.

அவரது படம் வெற்றி அடைய இதுவரை கட்அவுட் மற்றும் பேனர் வைத்தோம். இனியும் அதுபோல் பட்அவுட் வைத்து கொண்டாடுவோம். அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவிற்கும் இந்த கட்அவுட் மற்றும் பேனர்கள் வைப்போம்.

அனைத்து மன்ற உறுப்பினர்களிடமும் தலா ரூ.20 வீதம் வசூலித்து முறையான இயக்கமாக எந்தவித அரசியல் சாயமும் இன்றி அஜீத்தின் வழியில் நடந்து வந்தோம்.

ரசிகர் மன்றத்தினர் அரசியலில் ஈடுபட விரும்பினால் அவரவர்கள் விரும்பும் கட்சியில் சேர்ந்து கொள்ளலாம். நாங்கள் அதிமுகவில் சேர முடிவு செய்துள்ளோம்.

இதுதொடர்பாக ஆலோசனை கூட்டம் மே 1ஆம் தேதி நடத்த உள்ளோம். இதில் அனைத்து மன்ற நிர்வாகிகளும் கலந்து கொள்வார்கள் என்றார்.
English summary
Coimbatore Ajith fans have decided to join ADMK. But they said they will continue their support to their 'Thala'.District secretary of Fans club Nagarj told this reporters. He said that, we will obey our 'Thala' order. But we will be the fans of Ajith forever. We will continue our support, we will celebrate Ajith's future movies as earlier. And we have decided to join ADMK, he added.
 

தெய்வத் திருமகன் பட டைட்டில் மாற்றம்

Tags: Deiva, objection, protests, thirumagan, vikram

Deiva Thirumagan Movie
விக்ரம் நடித்துள்ள தெய்வத்திருமகன் படத்தின் தலைப்பு 3வது முறையாக மாற்றப்பட்டுள்ளது.

விக்ரம், அனுஷ்கா, அமலா பால், சந்தானம் நடித்துள்ள படம் தெய்வத்திருமகன். இப்படத்திற்கு முதலில் தெய்வமகன் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. சிவாஜி கணேசன் நடித்த அட்டகாசமான படம் இது. இந்தப் படத்தின் தலைப்பை விக்ரம் படத்திற்கு வைக்க நடிகர் பிரபு அதிருப்தி தெரிவிக்கவே, படத்தின் தலைப்பை தெய்வத்திருமகன் என்று மாற்றினர்.

இந்தநிலையில் இந்தத் தலைப்புக்கு முக்குலத்தோர் வகுப்பிலிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுதொடர்பாக விக்ரம் வீட்டு முன்பு முக்குலத்தோர் சமுதாய அமைப்பினர் போராட்டம் நடத்தினர். மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேரில் சென்று தலைப்பை மாற்றுமாறு கோரி புகார் கொடுத்தார்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பு மீண்டும் மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தயாரிப்பாளர் மோகன் நடராஜன் விக்ரம் நடிப்பில், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாக்கி வந்த தெய்வத்திருமகன் படத்தலைப்பு குறித்து பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக மூவேந்தர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் நேரிலும், கடிதம் வாயிலாகவும் மற்ற அமைப்பினரும் தங்கள் கருத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

அதில், தமிழக மக்களால் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தெய்வத்திருமகன்
என்று போற்றப்படுவதால், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் பேசி தலைப்பை மாற்றிக் கொள்ள ஆவன செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

எனவே அவர்களது நியாயமான உணர்வுகளை புரிந்து கொண்டு தயாரிப்பாளர் மோகன் நடராஜன் தெய்வத்திருமகன் தலைப்பை விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றிக் கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

எனவே இத்திரைப்படத்தின் தலைப்பு விக்ரமின் தெய்வத்திருமகன் என்று மாற்றப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Actor Vikram's Deiva Thirumagan movie title has been changed after protests from Mukkulathor community. Now the movie is titled as Vikaramin Deiva Thirumagan. Earlier Deiva Magan was the title of the movie. But Actor Prabhu's objection the movie titled as Deiva Thirumagan.
 

வடிவேலுவின் நக்கல் பேச்சு-டென்ஷனில் ஸ்ரீரங்கம் ரஜினி ரசிகர்கள்

Tags: rsquo

Rajni and Vadivelu
ராணா படமாவது, காணா படமாவது என்று நடிகர் வடிவேலு நக்கலாக கூறியதால் ரஜினி ரசிகர்கள் கோபமடைந்துள்ளனர். வடிவேலுவைக் கண்டித்து ஸ்ரீரங்கம் பகுதியில் ரஜினி ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது.

நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்து ஊர் ஊராகப் போய் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார் நடிகர் வடிவேலு. இந்தப் பிரசாரத்தின்போது திமுக அரசின் சாதனைகளை உணர்ச்சிவசப்பட்டு மக்களிடம் விளக்கிப் பேசிய அவர், எந்தத் தகுதியில் விஜயகாந்த் தன்னை கருப்பு எம்.ஜி.ஆர். என்று கூறிக் கொள்கிறார், அவர் முதல்வராக என்ன தகுதி உள்ளது என்பது குறித்து விமர்சித்துப் பேசினார்.

வடிவேலுவின் பேச்சு எதிர்க்கட்சிகளிடையே முகச் சுளிப்பை ஏற்படுத்தினாலும் கூட பெருவாரியான மக்கள் அவரது பேச்சை ரசித்துக் கேட்டனர். விஜயகாந்த் குறித்த மறு சிந்தனைக்கும் அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

ஆனால் வடிவேலுவின் பேச்சு ரஜினி தரப்புக்கு ரசிப்பைக் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக, ரஜினியின் புதிய படமான ராணாவில் வடிவேலுவைப் போடவிருந்த முடிவை அவர்கள் விலக்கிக் கொண்டு அவருக்குப் பதில் கஞ்சா கருப்புவைப் போட்டுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வடிவேலுவிடம் கேட்டபோது, ராணாவா இருந்தாலும் சரி, காணாவாக இருந்தாலும் சரி, என்னை யார் நீக்கினாலும் அதுகுறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. திமுக அரசு நிறைவேற்றிய மக்கள் நலத் திட்டங்களை மக்களிடம் போய்ச் சொன்னேன். இதற்காக என்னை சினிமாவிலிருந்தே நீக்க முயற்சித்தாலும் கூட நான் கவலைப்பட மாட்டேன் என்றார்.

மேலும் அவர் மே 13க்குப் பிறகு எல்லாம் மாறும் பாருங்க என்றும் தனது பாணியில் கூறினார் வடிவேலு.

வடிவேலுவின் இந்தப் பேச்சு ரஜினி ரசிகர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீரங்கம் பகுதி ரஜினி ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதில்,

வண்மையாக கண்டிக்கிறோம் திரையுலகில் 3 தலைமுறைகளை வென்ற முடிசூடா மன்னன் எங்கள் அன்பு தலைவர் சூப்பர் ஸ்டாரின் ராணா படத்தை பற்றி தரக்குறைவாக பேசிய ‘‘காமொடி கைப்புள்ளையை’’ வன்மையாக கண்டிக்கிறோம். இவண் ஸ்ரீரங்கம் நகர தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பனி மன்றம் என கூறியுள்ளனர்.

சட்டசபைத் தேர்தலின்போது ரஜினிகாந்த் அதிமுகவின் இரட்டை இலைக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகி திமுகவினரை பெரும் அப்செட்டுக்குள்ளாக்கியது. குறிப்பாக முதல்வர் கருணாநிதி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதை ரஜினிகாந்த் முன்னிலையிலேயே சொல்லி பெரும் வருத்தப்பட்டார். இதனால் கருணாநிதியுடன் அமர்ந்து பொன்னர் சங்கர் படம் பார்த்த ரஜினி தர்மசங்கடத்துக்குள்ளாகினார்.

இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் தொடங்கியது முதல் திமுகவின் மிக முக்கியப் புள்ளியாக மாறியுள்ள வடிவேலு, ரஜினி காந்த் படத்தை படு துணிச்சலாக விமர்சனம் செய்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
English summary
Rajinikanth fans have raised their voice against Actor Vadivelu, who slammed Raana movie for sacking him from the film. Rajini fans have pasted condemn posters in Sri Rangam.
 

மறுபடியும் நடிப்பில் தீவிரமான மல்லிகா-மலையாளத்தில் நடிக்கிறார்

Tags: English, Malayalam, malayalam movies, Mallika, tamil, tamil movies

Actress Mallika
மல்லிகாவை நினைவிருக்கிறதா?. அதே 'ஆட்டோகிராப்' மல்லிகாதான். இடையில் காணாமல் போன மல்லிகா இப்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். ஆனால் இங்கல்ல, மலையாளத்தில்.

ஆட்டோகிராப் படத்தின் மூலம் நடிகையானவர் மல்லிகா. முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் பச்செக்கன ஒரு இடத்தைப் பிடித்த மல்லிகாவுக்கு அதன் பிறகு அதை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போய் விட்டது.

பேரரசுவின் திருப்பாச்சி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்த மல்லிகா அதன் பிறகு முக்கியப் படங்களில் நடிக்கவில்லை. இடையில் டிவி சீரியலிலும் தலை காட்டியிருந்தார் மல்லிகா.

அதன் பின்னர் அவரைக் காணவில்லை. இந்த நிலையில் மீண்டும் நடிக்க வந்துள்ளார் மல்லிகா. தமிழ் கைவிட்டு விட்ட நிலையில், தாய் மொழியான மலையாளத்தில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார் மல்லிகா.

இரு மலையாளப் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ள மல்லிகா தமிழிலும் நடிக்க ரெடியாக இருக்கிறாராம். நல்ல வாய்ப்பு கிடைத்தால் தமிழிலும் நடிப்பாராம்.

முக்கியமான விஷயம், முன்பை விட படு பளபளப்பாக, புதுப் பொலிவோடு காணப்படுகிறார் மல்லிகா!.
English summary
Actress Mallika is acting in Malayalam movies. She was not acting in Tamil movies for the last few months. But now she is acting in Malayalam. She is ready to return to Tamil also.
 

'மங்காத்தா'வுக்காக காத்திருக்கும் அஜீத் ரசிகர்கள்!

Tags: announcement, club, fans club, Mangatha, no doubt, Thala, victory

Ajith and Trisha
அஜீத் ரசிகர்கள் நிச்சயம் வித்தியாசமானவர்கள்தான். மன்றங்களே வேண்டாம் என்று அவர்களது நாயகன் அஜீத் அறிவித்து விட்ட நிலையிலும் கூட அஜீத் நடித்துள்ள மங்காத்தா படத்தை வெற்றிப் படமாக்கவும் அதை ரசிக்கவும் அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள்.

அஜீத் ரசிகர்கள் அத்தனை பேரும் ரசிகர் மன்றங்களைக் கலைப்பதாக அஜீத் விடுத்துள்ள அறிவிப்பால் அதிர்ந்து போயுள்ளனர். ஆனாலும் அவர்கள் சற்றும் தளரவில்லை. மன்றங்களுக்குள் புகுந்து விட்ட தேவையில்லாத அரசியலைக் களையும் வகையில்தான் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார் அஜீத். ஆனால் அவர் ரசிகர்களைக் கைவிட மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர்.

அஜீத் அறிவிப்பை ஓரம் கட்டி வைத்து விட்ட அவர்கள் தற்போது அஜீத்தின் 50வது படமான மங்காத்தாவுக்காக காத்துள்ளனர்.

இன்று மே 1. அஜீத்தின் பிறந்த நாள். இந்தத் தேதியில்தான் மங்காத்தா வருவதாக திட்டமிடப்படடஜ்டிருந்தது. தற்போது அது ஜூனுக்குத் தள்ளிப் போய் விட்டது.

இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். படத்தை பெரும் வெற்றியாக்குவதறப்காக அவர்கள் தயாராகி வரும் நிலையில் படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அஜீத் ரசிகர்களின் இந்த வித்தியாச ஆர்வம், திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
English summary
Ajith fans are really different, no doubt. After Ajith's announcement of disbanding his fans club, the fans are upset, but not ready to let off their Thala. They are eagerly waiting for Ajith's 50th movie Mangatha to make a big victory. Mangatha is slated for a June release.
 

முற்றும் துறக்கும் பிரைடா பின்டோ


Freida Pinto
டார்சம் சிங்கின் புதிய படமான இம்மார்ட்டல்ஸ் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நாயகி பிரைடா பின்டோ அப்படத்திற்காக நிர்வாணமாக தோன்றப் போகிறாராம்.

ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் பிரபலமான பிரைடா பின்டோ, இப்படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடிக்கவிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த பின்னர் முழுமையான கவர்ச்சியில் அவர் நடிக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்தப் படத்தில் பிரைடா கவர்ச்சியாக நடிப்பதை நிரூபிக்கும் வகையிலான டீசர்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஒரு புகைப்படத்தில் முதுகை மட்டும் காட்டியபடி முன்புறம் முற்றும் துறந்த நிலையில் காணப்படுகிறார் பிரைடா.

இப்படத்தில் பாதீரா என்ற வேடத்தில் வருகிறார் பிரைடா. அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஹென்றி கேவில்.

English summary
Freida Pinto will be baring it all in Tarsem Singh’s upcoming movie Immortals. The Slumdog Millionaire actress will be seen doing an intimate sex scene in the film. This would be her first makeout scene in a movie since her debut. There is already buzz surrounding the sensuous nature of Freida’s role, now that the teaser of the film is out. She not only features prominently in the promo but also shows some skin when she goes backless in a particular scene.
 

கின்னஸ் சாதனை புரிந்த நடிகர் அலெக்ஸ் மரணம்

Alex
நடிகராக மட்டுமல்லாமல் மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று, அதில் உலக சாதனையும் படைத்துள்ள நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 52.

திருச்சியைச் சேர்ந்தவர் அலெக்ஸ். ரயில்வேயில் பணியாற்றி வந்தவர். வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். நடிக்க வருவதற்கு முன்பே மாஜிக் கலையில் நிபுணத்துவம் பெற்று சிறந்த மாஜிக் கலைஞராக திகழ்ந்தவர்.

ஏராளமான படங்களில் வில்லன், குணச்சித்திரம், காமெடி என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்துள்ளார். 24 மணி நேரம் தொடர்ந்து மாஜிக் நிகழ்ச்சிகளை நடத்தி கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.

சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் அலெக்ஸ். அடிக்கடி வயிற்று வலியும் ஏற்பட்டு வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு அறுவைச் சிகிச்சையும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அலெக்ஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் உடனடியாக திருச்சி கொண்டு செல்லப்பட்டது. இன்று உடல் அடக்கம் நடைபெறுகிறது. அலெக்ஸுக்கு திரவிய மேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என இரு மகள்களும் உள்ளனர்.

அலெக்ஸின் மறைவுக்கு நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

English summary
Tamil actor Alex died at a private hospital in Chennai following a brief illness. He was 52 and is survived by his wife and two daughters. Alex had debuted in films with the Rajinikanth-starrer Valli’. Industry sources said he had acted in over 100 films, playing the role of villian in many. He was well-known as a magician before he entered movie world. He had won the best character actor award from the state government for a role he played in the Simran starrer Kovilpatti Veeralakshmi’.
 

'காதல் கல்லூரி'யில் நமீதா!

Tags: actress, body, body language, film, glamorous roles, image, kannada film, love, movie, Namitha, oomph, showcase, yoga teacher


Namitha
அதீத கவர்ச்சிப் பாவையாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்த நமீதாவை வித்தியாசமான கோணத்திலும், வித்தியாசமான கேரக்டரிலும் ரசிகர்கள் காணும் நாள் நெருங்கி விட்டது.

தெலுங்கில் நமீதா நடித்து வரும் படம் லவ் காலேஜ். இப்படத்தில் யோகா ஆசிரியையாக நடிக்கிறார் நமீதா. கவர்ச்சிகரமான பாத்திரத்தில் மட்டுமல்லாமல், அதிரடி ஆக்ஷனிலும் பின்னி எடுத்திருக்கிறாராம் நமீதா.

இதற்காக மெனக்கெட்டு தனது உடல் பொலிவையும் கூட்டி, தேவையற்ற கொழுப்பைக் கைவிட்டு டிரிம்மாகி அசத்தலாக காணப்படுகிறார்.

இதுவரை தனக்குள் மறைந்திருந்த நடிப்புத் திறமையை மொத்தமாக இதில் வெளிக்காட்டி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கவுள்ளாராம் நமீதா.

இது கன்னடத்தில் வெளியான நமீதா ஐ லவ் யூ படத்தின் டப்பிங்தான் என்ற போதிலும், அது தெரியாத அளவுக்கு படத்தில் சில மாறுதல்களையும் செய்து சேர்த்து பொலிவேற்றியுள்ளனராம்.

விரைவில் இப்படம் தமிழிலும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

English summary
Actress Namitha, who was seen in many glamorous roles, is keen to change her image. Now, she has decided to discard her oomph factor and is heading for a serious role thorugh Love College, a Telugu movie. Her body language and looks show that the actress wants to showcase her hidden talent. She plays the role of a yoga teacher in the film. The movie is a dubbed version of upcoming Kannada film Namitha I Love U.
 

தாராவியில் மங்காத்தா ஷூட்டிங்-அஜீத் காயம்-ஊன்று கோலுடன் நடக்கிறார்

Tags: ajith kumar, help, leg, leg injury, Mangatha, mumbai, stick, summaryActor, walking stick


Mankatha Shooting
மும்பையில் உள்ள தாராவியில் மங்காத்தா படபிடிப்பின்போது நடிகர் அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது. ஆனால் அவர் அதை பொருட்படுத்தாமல் ஊன்று கோலுடன் நடந்து நடித்தார்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மங்காத்தா படபிடிப்பு மும்பை தாராவி பகுதியில் நடந்தது. அப்போது அஜீத்துக்கு காலில் காயம் ஏற்பட்டது.

இது குறித்து வெங்கட் பிரபு கூறியதாவது,

தாராவியில் வைத்து சேசிங் காட்சி ஒன்றை படமாக்கினோம். அப்போது அஜீத்துக்கு காலில் சுளுக்கு ஏற்பட்டு கடும் வலி ஏற்பட்டது. ஆயினும் அவர் அதை பொருட்படுத்தாமல் ஊன்றுகோல் ஊன்றி நடந்து நடித்துக் கொடுத்தார்.

அவன் ஊன்று கோலுடன் நடந்ததைப் பார்த்தவர்கள் அஜீத் மங்காத்தாவில் ஊனமுற்றவராக நடிக்கிறார் என்று நினைத்துக் கொண்டனர் என்றனர்.

English summary
Actor Ajith Kumar had got leg injury while shooting for Mangatha in Dharavi, Mumbai. He didn’t mind the pain and acted in the remaining scenes with the help of walking stick.
 

தலையில் தூண் விழுந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் காயம்

Tags: injury, minor injury, pillar, plywood, Shivaraj, summaryA, yesterday


Shivrajkumar
கன்னட திரையுலக ஜாம்பவான் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூத்த மகன் சிவராஜ் குமாரின் வெள்ளி விழாவில் அவர் தலையில் அலங்காரத் தூண் விழுந்தது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக சிறிய காயத்துடன் உயிர் தப்பினார்.

கன்னட திரையுலகினரால் இன்றும் பெரிதும் மதிக்கப்படுபவர் நடிகர் ராஜ்குமார். அவரது மூத்த மகன் சிவராஜ்குமார். அவர் திரையுலகிற்கு வந்து 25 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன.

பெங்களூர் மெஜஸ்டிக் பகுதியில் உள்ள காந்திநகரில் நேற்று மே தின விழா நடந்தது. அதில் சிவராஜ்குமார் தனது மனைவி கீதாவுடன் கல்ந்து கொண்டார். இந்த விழாவில் அவருக்கு பாராட்டு நிகழ்ச்சிக்கும் சினிமாக் கலைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

வெள்ளிவிழா நாயகனையும், அவரது மனைவியையும் அலங்கார சாரட் வண்டியில் வைத்து ரசிகர்கள் அழைத்துச் சென்றனர். வண்டி சென்ற இரு பக்கங்களிலும் அலங்காரத் தூண்கள், வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன.

அவர்களை அழைத்துச் செல்கையில் ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர், தம்பதிகள் மீது மலர் தூவி வாழ்த்தினர்.

அப்போது பிளைவுட் மரத்தால் செய்யப்பட்ட அலங்காரத் தூண் ஒன்று திடீர் என்று சிவராஜ்குமார் தலைமீது விழுந்தது. இதில் அவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

இதனால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து மீள அவருக்கு சில நிமிடங்கள் ஆனது. இந்த சம்பவம் நேற்று பகல் 12.30 மணிக்கு நடந்தது. இந்த சம்பவத்தால் சிவராஜ் குமாரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

English summary
A decorative pillar made of plywood fell on Kannada actor Shivaraj Kumar in a function held in Bangalore yesterday. He has luckily escaped with minor injury in the head.
 

மும்பையில் பர்தாவில் சுற்றும் நடிகை அசின்

Tags: asin, mumbai, veil


Asin
மும்பையில் பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகள் எல்லாம் முகத்தை மறைக்காமல் வெளியே செல்கையில் ஒரு நிலையான இடத்தைப் பிடிக்க போராடும் நடிகை அசின் எங்கு சென்றாலும் பர்தாவுடன் செல்கிறாராம்.

கஜினி படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர் கானுடன் ஜோடியாக நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுடன் லண்டன் ட்ரீம்ஸ் என்ற படத்தில் நடித்தார். அது ஊத்திக் கொள்ளவே பாலிவுட்டில் அசினை திரும்பிப் பார்ப்பார் இல்லை. அவரும் தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமே என்று பல இயக்குனர்களுக்கு ஐடியா கொடுத்தார். யாரும் கேட்பதாக இல்லை. பின்னர் மறுபடியும் சல்லுவுடன் சேர்ந்து ரெடி படத்தில் நடித்து முடித்தார்.

இந்நிலையில் அவர் மும்பையில் எங்கு சென்றாலும் ரசிகர்கள் வந்து சூழ்ந்து கொள்வார்கள் என்ற பயத்தில் பர்தா அணிந்து செல்கிறார். பாலிவுட்டின் கலக்கும் நாயகிகளான கரீனா கபூர், கத்ரினா கைப் மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்களே பொது இடங்களுக்கு முகத்தை மறைக்காமல் வருகின்றனர். ரசிகர்களும் பார்த்து மகிழ்கின்றனர்.

ஆனால் அசினோ பர்தா அணியாமல் வெளியே செல்வதில்லையாம்.

அன்மையில் மும்பையில் உள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு அசின் பர்தாவுடன் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த அந்த பகுதி பிரபலங்கள் இது என்ன கூத்து என்றுள்ளனர்.

அசின் அழகு நிலையத்திற்குள் நுழைகையில் அங்கு மற்றொரு பாலிவுட் பிரபலம் இருந்திருக்கிறார்.

அசின் கோலத்தைப் பார்த்து அவர் கூறியதாவது,

பிரீத்தி ஜிந்தா உள்ளிட்ட பல்வேறு நடிகைகள் இங்கு வருகையில் அனைவரும் பார்க்கும் வண்ணமே வருவார்கள். வருவார்கள். ஆனால் அசின் மட்டும் முகம் வெளியே தெரியாதவாறு பர்தா அணிந்து வருவது வியப்பாக உள்ளது. அவர் தேவையற்ற வகையில் ரசிகர்கள் சூழ்ந்து கொள்வதை விரும்பவில்லை என நினைக்கிறேன் என்றார்.

அசினுக்கு அவ்ளோ ரசிகர்களா மும்பையில், அடேங்கப்பப்பா!

English summary
Actress Asin is roaming in Mumbai with face veil to avoid unnecessary attraction(Is it?). Bollywood is wondering as to why she is doing all sort of things like this.
 

தமிழ் சினிமாவில் பீரியட் மோகம்

Tags: nbsp


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தமிழ் சினிமாவில் பீரியட் மோகம்

5/2/2011 11:45:36 AM

தமிழ் சினிமாவில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது பீரியட் படங்களின் பக்கம் இயக்குனர்களின் பார்வை திரும்பியுள்ளது. தமிழ் சினிமாவில் சரித்திரப் படங்கள் கோலோச்சிய காலம் உண்டு. சரித்திரப் படங்களுக்கு மினிமம் கியாரண்டி கூட இருந்தது. ஒரு காலகட்டத்தில் அதுவே மக்களுக்கு திகட்ட, பெரிய ஹீரோக்கள் நடித்த சரித்திரப் படங்கள் கூட தோல்வியைத் தழுவியது. பிறகு சரித்திரப் படங்களின் மவுசு குறைந்தது. தமிழ் சினிமா கிராமத்தை நோக்கி நகர்ந்ததும், சரித்திரப் படம் எடுக்க யாரும் முன்வரவில்லை. அபூர்வமாக சில படங்கள் வந்தபோதும் அது பெரும் வரவேற்பை பெறவில்லை. பக்தி படங்களைப்போலவே சரித்திரப் படங்களும் 'அவுட் ஆஃப் பேஷன்' ஆனது. ஆனால் இப்போது சரித்திரப் படங்கள் மற்றும் சரித்திர காலத்தில் நடந்த கதைகளாகச் சொல்லப்படும் படங்களின் வரத்து அதிகரிக்க துவங்கியிருக்கிறது. இவற்றை பீரியட் பிலிம் என்று அழைக்கிறார்கள்.

இதை துவக்கி வைத்தது நீண்ட நாட்களுக்கு பிறகு வெளிவந்த பீரியட் படமான 'உளியின் ஓசை'.  பிறகு 'ஆயிரத்தில் ஒருவன்'. நாட்டை விட்டு விரட்டியடிக்கப்பட்ட சோழர்கள், எங்கோ கண்காணாத தேசத்தில் தங்களைத் தேடி தூதுவன் வருவார் என்று காட்டுமிராண்டிகளாக வாழ்வதாக, கற்பனையாக சொன்ன படம். சமீபத்தில் வெளிவந்த 'பொன்னர் சங்கர்' படம் இரட்டை சகோதரர்களின் கதையைச் சொன்னது. இதுதவிர தற்போது ரஜினி நடித்து வரும், 'ராணா' 17ம் நூற்றாண்டு பின்னணியிலான பீரியட் படம்தான். இயக்குனர் வசந்தபாலன் இயக்கி வரும் 'அரவான்' 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்களின் கதையை சொல்கிறது. 'காமராஜ்' படத்தை இயக்கிய பாலகிருஷ்ணன் 'அற்றைத் திங்கள் அந்நிலவில்' என்ற படத்தை தயாரிக்க உள்ளார். இது சங்க காலத்தில் நடப்பது மாதிரியான கதை. ராமாயணக் கதையை இக் காலத்துக்கு ஏற்ற வகையில் மாற்றி 'ராவணன்' படத்தை இயக்கிய மணிரத்னம், அடுத்து கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை படமாக்குகிறார்.

இதற்கிடையில் சென்ற நூற்றாண்டின் துவக்கம், நடுப்பகுதி 1980ம் ஆண்டுவாக்கில் நடந்த கதை என சமீப கால பீரியட் படங்களும் அவ்வப்போது வெளிவந்துள்ளது. 'மதராச பட்டினம்' 1940களில் நடந்த கதையாகச் சொல்லப்பட்டது. சசிகுமார் இயக்கிய 'சுப்ரமணிபுரம்', சேரன் இயக்கிய 'பொக்கிஷம்' 80 களில் நடந்த கதையாக உருவாக்கப்பட்டது. இப்போது செல்வா இயக்கியுள்ள 'நாங்க' உட்பட சில படங்கள் பீரியட் படங்களாக உருவாகி வருகிறது. திடீரென பீரியட் பட மோகம் வர காரணம் என்ன என்று 'அரவான்' படத்தை இயக்கி வரும் வசந்தபாலனிடம் கேட்டபோது, 'சு.வெங்கடேசன் எழுதிய 'காவல் கோட்டம்' நாவலை படித்துக்கொண்டிருக்கும்போது அதில் ஒரு பகுதியை படமாக்கலாம் என்று தோன்றியது. இதை தயாரிப்பாளரிடம் சொன்னதும் சரி என்றார். அப்படி ஆரம்பிக்கப்பட்டதுதான் அரவான். வேறு எந்த திட்டமும் வைத்துக்கொண்டு சரித்திரப் படத்தை இயக்கவில்லை' என்றார்.

'தமிழ் சினிமாவில் அவ்வப்போது இப்படி சில, கதை சீசன்கள் வருவதுண்டு. அதுபோல இதுவும் ஒரு சீசன். புராண படங்கள், சரித்திர படங்கள், சமூக படங்கள், கிராமத்துப் படங்கள், கேன்சர் நோய் படங்கள், காதல் படங்கள், கடத்தல் படங்கள், ரீமேக் படங்கள், மாயாஜால படங்கள், பக்தி படங்கள் இப்படி ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒரு சீசன் இருக்கும். இப்போது பீரியட் சீசன். தொடர்ந்து படங்கள் வெற்றி பெற்றால் இந்த சீசன் கொஞ்ச நாளைக்கு தொடரும். இல்லாவிட்டால் சீக்கிரமே அடுத்த கதை சீசன் தொடங்கிவிடும்' என்கிறார் அனுபவம் வாய்ந்த இயக்குனர் ஒருவர்.

 

17ம் நூற்றாண்டு தமிழ்ப் பெண்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

17ம் நூற்றாண்டு தமிழ்ப் பெண்!

5/2/2011 11:47:38 AM

'ராணா' படத்தில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணாக நடிக்கிறேன் என்று தீபிகா படுகோன் கூறினார். ரஜினிகாந்த் 3 வேடங்களில் நடிக்கும் 'ராணா' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார், இந்தி நடிகை தீபிகா படுகோன். இதில் நடிப்பது பற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது:  ரஜினியுடன் நடிப்பதால், என் கனவு நனவாகிவிட்டது என்று சொல்ல மாட்டேன். ஏனென்றால் இப்படியொரு வாய்ப்பு கிடைக்கும் என்று கனவு கூட கண்டதில்லை. இது அதையும் தாண்டிய விஷயம். இதில், 17-ம் நூற்றாண்டு தென்னிந்திய பெண்ணாக நடிக்கிறேன். இந்தப் படத்தில் எனது லுக் எப்படியிருக்கும் என்கிறார்கள். அந்த காலத்தில் எப்படி இருப்பார்களோ அதே போன்ற உடை, அணிகலன்களுடன் நடிக்கிறேன். 'தேவதாஸ்' இந்தி படத்துக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணியாற்றிய நீதா லுல்லா இதில் பணியாற்றுகிறார். இப்போது பாடல் காட்சியில் நடித்து வருகிறேன். ரஜினியுடன் நடிக்கப் போகும் நாட்களுக்காக காத்திருக்கிறேன். அவர் தலைசிறந்த நடிகர். இது போலான மிகப்பெரிய வாய்ப்பு இனி எனக்கு கிடைக்கப்போவதில்லை. நான், தென்னிந்தியாவை சேர்ந்தவள் என்றாலும் நல்ல படம் மூலமாக தமிழில் அறிமுகமாக காத்திருந்தேன். இதற்காக கதைகளை கேட்டு வந்தேன். 'ராணா' வாய்ப்பு வந்தபோது இது எனக்காகவே வந்ததாக நினைத்துக்கொண்டேன். இதற்கு முன் ரஜினி படங்கள் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கிறீர்கள். ஒரே ஒரு படம்தான் பார்த்திருக்கிறேன். அது, 'எந்திரன்'. இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார். பேட்டியின் போது இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், சவுந்தர்யா ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் ரத்னவேலு உடனிருந்தனர்.

 

தெலுங்கில் சம்பத்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெலுங்கில் சம்பத்!

5/2/2011 11:49:34 AM

விஷ்ணுவர்தன் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கிறேன் என்றார் சம்பத். இதுபற்றி அவர் கூறியதாவது: சமீபகாலமாக, நான் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள். இது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. நான் சினிமாவுக்கு வரும்போதே ஹீரோ வயதை தாண்டிவிட்டேன். கேரக்டர்களை தேர்வு செய்து நடித்ததால் நிலைத்து நிற்கிறேன். ஹீரோவாக களம் இறங்கி இரண்டு படத்துடன் காணாமல் போக விரும்பவில்லை. அதனால் ஹீரோ என்பதை விட கதையின் நாயகனாக நடிப்பேன். அப்படித்தான் மூன்று கதைகளுக்கு ஓ.கே செய்திருக்கிறேன். இதுதவிர விஷ்ணுவர்தன் இயக்கத்தில் 'ஷேடோ' என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். 5 பேரின் கதை. அதில் நானும் ஒருவன். நெகட்டிவ் கேரக்டர். 'ஆரண்யகாண்டம்', 'வர்ணம்' படங்களில் வித்தியாசமான கேரக்டர்களில் நடித்திருக்கிறேன்.

 

தெய்வத்திருமகன் படப் பெயர் மாற்றம்!

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

தெய்வத்திருமகன் படப் பெயர் மாற்றம்!

5/2/2011 11:51:53 AM

விக்ரம் நடித்துள்ள 'தெய்வத்திருமகன்' படத்தின் தலைப்பு, 'விக்ரமனின் தெய்வத்திருமகள்' என்று மாற்றப்பட்டுள்ளது. இதுபற்றி தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஸ்ரீ ராஜகாளியம்மன் மீடியாஸ் சார்பில் தயாரித்துள்ள 'தெய்வத்திருமகன்' படத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படத் தலைப்பை மாற்றக்கோரி தயாரிப்பாளர் சங்கத்திலும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, அவர்களின் மன உணர்வை புரிந்துகொண்டு ஸ்ரீராஜகாளி அம்மன் உரிமையாளர் மோகன் நடராஜன், 'விக்ரமனின் தெய்வத்திருமகள்' என்று தலைப்பை மாற்றிக்கொள்வதாக கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்' என்று கூறப்பட்டுள்ளது.

 

நடிகர் அலெக்ஸ் மரணம்

Tags:


kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகர் அலெக்ஸ் மரணம்

5/2/2011 11:43:50 AM

நடிகர் அலெக்ஸ் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 52. கடந்த சில வருடங்களாகவே வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்த அவர், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந் நிலையில் நேற்று அதிகாலை அவருக்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனே தேனாம்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, மாலை 4.25 மணிக்கு மரணம் அடைந்தார். இறந்த அலெக்ஸ் திருச்சி துரைசாமி புரத்தில் பிறந்தவர். பொன்மலை ரயில்வே ஊழியரான அவர், நடிப்பின் மீதான ஆர்வத்தால், அந்த பகுதியில் நாடகங்களை நடத்தி வந்தார். 'வள்ளி' படத்தில் குத்துச் சண்டை வீரராக அறிமுகமான அலெக்ஸ், வில்லன், மற்றும் குணச்சித்திர வேடங்களில் 100 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். தமிழ அரசின் கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள இவர், சிறந்த மேஜிக் நிபுணராகவும் இருந்தார். அலெக்சுக்கு திரவியமேரி என்ற மனைவியும், பிரின்சி, டீனா என்ற மகள்களும் உள்ளனர். மகள்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. மயிலாப்பூர் லஸ் அப்பார்ட்மென்டில் வசித்து வந்தார். அலெக்சின் உடல் திருச்சி எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இன்று மாலை அடக்கம் செய்யப்படுகிறது.