ஓடு, ஓடு... பாடு, பாடு... காதல் கணவரை துரத்தும் நடிகை!

சென்னை: மற்ற பாடகர்களைப் போல தானும் நடிகராகி விட வேண்டும் என களத்தில் இறங்கினார் இந்த நடிகையின் கணவர். ஆனால், இவர் நடித்த படம் எதிர்பார்த்த ஆனந்தத்தை ஆரம்பித்து வைக்கவில்லை.

ஆனாலும், விடாப்பிடியாக தொடர்ந்து நாயகனாகவே நடிப்பேன் என அடம் பிடிக்கிறாராம். தனக்கென ஒரு படத்தை மனைவியை தயாரிக்கச் சொல்லிக் கேட்டாராம்.

ஏற்கனவே, கணவரை நாயகனாகப் போட்டு படம் எடுத்து கையைச் சுட்டுக் கொன்ற மனைவிகளின் கதை தெரிந்த மனைவி, நடிப்பு ஆசையை மூட்டைக் கட்டி பரணில் போட்டு விட்டு மீண்டும் பாடத் தொடங்குங்கள் எனக் கறாராகச் சொல்லி விட்டாராம்.

இதனால், ஸ்டூடியோ, ஸ்டூடியோவாக மீண்டும் தூது விடும் படலத்தை தொடங்கியிருக்கிறாராம் பாட்டுக்காரக் கணவர்.

 

சவால்களைச் சந்தித்தால்தான் அடுத்த லெவலுக்குப் போக முடியும் - "டார்லிங்" பிரகாஷ்

சென்னை: டார்லிங் படத்தின் மூலம் நாயகனாக மாறிய இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சவால்கள் சுவாரசியமானவை, சவால்களைச் சந்தித்தால் தான் நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும் என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

2006 ம் ஆண்டில் வெயில் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி.பிரகாஷ் இந்த 2016 ம் ஆண்டில் தனது 10 வருட திரை வாழ்க்கையை நிறைவு செய்ய இருக்கிறார்.

ஆமாம் வருகின்ற செப்டம்பர் மாதத்துடன் ஜி.வி.பிரகாஷின் 10 வருட திரை வாழ்க்கை முடிந்து, 11 வது ஆண்டு திரையுலக வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கப் போகிறார்.

After crossing the challenges in life can go to the next level- G.V.prakash

இந்தப் பத்து வருடங்களில் இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர் என்று பல அவதாரங்களை எடுத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், தற்போது முழு நடிகராகவே மாறி விட்டார்.

த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பென்சில், கெட்ட பயடா இந்தக் கார்த்தி, பாட்ஷா என்கிற ஆண்டனி என்று கால் டஜன் படங்களைக் கையில் வைத்திருக்கிறார், ஒரே நேரத்தில் இவ்வளவையும் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

நான் இன்னும் +1 ஐக் கூட முடிக்கவில்லை ஆனால் இசையில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து இசைத்துறைக்கு வந்தேன். அதே போல நடிகனாக ஆசைப்பட்டபோது எனது அப்பா கூட வேண்டாம் என்று தான் கூறினார், ஆனால் நான் நம்பிக்கையுடன் நடிக்க வந்தேன்.

இதுபோல சவால்கள் சுவாரசியமானவை இவைகளைக் கடந்தால் தான் நாம் வாழ்க்கையில், அடுத்த கட்டத்திற்கு போக முடியும் என்று தன்னம்பிக்கையுடன் கூறியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

 

நகைச்சுவை தம்பியை கழற்றிவிட முடிவு செய்த அண்ணன் இயக்குனர்

சென்னை: அண்ணன் இயக்குனரை கண்டால் ஹீரோக்கள் தெறித்து ஓடுகிறார்களாம்.

இயக்குனர் அண்ணன் தான் எடுக்கும் படங்களில் எல்லாம் தனது தம்பியை ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து வருகிறார். அந்த தம்பியை கழற்றிவிட்டுவிட்டு படம் எடுக்க மாட்டீர்களா என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

அண்ணன் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்களும் ஓடவில்லை. இதனால் இயக்குனர் கவலையில் உள்ளாராம். இருக்கட்டும் அடுத்த படத்தை நல்லபடியாக எடுத்து ஹிட்டாகிவிட வேண்டும் என்று முடிவு செய்துள்ளாராம் இயக்குனர்.

தான் எடுக்கும் அடுத்த படத்தில் தம்பியை நடிக்க வைக்க வேண்டாம் என்று தீர்மானித்துள்ளாராம். இந்நிலையில் அவர் ஹீரோக்களுக்கு போன் செய்தால் யாரும் அவரை கண்டுகொள்வது இல்லையாம். அவர் இயக்கத்தில் நடிக்க ஆசையாக உள்ளது என்று தெரிவித்த ஹீரோக்கள் கூட தற்போதை அவரை கண்டும் காணாமல் செல்கிறார்களாம்.

இந்நிலையில் இயக்குனர் இரண்டு வாரிசு நடிகர்களை அணுகி பேசியுள்ளாராம். ஆனால் அவர்களும் நடிக்கிறோம், இல்லை என்று தெளிவாகக் கூறாமல் இழுத்தடித்து வருகிறார்களாம்.

 

விக்ரம், அஜித் "லீக்"கில் இணைந்த விஜய்

சென்னை: இதுவரை தமிழ்த் திரையுலகில் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்ட டீசர் என்ற பெருமையை விக்ரம் மற்றும் அஜீத் ஆகியோரின் படங்கள் பெற்றிருந்தன.

இந்த வரிசையில் தற்போது விஜயும் இணைந்திருக்கிறார், ஆமாம் கடந்த ஜூன் மாதம் 21 ம் தேதி அன்று வெளியான புலி படத்தின் டீசரை இதுவரை 51 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

விக்ரமின் நடிப்பில் வெளிவந்த ஐ படத்தின் டீசர் 1 கோடியே 11 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்டிருந்தது, இதுவரை வெளிவந்த தமிழ்ப் பட டீசர்களிலேயே அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்ட டீசர் இதுவாகத்தான் இருக்கும்.

Puli Teaser Huge A New Record

அதற்கு அடுத்த இடத்தில் அஜீத்தின் என்னை அறிந்தால் டீசர் உள்ளது, என்னை அறிந்தால் டீசர் சுமார் 53 லட்சத்திற்கும் அதிகமான பேரால் கண்டுகளிக்கப்பட்டு இருந்தது. தற்போது மூன்றாவது இடத்தை விஜயின் புலி டீசர் பிடித்துள்ளது.

இந்தச் சாதனையில் புதிதாக இணைந்திருக்கும் விஜய் என்னை அறிந்தால் படத்தின் டீசரை இன்னும் ஒரு சில தினங்களில் கடந்து விடுவார், ஆனால் ஐ படத்தின் ரெக்கார்டை அவரால் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.

 

ஜூலை 15 ல் தனி ஒருவன் ஆடியோ ரிலீஸ்?

சென்னை: ஜெயம் ரவி, நயன்தாரா முதல் முறையாக இணைந்து நடிக்கும் படம் தனி ஒருவன், நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இந்தப் படம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. ஜெயம், எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும் மற்றும் சந்தோஷ் சுப்ரமணியம் என்று ஜெயம் ரவியை வைத்து வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் ராஜா.

தற்போது மீண்டும் தனது தம்பி ஜெயம் ரவியுடன் இணைந்திருக்கும் படம் தனி ஒருவன், இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் பரபரப்பாக நடந்து வருகின்றன.

Tani Oruvan Audio Launched At July 15?

கடைசியாக இருவரும் இணைந்த தில்லாலங்கடி படம் மாபெரும் தோல்வியைத் தழுவியது. அதற்குப் பின் சில வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைந்திருக்கும் தனி ஒருவன், படத்தை வெற்றிப் படமாக மாற்றும் முனைப்பில் மும்முரமாக இருக்கிறார் ராஜா.

தனி ஒருவன் படத்தில் நயன்தாரா காக்கிச்சட்டை அணிந்து களம் இறங்க, படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்து உள்ளது. வரும் ஜூலை 15 ம் தேதியில் படத்தின் இசை வெளியீட்டை நடத்த இருகின்றனர் தனி ஒருவன் படக்குழுவினர்.

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசையமைப்பில் பாடல்கள் உருவாகி உள்ளன, மேலும் இந்தப் படத்தில் இருந்து இயக்குநர் ராஜா தனது பெயரை மோகன் ராஜா என்று மாற்றிக் கொள்ளவிருக்கிறார்.

தனி ஒருவன் படத்தின் இசை வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பாக்ஸ் ஆபிசில் பட்டையைக் கிளப்பும் பாபநாசம்

சென்னை: கமலின் நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளிவந்த பாபநாசம் திரைப்படம், வசூலில் சாதனை படைத்திருகிறது. சமீப காலமாக தமிழ்ப் படங்கள் தடுமாறி வரும் வேளையில், எல்லாத் தடைகளையும் அடித்து நொறுக்கி விட்டு வசூலில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது பாபநாசம்.

தமிழ்நாடு மற்றும் உலகமெங்கும் சேர்த்து சுமார் 750 திரை அரங்குகளில் படம் திரையிடப்பட்டிருந்தது, இதில் முதல் நாள் முடிவில் மட்டும் சுமார் 8 கோடி ரூபாயை படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Papanasam: Box Office Report

வாரவிடுமுறை நாட்களான நேற்று(சனிக்கிழமை) மற்றும் இன்றைய வசூல் எவ்வளவு என்று நாளைக் காலையில் தான் தெரியவரும். இந்த இரு நாட்களின் வசூலும் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கமலின் நடிப்பில் ஆர்ப்பாட்டம் துளி கூட இன்றி வெளிவந்த பாபநாசம் வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது, குடும்பக் கதைகளின் மதிப்பை இன்னும் ஒருமுறை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது இந்த வெற்றி.

 

"பர்ஸ்ட் ஹாப்"... சொதப்பிய கோலிவுட்... பட்டையைக் கிளப்பும் பாலிவுட்!

மும்பை: இந்திய சினிமாவில் மிகவும் அதிகமான பொருட்செலவில் உருவாகும் படங்கள் பட்டியலில் முதலிடம் பாலிவுட்டுக்கு என்றால், அடுத்த இடத்தை தட்டிச் செல்வது கோலிவுட். இந்திப் படங்களுக்கு அடுத்த இடத்தில் படங்கள் தயாரிப்பு, தரம் மற்றும் சிறந்த இயக்குனர்கள் போன்றவற்றை அதிகம் பெற்று இருப்பது தமிழ்த் திரையுலகம் தான்.

இவையெல்லாம் இருந்தும் என்ன பயன் என்று கேள்வியைக் கேட்க வைக்கிறது இந்த 6 மாத காலத்தில், தமிழ்த் திரையுலகில் வெளிவந்த படங்களின் நிலவரங்கள்.தமிழில் இந்த 6 மாத காலத்தில் சுமார் 105 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.

2015: Best Movies In Bollywood

அவற்றில் வெற்றிபெற்ற படங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா, வெறும் 10 படங்கள் தான். அதே சமயம் தமிழ்த் திரையுலகினருக்கு சோதனையாக அமைந்த இந்த 6 மாத காலமும், இந்தித் திரையுலகினருக்கு சாதனையாக அமைந்துள்ளது.

இந்தியில் இந்த வருடத்தில் வெளிவந்த கப்பர் இஸ் பேக், தில் தடக்னே டூ, பிக்கு, NH 10, தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ், ஹன்டர், தும் லகா ஹே ஹைசா, ஏபிசிடி 2 ஆகிய திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தி இருக்கின்றன.

இதில் தனுவெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இதுவரை 150 கோடி ரூபாயை வசூலித்து சாதனை புரிந்துள்ளது, ஏபிசிடி2 98 கோடி ரூபாயை இதுவரை வசூலித்து உள்ளது.

இந்த வருடம் முதல் 6 மாதம் நல்ல வசூல், சிறந்த படங்கள் என்று இந்தித் திரையுலகம் சாதனையை நோக்கிப் பயணித்து உள்ளது, அதே சமயம் முதல் 6 மாதத்தில் எந்த சாதனையும் நிகழ்த்தாத தமிழ்த்திரையுலகம் சோதனைகளை நோக்கிப் பயணித்து உள்ளது.

முதல் 6 மாத காலத்தில் செய்யாத சாதனையை அடுத்த 6 மாத காலத்தில் தமிழ்த் திரையுலகம் சாதிக்கும் என்று நம்பலாம்.

இந்த நம்பிக்கைக்கு அடித்தளமிடுவது போல பாபநாசம் மற்றும் பாலக்காட்டு மாதவன் போன்ற திரைப்படங்கள், வெளிவந்து நல்ல வரவேற்பை மக்களிடம் பெற்றுள்ளன.

இதே பாதையில் பயணம் செய்யுமா தமிழ்ப்படங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம்...

 

வாலு படத்தில் வாத்தியாரு பாட்டு.. 4 கெட்டப்பில் சிம்பு.. கூடவே ஹன்சிகாவும்!

சென்னை: பல்வேறு விதமான பிரச்சினைகளால் மிகவும் பாதிப்புக்கு உள்ளான வாலு படம், தடைகளைக் கடந்து வரும் ஜூலை 17 ம் தேதி அன்று உலகெங்கும் வெளியாகிறது. இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்து விட்டு தற்போது மீண்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர் வாலு குழுவினர்.

Vaalu : Simbu Playing 4 Getup’s

வாலு படத்தில் ஒரு பாடல் காட்சியை மட்டும் படம் பிடிக்க வேண்டியிருந்தது, ஹன்சிகா இல்லாமல் படம்பிடிக்க முடியாமல் சிக்கலில் இருந்தனர் வாலு படப்பிடிப்புக் குழுவினர். தற்போது ஹன்சிகாவின் கால்ஷீட் கிடைத்து விட்டதால் பம்பரமாகச் சுழன்று, பாடலைப் படம்பிடித்து வருகிறார் இயக்குநர் விஜய் சந்தர்.

வாத்தியாரு என்று தொடங்கும் அந்தப் பாடலில் சிம்பு 4 விதமான வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறாராம். எம்.ஜி.ஆர், சிவாஜி, அஜித் மற்றும் சிம்பு என 4 கெட்அப்புகளில் இந்தப் பாடலில் நடிக்கிறார் சிம்பு.

எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி கெட்அப்புகள் ஏற்கனவே முடிந்துவிட்டன, தற்போது அஜீத் தோற்றத்திற்காக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கவிருக்கிறார் சிம்பு. மேலும் இதனைப் பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் குறிப்பிட்டு இருக்கிறார் சிம்பு.

 

பெண்களை இழிவுபடுத்தும் 'அப்பாடக்கர்' .. கொந்தளிக்கும் மகளிர் அமைப்புகள்

சென்னை: ரோமியோ ஜூலியட்டில் கிடைத்த வரவேற்பு வெற்றி இரண்டையும் தக்க வைத்துக் கொள்வதில், என்ன கஷ்டம் என்று தெரியவில்லை. தொடர்ந்து சொதப்பி வருகிறார் ஜெயம் ரவி.

அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன் கேளுங்கள், ரோமியோ ஜூலியட் வெற்றிப் படமாக மாறியதில் அடுத்தடுத்து கிடப்பில் கிடந்த ஜெயம் ரவியின் படங்கள் தூசு தட்டப்பட்டு வேகமாக வெளியிடத் தயாராகி வருகின்றன.

Appatakkar  Movie Poster Teased  For Ladies?

இதில் அப்பாடக்கர் படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி உள்ளன. இதில் ஒரு போஸ்டரில் ஜெயம் ரவியின் கழுத்தை த்ரிஷாவும், அஞ்சலியும் நெரிப்பது போல அமைந்து உள்ளது. இது பெண்களை கொடுமைக்காரர்களாக சித்தரிப்பது போன்று இருக்கிறது.

இதுவாவது பரவாயில்லை மற்றொரு போஸ்டரில் சுவற்றில் ஒரு பெண்ணின் படம் வரைந்திருக்க, ஜெயம் ரவியும் சூரியும் அந்தப் பெண்ணின் முகத்தில் சிறுநீர் கழிப்பது போன்று உள்ளது.

தற்போது இந்தப் போஸ்டர்கள் மகளிர் அமைப்புகள் மத்தியில் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன, படத்தில் இந்தக் காட்சி படத்தில் வெளியானால் கடும் எதிர்ப்பை தெரிவிப்போம் என்று இப்போதே கொடிபிடித்துக் கிளம்புகின்றனர் மகளிர் அமைப்பினர்.