3 இடியட்ஸ் வேலைகளை தொடங்கினார் ஷங்கர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார். இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய். மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள். ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் / ரோபோ பிரிமியர் காட்சிக்கு அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் வந்திருந்தபோது, இந்தப் படத்தின் ரீமேக் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.


Source: Dinakaran
 

தாசரி நாராயணராவுக்கு சிறந்த நடிகர் விருது!

Dasari Narayana Rao
ஹைதராபாத்: மேஸ்திரி என்ற படத்தில் நடித்த இயக்குநரும் முன்னாள் மத்திய அமைச்சருமான தாசரி நாராயணராவுக்கு ஆந்திர அரசின் சிறந்த நடிகர் விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டின் சிறந்த தெலுங்கு படங்களுக்கான நந்தி திரைப்பட விருதுகளை ஆந்திர அரசு நேற்று அறிவித்தது.
அதன்படி, மேஸ்திரி’என்ற படத்தில் சிறப்பாக நடித்த முன்னாள் மத்திய மந்திரியும், பழம்பெரும் இயக்குனருமான தாசரி நாராயணராவ் சிறந்த நடிகர் விருது பெறுகிறார்.
சொந்த ஊரு படத்துக்காக நடிகை தீர்த்தா, சிறந்த நடிகை விருது பெறுகிறார். சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா நடித்த மகதீரா 6 விருதுகளைக் குவித்தது.
சிறந்த பொழுதுபோக்கு படத்துகான விருதும், சிறந்த இயக்குநர், சிறந்த கலை இயக்குனர், சிறந்த நடன இயக்குனர், சிறந்த படத்தொகுப்பாளர், சிறந்த நடிகருக்கான சிறப்பு ஜூரி விருது ஆகிய விருதுகளை மகாதீரா பெற்றது.
சிறந்த படத்துக்கான விருதை ‘சொந்த ஊரு’ பெறுகிறது. ‘வெங்கமாம்பா’ படத்துக்காக எம்.எம்.கீரவாணி, சிறந்த இசையமைப்பாளர் விருது பெறுகிறார்.
 

விமானத்தில் வந்த நடிகை ரோஜாவிடம் ரூ 2.5லட்சம் திருட்டு

Roja
கோவை: விமானத்தில் வந்த நடிகை ரோஜாவிடம் ரூ 2.5 லட்சம் பணத்தை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல நடிகை கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள ஒத்தப்பாலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து கோவைக்கு தனியார் விமானத்தில் வந்தார்.
இரவு 8-40 மணி அளவில் அந்த விமானம் கோவை வந்தது. விமானத்தில் இருந்து இறங்கும்போது, ரோஜா தன்னுடைய கைப்பையைத் தேடினார். அதில் ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் பணம் வைத்திருந்தார். அந்தப் பை காணாமல் போயிருந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரோஜா, விமானநிலையத்தில் இருந்த பாதுகாப்பு அதிகாரிகளிடம் பணப்பை திருட்டுப்போன தகவலை தெரிவித்தார். மேலும் தனியார் விமான நிறுவனத்தின் மேலாளரிடமும் இதுகுறித்து புகார் மனு எழுதிக்கொடுத்தார்.
பின்னர் நடிகை ரோஜா, கார் மூலம் கேரள மாநிலம் ஒத்தப்பாலத்துக்கு புறப்பட்டு சென்றார். ரோஜாவிடம் பணம் திருட்டுப்போனது குறித்து பீளமேடு போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர்.
திருட்டுப் போன பணப்பை குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

யார் என்ன சொன்னாலும் நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது-பிரபுதேவா

Prabhudeva with Nayanthara
சென்னை: நான் நயன்தாராவை திருமணம் செய்யப் போவது உறுதி. யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள வேண்டியதில்லை. சொல்லப் போனால் நயன்தாராவை திருமணம் செய்ய இதுதான் சரியான தருணம், என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
இது குறித்து அவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி:
எதற்கும் தகுந்த நேரம் என்று ஒன்று இருக்கிறது. நயன்தாராவை பற்றி பேசுவதற்கும் இதுதான் சரியான நேரம். ஏனென்றால் நாங்கள் இருவரும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம்.
இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.
இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் பற்றி எனக்கு கவலையில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டப்படியே எதிர்கொள்ளப் போகிறேன். யாருடைய தடையும் இந்தத் தி்ருமணத்தை தடுத்து நிறுத்த முடியாது.
இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக உள்ள என் பெற்றோருக்கு நன்றி. ரம்லத் விஷயம் குறித்து இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை…,” என்று கூறியுள்ளார் பிரபுதேவா.
நயனதாராவை 2வது தாரமாக்குவதில் படு தீவிரமாகத்தான் இருக்கிறார் பிரபுதேவா என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
 

3 இடியட்ஸ் வேலைகளில் பிஸியாகும் ஷங்கர்!

Shankar
எந்திரன் என்ற மெகா பிரமாண்டப் படத்தைக் கொடுத்த ஷங்கர், அடுத்து முழுவீச்சில் 3 இடியட்ஸ் ரீமேக்கில் இறங்குகிறார்.
விஜய், ஜீவா மற்றும் சித்தார்த் நடிக்கும் இந்தப் படத்தை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரிக்கிறது.
பொதுவாக மற்றவர்கள் தயாரிக்கும் படத்தை வாங்கி, அதன் டைட்டிலை விடப் பெரிதாக ‘சன் பிக்ஸர்ஸ் கலாநிதிமாறன் வழங்கும்’ என்று பெயர் போட்டு வெளியிடுவது சன் பிக்சர்ஸ் வழக்கம்.
ஆனால் எந்திரனைப் பொறுத்தவரை இந்தியா முழுவதும் வெளியிட்டவர்கள் இந்த ஜெமினி நிறுவனம்தான். போஸ்டரின் மூலையில்தான் இந்த நிறுவனம் தன் பெயரைப் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
இப்போது ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற இந்திப் படம் 3 இடியட்ஸை ரீமேக் செய்கிறார். இதில் அமீர்கான் வேடத்தைச் செய்யப் போகிறவர் விஜய்.
மாதவன் வேடத்தில் ஜீவாவும், ஷர்மான் ஜோஷி பாத்திரத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்கள்.
ஷங்கர் இயக்கும் முதல் ரீமேக் 3 இடியட்ஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் மும்பையில் நடந்த எந்திரன் / ரோபோ பிரிமியர் காட்சிக்கு அமீர் கான், ராஜ்குமார் ஹிராணி மற்றும் தயாரிப்பாளர் விது வினோத் சோப்ரா ஆகியோர் வந்திருந்தபோது, இந்தப் படத்தின் ரீமேக் குறித்தும் நீண்ட நேரம் விவாதித்துள்ளனர்.
 

எனக்கு எதிராக கறுப்புக் கொடியா? - அசின்

Asin
இலங்கை சென்றது குறித்து நான் பல முறை விளக்கமளித்த பிறகும் எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதா, என்று கேட்டு கொந்தளித்துள்ளார் நடிகை அசின்.
திரைப்பட கூட்டு குழுவின் தடையை மீறி இலங்கையில் ரெடி இந்தி படப்பிடிப்பில் பங்கேற்ற அசினுக்கு ஏற்கனவே கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. நடிகர் சங்க பொதுக்குழுவில் ராதாரவி, சத்யராஜ் போன்ற மூத்த நடிகர்கள் அசினை கடுமையாக விமர்சித்தனர். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் நடிகர் சங்கக் கூட்டம் கூடியபோது, அசின் பற்றி பேசப்படவில்லை. அதை சங்கத் தலைவர் சரத்குமார் தடுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப் பிரச்சினை பற்றி கூட்டுக்குழு விரைவில் கூடி முடிவு எடுக்கும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராமநாராயணன் கூறியுள்ளார். இவராவது உறுதியாக அசின் மீது நடவடிக்கை எடுப்பாரா? என்று பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டுப்பாளையத்தில் விஜய்யுடன் அசின் நடித்து வரும் காவலன் படப்பிடிப்பில் சில தினங்களுக்கு முன் திடீர் ரகளை ஏற்பட்டது. இலங்கை சென்றதற்கு கண்டனம் தெரிவித்து அசினுக்கு சிலர் கறுப்புக்கொடி காட்டினார்கள்.
இதுபற்றி அசினிடம் கேட்டபோது, ஆவேசப்பட்டார்.
“நான் இலங்கை சென்றது பற்றி பல தடவை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் எனக்கு எதிராக போராட்டம் நடத்தினால் என்ன அர்த்தம்? சரி, இந்த பிரச்சினையை மீண்டும் கிளப்ப நான் விரும்பவில்லை. கருத்து கூறுவதையும் தவிர்க்கிறேன். நானே பிரச்சினைகளை இழுத்துப்போட்டுக்கொள்ள விரும்பவில்லை,” என்றார்.
 

ஸ்ருதி ஹாஸனின் 'தட்ஸமயம் ஒரு பெண்குட்டி'!

Shruti Haasan
தலைப்பு ஒரு மாதிரி பிட்டு பட ரேஞ்சுக்கு இருக்கிறதே என யோசிக்க வேண்டாம். கமல்ஹாஸனின் நெருங்கிய நண்பர் ராஜீவ் குமார் இயக்கும் மலையாளப் படம் இது.
கமலை வைத்து சாணக்யன் படத்தை எண்பதுகளில் எடுத்தவர்.
இப்போது கமல் மகள் ஸ்ருதிஹாஸனை வைத்து படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்குதான் தட்ஸமயம் ஒரு பெண்குட்டி என தலைப்பு வைத்திருக்கிறார்.
இந்தியில் நடிப்பைத் துவங்கிய ஸ்ருதி, அடுத்து தமிழில் 7-ம் அறிவு, தெலுங்கில் ஒன்று என ஒரு ரவுண்டு வந்து கொண்டிருக்கிறார். அடுத்து இந்த மலையாளப் படத்தில்தான் நடிக்கப் போகிறாராம்!
அடுத்து கன்னடம், மராத்தி என எந்த மொழியாக இருந்தாலும் பரவாயில்லையாம்… நல்ல ஸ்கோப் உள்ள வேடங்களென்றால் ஒப்புக் கொள்வதாகக் கூறியுள்ளார் ஸ்ருதி.
 

கலர் கலரா கண்ணாடி போட்டு நடித்தால் பெரிய நடிகராகி விட முடியாது-திலகன்

Tilagan
கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. அப்படி செய்தால் அவர் பெரிய சூப்பர் ஸ்டாரா?. ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள் என்று கடுமையாக சாடியுள்ளார் மலையாள நடிகர் திலகன்.
மலையாளத் திரையுலகின் மிகப் பெரிய கலைஞர் திலகன். நடிப்பில் அரை சத ஆண்டுகளைக் கடந்தவர். ஆனால் அவரை ஒதுக்கி ஓரம் கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது மலையாளத் திரையுலகம். இயக்குநர் வினயனின் படத்தில் நடிக்கக் கூடாது என்று தாங்கள் போட்ட தடையை திலகன் மீறி நடிக்கப் போய் விட்டார் என்ற ஒரே காரணத்திற்காக திலகனை தீண்டாமல் ஓரம் கட்டி வைத்திருக்கிறது மலையாள நடிகர் சங்கமான அம்மா.
தன் மீதான இத்தனை நடவடிக்கைகளுக்கும் மம்முட்டிதான் காரணம் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார் திலகன். அத்தோடு மட்டுமல்லாமல், மோகன்லால், திலீப் என அத்தனை சூப்பர் ஸ்டார் நடிகர்களும் எனக்கு எதிராக சதி செய்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தன்னை தொடர்ந்து நடிகர் சங்கம் ஒதுக்கி வைத்திருந்தால் தற்கொலை செய்வேன் என்றும் அவர் அதிரடியாக கூறியுள்ளார்.
தன்னை மலையாளப் படவுலகம் ஒதுக்கி வைத்து விட்டாலும் இன்னும் தனது லட்சியத்தில் குறைவில்லாமல் படு திடமாகவே இருக்கிறார் திலகன். இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
நான் வேஷம் கட்டிப் பல நாளாயிடுச்சு. எனக்குள்ள இருக்கும் கலைஞன் பெருங்குரல் எடுத்து அழுறான். ஆனால் மலையாளப் படவுலகை ஆட்டி வைக்கிற மாஃபியாக்கள் என்னை நடிக்கவிடாமல் தடுக்கிறாங்க. இதே நிலை தொடர்ந்தா தூக்கில் தொங்குவதுதான் என் இறுதி முடிவு என அறிவித்துவிட்டேன். அப்படி நான் தொங்கினால் அதுதான் ஆசையா சூப்பர் ஸ்டார்களே?
உண்மையான கலைஞன் என்றால் உணர்ச்சி வசப்படணும். அடித்தால் திருப்பி அடிப்பேன். காரணம், என் நாடி நரம்பெல்லாம் உணர்ச்சிகள்தான் பொங்கி வழியுது. ஷூட்டிங் ஸ்பாட்டில் ஸ்டார்ட் என்ற சத்தத்தைக் கேட்டதும் இந்தத் திலகன் மறைந்து அந்த கேரக்டர்தான் கேமரா முன்னாடி நிற்கும். ஒரே டேக்கில் அந்த ஸீனை அடித்து நொறுக்கிட்டுப் போய்க்கொண்டே இருப்பேன். அதைப் பார்த்துக் கைதட்டிய டைரக்டர்ஸ் எல்லாம் இன்னைக்கு என்னை ஏளனமாகப் பார்ப்பதை எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்.
விநயனும் ஒரு விஷய ஞானமுள்ள இயக்குநர்தானே? அவரது படத்தில் நடித்ததற்காகத் தடை போடுவது என்ன நியாயம்? கலையை வளர்க்கத்தான் சங்கம் வேண்டுமே தவிர, கலைஞனை அழிப்பதற்கு இல்லை. என் மீது வந்து விழும் கல்லுக்கு எல்லாம் சூத்ரதாரி மம்முட்டி என்று எனக்குத் தெரியும். அவருக்கும் மோகன்லாலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.
இப்போது சொல்கிறேன்… கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை. மம்முட்டி அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறார். மலையாளப் படவுலகம் இன்று சிலரது கைக்குள் சிக்கிச் சின்னாபின்னாமாகிக் கொண்டு இருக்கிறது. அவர்கள் எல்லாம் உருப்படாத கதைகளில் நடிக்கிறார்கள். மற்ற மொழி சினிமாக்களை காப்பியடித்து, காப்பியடித்து மலையாள சினிமாவின் உன்னதத்தைக் கெடுத்துவிட்டார்கள்.
கலர் கலராக கண்ணாடிகளை மாற்றிக் கொண்டே இருப்பது நடிப்பு இல்லை.
ஒருவர் திரும்பினால் பத்து கார்கள் பறக்கின்றன. இன்னொருவர் கண் மூடிய மாத்திரத்தில் ஹீரோயினுடன் வெளிநாட்டில் குத்தாட்டம் போடுகிறார். இந்தப் படங்கள் மூலம் என்ன சொல்லப் போகிறார்கள்.
கேரளத்தின் கலாசாரத்தைத் திரையில் பார்த்து வெகு நாட்களாகிவிட்டன. இந்தப் படங்கள் எல்லாம் கேரளவாசிகளுக்கு தேவையில்லாத குப்பைகள்தான்.
கேரள சினிமாக் கலையை அழிப்பவர்களைத்தான் அப்படித் தாக்குகிறேன். அது யாராக இருந்தால் எனக்கென்ன? என் நடிப்பை இந்த நாடறியும். இடையில் எனக்கு உடல் நலம் குறைந்தது உண்மைதான். அதற்காக என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம், திலகனை புக் செய்தால் கூடவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு ஒரு ஆம்புலன்ஸ் வேண்டும். எதற்கு பணத்தை வேஸ்ட் பண்றீங்க? என்று சொல்லிக் கொடுக்கிறார்கள். கூடவே என்னை “அம்மா’வில் இருந்தும் தூக்கி எறிந்து விட்டார்கள்.
சீரியலில் நடிப்பதையும் தடுத்து நிறுத்தி விட்டார்கள். நாட்டின் சிறந்த கலைஞன் கமல்ஹாசனுக்கு கேரள அரசு விழா எடுக்கிறது. அதில் கலந்து கொள்ள கூடாது என அறிக்கைவிடுகிறார்கள். அப்போது இந்த மலையாள சினிமாவின் பிரம்மாக்கள் எல்லாம் எங்கே போனார்கள்.
தற்கொலை செய்வேன் என்று நான் கூறியது மிரட்டல் இல்லை. உண்மை. எனக்குள் இருக்கும் கலைஞன் தினமும் புதுப் புது வேஷம் தேடி ஏங்குகிறான். அந்தப் பசியை நான் போக்கா விட்டால் அவன் செத்து விடுவான். இந்தக் கலைஞன் செத்த பிறகு திலகன் என்ற வெற்று உடம்பு வாழ்ந்து என்ன பயன்?
நடிப்பதற்கான எனது வாய்ப்புகள் மறுக்கப்படுவது குறித்து கேரள கலாசாரத் துறை அமைச்சர் பேபியிடம் பலமுறை புகார் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் தொடர்ந்து சூப்பர் ஸ்டார்களுக்குச் சாதகமாகவே நடக்கிறாரே தவிர, உரிய நடவடிக்கை இல்லை. கொஞ்ச காலம் பொறுப்பேன். எல்லாத் திசைகளும் இப்படி சூனியமாகி விட்டால், பேபியின் வீட்டு முன் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும் என்று பொறுமித் தள்ளி விட்டார் திலகன்.
 

காளஹஸ்தியில் நயன் -பிரபுதேவா சிறப்புப் பூஜை!!

Prabhudeva with Nayanthara
கள்ளக்காதல் காரணமாக தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தீர வேண்டி காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
ரமலத்தை காதலித்து திருமணம் செய்து மூன்று குழந்தைகளையும் பெற்ற பிறகு, பிரபு தேவா மனம் நயன்தாராவை நாடியது. மனைவியுடன் வசிக்கும் போதே, நயன்தாராவைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் பகிரங்கமாக அறிவித்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதன் அடுத்த கட்டமாக, ரமலத் குடும்ப நல நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார். பிரபு தேவா மற்றும் நயன்தாரா இருவர் மீதுமே அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். இப்போதைய சூழலில் ரம்லத் போலீஸில் புகார் செய்தால் பிரபு தேவா-நயன்தாரா இருவருமே கைதாகும் நிலை உள்ளது.
அப்படியொரு நெருக்கடி வரும் முன்பே பிரச்சினையைத் தீர்க்க பல சமாதான முயற்சிகளையும் பிரபு தேவா மேற்கொண்டுள்ளார். எப்படியாவது சுமூக நிலையை ஏற்படுத்துமாறு, முக்கியப் பிரமுகரிடம் பிரபுதேவாவும் நயன்தாராவும் தனித்தனியாக பேசியுள்ளனர். அவரோ, இனி இந்த விஷயம் குறித்து என்னிடம் பேச வேண்டாம் என்று கோபத்துடன் கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், பிரச்சினை தீர ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற காளஹஸ்தி கோயிலில் சிறப்பு பூஜை மற்றும் ரகசிய யாகத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர் பிரபு தேவாவும் நயன்தாராவும்.
காளஹஸ்தியில் பூஜை, யாகம் செய்தால் தீராத பிரச்சினையும் தீரும் என்பது ஐதீகம் என்பதால் இந்த ஏற்பாட்டில் இறங்கியுள்ளனராம் இருவரும்.
இந்த யோசனையை பிரபுதேவாவுக்குச் சொன்னவர்கள் அவரது தந்தை சுந்தரமும் அவர் மனைவியும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சுந்தரத்தைப் பொறுத்தவரை நயன்தாராவை அவர் மருமகளாகவே ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே பிரபு தேவாவையும் நயன்தாராவையும் தம்பதிகளைப் போல அமர வைத்து தனது வீட்டில் பூஜை நடத்தியவர் சுந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

புருஷனைக் கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா? ரமலத்தின் தோழி கடும் சாடல்

Ramalath
பசிக்கிறது சோறு போடுங்கள் என்றால் கொடுப்பார்கள். அதற்காக புருஷனையே கேட்டால் எந்தப் பெண்ணாவது கொடுப்பாளா?, என்று நடிகை நயனதாராவை பிரபுதேவாவின் மனைவி ரமலத்தின் தோழியும் பிரபல தயாரிப்பாளர் ஏ எல் சீனிவாசனின் மருமகளுமான ஜெயந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நயனதாராவின் பிடியிலிருந்து பிரபுதேவாவை மீட்க சட்டப் போராட்டத்தில் குதித்துள்ளார் ரமலத். இதற்கு அவருக்கு உதவியாக இருந்து வருகிறார் ஜெயந்தி கண்ணப்பன். இவர் ரமலத்தின் குடும்பத் தோழி ஆவார். அத்தோடு சினிமா தயாரிப்பாளராகவும் இருக்கிறார். மறைந்த கவியரசர் கண்ணதாசனின் அண்ணன் ஏஎல் சீனிவாசனின் மருமகள் இவர்.
ரமலத் விவகாரம் குறித்து ஜெயந்தி கூறுகையில், “நயன்தாராவுக்கு வெளி உலக அனுபவம் இல்லை. குறிப்பிட்ட வளையத்துக்குள் இருக்கிறார். அவர் வெளியே வந்து உலகத்தை பார்க்க வேண்டும். பசிக்கிறது என்று கேட்டால் சாதம் கொடுக்கலாம். புருஷனை கேட்டால் எந்த பெண்ணாவது கொடுப்பாளா?
நயன்தாரா சிறந்த நடிகை. தமிழக ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இங்குள்ள கலாசாரம் மீது அவர் கொள்ளி வைப்பது அழகல்ல. ரம்லத் கோர்ட்டுக்கு போய் உள்ளார். அவருக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும்,” என்றார் ஜெயந்தி.
 

நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகம் எதிர்ப்பு

Nayantara
நயனதாராவை சீதையாக நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகம் எதிர்ப்பு
பிரபுதேவாவுடன் கள்ளக்காதல் கொண்டுள்ள நடிகை நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதையடுத்து அந்த வேடத்தில் மாதுரி தீட்சித்தை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளனராம்.
தெலுங்கு இயக்குநர் பாபு, என்.டி.ராமராவின் மகன் பாலகிருஷ்ணாவை வைத்து ஸ்ரீராம ஜெயம் என்ற புராணப் படத்தை இயக்கவுள்ளார். இதில் பாலகிருஷ்ணா ராமராக நடிக்கிறார். சீதை வேடத்தில் நயனதாராவை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.
இந்தநிலையி்ல் பிரபுதேவா- நயனதாரா கள்ளக்காதல் குறித்து பிரபுதேவாவின் மனைவி ரமலத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளதால், நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தெலுங்குத் திரையுலகில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நயனதாராவை சீதை வேடத்தில் நடிக்க வைக்கக் கூடாதுஎன்று அவர்கள் கொந்தளித்துள்ளனர். இதையடுத்து முறைப்படி கல்யாணம் செய்து கொண்டு, அழகாக குடும்பம் நடத்தி வருபவரும், குடும்பப் பாங்கான முகம் கொண்டவருமான மாதுரி தீட்சித்தை சீதை வேடத்தில் நடிக்க வைக்க தீர்மானித்து அவரை அணுகியுள்ளாராம் இயக்குநர் பாபு.
 

ரஜினியைக் கடவுளாக்கிய 'கிச்சிடி'

Rajinikanth
‘தமிழகத்தில் ரஜினிக்கு எத்தனையோ கோயில்கள் உள்ளன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே!’ – இது இந்தியில் சமீபத்தில் வெளியான கிச்சிடி என்ற படத்தின் விளம்பத்தில் வரும் ஒரு வாசகம்.
மும்பை சென்றிருந்த ரஜினியின் பார்வையில் இந்த விளம்பரம் பட்டுவிட்டது.
உடனே தனது உதவியாளரை அழைத்தவர், கிச்சிடி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரிடம், எதற்காக இப்படியொரு வாசகம் அந்த விளம்பரத்தில் வருகிறது என்று விசாரிக்கச் சொல்லியிருக்கிறார்.
உடனடியாக ரஜினியைத் தொடர்பு கொண்டனர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும். அவர்களுக்கு ரஜினியின் உதவியாளரிடமிருந்து போன் வந்ததையே நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் இருந்திருக்கிறார்கள்.
அவர்களிடம், “என்னை கடவுள் என்று அழைப்பதை நான் ஒருபோதும் விரும்பவதில்லை. எனக்கு மிகவும் அசௌகரியமான வார்த்தை அது.
அப்படி என்னை சித்தரித்திருந்தால் அதை நீக்கிவிடுங்கள்” என்று ரஜினி கூறியதாக உதவியாளர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிச்சிடி பட தயாரிப்பாளர் மாதேஜா கூறுகையில், “ரஜினி சார் மீது நாங்கள் வைத்திருக்கும் மதிப்பு கொஞ்சமல்ல. உண்மையிலேயே சினிமா துறைக்கு அவர் கடவுள் மாதிரிதான். சினிமா நொடித்துப் போன நேரத்திலெல்லாம் அவர் படங்களே கைகொடுத்து உதவுகின்றன.
எங்கள் படத்தில் ஒரு காட்சியில் வரும் இரு பாத்திரங்கள் கடவுள் எதிரே வந்தால் கூட நம்ப மாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். ஒரு காட்சியில் அவர்கள் இருவரும், தமிழ்நாட்டில் ரஜினிகாந்துக்கு கோயில்கள் இருக்கின்றன. அப்படியென்றால் அவர் கடவுள்தானே” என்று கேட்பதாக வைத்திருக்கிறோம்.
ரஜினி சார் மீதுள்ள மரியாதைதான் எங்களை அப்படி ஒரு காட்சியை வைக்கத் தூண்டியது. அது குறித்து அவரிடம் விளக்கிவிட்டோம். அவருக்குப் பிடிக்கவில்லை என்றால் அந்தக் காட்சியை எடுக்கவும் ஒப்புக் கொண்டோம்.
ரஜினியின் ரோபோ இந்தியாவுக்கே பெருமை சேர்த்துள்ளது. அவர் படம் வெளியாகும் போது எங்கள் படத்தை வெளியிட்டோம். வேண்டுமென்று இப்படி செய்யவில்லை. நேரம் அப்படி அமைந்துவிட்டது. ரோபோ பெரிய படம். வசூலில் கலக்குகிறது. எங்கள் படம் சுமாராகப் போகிறது… ஆனால் ரோபோவுடன் வெளியானது என்பதே சந்தோஷமான விஷயம்தானே!” என்றார்.
 

'பாலக்காட்டுக்கு போங்க... அதான் சேஃப்!' - அசின் அடம்

Asin and Vijay
‘காவலன் படத்தின் மிச்சப் பகுதியை கேரளாவிலே வச்சிக்கலாம். பாலக்காட்டுக்குப் போயிடலாம் அதான் சேஃப் சேட்டா!’
-மேட்டுப் பாளையத்தில் பெரியார் திகவினர் மேற்கொண்ட கறுப்புக் கொடி போராட்டத்தைப் பார்த்து மிரண்டுபோன அசின் சொன்னது இது.
ஹீரோயினாச்சே… அதிலும் விஜய்யின் பேவரிட் ஹீரோயின் சொன்ன பிறகு அப்பீலேது?
அடுத்த நாளே பாலக்காடு பறந்தது காவலன் படக்குழு, ஹீரோ விஜய்யுடன்.
மேட்டுப் பாளையத்தில் எடுக்க வேண்டிய பல காட்சிகளை ஒத்தப்பாலம் மற்றும் பாலக்காடு பகுதியிலேயே வைத்து எடுத்துக் கொண்டார்களாம். மூன்று தினங்கள் நடந்த இந்தப் படப்பிடிப்பில் வடிவேலுவும் பங்கேற்றார். “இப்போதான் எனிக்கு ரிலீஃப்” என்று அசின் கூற, “அதெப்படி… ரிலீசாகணுமில்ல. அதையும் பாலக்காட்டிலேயே வச்சிக்கிற முடியுமா… போத்தா!” என்று நக்கலடித்தாராம் வடிவேலு.
அது!
 

ஒருவனுக்கு ஒருத்தி கஷ்டம்...!'-இது திருட்டு சிறுக்கி கதை!

Thiruttu Chirukki
“உலகில் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வது ரொம்ப கஷ்டம். குறிப்பிட்ட காலத்துக்கு அப்புறம் கணவனுக்கும் மனைவிக்கும் வாழ்க்கை போரடித்துவிடுகிறது. வேறு துணை தேடுகிறது..”
-ஏதோ பிரபு தேவா – ரம்லத் கதையைச் சொல்வதாக நினைக்க வேண்டாம். இது ‘திருட்டுச் சிறுக்கி’யின் கதை!
திருட்டுச் சிறுக்கி?
ஆம்…. தமிழில் தயாராகும் புதிய படம் ஒன்றின் கதைதான் இது. இந்தப் படத்தில் போஜ்புரி மொழிப் படங்களில் பிரபலமான நடிகை ராணி சதுர்வேதி நாயகியாக அறிமுகமாகிறார்.
எஸ்.எஸ்.எ ஆர்ட் மூவி மேக்கர்ஸ் சார்பில் கே.கே.நாயர் அதிக பொருட்செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் இது.
விவின் என்ற புதுமுகம் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிக்க, இவர்களுடன் அஜய், ‘மலேசியா ஷகிலா’ எனப்படும் ஜெனிபர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
“சமகால வாழ்க்கை முறையில் பணம் சம்பாதிப்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வாழும் கணவன், மனைவிக்குள் மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது வெறும் பகல் கனவாகவே அமைகிறது. பணம்,காசு சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி குடும்ப பாசம், உறவுகள் இவைதான் ஒரு மனிதனுடைய முழுமையான வாழ்க்கையை முடிவு செய்கிறது” என்ற கருத்தை கவிதை மாதிரி சொல்லியிருக்கிறோம் என்கிறார் அறிமுக இயக்குநர் அகிலன்.
கொடைக்கானல்,சென்னை,பாண்டிச்சேரி ஆகிய நகரங்களிலும் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்திற்கு நாக கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய இனியவன் இசையமைக்க, பாடல்களை டாக்டர் கிருதயா எழுதியிருக்கிறார். மக்கள் தொடர்பு வி கே சுந்தர்.
 

நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது -ஆங்கில நாளிதழுக்கு பிரபுதேவா பேட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

யார் என்ன சொன்னாலும் நான் நயனுடனான திருமணத்தை தடுக்க முடியாது என பிரபுதேவா பிரபல ஆங்கில நாளிதழுக்கு பரபரப்பு பேட்டி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஒரு செய்தி தொகுப்பை அந்த நாளிதழ் வெளியிட்டுள்ளது. எதற்கும் தகுந்த நேரம் என்று ஒன்று இருக்கிறது. நயன்தாராவை பற்றி பேசுவதற்கும் இதுதான் சரியான நேரம். ஏனென்றால் நாங்கள் இருவரும் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறோம். இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்துவதா? அல்லது எளிமையாக நடத்துவதா? என்றும் இன்னும் திட்டமிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள்.
இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் பற்றி எனக்கு கவலையில்லை. அனைத்துப் பிரச்சினைகளையும் சட்டப்படியே எதிர்கொள்ளப் போகிறேன். யாருடைய தடையும் இந்தத் தி்ருமணத்தை தடுத்து நிறுத்த முடியாது. இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக உள்ள என் பெற்றோருக்கு நன்றி. ரம்லத் விஷயம் குறித்து இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை…,” என்று கூறியுள்ளார் பிரபுதேவா.


Source: Dinakaran
 

விஜய்யை வைத்து படம் எடுப்பாரா அஜீத்?

Vijay and Ajith
அல்டிமேட் ஸ்டார் அஜீத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். இனிமேல் பக்கா தயாரிப்பாளராக பல படங்களை எடுக்கப் போகிறாராம்.
சினிமாவில் இப்போது புது இலக்கணம் நடைமுறையில் உள்ளது. யார் வேண்டுமானாலும் எந்தத் துறையில் வேண்டுமானாலும் நுழைந்து கலக்கலாம் என்பதே அது. இதனால் ஒவ்வொருவருக்குள்ளும் புதைந்திருக்கும் பல்வேறு முகங்கள் வெளியாகி, தமது துறையைத்தவிர மற்றவற்றிலும் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்பு உள்ளது.
அதன் அடிப்படையில் நடிகர்கள் இயக்குநர்களாகிறார்கள். இயக்குநர்கள் நடிகர்களாகிறார்கள். வில்லன்கள் ஹீரோக்களாகிறார்கள், ஹீரோக்கள் வில்லத்தனம் செய்கிறார்கள். இப்படி பற்பல பரிமாணங்களை கண்டு வருகிறது தமிழ் சினிமா.
அந்த வகையில், இதுவரை நடிகராக மட்டுமே அறியப்பட்டு வந்த அஜீத் தயாரிப்பாளராக புது அவதாரம் எடுத்துள்ளார். தனது மனைவி ஷாலினியை தயாரிப்பாளராக வைத்து குட்வில் என்டர்டெய்ன்மென்ட் என்ற புதிய படத் தயாரிப்பு நிறுவனத்தை அவர் தொடங்கியுள்ளார். இதை முறைப்படி தயாரிப்பாளர் கவுன்சிலிலும் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களைப் பொறுத்தவரை முன்பு ரஜினி படம் தயாரித்தார். கமல்ஹாசன் இன்று வரை தயாரிப்பாளராகவும் மிளிர்கிறார். விஜயகாந்தும் சொந்தப் படம் எடுத்து வருகிறார். அந்த வரிசையில் அஜீத் தற்போது இணைகிறார்.

விஜய்யை வைத்தும் படம் எடுப்பீங்களா ‘தல’?