ரஜினிக்கு அலெக்ஸ் பாண்டியன் குழு செய்யும் 'மரியாதை'!

Alex Pandian Audio Launch On Rajini Birthday

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மறக்க முடியாத பிறந்த நாளான 12.12.12 அன்று கார்த்தி நடித்துள்ள அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதாக அதன் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சகுனி திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் அலெக்ஸ் பாண்டியன்.

இந்தப் படத்தை சுராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு முதலில் நவம்பர் 24-ம் தேதி நடப்பதாக இருந்தது.

இப்போது ரஜினி பிறந்த நாளின் போது நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளரான ஸ்டுடியோ கிரீன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "12.12.12 அன்று அலெக்ஸ் பாண்டியன் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டை நடத்துவதில் பெருமை அடைகிறோம்.

சூப்பர் ஸ்டாரின் பிறந்த தினமான அன்று இந்த இசை வெளியீடு நடப்பது மட்டற்ற மகிழ்ச்சி. மேலும் 30 ஆண்டுகளாக ரசிகர்கள் மனதில் நிலைத்த பெயர் இந்த அலெக்ஸ் பாண்டியன். நமது சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான மூன்று முகம் படத்தில் அவரது புகழ்பெற்ற பாத்திரத்தின் பெயர். அந்தப் பெயரில் உருவாகியுள்ள படத்தின் நிகழ்வுகளை நடத்த ரஜினி சார் பிறந்த தினத்தை தேர்வு செய்துள்ளோம்," என்று குறிப்பிட்டுள்ளனர்.

 

பாவாடை தாவணியில் டாப்ஸி!

Tapsee Half Saree   

சென்னை: டாப்ஸிக்கு எந்த உடை போட்டால் சூப்பர் என்று பட்டிமன்றமே வைக்கலாம். ஆனால் அவரோ பாவாடை தாவணியில் வலம் வந்து அசத்தி விட்டார்.

ஆட்டத்தைக் காணோமே டாப்ஸி

ஆடுகளம் படத்திற்குப் பிறகு அவரது ஆட்டத்தை அதிகமாக பார்க்க முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த நியூஸ் ஒரு சின்ன ஆறுதலாக இருக்கும்.

எப்பவும் மாடர்ன்

எப்போதுமே மாடர்ன் உடையில் வலம் வருபவர் டாப்ஸி. ஆனால் இந்த தீபாவளிக்கு பாவாடை தாவணி போட்டு கலக்கியிருக்கிறார்.

மொத்தமாக நிறைவேறிய ஆசை

மாடர்ன் உடைகளை விட பாவாடை தாவணி மீது நீண்ட நாள் ஆசையாம் டாப்ஸிக்கு. தீபாவளி தினத்தில் தனது ஆசையை மொத்தமாக நிறைவேற்றிக் கொண்டார்.

ஹைதராபாத் பாவாடை தாவணி

ஹைதராபாத் பேஷன் டிசைனர் வடிவமைத்த அந்த பாவாடை தாவணியைப் போட்டு போஸ் கொடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார் டாப்ஸி.

வெரி ஸ்பெஷல் தீபாவளியாம்

தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் வெரி ஸ்பெசல் தீபாவளி என்றும் டிவிட்டரில் தட்டியிருக்கிறார் டாப்ஸி.

பாவாடை தாவணியை ஆசை ஆசையா போட்டிருக்கு டாப்ஸி, இதை வச்சு யாரும் பட்டிமன்றம் நடத்திறாதீங்கப்பா...!

 

'புதிய பாதை'க்கு மாறிய கண்ணழகி ..!

சென்னை: அவர் மீனாவுக்கு முன்பு கண்ணழகியாக திகழ்ந்தவர். தனது க்யூட் அழகால் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். புதிய பாதை போட்டவரோடு காதலில் இணைந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான பின்னர் புதிதாய் ஒரு குழந்தையையும் தத்தெடுத்தனர்.

இயக்குநர் கம் ஹீரோவான தனது கணவரின் படங்கள் வெற்றிபெற திருப்பதிக்கு சென்று மொட்டை எல்லாம் போட்டார் அந்த காதல் மனைவி. கடைசியில் சின்னத்திரையில் நடிக்கிறேன் பேர்வழி என்று டிவி ஹீரோவோடு தனியாக குடும்பம் நடத்தத் தொடங்கினார். இதைப் பார்த்து அதிர்ந்து போன இயக்குநர் கம் ஹீரோ தன் மகள் மற்றும் பிள்ளைகளுடன் தனியாகப் பிரிந்து போய் விட்டார்.

இது போதாதா.. வசதியாகப் போய் விட்டது அந்த கண்ணழகிக்கு...டிவி நடிகருடன் பகிரங்கமாக வலம் வரத் தொடங்கினார். இந்த வில்லங்க உறவு கோலிவுட்டில் சில காலம் பேசப்பட்டு பின்னர் அடங்கியும் போனது.

இப்போது புதிய பூதம் கிளம்பியிருகிறதாம். டிவி ஹீரோ கழற்றிவிடப்பட்டு புதிதாக தெலுங்கு ஹீரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறாராம். நடிகையின் இந்தப் புதிய பாதை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம். ஏன் இந்தப் பிரிவு, எதற்காக இந்தப் புதிய உறவு என்று பேச ஆரம்பித்துள்ளனராம்.

இந்த புதிய பாதை எவ்வளவு தூரம் போகுமோ என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுப்புகள் கிளை பரப்பி பரவத் தொடங்கியுள்ளனவாம்.

 

போடா போடி - விமர்சனம்


Rating:
2.5/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: சிம்பு, வரு சரத்குமார் (வரலட்சுமி), ஷோபனா, விடிவி கணேஷ்
இசை: தரன் குமார்
மக்கள் தொடர்பு: நிகில்
ஒளிப்பதிவு: டங்கன் டெல்போர்டு
தயாரிப்பு: ஹிதேஷ் ஜபக்
இயக்கம்: விக்னேஷ் சிவன்


பெண்ணென்பவள் திருமணத்துக்குப் பின் கணவனை கவனித்துக் கொண்டு, பிள்ளை பெற்று, அதை வளர்ப்பதிலேயே காலத்தைக் கழிக்க வேண்டுமா... அவளுக்கென்று கேரியர் வேண்டாமா...

தன் கண் முன் மனைவி ஆண் நண்பர்களுடன் எப்படி இருந்தாலும் அதை கணவன் சகித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

poda podi review
-இந்த ஈகோ மோதல்தான் போடா போடி படம். அதனை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொடுக்க முயன்றிருக்கிறார்கள்.

அனிமேஷன் டிசைனர் சிம்புவும், நடனக் கலைஞர் வரு சரத்குமாரும் காதலிக்கிறார்கள். காதல் என்றால் பொய் இல்லாமலா... இந்தக் கதையில் பொய்யாய் அவிழ்த்துவிடுபவர் ஹீரோயின் வரலட்சுமி. ஆனால் எதற்காகவும் நடனத்தை விட்டுத் தர மறுக்கிறார். இந்தப் பொய் மற்றும் பிடிவாதத்தால் வெறுத்துப்போய் 'போடி உன் காதலும் வேண்டாம் கத்தரிக்காயும் வேண்டாம்' என்று ஓடுகிறார் சிம்பு.

ஊடல் முடிந்து மீண்டும் கூடுகிறார்கள். இந்த முறை, திருமணம் செய்து கொண்டால் வரலட்சுமியை வழிக்குக் கொண்டு வந்துவிடலாம் என்ற யோசனை உதிக்க, சிம்பு அதை செயல்படுத்த முயல்கிறார். ஆனால் திருமணத்துக்குப் பிறகும் நடனத்தை விடமுடியாது, தன் பழக்கங்களையும் மாற்றிக் கொள்ளமுடியாது என்கிறார் வரலட்சுமி. கர்ப்பமாக்கிவிட்டால் நடனமாட முடியாதே என்ற அபார யோசனையை சித்தப்பா விடிவி கணேஷ் சொல்ல, அதையும் செயல்படுத்திப் பார்க்கிறார்.

குழந்தை பிறக்கிறது. இருவரின் சண்டையில் ஒரு விபத்து நேர, அதில் குழந்தை இறக்கிறது. சிம்புவும் வரலட்சுமியும் பிரிகிறார்கள். பிரிந்த மனைவியை ஒடிப்போய் மல்லுக்கட்டி மீண்டும் குடித்தனம் நடத்த கூட்டி வருகிறார் சிம்பு, நடனமாடியே தீருவேன் என்ற அவரது நிபந்தனையை ஏற்றுக் கொண்டு.

ஆனால், மீண்டும் ஈகோ மோதல் வெடிக்கிறது. நடனமாடும்போது அடுத்தவன் உன்னைத் தொடுவதை எப்படி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது என்ற சிம்புவின் ஆதங்கத்தின் மூலம்...

கடைசியில் இந்தப் பிரச்சினைக்கு முடிவு கட்டுகிறார்கள். கண்டவனுடன் ஆடுவதைவிட, கணவனுடனே ஆடித் தொலைக்கிறேன் என வரலட்சுமி முடிவு செய்ய, சிம்பு டான்ஸ் பார்ட்னராகிறார்.

ஆனால் டான்ஸ் காம்பெடிஷனில் அவர் சொதப்புகிறார். 'சரி, எனக்குதான் சல்சா டான்ஸ் வரவில்லை.. அதனால் எனக்கு நன்றாக ஆட வரும் குத்து டான்ஸுக்கு நீ மாறிக் கொள்' என சிம்பு அட்வைஸ் பண்ண, சல்சா குத்துக்கு மாறுகிறது. சக்ஸஸ் ஆகிறது.

ஆனால்... அடுத்து டான்ஸ் காம்பெட்டிஷனில் இன்னும் 14 ரவுண்டுகள் இருக்கின்றன. அதில் எப்படி ஜெயிப்பது என்று வரலட்சுமி கேட்க, அதற்கு சிம்பு ஒரு டெக்னிக் வைத்திருக்கிறார். அது மீண்டும் வரலட்சுமியை கர்ப்பமாக்குவது.. அப்புறம்....சுபம்!

ஸ்ஸப்பா... ஒருவழியா கதையை எழுதி முடிச்சிட்டேன். கதையை எழுதும் போதுதான் இத்தனை இம்சையாக இருக்கிறதே தவிர... அதை புது இயக்குநர் விக்னேஷ் சிவன் படமாக்கிய விதம், கொஞ்சம் புதுசாகவும் சுவாரஸ்யமாகவும்தான் இருக்கிறது.

நெத்தியடியாக ஒரு தோல்வி கிடைத்தால்தான் சிம்பு மாதிரி ஹீரோக்கள் வாயையும் கையையும் அடக்கிக் கொண்டு நடிப்பார்கள் போலிருக்கிறது. ஒஸ்தியில் பட்ட அடி, இந்தப் படத்தில் அவரை அப்படியே திருப்பிப் போட்டிருக்கிறது (அட்லீஸ்ட் அப்படி நடிக்கவாவது செய்ய வைத்திருக்கிறது).

அவரை விட வெயிட்டான ரோல் வரலட்சுமிக்கு. அதை செவ்வனே செய்திருக்கிறார். குரலும் தோற்றமும் சற்று கடூரம்தான் என்றாலும், அவரது ஈடுபாடும், டான்ஸும் அவற்றை மறக்கடிக்க வைக்கிறது. அவரை ஏன் இந்தப் படத்துக்கு ஹீரோயினாக்கினார்கள் என்பதை சரியாக நியாயப்படுத்தியிருக்கிறார் வரலட்சுமி.

விடிவி கணேஷ் வரும் காட்சிகளில் தியேட்டர் கலகலக்கிறது. ஆனால் இன்னும் எத்தனைப் படத்துக்கு இது ஒர்க் அவுட் ஆகும் என்ற கேள்வியையும் தவிர்க்க முடியவில்லை.

ஷோபனாவுக்கு ஒரு ரெண்டுங்கெட்டான் கேரக்டர்.

ஒட்டுமொத்தமாக படம் சூப்பர் என்று சொல்ல முடியாவிட்டாலும், பல காட்சிகள் ரசிக்கும்படி இருப்பதை சொல்லித்தான் ஆக வேண்டும். குறிப்பாக பிரிந்த மனைவியை கூட்டிப் போக வரும் சிம்பு, ஷோபனாவிடம் வாதிடுவது. குழந்தைக்காக அவர் பாடும் ங்கொப்பன் மவனேயை ரசிக்க முடியவில்லை என்றாலும், அதை எடுத்திருக்கும் இடம், விதம் அழகு. முழு கிரெடிட்டும் ஒளிப்பதிவாளருக்குதான்!

டாய்லெட்டுக்குள் வெறுப்புடன் வீசியெறிந்த திருமண மோதிரத்தை வரலட்சுமி மீண்டும் எடுப்பது, படத்தில் சபாஷ் பெறும் இன்னொரு காட்சி!

காதல், ஊடல், சண்டை, பிரிவு, மீண்டும் கூடல், ஊடல், சண்டை என ரோலர் கோஸ்டர் மாதிரி காட்சிகள் நகர்வதில் ஒரு கட்டத்தில் களைப்புத் தட்டுவதும் உண்மைதான். ஆனால் அந்த டான்ஸ் காம்பெடிஷன் நெருங்க நெருங்க, நாமும் அதில் ஐக்கியமாவதை உணர்கிறோம்...

தரணின் இசை பரவாயில்லை. பாடல்கள் எதுவும் நினைவிலும் இல்லை. மீண்டும் மீண்டும் தன் பழைய பாடல்களையே புதுப் பாட்டாக கோர்ப்பதை சிம்பு எப்போது விடப் போகிறாரோ!

புது இயக்குநர் விக்னேஷ் சிவன், எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் வித்தியாசமான கதையை வித்தியாசமான அணுகுமுறையோடு ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். ஆனால் இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்றும் சொல்ல முடியாது!

எதிர்ப்பார்ப்பில்லாமல் போனால் ரசிக்கலாம்!

 

2 பேரக் குழந்தைகளின் பாட்டிக்கு திகட்டத் திகட்ட 'லிப் டூ லிப்' கொடுத்த டிகாப்ரியோ!

லண்டன்: லியனார்டோ டிகாப்ரியோவைத் தெரியுமா...அதே டைட்டானிக் நாயகன்தான். கேட் வின்ஸ்லெட் உதடுகளைச் சுவைத்த இவரது உதடுகள் தற்போது 2 பேரக் குழந்தைகளுக்குப் பாட்டியான 66 வயது நடிகையின் உதடுகளைச் சுவைத்து சுவாரஸ்யத்தைக் கிளப்பியுள்ளது.

joanna lumley 66 grins after locking
38 வயதான டிகாப்ரியோ தற்போது உல்ப் ஆப் தி வால்ஸ்ட்ரீட் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஒரு ஷேர் புரோக்கராக வருகிறார் டிகாப்ரியோ. இப்படத்தின் ஷூட்டிங்கை நியூயார்க்கில் உள்ள ஒரு பார்க்கில் நடத்தினர். அந்த இடத்தில்தான் இந்த சுவராஸ்யமான முத்தக் காட்சி இடம் பெற்றது.

மிக அழகான, வசீகரமான நடிகை என்று ஒரு காலத்தில் பெயர் பெற்றவர் ஜோனா லம்லி. இப்போது இவருக்கு 66 வயதாகிறது. இரண்டு பேரக் குழந்தைகள் உள்ளனர். 26 வருடமாக ஒரே கணவருடன் வாழ்க்கை நடத்தி வரும் 'சாதனைக்குரியவரும்' கூட.

இவருக்குத்தான் திகட்டத் திகட்ட உம்மா கொடுத்துள்ளார் டிகாப்ரியோ. இக்காட்சியைப் படம் பிடித்தபோது ஜோனாவுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை. டிகாப்ரியோவுடன் படு இயல்பாக முத்தக் காட்சியில் நடித்தபோதும், முத்தம் கொடுத்து முடித்தவுடன் வெட்கத்தால் வாய் விட்டு பலமாக சிரித்து விட்டார் ஜோனா. அத்தோடு நில்லாமல் டிகாப்ரியோவையும் புகழ்ந்து தள்ளி விட்டார்.

படு க்யூட்டான காஸ்ட்யூமில் அழகாக காட்சி அளித்தார் ஜோனா. அதேபோல டிகாப்ரியோவும் செம ஹேன்ட்செம்மான உடையில் இருந்தார்.

முத்தம் கொடுத்துக் கொள்வதற்கு முன்பு ஜோனாவும், டிகாப்ரியோவும் பார்க்கில் சிறிய நடை போட்டு இயல்பாகிக் கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்த ஒரு பென்ச்சில் நெருக்கமாக உட்கார்ந்தனர். பின்னர் ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டிப்பிடித்தபடி லிப் டூ லிப் முத்தம் கொடுத்தனர். படு இயல்பாகவும், தத்ரூபமாகவும் காட்சி அமைந்ததால் அனைவருக்கும் திருப்தி.

இந்தப் படம் டிகாப்ரியோவுக்கு பெரிய பிரேக்காக அமையும் என்று இங்கிலாந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனராம். அதேபோல ஹாலிவுட் ரசிகர்களிடையேயும் இந்தப் படம் எதிர்பார்ப்பை கிளறி விட்டுள்ளதாம்.

 

'புதிய பாதை'க்கு மாறிய கண்ணழகி ..!

சென்னை: அவர் மீனாவுக்கு முன்பு கண்ணழகியாக திகழ்ந்தவர். தனது க்யூட் அழகால் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். புதிய பாதை போட்டவரோடு காதலில் இணைந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான பின்னர் புதிதாய் ஒரு குழந்தையையும் தத்தெடுத்தனர்.

இயக்குநர் கம் ஹீரோவான தனது கணவரின் படங்கள் வெற்றிபெற திருப்பதிக்கு சென்று மொட்டை எல்லாம் போட்டார் அந்த காதல் மனைவி. கடைசியில் சின்னத்திரையில் நடிக்கிறேன் பேர்வழி என்று டிவி ஹீரோவோடு தனியாக குடும்பம் நடத்தத் தொடங்கினார். இதைப் பார்த்து அதிர்ந்து போன இயக்குநர் கம் ஹீரோ தன் மகள் மற்றும் பிள்ளைகளுடன் தனியாகப் பிரிந்து போய் விட்டார்.

இது போதாதா.. வசதியாகப் போய் விட்டது அந்த கண்ணழகிக்கு...டிவி நடிகருடன் பகிரங்கமாக வலம் வரத் தொடங்கினார். இந்த வில்லங்க உறவு கோலிவுட்டில் சில காலம் பேசப்பட்டு பின்னர் அடங்கியும் போனது.

இப்போது புதிய பூதம் கிளம்பியிருகிறதாம். டிவி ஹீரோ கழற்றிவிடப்பட்டு புதிதாக தெலுங்கு ஹீரோ ஒருவர் வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருக்கிறாராம். நடிகையின் இந்தப் புதிய பாதை பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாம். ஏன் இந்தப் பிரிவு, எதற்காக இந்தப் புதிய உறவு என்று பேச ஆரம்பித்துள்ளனராம்.

இந்த புதிய பாதை எவ்வளவு தூரம் போகுமோ என்று சின்னத்திரை வட்டாரங்களில் கிசுகிசுப்புகள் கிளை பரப்பி பரவத் தொடங்கியுள்ளனவாம்.

 

பாவாடை தாவணியில் டாப்ஸி!

Tapsee Half Saree   

சென்னை: டாப்ஸிக்கு எந்த உடை போட்டால் சூப்பர் என்று பட்டிமன்றமே வைக்கலாம். ஆனால் அவரோ பாவாடை தாவணியில் வலம் வந்து அசத்தி விட்டார்.

ஆட்டத்தைக் காணோமே டாப்ஸி

ஆடுகளம் படத்திற்குப் பிறகு அவரது ஆட்டத்தை அதிகமாக பார்க்க முடியாத ஏக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு இந்த நியூஸ் ஒரு சின்ன ஆறுதலாக இருக்கும்.

எப்பவும் மாடர்ன்

எப்போதுமே மாடர்ன் உடையில் வலம் வருபவர் டாப்ஸி. ஆனால் இந்த தீபாவளிக்கு பாவாடை தாவணி போட்டு கலக்கியிருக்கிறார்.

மொத்தமாக நிறைவேறிய ஆசை

மாடர்ன் உடைகளை விட பாவாடை தாவணி மீது நீண்ட நாள் ஆசையாம் டாப்ஸிக்கு. தீபாவளி தினத்தில் தனது ஆசையை மொத்தமாக நிறைவேற்றிக் கொண்டார்.

ஹைதராபாத் பாவாடை தாவணி

ஹைதராபாத் பேஷன் டிசைனர் வடிவமைத்த அந்த பாவாடை தாவணியைப் போட்டு போஸ் கொடுத்து ஃபேஸ்புக்கில் அப்லோட் செய்திருக்கிறார் டாப்ஸி.

வெரி ஸ்பெஷல் தீபாவளியாம்

தன்னுடைய நீண்ட நாள் கனவு நிறைவேறியதில் வெரி ஸ்பெசல் தீபாவளி என்றும் டிவிட்டரில் தட்டியிருக்கிறார் டாப்ஸி.

பாவாடை தாவணியை ஆசை ஆசையா போட்டிருக்கு டாப்ஸி, இதை வச்சு யாரும் பட்டிமன்றம் நடத்திறாதீங்கப்பா...!

 

ஒரு லட்சம் புடவை வேணும்... அடம் பிடித்த ரோஜா...

Roja S Costly Demand

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘லக்கா, கிக்கா' நிகழ்ச்சி நடத்தும் ரோஜா புடவை சரியில்லை என்று நிகழ்ச்சியின் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டாராம்.

சின்னத்திரையில் சினிமா நடிகைகள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு அதிக செலவு என்றால் அவர்களுக்கான காஸ்ட்யூம்தான். ஜீ தமிழ் டிவியில் ரோஜா ‘லக்கா கிக்கா' நிகழ்ச்சியில் புடவை, நகை அலங்காரம் பிரம்மாண்டமாக இருக்கும். புடவை மட்டுமே ஒரு லட்சம் ரூபாயாம்.

சமீபத்தில் டிவி நிர்வாகம் சார்பில் வேறு புடவை கொடுத்திருக்கின்றனர். ஆனால் அதை உடுத்த மறுத்துவிட்டாராம் ரோஜா. ஒரு லட்சம் ரூபாய் புடவை தந்தால்தான் நிகழ்ச்சிக்குத் தருவேன் என்று சூட்டிங்கை கேன்சல் செய்து விட்டராம். டிவி நிர்வாகத்தினர் பாடுதான் திண்டாட்டமாகிவிட்டது.

 

நானும், ராஜசேகர் அப்பாவும் நண்பர்கள்தான், நில மோசடி வழக்கை சந்திப்பேன்.. நடிகர் ரித்தீஷ்

அருப்புக்கோட்டை: என் மீது வேண்டும் என்றே நில மோசடி பொய் வழக்கைப் போட்டுள்ளனர். வழக்கைப் போட்டுள்ளவர் எனது நண்பர்தான். இந்த வழக்கை நான் சட்டப்படி சந்திப்பேன் என்று கூறியுள்ளார் 'பொழுதன்னிக்கும்' வன்முறை, கலாட்டா, அடிதடி உள்ளிட்ட விவகாரங்களில் சிக்கி கோர்ட்டுக்கும், வீட்டுக்குமாக நடந்து கொண்டிருக்கும் திமுக எம்.பியும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ்.

நடிகர் ரித்தீஷ் மீது அடிக்கடி வழக்குகள் பாய்ந்து வருகின்றன. அவரும் சும்மா இருப்பதில்லை. ஏதாவது வம்பிழுத்து சண்டைக்குப் போய் விடுகிறார். சமீபத்தில் கூட, பசும்பொன்னில் நடந்த முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவின்போது, அஞ்சலி செலுத்துவதற்காக வந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகனை வரவேற்பது மற்றும் வழியனுப்புவது தொடர்பாக ரித்தீஷ் கோஷ்டியினருக்கும், சுப. தங்கவேலன் கோஷ்டியினருக்கும் இடையே செமத்தியான சண்டை நடந்தது. ஆளாளுக்கு அடித்துக் கொண்டனர், வெட்டு விழுந்தது, ரத்தக் களறியானது.

தேவர் நினைவிடத்தில் அன்பழகன் மலர் வளையம் வைத்துவிட்டு சென்னை செல்லும் முன் அருப்புக்கோட்டையில் பைபாஸ் ரோட்டில் உள்ள முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் நூற்பு மில்லில் மதிய உணவிற்கு வந்தார். அப்போது சுப.தங்கவேலன், ரித்தீஷ் எம்.பி. கோஷ்டிகளுக்கு இடையே பெரும் மோதல் மூண்டது.

இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், ரித்தீஷ். அவரது உதவியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி, பொது சொத்தை சேதப்படுத்துவது உள்பட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்நிலையில் ரித்தீஷ் மற்றும் உதவியாளர் நாகராஜ் இருவரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஜாமீன் பெற்றனர். அதனைத் தொடர்ந்து இருவரும் அருப்புக்கோட்டை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தனர். பின்னர் இருவரும் தனித்தனியே இரு நபர் ஜாமீன் பெற்றுச் சென்றனர்.

இந்த நிலையில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜசேகர் என்பவர் சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், என் தந்தை முருகேசனிடம் 20 கோடி ரூபாய்க்கு இடம் வாங்கித் தருவதாக எம்.பி. ரித்தீஷ் பணம் பெற்றுக் கொண்டு இடம் வாங்கித் தரவில்லை. வேறு இடம் வாங்கித் தருவதாக கூறியிருந்தார். ஆனால் வேறு இடமும் வாங்கித் தரவில்லை. ரூபாயும் திருப்பித் தரவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அருப்புக்கோட்டைக்கு வந்த ரித்தீஷிடம் என்ன விஷயம் என்று கேட்டபோது, நானும், ராஜசேகர் தந்தை முருகேசனும் நெருங்கிய நண்பர்கள். பல கோடி ரூபாய்க்கு இருவரும் சேர்ந்து தொழில் செய்துள்ளோம். தற்போது இடப் பிரச்சினையில் சில குளறுபடி இருந்ததால் காலதாமதம் ஏற்பட்டது. அதனை காரணம் காட்டி சிலரின் தூண்டுதலின் பேரில் ராஜசேகர் என் மீது பொய் புகார் கொடுத்துள்ளார். அதனை சட்டப்படி நீதிமன்றத்தில் வழக்கை சந்திப்போம் என்றார் ரித்தீஷ்.

 

ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட்

Girish Karnad Criticises Ar Rahman

பெங்களூர்: ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் வார்த்தைகளே கேட்பதில்லை என்று எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரினிடாடைச் சேர்ந்த இந்திய வம்சாவழி எழுத்தாளரான வி.எலஸ்.நைபாலுக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் தாகூர் ஒரு இரண்டாம் தர நாடக ஆசிரியர் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை குறை கூறியுள்ளார். பெங்களூரில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நம் நாட்டு உருது கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய கர்னாட் ரஹ்மானின் இசையை சாடியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் அவரது இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் பாடல் வரிகள் கேட்பதில்லை. பாலிவுட்டில் உருது கவிதைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது இந்தி படங்களில் உருது கவிதைகள் இறந்துவிட்டன. அதற்கு ரஹ்மானைத் தான் குறை கூற வேண்டும் என்றார்.

 

கேரளாவில் அத்தனை விஜய் பட வசூல் சாதனைகளையும் முறியடித்ததாம் துப்பாக்கி!

விஜய் நடித்த துப்பாக்கி படம் வசூலில் பெரிய சாதனையை நோக்கிப் போய்க் கொண்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. கேரளாவில் இதுவரை வெளியான அத்தனை விஜய் படங்களின் வசூல் சாதனையையும் இந்தப் படத்தின் வசூல் தாண்டி விட்டதாகவும் கூறுகிறார்கள்.

thuppakki creates new record kerala

பல சர்ச்சைகள், விதம் விதமான விமர்சனங்களுக்கு மத்தியில் து்பபாக்கி ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய்யின் பன்ச் வசனம் இல்லாத இன்னும் ஒரு படம் என்ற புதிய அந்தஸ்தும் இப்படத்திற்குக் கிடைத்துள்ளதால் படத்திற்கு கூட்டம் கட்டி ஏறிக் கொண்டபடிதான் உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் பெரிய வெற்றி விஜய்யை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளதாம்.

மேலும் இப்படம் கேரளாவில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறதாம். அத்தோடு இல்லாமல் அங்கு இதுவரை வெளியான விஜய் படங்கள் வசூலித்ததை விட இந்தப் படம் அதிக அளவில் வசூலித்துள்ளதாம்.

அதேபோல ஆந்திராவிலும் இப்படம் பெரிய அளவில் ஓடிக் கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. இது விஜய் தரப்பை மேலும் குஷிப்படுத்தியுள்ளதாம்.

இந்த சந்தோஷத்துடன் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் இணைந்து துப்பாக்கி படக் குழுவினருக்கு விருந்தளித்து அசத்தியுள்ளார். அந்த விருந்து பிரமாதம் என்று இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் டிவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

 

சல்மான் கான் எனது அண்ணன் மாதிரி : கத்ரீனா கைப்

almanKhan is like a brother: Kathrina சல்மான் கான் எனது அண்ணன் மாதிரி என்று அவரது முன்னாள் காதலி கத்ரீனா கைப் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு சல்லுவின் ரசிகர்கள் கொதித்துவிட்டனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானும், நடிகை கத்ரீனா கைபும் ஒரு காலத்தில் பிரிக்க முடியாத காதலர்களாக இருந்தனர். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரீனா சல்மான் கான் என் அண்ணன் மாதிரி என்று தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு பலர் அதிர்ச்சி அடைந்தனர்.

சல்மான் கானை அண்ணன் என்று கூறிய கத்ரீனாவை சல்லுவின் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டித் தீர்த்துள்ளனர். கத்ரீனா செய்துள்ளது தான் பயன்படுத்திவிட்டு தூக்கி எரிவதற்கு சிறந்த உதாரணம். கத்ரீனாவின் செயலை ஷாருக்கின் மேஜிக் என்று சொல்லலாமா என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

12-12-12 கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ

12-12-12 Alex pandiyan audio release ர‌ஜினி பிறந்தநாளான 12-12-12 அன்று கார்த்தியின் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ வெளியாகிறது.

கார்த்தி, அனுஷ்கா, சந்தானம் நடித்திருக்கும் அலெக்ஸ் பாண்டியன் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்து பொங்கலுக்கு ‌ரிலீஸை மாற்றி வைத்தனர். சுரா‌ஜ் இந்த ஆக்சன் படத்தை இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீபிரசாத் இசை.

இதன் இசை வெளியீட்டு விழா 12-12-12 அன்று ர‌ஜினியின் பிறந்தநாள் அன்று நடக்கிறது. 12-12-12 என்பது அபூர்வமான நாள். இப்படியொரு தேதி அமைவது நூறாண்டுக்கு ஒருமுறைதான். இதே தேதியில் கோச்சடையானை வெளியிடுவதாக இருந்தனர். துரதிர்ஷ்டவசமாக ஆடியோவைக்கூட வெளியிட முடியாத நிலை.

ர‌ஜினியின் மூன்று முகம் படத்தில் வரும் புகழ்பெற்ற அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரத்தின் பெயரைதான் கார்த்தி படத்துக்கும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

30ஆம் தேதி நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ரிலீஸ்

Coming 30th Natuvula konjam pakkatha kanom ஒரு மாதத்துக்கு முன்பு பத்தி‌ரிகையாளர்களுக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரையிடப்பட்டது. அறிமுக இயக்குன‌ரின் படம், விடலைத்தனமான பெயர், போரடிக்காமல் இருந்தால் ச‌ரிதான் என்று படம் பார்க்க உட்கார்ந்தவர்களை புரட்டிப் போட்டது படம். படத்தை சின்னதாக ட்‌ரிம் செய்து வெளியிட்டால் பிய்ச்சுக்கும் என்று தயா‌ரிப்பாளர் சதீஷ்குமா‌ரின் கையை வலிக்க வலிக்க குலுக்கியதில் மனிதர் உஷாராகி படத்தின் ‌ரிலீஸை தள்ளி வைத்தார்.

ஏன்?

ஐம்பது தியேட்ட‌ரில் படத்தை வெளியிடும் ஐடியாவில் இருந்தாராம். பத்தி‌ரிகையாளர்களின் பாராட்டைப் பார்த்தவர் 150 தியேட்டர்களாக ஐடியாவை நீட்டித்தார். அதற்காகதான் இந்த கால இடைவெளி.

வரும் 30ஆம் தேதி படத்தை வெளியிடுகிறார். பிரஸ்ஸின் அறிவுரைப்படி 25 நிமிடங்கள் படத்தில் ட்‌ரிம் செய்யப்பட்டிருக்கிறது. முக்கியமான விஷயம் இந்த வித்தியாசமான படம் ஒளிப்பதிவாளர் ஒருவ‌ரின் உண்மைக்கதை.

பிக்சனைவிட உண்மைதான் பல நேரம் சுவாரஸியமாக இருக்கிறது.
 

விஜய்யின் துப்பாக்கி வெடியும் சாம்பிராணி புகையும்!- ஒரு 'போஸ்ட் மார்ட்டம்' ரிப்போர்ட்!


Rating:
1.5/5

- பிரபாகரன்

பரபரவென காட்சிகள் நகர்வது போல படமெடுத்தால் போதும்... மக்கள் குறைகளை மறந்துவிடுவார்கள் என்ற வீச்சறுவா புகழ் ஹரியின் பாலிசிதான் இனி சரிப்பட்டு வரும் என்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது முருகதாஸ் என்ற கமெண்ட் இப்போது எல்லோர் வாயிலும் வர ஆரம்பித்துவிட்டது, துப்பாக்கி படம் ஓடும் அரங்குகளில்.

thuppakki user review   
தீபாவளிக்கு வந்த படங்களில் பரவாயில்லை என்ற மவுத் டாக் வந்துவிட்டது. அதை நம்பி, விஜய்யும் விடிய விடிய பார்ட்டி கொடுத்து, அந்த தெம்போடு அடுத்த துப்பாக்கிக்கு ரெடியாகிவிட்டார்.

ஆனால் துப்பாக்கி ஓடும் தியேட்டர்களில் ஜனங்களின் பல்ஸ் என்ன என்று பார்க்கப் புறப்பட்டோம்.

அடடா... அவங்கதாங்க நிஜமான விமர்சகர்கள். எந்த முன் தயாரிப்புமின்றி, படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவர்கள் அடிக்கிற கமெண்டைக் கேட்டால், ஏன்டா இப்படி ஒரு படத்தில் நடித்தோம் என விஜய்யும் (அவருக்கு அப்படியெல்லாம் தோணுமாங்கிறது சந்தேகம்தான்...), இவரோடு ஏன் சேர்ந்தோம் என இயக்குநர் முருகதாஸும் நிச்சயம் வருத்தப்படுவார்கள்.

இந்தப் படத்தில் எந்தக் காட்சியிலாவது நம்பகத்தன்மை அல்லது உண்மை இருக்கிறதா என்பது முதல் கேள்வி.

படம் முழுக்க மிலிட்டரி ஆபீ.. ஸர் விஜய், ஏதோ செட் தோசை சுடுவது போல எல்லோரையும் சுட்டுக் கொண்டே இருக்கிறார். எழவு... அதைக் கேட்க ஒரு போலீஸ் கூட குறுக்கே வரவே மாட்டேங்குது. மும்பையில் போலீஸ்காரங்க அவ்வளவு டம்மி பீஸுங்களா...?

அட ஒரு கப்பலுக்கு வெடி வைக்கிறாய்ங்கய்யா... அந்தக் காட்சியை 50 ரூபாய்க்கு இங்கிலீஷ் பட சிடி வாங்கிப் பாத்து அப்படியே சுட்டு எடுத்திருந்தா கூட நல்லா வந்திருக்கும். கெரகம்... இவர்களது லோ குவாலிட்டி கிராபிக்ஸை பாருங்கள்... கப்பல் வெடிச்சதும் ஏதோ சாம்பிராணி போட்ட மாதிரி சவசவன்னு கிளம்புது புகை!

ஆமா... இந்த சத்யனையெல்லாம் யாரும் கேப்பாரே இல்லையா... காமெடி என்ற பெயரில் அவர் போடற சத்தம் கர்ண கொடூரம்டா சாமி.. பேசாம அவரை ஊமையாவே நடிக்க வச்சிருக்கலாம்..!

அவருக்கு கொஞ்சமும் சளைக்காத சொதப்பல் காமெடி பீஸ் ஜெயராம்.

மும்பையில் 12 இடங்களில் குண்டு வெடிப்பை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். ஆனா ஹீரோ நம்ம இளைய தளபதியாச்சே... மொத்த கிரெடிட்டும் அவருக்குத்தானே சேரணும்... சும்மா... இடது கையால் சொடக்குப் போட்டபடியே தீவிரவாதிகள் கூட்டம் மொத்தத்தையும் ஒழித்துக் கட்டுகிறார் பாருங்க... 2008 மும்பை குண்டு வெடிப்பப்போ இந்தாளு எங்கேய்யா போயிருந்தார்னு தியேட்டர்ல கமெண்ட் அனல் பறக்குது!

அப்புறம் இந்த ஹீரோயின்...

குணா படத்துல கமல் சொல்வாரே.. நடு நடுவே மானே தேனே பொன்மானேன்னு போட்டுக்கன்னு... அப்படித்தான்... துப்பாக்கி சத்தம் கொஞ்சம் காதைக் கிழிக்கும்போது, இந்தப் பொண்ணை லம்பாடி டிரஸ்ல ஆடவிட்டு, டமார்னு மறைச்சு வெச்சுக்கிறார் டைரக்டர். அப்புறம் ஒரு மூணு ரீல் கழிச்சு திரும்ப கண்ல காட்டறார். இப்படியே காட்டி காட்டி... க்ளைமாக்ஸ்ல கரெக்டா ஹீரோவோட டூயட் ஆட வரவச்சுடறார்!

படத்தை பார்க்கும்போது பலர் கோபத்தில் அங்கும் இங்கும் திரும்பிப் பார்ப்பதும், பக்கத்தில் இருப்பவர் ரொம்ப நேரத்துக்கு முன்பே தூங்கிவிட்டதை பார்த்து, 'அட, இது நல்லா ஐடியாவா இருக்கே' என்று அவர்களில் பலரும் தூங்க ஆரம்பித்ததும் தான் நமது ரவுண்ட்-அப்பின் ஹைலைட்!

ரமணா மாதிரி சென்சிபிளான படம் கொடுத்த முருகதாஸ்தானா இதுன்னு ரொம்ப சந்தேகமாவும்... இவரும் விஜய் கூட சேர்ந்து இப்படி ஆகிட்டாரேங்கிற வருத்தமும்தான், படம் முடிஞ்சதும் எனக்கு மிஞ்சிச்சு!

 

சூப்பர் சிங்கர் டி 20: விஜய் டிவியின் இசைப் போட்டி

Vijay Tv T20 Super Singer Music Show

பாடல் மட்டுமல்லாது ஆடலுடன் கூடிய வித்தியாசமான டி20 இசைப் போட்டியினை விஜய் டிவி ஒளிபரப்பி வருகிறது. 6 அணிகள் 42 பாடகர்கள் பங்கேற்றுள்ள இந்த இசைப் போட்டி தினசரி இரவு இசை ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

சூப்பர்சிங்கர், சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டிகளை நடத்தி வந்த விஜய் டிவி தற்போது புதிதாக குழு வடிவிலான இசைப்போட்டியை தொடங்கியுள்ளது. டி 20 கிரிக்கெட் போல இந்த இசைப் போட்டிக்கு சூப்பர் சிங்கர் டி 20 என பெயரிட்டுள்ளனர்.

6 அணியினர் 42 பாடகர்கள் என களை கட்டியுள்ளது சூப்பர் சிங்கர் டி 20. வெள்ளை, பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு மஞ்சள் என ஆறு அணியாக பிரிக்கப்பட்டு சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பாடகர்கள் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீனி வெள்ளை அணிக்கும் பூஜா பச்சை அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சரண் மஞ்சள் அணிக்கும் சந்தோஷ் சிகப்பு நிற அணிக்கும் கேப்டனாக உள்ளனர். நிகில் மாத்யூ கருப்பு அணிக்கும் சத்யா நீலம் அணிக்கும் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இப்போது லீக் போட்டிகள் தொடங்கியுள்ளன. டி 20 நடுவர்களாக பாடகர் மனோ, பாடகி ஸ்வேதா, மற்றும் ஆனந்த் வைத்தியநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக திவ்யதர்சினி, மா.ப.க. ஆனந்த் ஆகியோர் தங்களின் கலகலப்பான பேச்சினால் நிகழ்ச்சிக்கு கூடுதல் உற்சாகத்தை அளித்து வருகின்றனர். தினசரி இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இசை ரசிகர்கள் சூப்பர் சிங்கர் டி20 நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்.

 

துப்பாக்கி - விமர்சனம்


Rating:
3.5/5

-எஸ் ஷங்கர்

நடிப்பு: விஜய், காஜல் அகர்வால், சத்யன், ஜெய்ராம், வித்யூத் ஜம்வால்
ஒளிப்பதிவு: சந்தோஷ் சிவன்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
தயாரிப்பு: கலைப்புலி தாணு

எழுத்து, இயக்கம்: ஏ ஆர் முருகதாஸ்

ஆக்ஷன் படங்கள் என்றால் லாஜிக் பார்க்கக் கூடாது என்பது கோடம்பாக்கத்தின் எழுதப்படாத விதி. துப்பாக்கியும் அதற்கு விலக்கில்லை. ஆனால் அதையெல்லாம் தாண்டி பார்க்கும்படி ஒரு பக்கா ஆக்ஷன் மசாலா தந்திருக்கிறார் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். அந்த வகையில் இந்த ஆண்டு பெரிய பட்ஜெட் படங்களின் தொடர் வீழ்ச்சிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது துப்பாக்கி.

tuppakki review   
படத்தின் கதையை விலாவாரியாக சொல்வது, படத்தை ரசிக்க முடியாமல் செய்துவிடும். ஆனாலும் ஒன்லைனை மட்டும் 'சில லைன்களில்' சொல்லிவிடுகிறோம்.

மிலிட்டரியிலிருந்து 40 நாட்கள் லீவில், யூனிபார்மைக் கூட கழட்டாமலேயே வருகிறார் மும்பைத் தமிழன் விஜய். அதே யூனிபார்முடன் காஜலை பெண்பார்க்கப் போகிறார். ஒரு பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. அப்போது பிக்பாக்கெட் ஒருவனைப் பிடிக்கிறார் விஜய். அந்த நேரத்தில் இன்னொருவன் சம்பந்தமே இல்லாமல் ஓட, விஜய் அவனைத் துரத்திப் பிடித்து விசாரிக்கும்போதுதான் மிகப் பெரிய தீவிரவாத நெட்வொர்க் தெரிகிறது.

தீவிரவாதிகள் 12 இடங்களில் குண்டு வைக்கத் திட்டமிட்டிருப்பது தெரிந்த விஜய், கையில் கிடைத்த தீவிரவாதியை தப்பிக்க விட்டு, தீவிரவாதிகளின் தலைமையை அழிக்க முயல்வதும், அந்த தலைமை விஜய்யை அழிக்க முயல்வதும், இதில் யார் ஜெயிக்கிறார்கள் என்பதும்தான் கதை.

பழைய எம்ஜிஆர் பாணி கதைதான் என்றாலும் அதை முருகதாஸ் கையாண்ட விதம் ரசிகர்கள் தன்னை மறந்து பல காட்சிகளில் கைத்தட்ட வைக்கிறது.

போலீஸ் வேடமே விஜய்க்குப் பொருந்தவில்லை... இதில் மிலிட்டரி ஆபீசர் கெட்டப் எப்படியோ.. என்ற யோசனையோடு உட்கார்ந்தால்.. அட.. அசத்தலாகப் பொருந்துகிறது!

பஞ்ச் வசனங்கள் குறைத்து, லொட லொட சவால் பேச்சுக்களைத் தவிர்த்து அடக்கி வாசிக்கிறார் விஜய். பார்க்கவே ரொம்ப நல்லாருக்கு... துப்பாக்கி வெற்றிக்குப் பிறகும் இந்த அடக்கம் தொடர்ந்தால் இன்னும் நல்லாருக்கும்!

காஜல் அகர்வால் கண்ணுக்கு லட்சணமாக வந்து போகிறார். அவர் வேலை பாட்டுக்கு டான்ஸ் ஆடுவதும், தீவிரவாதம் போரடிக்கும் போது விஜய்யுடன் ரொமான்ஸ் பண்ணுவதும்தான். அதை பக்காவாக செய்கிறார்.

சத்யன், ஜெய்ராம் காட்சிகள் சமயத்தில் ஜோர்... கொஞ்சம் போர்!

வில்லன் வித்யூத் ஜம்வாலுக்கு கொடுத்த முக்கியத்துவம் ஹீரோவை இன்னும் ஒருபடி உயர்த்திப் பிடிக்கிறது.

ஆக்ஷன் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம், தீவிரவாதிகளால் விஜய் அண்ட் கோவின் தங்கைகள் கடத்தப்பட அதை விஜய் கண்டுபிடிக்கும் காட்சிகள்!

12 தீவிரவாதிகளையும் தீர்த்துக்கட்ட விஜய் போடும் பிளான்.. அக்மார்க் மாஸ்டர் ப்ளான்...

படத்தில் லாஜிக் மிஸ்டேக் என்று பார்த்தால் ஏகப்பட்டதைச் சொல்லமுடியும். ஆனால் அதை மட்டுமே மனதில் வைத்துக்கொண்டு தியேட்டருக்குப் போனால் எந்தப் படத்தையும் ரசிக்க முடியாதுதான். முக்கியமாக துப்பாக்கியின் வேகம், விறுவிறுப்பு, சுவாரஸ்யத்துக்காக... குறைகளை மன்னிக்கலாம்!

சந்தோஷ் சிவனுக்கு சவால்கள் ஏதுமில்லை.

கஜினியில் விஸ்வரூபமெடுத்து, ஏழாம் அறிவில் சிறுத்துப் போன முருகதாஸ்... மீண்டும் தன்னை நிரூபித்திருக்கிறார். இந்த வெற்றி அவரையும் ஹீரோ விஜய்யையும் அதிகம் பேச வைக்காமல் இருக்கக் கடவது!

துப்பாக்கி.. அதிர்வெடி!

 

பாய்பிரெண்டை மறைக்கும் ஹீரோயின்கள் : கரீனா கபூர் தாக்கு

Heroines hides boyfriends : Kareena Kapoor பாய்பிரண்டை ஹீரோயின்கள் மறைக்கிறார்கள். அது தேவையில்லாதது என்றார் கரீனா கபூர். இது பற்றி அவர் கூறியதாவது: சைப் அலிகானை திருமணம் செய்வதற்கு முன்பே அவருடன் ஐந்தரை வருடம் வாழ்ந்தேன். இதை நாங்கள் மறைக்கவில்லை. பல ஹீரோயின்கள் தங்கள் பாய் பிரெண்டை  மறைக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பே ஒரு ஜோடி சேர்ந்து வாழ முடியுமா என்பதை நான் பரிசோதித்து பார்த்துவிட்டேன். அது முடியும் என்பது தெரிந்தது. இதை  நவீன கால இளைஞர்களுக்கு நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். நான் நவநாகரீக பெண். எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டேனோ அப்படி வாழ்கிறேன். சைப் கூட இதை வலியுறுத்துவார். பழங்கால சம்பிரதாயங்களில் உழன்றுக்கொண்டிருக்கக்கூடாது என்று அவர் கூறுவார்.

என்னை துரத்திக்கொண்டிருந்த மீடியாக்களும் மற்றவர்களும் எங்கள் திருமணத்துக்கு பிறகு அதை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். என் வாழ்க்கையை சினிமா மட்டுமே முடிவு செய்வதில்லை. அது என் வாழ்வில் ஒரு அங்கம். திருமணத்தால் சினிமா வாழ்க்கை பாதிக்கும் என்பதை ஏற்பதற்கில்லை. அழகாகவும், இளமையாகவும், திறமையுடன் இருந்தால் சினிமா நம்மை இழக்க விரும்பாது. ஹீரோயின் வாய்ப்புக்கும் திருமணத்துக்கும் சம்பந்தம் இல்லை. என்னைப் பொறுத்தவரை சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதுதான் திருமணம் செய்து கொண்டேன். எந்த ஒரு காரணத்துக்காகவும் எனது சினிமா ஈடுபாட்டை கைவிடக்கூடாது என்பதுதான் கணவர் சைபின் விருப்பமும். இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.
 

ஓணான் காட்சிக்கு விலங்கு நல சான்று கேட்டது சென்சார் : இயக்குனர் அதிர்ச்சி

Animal Welfare asked to show proof of chameleons sensor: Director shock ஓணான் காட்சி படத்தில் காட்ட விலங்கு நல சான்று கேட்டதால் இயக்குனர் அதிர்ச்சி அடைந்தார். அரண்மனை பணிப்பெண்கள் பற்றிய படமாக உருவாகிறது மாடப்புரம். பிரவின் எழுதி இயக்குகிறார். அவர் கூறியதாவது: நாகர்கோவில் மார்த்தாண்டம் பகுதியில் இன்னமும் அரண்மனை அந்தப்புரத்தில் பணிபுரிந்த இன பெண்கள் வாழ்கிறார்கள். அவர்களை பார்க்க ஆண்களுக்கு தடை உள்ளது. கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் அப்பகுதிக்கு சென்றபோது அங்குள்ள பெரியவர்கள் அப்பெண்களை பார்க்கக்கூடாது என்று எங்களிடம் கூறினார்கள். இதை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. கட்டுப்பாடு மிக்க அந்த இனத்து பெண்ணை வாலிபன் ஒருவன் காதலிக்கிறான்.

அதன் முடிவு என்ன என்பதே கதை. புதுமுகம் சிவகுமார் ஹீரோ. ஷில்பா, பார்வதி ஹீரோயின். சுரேஷ், முத்துக்குமார் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ரெஜி கொடுங்கானூர் ஒளிப்பதிவு. ஜினோஷ் ஆண்டனி இசை. கார்த்தி தயாரிப்பு. இப்படத்தின் ஷூட்டிங் முடித்து சென்சாருக்கு திரையிடப்பட்டது. கிளைமாக்ஸில் வரும் நெருக்கமான காட்சியை காரணம் காட்டி ஏ சான்றிதழ் தந்தனர். இதற்கிடையில் ஒரு காட்சியில் ஓணான் ஒன்றை காட்டி இருந்தோம். ஓணானுக்கு விலங்கு நல சான்று எங்கே என்று கேட்டார்கள். அதிர்ச்சி அடைந்தேன். சான்றிதழ் வாங்குவதற்கு நேரம் ஆகும் என்பதால் அக்காட்சியை நீக்க சம்மதித்தேன்.
 

பட வாய்ப்புக்காக விஷால் சிபாரிசு செய்தாரா? : வரலட்சுமி விளக்கம்

Is Vishal recommended for chance to me? : Varalakshmi Description விஷாலுடன் என்ன உறவு என்பதற்கு வரலட்சுமி விளக்கம் அளித்தார். 'போடா போடிÕ பட ஹீரோயின் வரலட்சுமி. அவர் கூறியதாவது: போடா போடி படத்தில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். இவ்வளவுநாள் காத்திருந்து நடித்ததற்கு பொருத்தமான வேடம் என்றனர். எனது தந்தை சரத்குமாரும் என் நடிப்பை பாராட்டினார். சினிமாவில் எனது திறமையை மட்டுமே நம்பி இருக்கிறேன். என் அறிவு என்ன சொல்கிறதோ அதை மட்டும் செய்கிறேன். நடனம் எனக்கு பிடிக்கும். சிறுவயது முதல் எல்லாவகை நடனமும் கற்றிருக்கிறேன். மேனேஜ்மென்ட் படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்திருக்கிறேன். நடிப்பை பொறுத்தவரை இந்தி நடிகர் அனுபம் கெர் நடிப்பு பள்ளியில் படித்தேன். 'எனக்கும் விஷாலுக்கும் என்ன உறவு? என்று கேட்கிறார்கள்.

எங்கள் இருவர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் உண்டு. எனது தந்தை சரத்குமார், விஷால் தந்தை தயாரித்த படங்களில் நடித்தது முதல் இந்த நட்பு தொடர்கிறது. அப்போதே விஷாலை எனக்கு தெரியும். அவர் எனது நெருங்கிய நண்பர். என்னுடைய தொழில் முறையில் எனது வழிகாட்டி. எங்களுக்குள் இருக்கும் உறவு இதுதான். இதை மீறி வேறு எந்த உறவும் இல்லை. 'மத கத ராஜா படத்தில் எனக்கு வாய்ப்பு பெற்றுத்தந்தது விஷாலா? என்கிறார்கள். ஹீரோயின் தேர்வு விஷயத்தில் அவர் தலையிடுவதில்லை. இயக்குனர் சுந்தர்.சிதான் என்னை தேர்வு செய்தார். திருமணம் பற்றி கேட்கிறார்கள். இப்போதுதான் நடிக்க வந்திருக்கிறேன். நிறைய சாதிக்க வேண்டி உள்ளது. இவ்வாறு வரலட்சுமி கூறினார்.
 

கிசு கிசு - சிகிச்சைக்கு பறக்கும் சமீ

Kodambakkam kodangi நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

வாரணம் தவுசன்ட் சமீ ஹீரோயின் சீக்கிரமே ரிலேஷன் மேரேஜுக்காக பாரின் போறதா பிளான் வச்சிருக்காராம்... வச்சிருக்காராம்... அதே பயணத்துல இன்னொரு திட்டமும் வச்சிருக்காராம். சமந்த நடிகை ஸ்கின் நோயால அவதிப்பட்ட மாதிரி சமீ நடிகை தூக்கத்துல நடக்கற வியாதில அவதிப்படுறாராம். இதுக்கு சிகிச்சை எடுக்கறதுக்காகவும் பாரின் பயணத்த யூஸ் பண்ணிக்கப்போறாராம். இதால புதுசா படங்க எதையும் ஒப்புக்கலையாம். எவ்வளவு வாரம் அல்லது எவ்வளவு மாசம் அங்க சிகிச்சை எடுக்கறதுன்னு போனப்பறம்தான் தெரியுமாம்... தெரியுமாம்...

த்ரி இசை இயக்கம் நடிகைய கிஸ் பண்ண மேட்டர் கொஞ்ச நாளைக்கு முன்ன பரபரப்பாச்சு. யாரோ தன்னோட செல்போன்லயிருந்து திருடி இத நெட்ல பரப்பிட்டாங்கன்னு இசை சொன்னாராம். ஆனா கிஸ் பண்ணதுல எந்த தப்புமில்லன்னு விரல் நடிகர் சப்போர்ட் பண்ணிருக்காராம்... பண்ணிருக்காராம்... நான் ஒரு நடிகைய கிஸ் பண்ண¤னத கூட இப்படித்தான் பரப்பிவிட்டாங்க. இதெல்லாம் பரபரப்புக்காக பண்ற வேலதான். இதுக்கு த்ரி இசை வருத்தப்பட தேவையில்லன்னு விளக்கம் சொல்றாராம்... சொல்றாராம்...

செவன்த் சென்ஸ் நடிகரு அடுத்ததா மூணு பேருக்கு கால்ஷீட் தர ஒப்புக்கிட்டாராம். அதுல சசியானவரு, கவுதமரு, லிங்க் இயக்குனரு அடக்கம். ஆனா யாருக்கு முதல்ல கால்ஷீட்டுன்னு நடிகரு சொல்லலையாம்... சொல்லலையாம்... அதனால இயக¢குனருங்க குழப்பத்துல இருக்காங்களாம்... இருக்காங்களாம்...
 

மன்னிப்பு கேட்கவே மாட்டேன்.. சண்டைக்கு தயார்! - சோனா

Sona Ready Fight With Males

ஆண்களை செக்ஸுக்கு உபயோகித்துவிட்டு துடைத்துப் போடும் டிஸ்யூ பேப்பர் என்று கேவலப்படுத்தி பேட்டி கொடுத்த பிரச்சினையில் சிக்கியுள்ள சோனா, ஆண்களிடம் மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் தன்னை எதிர்த்து போராட்டம் நடத்தும் ஆண்கள் பாதுகாப்பு அமைப்பினர் மீது புகாரும் கொடுத்துள்ளார்.

சோனாவுக்கு எதிராக ஆண்கள் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடர ஆரம்பித்துள்ளனர். முதல் கட்டமாக ராணிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒரு வக்கீல் நேற்று அவதூறு வழக்குப் பதிவு செய்துவிட்டார்.

சோனாவை கண்டித்து, சென்னை தேனாம்பேட்டை, கே.பி.தாசன் சாலையில் உள்ள அவரது அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சோனா தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்கும் வரை, போராட்டம் தொடரும் என்றும் ஆண்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகை சோனா நேற்று மாலை 5 மணி அளவில் திடீரென்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்தார். கூடுதல் கமிஷனர் ராஜேஷ்தாசை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், "நான் ஆண்களைப்பற்றி இழிவான கருத்து எதையும் சொல்லி பேட்டி கொடுக்கவில்லை என்று மறுத்திருந்தேன். குறிப்பிட்ட பத்திரிகை நிருபர் செய்தியை தவறாக கொடுத்துவிட்டார். அதற்கு நான் எதுவும் செய்ய முடியாது. செய்தி வெளியிட்ட பத்திரிகை மீதும், செய்தியை கொடுத்த நிருபர் மீதும் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கும் போட்டுள்ளேன்.

ஆனால் ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் எனது அலுவலகம் மற்றும் எனது நகை ஷோரூம் கடை முன்பு போராட்டம் நடத்தினார்கள். ராணிப்பேட்டை கோர்ட்டில் என்மீது வழக்கும் போட்டுள்ளனர். மேலும் செல்போனில் பேசி என்னை மறைமுகமாக மிரட்டுகிறார்கள். வெளியில் நடமாடவிடமாட்டோம் என்கிறார்கள். வெளியில் வந்தால், என்மீது கற்களை வீசுவோம் என்று பயமுறுத்துகிறார்கள்.

இதனால் கடந்த 8 நாட்களாக நான் வெளியில் போக முடியவில்லை. எனது அலுவலகமும், கடையும் மூடியே கிடக்கிறது. எனவே எனக்கு பாதுகாப்பு கேட்டும், எனது அலுவலகம் மற்றும் கடைக்கும் போலீஸ் பாதுகாப்பு போடும்படியும், என்னை செல்போனில் மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை கோரியும், கூடுதல் கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன்.

என்னை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள். செய்யாத தவறுக்காக நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. சண்டைக்கு நானும் தயார்தான்," என்றார்.

 

ரஜினி பிறந்த நாள் பரிசாக சிவாஜி 3 டி வெளியீடு - ஏவி எம் அறிவிப்பு!

Avm S Birthday Gift Superstar Rajin

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்த நாள் பரிசாக, ச3 டியில் உருவாகியுள்ள சிவாஜி - தி பாஸ் படம் வெளியாகும் என்று ஏவி எம் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினி, ஸ்ரேயா ஜோடியாக நடித்து 2007-ல் ரிலீசான ‘சிவாஜி' படத்தை தற்போது 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இரு வருடங்களாக சென்னையில் உள்ள ஸ்டுடியோக்களில் 400 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் இதற்கான பணிகளில் ஈடுபட்டனர். ரூ 17 கோடி பட்ஜெட்டில் இந்த 3 டி வடிவம் தயாரானது.

சமீபத்தில் இதன் பாடலும், டிரெய்லரும் வெளியிடப்பட்டன. ரஜினி இதில் பங்கேற்று 3டி கண்ணாடி அணிந்து பார்த்து மகிழ்ந்தார். 3டியில் வரும் முதல் ரஜினி படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ரஜினி பிறந்த நாளையொட்டி அடுத்த மாதம் 12-ந் தேதி (12.12.12) தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தை தயாரித்த ஏ.வி.எம். நிறுவனம் அறிவித்துள்ளது. வெளிநாடுகளிலும் அதே நாளில் படத்தை வெளியிடுகின்றனர். 1000 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்படுகிறது.