புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் பவர் ஸ்டார்?

விஜய் நடிக்கும் புலி படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடிக்கப் போகிறாராம் பவர் ஸ்டார் சீனிவாசன்.

சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த சீனிவாசனுக்கு, பெரிய பட்ஜெட் படத்தில் வாய்ப்புக் கொடுத்தவர் ஷங்கர். சமீபத்தில் வெளியான அவரது ஐ-யில் சீனிவாசனுக்கும் குறிப்பிடத்தக்க வேடத்தைக் கொடுத்தார்.

புலி படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார் பவர் ஸ்டார்?

அடுத்து ஒரு பெரிய வாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த முறை அவர் விஜய்யின் புலி படத்தில் காமெடி பண்ணப் போகிறாராம்.

விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி நடிக்கும் இந்தப் படத்தில் பரோட்டா சூரி, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, கருணாஸ், சத்யன் என காமெடிப்பட்டாளமே உள்ளது. அவர்களுடன் இப்போது பவரும் சேர்ந்துள்ளார்.

 

தம்பி வேணாண்டா தம்பி சொன்னா கேளுடா... கூடா நட்பு குறித்து நடிகருக்கு நண்பர்கள் அட்வைஸ்!!

கரகரவென்ற தனது குரலாலேயே ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இந்தக் காமெடி நடிகர். ஆனால் சற்று சிக்கலானவர் என்கிறார்கள். இவருடன் நட்பில் விழுந்த பின்னரே விரல் நடிகரின் படங்கள் அனைத்தும் பிரச்சினையில் சிக்கியதாகக் கூறப்படுகிறது.

காரணம் கரகர காமெடியுடன் சேர்ந்து, விரல் நடிகர் பல இடங்களுக்கும் சுற்றியதாகவும், இதனால் படவேலைகள் பாதிக்கப்பட்டதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் கரகர நடிகர் தற்போது வெற்றி நடிகரின் படத்தில் இணைந்து நடித்து வருகிறார். படப்பிடிப்பிற்கு வெளியேயும் வெற்றி நடிகரோடு தோளில் கை போட்டு சுற்றி வருகிறாராம் காமெடி.

இதனால், நடிகருக்கு அவரது நல விரும்பிகள் அறிவுரை மழை பொழிந்து வருகிறார்களாம். வளர்ந்து வரும் இந்த நடிகர் மீது ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்கள் உள்ளது. உடன் நடிக்கும் நடிகைகளுடன் இணைத்து இவரது பெயர் கிசுகிசுக்கப்படும்.

இந்நிலையில், இந்த கூடாநட்பு நடிகரின் எதிர்காலத்தையே அழித்து விடும் என நலவிரும்பிகள் கவலைப் படுகிறார்களாம். எனவே, காமெடியுடனான நட்பை குறைத்துக் கொள்ளும் படி அவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம்.

 

விருந்தில் ரகளை செய்ததாக ராம்சரண் மீது புகார்.. போலீஸ் விசாரணை

ஹைதராபாத்: விடிய விடிய விருந்து வைத்து கலாட்ட செய்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவான ராம் சரண் மீது பக்கத்து வீட்டுக்காரர்கள் புகார் அளித்துள்ளனர்.

நடிகர் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண் வீடு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு நண்பர்களுக்கு அவர் 'சனிக்கிழமை விருந்து' கொடுத்தார்.

இந்த விருந்து நிகழ்ச்சி வீட்டு மொட்டை மாடியில் நடந்தது. ஸ்ரீகாந்த் ரெட்டி மற்றும் நடிகர், நடிகைகள், நண்பர்கள் கலந்து கொண்டனர். விடிய விடிய இந்த மது விருந்து நடந்தது. அப்போது ஒரே கூச்சலாக இருந்தது. இது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. ஒலி பெருக்கியில் சத்தமாக பாட்டுப் போட்டு ஆடியுள்ளனர்.

விருந்தில் ரகளை செய்ததாக ராம்சரண் மீது புகார்.. போலீஸ் விசாரணை

அதிகாலை 4 மணி வரை இந்த விருந்து களியாட்டங்கள் நடந்தன. இதனால் அக்கம் பக்கத்தினர் தூக்கமிழந்து தவித்தனர்.

உடனே போலீசில் புகார் தெரிவித்தனர்.

ஒரு சப் இன்ஸ்பெக்டர் மற்றும் இரு கான்ஸ்டபிள்கள் விரைந்து வந்து ராம்சரணிடம் விசாரித்தனர். ஆனால் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

 

தெலுங்கில் ராம்சரண் படத்தில் அறிமுகமாகிறார் அனிருத்

தமிழில் குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளராகிவிட்ட அனிருத், அடுத்து தெலுங்குப் பட உலகில் அறிமுகமாகிறார்.

முன்னணி நடிகரான ராம்சரண் நடிக்க சீனு வைட்லா இயக்கும் படத்துக்கு அவர் இசையமைக்கிறார்.

தெலுங்கில் ராம்சரண் படத்தில் அறிமுகமாகிறார் அனிருத்

ஒய் திஸ் கொலவெறி பாடல் தெலுங்கிலும் படு பாப்புலராகி, அனிருத்தை அனைவருக்கும் தெரிந்த இசையமைப்பாளராக்கிவிட்டது.

அவர் தமிழில் இசையமைத்த பாடல்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெறுகின்றன.

இப்போது தனது முதல் நேரடி தெலுங்குப் படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்.

இந்தப் படத்துக்கு மை நேம் ஈஸ் ராஜூ என தலைப்பிட்டுள்ளனர். டிவிவி தன்யா தயாரிக்கிறார்.

 

எம்ஜிஆரின் பாதுகாவலர், பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டர் என் சங்கர் மரணம்

பிரபல சினிமா ஸ்டன்ட் மாஸ்டரும் நடிகருமான என்.சங்கர் சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 80.

500க்கும் மேற்பட்ட படங்களில் சண்டைப் பயிற்சியாளராக பணியாற்றியவர் சங்கர்.

எம்ஜிஆரின் பாதுகாவலர், பழம்பெரும் ஸ்டன்ட் மாஸ்டர் என் சங்கர் மரணம்

'இதயக்கனி' உள்ளிட்ட எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இவர்தான் ஸ்டன்ட் மாஸ்டர். 'குடியிருந்த கோவில்', 'முகராசி' உள்ளிட்ட படங்களில் எம்ஜிஆருடன் நடித்தும் இருக்கிறார்.

எம்ஜிஆரின் பாதுகாவலர்களில் ஒருவராகத் திகழ்ந்த சங்கர், தென்னிந்திய திரைப்பட சண்டைப்பயிற்சி இயக்குநர் சங்கத்தின் தலைவராக ஐந்து முறை பதவி வகித்தவர். இவர் 'முகராசி' படத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிலம்பம் கற்றுத்தந்தவர்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று பகல் 11 மணிக்கு மரணம் அடைந்தார்.

கோடம்பாக்கம் டைரக்டர்ஸ் காலனியில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்கு நடக்கிறது.

 

ஷமிதாப் - விமர்சனம்

Rating:
4.0/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: அமிதாப் பச்சன், தனுஷ், அக்ஷரா ஹாஸன், ருக்மணி

ஒளிப்பதிவு: பிசி ஸ்ரீராம்

இசை: இளையராஜா

தயாரிப்பு : ஈராஸ் இன்டர்நேஷனல்

எழுத்து - இயக்கம்: ஆர் பால்கி

எ பிலிம் பை... என்று போட்டுக் கொள்ளும் எல்லா இயக்குநர்களும் இயக்குநர்கள் அல்ல... பால்கியைப் போன்ற சொந்த எழுத்தைப் படைப்பாக்கும் சிலருக்கு மட்டுமே அப்படிப் போட்டுக் கொள்ள தகுதியும் உரிமையும் இருக்கிறது.

ஷமிதாப்பிலும் அந்த தகுதியைப் பெறுகிறார் பால்கி.

அமிதாப்பையும் இளையராஜாவையும் இவர் அளவுக்கு காதலிப்பவர்கள் யாருமிருக்க முடியுமா தெரியவில்லை. இந்த இரு மேதைகளிடமிருந்தும் தொடர்ந்து அற்புதமான பங்களிப்பைப் பெற்று வருகிறார் பால்கி.

படத்தின் கதை, இணையத்தை வாசிக்கும் அத்தனைப் பேருக்கும் தெரிந்ததுதான்.

ஷமிதாப் - விமர்சனம்

வாய் பேச இயலாத, ஆனால் நடிப்பில் பேராவல் கொண்ட தனிஷ்.. நடிக்க லாயக்கில்லை என்று விரட்டப்பட்ட ஒரு குடிகார, திமிரும் ஈகோவும், முரட்டுத்தனமும் கொண்ட கிழவன் அமிதாப் சின்ஹா... தனிஷின் நடிப்பையும் அமிதாப்பின் குரலையும் ஷமிதாப்பாக இணைக்கும் உதவி இயக்குநர் அக்ஷரா... முதல் இருவரின் ஈகோ மோதல்களின் உச்சத்தில் ஏற்படும் முடிவு... இந்த நிகழ்வுகளை பால்கி படமாக்கி இருக்கும் விதம்... அவற்றுக்கிடையே ஜீவநதியாகப் பாயும் இளையராஜாவின் இசை.

-இதான்டா இந்திய சினிமா என்று நிச்சயமாக மார்த்தட்டிச் சொல்லலாம்.

அமிதாப்... இந்தப் படத்தில் அவர் சர்வ நிச்சயமாய் நடிக்கவில்லை. அமிதாப் சின்ஹாவின் வாழ்க்கைய வாழ்ந்து பார்த்திருக்கிறார். கூடுவிட்டு கூடு பாய்வது மாதிரி. இந்த மகா கலைஞனை உச்சத்தில் வைத்து கவுரவிக்க வேண்டிய கட்டம் இதுதான்.

பாலிவுட் பற்றிய தன் விமர்சனத்தை அந்த மரத்தைப் பார்த்துச் சொல்வாரே... வாரே வா.. அதுக்கெல்லாம் ஒரு தில் வேணும். சலாம் அமித்ஜி!

ஷமிதாப் - விமர்சனம்

தனுஷ்... படத்துக்குப் படம் பிரமிப்பைத் தருகிறார். வேலையில்லாப் பட்டதாரியில் பார்த்த தனுஷ் சுண்டக் காய்ச்சிய பட்டை சாராயம் என்றால், இந்த ஷமிதாப்பில் அவர் ராயல் ஸ்காட்ச் மாதிரி அத்தனை க்ளாஸிக்!

தனுஷின் தோற்றம், ஸ்டைல், குரலற்ற ஆவேச வாயசைப்பு... தான் ஒன்று சொல்ல முயல... அதற்கு நேரெதிராக அமிதாப் பேசி மாட்டிவிடும் காட்சியில் அவர் முகத்தில் காட்டும் ஆத்திரம், இயலாமை... சிறந்த நடிகருக்கான தேசிய விருதுக்கு நூறு சதவீதம் தகுதியான கலைஞன். தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துவிட்டார்.

கமலின் மகள் நன்றாக நடித்திருக்கிறார் - இப்படிச் சொல்வது கொஞ்சம் அபத்தமாக இருக்கிறதல்லவா! தந்தையின் பெயரை முதல் படத்திலேயே காப்பாற்றிவிட்டார் அக்ஷரா. அந்தப் பாத்திரத்துக்கு என்ன தேவையோ.. அதை இயல்பாகச் செய்திருக்கிறார்.

இந்த மூன்று பாத்திரத்துக்கிடையிலும் உயிரோட்டம் போல ஓடிக் கொண்டே இருக்கிறது இளையராஜாவின் இசை. தேவையான இடங்களில் உலகின் ஒப்பற்ற இசை மொழியையும், தேவையற்ற இடங்களில் மவுனத்தையே பேசுமொழியாகவும் வைத்திருக்கிறார் இசைஞானி. அந்த கடைசி 15 நிமிடங்கள்... பால்கி சார், அந்த 15 நிமிட இசைக் கோர்வையை மட்டும் தனி சிடியாக வெளியிடுங்கள். இசை அமைப்பாளர்கள் ரெஃபரன்சுக்காக!

ஷமிதாப் - விமர்சனம்

பாடல்கள் அனைத்துமே இனிமை. குறிப்பாக அந்த ஷஷஷ மிமிமி தததா... இசைஞானியின் மனசுக்கு இன்றைக்கும் அதே அன்னக்கிளி வயசுதான்!

பிசி ஸ்ரீராம்... இது என் ஒளிப்பதிவு என தனித்துக் காட்டாமல் இயக்குநரோடு பயணித்திருக்கிறார். பால்கி - ராஜா - ஸ்ரீராம்... வாவ், என்ன ஒரு இனிமையான காமிபினேஷன்!

படத்தில் வரும் அத்தனைப் பாத்திரங்களும் தங்கள் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்கள்.

குறைகளே இல்லையா.. அதைச் சொல்ல வேண்டாமா? இருக்கிறது. க்ளைமாக்ஸின் ஆரம்பம்.. அது இப்படித்தான் முடியப் போகிறது என எளிதாய் யூகிக்க முடியும் பாணி..

ஆனால் இந்தப் படத்தை ரசிக்க, உணர்ந்து அனுபவிக்க அது எந்த வகையிலும் தடையில்லை.

ஷமிதாப்பை திரையில் பாருங்கள்.. இந்தியாவின் தலைசிறந்த படைப்பாளிகள், கலைஞர்களை கவுரவப்படுத்துங்கள்.

 

கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி... சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்

சமீப காலத்தில் நடிகைகளை விட அதிகமாக கிசுகிசுக்களில் சிக்கியவர் கணேஷ் வெங்கட்ராம்தான்.

உன்னைப் போல் ஒருவன், அபியும் நானும், இவன் வேற மாதிரி போன்ற படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர். பேஷன் ஷோக்களில் பிரபலமான ஆண் மாடல் இவர்.

கிசுகிசுகளுக்கு முற்றுப்புள்ளி... சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்

இனி கிசுகிசுக்களுக்கு வேலையிருக்காது. காரணம், சின்னத் திரை நடிகையான நிஷாவை காதலித்து திருமணம் செய்கிறார். சின்னத்திரையில் மகாபாரதம் தொடரில் நடித்தவர் நிஷா. இவர்களது காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளது.

கணேஷ் வெங்கட்ராம் இப்போது ‘தனி ஒருவன்', ‘அச்சாரம்', ‘பள்ளிக்கூடம் போகாமலே', ‘முறியடி' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

 

சங்கர மடத்தில் சரத் குமார்... விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்!

காஞ்சீபுரம்: சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்துமார் நேற்று காஞ்சி சங்கர மடத்துக்குச் சென்று விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்.

முன்னதாக அங்குள்ள காஞ்சி மகா பெரியவர் பிருந்தாவனத்தில் சில நிமிடம் தியானம் செய்தார். பிறகு சங்கராச்சாரியார் விஜயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றார்.

சங்கர மடத்தில் சரத் குமார்... விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்!

பின்னர் சங்கர மடத்தில் இருந்து வெளியே வந்த சரத்குமார் நிருபர்களிடம் கூறுகையில், "நீண்ட நாட்களாக காஞ்சீபுரம் சங்கரமடத்திற்கு வந்து தியானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. எங்கள் கட்சியைச் சேர்ந்தவரின் இல்ல நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடந்தது. அதற்காக செங்கல்பட்டு வந்த நான் காஞ்சீபுரத்திற்கு வந்தேன்.

விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றேன். மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

அரசின் சாதனைகள் குறித்து அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே நான் ஸ்ரீரங்கத்தில் பிரசாரம் மேற்கொண்டேன். மேலும் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஏராளமான திட்டங்களை வாரி வழங்கி உள்ளார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி," என்றார்.

 

யுவன் - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த இளையராஜா

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட யுவன் சங்கர் ராஜா - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தலா 10 பவுன் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்தார் இளையராஜா.

இளையராஜாவின் மகன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிற்கும் ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் ஜபருன்னிசாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. இது யுவனின் 3-வது திருமணம். இவர்களின் திருமணம் கீழக்கரை அருகே உள்ள கிராமத்தில் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது.

யுவன் - ஜெபருன்னிசா தம்பதிகளுக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த இளையராஜா

இந்த திருமணத்தில் மணமகளின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். யுவனின் குடும்பத்தில் இருந்து தங்கை பவதாரணி, கார்த்திக் ராஜா, வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். ஆனால் அன்றைய தினம் இளையராஜா திருவண்ணாமலையில் இருந்ததால் திருமணத்துக்கு செல்லவில்லை.

புதுமண தம்பதிகள் சமீபத்தில் இளையராஜாவைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றனர். இவர்கள் இருவருக்கும் தலா 10 பவுனில் தங்கச் செயின் அணிவித்து வாழ்த்தினார் இளையராஜா.

 

ஆமீர் கானின் பிகே தமிழ் - தெலுங்கு ரீமேக்கில் கமல் ஹாஸன்!

ஆமீர் கான் நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற பீகே படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் ஹாஸன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ஆமீர் கான் - அனுஷ்கா சர்மா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் பீகே. ரூ 600 கோடியை இந்தப் படம் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்தியிலேயே வெளியாகி, இன்னமும் சில இடங்களில் படம் ஓடிக் கொண்டுள்ளது.

ஆமீர் கானின் பிகே தமிழ் - தெலுங்கு ரீமேக்கில் கமல் ஹாஸன்!

இந்தப் படத்தின் தமிழ் - தெலுங்கு ரீமேக் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலுமே கமல் ஹாஸனை நாயகனாக வைத்து படத்தை உருவாக்க உள்ளனர்.

இயக்குநர், ஹீரோயின் என முக்கிய விஷயங்கள் இன்னும் முடிவாகவில்லை. ஆனால் ஹீரோ விஷயத்தில் கமல் நடித்தால்தான் சரியாக இருக்கும் என்பதால் அவருடன் பேசி வருகிறார்கள். கமலும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.

 

என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு

அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

அஜித் நடிப்பில் வெளிவந்துள்ள ‘என்னை அறிந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்னை அறிந்தால் படத்தின் 6 நிமிட காட்சிகள் குறைப்பு

‘என்னை அறிந்தால்' படம் குறித்து ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்தாலும், படத்தின் நீளம் குறித்த எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன.

படத்தின் முன்பாதி சற்று நீளமாக இருப்பதால், அதனை கொஞ்சம் குறைத்தால் விறுவிறுப்பாக ரசிக்கும்படியாக இருக்கும் என அனைவரும் கூறியுள்ளதால் படத்தின் நீளத்தைக் குறைக்க படக்குழுவினர் முடிவு செய்தனர்.

இதையடுத்து, இன்று முதல் படத்தின் முதல் பாதியில் 6 நிமிடங்கள் வரை காட்சிகளை குறைத்துள்ளார்களாம்.

2 மணி 48 மணி நேரம் ஓடிய படம் தற்போது 2 மணி 42 மணி நேரம் வரை ஓடக்கூடியதாக ட்ரிம் செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் வந்த பெரிய படங்கள் அனைத்துமே கிட்டத்தட்ட 3 மணி நேரம் கொண்டதாக இருந்தன. இவை வெளியான பிறகு சில நிமிட காட்சிகள் குறைக்கப்படுவது வழக்கமாகிவிட்டது.

 

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

இசை உலகின் உயரிய கிராமி விருதினை இந்தியாவைச் சேர்ந்த ரிக்கி கெஜ், நீல வாஸ்வாணி ஆகியோர் வென்றுள்ளார்.

57வது கிராமி விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்தது.

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

இதில் நியூ ஏஜ் ஆல்பம் பிரிவில் 'வைன்ட்ஸ் ஆப் சம்சாரா' ஆல்பத்திற்காக ரிக்கி கெஜ்-க்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் ரிக்கி கெஜ், பெங்களுருவைச் சேர்ந்தவர். இவர் தென்னாப்பிரிக்காவின் இசைக் கலைஞர் வவுட்டர் கெல்லர்மேனுடன் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருந்தார்.

ஐ அம் மலாலா என்ற குழந்தைகள் ஆல்பத்திற்காக நீல வாஸ்வானி கிராமி விருது வென்றுள்ளார். ஒரு பெண் குழந்தை எப்படி கல்விக்காக குரல் கொடுத்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைச் சொல்லும் ஆல்பம் இது. இதனை குரல் பதிவாகவும் தந்துள்ளார் வாஸ்வாணி.

இந்தியாவைச் சேர்ந்த இருவருக்கு 'கிராமி' இசை விருது!

பண்டிட் ரவிஷங்கரின் மகள் அனோஷ்காவின் ட்ரேசஸ் ஆப் யு ஆல்பம், பெஸ்ட் வேல்ட் மியூசிக் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது பெறத் தவறிவிட்டது.

Read in Hindi: Grammy Awards 2015 Best Moments In Pics