தெலுங்கு ஹீரோவுடன் ஜோடி சேர நித்யா மேனன் மறுப்பு
தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், ரவி தேஜாவுடன் நடிக்க மறுத்தார் நித்யா மேனன். '180 படத்தில் நடித்தவர் நித்யா மேனன். சமீபகாலமாக இவர் அடிக்கடி பிரச்னைகளில் சிக்கிக்கொள்கிறார். மலையாள தயாரிப்பாளர்களை மதிக்கவில்லை என்று எழுந்த புகாரால் மலையாள படங்களில் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டது. பின்னர் அது விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில் தெலுங்கு நடிகர்களுடன் அவர் நடிக்க மறுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெங்கடேஷுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க அழைப்பு வந்தது. ஆனால் வெங்கடேஷ் வயதானவராக தெரிவதால் நட விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
அதேபோல் பிரபாசுடன் நடிக்க கேட்டபோது 'யார் அந்த பிரபாஸ் என்ற கேட்டாராம். அவரது இந்த போக்கு டோலிவுட் ஹீரோக்களிடையே எதிர்ப்பை கிளப்பி உள்ளது. இதற்கிடையில் பரசுராம் இயக்க பிரபல நடிகர் ரவிதேஜாவுடன் நடிக்கும் படத்திற்காக நித்தியாவுடன் பேசினார்கள். படத்தில் எனது கேரக்டர் பிடிக்கவில்லை. நடிக்க முடியாது என்று மறுத்துவிட்டார். இது இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. நித்யாவின் இந்த மறுப்பு த்ரிஷாவுக்கு சாதகமாக அமைந்திருக்கிறது. இது பற்றி பட தயாரிப்பாளர் கூறும்போது, 'ரவிதேஜா ஜோடியாக நடிக்க த்ரிஷாவிடமும் பேசுவதற்கு முடிவு செய்திருந்தோம். இதுகுறித்து விரைவில் அவரிடம் பேசுவோம் என்றார்.

ஷங்கரின் அடுத்த படத்தில் தீபிகா படுகோன்?
ஷங்கர் இயக்கும் படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்க உள்ளார் தீபிகா படுகோன். ரஜினி நடிக்கும் 'ராணா படம் மூலம் தமிழில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் பாலிவுட் ஹீரோயின் தீபிகா படுகோன். ரஜினிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து அப்படம் தள்ளி வைக்கப்பட்டது. வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பிய ரஜினி 'கோச்சடையான் படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார். இவர்கள் நடித்த காட்சிகள் சமீபத்தில் லண்டனில் படமானது.
'நண்பன் படத்தையடுத்து ஷங்கர் புதிய படம் இயக்குகிறார். இதில் விக்ரம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க தீபிகாவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது பற்றி மனாலியில் ரன்பீர் கபூருடன் ஷூட்டிங்கில் இருக்கும் தீபிகாவிடம் கேட்டபோது கருத்து சொல்ல மறுத்துவிட்டார். ஆனாலும் அவரது தரப்பில் கூறும்போது,பேச்சுவார்த்தை ஆரம்பகட்டத்தில்தான் உள்ளது என்றனர்.

நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன் : சிம்பு
நயன்தாராவோடு என்னை இணைத்து பேசாதீர்கள். அவருடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. நடிக்கவும் மாட்டேன் என்று திடீரென அறிவித்திருக்கிறார் சிம்பு. 'வல்லவன் படத்தில் சிம்பு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அப்போது முதலே இருவரும் நெருக்கமாக பழகினர். இதில் காதல் மலர்ந்தது. திடீரென்று ஏற்பட்ட பிரச்னையில் இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் பிரபுதேவா இயக்கிய 'வில்லு படத்தில் நயன்தாரா நடித்தார். அப்போது இருவரும் காதலிக்க தொடங்கினர். சுமார் 2 வருடத்துக்கும் மேலாக இவர்கள் காதல் தொடர்ந்து. தற்போது அதிலும் விரிசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். திருமணம் செய்துகொண்டு இல்லறத்தில் நுழையலாம் என்ற எண்ணத்துடன் இருந்த நயன்தாரா படங்களில் நடிப்பதையும் தவிர்த்து வந்தார். ஆனால் பிரபுதேவாவுடனான காதல் தோல்வி அடைந்ததையடுத்து மீண்டும் படங்களில் நடிக்க முடிவு செய்தார்.
இந்நிலையில் சிம்பு தனது படங்களில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சிப்பதாக தகவல் வெளியானது. தான் நடிக்கும் வட சென்னை படத்தில் அவரை ஹீரோயினாக நடிக்க அழைப்பு விடுத்ததாகவும், வேட்டை மன்னன் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுவதற்கு ஒப்பந்தம் செய்யச் சொன்னதாகவும் அடுத்தடுத்து தனது படங்களில் தொடர்ந்து நயன்தாரா நடிப்பார் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்திருக்கிறார் சிம்பு. இது பற்றி சிம்பு கூறும்போது, 'நயன்தாரா நான் நடிக்கும் எந்த படத்திலும் நடிக்கவில்லை. படமாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி அவருடன் என்னை இணைத்து வேண்டாம். அவருடன் எந்த படத்திலும் நான் நடிக்கப்போவதில்லை என்றார்.