ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”!

சென்னை: தமிழில் மீகாமன் என்றால் "கப்பலைச் செலுத்துபவன்" என்று அர்த்தமாம். அதுபோலவே, ஆர்யா நடித்திவரும் "மீகாமன்" திரைப்படமும் தமிழ் சினிமாவை மற்றொரு தளத்திற்கு செலுத்தும் என்று தெரிவித்துள்ளனர் படக்குழுவினர்.

ஆர்யா - ஹன்சிகா நடித்துள்ள இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார்.

இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். சதீஷ்குமார் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இப்படத்தை "நான் அவன் இல்லை", "மாப்பிள்ளை" உள்ளிட்ட படங்களை தயாரித்த நேமிசந்த் ஜபக் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆர்யாவின் புதிய கப்பல் “மீகாமன்”!

ஆக்‌ஷன் திரில்லலராக உருவாகி வரும் இப்படத்தில் ஆர்யாவுடன் ஏழு வில்லன்கள் மோதியுள்ளார்கள். ஆசிஷ் வித்யார்த்தி, மகா காந்தி, அஷுதோஷ் ராணா, ஹரிஷ், மகாதேவன், சுந்தன் ஷு பாண்டே இந்த ஏழு பேரும் ஆர்யாவுடன் "பைட்" செய்யும் வில்லன்களாம். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெறும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து இறுதிகட்டப் பணிகளை தொடங்கியுள்ளனர். கூடிய விரைவில் இப்படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த இயக்குனர் , "மீகாமன் என்றால் மாலுமி என்று பொருள். தமிழில் பெயர் வைத்து அதனை புரியவைக்க ஆங்கிலத்தில் TAGLINE போடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

கதாநாயகன் ஒரு காரியத்தை கையில் எடுத்து, அதனை எப்படி வெற்றிகரமாக முடிக்கிறான் என்பதை ஒரு ஆக்‌ஷன் த்ரில்லராக கதை அமைத்திருக்கிறேன். ஆர்யாவின் கெட்டப்பை இப்படத்தில் மாற்றியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

 

திருமணத்தன்று அழுத அர்பிதா: 'கொலவெறி'யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான் கான்

ஹைதராபாத்: திருமண நாள் அன்று தங்கை அர்பிதாவை அழ வைத்தவரை நடிகர் சல்மான் கான் கோபத்துடன் தேடியுள்ளார்.

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் தங்கை அர்பிதாவுக்கும், டெல்லியைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆயுஷ் ஷர்மாவுக்கும் ஹைதராபாத்தில் உள்ள பாலக்நுமா பேலஸில் திருவிழா போன்று திருமணம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும். ஆனால் திருமணத்தன்று நடந்த ஒரு சம்பவம் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது.

திருமணத்தன்று அழுத அர்பிதா: 'கொலவெறி'யுடன் ஒருவரை தேடி அலைந்த சல்மான்

அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் அர்பிதாவின் திருமண உடையை வடிவமைத்துள்ளனர். கோஸ்லா தானே நேரில் வந்து ஆடையை அர்பிதாவிடம் அளித்தார். அதை பார்த்த அர்பிதா டிசைன் பிடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதை கேட்டு கடுப்பான கோஸ்லா உங்கள் உடல்வாகிற்கு இப்படி தான் ஆடையை வடிவமைக்க முடியும் என்று முகத்தில் அடித்தது போன்று தெரிவித்துவிட்டாராம்.

இதை கேட்ட அர்பிதா கண்கலங்க அது குறித்து அறிந்த சல்மான் கான் கோபத்தில் கொந்தளித்து கோஸ்லாவை தேடி அலைந்துள்ளார். சல்மான் கையில் சிக்கினால் சட்னி தான் என்பதை அறிந்த கோஸ்லா ஜெயா பச்சனிடம் சென்று தன்னை காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார். அவரும் வந்து சல்மானை சமாதானம் செய்து வைத்தாராம்.

அர்பிதா கடைசி பிள்ளை என்பதால் சல்மான், அர்பாஸ், சொஹைல் கானுக்கு அவர் என்றால் உயிர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

சென்னை: தன்னுடைய நாய்கள் ஜாக்கிரதை படத்தில் சிபி பேயாக வேலை செய்திருப்பதாக காமெடியாகத் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.

கடந்த சில வருடங்களாக பல நூறுக் கதைகளைக் கேட்டு சிபிராஜும், அவரது தந்தையுமான நடிகர் சத்யராஜ் தேர்வு செய்த படம் தான் ‘நாய்கள் ஜாக்கிரதை'. இப்படத்தில் போலீசாக நடித்துள்ளார் சிபி. அவருடன் நாய் ஒன்றும் சேர்ந்து கொலை ஒன்றை துப்பறிவது தான் இப்படத்தின் கதை.

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

சத்யராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்தை காஸ்மோ வில்லேஜை புரொடக்ஷன்ஸ் சிவா வெளியிடுகிறார்.

போஸ்டர் மற்றும் டிரைலர் மூலமாகவே படம் குறித்த எதிர்பார்ப்பு எகிறியுள்ள நிலையில், இன்று இப்படம் ரிலீசாகியுள்ளது.

இந்நிலையில், இப்படம் தொடர்பாக சத்யராஜ் கூறியதாவது :-

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

டெய்லி ஒரு கதை...

நான் டெய்லி வீட்டுக்கு போறப்போ சிபி யாரோ ஒருத்தர்கிட்ட கதை கேட்டுகிட்டே இருப்பாப்ல. நான் கேட்பேன், என்னடா டெய்லி கதை கேட்டுகிட்டு இருக்கே, ஆனா படமே நடிக்க மாட்டேன்னு. அது புடிக்கலை இது புடிக்கலைன்னு ஏதாவது சொல்வான்.

என் அனுபவம்...

நான் என் அனுபவத்தை வச்சு சொல்வேன். நாங்க அந்த காலத்துல, அந்த காலத்துலன்னு சொல்லக் கூடாது இருந்தாலும் சொல்றேன். ரஜினி சார் நடிக்க வந்த வருஷத்திலேயே நிறைய படம் பண்ணினார். அதே மாதிரி விஜயகாந்த், கமல், பிரபு, நான் எல்லோருமே வருஷத்துக்கு பதினைஞ்சு இருபது படம்னு நடிச்சிருக்கோம். அப்புறம்தான் குறைச்சிகிட்டோம். வர்ற படத்தையெல்லாம் ஒத்துகிட்டு அடிச்சு தள்ளுனோம்னா பதினைஞ்சு படத்துல ரெண்டோ மூணோ ஓடிட்டுப் போகுது, அதுபோதும்னு சொல்வேன்.

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

சிபியின் பதில்...

சிபி சொன்னாப்ல... அதெல்லாம் உங்க காலம். இப்ப அப்படி கிடையாது. ஒரு படம் போச்சுன்னாலே ஆட்டம் குளோஸ். ஓகோ... இவங்க சினிமாவை இந்த மாதிரி ஸ்டடி பண்ணி வச்சிருக்காங்க போலன்னு விட்டுட்டேன். ஒருவகையில் அது உண்மையும்கூட.

காலத்துக்கு ஏற்ற மாறுதல்...

பாசமலர் காலத்துல நைன்டி பர்சன்ட் கதை பத்து பர்சன்ட் டெக்னிக். நாங்க ஹீரோவா நடிச்ச காலத்துல அம்பது பர்சன்ட் கதை, அம்பது பர்சன்ட் டெக்னிக். இன்னைக்கு இருபத்தைஞ்சு பர்சன்ட் கதை எழுபத்தைஞ்சு பர்சன்ட் டெக்னிக் வேல்யூ. கதையை எப்படி சொல்றாங்கங்கிறது முக்கியமான விஷயம்.

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

உதாரணம்...

மிகப்பெரிய உதாரணம் ராஜா ராணி. அட்லி எங்கிட்ட வந்து கதை சொல்றப்ப, ஒண்ணும் பெரிய விஷயமா படலையேன்னு நினைச்சுகிட்டு நடிச்சேன். பட், மேக்கிங்ல அதை அசித்தியிருப்பாங்க. படம் சூப்பர் டூப்பர் ஹிட். ஃபிலிம்பேர்ல எனக்கு பெஸ்ட் சப்போர்ட்டிங் ஆர்டிஸ்ட் அவார்ட் வேற கிடைச்சது.

இயக்குநர் சக்தி சரவணன் பற்றி...

சக்தியோட முதல் படம் நாணயம். அந்த கதையை சக்தி என்கிட்ட சொன்னார். ஒரு பேங்க் கொள்ளை. சரி ஏதோ இங்கிலீஷ் படத்தைப் பார்த்து சொல்றார் போல இருக்குன்னு நினைச்சேன். பேங்க் கொள்ளையை எல்லாம் எங்கய்யா எடுக்கப் போறாங்கன்னு பார்த்தா நாணயத்தை அவ்வளவு ஸ்டைலிஷா எடுத்திட்டார்.

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

நம்பிக்கை...

சோ, கதை இல்லை, அதை எப்படி பிரமாதமா எடுக்கப் போறாங்கங்கிறதுதான் முக்கியம். இந்த கதையை (நாய்கள் ஜாக்கிரதை) சக்தி பிரமாதமா எடுப்பார்ங்கிற நம்பிக்கை இருந்திச்சி.

ரிலீஸ் தான் பிரச்சனை...

பணப்பிரச்சனையில்லை. நாமதான் ஊர் ஊரா தெருத்தெருவா நடிச்சிட்டிருக்கோமே. பணம் பிரச்சனையில்லை. ரிலீஸ் செய்றதுதான் பிரச்சனை.

சின்ன பட்ஜெட் படங்கள்...

முன்னாடி ரஜினி, கமல், நான், விஜயகாந்த், பிரபு, கார்த்திக் யார் நடிச்ச படமா இருந்தாலும் ஒரு தியேடர்லதான் ரிலீசாகும். கோயம்புத்தூர்னா ஒரு தியேட்டர், ஈரோடுன்னா ஒரு தியேட்டார். ஆனா இன்னைக்கு பெரிய பட்ஜெட் படம் இருக்கிற எல்லா தியேட்டர்லயும் ரிலீஸ் ஆகுது. அப்போ சின்ன பட்ஜெட் படங்களை எப்படி வெளியிடுறது?

நாய்கள் ஜாக்கிரதை... நாயா வேலை செய்த ஈத்தோ... பேயா வேலை பார்த்த சிபி!

டபுள் பாஸிடிவ்...

டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ, எனக்கு உண்மையிலேயே நூறாவது நாள் டபுள் பாஸிடிவ் பார்த்தப்போ ஏற்பட்ட ஃபீலிங்ஸ்தான். நூறாவது நாள் பிரமாதமா வந்திருந்தது. பட், அதை இன்னும் பிரமாதப்படுத்தியது இசைஞானி இளையராஜாவோட பேக்ரவுண்ட் ஸ்கோர். அதே மாதிரி இதில் தரண். படத்தை எங்கேயோ கொண்டு போயிட்டார்.

மனைவியின் உழைப்பு...

என்னுடைய மனைவி இந்தப் படத்துல ரொம்ப உழைப்பு. எனக்கு சிரிப்பு வர்ற அளவுக்கு கடுமையான உழைப்பு. ரொம்ப ஓவர் பாசம் பையன் மேல.

நாயா... பேயா.... வேலை

இந்தப் படத்துல நாயா வேலை செய்தது ஈத்தோ (படத்தில் நடித்திருக்கும் நாயின் பெயர்) பேயா வேலை செய்தது சிபி நாயா பேயா வேலை செய்தது என்னுடைய மனைவி' என இவ்வாறு சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

 

விருது விழாவில் ரஜினி பெயரை குறிப்பிட மறந்த மத்திய அமைச்சர்.. மன்னிப்புக் கேட்டார்!

கோவா: கோவாவில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நாள் நிகழ்ச்சியில் ரஜினியின் பெயரைக் குறிப்பிட மறந்துவிட்டார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பரிக்கர். இதனை உணர்ந்து பின்னர் மேடையிலேயே மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

நேற்று தொடங்கிய கோவா சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் பங்கேற்றனர். இந்த விழாவில் ரஜினிக்கு நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகருக்கான விருது வழங்கப்பட்டது.

விருது விழாவில் ரஜினி பெயரை குறிப்பிட மறந்த மத்திய அமைச்சர்.. மன்னிப்புக் கேட்டார்!

விருது வழங்கும் முன்னர் புதிதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள மனோகர் பரிக்கர் பேசினார். அவர் தனது பேச்சில் கோவா ஆளுநர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், அமிதாப் பச்சன் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டவர், விழாவின் நாயகனான ரஜினி பெயரை மறந்துவிட்டார்.

பின்னர் இதை உணர்ந்த அவர், "ரஜினிகாந்த் பெயரைக் குறிப்பிடாததற்கு மன்னிக்க வேண்டும். நான் பெயர்களை ஒரு தாளில் எழுதி வைத்திருந்தேன். அதை எடுத்து வர மறந்துவிட்டேன்," என்றார்.

ரஜினியும் இதைப் பெரிதுபடுத்தாமல், அமைதியான புன்னகையுடன் தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

 

அஜீத் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா

யட்சன் பட சூட்டிங்கிற்காக அஜீத் கட் அவுட்டுக்கு ஆர்யா பாலபிஷேகம் செய்துள்ளார்.

அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் ஆர்யாவை வைத்து ‘யட்சன்' என்ற படத்தை இயக்குகின்றார். பிரபல வார இதழில் எழுத்தாளர் சுபா எழுதிய தொடர்கதையை, சின்னச்சின்ன மாற்றங்கள் செய்து ‘யட்சன்' படத்தின் கதையை உருவாக்கியுள்ளனர்.

அஜீத் கட்-அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்த ஆர்யா

‘யுடிவி' மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கும் யட்சன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்படத்தில், அஜித் ரசிகர் மன்றத் தலைவராக ஆர்யா நடிக்கிறார் என்பது அறிந்ததே. ஏற்கனவே இந்தப் படத்தில் கௌரவ தோற்றத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என்ற செய்தி சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால் அந்த செய்த வதந்தி என்று தற்போது தெரியவந்துள்ளது.

அதே சமயம் அஜித் நடிக்காவிட்டாலும், அவரது ரசிகர்மன்ற தலைவராக ஆர்யா நடிப்பது உண்மை என்ற செய்தி உறுதியாகியுள்ளது.

அஜித் நடித்த ‘வீரம்' படத்திற்காக வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்அவுட் மேல் ஏறி ஆர்யா பாலாபிஷேகம் செய்வது போன்ற காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்தில் அஜித்தின் தீவிர ரசிகர்கூட்டங்கள் என ஒரு படையே நடிக்கின்றனராம்.

இதை அப்படியே படத்தின் புரமோஷன் காட்சிகளில் இணைத்து, அஜித் ரசிகர்களை தியேட்டருக்கு திரட்டிக்கொண்டு வர விஷ்ணுவரதணும், ஆர்யாவும் மெகா ப்ளான் போட்டுள்ளனர் என தகவல்கள் வந்துள்ளன. இந்த படத்தில் ஆர்யாவின் பெயர் ‘சின்னா' வாம்.

இந்த பாலபிஷேகம் நடத்திமுடித்தவுடன்... அவர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் சமூகவலைதளங்களில் ஆர்யாவை சின்ன தல #thala_chinna ஹாஸ்டேக்யை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.

 

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்! - கபிலன் வைரமுத்து

சிங்கப்பூர்: கவியரசு கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும் என்று கவிஞர் வைரமுத்துவின் மகன் கபிலன் வைரமுத்து கூறினார்.

கண்ணதாசன் பாடல்களால் தற்கொலைகளைத் தடுக்க முடியும்! - கபிலன் வைரமுத்து

சிங்கப்பூரில் நடந்த எழுத்தாளர் கழக கூட்டத்தில் பங்கேற்ற கபிலன் வைரமுத்து பேசியதாவது:

"கவியரசு கண்ணதாசன் பாடல்களில் மொழிவளம் கற்பனைவளம் தாண்டி மனச்சோர்வுக்கான மருத்துவம் இருக்கிறது. இளைய தலைமுறைக்கு கவியரசரின் பாடல்களை மறு அறிமுகம் செய்வதன் மூலம் ஓர் ஆறுதலை அறிமுகம் செய்ய முடியும். தற்கொலைகளைக் கூட அது தடுக்கலாம்.

கண்ணதாசன் ஒரு தனி மனிதர் அல்ல. அவரைத் தெரிந்துகொள்வதன் மூலம் ஒரு தமிழ்த் தலைமுறை தன்னைத் தெரிந்துகொள்கிறது," என்றார்.

கபிலனைத் தொடர்ந்து மரபின் மைந்தன் முத்தையா கண்ணதாசன் ஒரு காலப்பெட்டகம் என்ற தலைப்பில் பேசினார்.

விழாவில் குழந்தைகளும் இளைஞர்களும் மேடை ஏறி கண்ணதாசனின் பாடல்களைப் பாடினார்கள். விழா நடந்த ஐந்து மணி நேரமும் அரங்கம் நிறைந்து காணப்பட்டது. கபிலன் வைரமுத்து, முத்தையா இருவருக்கும் எழுத்தாளர் கழகம் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கியது.

 

'எந்திரன் 2' கன்பர்ம்ட்: ஹீரோ ரஜினி இல்லை, ஆமீர் கான்

சென்னை: இயக்குனர் ஷங்கர் எந்திரன் 2 படத்தை எடுக்கிறார். ஆனால் படத்தின் ஹீரோ ரஜினி அல்ல ஆமீர் கான்.

ஷங்கர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்டோரை வைத்து எடுத்த சூப்பர் ஹிட் படம் எந்திரன். இந்நிலையில் ஷங்கர் எந்திரன் 2 படத்தை எடுக்க முடிவு செய்தார். எந்திரன் 2 படத்திலும் அவர் ரஜினியையே நடிக்க வைக்க விரும்பினார். இதனால் ரஜினியை அணுகி சார் நீங்க தான் எந்திரன் 2ம் பாகத்திலும் நடிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

'எந்திரன் 2' கன்பர்ம்ட்: ஹீரோ ரஜினி இல்லை, ஆமீர் கான்

ரஜினி உடல் நலத்தை கருத்தில் கொண்டு இந்த படத்தில் நடிக்க முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதையடுத்து ஷங்கர் பாலிவுட் நடிகர் ஆமீர் கானிடம் நடிக்க கேட்க அவரும் சரி என்று கூறியுள்ளார்.

ஆமீர் எந்திரன் 2 படத்தில் நடிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பி.கே. என்னும் இந்தி படத்தில் நடித்து வருகிறார். அதை முடித்த பிறகு எந்திரன் 2 படத்தில் நடிக்கிறார்.

ஹீரோ ஆமீர் என்பது உறுதியாகிவிட்டது. ஆனால் ஹீரோயின் தான் யார் என்று தெரியவில்லை.

 

சௌந்தர்யா இடத்தை நிரப்ப துடிக்கும் தீபா சந்நிதி!

சென்னை: மறைந்த நடிகை சௌந்தர்யாவின் இடத்தை நான் நிரப்ப வேண்டும்' என்ற கனவோடு தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளாராம் நடிகை தீபா சந்நிதி.

ஆர்யாவோடு ‘யட்சன்', சித்தார்த்தோடு ‘எனக்குள் ஒருவன்' என பரபரப்பாக தமிழில் அறிமுகமாகிறார் நடிகை தீபா சந்நிதி.

தனது முதல் கன்னடப் படமான சாரதிக்காக இரண்டு விருதுகல் வாங்கிய தீபா, அங்கு ஆறு படங்களை முடித்த கையோடு சென்னைக்கு வந்துள்ளார்.

சௌந்தர்யா இடத்தை நிரப்ப துடிக்கும் தீபா சந்நிதி!

அவர் தனது திரையுலகப் பிரவேசம், எதிர்கால லட்சியம் குறித்து ஆனந்தவிகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

என் குடும்பம்...

சிக்மகளூரு தான் என் சொந்த ஊர். அப்பா சசிதர், அங்கே காபி தோட்டம் வச்சிருக்கார். அம்மா நந்தா, இல்லத்தரசி. தம்பி பவீஷ் எம்.பி.ஏ.படிக்கிறான்.

ஆர்க்கிடெக்சர்...

நான் ஒரே செல்லப் பொண்ணு. ஆர்க்கிடெக்சர் படிக்கணும்னு ஆசை ஆசையா சேர்ந்தேன். ஏதாவது புதுசா பண்ணனும்னு தோணுச்சு. சினிமா ஆசையும் இருந்துச்சு.

மாடலிங்...

தன்னம்பிக்கை வளர்றதுக்காக மாடலிங் பண்ணினேன். சின்னச் சின்ன விளம்பரங்களில் நடிச்சேன். ஆனா, நடிகை ஆவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை.

சினிமாவுக்கு நன்றி...

ஏதாவது ஒரு கிரியேட்டிவ் பீல்டில் இருக்க ஆசைப்பட்டேன். அப்படி, இப்படிச் சுத்தி கடைசியில் நடிகையாவே ஆகிட்டேன். நடிகை ஆனதில் இருந்து ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா இருக்கேன். இதுக்கு சினிமாவுக்குத் தான் நன்றி சொல்லணும்.

சித்தார்த் புத்திசாலி...

தமிழ்ல சித்தார்த்தான் எனக்கு முதல் அறிமுகம். அவர் புத்திசாலி நடிகர். சினிமா பத்தி அவ்ளோ விசயங்கள் பேசுவார்.

வசனங்கள் சொல்லிக் கொடுத்தார்...

தமிழ்ல முதல் படம்னு கொஞ்சம் தயங்கினேன். அவர்தான் வசனங்களை சின்னச் சின்னதா அழகா தமிழில் சொல்லிக் கொடுத்தார்.

ஜாலி ஆர்யா...

ஆர்யா இப்போ தான் அறிமுகம். துறுதுறுனு இருக்கார். ஜாலியா ஏதாவது கலாய்ப்பார். ஆர்யோவோட தன்னம்பிக்கை எனக்குப் பிடிச்சிருக்கு.

பிடித்த நடிகை...

நடிகை சௌந்தர்யா தான் எனக்குப் பிடித்த நடிகை. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு எல்லா மொழிகளிலும் ஹிட் கொடுத்த நடிகை.

கனவு...

சௌந்தர்யா இடத்தை இதுவரைக்கும் வேற யாரும் நிரப்பலை. அந்த இடத்தை நான் நிரப்பணும்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ஜெயம் ரவி - ஹன்சிகாவின் ரோமியோ ஜூலியட்!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் "ரோமியோ ஜூலியட்" படத்தின் பெருமளவு ஷூட்டிங் முடிந்தது.

ஜெயம் ரவி - ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தில், பூனம் பாஜ்வா இன்னொரு நாயகியாக நடிக்கிறார்.

மதன் கார்க்கி, தாமரை பாடல்களை எழுத டி இமான் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயகுகிறார் லக்ஷ்மன்.

இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் ஜெயம் ரவி - ஹன்சிகாவின் ரோமியோ ஜூலியட்!

படம் பற்றி இயக்குனர் லஷ்மன் கூறுகையில், "படத்தின் பெரும் பகுதி படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுகிறது. ஜெயம்ரவி - ஹன்சிகா பங்கேற்கும் காட்சிகள் அங்கே அதிக பொருட் செலவில் படமாக்கப்படுகிறது.

படு ஜாலியான இளமை துள்ளல் படமாக ரோமியோ ஜூலியட் உருவாகிறது.
பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியான காமெடி இதில் இருக்கும். இமான் இசை இப்போது எல்லா படங்களிலும் பக்கபலமா இருக்கிறது. இந்த படத்தின் பாடல்கள் அவ்வளவு இனிமையாக இருக்கிறது.

இந்த பாடல்கள் மூலம் இமானுக்கு ஹிந்தி படத்தின் கதவு திறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. விரைவில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது," என்றார்.

 

சிவா- சிம்ஹா இணையும் மசாலா படம்

தமிழ் படம் என்ற நக்கல் நய்யாண்டிப் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவான சிவாவும், இரண்டு படங்களில் வில்லனாக வந்து இப்போது பெரிய நடிகராக பந்தா காட்டும் பாபி சிம்ஹாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள்.

இந்தப் படத்துக்கு மசாலா படம் என்று தலைப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை லஷ்மன் இயக்குகிறார். இவர் சுசீந்திரன் இயக்கிய ‘வெண்ணிலா கபடி குழு' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

சிவா- சிம்ஹா இணையும் மசாலா படம்

இப்படத்தில் கதாநாயகியாக லட்சுமி தேவி நடிக்கிறார். இதற்கு முன் நில் கவனி செல்லாதே என்ற படத்தில் இவர் நடித்துள்ளார். தற்போது மசாலா படத்தில் திரைக்கதையை எழுதியுள்ள லட்சுமி தேவி, துணை இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

முதல் கட்டப் படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் நடத்தி முடித்த படக் குழுவினர் தற்போது பட்டினப்பாக்கம் கடற்கரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் சிம்ஹா முக்கிய வேடத்தில் நடிக்க, சிவா வசனம் எழுதியிருந்தார். இப்போது இருவருமே இந்தப் படத்தில் நடிகர்களாக இணைந்துள்ளனர்.

 

எஸ்எஸ் ராஜேந்திரன் படத் திறப்பு.. முன்னணி நடிகர்கள் வரவில்லை

சென்னை: பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் சமீபத்தில் மரணமடைந்தார். அவருடைய நினைவை போற்றும் வகையில் தென் இந்திய நடிகர் சங்கம் சார்பில் அவரது பட திறப்பு நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள சர்.பிடி. தியாகராயர் அரங்கில் சமீபத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தென் இந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் வாகை சந்திரசேகர், துணைத் தலைவர்கள் விஜயகுமார், கே.என்.காளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

எஸ்எஸ் ராஜேந்திரன் படத் திறப்பு.. முன்னணி நடிகர்கள் வரவில்லை

மதுரை ஆதீனம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, மறைந்த நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் உருவ படத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைவரும் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் நாசர், ராஜேஷ், சிவகுமார், சார்லி, நடிகைகள் காஞ்சனா, ஷீலா, குயிலி, குட்டி பத்மினி, இயக்குனர்கள் சங்கத்தின் சார்பில் விக்ரமன், சித்ரா லட்சுமணன், ரமேஷ் கண்ணா, வினியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் அருள்பதி, பட தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

அதே நேரம், நடிகர் சங்க உறுப்பினர்களாக உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை.

 

லிங்காவில் வக்கீல்கள், நீதித்துறை பற்றி அவதூறு காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியத்திடம் புகார்!

சென்னை: லிங்கா படத்தில் வக்கீல்கள் மற்றும் நீதித் துறையை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக தணிக்கைக் குழுவிடம் புகார் செய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த வக்கீல் ஒருவர்.

அவர் பெயர் நன்மாறன். சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். இவர் தணிக்கை வாரியத்திடம் அளித்துள்ள புகார் மனு:

லிங்காவில் வக்கீல்கள், நீதித்துறை பற்றி அவதூறு காட்சிகள் இருப்பதாக தணிக்கை வாரியத்திடம் புகார்!

ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தில் வக்கீல்கள், நீதித்துறையைப் பற்றி ஆட்சேபிக்கத்தக்க வகையில் காட்சிகள், வசனங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தகைய காட்சிகளுடன் லிங்கா படம் வெளியானால், திரைத்துறையினருக்கும் வக்கீல்களுக்கும் இடையில் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும். எனவே சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளனவா என்பதைச் சரிபார்த்த பின்னர் லிங்கா படத்துக்கு சான்று அளிக்க வேண்டும். விருப்பப்பட்டால் படத்தைப் பார்வையிட வக்கீல்கள் சங்க நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.

-இவ்வாரு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

வருத்தம் இருந்தாலும் நயன்தாராவை வாழ்த்த மறக்காத சிம்பு

சென்னை: சிம்பு தனது முன்னாள் காதலியான நயன்தாராவுக்கு ட்விட்டர் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்புவும், நயன்தாராவும் காதலித்தார்கள், ஜோடியாக வலம் வந்தார்கள், பிரிந்தார்கள். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவையும், நயன்தாரா பிரபுதேவாவையும் காதலித்து பிரிந்தனர். தற்போது நயன்தாராவும், சிம்புவும் சேர்ந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்து வருகின்றனர்.

வருத்தம் இருந்தாலும் நயன்தாராவை வாழ்த்திய சிம்பு

நயன்தாராவையும், ஹன்சிகாவையும் தான் உண்மையாக காதலித்ததாகவும், அவர்கள் தான் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்றும் சிம்பு அண்மையில் தெரிவித்திருந்தார். மேலும் நயனும், ஹன்சிகாவும் எளிதில் மனதை மாற்றிக் கொண்டனர் என்றார்.

இந்நிலையில் கடந்த 18ம் தேதி நயன்தாரா தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் மீது வருத்தம் உள்ள போதிலும் சிம்பு அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிம்புவின் ட்வீட் இதோ,

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நயன் :) இந்த ஆண்டு அருமையானதாக அமையட்டும். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று தெரிவித்துள்ளார்.

 

கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!

கோவாவில் இப்போது நடந்து கொண்டிருக்கும் 45வது சர்வதேச திரைப்பட விழாவில் மராத்தி மொழித் திரைப்படங்களே அதிக அளவு பங்கேற்கின்றன.

மராத்தியில் வெளியாகி பெரும் வெற்றி கண்ட டைம் பாஸ், லாய் பாரி மற்றும் துனியாதாரி போன்ற படங்கள் இந்த முறை திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. இத்துடன் எஸ்ஸெல் விஷன் நிறுவனம் தயாரித்த எலிசபெத் ஏகதாசி, டாக்டர் பிரகாஷ் பாபா ஆம்தே, கில்லா, லோக்மான்ய கே யுக்புருஷ் ஆகிய நான்கு படங்கள் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

கோவா திரைப்பட விழாவில் மராத்தி படங்களின் ஆதிக்கம்- தமிழ் ஒண்ணே ஒண்ணு!

ஒரே நிறுவனம் தயாரித்த நான்கு படங்கள் இந்த விழாவில் கலந்து கொள்வது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, ஏக் ஹஸாராச்சி நோட், யெல்லோ போன்ற படங்களும் தேர்வாகியுள்ளன.

இந்த ஏழுபடங்கள் போக, திரைப்படமல்லாத பிரிவுக்கு மூன்று படங்கள் தேர்வாகியுள்ளன.

அவை: எ ரெய்னி டே, மித்ரா மற்றும் வித்யா. மொத்தம் 10 படங்கள் மராத்தியிலிருந்து பங்கேற்கின்றன.

மலையாளத்திலிருந்து 8 படங்களும் பெங்காலியிருந்து 5 படங்களும், அஸ்ஸாம் மொழிப் படங்கள் இரண்டும், தமிழ், கன்னடம், ஒரியா மொழிகளில் தலா ஒரு படமும் இந்த விழாவில் பங்கேற்கின்றன.

 

திருமண செய்திகள் எதிரொலி... புதிய படத்திலிருந்து த்ரிஷா நீக்கம்

நிச்சயதார்த்தம், திருமணம் என த்ரிஷாவைப் பற்றி தொடர்ந்து வந்த செய்திகள் காரணமாக, ஒரு புதிய படத்திலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.

திரிஷாவுக்கும் தயாரிப்பாளர் வருண்மணியனுக்கும் திருமணம் நடக்க உள்ளதாக இரு தினங்களுக்கு முன் செய்தி வெளியானது.

திருமண செய்திகள் எதிரொலி... புதிய படத்திலிருந்து த்ரிஷா நீக்கம்  

வாயை மூடி பேசவும், காவியத் தலைவன் போன்ற படங்களின் தயாரிப்பாளர் வருண் மணியன். இருவரும் கட்டிப் பிடித்தபடி உள்ள படங்கள் மீடியாவில் உலா வருகின்றன. வருண் மணியன் அணிவித்த நிச்சயதார்த்த மோதிரத்தை த்ரிஷா அணிந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதனை திரிஷா மறுத்தார். திருமண நிச்சயதார்த்தம் என்பது வாழ்க்கையில் முக்கியமான நாள். அது நடக்கும் போது சந்தோஷமாக அறிவிப்பேன் என்றார்.

ஆனால் நிச்சயதார்த்தம் நடந்ததை அவர் மறைக்கிறார் என்றும் கூறப்பட்டது. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் இருவருக்கும் திருமணத்தை முடிக்க இருவீட்டு பெற்றோரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த திருமண குழப்ப செய்திகள் காரணமாக த்ரிஷாவுக்கு வந்த படவாய்ப்புகள் வேறு நடிகைகளுக்கு கைமாறுகின்றன.

அவர் ஏற்கனவே ஒப்பந்தமான ஒரு படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்தப் படத்தை ‘உதயம் என்எச்4' என்ற படத்தை இயக்கிய மணிமாறன் இயக்குகிறார். ஜெய், திரிஷா ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது த்ரிஷாவுக்கு பதில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்த சுரபி ஒப்பந்தமெ் செய்யப்பட்டுள்ளார்.

 

நீயா, நானா?: நடிகர், இயக்குனர் இடையே வெடித்த ஈகோ பிரச்சனை

சென்னை: பெரிய இடத்து மாப்பிள்ளை நடிகருக்கும், பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனருக்கும் இடையே ஈகோ பிரச்சனையாம்.

பெயரில் சந்தோஷத்தை வைத்திருக்கும் இயக்குனர் பெரிய இடத்து மாப்பிள்ளைான அந்த நடிகரை தனது படத்தில் ஹீரோவாக்கினார். அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகையை நடிக்க வைத்தார். படப்பிடிப்பு முடிந்து இசை வெளியீட்டு விழாவும் நடைபெற்றுவிட்டது.

படப்பிடிப்பு நடக்கையில் நடிகருக்கும், இயக்குனருக்கும் இடையே ஈகோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அது மெல்ல மெல்ல வளர்ந்து இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளாத குறையாக உள்ளதாம். இதை மனதில் வைத்துக் கொண்டு நடிகர் படப்பிடிப்பில் ஓவர் சேட்டை செய்தாராம்.

ஹீரோவின் சேட்டையால் கடுப்பான இயக்குனர் தன் படத்தில் நடித்துள்ள முன்னாள் ஹீரோவை போகும் இடங்களில் எல்லாம் புகழ்ந்து பேசுகிறாராம். இதனால் ஹீரோ இயக்குனர் மீது செம கடுப்பில் உள்ளாராம்.

அவர்களின் ஈகோ பிரச்சனையை தீர்க்க தயாரிப்பு தரப்பு முயற்சி செய்து வருகிறதாம்.

 

ரஜினிக்கு மிகத் தாமதமாகக் கிடைத்த விருது இது- மனோஜ் பாஜ்பாய்

சென்னை: இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்தின் பங்களிப்பு மிக அதிகம். அவருக்கு இந்த விருது தாமதமாகத்தான் கிடைத்திருக்கிறது, என்று கூறியுள்ளார் பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய்.

கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க வந்திருந்தார் மனோஜ் பாஜ்பாய்.

ரஜினிக்கு மிகத் தாமதமாகக் கிடைத்த விருது இது- மனோஜ் பாஜ்பாய்

ரஜினிக்கு அளிக்கப்பட்ட நூற்றாண்டு இந்திய சினிமாவின் சிறந்த பிரமுகர் விருது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், "ரஜினிகாந்த் இந்திய சினிமாவுக்கு செய்துள்ள பங்களிப்பு ஏராளம்.

அவருக்கு இந்த கவுரவம் முன்பே கிடைத்திருக்க வேண்டும். தாமதமாகத்தான் இப்போது வழங்கப்பட்டுள்ளது. இன்னும் உயரிய விருதுகள் அவருக்கு கிடைக்க வேண்டும்," என்றார்.