ரஜினி, கமல், அஜீத் வரிசையில் வில்லனாகவும் களமிறங்கும் விஜய், சூர்யா...

சென்னை: கத்தி படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதில் ஒன்று வில்லன் கதாபாத்திரம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இப்போது முன்னணி நடிகர்கள் பலர் வில்லன் வேடத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது விஜயும், சூர்யாவும் இணைந்துள்ளார்கள்.

கமல் தசாவதாரம் படத்திலும், ரஜினி எந்திரன் படத்திலும், அஜித் மங்காத்தா படத்திலும் வில்லன் வேடத்தில் நடித்தனர். மக்களிடையே அதற்கு நல்ல வரவேற்பு இருக்கத்தான் செய்தது.

ரஜினி, கமல், அஜீத் வரிசையில் வில்லனாகவும் களமிறங்கும் விஜய், சூர்யா...

அந்தவகையில், விஜயும், சூர்யாவுக்கும் தங்களது புதிய படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிங்குசாமி இயக்கும் அஞ்சான் படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம் வில்லனாம்.

அதேபோல் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தில் விஜய் இரட்டை வேடம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போது வந்த தகவலின் படி அதில் ஒரு வேடத்தில் விஜய் வில்லன் அவதாரம் எடுத்திருக்கிறாராம்.

கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும்நடித்து அசத்தியிருக்கிறாராம் விஜய். சமீபத்தில் எடுக்கப்பட்ட படத்தின் சில காட்சிகளை போட்டுப்பார்த்த படக்குழு விஜய்யின் நடிப்பை பார்த்து அசந்து விட்டதாம்.

 

கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

ஜூன் 3ம் தேதி கருணாநிதியின் பிறந்த நாளாகும். இதையொட்டி பல்வேறு தலைவர்கள், திமுகவினர் திரளாக கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் இது அவரது 91வது பிறந்த நாள் என்பதால் திமுகவினரும் உற்சாகமாக அதைக் கொண்டாடினர்.

கருணாநிதியைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

மேலும், கிட்டத்தட்ட 14,48,683 பேர், குறுஞ்செய்தி வாயிலாகவும், முகநூல், டிவிட்டர் மற்றும் இணைய தளத்தின் வாயிலாகவும் கருணாநிதிக்குப் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று கருணாநிதியை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

முன்னதாக, மைசூரில் கடந்த 35 நாட்களாக லிங்கா படப்பிடிப்பில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார் ரஜினி. முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்ததும் இன்று அவர் சென்னை திரும்பினார். திரும்பியதும், முதல் வேலையாக தனது நெருங்கிய நண்பரான திமுக தலைவர் மு கருணாநிதியைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார். கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ம் தேதி ஆகும். அன்றும் அவரை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தினார். இருந்தாலும் இன்று நேரிலும் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.

 

கோச்சடையான் பார்க்க வாருங்கள்.. கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்துப் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரிடம், தனது கோச்சடையான் படத்தைப் பார்க்க வருமாறு அழைப்பு விடுத்தார்.

திமுக தலைவர் கருணாநிதி ஜூன் 3ம் தேதி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். அவருக்குத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.

கோச்சடையான் பார்க்க வாருங்கள்.. கருணாநிதிக்கு ரஜினி அழைப்பு

இந்த நிலையில் இன்று கோபாலபுரம் இல்லம் வந்த ரஜினிகாந்த், கருணாநிதியை நேரில் சந்தித்தும் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பின்னர் ரஜினி கூறுகையில், கலைஞர் பிறந்த நாளின்போது நான் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருந்தேன். இதனால் நேரில் வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை. எனவே இன்று வந்து வாழ்த்தினேன்.

எனது கோச்சடையான் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கலைஞரை கேட்டுக் கொண்டேன் என்றார் ரஜினிகாந்த்.