கிளாமர் எனக்கு பொருந்தாது : பாவனா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகை பாவனா கூறியதாவது: கன்னடத்தில் என் முதல் படம் 'ஜோஷ்' ரிலீசான பிறகு எனக்கு அங்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது. சுதீப்புடன் நடித்த 'விஷ்ணுவர்த்தனா', ரிலீசுக்கு தயாராக உள்ளது. அடுத்து கணேஷ் ஜோடியாக 'ரோமியோ' படத்தில் நடிக்கிறேன். மலையாளத்தில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுடன் நடித்த படம் ரிலீசாக உள்ளது. தமிழில், சமீபத்தில் கார்த்தியுடன் நடிக்க கேட்டனர். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்றார்கள். மேலும், பாடல் காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்றார்கள். கிளாமர் எனக்குப் பொருந்தாது என்பதால், அந்த வாய்ப்பை மறுத்து விட்டேன்.


 

காதலர்கள் திருந்தும் படம் : துள்ளி எழுந்தது காதல்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தெலுங்கில் பூமிகா தயாரித்த 'தகிட தகிட' படம் தமிழில் 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் டப் ஆகிறது. இதில் ராஜா, ஹரிப்பிரியா நடித்துள்ளனர். பூமிகாவும், அனுஷ்காவும் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் (சபேஷ்)முரளியின் மகன் போபோ சசி இசை அமைத்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இயக்குனர் சேரன், ஏ.வெங்கடேஷ், தயாரிப்பாளர் டி.சிவா, இசை அமைப்பாளர் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ்-முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர். "காதலர்களை பார்த்து காதலர்கள் திருந்தும் படம். காதலின் பெயரால் நடக்கும் தவறுகளை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டும் படம். தெலுங்கில் ஹிட்டானதால் தமிழுக்கு கொண்டு வருகிறோம்'' என்றார் இயக்குனர் ஸ்ரீஹரி நானு.


 

நிஜ கேரக்டரில் நடிப்பது சவால்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலானது என்று அஞ்சலி கூறினார். 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்து மேரி என்ற நிஜ கேரக்டரில் நடித்துள்ளார் அஞ்சலி. இதுபற்றி அவர் கூறியதாவது:
ஒவ்வொரு கேரக்டரையும் தேர்ந்தெடுத்துதான் நடிக்கிறேன். 'அங்காடி தெரு'வில் நடிக்கும்போது சேர்மக்கனி கேரக்டர் மிகவும் கவர்ந்தது. அப்படி நிறைய பெண்கள் சென்னையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக வசந்தபாலன் சொன்னார். அதேபோல 'தம்பி வெட்டோத்தி சுந்தரம்' படத்தில் லூர்துமேரி கேரக்டரை இயக்குனர் சொல்லி அந்த கேரக்டர் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதாக சொன்னார். அவரின் மேனரிசம், பாடி லாங்குவேஜ், பேச்சு இவற்றை இயக்குனரே செய்து காட்டினார். அப்படியே நடித்தேன். என் நடிப்பை பார்த்து விட்டு லூர்துமேரியை நேரில் பார்ப்பது போல இருக்கிறது என்று இயக்குனர் சொன்னபோது சந்தோஷமாக இருந்தது. நிஜ கேரக்டரில் நடிப்பது சவாலான விஷயம். காரணம் அவர்கள் நாளை படத்தை பார்க்கலாம் என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.


 

ஐபிஎல் நிதி முறைகேடு : ஷாருக்கிடம் 6 மணி நேரம் விசாரணை!

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
ஐபிஎல் 20-20 தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளராக ஷாருக்கான் உள்ளார். 2வது சீசன் போட்டிகள் தென் ஆப்ரிக்காவில் நடந்த போது நிதிமுறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கப்பிரிவினர் அப்போதைய பிசிசிஐ சேர்மன் ஷாஷங் மனோகர், ஐபிஎல் கமிட்டி தலைவர் லலித் மோடி, உறுப்பினர் ரவிசாஸ்திரி ஆகியோரிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.

இந்நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு அமலாக்கப்பிரிவினர் முன் ஷாருக்கான் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைத்த லாபம், நஷ்டம், விளம்பரம் மூலம் வந்த வருமானம் எவ்வளவு, வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டதற்கு வழங்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்வி களை அதிகாரிகள் கேட்டனர்.

சுமார் 6 மணி நேரம் இந்த விசா ரணை நடந்தது. தொடர்ந்து கணக்கு வழக்கு ஆவணங்களை 2 வாரத்திற்குள் தாக்கல் செய்யும்படி ஷாருக் கான் கேட்டு கொள்ளப்பட்டுள்ளார்.


 

பணத்தை திருப்பி தராவிட்டால் சன் பிக்சர்ஸுக்கு தடை - தியேட்டர் உரிமையாளர்கள்


சென்னை: சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களிடம் பெற்ற அட்வான்ஸ் பணத்தை திருப்பித்தராவிட்டால், இனி அந்த நிறுவனம் தயாரிக்கும் அல்லது வெளியிடும் எந்தப் படத்தையும் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இன்று நடந்த திரையரங்க உரிமையாளர்கள் சங்கக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகள்:

திருப்பித் தரவேண்டிய முன்பணம் என்ற வகையில் சன் பிக்சர்ஸுக்கு இதுவரை திரையரங்குகள் சார்பில் தரப்பட்ட பணம் ரூ 2.60 கோடி திருப்பித்தரப்படவே இல்லை. கடந்த ஆட்சியிலிருந்தே இதனை திருப்பித் தரக் கோரி வருகிறோம். ஆனால் சன் பிக்சர்ஸ் கண்டுகொள்ளவே இல்லை.

எனவே இந்தத் தொகையை திருப்பித் தரும்வரை, சன் பிக்சர்ஸ் வெளியிடும் படங்களையோ, தயாரிக்கும் படங்களையோ திரையிடப் போவதில்லை.

ஆட்சி மாற்றம் காரணமாக இப்போது புகார் தரவில்லை. கடந்த ஆட்சியின்போதும் திருப்பிக் கேட்டோம். அரசியலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

திரையரங்குகளில் ஐம்பதுகளில் தினசரி 4 காட்சிகளுக்கு அனுமதித்தார்கள். அன்றைக்கு படங்கள் 3 மணி நேரத்துக்கு மேல் ஓடும் வகையில் வந்தன. ஆனால் இன்றைக்கு 2 மணிநேரப் படங்கள்தான் வருகின்றன. எனவே காட்சிகளை 5 அல்லது 6 ஆக நீட்டிக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு உத்தரவிடவேண்டும். நகர்ப்புறங்களில் ரூ 50 என உள்ள கட்டணத்தை, ரூ 80 ஆக உயர்த்த வேண்டும். இப்படி உயர்த்துவதால் எங்களுக்கு மட்டும் ஆதாயமில்லை. அரசு மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைக்கிறது. இதுகுறித்து முதல்வரைச் சந்தித்து முறையிடவிருக்கிறோம்," என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.
 

விக்ரமின் தாண்டவம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'விக்ரமின் புது அவதாரமாக, 'தாண்டவம்' உருவாகிறது' என்றார், இயக்குனர் விஜய். மேலும் அவர் கூறியதாவது: 'தெய்வத்திருமகள்' ரிலீசுக்குப் பிறகு மீண்டும் விக்ரமுடன் இணைகிறேன். இதில் அவருக்கு இரட்டை வேடமா என்பது சஸ்பென்ஸ். ஆனால், இதுவரை அவரது சினிமா வாழ்க்கையில் இப்படியொரு படம் செய்ததில்லை என்று சொல்லலாம். ஆக்ஷன் த்ரில்லர் படம். விக்ரம் ஜோடியாக அனுஷ்கா, எமி ஜாக்ஸன் நடிக்கின்றனர். யு.டி.வி மோஷன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அடுத்த மாதம் முதல் ஷூட்டிங் நடக்கிறது.


 

மம்தாவுக்கு 11-11-11-ல் நிச்சயதார்த்தம்!


மலையாள / தமிழ் நடிகை மம்தா மோகன்தாஸ் தனது உறவினரை மணக்கிறார். இருவருக்கும் நாளை மறுநாள் 11-11-11 நிச்சயதார்த்தம் கேரளாவில் நடக்கிறது.

தமிழில் விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் படத்தில் அறிமுகமானால் மம்தா. மாதவனுடன் குரு என் ஆளு படத்திலும் நடித்தார். ரஜினி படமான குசேலனில் சில காட்சிகள் நடித்திருந்தார். தற்போது அருண்விஜய் ஜோடியாக தடையற தாக்க படத்தில் நடித்து வருகிறார்.

மம்தா புற்று நோயால் பாதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைக்கு பின் தற்போது குணமாகியுள்ளார். இப்போது இவருக்கு திருமணம் முடிவாகியுள்ளது. சிறு வயது முதலே பழக்கமான தூரத்து உறவினரை மணக்கிறார்.

திருமண நிச்சயதார்த்தம் வருகிற 11-ந்தேதி கொச்சியில் நடக்கிறது. இதற்காக நெருங்கிய நடிகர்- நடிகைகள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார். திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க மாட்டாராம்.
 

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு : வீட்டிலிருந்து நிஷா வெளியேற்றம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் 'ஜே ஜே' படத்தில் மாதவன் ஜோடியாக நடித்தவர் அமோகா. இவர் தனது இயற்பெயரான நிஷா கோத்தாரி என்ற பெயரில் இந்தியில் நடித்து வந்தார். ராம் கோபால் வர்மா இயக்கிய இந்தி படங்களில் நடித்து வந்த இவர், இப்போது தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். ஜீவா நடித்த 'கச்சேரி ஆரம்பம்' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். மும்பை ஓஷிவாராவில் வசித்து வரும் இவரது குடும்பம், தங்கள் சமூகத்தின் மீது அதிக நம்பிக்கைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நிஷா, கடற்படையில் வேலை பார்க்கும் ஒருவரை சில வருடங்களாக காதலித்து வருகிறார். அவரை திருமணம் செய்யப்போவதாக தனது தந்தை நிர்மல் குமாரிடம் சொன்னார். காதலர் தங்கள் பிரிவை சேர்ந்தவர் இல்லை என்று தெரிந்ததும் அவர்கள் நிஷாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதையடுத்து நிஷாவை அவர்கள் வீட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது. தங்களது சமூக சங்கத்துக்கும் இது தொடர்பாக நிஷாவின் பெற்றோர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுபற்றி நிஷாவிடம் கேட்டபோது, ''இப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. தற்போது எனது பெற்றோருடன் டெல்லியில் இருக்கிறேன்'' என்று முடித்துக்கொண்டார். இதே போல நிஷாவின் தந்தை கூறும்போது, ''இது எங்கள் தனிப்பட்ட பிரச்னை. இதில் உண்மை இல்லை. சொசைட்டிக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளதற்கு வேறு காரணங்கள் உள்ளன''என்றார்.
நிஷா தங்கியிருக்கும் ஓஷிவாரா சமர்தீப் அபார்ட்மென்ட் செயலாளர் கூறும்போது, ''நிஷாவின் தந்தை, ப்ளாட்டின் சாவியை தங்கள் குடும்பத்தினர் யார் கேட்டாலும் கொடுக்க வேண்டாம், நீங்களே வைத்திருங்கள்' என்று கடிதம் மூலம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, என்னிடம் போன் செய்து அவரது மகள் நிஷாவின் திருமண கதையை சொன்னார். இந்த சம்பவத்துக்குப் பிறகு நிஷா இங்கு வருவதில்லை'' என்றார்.


 

கவர்ச்சி இல்லாமலும் ஜெயிக்கலாம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
கவர்ச்சி இல்லாமலும் ஜெயிக்கலாம் என்று நடிகை பாமா கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இந்திப் படத்தில் நடித்து வெற்றி பெற்றால் இந்திய நடிகை, தமிழ் படத்தில் ஜெயித்தால் தென்னிந்திய நடிகை, இதுதான் இன்றைய நிலை. அதற்காகத்தான் மலையாள நடிகைகள் தாய் மொழிக்குப் பிறகு தமிழில் ஜெயிக்க நினைக்கிறார்கள்.சிலர் தமிழில் ஜெயிக்க கிளாமர் முக்கியம் என்று நினைக்கிறார்கள். ரேவதி எந்தப் படத்திலும் கிளாமராக நடிக்காமல் வெற்றி பெற்றார். சமீபத்தில் ப்ரியாமணியும், அமலா பாலும் கிளாமராக நடிக்காமல் தமிழில் ஜெயித்தார்கள். எனவே வெற்றிபெறுவதற்கு கிளாமர் முக்கியமில்லை. தற்போது தமிழில் 'சேவற்கொடி' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறேன். கன்னட 'மைனா' படமும், 'ஒண்டு கவுனவல்லி' என்ற படமும் அடுத்த மாதம் வெளிவருகிறது. இன்னும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன். இதில் எதிலுமே கிளாமராக நடிக்கவில்லை.


 

நண்பன் படத்துக்கு சிக்கல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் டப்பிங் படங்களை வெளியிட ஆந்திராவில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த கட்டுப்பாடால் ஷங்கர் இயக்கியுள்ள 'நண்பன்' படத்தை தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முன்னணி ஹீரோ நடித்த அல்லது பிரபல இயக்குனர்கள் இயக்கிய தமிழ் டப்பிங் படங்கள், நேரடி தெலுங்கு படங்களை விட ஆந்திராவில் வசூலில் சாதனை படைத்து வருகின்றன. இதனால் தெலுங்கு பட வியாபாரம் பாதிப்படைவதாக ஆந்திர மாநில விநியோகஸ்தர்கள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். வரும் பொங்கலன்று (தெலுங்கில் சங்கராந்தி) ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்துள்ள 'நண்பன்' படம், '3 ராஸ்கல்ஸ்' என்ற பெயரில் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. பொதுவாக ஷங்கர் இயக்கும் படங்கள் ஆந்திராவில் வசூலில் சக்கைப்போடு போடுவது வழக்கம். அதனால் அன்று வெளியாகும் நேரடி தெலுங்கு படங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆந்திர விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து ஆந்திர மாநில பிலிம் சேம்பர் ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவில், சுரேஷ் பாபு, தில் ராஜு, நாட்டிகுமார், உள்ளிட்ட தயாரிப்பாளர்களும் பூபால், ராம சுப்பா ரெட்டி, விஜயேந்தர் ரெட்டி உட்பட விநியோகஸ்தர்களும் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழு, டப்பிங் படங்களுக்கான வரியை தற்போது இருக்கும் 20லிருந்து 50 சதவிகிதமாக உயர்த்துவது, சங்கராந்தி, விநாயக சதுர்த்தி, தசாரா உட்பட முக்கியமான விழாக் காலங்களில் நேரடி தெலுங்கு படங்களைத் தவிர மற்ற படங்களை வெளியிடாமல் இருப்பது, டப்பிங் படங்களுக்கான தியேட்டர்களை குறைப்பது, இவற்றை  ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விவாதிக்கும். இதில் ஒருமித்த கருத்து ஏற்பட்டவுடன் அரசாணை வெளியிட, ஆந்திர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். ''டப்பிங் படங்களுக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால், தமிழ் நாட்டில் டப்பிங் படங்களுக்கு அதிக வரி விதிப்பு இருப்பதை போல இங்கும் வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்'' என்று தயாரிப்பாளர் சுரேஷ் பாபு கூறினார். இந்த விஷயங்களை ஆந்திர அரசு ஏற்றுக்கொண்டால், பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் 'நண்பன்' படத்துக்கு சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.


 

தற்கொலை விழிப்புணர்வு படம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
பி.ஆர்.என்டர்டயின்மென்ட் தயாரிக்கும் படம் 'ஒத்திகை'. ஜெய் ஆகாஷ், அர்ச்சனா சர்மா, மோகன கிருஷ்ணன், ஷக்தி நடிக்கிறார்கள். ஜான்பீட்டர் இசை. ஆறுமுகம் ஒளிப்பதிவு. படம் பற்றி இயக்குனர் ஏ.எம்.பாஸ்கர் கூறியதாவது:  உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களில் தற்கொலை முனை உள்ளது. இங்கு நடக்கும் தற்கொலைகளில் 80 சதவிகிதம் திட்டமிட்ட கொலைகள் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அந்த ஆய்வின் அடிப்படையில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்கொலைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும், சுற்றுலா செல்லும் இளம் ஜோடிகள் முன் எச்சரிக்கையாக நடந்து கொள்ள வைக்கும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. காமெடி, காதல் கலந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். 18-ம் தேதி வெளிவருகிறது.


 

காஜலுக்கு பாடம் நடத்திய இயக்குனர்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
காஜல் அகர்வால் கூறியது: 'நான் மகான் அல்ல' படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தேன். 'மாற்றான்' படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறேன். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்தது. ஷூட்டிங்கிற்காக இதுவரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். அவற்றிலிருந்து மாறுபட்ட லொகேஷனாக தோன்றியது ரஷ்யா. சுவிட்சர்லாந்து, நியூசிலாந்துபோல் இது வழக்கமான சினிமா லொகேஷன் கிடையாது.

ரஷ்யாவின் ஒவ்வொரு பகுதிக்கு சென்றபோதும் ஒவ்வொரு சரித்திரம் சொன்னார்கள். அதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தேன். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சில இடங்கள், என்னை பெரிதும் கவர்ந்தன. சாதனைகள் படைக்கப்பட்ட பல்வேறு இடங்களில் ஷூட்டிங் நடத்துவதில் ஆர்வம் காட்டினார் இயக்குனர் கே.வி.ஆனந்த்.

அப்போது பல தலைவர்களின் சரித்திரங்கள் பற்றி இயக்குனர் கூறினார். இதனால் படத்தில் பெரிய ஈடுபாடு ஏற்பட்டது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் அறைக்குள் ஓய்வு எடுக்காமல் கையில் கேமராவுடன் பல்வேறு இடங்களுக்கு சென்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். மீண்டும் ஒரு முறை ரஷ்யா செல்ல ஆசை உள்ளது.


 

சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'நடிகை சினேகாவும் நானும் காதலிப்பது உண்மைதான். எங்கள் திருமணம் இரு வீட்டு சம்மதத்துடன் நடக்கும்' என நடிகர் பிரசன்னா கூறினார். 'பைவ் ஸ்டார்' படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் பிரசன்னா. தொடர்ந்து 'மஞ்சள் வெயில்', 'சாது மிரண்டா', 'சீனா தானா 001', 'நாணயம்', 'முரண்' உள்பட பல படங்களில் ஹீரோவாகவும், 'அஞ்சாதே' படத்தில் வில்லனாகவும் நடித்தார். சினேகாவும், பிரசன்னாவும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தின் ஷூட்டிங் அமெரிக்காவில் 2 மாதங்கள் நடந்தது. அப்போது சினேகாவும், பிரசன்னாவும் நட்புடன் பழகினர்.

நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இதை இருவரும் மறுத்து வந்தாலும் வெளியிடங்களுக்கு ஜோடியாக சென்று வந்தனர். இந்நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். தற்போது சினேகா தமிழில் 'முரட்டுக்காளை' ரீமேக், 'விடியல்' மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பிரசன்னா புதுப்படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளார். இது குறித்து 'தமிழ் முரசு' நிருபரிடம் பிரசன்னா கூறியதாவது:

சினேகாவை காதலிப்பது உண்மைதான். இது பற்றி இரு குடும்பத்துக்கும் தெரியும். அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம். தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. 'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்தில் நானும், சினேகாவும் கணவன், மனைவியாக மிக நெருக்கமாக நடித்தோம். சென்னை திரும்பிய  பிறகு, விழாக்களில் அடிக்கடி சந்திப்போம். அப்போது ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொண்டோம்.

சேர்ந்து வாழ்ந்தால், எங்கள் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்தோம். இருவருக்கும் ஒரே எண்ண அலைவரிசை  இருப்பதால், குடும்ப வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இது கலப்புத் திருமணம். இவ்வாறு பிரசன்னா கூறினார்.


 

உறுப்பினராகவில்லை: ஜெனிலியாவுக்கு டோலிவுட்டில் நடிக்க தடை


தெலுங்கு நடிகர் சங்கத்தில் உறுப்பினராகததால் நடிகை ஜெனிலியாவுக்கு தெலுங்கு படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

ஆனால் ஜெனிலியா அதை கண்டுகொள்ளவில்லை. நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் டிமிக்கி கொடுத்து வந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நடிகர் சங்கம் உறுப்பினர் ஆகும்வரை தெலுங்கு படங்களில் நடிக்க ஜெனிலியாவுக்கு தடை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே காரணத்திற்காக த்ரிஷா, ஸ்ரேயா, இலியானா, பிரியாமணி, தமன்னா ஆகியோருக்கு தெலுங்கு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

ராணா டக்குபாதியுடன் ஜோடி சேர்ந்து நா இஷ்டம் என்ற படத்தில் ஜெனிலியா நடித்து வருகிறார். இந்த பட வேலைகள் முடிந்தவுடன் தடை அமலுக்கு வருகிறது.

நம்மூரிலும் கூட நடிகர் சங்கம் இப்படி ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இருப்பினும் இதுவரை முன்னணி நடிகர், நடிகை யாரையும் அது தடை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

'பெரிய படங்களை எடுக்காமல் நிறுத்திவிடுவதுதானே!' - ஒரு புலம்பலும் கோபமும்


தமிழ் சினிமாவில் அடிக்கடி கேட்கும் முணுமுணுப்பு, 'சிறிய படங்களை யாரும் கண்டு கொள்வதில்லை. பெரிய படங்கள் சிறிய படங்களை நசுக்குகின்றன...' என்பதுதான்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இதைப் பற்றி பேசத் தவறுவதில்லை.

சமீபத்தில் நடந்த 'படம் பார்த்து கதை சொல்' என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் சேரன் இதுகுறித்து ஒப்பாரியே வைத்துவிட்டார். அவ்வளவு புலம்பல்!

"இன்று நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் எடுக்கப்பட்டு, தியேட்டர் கிடைக்காமல் தவிக்கின்றன. பெரிய பெரிய படங்களை ஒப்பந்தம் செய்யும் தியேட்டர் உரிமையாளர்கள், சிறிய படங்களை கண்டுகொள்வதில்லை. படத்தை ரிலீஸ் செய்ய முடியாத பரிதாப நிலையில், சிறு பட தயாரிப்பாளர்கள் உள்ளனர்.

என் முதல் படமான `பாரதி கண்ணம்மா'வுக்கு பெரிய தியேட்டர் கிடைக்காமல், நாகேஷ் தியேட்டரில் திரையிடப்பட்டு, 150 நாட்களுக்கு மேல் ஓடியது. பெரிய படங்கள் என்னும் யானைகள் மிதித்துக்கொண்டு ஓடுவதால், சிறு பட தயாரிப்பாளர்கள் படுகாயங்களுடன் காட்சியளிக்கிறார்கள்..," என்றெல்லாம் பேசினார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவரான எஸ் ஏ சந்திரசேகரன், "ரஜினி, கமல், விஜய், சூர்யா போன்றவர்களை வைத்து படம் பண்ணுவது எளிது. பூஜை போட்டாலே நான், நீ என்று பைனான்ஸ் தருவார்கள். தியேட்டர்காரர்களும் படத்தை திரையிட ஆர்வம் காட்டுவார்கள். சிறிய படங்களை தயாரிப்பதுதான் கஷ்டம். யாரும் பைனான்ஸ் தர மாட்டார்கள். வினியோகஸ்தர்கள் படம் பார்க்க இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று இழுத்தடிப்பார்கள்," என்றார்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ஒரு பிரபல இயக்குநரிடம், இதுகுறித்து கருத்து கேட்க, அவர் பொரிந்து தள்ளினார் இப்படி:

"இவர்கள் சுயநினைவோடுதான் பேசுகிறார்களா... புரியவில்லை. இங்குள்ள எல்லோருமே பெரிதாக படம் எடுக்க வேண்டும், எக்கச்சக்கமாக சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்களே. ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு அமையவில்லை.

இப்போது இவ்வளவு பேசும் சேரன், தேசிய கீதம், வெற்றிக் கொடிகட்டு என்றெல்லாம் எடுத்த போது, தன்னை சிறு முதலீட்டுப் பட இயக்குநர் என்றா கூறிக் கொண்டார். அன்றைக்கு அவர் ஒரு பெரிய பட்ஜெட் பட இயக்குநர்தான். நான்கு படங்கள் விழுந்து, பீல்ட் அவுட் என்றதும் இவருக்கு சின்ன பட்ஜெட் நினைப்பு வந்துவிட்டதுபோல. ஏன், ரஜினி படமோ, விஜய் படமோ இயக்கும் வாய்ப்பு வந்தால் இவர் மாட்டேன் என்று சொல்வாரா அல்லது சின்ன பட்ஜெட்டில் இயக்குவேன் என்று அடம் பிடிப்பாரா?

அது பெரிய பட்ஜெட்டோ சின்ன பட்ஜெட்டோ நல்ல கதை, திறமையான இயக்கம், கச்சிதமான நடிப்பு என வரும் படங்கள் ஒருபோதும் தோல்வியைத் தழுவியதில்லை. இதை இயக்குநர் ஷங்கர் நிரூபித்தார். பெரிய பட்ஜெட்டில் அடுத்தவர்களுக்காக படமெடுத்தவர், தன் சொந்தத் தயாரிப்புகளை சின்ன பட்ஜெட்டில் எடுத்து ஜெயித்தார்.

களவாணி என்ற படம் வந்தபோது கண்டு கொள்ள ஆளில்லை. ஆனால் அந்தப் படத்தின் தரம் அதனை பெரிய படமாக்கவில்லையா?

அப்படியானால், பெரிய பட்ஜெட் படமே எடுக்காமல் விட்டுவிடுவதுதானே... சின்னச் சின்னதாய் மொக்கைப் படமெடுத்து ரசிகர்களை தியேட்டர் பக்கமே வரவிடாமல் விரட்டுவதுதானே... ஒரு இயக்குநர் தன் படைப்பை தரமாகத் தருவதில் மட்டும்தான் கவனமாக இருக்க வேண்டும். பட்ஜெட் பற்றி புலம்பிக் கொண்டிருக்கக் கூடாது.

இதே சேரன் எத்தனை தயாரிப்பாளர்களை போண்டியாக்கினார்... தற்கொலை செய்யும் வரை போனார் ஒரு தயாரிப்பாளர். கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி, தான் எடுக்கும் படங்களை பெரிய வெற்றிப் படங்களாக்குவதுதானே!

சினிமாவில் தோற்றவர்கள்தான் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஜெயிக்கும் வேகத்தில் உள்ளவர்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துவார்கள். சேரன்களுக்கு இது என்றைக்கு புரியப் போகிறதோ...," என்றார்.
 

விஷால், சிம்புவிடம் மன்னிப்புக் கேட்ட தருண் கோபி!


திமிரு, காளை என இரண்டு படங்களை இயக்கிய தருண்கோபி, அந்த இரு படங்களின் நாயகர்களான விஷால் மற்றும் சிம்பு குறித்து முன்பு கடுமையாகப் பேசிவிட்டார்.

ஆனால் இப்போது தானே முழு நேர நடிகராக மாறிய பிறகுதான் நடிகர்களின் கஷ்டம் என்னவென்று புரிகிறதாம் அவருக்கு. எனவே முன்பு தான் பேசியதற்காக இப்போது சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார் தருண் கோபி.

சமீபத்தில் சென்னை தியாகராயா க்ளப்பில் நடந்த பேச்சியக்கா மருமகன் என்ற படத்தின் பிரஸ்மீட்டில்தான் இந்த மன்னிப்பு கோரும் படலம் அரங்கேறியது.

‘பேச்சியக்கா மருமகன்’ படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார் தருண் கோபி மாமியார் – மருமகன் பாசத்தைச் சொல்லும் கதையாம் இது.

இதில் மருமகனாக தருண் கோபி நடிக்க, மாமியாராக ஊர்வசி நடிக்கிறார். இப்படத்திற்கு தருண் கோபி கதை, வசனம் எழுத, அவருடைய நண்பரும் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவருமான பாலகுமாரன் திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார்.

சபேஷ்-முரளி இசையமைத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். இதுவரை படங்களை விநியோகம் செய்துவந்த மன்னன் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம் முதல் முறையாக தயாரிப்பு துறையில் இறங்கியிருக்கிறது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தருண் கோபி, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்திற்குப் பிறகு எனக்கு வந்த கதைகள் அனைத்துமே கையில குச்சிய வச்சிக்கிட்டு ஆடு மேய்ப்பது போலதான் வந்தன. எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. அதனால்தான் இவ்வளவு இடைவெளி.

இந்த படத்திற்காக ஒரு நடிகனாக பெரும் உழைப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அப்போதுதான் புரிந்தது நடிகர்களின் நிலை. இந்த நேரத்தில் நான் என் சக நடிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். முன்பு சில நிகழ்ச்சிகளில் பேசும் போது விஷால், சிம்பு போன்ற நடிகர்கள் மீது கோபப்பட்டு பேசியிருக்கிறேன். அதற்காக வருத்தமும், அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுகொள்கிறேன்," என்றார்.

ஆக, மருமகனை 'திருத்திவிட்டார்' 'மாமியார்'!
 

ஹாஸாரே?... நோ கமெண்ட்ஸ்'!! - விஜய் உஷார் பதில்


ஊழலை ஒழிக்க வலுவான லோக்பால் வேண்டும் என்ற பெயரில் அன்னா ஹஸாரே டெல்லியில் நடத்திய உண்ணாவிரத நாடகத்தில், கடைசி நாளன்று தன் பங்குக்கு ஒரு காட்சியை நடிகர் விஜய் அரங்கேற்றியது நினைவிருக்கலாம்.

ஹஸாரேவின் உண்ணாவிரதத்தின் கடைசி நாளில் சென்னையிலிருந்து விமானத்தில் டெல்லிக்குப் போய், ஹஸாரேவுக்கு வாழ்த்து தெரிவித்து, பத்திரிகை - சேனல்களுக்கு பேட்டியெல்லாம் கொடுத்தார் விஜய்.

சமீபத்தில் வேலாயுதம் வெற்றி குறித்த பிரஸ்மீட்டில் விஜய்யிடம் அன்னா ஹஸாரே போராட்டம் பற்றி கருத்து கேட்கப்பட்டது.

எல்லோரும் ஆவலுடன், விஜய் ஏதாவது சொல்வார் என்று எதிர்ப்பார்க்க, இவரோ நோ கமெண்ட்ஸ் என்றார் எச்சரிக்கையுடன்!

'முன்பு டெல்லி சென்றபோது, ஹஸாரேவின் இமேஜ் இப்படி தாறு மாறாக டேமேஜ் ஆகிவிடும், அதுவும் இத்தனை சீக்கிரம் நடக்கும் என விஜய் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. சராசரி அரசியல்வாதி ஹஸாரே என்று பலரும் கூறிவரும் இந்த சூழலில் ஹஸாரே பற்றி கருத்து சொல்வதே தேவையற்ற, சர்ச்சைக்குரிய விஷயம் என்று விஜய் நினைத்துவிட்டதாலேயே கருத்து சொல்ல மறுத்துவிட்டார்' என்று பேசிக்கொண்டனர் சில பத்திரிகையாளர்கள்!
 

மணிரத்னம் படத்தில் ஆக்ஷன் கிங்!


மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கு 'பூக்கடை' என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம்.

இப்போது படத்தில் இன்னொரு நாயகனும் இடம்பெற்றுள்ளார். அவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இதனை அவரே உறுதிப்படுத்தியுள்ளார்.

மணிரத்னம் படத்தில் அர்ஜுன் நடிப்பது இதுவே முதல்முறை. இந்தப் படத்தில் மிக முக்கியமான பாத்திரம் இவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அர்ஜுன் ஏற்கெனவே அஜீத்துடன் மங்காத்தாவில் நடித்தார். இப்போது புதிய ஹீரோவுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறார்.

பூக்கடையில், நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது அவர் இன்னும் உறுதி செய்யப்படவில்லையாம். பார்த்திபன் மகள் கீர்த்தனா நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

பூக்கடை படத்தை தமிழில் மட்டுமே எடுக்கிறார் மணிரத்னம். தமிழ் - இந்தி என இரட்டை சவாரி செய்வதால், படத்தின் இயல்புத் தன்மை கெட்டு, படங்களும் வரிசையாகத் தோல்வியைத் தழுவியதாலேயே இந்த முடிவு!
 

ஐபிஎல் பண பரிவர்த்தனை: ஷாரூக்கானிடம் 7 மணி நேரம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை


டெல்லி: ஐபிஎல் வீரர்களை பல கோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ள ஷாரூக்கானிடம், அந்தப் பணம் எந்த வழியில் வந்தது என அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தினர்.

ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக இருக்கிறார் நடிகர் ஷாருக்கான். இந்த அணிக்கு விளையாட சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு பலகோடி ரூபாய் கொடுத்து ஒப்பந்தம் செய்துள்ளார் ஷாரூக்கான்.

அணி வீரர்களின் பயிற்சி, பராமரிப்புக்காகவும் பெருந் தொகை செலவு செய்துள்ளார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து அமைத்துள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியிலும் கலந்து கொண்டது. இதற்கும் கோடிக்கணக்கில் பண பரிமாற்றம் நடந்துள்ளது.

இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக்கானிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் திடீர் விசாரணை நடத்தினார்கள். சனிக்கிழமை 7 மணி நேரம் நடந்த இந்த விசாரணையின்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செய்த முதலீடு எவ்வளவு? இதற்கான பணம் எப்படி வந்தது? இதன் மூலம் வந்த வருமானம் எவ்வளவு? வரிமுறையாக செலுத்தப்பட்டுள்ளதா? சமீபத்தில் தென் ஆப்பிரிக்கா சென்று விளையாடியதின் மூலம் கிடைத்த வருமானம், செலுத்திய வெளிநாட்டு வரி ஆகியவை குறித்தும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கேள்விகள் எழுப்பினர்.

நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவரின் நிறுவனத்திலிருந்து ஷாரூக்கானின் நிறுவனத்துக்கு பணம் கைமாறியுள்ளது. இதன் பின்னணி குறித்தும் விசாரித்தனர் அதிகாரிகள்.

அதற்கு ஷாருக்கான் பொறுமையாக பதில் அளித்தார். மேலும் கிரிக்கெட் வீரர்களை வாங்கியதற்கான ஒப்பந்த ஆவணங்கள், விளம்பரங்கள், எந்த வகையான பங்குகளை வைத்திருக்கிறார், லாப- நஷ்ட கணக்கு விவரம் ஆகியவற்றுக்கான முழு விவரங்களை 2 வாரங்களுக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் உத்தர விட்டனர். இவற்றை நிச்சயம் ஒப்படைப்பதாகவும், அனைத்தையும் முறையாகவே தாம் செய்திருப்பதாகவும் ஷாரூக்கான் பதில் அளித்தார்.

விசாரணைக்கு ஷாரூக்கான் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிசாஸ்திரி, முன்னாள் பி.சி.சி.ஐ. தலைவர் சசாங்மனோகர் ஆகியோரிடம் ஐ.பி.எல். முறைகேடு தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி உள்ளனர்.
 

சினேகா - பிரசன்னா விரைவில் திருமணம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடிகை சினேகாவுக்கும், நடிகர் பிரசன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் விரைவில் திருமணம் நடக்கிறது. இதனை நடிகர் பிரசன்னாவே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

நடிகர் பிரசன்னாவும் சினேகாவும் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இருவரும் நல்ல நண்பர்களாகத் திகழ்ந்தனர். இருவரும் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. இருவரும் இதுகுறித்து எந்த மறுப்பும் தெரிவித்ததில்லை.

இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக தங்கள் பிஆர்ஓ ஜான் மூலம் தெரிவித்துள்ளனர்.

இருவீட்டாரின் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளது.

இதுகுறித்து நடிகர் பிரசன்னா கூறியுள்ளதாவது:

சினேகாவுக்கும் எனக்கும் திருமணம் என்பது உண்மைதான். எங்கள் இருவரின் பெற்றோர் சம்மதத்துடன் இந்த மாத இறுதிக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். ஆனால் வரும் மார்ச் மாதம் திருமணம் என்று சிலர் எழுதியுள்ளனர். இதில் உண்மையில்லை. திருமணம் எப்போது என்பதை விரைவில் நாங்களே முறைப்படி அறிவிக்கிறோம்," என்றார்.

வாழ்த்துக்கள்!
 

பிப்ரவரியில் நயன்தாரா-பிரபுதேவா திருமணம்.. வீட்டை சென்னைக்கு மாற்றினார்கள்!


சென்னை: நயன்தாரா-பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. இதனால் இருவரும் இப்போது தங்கள் இருப்பிடத்தை ஹைதராபாதிலிருந்து சென்னைக்கு மாற்றியுள்ளனர்.

பிரபு தேவா இயக்கத்தில் வந்த வில்லு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.

அவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், ஹைதராபாதிலும் மாறி மாறி வசி்த்து வருகிறார்.

சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருகிறார். விவாகரத்து ஆகிவிட்டாலும் முன்னாள் மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கடி பார்த்து வருகிறார். இதனால் பிரபு தேவா - நயன்தாரா இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.

இதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள்.

போட்கிளப் பகுதியில் புதிய வீடு

அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியுள்ளனர்.

வீட்டுக்கு தேவையான மேசை நாற்காலிகள் மற்றும் அலங்காரப் பொருட்களை நயன்தாரா கடை, கடையாக சென்று வாங்கி வருகிறார். இதனால் சென்னையின் முக்கிய கடைகளில் நயன்தாரா - பிரபுதேவா ஜோடியை அடிக்கடி பார்க்க முடிகிறது.
 

தமிழ் தெரியாத நடிகைகள், செலவு வைக்கும் இசையமைப்பாளர்கள் - சேரன் தாக்கு


இப்போதெல்லாம் மொழி தெரியாமல் இங்கு நடிக்க வரும் நடிகைகளை தமிழை கடைசி வரை கற்றுக் கொள்வதே இல்லை என்றும், வெளிநாட்டுக்கு கம்போசிங் போகிறோம் என்ற பெயரில் இசையமைப்பாளர்கள் தயாரிப்பாளர்களுக்கு செலவு வைப்பதாகவும் சாடினார் இயக்குநர் சேரன்.

தெலுங்கில் பூமிகா தயாரித்த படத்தை 'துள்ளி எழுந்தது காதல்' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்கின்றனர். இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படத்துக்கு தேவா குடும்ப வாரிசான போபோ சசி இசையமைத்திருந்தார். எனவே தேவா மற்றும் அவரது சகோதரர்கள் சபேஷ் முரளி உள்பட குடும்பத்தினர் வந்திருந்தனர்.

இதில் பங்கேற்ற சேரன் பேசுகையில், "தமிழ் படங்களில் இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாள நடிகைகள் பலர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். அனுஷ்கா, ஹன்சிகா மோட்வானி, டாப்சி போன்றறோர் முன்னணி நடிகைகளாக உள்ளனர். மேலும் பல புதுமுக நடிகைகளும் நடிக்கின்றனர். இவர்களுக்கு தமிழ் தெரியாது. இந்த நடிகைகள் தமிழ் கற்க வேண்டும். துள்ளி எழுந்தது காதல் படத்தின் நாயகி ஹரிப்பிரியா இங்கு பேசும்போது, 'அடுத்த முறை விழாவுக்கு வரும் போது நிச்சயம் தமிழ் பேசு வேன்' என்றார். இதே மாதிரிதான் 'முரண்' பட விழாவிலும் சொன்னார்.

ஆனால் தமிழ் கற்றுக்கொள்ளவே இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து வரும் நடிகைகள் பலர் இப்படித்தான் சொல்கிறார்கள். ஆனால் தமிழ் கற்றுக் கொள்வது இல்லை. தமிழ்நாட்டு மருமகள் ஆகி விட்ட பிறகு தமிழ் கற்கிறார்கள். இனி வெளி மாநில நடிகைகள் ஆசிரியரை வைத்து தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும்.

இசையமைப்பாளர்கள் இப்போதெல்லாம் வெளி நாட்டுக்கு பாடல்கள் கம்போசிங் போவதையும் ஒரு மாதம் ரீ ரீக்கார்டிங் செய்வதையும் பெருமையாக பேசுகின்றனர். இதில் என்ன பெருமை இருக்கிறது... தயாரிப்பாளர்களுக்கு அப்படி செலவு வைக்கக் கூடாது! என்னுடைய பாரதி கண்ணம்மா தொடங்கி பல படங்களில் பின்னணி இசைக்கு அதிகபட்சம் 7 நாட்கள்தான்," என்றார்.
 

செல்ல மகள் தியாவுக்காக காரி்ல் இருந்து பைக்கிற்கு தாவிய சூர்யா


சொகுசு கார்களில் பறக்கும் நடிகர் சூர்யா தனது செல்ல மகள் தியாவுக்காக பைக் வாங்கியுள்ளார். அதில் வைத்து மகளை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார்.

நடிகர் சூர்யாவின் மகள் தியாவுக்கு பைக் என்றால் அலாதிப் பிரியம். அதனால் சூர்யா ஒரு பைக் வாங்கியுள்ளார். ஷூட்டிங் இல்லாத நாட்களில் மகளை பைக்கில் வைத்து பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார், சென்னையை சுற்றி வருகிறார். மகளின் சந்தோஷத்தில் தானும் சந்தோஷம் காண்கிறார்.

இது குறித்து அவர் கூறியதாவது,

என் மகள் தியாவுக்கு பைக்கில் செல்வது மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் பைக் வாங்கியுள்ளேன். ஷூட்டிங் இல்லை என்றால் தியாவை பைக்கில் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறேன்.

நான் காரில் சென்றால் என்னை யாரும் அடையாளம் கண்டுகொள்ள முடியாது. ஆனால் பைக்கில் அப்படியில்லை. அதனால் ஹெல்மெட் அணிந்து தான் பைக்கில் செல்கிறேன். அது தலைக்கும் கவசமாக உள்ளது, என்னையும் யாராலும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாது என்றார்.

அண்மையில் ஏழாம் அறிவு நிகழ்ச்சிக்கு மகளை அழைத்து வந்த சூர்யா அவள் அங்கு நடந்தவற்றை எல்லாம் உன்னிப்பாக கவனிப்பதைப் பார்த்து அதிசயித்தார். இப்பொழுதெல்லாம் அப்பா எங்காவது கிளம்பினால் தானும் வருவேன் என்று தியா அடம் பிடிக்கிறாளாம்.

சிக்னல்ல உங்க பக்கதுல பைக்கில் நிற்பது சூர்யாவாகக் கூட இருக்கலாம்.!..
 

கையைக் 'கடி'க்கும் நயன்-முக்கி, முணங்கும் பிரபுதேவா!


நடிப்பை நிறுத்திய பிறகும் நயன்தாரா ஆடம்பரமாக செலவழிப்பதால் செலவு தாங்க முடியாமல் பிரபுதேவா கண்விழி பிதுங்குகிறாராம்.

பிரபுதேவாவுக்கும், நயன்தாராவுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்தை முன்னிட்டு நயன்தாரா நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார். ஆனால் அம்மணி தாறுமாறாக செலவு செய்கிறாராம். இதனால் பிரபுதேவா செய்வதறியாது தவிக்கிறார் என்று கூறப்படுகிறது. நான் சம்பாதிப்பது எல்லாம் இந்த 'ஆத்தா' செலவுக்கே போய்விடும் போலிருக்கு என்று புலம்புகிறாராம்.

இதற்கிடையே, பெரும் பணப்பிரச்சனையில் சிக்கித் தவித்த நயன்தாராவுக்கு உரிய நேரத்தில் பணம் கொடுத்து பிரபுதேவா உதவியதை ஒரு முன்னணி செய்தித் தாள் கண்டுபிடித்துள்ளது. நயன்தாரா தான் வைத்திருக்கும் 4 ஸ்டைலான கார்களுக்கான இன்ஸ்டால்மென்ட் கட்டவில்லை. அப்போது பிரபுதேவா தான் ரூ.10 லட்சம் கொடுத்து நயனைக் காப்பாற்றியுள்ளார்.

இப்படி ஓவரா செலவு செய்தால் தாங்காது, கொஞ்சம் அடக்கி வாசி என்று பிரபுதேவா சொன்னதை நயன்தாரா காதில் வாங்கிக் கொள்ளவேயில்லையாம். தனது கடனை கட்டிவிட்டு பிறகு வீட்டிற்குள் வந்தால் போதும் என்று நயன் கூறியதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அவர்கள் திருமணம் செய்துகொள்ளவிருந்தாலும், இன்னும் தேதி முடிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

ரீமா சென் பிறந்த நாள்: புதிய பார் திறந்த காதலர்!


தனது வருங்கால கணவர் ஷிவ் கரண் சிங்குடன் தனது பிறந்த நாளை சமீபத்தில் கொண்டாடினார் நடிகை ரீமா சென்.

ரீமாவின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்டிமென்டாக தனது டெல்லி ஓட்டலில் நட்சத்திர பார் ஒன்றைத் திறந்துள்ளார் ஷிவ் கரண் சிங். இந்த பாருக்கு ஷ்ரூம் என்றுி பெயர் சூட்டியுள்ளார்.

ரீமா சென்னும் ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்கும் கடந்த சில ஆண்டுகளாகக் காதலித்து வருகின்றனர்.

இருவரும் மோதிரம் மாற்றி தங்கள் திருமணத்தை உறுதி செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. பாட்டி, நிகழ்ச்சிகள் என எங்கும் இருவரும் ஒன்றாகவே சுற்றுகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த வாரம் ரீமா சென்னுக்கு பிறந்த நாள். இந்த நாளைக் கொண்டாட பெரிய விருந்து வைத்தார் ஷிவ் கரண் சிங். தனது டெல்லி ஓட்டலில் நடந்த இந்த விருந்தின்போது, ரீமாவின் பிறந்த நாள் நினைவாக ஒரு நட்சத்திர பார் திறந்தார் ஷிவ்.

இந்த பாரில்தான் விடிய விடிய பார்ட்டியும் நடந்ததாம்.

இருவருக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. அதுவரை சும்மா இருப்பானேன் என்று இரு தமிழ்ப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரீமா சென்.
 

முதுமையைப் பார்த்து பயமில்லை, இயற்கை தானே: மாதுரி தீக்ஷித்


முதுமையைப் பார்த்து நான் பயந்ததில்லை. அது இயற்கை தானே என்று பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தெரிவித்துள்ளார்.

இத்தனை நாட்கள் அமெரிக்காவில் இருந்த பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தற்போது குடும்பத்துடன் மும்பைக்கே வந்து செட்டிலாகிவி்ட்டார். 44 வயதிலும் 2 பிள்ளைகளின் தாயான மாதுரி அட்டகாசமாக உள்ளார்.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு,

நான் எனது சருமத்தை பராமரிப்பதில் அதிக அக்கறை காட்டுகிறேன். வயதாகுகிறதே என்று நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. அது இயற்கை. அதை நினைத்தாலும் தடுக்க முடியாது.

நடனமாடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். அதி்ல் ஆத்ம திருப்தி கிடைக்கும். நான் நடனப் பயிற்சி மேற்கொள்கிறேன். அது பயிற்சிக்கு, பயிற்சியும் ஆகிவிட்டது, உடற்பயிற்சிக்கு, உடற்பயிற்சியுமாகிவிட்டது. எனது 2 மகன்களுக்கும் எனது படங்களைப் பார்ப்பது பிடிக்கும். படத்தைப் பார்த்து, ஏம்மா உங்களை எல்லோரும் மாதுரி தீக்ஷித்னு கூப்பிடுகிறார்கள். உங்கள் பெயர் நேனே தானே என்பார்கள்.

இல்லடா கண்ணுகளா இந்தியாவில் என்னை மாதுரி தீக்ஷித் என்று தான் தெரியும் என்பேன். அப்போ நிஜமாகவே நீங்கள் இந்தியாவில் பிரபலமான ஆளா என்று வியப்பார்கள். வார இறுதி நாட்களை எனது குடும்பத்துடன் செலவிடவே விரும்புகிறேன்.

குழந்தைகளை நல்லவிதமாக வளர்ப்பதில் முனைப்பாக உள்ளேன் என்றார்.
 

'இபிகோ' ஆக மாறிய கடமை கண்ணியம் கட்டுப்பாடு!


சூப்பர் ஹிட் த்ரில்லர் படமான எல்லாம் அவன் செயல் கூட்டணியின் அடுத்த படம் 'கடமை கண்ணியம் கட்டுப்பாடு' இப்போது 'இபிகோ' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ஆர்கே, வடிவேலு நடிப்பில் வெளியான படம் எல்லாம் அவன் செயல். இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து மீண்டும் ஆர் கேவுடன் இணைந்து புதிய படத்தை உருவாக்கி வருகிறார் ஷாஜி கைலாஷ்.

இந்தியில் பெரும் பாராட்டுக்களைக் குவித்த 'அப் தக் சப்பன்' என்ற படத்தை கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற பெயரில் படமாக்கி வந்தனர். ஆர்கேதான் ஹீரோ. விவேக் இந்த முறை அவருடன் கைகோர்த்துள்ளார்.

இந்த நிலையில் படத்தின் தலைப்பு 'இபிகோ' என மாற்றப்பட்டுள்ளது.

"தலைப்பு சுருக்கமாகவும், கதையின் மையக் கருவை பிரதானப்படுத்துவதாகவும் அமைய வேண்டும் என்று விரும்பினோம். எனவே இபிகோ என மாற்றியுள்ளோம். இந்தத் தலைப்பு இன்னும் கச்சிதமாகப் பொருந்திவிட்டது. படப்பிடிப்பு மும்முரமாக நடந்துவருகிறது," என்றார் படத்தின் நாயகன் ஆர்கே.

படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.
 

நவம்பர் 18 முதல் செல்வராகவனின் 'மயக்கம் என்ன'


செல்வராகவன் இயக்கத்தில், அவர் தம்பி தனுஷ் -ரிச்சா நடித்துள்ள புதிய படமான மயக்கம் என்ன வரும் நவம்பர் 18-ம் தேதி உலகெங்கும் ரிலீசாகிறது.

மயக்கம் என்ன படம் ஏற்கெனவே தயாராகிவிட்டது. ஜீவி பிரகாஷ் இசையில் இப்படத்தின் பாடல்கள் பிரபலமடைந்துள்ளன.

தீபாவளிக்கு இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் தியேட்டர்கள் பிரச்சினை மற்றும் தீபாவளி போட்டி போன்றவற்றால், ரிலீசை மூன்று வாரங்கள் தள்ளிப்போட்டனர்.

இந்த நிலையில் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் உலகின் பிற பகுதிகளில் இந்தப் படம் வரும் நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்கள் காரணமாக ஏற்கெனவே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எனவே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்களில் ஒன்றாக மாறியுள்ளது மயக்கம் என்ன!

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகும் படம் இது.
 

'சூர்யா பட வசனத்தை நீக்கிய இலங்கையில் இனி தமிழ்ப் படங்களை வெளியிடக் கூடாது!'


சென்னை: சூர்யாவின் 7 ஆம் அறிவு படத்தில் தமிழர்களின் பெருமையைப் பறைசாற்றும் வகையில் இடம்பெற்ற வசனங்களை நீக்கிய இலங்கையைக் கண்டிக்கும் வகையில் இனி அங்கு தமிழ் திரைப்படங்களே திரையிடக்கூடாது என போராட்டம் வெடித்துள்ளது.

ஈழத் தமிழர்கள் மீது பல நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தியதாலேயே தமிழரக் விடுதலைப் போராட்டம் வீழ்ச்சியை அடைந்ததாக ஏழாம் அறிவு படத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இவற்றையெல்லாம் நீக்கி விட்டு இலங்கையில் திரையிட்டுள்ளனர்.

இதற்கு தமிழ் பட உலகில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இனிமேல் இலங்கையில் எனது படங்களை திரையிடமாட்டேன் என்று இயக்குநர் சசிகுமார் அறிவித்துள்ளார்.

7ஆம் அறிவு தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுபோல் எல்லா தயாரிப்பாளர்களும் இலங்கையில் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி வற்புறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இலங்கையில் தமிழ் படங்களை திரையிட அனுப்ப மாட்டோம் என்று உதயநிதி ஸ்டாலின், சசிகுமார் ஆகியோர் அறிவித்து இருப்பதை வரவேற்கிறோம்.

உலகம் முழுவதும் இலங்கை தமிழர்கள்தான் தமிழ் படங்களை பார்க்கின்றனர். இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களை உலகமே கண்டித்து வருகிறது. அந்த நாட்டுக்கு நடிகர்- நடிகைகள் செல்லக் கூடாது என்று ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அது போல் தமிழ் படங்களையும் அனுப்புவதில்லை என்று தயாரிப்பாளர்கள் முடிவு செய்ய வேண்டும்," என்று கூறப்பட்டுள்ளது.
 

பென்டாஸ்டிக் என்றார் ரஜினி, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்றார் கமல்- சூர்யா பெருமிதம்


7ஆம் அறிவு படத்தைப் பார்த்த ரஜினி சார் படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது என்னைக் கட்டிப்பிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். கமல்சார், படம் பார்த்துக் கொண்டிருந்தபோதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார் என்று கூறியுள்ளார் நடிகர் சூர்யா.

சூர்யா - ஸ்ருதி ஹாஸன் நடிப்பில் ஏ ஆர் முருக தாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளியான படம் ஏழாம் அறிவு. இந்தப் படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தாலும், படம் பெரிய அளவு வசூலைக் குவித்துள்ளதாக தயாரிப்பாளர் உதயநிதியும் இயக்குநர் முருகதாஸும் அறிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இந்தப் படத்துக்கு சிறப்பான வரவேற்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

இந்த நிலையில் படத்தின் வெற்றி மற்றும் பாராட்டுகளைப் பகிர்ந்து கொள்ள நேற்று சென்னையில் நிருபர்களைச் சந்தித்தார் படத்தின் நாயகன் சூர்யா.

படம் வெளியான பிறகு தனக்குக் கிடைத்த பாராட்டுகளைப் பற்றி அவர் கூறுகையில், "7ஆம் அறிவு படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடுகிறது. தமிழறிஞர்கள், உணர்வாளர்கள், வெளிநாடு வாழ் தமிழர்கள், மாற்று சினிமா ரசிகர்கள் என அனைவருமே இந்தப் படத்தை பாராட்டினர்.

இந்தப் படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் வந்துள்ளன. பாராட்டுக்களை ஏற்கும் அதே மனப்பான்மையுடன் விமர்சனங்களையும் தலை வணங்கி ஏற்கிறேன்.

சமீபத்தில் திரையுலகைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர் பேசுகையில், "நான் படம் பார்த்தேன். சிலர் விமர்சித்த மாதிரி அப்படி ஒன்றும் தவறாக இந்தப் படம் இல்லையே. நன்றாக இருந்ததே..." என்று கேட்டார். அவரவர் பார்வையைப் பொறுத்துதான் எதுவும் இருக்கிறது.

இன்னும் கூட வெளியூர்களில் டிக்கெட் கிடைக்காத அளவுக்கு நல்ல வசூலுடன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் மகிழ்ச்சியாக உள்ளார்.

நான் நடித்த படங்களிலேயே சிங்கம்தான் அதிகம் வசூல் ஈட்டியது. இப்போது அந்த வசூலை 7ஆம் அறிவு படம் பத்து நாட்களில் தாண்டி சாதனை படைத்துள்ளது. இதற்கு காரணமான இயக்குநர் முருகதாஸுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் கேரியரில் மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது ஏழாம் அறிவு.

தங்கர் பச்சான் சொன்னமாதிரி, குறையுள்ளவன்தான் மனிதன். அந்த மனிதன் படைத்த படைப்பிலும் குறைகள் நேர்வது சகஜம். அதைப் பொறுத்துக் கொண்டு ஆதரவளித்தால் மேலும் நல்ல படைப்புகள் தர உத்வேகம் பிறக்கும். நிச்சயம் இப்போது அனைவரும் சுட்டிக் காட்டியுள்ள குறைகளை அடுத்தபடத்தில் இல்லாத அளவுக்கு பார்த்துக் கொள்வேன்," என்றார்.

தொடர்ந்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும்:

ரஜினி, கமல் படம் பார்த்தார்களே என்ன சொன்னார்கள்...?

நாங்கள் இந்தப் படத்தை ரஜினி சாருக்கு போட்டுக் காட்ட விரும்பி, நேரில் அழைத்தோம். சார் உடனே பார்க்க வருவதாகச் சொன்னார். சொன்ன நேரத்துக்கு ஷார்ப்பாக வந்தார். படம் பார்த்துவிட்டு அவர் வெளியில் வரும்போது நிறைய கூட்டம். என்னைக் கட்டிப்பிடித்து கட்டிபிடித்து பென்டாஸ்டிக் என்று கூறி வாழ்த்தினார். ரொம்ப கடுமையான முயற்சி எடுத்து செய்துள்ளீர்கள் என்றார்.

கமல் சார் படம் பார்த்துக் கொண்டிருந்த போதே, பையன் ஃபுல் பார்ம்ல இருக்கான் என்று பாராட்டியதாக வைரமுத்து சார் சொன்னார். நான் கமல் சாரை நேரில் பார்த்தபோது, இது பற்றிக் கேட்டேன். அவர், உண்மையைச் சொன்னதாக கூறினார். அந்தப் பாராட்டு எனக்கு பெரிய கவுரவமாக இருந்தது.

சிவகுமார் பார்த்துவிட்டு என்ன கருத்து சொன்னார்?

பொதுவாக என் தந்தை என் நடிப்பைப் பற்றி எதுவும் என்னிடம் நேரில் சொன்னதில்லை. இப்போது நான் புது வீடு கட்டி வருகிறேன். இதனால் தற்காலிகமாக பெசன்ட் நகரில் வசிக்கிறேன். படம் பார்த்த உடன் என் தந்தை சிவகுமார் அந்த வீட்டுக்கு வந்தார். என்னை கட்டிப்பிடித்து கண்கலங்கினார். அது அப்பா எனக்கு கொடுத்த பெரிய பாராட்டு.

கமல் மகள் ஸ்ருதிக்கு உங்களை விட வலுவான கேரக்டர் என்பது தெரிந்தேதான் நடித்தீர்களா...

இந்தக் கதை ஆரம்பத்திலேயே எனக்கு சொல்லப்பட்டுவிட்டது. இதில் முக்கிய பாத்திரமான போதி தர்மனாக நடித்ததும் நான்தானே. இரண்டாம் பாகத்தில் ஸ்ருதிக்கு முக்கியத்துவம் இருந்தது. கதை அவர்மீதுதான் செல்லும். கதை அப்படி. ஆனால் ஒவ்வொரு கேரக்டருக்கும் என்ன தேவையோ அதை இயக்குனர் கொடுத்து இருக்கிறார் முருகதாஸ்.

இவ்வளவு வலுவான கேரக்டரை ஸ்ருதி சரியாகச் செய்தார் என்று கூற முடியுமா...?

அவருக்கு ஆரம்பப் படம் இது. அப்படிப் பார்த்தால், 13 ஆண்டுகளுக்கு முந்தைய நான்கூட மூட்டையைக் கட்டியிருக்க வேண்டும். இந்தப் படத்தில் ஸ்ருதி ஆர்வத்துடன் வேலை பார்த்தார். அவரது நடிப்பில் குறைகள் இருந்தாலும், முதல் படம் என்ற வகையில் அவரது ஆர்வமும் உழைப்பும் பாராட்டுக்குரியவை.

கமல் மகள் என்பதால் பயந்து நடித்தீர்களா?

கமல் சார் மகள் என்பதால் முதல் மூன்று நாட்கள் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. அவர் நடந்து வந்தாலே கமல்சார் வந்த மாதிரி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உணர்வுகளில் இருந்து மீண்டு வந்தேன். பின்னர் இயல்பாகிவிட்டோம்.

போதி தர்மரை ஏன் தமிழருக்கு தெரிய வேண்டும்? அவர் தமிழருக்கு எதுவுமே செய்யவில்லையே? அவரைப் பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?

நமக்கு என்ன செய்தார் என்று ஏன் பார்க்க வேண்டும்... உலகத்துக்கே பெரும் நன்மை செய்த ஒரு தமிழராயிற்றே. அப்படிப் பார்க்கலாமே!

போதி தர்மர் தமிழரே இல்லை என்கிறார்களே...

அவர் பல்லவ வம்ச இளவரசர். காஞ்சிபுரத்திலிருந்து போனவர். அப்படியென்றால் அவர் தமிழர்தானே. இதனை பல தமிழறிஞர்கள், ஆய்வாளர்களும் ஒப்புக் கொண்டு, அவர்தகள் ஆலோசனைப்படிதான் இயக்குநர் முருகதாஸ் படமாக்கினார். மேலும் விவரங்கள் வேண்டுமென்றால் முருகதாஸைத்தான் கேட்க வேண்டும்.

ஆனால் ஒன்று, கதைப்படி போதிதர்மரை சீனாவிலும், ஜப்பானிலும் தெய்வமாக கும்பிடுகிறார்கள். தற்கால தமிழ் இளைஞர்கள் சிந்தனை வேறு மாதிரி போகிறது. அவர்களை நமது பழைய கலாச்சாரத்துக்கு இழுத்து வர இப்படம் பயன்பட்டுள்ளது.

இலங்கையில் இந்தப் படத்தின் முக்கியமான வசனங்களை வெட்டிவிட்டார்களே. நீங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சேர்ந்ததா?

நாம் ஒரு விஷயத்தைச் சொல்கிறோம். அரசாஙக்கத்தை எதிர்த்து சண்டை போடவில்லை. இந்த வசனங்களை வெட்டினாலும் நாங்கள் சொல்ல நினைத்தது மக்களைச் சென்று சேர்ந்துவிட்டது.

வேலாயுதம் படம் பார்த்தீர்களா?

இல்லை. இன்னும் பார்க்கவில்லை.

உங்கள் படத்தை விஜய் பார்த்துவிட்டாரா?

தெரியவில்லை. அவர் மனைவிக்கு ஜோ படம் போட்டுக் காண்பித்தார்.

உங்கள் அடுத்த படம்?

மாற்றான். கே வி ஆனந்த் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தப் படம் ஆக்ஷன் பொழுதுபோக்கு வகை. ஏழாம் அறிவை விட பெரிய ரேஞ்சுக்கு இந்தப் படம் வரும் என நம்புகிறேன்.

சிங்கம் பாகம் 2 பற்றி...

பேசிக் கொண்டிருக்கிறோம். ஓரிரு வாரங்களில் உங்களுக்கு முழுமையான செய்தி வரும்.

மீண்டும் சரித்திரக் கதையில் நடிக்கும் எண்ணம் உள்ளதா?

சரித்திரக் கதைகள் என்று வரும்போது, நிறைய முயற்சி, காலம் தேவை. அதைவிட முக்கியம் வலுவான சரியான கதை அவசியம். என்னிடம் சமீபத்தில் ஒரு பிரபல இயக்குநர் 17-ம் நூற்றாண்டு கதையைச் சொன்னார். ரொம்ப அற்புதமாக இருந்தது அதன் முதல்பாதி. அடுத்த பகுதி ஸ்க்ரிப்ட் தயாராகிக் கொண்டிருக்கிறது. சரியாக வந்தால், அந்தப் படத்தையெடுக்க தயாரிப்பாளர் முன்வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

விஜய் ரசிகர் மன்றத்துக்கு கொடி இருப்பது போல் உங்கள் ரசிகர்களுக்கு கொடி கொடுப்பீர்களா?

ஏங்க... நல்லாதானே இருக்கு இப்ப. கொடி வைத்து ரசிகர் மன்றத்தை வளர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை!

-இவ்வாறு சூர்யா பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்தப் பேட்டியின் போது ஒரு நிருபர், நீங்களும் விஜய்யும் உங்கள் கதைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வதுண்டா என்று கேட்டார். உடனே சூர்யா.. இல்லையே.. ஏன்? என்றார்.

இல்ல.. வேலாயுதத்துல அவர் பாகிஸ்தான் தீவிரவாதி கூட சண்டை போடுகிறார், ஏழாம் அறிவில் நீங்கள் சீனாக்காரர்களுடன் சண்டை போடுகிறீர்கள். இதனால் பக்கத்து நாடுகளுடன் பெரும் பிரச்சினையாகிவிடும் போலிருக்கிறதே, என்று கூற வாய்விட்டுச் சிரித்தார் சூர்யா. இதனால் அரங்கமே சிரிப்பில் குலுங்கியது!
 

செல்போனில் படமெடுக்காதே, ஆட்டோகிராப் கேக்காதே: த்ரிஷா


தன்னை ஆசை, ஆசையாய் பார்க்க வரும் ரசிகர்களை தன்னை செல்போனில் படமெடுக்க த்ரிஷா அனுமதிப்பதில்லை.

நடிகை த்ரிஷாவைப் பார்க்கப் போனால் அவர் பல நிபந்தனைகள் போடுகிறார். அட நம்ம த்ரிஷா என்று அவரைப் பார்த்தும் அருகில் செல்லும் ரசிகர்களிடம் அவர் சொல்லும் முதல் வார்த்தை தயவு செய்து செல்போனில் படம் எடுக்காதீர்கள் என்பது தான். ஆசை, ஆசையாய் வந்தா இவங்க என்ன இப்படி பேசுறாங்களே என்று ரசிகர்கள் நொந்து கொள்கின்றனர்.

சரி படம் எடுக்கல. ரூபாய் நோட்டுல ஒரு ஆட்டோகிராப் போட்டுக் கொடுங்களேன் என்று கேட்டால் அதெல்லாம் முடியாது என்கிறாராம். சரி ஒரு பேப்பர்லயாவது ஆட்டோகிராப் போடுங்க என்றாலும் முடியாது என்று திட்டவட்டமாகச் சொல்கிறாராம். இது என்னப்பா இந்த த்ரிஷா இத்தனை பவுமானம் பண்ணுது என்று ரசிகர்கள் முணுமுணுக்கின்றனர்.

செல்போனில் படம்பிடித்துச் சென்று அதை வைத்து ஏதாவது பிரச்சனையைக் கிளப்பிவிட்டுட்டாங்கன்னா என்ன செய்வது என்று த்ரிஷா பயப்படுகிறார் போலும். அது சரி சும்மாவே த்ரிஷா பெயர் எதுலயாவது அடிபடுவதால் அவர் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்கிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டியது தான்.
 

கொடி வைத்து ரசிகர் மன்றம் வைக்க அவசியமில்லை : சூர்யா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'7ஆம் அறிவு' படம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடந்தது. அப்போது நடிகர் சூர்யா கூறியதாவது: நடிக்க வந்து 13 வருடங்களாகி விட்டது. என் படத்துக்கான வியாபார எல்லையை '7 ஆம் அறிவு' மூலம் உணர்ந்து பிரமித்தேன். இப்படம் தொடர்பான இரு தரப்பு விமர்சனங்களையும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் பார்க்கிறேன். படம் பெரிய வெற்றி பெற்றது குறித்து சந்தோஷம். உலகமே வியக்கும் வகையில் ஒரு படைப்பை வழங்கியிருக்கிறோம். போதி தர்மர் தமிழரா இல்லையா என்று கேட்கிறார்கள். அதுபற்றி விவாதிக்க விரும்பவில்லை. நன்கு ஆராய்ந்த பிறகுதான் அவரை பற்றிய சம்பவங்களை படமாக்கி இருக்கிறோம். விளம்பரத்துக்காக அவரை நாங்கள் பயன்படுத்தவில்லை. உலகில் வாழும் எல்லா தமிழர்களும் ஒன்றுதான். அவர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டும். அனுதாபப்பட வேண்டும். மலேசியா, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் '7 ஆம் அறிவு'க்கு அமோக ஆதரவு அளித்துள்ளனர். அடுத்து கே.வி. ஆனந்த் இயக்கும் 'மாற்றான்' படத்தில் நடிக்கிறேன். இதுவரை எந்த நடிகருக்கும் கிடைக்காத கேரக்டர் இது. ஒவ்வொரு படத்திலும் புதுப்புது முயற்சிகள் செய்ய துடிக்கிறேன். கொடி வைத்து ரசிகர் மன்றம் வளர்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.  இவ்வாறு சூர்யா கூறினார்.