காஜல் சொதப்பலோ சொதப்பல்... தாமதமாகும் பெரிய படங்கள்!

Maatran Thupakki Delayed Due Kaja   

காஜல் அகர்வாலின் கால்ஷீட் சொதப்பலால் விஜய், சூர்யா ஆகியோரின் பெரிய படங்கள் தாமதமாகின்றன.

பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட காஜலை தமிழில் ஆரம்பத்தில் கண்டு கொள்ளவே இல்லை. பின்னர், தெலுங்குப் படம் மகதீராவின் வெற்றி அவரை டாப்புக்கு கொண்டு போய்விட்டது.

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்கள் விரும்பும் நாயகிகளில் ஒருவராகிவிட்டார்.

காஜல்அகர்வால் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக மாற்றான், விஜய் ஜோடியாக துப்பாக்கி இவை தவிர மேலும் இரண்டு தெலுங்கு படங்கள் என நான்கு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார்.

இப்படி பிய்த்து பிய்த்து கால்ஷீட்டை கொடுத்துவிட்டதால், எந்தப் படத்திலும் அவரால் முழுமையாக நடிக்கமுடியவில்லை.

இதனால் மாற்றான் படத்தில் பாடல் காட்சியில் அவரால் நடிக்க முடியவில்லை. இதே போல துப்பாக்கி படத்துக்கும் இரு பாடல் காட்சிகள் பாக்கி உள்ளனவாம். தெலுங்கு படங்களில் நடிப்பதால் அவரால் இந்த பாடல் காட்சிகளை முடித்து கொடுக்க முடியவில்லை.

இப்படி இரு பெரிய படங்களின் வெளியீட்டில் ஏற்பட்டுள்ள தாமதத்துக்கு காஜல் காரணமாகிவிட்டதால், சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் கடுப்பில் உள்ளார்களாம்!

 

விவாகரத்துக்குப் பின் மீண்டும் நடிக்க வரும் ஜோதிர்மயி!

Jyothimayi Wants Comeback After Div

கணவரை விவாகரத்து செய்துவிட்ட நடிகை ஜோதிர்மயி மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழில் தலைநகரம், பெரியார், நான் அவனில்லை என சில படங்களில் நடித்தார் ஜோதிர்மயி. அவர் தலைநகரம் படத்தில் நடிக்கும் முன்பே, 2004-ல் ஹரிகுமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் கோலிவுட்டில் ஆது யாருக்கும் தெரியாமல் இருந்தது.

ஆனால் படம் வெளியான பிறகு நடந்த பிரஸ்மீட்டில் அவராகவே சொல்லிவிட, அப்போதே அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

ஹரிகுமார் - ஜோதிர்மயி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து வழக்கு தொடர்ந்தார்கள்.

கடந்த வருடம் அவர்களுக்கு விவாகரத்து கிடைத்தது. விவாரத்துக்குப் பின் சினிமாவை விட்டு சில மாதங்கள் ஒதுங்கி இருந்த ஜோதிர்மயி, தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் அக்காள், அண்ணி வேடங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறதாம். கதை கேட்டு வருகிறார். இதற்கிடையில் மலையாள டி.வி. சேனல் ஒன்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்புக் கொண்டுள்ளார்.

 

சஞ்சய் தத்துடன் ஜோடி சேர மறுத்த த்ரிஷா!

Trisha Says No Saamy Remake   

சாமி இந்தி ரீமேக்கில் சஞ்சய் தத்துக்கு ஜோடியாக நடிக்க மறுத்துவிட்டார் நடிகை த்ரிஷா.

விக்ரம், திரிஷா ஜோடியாக நடித்து வெற்றிகரமாக ஓடிய சாமி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் கே.எஸ். ரவிக்குமார்.

இதில் விக்ரம் கேரக்டரில் சஞ்சய்தத் நடிக்கிறார். கதாநாயகியாக மீண்டும் திரிஷாவையே நடிக்க வைக்க ரவிக்குமார் விரும்பினார். இதற்காக திரிஷாவை அணுகி கால்ஷீட் கேட்டார். ஆனால் சஞ்சய்தத்துடன் நடிக்க அவர் மறுத்து விட்டார்.

இதுகுறித்து த்ரிஷா கூறுகையில், "சாமி இந்தி ரீமேக்கில் என்னை நடிக்க கேட்டது உண்மைதான். ஆனால் நான்தான் மறுத்துவிட்டேன்.

காரணம் ஏற்கெனவே 3 தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளேன். வேறு படங்களில் நடிப்பதற்கு என்னிடம் கால்ஷீட் இல்லை. இந்தி சாமி படத்தில் நடிப்பதற்காக ஆகஸ்டு மாதம் வரை என்னிடம் தேதி ஒதுக்கித் தருமாறு கேட்டனர். அதனால்தான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்," என்றார்.

திரிஷா மறுத்ததால் அவர் கேரக்டரில் நடிக்க பிராச்சி தேசாயை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

 

தங்களுடன் பேசுவதற்குத் துடிக்கும் டெமி மூருக்கு தடை விதிக்க மகள்கள் முடிவு?

Demi Moore S Daughters Get Restrain

இமெயில் அனுப்பியும், மெசேஜ் அனுப்பியும் தன்னுடன் பேசுமாறு தொடர்ந்து அணத்தி வரும் தங்களது தாய் டெமி மூர், தங்களுடன் பேசுவதற்கு சட்டப் பூர்வமான தடை உத்தரவை வாங்க அவரது மூன்று மகள்களும் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஹாலிவுட்டின் முன்னாள் கனவுக் கன்னி டெமி மூர் இப்போது பெரும் சோகத்தில் இருக்கிறார். அவருக்கு மொத்தம் மூன்று கணவர்கள். முதல் கணவர் பெயர் பிரெடி மூர். இவருடன் சிறிது காலம் வாழ்க்கை நடத்திய பின்னர் ஹாலிவுட் நடிகர் ப்ரூஸ் வில்லிஸை மணந்தார் டெமி மூர். இந்த வாழக்கை நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.

ப்ரூஸ் வில்லிஸ் மூலம் ரூமர் வில்லிஸ், ஸ்கவுட் வில்லிஸ், தலுவா வில்லிஸ் என மூன்று மகள்களைப் பெற்றெடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ப்ரூஸை விவாகரத்து செய்தார் டெமி. பின்னர் மூன்று வருடம் நடிகர் ஆஷ்டன் கச்சருடன் டேட்டிங் பண்ணிங் கொண்டிருந்தார். பிறகு அவரை மணந்தார். ஆனால் இதுவும் கூட வெற்றிகரமாகத் திகழவில்லை.

இதனால் மனம் நொந்த நிலையில் இருக்கும் டெமி மூர் தனது மகள்களுடன் மீண்டும் தொடர்பு வைத்துக் கொள்ள முயன்று வருகிறார். ஆனால் மகள்களோ, தாயுடன் பேசுவதை விரும்பவில்லை. இதனால் தொடர்பு கொள்ள மறுத்து வருகின்றனர்.

இருந்தாலும் விடாமல் தொலைபேசி மூலமும், எஸ்எம்எஸ் மூலமும், இமெயில் மூலமும் தனது மகள்களைத் தொடர்பு கொண்டு என்னோடு பேசுங்கள் என்று கெஞ்சி வருகிறார் டெமி மூர். ஆனாலும் மகள்கள் இறங்கி வருவதாகத் தெரியவில்லை.

இந்த நிலையில் தங்களது தாயாரின் இந்த கெஞ்சலை தொல்லையாக கருதும் மூன்று மகள்களும், டெமி மூர் தொடர்ந்து தங்களைத் தொடர்பு கொள்ள தடை விதிக்கக் கோரி சட்டப்பூர்வமான உத்தரவைப் பெற முடிவு செய்துள்ளனராம்.

இதை அறிந்து டெமி மூர் மேலும் சோகமடைந்துள்ளாராம். மகள்களுடன் எப்படியாவது பேசி விட வேண்டும் என்று தொடர்ந்தும் முயற்சித்தபடி இருக்கிறாராம்.

பெத்த மனசாச்சே... ஹாலிவுட்டாக இருந்தாலும் பதறத்தானே செய்யும்!

 

80000 பேருக்கு முன் பிராவை விலக்கி.... பேன்டீஸை இறக்கி...! - மடோனாவின் 'ஓல்ட் டெக்னிக்!'

Now Madonna Flashes Her Left Breast

பிரான்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாப் பாடகி மடோனா தன் உள்ளாடைகளை விலக்கி, ரசிகர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்றியது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பிரபல பாப் பாடகி மடோனோ தன் மகளுடன் உலக இசைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்தமாதம் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் இஸ்தான்புல் நகரில் இசைக்கச்சேரி நடத்தியபோது, மேடையில் மிகக் கவர்ச்சியாக தோன்றினார் (அம்மணிக்கு வயசு 53!). 55000 ரசிகர்கள் முன்னிலையில் அவர் தனது வலப்பக்க பிராவை லேசாக இறக்கி முன்னழகைக் காட்டி அதிர வைத்தார்.

இது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் கிளப்பியது.

இந்த சர்ச்சை ஓயும் முன்பே, மீண்டும் ஒரு படி கீழிறங்கிவிட்டார் மடோனா.

கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு 80000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

மேடையில் பேய் வேகத்தில் ஆட்டம் போட்ட மடோனா, ரொம்ப கூலாக தனது இடது பக்க பிராவை விலக்கி முன்னழகை முழுசாகக் காட்ட, ரசிகர்கள் திக்குமுக்காடினர். அடுத்து அவர்களை இன்னும் அதிர வைக்கும் விதத்தில் தனது பேன்டின் பக்கவாட்டு ஜிப்பை சரக்கென்று இழுக்க, அது கீழே இறங்கி அவரது மெல்லிய பேன்டீஸைக் காட்டியது. சில நொடிகள் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தரிசனம் தந்தார்.

அப்படியே பின்பக்கம் திரும்பி கொஞ்ச நேரம் நின்றார். முதுகில் நோ பியர் என்று வேறு எழுதப்பட்டிருந்தது.

மடோனா இப்படி நடந்து கொள்வது புதிதல்ல. அவர் ஏற்கெனவே 1995-ல் மேடையில் ஒரு கச்சேரியின்போது சட்டென்று நிர்வாணமாகி அதிர்ச்சி கொடுத்தார்.

மடோனாவின் இந்த செயலை பத்திரிகை மற்றும் பார்வையாளர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

அதேநேரம் சில ரசிகர்கள் 'சூப்பர்ப் ஸீன்' என்று கொண்டாடவும் தவறவில்லை!

 

காலங்கார்த்தாலே... 'பிகினி மார்னிங்' சொன்ன பூனம் மற்றும் கிம் கர்தஷியான்!

Kim Kardashian Poonam Pandey Wish Bikini Morning    | கிம் கர்தஷியான்  

பூனம் பாண்டேவுக்கும், கிம் கர்தஷியானுக்கும் இடையே எது எதில் எல்லாம் ஒற்றுமை இருக்கிறது என்று கேட்டால் ஆண் ரசிகர்கள் பெரிய பட்டியலையே போடுவார்கள். அது பெரிய்ய்ய லிஸ்ட். ஆனால் இன்று காலை இருவருக்கும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது... இருவரும் அட்டகாசமான நீச்சல் உடையில் குட்மார்னிங் சொல்லி ஒரு போட்டோவை டிவிட்டரில் வெளியிட்டிருந்தனர்.

சர்வதேச அளவில் சதைப் பற்றான நடிகை கிம் கர்தஷியான் என்றால், இந்திய அளவில் களேபரமான கவர்ச்சிக்குரிய மாடல் அழகி பூனம் பாண்டே. இருவருக்கும் கவர்ச்சியே பிரதானத் தொழில்.

இருவரும் சர்ச்சையில் சிக்காத நாள் இல்லை, தங்களது கவர்ச்சியைக் காட்டாத நேரமில்லை.

இந்த நிலையில் இன்று காலை இருவரும் தங்களது முதல் டிவிட்டர் செய்தியில் குட்மார்னிங் சொல்லியிருந்தனர். அதில் தங்களது கவர்ச்சிகரமான பிகினி உடை போட்டோவையும் இணைத்திருந்தனர்.

கருப்பு நிற பிகினி உடையில் படகு மீது உட்கார்ந்தபடி காட்சி தரும் கிம், குட்மார்னிங் மியாமி என்று செய்தி வெளியிட்டிருந்தார். போட்டோவில் அவரது கவர்ச்சி பாகங்கள் அனைத்தும் பொலிவுடன் காணப்படுகின்றன.

அதேபோல பூனம் பாண்டே வெளியிட்டிருந்த டிவிட்டரில் அவரும் ஒரு நீச்சல் உடை போட்டோவை போட்டிருந்தார். சூரிய ஒளிக்கு தனது முன்புறத்தின் ஒரு பகுதியையும், பின்புறத்தின் முக்கால் பகுதியையும் காட்டியபடி நிற்பது போல உள்ளது பூனத்தின் புகைப்படம்.

கிம்முக்கு கருப்பு நிற பிகினி என்றால் பூனம் பாண்டே வெள்ளை நிற பிகினியில் ஜிலுஜிலுவென காட்சி தருகிறார்.

ஒரே நாளில் இத்தனை சூடா...!

 

ஜஸ்ட் ஆறே படங்கள்... கார்த்தி சம்பளம் ரூ 14 கோடி!

Producers Now Ready Pay Morethan Rs 14 Cr To Karthi

ஆறே ஆறு படங்கள்தான் நடித்திருக்கிறார்... அதிலும கடைசி படம் பெரிய வெற்றி என்று கூட சொல்ல முடியாது. ஆனால் இன்று அவர் வாங்கும் சம்பளம் படத்துக்கு ரூ 14 கோடிக்கு கிர்ரென்று உயர்ந்திருக்கிறது.

இது கிட்டத்தட்ட விஜய், அஜீத், சூர்யாவுக்கு இணையானதாகும்.

'பருத்தி வீரன்', 'ஆயிரத்தில் ஒருவன்', 'நான் மகான் அல்ல', 'பையா', 'சிறுத்தை', 'சகுனி' ஆகிய 6 படங்கள்தான் கார்த்தி நடித்தவை.

இவற்றில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் சகுனி பாக்ஸ் ஆபீஸில் சுமாராகப் போயின. பருத்தி வீரன் க்ளாஸிக் என்ற அந்தஸ்தைப் பெற்றது. நான் மகான் அல்ல நல்ல பெயரைக் கொடுத்தது.

சிறுத்தை ஒரு ரீமேக். ஆனாலும் நல்ல வசூல். கடைசியாக வந்த சகுனிக்கு நல்ல ஓபனிங். ஆனாலும் எதிர்ப்பார்த்த மாதிரி படம் இல்லாததால், அந்த ஓபனிங்கை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை.

அடுத்து அலெக்ஸ் பாண்டியன், பிரியாணி என பெரிய படங்களைக் கையில் வைத்துள்ள கார்த்திக்கிடம் அடுத்த பட கால்ஷீட்டுக்கு ரூ 14 கோடி பேசியுள்ளாராம் ஒரு தயாரிப்பாளர். கார்த்திக் மேலும் யோசித்தால், மேலும் ஒரு கோடி தரவும் தயார் என்கிறாராம்.

விஜய், அஜீத், சூர்யா போன்றோர் பல படங்களில் நடித்த பிறகுதான் ரூ 10 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அலெக்ஸ் பாண்டியனுக்குப் பிறகு இந்த சம்பளம் ரூ 20 கோடியில் போய் நின்றாலும் ஆச்சர்யமில்லை என்கிறார்கள்.

 

காதல் பாடல்களின் மன்னன்.. பி.பி.ஸ்ரீனிவாஸ்

Evergreen Singer P B Srinivas

ரோஜா மலரே ராஜகுமாரி... காலங்களில் அவள் வசந்தம்.... என காலத்தால் அழியாத பாடல்களை பாடி நாற்பது ஆண்டுகாலமாக இசை உலகில் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருப்பவர் திரை இசை பின்னணிப் பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ். அவரது தன்னுடைய கடந்தகால வாழ்க்கையைப் பற்றி சன் டிவியின் பாட்டு தர்பார் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

காதல் மன்னன் ஜெமினிகணேசனுக்கு அதிக அளவில் பாடல்களை பாடியுள்ள பி.பி.ஸ்ரீனிவாஸ், காதல் என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் மனித வாழ்க்கையே வீண் என்று கூறினார். அதனால்தான் காலத்தால் அழியாத பல பாடல்களை தன்னால் பாட முடிந்தது என்று கூறினார்.

‘காலங்களில் அவள் வசந்தம்' .... என்ற பாடல்தான் தன்னுடைய வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்திய பாடல் என்று கூறிய அவர் தனது எவர்கிரீன் பாடல்களை இன்றைக்கும் மாறாத காதலோ பாடிக்காட்டினார். இசைப்பயணத்தில் தனக்கு உதவி செய்தவர்களை தினந்தோறும் நினைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக கூறினார். ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை தான் என்றைக்கும் மறப்பதில்லை என்றும் அவர் கூறினார்.

பிளாக் அன்ட் ஒயிட் சினிமா காலத்தில் எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற ஜாம்பவான் நடிகர்களுக்கு பாடிய அவர் அதிகம் பாடியது ஜெமினிகாணேசனுக்குத்தான். ஜெமினிகணேசன் படம் என்றாலே பி.வி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல்கள்தான் இடம் பெற்றிருக்கும்.

சட்டைப்பாக்கெட்டில் வரிசையாய் பேனாக்களை வைத்திருந்த ஸ்ரீனிவாஸ் அவர்கள் அதற்கு சொன்ன விளக்கம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பிபிஎஸ் ( PBS) என்று என்னை சுருக்கமாக கூப்பிடுவார்கள். அதற்கு பிளேபேக் சிங்கர் என்று ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் நான் pens, books, stocks என்று ஒரு அர்த்தம் கூறுவேன் என்று தெரிவித்தார். அந்த அளவிற்கு பேனாக்களின் மீது புத்தகங்களின் மீதும் தனக்குள்ள நேசத்தை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சி வரும் வாரமும் ஒளிபரப்பாக இருக்கிறது. கடந்த வாரம் சன் டிவியில் அந்த நிகழ்ச்சியை தவறவிட்டவர்கள் இன்றைக்கு இரவு 9 மணிக்கு ஜெயா டிவியில் ஆட்டோகிராப் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களை சந்திக்க வருகிறார் மெல்லிசை பாடகர் பி.பி. ஸ்ரீனிவாஸ். இசை ரசிகர்கள் மறக்காமல் கண்டு ரசிக்கலாம்.

 

கல்யாண் ஜூவல்லர்ஸ் 'புரட்சிப் போராட்ட' தூதரானார் அமிதாப்!

Amitabh Is Kalyan Jwellers Brand Ambassador

புரட்சி, போராட்டம் என கல்யாண் ஜூவல்லர்ஸ் நகைக்கடை விளம்பரத்தில் தனி ஆளாக முழங்கிக் கொண்டிருந்த பிரபுவுக்கு, பெரிய துணை கிடைத்திருக்கிறது. அவர் அமிதாப்!

ஆம்... தங்களின் விளம்பரத் தூதராக அமிதாப் பச்சனை ஒப்பந்தம் செய்துள்ளனர் இந்த நகைக்கடை நிறுவனத்தினர்.

இந்த நிதியாண்டுக்குள் இந்தியா முழுவதும் 65 புதிய கிளைகளை நிறுவ முடிவு செய்துள்ளதால், கடையை வட இந்தியாவில் பிரபலப்படுத்த இந்த முடிவாம்.

இப்போது தென் மாநிலங்களில் மட்டும் 35 கிளை நிறுவனங்களை நிறுவியுள்ளது இந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிளையை உருவாக்குவதற்கு 2 முதல் 3 கோடி வரை செலவிடுகிறது.

மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் அடுத்தடுத்த கிளைகளை உருவாக்கப் போகிறார்களாம். தலைநகர் டெல்லி மற்றும் நாட்டின் கிழக்கு நகரமான கொல்கத்தாவிலும் பெரிய கிளைகள் திறக்கும் திட்டம் உள்ளதாம்.

 

படம் தயாரிக்கிறார் சந்தானம்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹீரோவாக நடிக்கும் படத்தை சொந்தமாக தயாரிக்கிறார் சந்தானம். முன்னணி ஹீரோக்கள் சொந்த பட நிறுவனம் தொடங்கி நடிக்கின்றனர். அந்த வரிசையில் காமெடி நடிகர் சந்தானம் தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இப்படத்தை மணிகண்டன் இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: நூறு படங்களுக்கு மேல் இயக்கி சாதனை படைத்த ராம.நாராயணனுடன் இணைந்து சந்தானம் தயாரிக்கும் படம் 'கண்ணா லட்டு தின்ன ஆசையாÕ. நகைச்சுவையும், நட்பின் பெருமையையும் விளக்கும் கதை. காமெடி பட வரிசையில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கும். விசாகா ஹீரோயின். டாக்டர் சீனிவாசன், பட்டிமன்றம் ராஜா, கோவை சரளா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை தமன். ஒளிப்பதிவு கே.பாலசுப்ரமணியன். இதன் படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கி காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை ஆகிய இடங்களில் நடக்கிறது. இவ்வாறு மணிகண்டன் கூறினார்.



 

துப்பாக்கி படத்துக்கு தடை நீங்குமா?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
நடிகர் விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கக் கோரி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார். விருகம்பாக்கத்தை சேர்ந்த நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க்ஸ் பேக்டரி உரிமையாளர் சி.ரவி என்ற கே.சி. ரவிதேவன் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்é கடந்த 2009ம் ஆண்டு கள்ளத்துப்பாக்கி என்ற பெயரை தென்னிந்திய பிலிம்சேம்பரில் பதிவு செய்தேன்.

இந்நிலையில், துப்பாக்கி என்ற பெயரில் கலைப்புலி தாணு, திரைப்படம் தயாரிக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு துப்பாக்கி என்று பெயர் சூட்டியுள்ளனர். அந்த படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரையும், துப்பாக்கி லோகோவையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்� என்று கூறியுள்ளார். இதை விசாரித்த 2வது சிட்டி சிவில் நீதிமன்றம் துப்பாக்கி என்ற பெயரைப் பயன்படுத்த கலைப்புலி தாணுவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

இதையடுத்து, இந்த தடையை நீக்கக் கோரி கலைப்புலி தாணு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்த மனு: துப்பாக்கிக்கும், கள்ளத்துப்பாக்கிக்கும் வேறுபாடு உள்ளது. துப்பாக்கி என்ற பொதுவான பொருளின் படத்துக்கு (லோகோ) யாரும் உரிமை கொண்டாட முடியாது. ஆதி என்ற பெயரில் திரைப்படம் எடுத்தபின்னர் ஆதி சிவன், ஆதிவாசி என்ற வேறு பெயர்களிலும், சிங்கம் என்ற பெயர் சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன் என்ற வேறு பெயர்களிலும், ஈ என்ற பெயர் நான் ஈ, நெருப்பு ஈ என்ற வேறு பெயர்களிலும் திரைப்படமாக தயாரிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கி என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தனிப்பட்ட எவரும் உரிமை கோர முடியாது. எனவே தடையை நீக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு 2வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.


 

'துப்பாக்கி வேறு... கள்ளத்துப்பாக்கி வேறு... தடையை நீக்குங்கள்' - தாணு கோரிக்கை

Thaanu Files Petition Revoke Ban On   

சென்னை: விஜய் நடிக்கும் 'துப்பாக்கி' படத்தின் தலைப்புக்கு விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மனு தாக்கல் செய்துள்ளார்.

நார்த் ஈஸ்ட் பிலிம் ஒர்க் நிறுவனம் என்ற நிறுவனம் கள்ளத்துப்பாக்கி என்ற பெயரில் படம் தயாரித்து வருகிறது.

2009-ம் ஆண்டே இந்தப் படத்துக்கு தலைப்பை பதிவு செய்திருந்தனர். இந்த நிலையில் விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு இந்த ஆண்டு துப்பாக்கி என்று பெயர் சூட்டினர்.

இதைத் தொடர்ந்து சென்னை 2-வது உதவி சிட்டி சிவில் கள்ளத்துப்பாக்கி பட தயாரிப்பாளர்கள், 'விதிமுறைகளை மீறி, நான் பதிவு செய்த கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பின் பின் பகுதியான துப்பாக்கி என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். இந்த தலைப்புக்கு தடை விதிக்க வேண்டும்' என்று கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருமகள், துப்பாக்கி என்ற தலைப்பில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து கடந்த ஜுன் 27-ந் தேதி உத்தரவிட்டார்.

இந்தநிலையில், தடையை நீக்கக்கோரி சிட்டி சிவில் கோர்ட்டில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், "தலைப்பின் பின்பகுதி அல்லது முன்பகுதியை பிறர் பயன்படுத்தக்கூடாது என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது. சிங்கம், ஈ, சிறுத்தை ஆகிய படங்கள் வெளியானது. சிங்கம்புலி, சிங்கமுகம், சிங்கமகன், நான் ஈ, நெருப்பு ஈ, சிறுத்தைபுலி என்ற படங்கள் வெளியாகியுள்ளன. இதுபோல் ஏராளமான உதாரணங்களை கூறலாம்.

மனுதாரர் கள்ளத்துப்பாக்கி என்றும், நான் துப்பாக்கி என்றும் பதிவு செய்துள்ளோம். இதில் கள்ளத்துப்பாக்கி என்றால், உரிமம் பெறாத துப்பாக்கி என்று அர்த்தம். எனவே தலைப்பில்கூட அர்த்தம் வித்தியாசப்படுகிறது. மனுதாரர் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே துப்பாக்கி என்ற தலைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது.

 

சினிமாதான் என் லட்சியம்: நடிகர் சேத்தன்

Cinnima Industry Is My Aim Sethan

விடாது கருப்பு தொடரில் அப்பாவி இளைஞனாய் அறிமுகம் ஆகி உதிரிப்பூக்கள் தொடர் மூலம் எண்ணற்ற பெண் ரசிகைகளை தக்கவைத்துக்கொண்டிருப்பவர் நடிகர் சேத்தன். இப்போது மாலை 6.30 மணியாகிவிட்டாலே உதிரிப்பூக்கள் சீரியல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு காரணம் சேத்தனின் எதார்த்தமான நடிப்புதான். அந்தத்தொடரில் தனது ஆழமான நடிப்புத்திறனை வெளிப்படுத்தியதின் மூலம் பெண் ரசிகைகளின் பேராதரவிற்கு உரியவராகிவிட்டார் சேத்தன். தனது சின்னத்திரை பயணம் குறித்தும், நீண்டநாள் லட்சியம் குறித்தும் நம்மிடையே அவர் பகிர்ந்து கொண்டார்.

பிஸினஸ் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு விற்பனை பிரதிநிதியாய் வாழ்க்கையை தொடங்கினேன். சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற ஆர்வமே என்னை இங்கு கொண்டுவந்திருக்கிறது. மின்பிம்பங்கள் நிறுவனத்திற்கு என்னுடைய பயோடேட்டாவை அனுப்பினேன். மர்மதேசம் தொடரில் கருப்பு கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுவே எனக்கு திருப்பு முனையாக அமைந்தது.

நல்ல கேரக்டராக இருந்தாலும் சரி, நெகட்டிவ்வான கேரக்டராக இருந்தாலும் சரி. நமக்குக் கிடைக்கும் புகழ் எல்லாமே அந்த கேரக்டருக்குக் கிடைக்கும் மரியாதைதான். டிவி எப்பவும் பெண்கள் மீடியம். அதில் நல்ல கேரக்டர்களில் நடித்தால் போதும், பெண்களுக்கு நிச்சயம் பிடித்துவிடும். எனக்கு நடிப்பதற்கு அப்படிப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. எனக்குக் கிடைத்த வாய்ப்புகளை நானும் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டேன்.

நானும் என் மனைவி தேவதர்ஷினியும் ஒரே மீடியாவில் இருப்பது எங்களுக்கு சவுகரியானமான விசயமாக இருக்கிறது. வெவ்வேறு தொடர்களில் நடித்தாலும் ஒரே தொடரில் நடித்தாலும் ப்ளஸ்தான். உழைப்புக்கு உழைப்பு. வருமானத்திற்கு வருமானம். ஒரே தொடரில் நடிக்கும் போது, அதிக நேரம் ஒன்றாக இருக்கிறோம். நிறைய விஷயங்களை பேசிக்க முடியும்.

என்னுடைய சினிமா ஆசை இப்பொழுதுதான் நிறைவேற ஆரம்பித்திருக்கிறது. சீரியலில் நடிக்க ஆரம்பித்து பிஸியாகிவிட்டேன். அதனால் சினிமாவில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை. பத்து வருஷம் ஆகிவிட்டது. மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறேன். ஏனென்றால் அதுதான் என்னுடைய கனவு! இப்போது ‘பூக்கடை ரவி' என்ற படத்தில் என்-கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டா நடிச்சிருக்கேன். ‘முத்திரை' படத்தில் லீகல் அட்வைஸரா நடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு படங்களின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை. இப்போதைக்கு நிறைய படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்துகிறேன்.

சினிமா இயக்குவதற்கான முயற்சியும் இருக்கு. யோசனைகளும் இருக்கு. நான் சின்னத் திரையிலிருந்து வருவதால் எப்படிப்பட்ட படத்தைத் தருவேன் என்கிற எதிர்பார்ப்பு நிச்சயம் அனைவருக்கும் இருக்கும். நிச்சயமாக இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படமாகத்தான் அது இருக்கும். ஆனால் வழக்கமான படமாக இருக்காது. தனியாகத் தெரியும் வகையில் இருக்கும் என்று நம்பிக்கையுடன் கூறினார் சேத்தான். வாழ்த்துக்கள் கூறி விடை கொடுத்தோம்.

 

முகமூடி ஆடியோவை வெளியிடும் விஜய் - புனித் ராஜ்குமார்!

Puneet Rajkumar Is The Chief Guest

முகமூடி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் ஜூலை 20-ம் தேதி சென்னையில் நடக்கிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார்.

ஜீவா, பூஜா ஹெக்டே, நாசர், செல்வா, கிரீஷ் கர்னாட் நடிக்க, மிஷ்கின் இயக்கியுள்ள படம் முகமூடி. சமீபத்தில் இந்தப் படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஸ்பைடர்மேன், பேட்மேன் மாதிரி தமிழில் உருவாகும் முழுநீள சூப்பர் ஹீரோ கதை இது.

படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை 20-ம் தேதி சென்னை சத்யம் சினிமாஸில் நடக்கும் இந்த விழாவில், கன்னடத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான புனித் ராஜ்குமார் பங்கேற்கிறார். முகமூடி ஆடியோ சிடியை நடிகர் விஜய் வெளியிட, புனித் ராஜ்குமார் பெற்றுக் கொள்கிறார்.

புனித் ராஜ்குமார் குடும்பத்துக்கு சென்னையில் பங்களாவே உள்ளது. இங்கே சில காலம் தங்கியும் இருக்கிறார் புனித். ஆனால் தமிழ் சினிமா விழாவில் அவர் பங்கேற்பது, அநேகமாக இதுதான் முதல்முறையாக இருக்கும்.

சமீபத்தில் புனித் ராஜ்குமாரின் ஜாக்கி, அன்னா பாண்ட் போன்ற படங்கள் சென்னையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

 

ஒரு வெற்றிக்குப் பிறகு சறுக்கும் சினிமாவில் தொடர் வெற்றி எப்படி சாத்தியம்... - ஹரி சொல்லும் ரகசியம்!

Director Hari Secret Success

பொதுவாக சினிமாவில் முதல் படம் ஜெயித்தால், அந்த வெற்றியின் கனம் தாங்காமல், மதுவிலும் அழகிய பெண்களின் மடியிலும் கவிழ்ந்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த கண்டங்களில் தப்பும் மிகச் சிலர் மட்டும் தொடர் வெற்றிகளைக் கொடுத்து வருகின்றனர்.

அவர்களில் ஒருவர் ஹரி. அவர் படங்கள் மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவர் மீது எந்த விமர்சனமும் இருக்காது. மனிதர் பக்கா டிஸிப்ளின்!

தமிழ் என்ற படத்தில் ஆரம்பித்து, சிங்கம் வரை அடுத்தடுத்து வெற்றிப் படங்கள்தான். சறுக்கியது ஒரே ஒரு படம்... அது சேவல்.

சிங்கம் படம் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானாலும், வசூலில் பெரும் சாதனைப் படைத்தது. இப்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது, சிங்கம் -2 என்ற தலைப்பில்.

சூர்யா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள்.

பிரகாஷ்ராஜ் தவிர, `சிங்கம்' படத்தில் நடித்த அத்தனை நடிகர்-நடிகைகளும் நடிக்கிறார்கள், ஹரி இயக்குகிறார்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் ஹரி கூறுகையில், "சிங்கம் கதையின் தொடர்ச்சியாகவே 'சிங்கம்-2' படம் தயாராகிறது. சூர்யா 2 வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். அனுஷ்கா தொழில் அதிபரின் மகளாகவும், ஹன்சிகா கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். விவேக் முக்கிய வேடத்தில் வருவார்.

'சிங்கம்' படத்தில் நடித்த மனோரமாவும் இரண்டாம் பாகத்தில் பங்கு பெறுகிறார். அவர் இப்போது பூரண குணம் அடைந்து விட்டார். உடல் நலம் தேறியபின், அவர் நடிக்கும் படம் இதுதான்.

மும்பையை சேர்ந்த முகேஷ் ரிஷியும், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

தூத்துக்குடி பின்னணியில் கதை நடப்பதால், பெரும்பகுதி படப்பிடிப்பு அங்கு நடைபெற இருக்கிறது. உச்சக்கட்ட காட்சி, தென் ஆப்பிரிக்காவில் படமாக்கப்படுகிறது.

வெற்றி ரகசியம் என்ன?

சாமி, ஆறு, சிங்கம் என தொடர்ந்து வெற்றி படம் கொடுப்பது எப்படி? என்று என்னிடம் நிறைய பேர் கேட்கிறார்கள். அதற்கு என் மனைவியும் ஒரு காரணம். எனக்கும், ப்ரீதாவுக்கும் திருமணமாகி 10 வருடங்கள் ஆகிவிட்டன. மூன்று மகன்கள் இருக்கிறார்கள்.

குடும்பத்தையும், குழந்தைகளையும் ப்ரீதா கவனித்துக்கொள்வதால்தான் தொழிலில் என்னால் முழுமையாக கவனம் செலுத்த முடிகிறது. எங்க வீட்டில் குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டுவதில் இருந்து படிப்பு சொல்லிக்கொடுப்பது வரை எல்லாமே ப்ரீதாதான்.

கதையை மனைவிதான் ஓகே பண்ணுவார்...

ஒரு கதை என் மனதில் தோன்றியதும், முதலில் என் மனைவியிடம் சொல்லி, அவங்க கருத்த கேட்பேன். அப்புறம்தான் கதை விவாதத்துக்கு போவேன்.

பொதுவாக, நான் விருந்து-வேடிக்கை என்று வெளியில் எங்கும் அலைவதில்லை. படப்பிடிப்பு முடிந்தால், நேராக வீட்டுக்கு வந்து விடுவேன். அதனால்தான் குடும்பம் சந்தோஷமாக இருக்கிறது. என்னாலும் தொழிலில் கவனமாக இருக்க முடிகிறது!,'' என்றார்.

ஹரி.. உங்க கதைதான் மசாலா.. நீங்க பக்கா 'பத்தியம்'!

 

கே.எஸ்.ரவிகுமாருக்கு நோ சொன்ன த்ரிஷா

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
கே.எஸ்.ரவிகுமார் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் த்ரிஷா. தமிழில் விக்ரம், த்ரிஷா நடித்த படம் 'சாமி'. ஹரி இயக்கி இருந்தார். இப்படத்தை இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் இந்தியில் தனது முதல் படமாக ரீமேக் செய்கிறார். சஞ்சய் தத் ஹீரோ. இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷாவிடம் கால்ஷீட் கேட்டார் ரவிகுமார். ஆனால் பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டார் த்ரிஷா. கடந்த 2 வருடத்துக்கு முன்பு கட்டா மிட்டா என்ற படம் மூலம் இந்தியில் அறிமுகமானார் த்ரிஷா. அப்படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதையடுத்து இந்தி படங்களுக்கு முழுக்குபோட்டுவிட்டு தமிழ், தெலுங்கு படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ரவிகுமார் படத்தில் நடிக்காதது பற்றி த்ரிஷாவிடம் கேட்டபோது, 'இந்தியில் உருவாகும் சாமி படத்தில் நடிக்க என்னிடம் கேட்டனர். ஆனால் தமிழில் 3 படங்களில் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருகிறேன். இதற்காக பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் தொடர்ச்சியாக  இந்தி படத்துக்கு கால்ஷீட் தேவைப்பட்டது.

அப்படி என்னால் ஒதுக்க முடியாது. எனவேதான் இந்தி பட வாய்ப்பை ஏற்கவில்லை. இப்போதுள்ள சூழலில் புதிய படங்களை ஏற்க வாய்ப்பில்லை என்றார். த்ரிஷா மறுத்த வேடத்தில் தற்போது பிராச்சி தேசாய் நடிக்கிறார். கால்ஷீட் பிரச்னைதான் காரணம் என த்ரிஷா கூறினாலும், மார்க்கெட் இழந்த சீனியர் நடிகரான சஞ்சய்தத் நடிப்பதாலேயே அவர் படத்தை ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.


 

ஷூட்டிங்கிலிருந்து திடீர் ஓய்வு ஏன் ?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஷூட்டிங்கிலிருந்து திடீர் ஓய்வு எடுத்தது ஏன் என்பதற்கு சமந்தா பதில் அளித்தார். பாணா காத்தாடி, நான் ஈ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமந்தா. மணிரத்னம், ஷங்கர் படங்களில் ஹீரோயினாக ஒப்பந்தம் ஆனவர். திடீரென்று அப்படங்களிலிருந்து விலகினார். தோலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அவர் விலகியதாக தெரிந்தது. மேலும் ஒரு சில படங்களின் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்றுவருகிறார். மீண்டும் நடிக்க வருவது எப்போது என்று கேட்டபோது அவர் பதில் அளித்தார். புதிய படங்கள் எதையும் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் நடிப்பதுதான் இப்போதைய எண்ணம். அவை முடிந்தபிறகுதான் புதியபடங்கள் பற்றி யோசிப்பேன். என்னுடைய கனவுகள் நனவாகி வருகின்றன. அவற்றை சந்திப்பதற்காக நான் பல்வேறு எதிர்விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. இது கடினமான விஷயம்தான். ஆனால் எனது சொந்த காலில் நின்று எல்லாவற்றையும் ஜெயிப்பேன். இவ்வாறு சமந்தா கூறினார். தோல் நோயிலிருந்து மீண்டிருக்கும் சமந்தா, இம்மாதம் 20ம் தேதி முதல் நந்தினி ரெட்டி இயக்க நாக சைதன்யா நடிக்கும் பட ஷூட்டிங்கில் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து மற்ற ஷூட்டிங்கிலும் கலந்துகொள்கிறார் என்று அவரது தரப்பில் தெரிவித்தனர்.


 

7 வயது குழந்தையை தேடும் கமல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாலிவுட் படத்துக்கு 7 வயது குழந்தையை தேடுகிறார் கமல்ஹாசன். பேரி ஆஸ்போர்ன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன். இல் அவருடன் 7 வயது அமெரிக்க சிறுமி நடிக்கிறார். இதற்காக நடிப்பு திறமைகொண்ட சிறுமியை தேடும் பணி தொடங்கி இருக்கிறது. இது பற்றி கமல் கூறும்போது, இந்த வேடத்துக்கு அழகான சிறுமியாக மட்டுமில்லாமல் நடிக்கும் திறமை கொண்டவர் தேவை. 7 வயது என்பது நான் சினிமாவுக்கு அறிமுகமான வயது. அந்த வயதில் ஒரு குழந்தை நடிக்க வருகிறதென்றால் அதன் மனநிலை எப்படி இருக்கும், கேமராவை எதிர்கொள்ளும்போது எந்தவிதமான எண்ணம் இருக்கும் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் என்னுடன் நடிக்கும் குழந்தைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றார்.
 விஸ்வரூபம் படம் பார்த்த அமெரிக்கர்களுக்கு அப்படத்தில் கூறப்பட்டுள்ள கருத்துகள் பிடித்துவிட்டது. இதனால் கமலுக்கு அமெரிக்க படம் இயக்கும் வாய்ப்பு தரப்பட்டுள்ளதாம். ஹாலிவுட் படத்தில் 7 வயது குழந்தையையும் கமலையும் சுற்றியே கதை நகர்கிறதாம். ஆக்ஷன் அம்சங்கள் நிறைந்த இந்த படத்தில் ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படத்தை முடித்தபின் அடுத்த ஆண்டில் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் தமிழ் படத்தை இயக்கி, நடிக்கிறார் கமல். இப்படத்துக்கு தமிழில் தலைவன் இருக்கிறான் என்றும் இந்தியில் ஆஸாத் ஹெய்ன் என்றும் தலைப்பிட்டுள்ளார்.