இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் நடிக்கிறார் தனுஷ்

The Malayalam film actor Dhanush in Hindi இந்தியை தொடர்ந்து மலையாள படத்தில் நடிக்கிறார் தனுஷ். ஐஸ்வர்யா இயக்கிய '3 படத்தில் 'ஒய் திஸ் கொல வெறிடி பாடலை தனுஷ் பாடினார். இது உலகம் முழுவதும் ஹிட்டானது. இதையடுத்து மற்ற மொழி பட இயக்குனர்களின் கவனம் தனுஷ் பக்கம் திரும்பியது. ஆனந்தராய் இயக்கும் 'ராஞ்சாÕ படம் மூலம் இந்தியில் அறிமுகமாகிறார். இதில் சோனம் கபூர் ஜோடியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் காசியில் பெரும்பகுதி நடந்துள்ளது. மலையாள படவுலகை பொறுத்தவரை விஜய், அஜீத், சூர்யா படங்களுக்கு மட்டும் வரவேற்பு இருந்து வந்தது.

இந்த வரிசையில் தனது படமும் இடம் பிடிக்க வேண்டும் என்று தனுஷ் விரும்பினார். அதற்கான தருணத்துக்கு காத்திருந்தார். அது இப்போது அமைந்துள்ளது. இயக்குனர் தாம்சன் இயக்கும் காமத் அண்ட் காமத் என்ற படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் தனுஷ். இது பற்றி இயக்குனர் கூறும்போது, 'இப்படத்தின் கதையை தனுஷிடம் கூறினேன். அவருக்கு பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். இந்த வேடம் கிளைமாக்ஸில் திருப்புமுனையாக இருக்கும்Õ என்றார். இப்படத்தில் மம்மூட்டி நடிக்கிறார். அவர் மீதான மரியாதை காரணமாக இந்த வேடத்தை தனுஷ் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
 

40 வயது ஹீரோக்களுடன் நடிப்பது ஏன்? : அசின் பதில்

40-year-old heroes are playing with? : Asin's answer சம வயதுடையவர்களுடன் நடிக்காமல் 40 வயதான ஹீரோக்களுடன் நடிப்பது ஏன் என்றதற்கு பதில் அளித்தார் அசின். கோலிவுட் படங்களிலிருந்து பாலிவுட்டுக்கு தாவினார் 27 வயதாகும் அசின். அங்கு 40 வயதை கடந்த ஆமிர்கான், சல்மான், அக்ஷய்குமார் போன்ற ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சம வயதுள்ள ஷாஹித் கபூருடன் இந்தியில் ரீமேக் ஆகும் 'வேட்டைÕ படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்கவில்லை. இதுபற்றி அசினிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:  40 வயதை தாண்டிய நடிகர்கள் என்பதைவிட இந்தியில் சூப்பர் ஸ்டார்களாக விளங்கும் நடிகர்களுடன் எனது பாலிவுட் பட வாழ்க்கையை தொடங்கினேன் என்பதுதான் சரி.

அதுதான் எனது வெற்றிக்கு காரணமாக இருந்தது. அதே நேரம் சம வயதுள்ள நடிகர்களுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனால் இவர்களுடன் ஷூட்டிங் தளத்தில் பழகும் தன்மை இதுவரை நான் பழகிய தன்மையிலிருந்து மாறுபட்டிருக்கும். தென்னிந்திய படங்களிலிருந்து வந்த ஹீரோயின்கள் பாலிவுட்டில் பெரிய அளவில் வெற்றி பெறாதது பற்றி கேட்கிறார்கள். ஸ்ரீதேவிக்கு பிறகு தென்னிந்திய நடிகைகள் யாராலும் பாலிவுட்டில் வெற்றி பெற முடியவில்லை. இங்குள்ள கலாசாரத்தை புரிந்தவர்களால் மட்டுமே வெற்றி பெற முடியும். அதை என்னால் செய்ய முடிந்ததுதான் வெற்றிக்கு காரணம். என்னைப்பொறுத்தவரை சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறேன். யாருடனும் டேட்டிங் செய்வதில்லை என்பது அதில் முக்கியமானது. இவ்வாறு அசின் கூறினார்.
 

ஜமீன் குடும்ப காதல் கதை

Zameen Family love story அந்தஸ்து குறுக்கிடாத ஜமீன் குடும்ப காதல் கதையாக உருவாகிறது 'நீங்காத எண்ணம்Õ. இதுபற்றி இயக்குனர்கள் ஷாஜகான், செல்வராஜ் கூறியதாவது: ஜமீன் குடும்பத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், சரண்யா தம்பதியின் மகள் அங்கீதா. தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன் மகன் ஜெயந்த். சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். ஜெயந்த், அங்கீதாவுக்கு காதல் மலர்கிறது. பிறகு பிரிய நேர்கிறது.

இந்த பிரிவுக்கு அந்தஸ்த்து தடையாக இல்லை. ஆனாலும் மற்றொரு புதிய பிரச்னை குறுக்கிடுகிறது. அது என்ன என்பதுதான் கதை. இதில் பொன்வண்ணன், டி.பி.கஜேந்திரன், மணிகுட்டி, சந்துரு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் பெரும்பகுதி புதுக்கோட்டை மாவட்டத்திலும் மற்றும் சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடந்துள்ளது. மோகனராமன் ஒளிப்பதிவு. நா.முத்துகுமார் பாடல்கள். இமானுவேல் சதீஷ் இசை. ஏ.சஞ்சய் பிரகாஷ் தயாரிப்பு. இவ்வாறு இயக்குனர்கள் ஷாஜகான், செல்வராஜ் கூறினர்.
 

கிசு கிசு - ஷாக் தந்த இயக்கம்

Kodambakkam Kodangi நல்ல காலம் பொறக்குது... நல்ல காலம் பொறக்குது...

தல நடிகருக்கு சமீபத்துல ஷூட்டிங்ல நடந்த விபத்துல அடிபட்ட தகவல கேட்டதும் வெங்கட இயக்கம் பதறிட்டாராம்... பதறிட்டாராம்... உடனே நடிகருக்கு போன் பண்ணி குசலம் விசாரிச்சாராம்... விசாரிச்சாராம்... அப்ப, 'ரிஸ்க் ஷாட்ல நடிக்கறப்ப ரொம்ப எச்சரிக்கயா இருக்கணும்Õனு அட்வைஸ் கொடுத்தாராம். தன்னோட விசாரிப்ப பத்தி டுவிட்டர் பக்கத்துல இயக்கம் போட்டதோட தல நடிகருக்கு அடிபட்ட இடத்துல ஆபரேஷன் நடக்க இருக்குன்னும் தகவல சேத்துபோட்டாராம். இத பாத்துட்டு தல ரசிகருங்க ஷாக் ஆயிட்டாங்களாம்... ஆயிட்டாங்களாம்... ஆபரேஷன் பண்றளவுக்கு அவ்வளோ பெரிய விபத்தான்னு தல ஆபிஸுக்கு சரமாரியா போன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்... ஆரம்பிச்சிட்டாங்களாம்... இதனால ஆபீசு வட்டாரம் இயக்கம் மேல கோபமா இருக்காம்... இருக்காம்...

'கன்Õ படத்த பாலிவுட்ல ரீமேக் செய்ய தாஸ் இயக்கம் பிளான் பண்ணிருக்காராம்... இருக்காராம்... அந்த படத்துலயும் நீங்கதான் ஹீரோயினான்னு காஜல்கிட்ட கேட்டா மழுப்பறாராம். 'எங்கிட்ட டைரக்டர் அதுபத்தி பேசல. அதுக்குள்ள நான் நடிக்கறேன்னு எப்படி சொல்றது? அப்படியே கால்ஷீட் கேட்டாலும் மத்த படங்கள்ல நடிக்கறத பாத்துட்டுத்தான் சொல்ல முடியும்Õனு நழுவறாராம்... நழுவறாராம்...

அம்மா வேஷத்துக்கு தயாராயிட்ட மண்வாசன நடிகை பேச்சே மாறிப்போச்சாம்... மாறிப்போச்சாம்... Ôரொமான்ஸ் படங்கள்ல இயக்குனருங்க கவனம் செலுத்தறாங்க. அத மாத்திட்டு 40 வயசான பெண்கள பத்தியும் ஸ்கிரிப்ட் எழுதணும். அந்த வயசுக்கு மேல சாதிச்ச நெறய பொண்ணுங்க எல்லா துறைலயும் இருக்காங்க. அத ஆராய்ச்சி பண்ணாலே நெறய கதை கெடக்கும்Õனு ஐடியா தர்றாராம். பட வாய்ப்பில்லாம ஒதுங்கி இருந்த நடிகைக்கு மல்லுவுட்ல 40 வயசுக்கு மேல வயசான கேரக்டர் கெடச்சப்பறமே அவரது பேச்சுல மாற்றம் தெரியுதாம்... தெரியுதாம்...
 

பண்டரிபாயின் சகோதரி நடிகை மைனாவதி மரணம்

Actress Mynavathi No More

பெங்களூர்: பழம்பெரும் நடிகை மைனாவதி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 78.

இவர் நடிகை பண்டரியின் சகோதரி ஆவார். கர்நாடகத்தைச் சேர்ந்தவரான மைனாவதி தமிழிலும் கன்னடத்திலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக இவர் நடித்த `மாலையிட்ட மங்கை' அதில் முக்கியமானதாகும்.

அந்தப் படத்தில் இடம் பெற்ற ''செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள்'' பாடலும் அதற்கு மைனாவதி ஆடிய நடனமும் இன்றும் பெரும் புகழ் கொண்டவை.

சில நாட்களாக மைனாவதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், இன்று காலை மாரடைப்பால் காலமானார்.

மைனாவதியின் மகன் ஷ்யாம்சுந்தர் சமீபத்தில் காலமானார். இவர் கன்னடப் படங்களில் நடித்து வந்ததோடு டிவி தயாரிப்பாளராகவும் இருந்தார். அன்று முதலே மைனாவதியின் உடல் நிலை மோசமாகி வந்தது குறிப்பிடத்தக்கது.

 

பழம்பெரும் நடிகை மைனாவதி மரணம்

Old acress Mayavathi died பழம்பெரும் நடிகை மைனாவதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவர் நடிகை பண்டரியின் சகோதரி ஆவார். தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். டி.ஆர்.மகாலிங்கம் ஜோடியாக நடித்த `மாலையிட்ட மங்கை' படம் வெற்றிகரமாக ஓடியது.

இந்த படத்தில் இடம் பெற்ற செந்தமிழ் தேன்மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க்கொடியாள் பாடலில் மைனாவதி நடனம் ஆடியிருந்தார். இந்த பாட்டும், நடனமும் தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தது. இப்போதும் இப்பாடல் மூலை முடுக்கெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.

கடந்த சில நாட்களாக மைனாவதிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலன் இன்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.
 

விஸ்வரூபம் படத்தை முஸ்லீம்களிடம் காட்டி விட்டு கமல் வெளியிடட்டும்- தமுமுக

Tmmk S Appeal Kamal Hassan   

சென்னை: விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய மக்களிடமும், அமைப்புகளிடமும் முதலில் காட்டி விட்டே அந்தப் படத்தை கமல்ஹாசன் வெளியிட முன்வர வேண்டும். அந்தப் படம் குறித்து வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது என்று தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவரான ரிபாயி விடுத்துள்ள அறிக்கையில்,

பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் விஸ்வரூபம் என்ற படத்தை நடித்து இயக்கியிருக்கிறார். அதில் ஆப்கானிஸ்தான் போரை முன்னிலைப்படுத்தி கதை இருப்பதாகவும் அதில் முஸ்லிம்களை வன்முறையாளர்களாக சித்தரிக்கும் காட்சிகள் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

பிழைப்புக்காக இஸ்லாமியர்களை குற்றவாளியாக்குகின்றனர்

கடந்த பல வருடங்களாக தமிழகத்தில் சிலர் தங்களின் பிழைப்புக்காகவும், வளர்ச்சிக்காகவும் முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிகளாக சித்தரித்து படம் எடுத்து வருகிறார்கள்.

அமெரிக்கா -இஸ்ரேலைக் கண்டிக்கத் தைரியமில்லை

ஈராக்கில் 6 லட்சம் மக்களை கொன்ற அமெரிக்க பயங்கரவாதம் பற்றியோ, 60 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனர்கள் மீது இன அழிப்பை நடத்தி வரும் இஸ்ரேலின் பயங்கரவாதம் பற்றியோ யாருக்கும் படம் எடுக்க மனமில்லை, துணிவில்லை.

குஜராத் அவலத்தை தோலுரிக்க தைரியமில்லை

இந்தியாவில் குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரிக்க தைரியமில்லை. எதிர்விளைவுகளையும், உலக அளவில் வஞ்சிக்கப்படும் சமூகத்தையும் மட்டுமே குறிவைத்து திரைப்படம் எடுப்பது இப்போது வழக்கமாகி வருகிறது.

ஜெ.வை. கமல் சந்தித்தது ஏன்?

கமல்ஹாசனின் திரைப்படமான விஸ்வரூபம் பற்றி மாறுப்பட்ட கருத்துகளும், சந்தேகங்களும் வலுத்துள்ளன அவர் முதல்வ ஜெயலலிதா அவர்களை சந்தித்ததன் பின்னணியும் இதுதான் என கூறப்படுகிறது.

இந்த சந்தேகங்களை போக்கை வகையில், இத்திரைப்படத்தை முஸ்லிம் பிரதிநிதிகளிடமும், மனிதஉரிமை ஆர்வலர்களிடமும் முதலில் திரையிட்டு காண்பித்து ஆட்சேபனைக்குரிய காட்சிகள் ஏதேனும் இருந்தால் அதை தவிர்த்துவிட்டு வெளியிட வேண்டும் என கோருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானதா என்று அப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவின்போது செய்தியாளர்களும் கமல்ஹாசனிடமே நேரடியாக கேட்டனர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசன் பதிலளித்தார். இந்த நிலையில் தமுமுக கமல்ஹாசனுக்கு இந்தக் கோரிக்கையை வைத்துள்ளது.