செக் மோசடி வழக்கில் நடிகர் விவேக் ஓபராய்க்கு பிடிவாராண்ட்!


மும்பை: ரூ.3கோடி செக்மோசடி செய்த வழக்கில், இந்தி நடிகர் விவேக் ஓபராய் உட்பட 6 பேருக்கு கோர்ட் பிடிவாராண்ட் பிறப்பித்துள்ளது மும்பை நீதிமன்றம்.

பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் மற்றும் குடும்பத்தினர் இணைந்து ஓபராய் மல்டிமீடியா என்ற நிறுவனத்தை நடத்தி வந்தனர். நிறுவனத்தை உள் மற்றும் வெளிநாடுகளில் விரிவுப்படுத்துவதற்காக, மும்பைச் சேர்ந்த ஜவகர்லால் அகிச்சா என்ற பைனான்சியாரிடம் 3 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.

பணத்தை திரும்ப செலுத்த கொடுக்கபட்ட செக் பணமில்லாமல் திரும்ப வந்தது. இதையடுத்து, விவேக் ஓபராய், அவரது தந்தை சுரேஷ் ஓபராய் உட்பட 6 பேர் மீது செக்மோசடி வழக்கு தொடுத்தார்.

மும்பை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கின் விசாரணைக்கு பின், குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் பெயில் இல்லாத பிடிவாராண்ட் பிறக்கப்பட்டது.
 

'சீப் பப்ளிசிட்டி'.... அடங்காத சோனா!


நமீதாவை கிண்டல் செய்வது போலவும், இரட்டை அர்த்த ஆபாச வசனம் பேசியும் நடித்ததால், சமீபத்தில் நமீதாவிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட சோனா, மீண்டும் அவரைச் சீண்ட ஆரம்பித்துள்ளார்.

பப்ளிசிட்டி மோகம் எனக்கல்ல, நமீதாவுக்குதான் என்று அவர் கூறியுள்ளார்.

கோ படத்தில் நமீதாவை கிண்டலடிப்பது போலவும் மிக ஆபாசமாகவும் நடித்திருந்தார் குத்தாட்ட நடிகை சோனா.

இதுகுறித்து பின்னர் நமீதாவுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியதாகவும், அவர் தன்மீது கோபமாக இருப்பதாகவும் தினமும் பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து விளம்பரம் தேடி வந்தார்.

ஆரம்பத்தில் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த நமீதா, சமீபத்தில் ஒரு முன்னணி நாளிதழில் சோனாவின் பேட்டியைப் படித்து மிகவும் கோபமடைந்தார். அந்தப் பேட்டியில் தன்னைப் பற்றி தேவையில்லாமல் சோனா அடித்த கமெண்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காரசாரமாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்தநிலையில், இதுதான் நேரம் பப்ளிசிட்டி தேட என முடிவு செய்துவிட்ட சோனா, முன்னைக் காட்டிலும் வேகமாக நமீதா பற்றி பேச ஆரம்பித்துள்ளார்.

‘நமிதாவைப் பற்றி நான் சொன்ன அந்த எஸ்எம்எஸ் விவகாரம் ரொம்ப பழசு. அதுக்கு இத்தனை நாள் கழிச்சி, இப்போ ஏன் அவர் பதில் சொல்லணும். நமீதாவுக்குதான் பப்ளிசிட்டி ஆசை,' என்றெல்லாம் கூறியுள்ளார்.

இதுகுறித்து நமீதாவிடம் கேட்டபோது, "சோனா வேண்டுமென்றே இப்படிச் செய்து வருவதை மீடியாக்கள் புரிந்து கொண்டால் போதும். போயும் போயும் சோனாவை வைத்தா நான் பப்ளிசிட்டி தேடுவேன். இதைவிட ஜோக் எதுவும் இல்லை. அப்படிப்பட்ட நிலையிலும் நான் இல்லை என்பதை தமிழ் ரசிகர்கள் அறிவார்கள். இனி இதுபற்றிப் பேசவே வேண்டாம். அருவருப்பாக உள்ளது," என்றார்.
 

'கொழுக் மொழுக்' மதுஸ்ரீ... வழிவிடு கண்ணே வழிவிடு!


கோலிவுட் ரசிகர்களுக்குப் பிடித்த கொழுக் மொழுக் நாயகிகள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு மதுஸ்ரீ.

வழிவிடு கண்ணே வழிவிடு என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார். தமிழ் என்ற புதுமுகம் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குகிறார்கள் அலிகான் -கௌரிசங்கர் என்ற இரட்டையர். சார்லி, டி.பி. கஜேந்திரன் என உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

என்ன படம் இது.... எதற்காக இந்த டைட்டில்?

"மனிதனுக்கு உணவு, உடை, இருப்பிடம் முக்கியமானது தான். ஆனால் அதைவிட முக்கியமானது அன்பு. அந்த அன்பை நமக்கு முதலில் காட்டுபவள் தாய். அத்தகைய அன்பின் உருவமான தாயை வயதான காலத்தில் முதியோர் இல்லத்திற்கு அனுப்புபவர்கள் அதிகரித்து வருகிறார்கள். அது தான் கதைக் களம்.

தாயை மதிக்காமல் திரிபவனின் கதி என்ன ஆகிறது என்பதை சுவாரஸ்யமாக கூறியுள்ளோம். திரைக்கதை முற்றிலும் புதிய பாணியில் இருக்கும்," என்கிறார்கள் இயக்குநர்கள்.

சமீபத்தில் இந்தப் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடந்தது. விழாவுக்கு வந்தவர்கள் இசையை கேட்டார்களோ இல்லையோ... புது நாயகி மதுஸ்ரீயின் கவர்ச்சி விருந்தை கண்களால் பருகத் தவறவில்லை!
 

அஜீத்தின் மங்காத்தாவில் ரஜினியின் பல்லேலக்கா!!


அஜித்குமார் நடிக்கும் 50-வது படமான மங்காத்தாவில், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த சிவாஜி படப் பாடலான பல்லேலக்காவின் சில வரிகள் இடம்பெற்றுள்ளன.

மங்காத்தா பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் வெங்கட் பிரபுவே லீக் செய்து பரபரப்பு கிளப்பி வருகிறார்.

காரணம் என்னவோ... எல்லாம் பப்ளிசிட்டிதான்!

அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் ரஜினியின் சிவாஜி படத்தில் இடம்பெறும் 'பல்லேலக்கா' பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.

இதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு கூறுகையில், "ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்," என்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்!
 

மார்க்கெட் இல்லாத பரத்! - சிம்பு காட்டம்


மார்க்கெட் இல்லாத பரத் படத்தையெல்லாம் போஸ்டரில் போட முடியுமா என தாக்கியுள்ளார் நடிகர் சிம்பு.

சிம்பு, பரத் இணைந்து நடித்த படம் வானம். சமீபத்தில் இப்படம் ரிலீசானது. இந்த படத்துக்கான விளம்பரங்களில் பரத்தை விட சிம்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதால், பரத் கடுப்பாகி பேசி வருகிறார்.

"சிம்புவுக்கு சமமான ரோல் தருவதாகத்தான் என்னை ஒப்பந்தம் செய்தனர். ஆனால் படத்தில் என்னை ஓரம் கட்டினர். போஸ்டரில் கூட என் படம் இல்லை," என வருத்தப்பட்டிருந்தார்.

இது சிம்புவை கடுப்பேற்றிவிட்டது. அவர் கூறுகையில், "இரு ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் யாருக்கு மார்க்கெட் இருக்கிறதோ, அவருக்கு முக்கியத்துவம் கொடுத்துதான் விளம்பரம் செய்வார்கள். மார்க்கெட் இல்லாதவர்கள் படத்தைப் போட முடியுமா... பரத் கருத்து பற்றி எனக்கு கவலை இல்லை. நான் என் வேலைகளை செய்தபடி போய்க்கொண்டு இருக்கிறேன்," என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கணேஷ் கூறுகையில், "பரத்தை விட சிம்புக்கு மார்க்கெட் அதிகம். சிம்பு மெகா ஸ்டார். எனவே அவரை வைத்துதான் விளம்பரப்படுத்த முடியும். பரத் பேசும் கருத்துக்கள் தொழில் ரீதியாக தவறானவை. பரத் கேரக்டரில் நடிக்க முதலில் நகுலைத்தான் தேர்வு செய்தோம். சிம்புதான் பரத்துக்கு சிபாரிசு செய்தார்," என்றார்.
 

மார்க்கெட் குறைச்சாலும் மவுசு அப்படியேதான் இருக்கு!! - த்ரிஷா பெருமிதம்


நான் இன்றைக்கு நடிக்கும் படங்களின் எண்ணிக்கை வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் எனக்கான மவுசு எப்போதும்போலத்தான் உள்ளது என்கிறார் நடிகை த்ரிஷா.

திருமணம், ரகசிய நிச்சயதார்த்தம், படங்கள் தோல்வி என தொடர்ந்து வரும் செய்திகளால் நடிகை த்ரிஷாவின் மார்க்கெட் வீழ்ச்சியடைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில்தான் அவர் அஜீத்துடன் நடித்த மங்காத்தா வெளியாகிறது. இதனால் தனது செல்வாக்கு மீண்டும் பழைய உச்சத்தை தொடும் என நம்புகிறார் த்ரிஷா.

மங்காத்தா வெளியாவதையொட்டி அஜீத்தும் த்ரிஷாவும் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.

அப்படி த்ரிஷா கொடுத்த பேட்டி இது:

அஜீத்துடன் நடித்த அனுபவம் குறித்து...

அஜீத் ஜோடியாக ஏற்கனவே இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மங்காத்தா மூன்றாவது படம். வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். மங்காத்தா ஆண்களை முன்னிலைப்படுத்தும் படம். நான் நல்ல ரோலில் வருகிறேன். ரசிகர்களை படம் கவரும்.

மங்காத்தாவில் கவர்ச்சியாக நடித்துள்ளீர்களாமே?

அதெல்லாம் இல்லை. இதில் நான் ஒரு அப்பாவிப் பெண். அதில் எனக்கும் அஜீத்துக்குமான காதலும் இருக்கும். கவர்ச்சி இருக்காது.

வேறு இந்திப் புதுப்படங்களில் ஒப்பந்தமாகவில்லையே?

காட்டா மிட்டாவுக்கு பிறகு சில இந்திப்பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் எனக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்ததால் ஒப்புக்கொள்ள வில்லை.

தென்னிந்திய நடிகைகள் இந்திப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லையா?

என்னைப் பொறுத்த வரைபாலிவுட் வரை போவதே பெரிய ஸ்டெப்தான். அங்கு முழு கவனத்தையும் செலுத்தினால் முன்னேற முடியும். எனக்கு சென்னையை விட்டு போக விருப்பம் இல்லை. இங்கும் அங்கும் போய் வந்து கொண்டிருப்பது கஷ்டமான ஒன்று.

படங்களை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?

மாதம் 30 நாட்களும் நடிக்கவேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ரிலாக்ஸாக நடிக்க விரும்புகிறேன்.

முன்பு மாதிரி த்ரிஷா பரபரப்பாக இல்லையே... உங்கள் முக்கியத்துவம் குறைந்துவிட்டதா?

நான் அப்படி நினைக்க வில்லை. குறிப்பிட்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதால் அப்படி நினைக்கலாம். வந்த படங்களையெல்லாம் ஒப்புக்கொண்டு நடித்து இருந்தாலும் என்னை விமர்சிப்பார்கள். நடிகைகள் சினிமாவில் இருப்பது குறைவான நாட்கள்தான். இதில் நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கவேண்டும். ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் என் செல்வாக்கு சரியவில்லை.

நிறைய நடிகைகள் வருகிறார்களே, போட்டியை எப்படி சமாளிக்கிறீர்கள்?

நான் போட்டியாக யாரையாவது நினைத்தால்தானே இந்தப் பிரச்சினை. 10 வருடங்களுக்கு முன்பு சினிமாவுக்கு வந்தேன். என் திறமையால் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறேன். புதுமுக நடிகைகள் எனக்குப் போட்டியில்லை. பத்து வருடங்களுக்கு முன் என்னோடு அறிமுகமான நடிகைகளைத் தான் போட்டியாக கருதுகிறேன். அப்படிப் பார்த்தால் இப்போது எனக்கு போட்டியே இல்லை. புதுமுகங்கள் வருகை என்பது இயல்பானது. பத்தாண்டுகளுக்கு முன் நானும் புது நடிகையே.
 

இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான்! -இயக்குனர் பி.வாசு


சென்னை: இசை என்றால் என்றைக்கும் என்னைப் பொருத்தவரை இளையராஜாதான், என்றார் இயக்குநர் பி வாசு.

பி.வாசு இயக்கத்தில் ஆர்.கே நாயகனாக நடிக்கும் புலிவேஷம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை அண்ணா அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ரசிகர்கள் முன்னலையில் கலைநிகழ்ச்சிகளோடு கோலகலமாக நடைபெற்ற இந்த விழாவில் இயக்குனர் பி.வாசு முதல் இசை குறுந்தட்டை வெளியிட புகழ்பெற்ற சர்வதேச ஸ்குவாஷ் விராங்கனை ஜோஸ்னா சின்னப்பா பெற்றுக் கொண்டார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா,நாயகி சதா,மற்றொரு நாயகி திவ்யா பத்மினி, இயக்குனர் வாசுவின் மகன் இளம் நடிகர் ஷ‌க்தி, நடிகர் எம் எஸ் பாஸ்கர், தயாரிப்பாளர் கருமாரி கந்தசாமி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.

விழாவில் இயக்குனர் பி.வாசு பேசுகையில், "ஒரு படத்திற்கு வியாபாரமும் விளம்பரமும் அவசியம். என்னுடைய ஹீரோ ஆர்.கே மிகவும் புத்திசாலித்தனமாக இந்த இசை வெளியீட்டு விழாவை ரசிகர்கள் முன் வைத்திருக்கிறார்.

'வேலை கிடைச்சிடுச்சி' படத்திற்கு பிறகு மிகவும் வித்தியாசமான திரைக்கதையில் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். நாயகன் ஆர்.கே கதைக்கேற்றெ வகையில் பொருத்தமாக நடித்திருக்கிறார். கார்த்திக் மிகவும் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார். நான் அறிமுகம் செய்த‌ மன்சூர் அலிகான் நீண்ட இடைவெளிக்கி பிறகு என் படத்தில் நடித்துள்ளார்.

ராஜாதான்...

நான் எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியிருந்தாலும் இசை என்றால் என்னைபொருத்தவரை இளையராஜாதான். இந்த படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இளையாராஜா பாணியில் ஒரு மெலடி பாட்டு போட்டிருக்கிறார். சின்னதம்பியில் இளையாராஜா போட்டுத் தந்த 'போவோமா ஊர்கோலம்...' மாதிரி இந்த பாட்டும் ஹிட்டாகும். மற்றபடி படங்க‌ளை போலவே எல்லா வகையான பாடல்களும் இதில் உள்ளன," என்றார்.

நாயகி சதா பேசும் போது இயக்குனர் பி.வாசுவின் படத்தில் நடிக்க வேண்டும் எனப்து தனது விருப்பம். ஆனால் ஒரு மூறை வாய்ப்பு வந்தும் அது நழுவி போய்விட்டது. இப்போது புலிவேஷம் படம் மூலம் அந்த ஆசை நிறைவேறிவிட்டது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

மற்றொரு நாயகி திவ்யா பத்மினி பேசும் போது இளம் நடிகையான தனக்கு இயக்குனர் வாசு மிகவும் ஆழமான பாத்திரம் தந்துள்ளார் என்று நன்றியோடு கூறினார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ காந்த் தேவா பேசும் போது, "இயக்குனர் பி வாசு படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது தந்து நீண்ட நாள் கனவு" என்று கூறினார்.

"பி.வாசு படங்களில் இளையராஜா சார் பாடல்கள் மிக விஷேசமாக இருக்கும். இதைப் பார்க்கும்போது, நாமும் வாசு சாரின் ஒரு படத்துக்கு இசையமைக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன். அந்தக் கனவு புலிவேஷம் மூலம் நிறைவேறிவிட்டது. வழக்க்கமாக ஸ்ரீ காந்த் தேவா என்றால் குத்துபாட்டு தான் நினைவுக்கு வரும். ஆனால் புலிவேஷத்தில் என்னுடைய மெலோடி பாட்டு பேசப்படும்" என்றார் ஸ்ரீகாந்த் தேவா.

ந‌டிகனாக அல்லாமல் அப்பவின் ரசிகனாக வ‌ந்திருக்கிறேன் என்று இயக்குனர் பி.வாசுவின் மகன் ஷ‌க்தி. அவன் இவனில் வில்லனாக நடித்த ஆர்.கேவின் நடிப்பை பாராட்டிய ஷ‌க்தி அந்த படத்தில் அவர் ராவணன் என்றால் இதில் கர்ணன் என்று பாராட்டு தெரிவித்தார்.

தயாரிப்பாளரும் நாயகனுமான ஆர்.கே .ந‌னறி கூறினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினாரக கலந்து கொண்ட ஸ்குவாஷ் வீராங்கனை, "இது தான் பங்கேற்கும் முதல் திரைப்பட நிகழ்ச்சி. இந்த வாய்ப்புக்காக மகிழ்ச்சியடைவதாக" தெரிவித்தார்.
 

ராசு மதுரவன் தந்த ரூ.75 லட்சம் மோசடி புகார்: சக்சேனா மீது புதிய வழக்கு


சென்னை: சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சக்சேனா மீது இன்னுமொரு புதிய புகார் போடப்பட்டுள்ளது. ரூ.75 லட்சம் மோசடி புகாரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சக்சேனா மீது போலீசார் 5 மோசடி வழக்குகள் பதிவு செய்து அவரை கைது செய்தனர். அவரது உதவியாளர் அய்யப்பனும் அதே வழக்குகளில் கைது செய்யப்பட்டார். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சென்னை கே.கே.நகர் போலீசில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளில் சக்சேனாவுக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த வழக்குகளை புகார்தாரர் கேட்டுக்கொண்டதன்பேரில் ரத்து செய்துவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தற்போது சக்சேனா, அய்யப்பன் ஆகிய இருவர் மீதும் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ராசு மதுரவன் புதிய வழக்கு

இந்த நிலையில், 'முத்துக்கு முத்தாக' படத்தின் தயாரிப்பாளர் ராசு மதுரவன், பட்டினப்பாக்கம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சக்சேனா, அய்யப்பன் ஆகியோர் மீது புதிய மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 'முத்துக்கு முத்தாக' படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ரூ.1.25 கோடிக்கு வாங்கினார்கள் என்றும், ரூ.50 லட்சம் மட்டும் தந்துவிட்டு, மீதி ரூ.75 லட்சத்தை தராமல் மோசடி செய்துவிட்டதாக கொடுத்த புகாரின் பேரில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கிலும் அவர்கள் இருவரும் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சக்சேனாவின் வங்கி கணக்கையும் முடக்கி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.