ஆந்திராவிலும் வாய்ப்பு லேது... அதிர்ச்சியில் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இனி நடிப்பதாக இல்லை என்று கூறிவிட்டு ஆந்திரா பக்கம் ஒதுங்கிய அஞ்சலி, குறுகிய காலத்திலேயே அங்கும் வாய்ப்பை இழந்து தடுமாறும் நிலைக்கு வந்துவிட்டார்.

நடிகை அஞ்சலி தன் சித்தியுடனான கருத்து வேறுபாடு காரணமாக ஆந்திராவில் அடைக்கலமானார். அப்போது அவருக்கு தமிழில் நல்ல மார்க்கெட். முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஒப்பந்தமாகியிருந்தார்.

ஆந்திராவிலும் வாய்ப்பு லேது... அதிர்ச்சியில் அஞ்சலி!

ஹைதராபாத் போய் நிலைமை சகஜமான பிறகும் அவர் சென்னைப் பக்கம் வரவில்லை. தன் வீட்டை சித்தி அபகரித்துக் கொண்டதாலும், உயிருக்குப் பாதுகாப்பாற்ற நிலை இருப்பதாலும் தமிழில் நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டார்.

மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூட யாருக்கும் தெரிவிக்கவில்லை. சுந்தர் சி படம், ராகவா லாரன்ஸ் படம் போன்றவற்றில் நடிக்கும் வாய்ப்பையும் இழந்தார்.

இந்த நிலையில் அஞ்சலியின் உடலும் பருமனாக ஆரம்பித்துவிட்டது. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்த அஞ்சலியின் உப்பிப் போன முகத்தையும், பருத்த உடலையும் பார்த்து திரையுலகினர் அதிர்ந்து போனார்களாம்.

ஆந்திராவிலும் வாய்ப்பு லேது... அதிர்ச்சியில் அஞ்சலி!

இப்போதைக்கு தெலுங்கில் ஒரு படம் கூட கைவசம் இல்லை அஞ்சலிக்கு. அவரது இப்போதைய தோற்றத்தால், வாய்ப்பு தரவும் யோசிக்கிறார்களாம் ஆந்திர திரையுலகினர். எனவே மீண்டும் தமிழில் வாய்ப்பு தேட முடிவு செய்துள்ள அவர், அதற்கு வசதியாக சித்தியிடமிருந்து வீட்டைப் பெற முயற்சித்து வருகிறார்.

தமிழில் விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா மட்டுமே இப்போது வெளியாக வேண்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

'9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.. மனசு உடைஞ்சு போயிருக்கேன்' - த்ரிஷா

ஒன்பது ஆண்டுகளாக தான் ஆசையோடு வளர்த்த நாய் இறந்து விட்டதால் மனமுடைந்து போய் உள்ளதாக நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார்.

நடிகை த்ரிஷாவுக்கு நாய்கள் மீது அலாதி பிரியம். தெருவில் சுற்றும் நாய்களை தத்தெடுத்து அவற்றை பராமரிப்பது இவருக்கு மிகப் பிடித்த ஹாபியாக உள்ளது.

'9 வருஷமா வளத்த நாய் செத்துப் போச்சு.. மனசு உடைஞ்சு போயிருக்கேன்' - த்ரிஷா

9 ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத் சாலையில் அனாதையாக கிடந்த ஒரு நாய்க்குட்டியை த்ரிஷா தூக்கி வந்து, தன் சென்னை வீட்டில வைத்து வளர்த்தார். அதற்கு காட்பரி என பெயரிட்டார்.

அந்த நாய் மீது திரிஷாவுக்கு அளவு கடந்த பாசம் ஏற்பட்டது. படப்பிடிப்பு ஓய்வில் இந்த நாயுடன்தான் விளையாடுவார். விதவிதமான ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பார்.

இந்த நாய்க்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக கால்நடை மருத்துவமனையில் சேர்த்தார். டாக்டர்கள் பரிசோதித்து வயிற்றில் கட்டி இருப்பதாக கூறினர். அதை அகற்ற அறுவை சிகிச்சை செய்தார்கள். அப்போது நாய் இறந்து போனது.

இது த்ரிஷாவை கோபத்தில் தள்ளிவிட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் வளர்த்த நாய் இறந்து போனதை எனக்கு ஏற்பட்ட மோசமான இழப்பாக கருதுகிறேன். மனம் உடைந்து போய் இருக்கிறேன். இந்த துக்கத்தில் இருந்து படிப்படியாக மீள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்," என்றார்.

 

புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் த்ரிஷா... சம்பளம் ஒரு கோடி?

பெங்களூர்: நடிகை த்ரிஷா கன்னடத்தில் அறிமுகமாகிறார், புனித் ராஜ்குமார் ஜோடியாக.

தெலுங்கில் பெரும் வெற்றி தூக்குடு படத்தின் கன்னட ரீமேக்கில்தான் அவர் நடிக்கப் போகிறார்.

கன்னட திரைப்பட உலகம் ஒப்பீட்டளவில் சிறியது என்பதால், அங்கு சம்பளமும் குறைவுதான். படத்தின் பட்ஜெட் காரணமாக பெரிய நடிகைகளை கன்னடத் தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்வதுமில்லை.

புனித் ராஜ்குமார் ஜோடியாக கன்னடத்தில் அறிமுகமாகும் த்ரிஷா... சம்பளம் ஒரு கோடி?

ஆனால் இப்போது நிலைமை மெல்ல மாறி வருகிறது. சமீபத்திய சில கன்னடப் படங்கள் நல்ல வசூலைக் குவித்து வருகின்றன.

எனவே பெரிய நடிகைகளை ஒப்பந்தம் செய்யும் போக்கு ஆரம்பித்துள்ளது.

புனித் ராஜ்குமார் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் த்ரிஷாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தெலுங்கில் வெற்றி பெற்ற தூக்குடு படத்தைத் தயாரித்தவர்களே, அதன் கன்னடப் பதிப்பையும் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் நடிக்க த்ரிஷாவுக்கு ரூ 1 கோடி வரை சம்பளம் தர தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் சினிமாவில் நிலைத்துள்ள த்ரிஷா, இன்னும் தன் மார்க்கெட மவுசு குறையாமலிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

புகைப்பழக்கத்துக்கு எதிராக முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர்!

கண்களைக் கட்டிக் கொண்டு சைக்கிள் ஓட்டும் இந்த சின்னஞ்சிறுவன் ஒரு தீவிர ரஜினி ரசிகன்... ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்தவன். பெயர் அரவிந்த்.

ஏழாம் வகுப்பு படிக்கும் இந்த சிறுவன், சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்த நாளையொட்டி புகைப் பழக்கத்துக்கு எதிராக ஒரு விழிப்புணர்வுப் பிரச்சாரமாக இப்படி முகம் முழுவதையும் மூடிக் கொண்டு 7 கிலோ மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டான். அவனைப் பின் தொடர்ந்து ரஜினி ரசிகர்களும் வாகனங்களில் சென்றனர்.

புகைப்பழக்கத்துக்கு எதிராக முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர்!

ரஜினியின் உருவப்படம் பொறித்த பனியன் அணிந்து சாலையில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் இந்த தூரத்தை அந்த சிறுவன் கடந்தது பார்ப்பவர்களை வியப்பின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ஸ்ரீரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை ஸ்ரீரங்கம் நகர ரஜினிகாந்த் தலைமை நற்பணி மன்றம் செய்திருந்தது.

'புகைப்பழக்கத்தை விட்டொழிக்குமாறு மக்களுக்கு தலைவர் ரஜினி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது வேண்டுகோளை எங்களால் முடிந்த அளவு பிரச்சாரமாக்கியுள்ளோம். இதுபோன்ற பிரச்சாரங்களை தொடர்ந்து செய்வோம். தலைவர் சொன்ன அறிவுரையைக் கேட்டு பலரும் ஏற்கெனவே புகைப்பழக்கத்தை விட்டுவிட்டார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறோம்," என்றனர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ரஜினி மன்ற நிர்வாகிகள்.

புகைப்பழக்கத்துக்கு எதிராக முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர்!

7 கிலோமீட்டர் தூரம் முகத்தை மூடியபடி சைக்கில் ஓட்டி வியக்க வைத்த சிறுவன் அரவிந்த்தின் தந்தையும் தீவிர ரஜினி ரசிகர். ஸ்ரீரங்கம் மன்ற நிர்வாகி.

முன்னதாக ரஜினி பிறந்த நாளையொட்டி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராகவேந்திரர் மடத்தில் தங்கத் தேர் இழுத்தனர் ரசிகர்கள். பின்னர் 1000 பேருக்கு மண்டபத்திலேயே அறுசுவை உணவு பரிமாறினர்.

புகைப்பழக்கத்துக்கு எதிராக முகத்தை துணியால் மூடிக் கொண்டு 7 கிமீ சைக்கிள் ஓட்டிய ரஜினி ரசிகர்!

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ரஜினிகாந்த் நற்பணி மன்ற நிர்வாகிகள் எஸ் கர்ணன், தென்னூர் உதயா, ராயல் ரம்பா செந்தில், ஆர்கேஎஸ் ராஜ், ராயல் ராஜ், திருச்சி ரஞ்சித் குமார், ஸ்வீட் ரமேஷ், ஆட்டோ வேலு, ஆர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ம் தேதி மேலும் பல நற்பணி நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர் இந்த நிர்வாகிகள்.

 

''விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்''.. பணம் கேட்டு நடிகர் மயில்சாமிக்கு போனில் மிரட்டல்!

''விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்''.. பணம் கேட்டு நடிகர் மயில்சாமிக்கு போனில் மிரட்டல்!

சென்னை: நடிகர் மயில்சாமியை பணம் கேட்டு போனில் மிரட்டிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் டாஸ்மாக் ஸ்பெஷலிஸ்டான நடிகர் மயில்சாமி, தில், தூள், திமிரு, பட்டத்து யானை, தகராறு என நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்துள்ளார்.

சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம், வெங்கடேஷ்வரா நகர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் விருகம்பாக்கம் போலீசில் சமீபத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தேன், அப்போது செல்போனுக்கு வந்த அழைப்பை எடுத்து பேசியபோது, அதில் பேசிய மர்ம நபர் ‘நீங்கள் எனக்கு ரூ.50 ஆயிரம் பணம் கொடுக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது விஷயங்களை வெளியே சொல்லிவிடுவேன்' என்று கூறி விட்டு இணைப்பத் துண்டித்து விட்டார் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மிரட்டல் வந்த செல்போன் எண்ணை தொடர்புகொண்டபோது ‘ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து போலீசார் விசாரிக்கிறார்கள்.

 

கவர்ச்சியில் முதலிடம் பிடித்தாலும், பின்னழகில் பின்தங்கிப் போன சன்னி லியோன்!

பாலிவுட் நடிகைகளில் கவர்ச்சிகரமான பின்னழகு கொண்டவர் யார் என்பதற்கான கருத்து கணிப்பில் ப்ரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. இதில் கடைசி இடம் பிடித்துள்ளார் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.

கவர்ச்சியில் முதலிடம் பிடித்தாலும், பின்னழகில் பின்தங்கிப் போன சன்னி லியோன்!

இப்போது முன்னணியில் உள்ள பாலிவுட் நடிகைகளில் சிறந்த பின்னழகு யாருக்கு உள்ளது என்பதற்கான கருத்துக் கணிப்பை ஒரு இணையதளம் மேற்கொண்டது.

இந்தக் கருத்துக் கணிப்பில் பாலிவுட்டின் முதல் நிலை நாயகிகளுள் ஒருவரான ப்ரியங்கா சோப்ராவுக்கு முதலிடம் கிடைத்தது. அவர் பெற்ற வாக்குகள் 28.3 சதவீதம். ஏற்கெனவே சிறந்த கால் அழகிக்கான போட்டியிலும் முதலிடம் பெற்றவர் ப்ரியங்கா என்பது நினைவிருக்கலாம்.

இந்த வாக்கெடுப்பில் தீபிகா படுகோனுக்கு இரண்டவது இடம் கிடைத்தது. அவர் பெற்ற வாக்குகள் 21 சதவீதம். இந்த ஆண்டில் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்துள்ளார். அனைத்துமே ரூ 100 கோடிக்கு மேல் குவித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களுக்கு வரும்போது முதுகு தெரிய ஆடை உடுத்தி வருவது கரீனா வழக்கம். இவர் 19.38 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

முதுகழகைக் காட்டத் தயங்காத இன்னொரு பாலிவுட் நடிகை பிபாஷா பாசுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அவர் பெற்றுள்ள வாக்குகள் 7.05 சதவீதம்.

சன்னி லியோன் ஐந்தாவது இடம்

கவர்ச்சியில் முதலிடம் பிடித்தாலும், பின்னழகில் பின்தங்கிப் போன சன்னி லியோன்!

கவர்ச்சித் தோற்றத்தில் முதல் இடத்தில் உள்ள சன்னி லியோனுக்கு, இந்த பின்னழகிப் போட்டியில் 5வது இடம்தான் கிடைத்திருக்கிறது.

 

கன்னட நடிகரின் வீடு புகுந்து மிரட்டி ரூ.8 லட்சம் கொள்ளை

கன்னட நடிகரின் வீடு புகுந்து மிரட்டி ரூ.8 லட்சம் கொள்ளை

பெங்களூர்: கன்னட நடிகர் ஹர்ஷாவின் வீட்டுக்குள் புகுந்த 4 ஆயுதம் ஏந்திய நபர்கள் வீட்டில் உள்ளவர்களை மிரட்டி செல்போன்கள், நகைகள், ரூ.1 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.8 லட்சம் மதிப்புள்ளவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

கன்னட படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் ஹர்ஷா. மேற்கு பெங்களூரில் உள்ள நாகர்பாவியில் அவர் தனது அப்பா பிரகாஷ், அம்மா விமலா மற்றும் உறவினர் ஒருவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் ஷூட்டிங் முடித்துவிட்டு நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு பைக்கில் வீட்டுக்கு வந்துள்ளார்.

பைக்கை வீட்டு வாசலில் நிறுத்திக் கொண்டிருந்தபோது அரிவாள் ஏந்தி முகமூடி அணிந்த 4 பேர் ஹர்ஷாவை மிரட்டி வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளனர். வீட்டிக்குள் சென்ற உடன் அவர்கள் அங்கிருந்தவர்களை படுக்கையறையில் உட்காரும்படி கூறியுள்ளனர். இரண்டு பேர் ஹர்ஷாவின் குடும்பத்தாரை கண்காணிக்க மற்ற இரண்டு பேர் வீட்டில் இருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், நகை, வெள்ளிப் பொருட்கள், செல்போன்களை திருடினர். அவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

அவர்கள் திருடிவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டு தப்பியோடிவிட்டனர். விமலாவின் செல்போன் மேஜையில் துணிக்கு அடியில் இருந்ததால் அதை அவர்கள் பார்க்கவில்லை. இதையடுத்து அந்த செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினரை அழைக்க அவர்கள் வந்து சாவியை தேடி வீட்டைத் திறந்தனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹர்ஷாவின் குடும்பத்திற்கு தெரிந்த யாரோ தான் திருடியிருக்க வேண்டும் என்று அவர்கள் சந்தேகிக்கின்றனர்.

 

இப்படி நானே எனக்கு ஆப்பு வச்சுகுவேனா: புலம்பும் நடிகர்

சென்னை: பவர் நடிகர் தனது வாயால் தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்டுள்ளார்.

பில்டப்புக்கு பெயர் போன பவர் நடிகருக்கு சினிமாவில் பெயர் வாங்கிக் கொடுத்தது என்னவோ சந்தன நடிகரின் லட்டு படம் தான். இதையடுத்து மளமளவென பல படங்களில் ஒப்பந்தமான பவர் மோசடி வழக்குகளில் சிக்கி சிறை சென்றார்.

இந்நிலையில் எந்த படத்தை எடுத்தாலும் பிரமாண்டமாக எடுத்து வெற்றி கொடுக்கும் 4 எழுத்து இயக்குனரின் படத்தில் பவர் ஒப்பந்தமானார். அந்த பிரமாண்ட இயக்குனர் தனது படம் ரிலீஸாகும் வரை அது குறித்த தகவல்களை கசியக்கூட விட மாட்டார். அதனால் பவரிடம் உங்களின் கதாபாத்திரம் பற்றி எதுவும் வெளியே சொல்ல வேண்டாம் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் பவரால் வாயைக் கட்டுப்படுத்த முடியாமல் அனைத்தையும் உளறித் தள்ளிவிட்டார். சிறைக்கு சென்ற தனக்கு இந்த படம் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறி வந்தார். தான் இவ்வளவு கூறியும் உளறியதால் ஆத்திரமடைந்த இயக்குனர் பவர் வரும் காட்சிகளை கத்தரித்துவிட்டாராம்.

இப்படி என் வாயால் எனக்கு நானே ஆப்பு வைப்பேனா என்று பவர் நடிகர் தற்போது புலம்புகிறாராம்.

 

ரஜினியின் வயது 162.. கமலுக்கு 158!

ரஜினியின் வயது 162. இப்படி சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் பலரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. டிசம்பர் 12 ந் தேதி ரஜினிக்கு பிறந்த நாள். அதற்கு முன்னதாக தமிழகமெங்கும் இப்படியொரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.

ரஜினி மட்டுமல்ல, உலகின் முன்னணி பிரபலங்கள் பலரது புகைப்படத்துடன் அவர்களின் வயதை தாறுமாறாக அதிகப்படுத்தி குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த சுவரொட்டியை பார்த்து, ரசிகர்கள் என்னவென்று புரியாமல் வியந்தபடியும் தங்களுக்குள் விவாதித்தபடியும் செல்கிறார்கள்.

‘சாய்ந்தாடு சாய்ந்தாடு' படத்திற்கான பிரமோஷன் போஸ்டர்தான் அது என்றாலும், படத்தில் இதுகுறித்த விளக்கங்கள் காட்சியாக வைக்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகத்தோடு பத்திரிகையாளர்களும் படத்தின் இயக்குநர் கஸாலியை தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறார்கள்.

ரஜினியின் வயது 162.. கமலுக்கு 158!

கஸாலி கூறும்போது, ‘இந்த போஸ்டரில் உள்ள பிரபலங்களுக்கு நாங்கள் குறிப்பிட்டிருக்கும் வயதிற்கும், கதைக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நம்மால் வியக்கப்பட்ட இந்த பிரபலங்கள் சராசரி வயதிற்கும் மேல் இன்னும் ஐம்பது ஆண்டுகளோ, அதையும் தாண்டியோ, மாறாத இளமையோடும் உற்சாகத்தோடும் வாழ்ந்தால் அது எவ்வளவு சந்தோஷமான விஷயம்? அப்படியொரு கனவை மெய்யாக்க நினைக்கிற விஷயம் ஒன்றும் படத்தில் இடம் பெறுகிறது. அதை சூசகமாக சொல்லதான் இப்படி ஒரு போஸ்டரை உருவாக்கினோம்' என்றார்.

கஸாலியின் கனவு நனவானால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்!

 

விஜயகாந்த் மகன் நடிக்கும் படம் சகாப்தம் - டிசம்பர் 12-ல் தொடங்குகிறது!

சென்னை: விஜயகாந்த்இளையமகன் சண்முகப் பாண்டியன் ஹீரோவாகக் களமிறங்குவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது.

விஜயகாந்த் மகன் நடிக்கும் படம் சகாப்தம் - டிசம்பர் 12-ல் தொடங்குகிறது!

அவரது முதல் படம் சகாப்தம், வரும் டிசம்பர் 12-ம் தேதி தொடங்குகிறது.

இப்படத்தை கேப்டன் சினி கிரியேஷன் நிறு‌வனத்தின் சார்பில் எல்கே சுதிஷ் தயாரிக்கிறார்.

நவீன் கேபிபி கதை எழுத, வேலுமணி வசனம் எழுத, டி இ சந்தோஷ் ராஜன் இயக்குகிறார்.

விஜயகாந்த் மகன் நடிக்கும் படம் சகாப்தம் - டிசம்பர் 12-ல் தொடங்குகிறது!

இந்த படத்தின் பூஜை வரும் 12-12-2013 வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சாலிகிரமாத்தில் உள்ள ஆண்டள் ஆழகர் இல்லத்தில் நடக்கிறது. விஜயகாந்த், பிரேமலதா மற்றும் திரையுலகினர், கட்சிப் பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஹீரோயிந் உள்ளிட்ட விவரங்களை பூஜையன்று அறிவிக்கிறார்கள்.