சென்னை: வாயை மூடிப் பேசவும் படம் மூலம் மீண்டும் வெள்ளித்திரையில் தோன்ற இருக்கிறார் நடிகை மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா ஜோடியாக நடித்துள்ளனர்.
இப்படத்தில் துல்கர் ரேடியோ ஜாக்கியாகவும், நஸ்ரியா டாக்டராகவும் நடித்துள்ளனர். நடிப்பிலிருந்து சில ஆண்டுகள் ஒதுங்கி இருந்த மதுபாலா இடையில் சின்னத்திரையில் முகம் காட்டினார். மீண்டும் தற்போது இப்படம் மூலம் வெள்ளித் திரையில் மறுபிரவேசம் செய்ய இருக்கிறார்.
இன்றைய ‘காபி வித் டிடி' நிகழ்ச்சியில் திவ்யதர்ஷினியுடன் தங்களது பட அனுபவங்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர் மதுபாலாவும், துல்கரும். இந்நிகழ்ச்சி இன்று இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.