குஷ்பூ ஃபிகரா இல்லையா?: விஜய் டிவி 'டிடி' கேட்ட பகீர் கேள்வி

சென்னை: விஜய் விருதுகள் விழாவில் விஜய் டிவி தொகுப்பாளினி டிடி நடிகை குஷ்பு ஃபிகரா இல்லையா என்று பார்வையாளர்களை பார்த்து கேட்டார்.

விஜய் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. விழாவை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்ற டிடி தொகுத்து வழங்கினார். டிடி பேசினால் நிறுத்த மாட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.

குஷ்பூ ஃபிகரா இல்லையா?: விஜய் டிவி 'டிடி' கேட்ட பகீர் கேள்வி

விழாவில் குஷ்பு சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை கௌதம் கார்த்திக்கிற்கு வழங்கினார். கௌதமுடன் அவரது தந்தை கார்த்திக்கும் மேடைக்கு வந்தார். அப்போது மௌன ராகம் படத்தில் வரும் கார்த்திக்கின் அந்த பிரபல வசனத்தை பேசுமாறு டிடி கேட்க அதற்கு பொண்ணு வேண்டுமே என்று கார்த்திக் கூறினார். அதற்கு டிடி அது தான் குஷ்பு இருக்கிறாரே என்று கூறினார்.

அத்துடன் நிற்கவில்லை டிடி. குஷ்பு இப்பவும் ஃபிகர் தான் என்று கூற அதை கேட்ட அவர் வெட்கப்பட்டார். உடனே டிடி பார்வையாளர்களை பார்த்து குஷ்பு ஃபிகரா இல்லையா என்று கேட்டார்.

உடனே பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். வாய் உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்வீர்கள் டிடி.

 

என் மகளை பத்தி பேசுவியா: நடிகைக்கு டோஸ் விட்ட புஸு புஸு நடிகையின் அம்மா

சென்னை: விழா ஒன்றில் பங்கேற்ற பிரியமான நடிகை புஸு பஸு நடிகையின் அம்மாவிடம் செம டோஸ் வாங்கியுள்ளாராம்.

அண்மையில் நடந்த விழா ஒன்றில் புஸு புஸு நடிகை தனது அம்மாவுடன் கலந்து கொண்டார். விழாவில் பிரியமான நடிகை மேடையில் பேசினார். அப்போது அவர் புஸு புஸு நடிகையும், விரல் நடிகரும் சேர வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்தார்.

இதை கேட்ட புஸு புஸு நடிகையின் அம்மாவின் முகம் கோபத்தில் சிவந்துவிட்டதாம். தனது மகள் விரல் நடிகரை காதலித்தது பிடிக்காமல் இருந்தார் தாய்க்குலம். அவர்களின் காதல் முறிந்ததில் நடிகையின் அம்மாவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷமாம்.

இந்நிலையில் பிரியமான நடிகை இப்படி பேசியதால் தான் நடிகையின் அம்மா கோபம் அடைந்துள்ளார். உடனே பிரியமான நடிகையை அழைத்து செம டோஸ் விட்டாராம் தாயக்குலம்.

என் மகளை யாருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். நீங்கள் அதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று புஸு புஸு நடிகையின் அம்மா வசைபாடிவிட்டாராம்.

 

ஊட்டி அருகே ‘பப்பரப்பா’ பட வேன் விபத்து... படப்பிடிப்பு குழு ஊழியர்கள் 2 பேர் காயம்

ஊட்டி: புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் ‘பப்பரப்பா' பட வாகனம் ஊட்டி அருகே விபத்தில் சிக்கியதில் படப்பிடிப்பு குழு ஊழியர்கள் இருவர் காயமடைந்தனர்.

சென்னையைச் சேர்ந்த சினிமா கம்பெனி ‘பப்பரப்பா' என்ற பெயரில் படமொன்றைத் தயாரித்து வருகிறது. இப்படத்தில் நடிப்பவர்கள் அனைவரும் புதுமுகங்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் படத்தின் ஷூட்டிங் ஊட்டி அருகே கெரடா கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் நடைபெற்று வருகிறது.

விபத்து...

இந்நிலையில், நேற்று படப்பிடிப்பு கருவிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட பழைய மடால் வேன் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி அருகில் இருந்த பிக் ஆப் ஜீப் மற்றும் கார் மீது மோதியது.

அதிர்ச்சி...

பின்னர் அருகில் இருந்த காம்பவுண்ட் சுவற்றை தகர்த்துக்கொண்டு மைதானத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தால் அதிர்ச்சியடைந்த படப்பிடிப்பு குழுவினர், நொறுங்கிய வேன் அருகே சென்றனர்.

சிகிச்சை...

அங்கே படப்பிடிப்பு குழு ஊழியர்கள் சிவா, மோகன் ஆகியோர் படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனடியாக படக்குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வழக்கு...

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து லவ்டேல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.