'கள்ளப்படம்'... நடிகர் அவதாரமெடுக்கும் இன்னும் ஒரு இசையமைப்பாளர்!

தமிழ் சினிமாவில் மேலும் ஒரு இசையமைப்பாளர் நடிகராக அவதாரமெடுக்கிறார். அவர் மிஷ்கினின் அறிமுகமான கே.

மிஷ்கினிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜே வடிவேல் இயக்கத்தில், ஆனந்த் பொன்னிறைவன் தயாரிக்கும் கள்ளப்படம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார் கே.

'கள்ளப்படம்'... நடிகர் அவதாரமெடுக்கும் இன்னும் ஒரு இசையமைப்பாளர்!

இது சினிமாவைப் பற்றிய கதைதான். நான்கு இளைஞர்களையும், திரை உலகின் கதவுகள் தங்களுக்கு திறக்காதோ என்று எதிர்ப்பார்த்து நிற்கும் அவர்களின் எதிர்கால கனவுகளையும் பற்றிய படம்தான் இந்த கள்ளப்படம்.

அந்த நான்கு இளைஞர்களாக இயக்குனர் ஜே. வடிவேலுவுடன், இசையமைப்பாளர் கே, இந்த படத்தின் ஒளிபதிவாளர் மற்றும் படதொகுப்பாளர் ஆகியோர் நடிகர்களாக அறிமுகம் ஆகின்றனர்.

படத்தின் பிரதான தொழில் நுட்ப கலைஞர்களே படத்தின் முக்கிய கதா பாத்திரங்களாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கதாநாயகியாக நடிப்பவர் லக்ஷ்மி ப்ரியா.

படத்தின் இசையையும் கே கவனித்துக் கொள்கிறார். பெண்களை கவுரவிக்கும் வகையில் மகிழினி மணிமாறன் குரலில் ஒரு பாடலை மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி அவர் பதிவு செய்தார்.

பெண்களை கௌரவிக்கும் இந்த பாடலின் ஆசியோ என்னவோ, தயாரிபாளர்களின் சீரிய முயற்சியால் அடுத்த கட்ட இசை அமைப்பு பணியை ஆஸ்திரேலியாவில் தொடர உள்ளார் கே. ஆஸ்திரேலியாவில் இசை பதிவு செய்யும் முதல் இந்திய இசை அமைப்பாளர் என்ற பெருமை கே-வுக்கு கிடைத்துள்ளது.

 

ரஜினியின் கோச்சடையான் சிறப்புக் காட்சி பார்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் கோச்சடையானின் சிறப்புக் காட்சியைப் பார்க்கவிருக்கிறார் அவதார் இயக்குநர் ரஜினியின் கோச்சடையான் சிறப்புக் காட்சி பார்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன்!

ஹாலிவுட் திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிகழ்த்திக் கொண்டிருப்பவர்.

எல்லோரும் லைவ் ஆக்ஷன் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர்தான் அவதாரில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி வேற்றுக் கிரகவாசிகளை உருவாக்கி 3 டியில் காட்டி அசர வைத்தார்.

இன்று அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் படத்தை ரஜினியை வைத்து எடுத்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.

கோச்சடையானை 3டிக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த வேலைகள் முடிந்ததும், மார்ச் 20-ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.

இதற்கிடையில் இந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூனுக்கு போட்டுக் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சவுந்தர்யா.

இது ஏதோ விளம்பரத்துக்காக அவர் அறிவித்ததல்ல. நிஜமாகவே இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

ரூ 1500 கோடியில் அவதாரையும், டின்டின்னையும் ஹாலிவுட்டில் உருவாக்கினார்கள். ஆனால் சவுந்தர்யாவோ ரூ 125 கோடியில் கோச்சடையானை உருவாக்கியுள்ளார். பத்தில் ஒரு பங்கு கூட பட்ஜெட் இல்லை. ஆனால் சர்வதேச தரத்தில் கோச்சடையான் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தைப் பார்க்க இசைவு தெரிவித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டுவேன் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

 

ஹன்சிகா இப்போ ஹேப்பி!

மனசின் மகிழ்ச்சி முகத்திலும் செயலிலும் எதிரொலிக்கும் என்பதற்கு சமீபத்திய உதாரணம் ஹன்சிகா இப்போ ஹேப்பி!  

விளைவு... இப்போது நிற்க நேரம் இல்லாத அளவுக்கு தமிழ், தெலுங்கில் புதுப்புது வாய்ப்புகள். இதுவரை 9 புதிய படங்களை ஒப்புக் கொண்டு நடித்து வரும் ஹன்சிகாவுக்கு இந்த ஆண்டு மட்டுமே நான்கு படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாம்.

மான்கராத்தே, வாலு அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சுந்தர் சியின் அரண்மனை, ஜெயப்பிரதாவின் உறவினர் சித்தார்த்துடன் உயிரே உயிரே, ஆர்யாவுடன் மீகாமன், விக்ரமுடன் பெயரிடப்படாத ஒரு படம் என தொடர்கிறது அவர் தமிழ்ப் படப் பட்டியல்.

தெலுங்கில் இரண்டு பெரிய படங்களுக்கு ஒப்பந்தமாகியுள்ளார். இரண்டிலுமே சோலோ ஹீரோயின் வேடம்.

தொழிலில் அசுர வேக வளர்ச்சி, தனிப்பட்ட வாழ்க்கைச் சிக்கலும் தீர்ந்துபோன நிம்மதி போன்றவற்றால்.. தன் நடிப்பை மேலும் மெருகேற்றிக் கொள்ள நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாக சமீபத்தில் தன் சக நடிகையிடம் பகிர்ந்து கொண்டாராம் ஹன்சி.

 

பேஸ்புக்கில் தவறான தகவல்... போலீசில் ஆமீர்கான் புகார்

மும்பை: பேஸ்புக்கில் தன்னைப் பற்றி தவறான தகவல் வெளியிட்ட நபர் மீது போலீசில் புகார் தெரிவித்தார் நடிகர் ஆமீர்கான்.

பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ‘சத்ய மேவ ஜயதே‘ என்ற பெயரில் டி நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.

பேஸ்புக்கில் தவறான தகவல்... போலீசில் ஆமீர்கான் புகார்

இதில் குடும்ப பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை, பெண் சிசுக்கொலை உள்ளிட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பெண் கற்பழிப்பு தொடர்பாக விவாதம் நடந்தது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சமூக அமைப்பிடம் நடிகர் ஆமீர்கான் பணம் வசூல் செய்து, அந்த பணத்தை மஸ்ஜித் பகுதியில் மசூதி கட்டவும், முஸ்லிம் இளைஞர்களின் நலனுக்காக வழங்கியதாவும் பேஸ்புக் சமூக வலை தளத்தில் தகவல் வெளியானது.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆமீர்கான் நேற்று முன்தினம் மும்பை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியாவை சந்தித்து தன்னை பற்றி அவதூறாக பேஸ்புக்கில் செய்தி வெளியிட்ட நபரை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்தார்.