சிம்ஹாத்ரிபுரமாக டோலிவுட் செல்லும் தம்பி வெட்டோத்தி சுந்தரம்

ஹைதராபாத்: கரண், அஞ்சலி நடித்த தம்பி வெட்டோத்தி சுந்தரம் படம் தெலுங்கில் சிம்ஹாத்ரிபுரம் என்ற பெயரில் வெளியிடப்பட உள்ளது.

கரண், அஞ்சலி, சரவணன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் தம்பி வெட்டோத்தி சுந்தரம். படித்துவிட்டு ஆசிரியர் வேலைக்கு காத்திருந்து வேலை கிடைக்காததால் கடத்தல்காரராக ஆகும் கரண் ஒரு பெரிய ரவுடியின் மகளான அஞ்சலியை காதலிப்பார். காதல் மற்றும் கடத்தலால் கரணின் வாழ்க்கை என்னவாகிறது என்பது தான் கதை.

தெலுங்கில் மாட்லாடப் போகும் தம்பி வெட்டோத்தி சுந்தரம்

இந்த படம் தற்போது தெலுங்கில் டப் செய்யப்பட்டு சிம்ஹாத்ரிபுரம் என்ற பெயரில் ரிலீஸாக உள்ளது. படத்தை ஸ்ரீபூரணி கிரியேஷன்ஸ் பேனரின் பல்லாரி சாகர் குமார் தயாரித்துள்ளார். சித்தியுடனான பிரச்சனைக்கு பிறகு கிட்டத்தட்ட ஆந்திராவில் செட்டிலான அஞ்சலிக்கு இந்த படம் கைக்கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தமிழில் ஜொலிக்க முடியாத வெட்டோத்தி சுந்தரம் ஆந்திரா ரசிகர்களை கவர்ந்திழுப்பாரா என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும். படத்தின் டப்பிங் வேலை முடிந்துவிட்டது. படம் அடுத்த மாதம் ரிலீஸாக உள்ளது.

அஞ்சலி தற்போது 2 தமிழ் படங்கள், ஒரு கன்னடம் மற்றும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

87 ஆவது “ஆஸ்கர்” விருது திருவிழா – பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் இவைதான்!

வாஷிங்டன்: உலக திரைப்படங்களுக்கான 87 ஆவது ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டன.

அவற்றில் கிரைம் சஸ்பென்ஸ் பேக்கிரவுண்டில் உருவான "தி கிராண்ட் புதாபெஸ்ட் ஹோட்டல்" திரைப்படம், காமெடி கலந்த கற்பனை படமான "பேர்ட்மேன்" ஆகியவை அதிகபட்சமாக 9 நோட்களை ஸ்கோர் செய்தது.

87 ஆவது “ஆஸ்கர்” விருது திருவிழா – பரிந்துரைக்கப்பட்டுள்ள திரைப்படங்கள் இவைதான்!

அதற்கு அடுத்தபடியாக, இரண்டாம் உலகப்போரை சித்தரித்து எடுக்கப்பட்டுள்ள "தி இமிட்டேஷன் கேம்" ஆகியவை 8 நோட்களையும், அன்றாட வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருக்கும் "அமெரிக்கன் சினிப்பர், "பாய் ஹூட்" ஆகிய திரைப்படங்கள் 6 நோட்களையும் ஸ்கோர் செய்துள்ளது.

அதேபோல் சிறந்த திரைப்படங்கள் வரிசையில் "புதாபெஸ்ட்", "செல்மா", "தி தியரி ஆப் எவெரிதிங்", "விப்பிளாஷ்" போன்ற படங்கள் இடம் பெற்றன.

இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் ஹாலிவுட்டில் உள்ள டால்பி திரையரங்கில், வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி வழங்கப்படுகிறது.

 

நம்ம சுமார் மூஞ்சி குமாருக்கு 'பர்த்டே' வாழ்த்து சொல்லுங்கப்பா

சென்னை: நடிகர் விஜய் சேதுபதி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து ஹீரோவானவர் விஜய் சேதுபதி. படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதனால் அவரை ரசிகர்களுக்கு பிடித்துள்ளது. ரசிகர்களுக்கு அவரை பிடித்துள்ளதால் அவரது கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

பிறந்தநாள்: நம்ம சுமார் மூஞ்சி குமாரை வாழ்த்துங்கப்பா

அவர் நடிப்பது தவிர படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அவர் தற்போது ஆரஞ்சு மிட்டாய், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.

அவர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் இயக்கத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து நானும் ரவுடி தான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக அவர் தாடி, மீசையை எடுத்துள்ளார்.

இப்படி பரபரப்பாக இருக்கும் விஜய் சேதுபதி இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்களும், திரை உலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

விருது விழாவில் காட்டு, காட்டுன்னு காட்டிய நடிகை ராக்கி சாவந்த்

மும்பை: மும்பையில் நடந்த விருது விழாவில் கலந்து கொண்ட நடிகை ராக்கி சாவந்த் கவர்ச்சியான உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

லைப் ஓகே! ஸ்கிரீன் விருதுகள் வழங்கும் விழா கடந்த 14ம் தேதி மும்பையில் நடைபெற்றது. விழாவில் பாலிவுட் நடிகைகள் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே, ஆலியா பட், மலாய்க்கா அரோரா கான், ஜூஹி சாவ்லா, கஜோல், லிசா ஹேடன், ஹூமா குரைஷி, அதிதி ராவ் ஹைதரி, ஜாக்குலின் பெர்னாண்டஸ், டாப்ஸி, தபு, மன்னாரா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விருது விழாவில் காட்டு, காட்டுன்னு காட்டிய நடிகை ராக்கி சாவந்த்

விழாவில் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தும் கலந்து கொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்தார். அவர் பிங்க் நிற குட்டை கவுன் அணிந்து வந்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் ஒரு பிங்கி நர்ஸாக வந்துள்ளேன். நான் இரண்டாவது ஆண்டாக இந்த விழாவில் கலந்து கொள்கிறேன். நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் மகிழ்ச்சி என்றார்.

முன்னழகில் பெரும்பகுதியை காட்டிக் கொண்டு உடை அணிந்திருந்த ராக்கி பலரின் கவனத்தையும் ஈர்த்தார்.

 

பொங்கலை முன்னிட்டு... மீண்டும் வெளிநாடுகளில் ரிலீசானது லிங்கா... இணையதளத்தில்!

சென்னை: பொங்கலை முன்னிட்டு ஹீரோடாக்கீஸ்.காம் என்ற நிறுவனம் ரஜினி நடித்த லிங்கா படத்தை இணையதளத்தில் ரிலீஸ் செய்துள்ளது.

பொங்கலை முன்னிட்டு... மீண்டும் வெளிநாடுகளில் ரிலீசானது லிங்கா... இணையதளத்தில்!

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்துள்ள படம் லிங்கா. கடந்தமாதம் 12ம் தேதி ரஜினி பிறந்தநாளன்று இப்படம் ரிலீசானது. ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியிருந்த இப்படம் தமிழகமெங்கும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இந்தியா மட்டுமின்றி இப்படம் வெளிநாடுகளிலும் ரிலீசாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிலையில், இப்படத்தை முதன்முறையாக மீண்டும் இந்தியா தவிர்த்து வெளிநாடுகளில் இணையதளம் மூலமாக ரிலீஸ் செய்துள்ளனர். மிகவும் துல்லியமான பிரதியுடன், ஹீரோ டாக்கீஸ்.காம் என்ற நிறுவனம் இப்படத்தை பொங்கலை முன்னிட்டு நேற்று ரிலீஸ் செய்துள்ளது.

 

பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் 'ஐ' திரைப்படம்! ஹிந்தியில் இன்று ரிலீஸ்

சென்னை: ஷங்கரின் ஐ திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் வசூல் வேட்டை நடத்திவருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்ஷன் நடிப்பில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் ஐ. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளில் ஐ திரைப்படம் ரூ.10.5 கோடி அளவுக்கு வசூலித்துள்ளது. கேரளாவில் அம்மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக 3.05 கோடியை இத்திரைப்படம் வசூலித்துள்ளது. அம்மாநிலத்தில் 225 திரையரங்குகளில் வெளியான ஐ, முன் எப்போதும் இல்லாத முதல் நாள் வசூலை ஒரு திரைப்படத்திற்கு ஈட்டித் தந்துள்ளது.

பாக்ஸ் ஆபீசை கலக்கிவரும் 'ஐ' திரைப்படம்! ஹிந்தியில் இன்று ரிலீஸ்

அதேபோல அண்டை மாநிலமான கர்நாடகாவில் 2 கோடி வசூலாகியுள்ளது. அமெரிக்காவில் சுமார் 3 லட்சம் டாலர் மதிப்புக்கு வசூல் வேட்டை நடத்தியுள்ளது ஐ. இவையெல்லாம் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து வெளிவராத, பிற வட்டார தகவல்கள் மூலம் சேகரித்த வசூல் நிலவரமாகும்.

எதிர்பார்ப்பு காரணமாக ஐ படத்தை ரசிகர்கள் போட்டி போட்டு பார்த்ததால் கிடைத்த முதல்நாள் வசூல்தான் இது. படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தால் இதே வசூல் வேட்டை தொடரும், அல்லது படத்தின் பட்ஜெட்டை, வசூல் எட்டிப்பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுவிடும். அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம் வரும் 29ம்தேதிதான் வெளியாகிறது. அதுவரை பெரிய படங்கள் எதுவும் வெளியாகப்போவதில்லை என்பதால் ஐ தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் போட்ட முதலுக்கு மோசம் ஏற்பட்டுவிடாது என்று சினிமா பார்வையாளர்கள் கணிக்கின்றனர். இதனிடையே ஹிந்தியில் இன்று ஐ திரைப்படம் ரிலீசாக உள்ளது.

 

மூன்று அத்தைகளும்… அத்தை பெண்களும் இதுதான் ‘ஆம்பள’…

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்.... இந்த படத்திற்கு ஏன் ‘ஆம்பள' என்று பெயர் வைத்தார்கள் என்று. ஆம்பள என்றால் மேன்லி... ‘தில்' என்று ஒரு டிவி பேட்டியில் கூறியிருந்தார் விஷால்.

ஆனால் அத்தை பெண்களை கரெக்ட் பண்ணுவதும்... சண்டை காட்சியில் பறந்து பறந்து அடிப்பதும் தவிர விஷால் வேறு எதுவும் தில் ஆக செய்வதாக தெரியவில்லை.

சரி நாம் அந்த கதைக்கு போகவேண்டாம். சரக்கு மிக்சிங் பண்ணுவதில் தம்பியை கண்டுபிடிக்கும் விஷால் தொடங்கி அந்த ஊட்டி கார் சேசிங் வரை சுந்தர்.சியின் அக்மார்க் ரகம் தெரிகிறது.

மூன்று அத்தைகளும்… அத்தை பெண்களும் இதுதான் ‘ஆம்பள’…

சட்டு சட்டென்று வந்து போகும் பாடல்.... அதில் கவர்ச்சி புயலாய் வீசும் ஹன்சிகா ( கண் கூசுகிறது) கொடுத்த காசுக்கு இதுதான் மிச்சம் ( பின் சீட்டில் கமெண்ட்)

ஆனால் பாடல் எதுவுமே கேட்பது போல இல்லை. சத்தம் காது ஜவ்வை கிழிக்கிறது. ஹிப் ஹாப் தமிழா இசையமைத்த பாடல்கள் எதுவுமே கேட்கும்படியாக இல்லை. இந்தப் படத்துக்கு இசையமைக்க மெட்டுப்போட பாங்காக், ஸ்பெயின் எல்லாம் போகவில்லை. ஆர்.ஏ. புரத்தில் தங்கி இதை ஹிப் ஹாப் தமிழா செய்தார். பஜ்ஜி, டீ செலவுதான் பெரிய செலவு. 2500 ரூபாய்தான் செலவானதாகவும், கூறினார் விஷால். என்னைக் கேட்டால் அதுகூட வேஸ்டுதானோ.

மூன்று அத்தைகளும்… அத்தை பெண்களும் இதுதான் ‘ஆம்பள’…

சரி ஆம்பள படத்தின் கதைக்கு வருவோம்.

ஊட்டியில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் அனுப்பும் கம்பெனி நடத்தும் விஷாலுக்கு அழகான, கவர்ச்சியான ஹன்சிகாவை பார்த்த உடனே காதல் வருகிறது. காமெடியன் சந்தானம் ஹன்சிகாவை காதலிப்பதாக கூற நமக்கெல்லாம் பாஸ்தா செட் ஆகாது என்று நீள வசனம் பேசுகிறார் விஷால்.

அதோடு நமக்கெல்லாம் தனலட்சுமி, வரலட்சுமிதான் செட் ஆகும் என்றும் கூறுகிறார் விஷால். கடைசியில் விஷாலும் ஹன்சிகாவும் விதிவசத்தால் காதலிக்க. அந்த காதலை பிரிக்கிறார் சந்தானம்.

மூன்று அத்தைகளும்… அத்தை பெண்களும் இதுதான் ‘ஆம்பள’…

அந்த சோகத்தில் பாரில் மிதக்கிறார் விஷால். அம்மா சொன்ன கதை மூலம் காணாமல் போன அப்பா பிரபு தேடி மதுரை வர உடன் அப்பாவின் காதலியின் மகனும் வரகிறார்.

உலகத்திலேயே முதன்முறையாக சரக்கு மிக்சிங் மூலம் ஒன்று சேருகிறது குடும்பம் ( நல்ல அப்பா! நல்ல பையன்கள்!!)

பிரபுவிற்கு ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய மூன்று தங்கைகள், அந்த தங்கைகளுக்கு மூன்று பெண்கள். மூவரையும் திருமணம் செய்து கொண்டால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும் என்று அப்பா கூற பையன்கள் கிளம்புகிறார்கள். அத்தை பெண்களை கடத்துவதற்கு பதிலாக அத்தைகளை கடத்துகிறார்கள். (அதுக்குள்ள இடைவேளை வந்துருச்சே. )

இடைவேளைக்குப் பின்னர் அத்தைகளையும், அத்தை பெண்களையும் எப்படி மூவரும் கரெக்ட் செய்கின்றனர். வில்லனை எப்படி பந்தாடுகின்றனர் என்பதுதான் மீதி கதை.

அரண்மனை பார்த்த சூட்டோடு அதையே நம்பி ஆம்பள படம் பார்க்க போனால் ஏமாந்துதான் போகவேண்டும். காமெடிக்கு சந்தானம், சதீஷ் என இரண்டு பேர் இருக்கிறார்கள்.

பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் கொடுத்த விஷாலுக்கு இது சற்றே சறுக்கல்தான். படம் முடிஞ்சிருச்சே என்று இருக்கும் போது ‘இன்பம் பொங்கும் வெண்நிலா ரீமிக்ஸ்' பாடலை போட ஐயோ ஆளை விடுங்கட என்று வெளியேறுகிறது கூட்டம்.

இடைவேளையில் காணாமல் போன சந்தானம் கடைசியில் வந்து கிரனுடன் கட்டி புரள்கிறார். சுந்தர்.சியிடம் காதை கடித்த பலன் நிறைவேறிய திருப்தி தெரிகிறது சந்தானத்தின் முகத்தில்.

மூன்று மாதத்தில் முடித்த படம் என்பதால் பெரிதாக மெனக்கெடவில்லை சுந்தர்.சி.

இடையில் குஷ்புவை வேறு ஒரு பாட்டுக்கு குத்து போட விட்டிருக்கிறார் சுந்தர்.சி

மொத்தத்தில் ஆம்பள ஒன்றும் அசத்தவில்லை... ஆளை விட்டால் போதும் என்ற ரகமாகத்தான் இருக்கிறது என்பது ரசிகர்களின் கணிப்பு.

 

அமலா பால் கர்ப்பம் இல்லையாம், அது தொப்பையாம்ப்பா...

சென்னை: தான் கர்ப்பமாக இருப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நடிகை அமலா பால் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விருது விழாவுக்கு வந்தவர் புடவை அணிந்து வந்தார். அவர் தனது வயிறை மறைக்க புடவை அணிந்ததாக பேசப்பட்டது.

அமலா பால் கர்ப்பம் இல்லையாம், அது தொப்பையாம்ப்பா...

மேலும் அண்மையில் அவர் தனது கணவர் இயக்குனர் விஜய்யுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. அதில் அமலாவின் வயிறு பெரிதாக இருந்தது. இதனால் அவர் நிச்சயம் கர்ப்பமாக உள்ளார் என்று கூறப்பட்டது.

அமலா பால் கர்ப்பம் இல்லையாம், அது தொப்பையாம்ப்பா...

இந்நிலையில் இது குறித்து அமலா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

நான் இந்த ஆண்டு கிறிஸ்துமஸை கொஞ்சம் அதிகமாகவே என்ஜாய் செய்துவிட்டேன். அதனால் வயிறு கொஞ்சம் பெரிதாகிவிட்டது. இதை பார்த்து நான் கர்ப்பமாக இருப்பதாக சில மீடியாக்கள் இரண்டாவது முறையாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் கர்ப்பமாக இருந்தால் அதை ஏன் மறைக்க வேண்டும். அப்படி நடந்தால் அதை நானே உங்களிடம் தெரிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 

பயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்

சென்னை: ஷாம் ஆண்டன் இயக்கத்தில், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, கருணாஸ், பாலசரவணன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வெளியாகியுள்ள திரில் மற்றும் காமெடி கலந்த சரவெடிதான் டார்லிங்.

கதிர் (ஜி.வி.பிரகாஷ்), நிஷா (நிக்கி கல்ராணி), குமார் (பாலசரவணன்) மற்றும் அதிசயராஜ் (கருணாஸ்) ஆகிய 4 பேரும், தற்கொலை செய்து கொள்வதற்காக கடற்கரையோர பங்களாவுக்கு செல்கிறார்கள்.

பயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்

ஆனால் அங்குதான் டிவிஸ்ட். உண்மையிலேயே நிஷாவும், குமாரும் தற்கொலை செய்துகொள்ள பங்களாவுக்கு வரவில்லை. எப்படியாவது கதிரை தற்கொலை முடிவில் இருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக உடன் வந்தவர்கள். எனவே கதிருடன் நெருங்கி பழகி காதலில் வீழ்த்தி தற்கொலை முடிவை கைவிட செய்ய முயலுகிறார் கிளாமர் குயின் நிஷா.

அங்குதான் ரசிகர்களுக்கு அடுத்த டிவிஸ்ட் காத்திருக்கிறது. எப்போதெல்லாம் நிஷாவும் கதிரும் நெருங்குகிறார்களோ அப்போதெல்லாம், பெண் ஆவியொன்று நடுவில் புகுந்து காதலர்களுக்கு இடையூறு செய்கிறது. நிஷா உடம்பில் புகுந்து கொண்டு கதிரை நெருங்கவிடாமல் செய்து நண்பர்களையும் அடித்து துவம்சம் செய்கிறது. என்னடா இது... கொஞ்சம் கிளாமரா சீன் பார்க்கலாமுன்னு வந்தா இப்படி கெடுக்கிறதே பேய் என்று ரசிகர்கள் சாபம் போடும் அளவுக்கு பேய் அமர்க்களப்படுத்துகிறது.

பயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்

சரி, இந்த பேய்க்கு அப்படி என்னதான் வேணும் அப்படீன்னு கேட்டா, அப்போ ஒரு பிளாஷ் பேக். பேய்க்கெல்லாம் பிளாஷ் பேக் வைக்கிறாங்களேன்னு சலிச்சிக்காதீங்க. பிளாஷ் பேக் இல்லாத பேய் படம் என்னைக்கு வந்துருக்கு. பிளாஷ் பேக் காட்டுனாதானே ஒரு பேய் எப்படி உருவாகிறது என்ற 'அறிவியல் பூர்வ காரணம்' நமக்கு தெரியும்.

ஓகே.. பேய் ஆராய்ச்சிய விடுவோம். விஷயத்துக்கு வருவோம். ஸ்ருதி என்ற இளம் பெண்ணும், காதலன் சிவாவும் அதே பங்களாவுக்கு சில மாதங்கள் முன்பு வரும்போது, ஐந்து வாலிபர்களால் காதலன் கண்முன்பே கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார் ஸ்ருதி. காதலன் சிவாவும் கொலை செய்யப்படுகிறார். காதலனை பிரிந்த சோகத்தில், எந்த காதலர்களையும் சேர விடக்கூடாது என்று சபதம் ஏற்று சுற்றிவருகிறது ஸ்ருதி ஆவி.

பயத்தையும்.. சிரிப்பையும் கலந்து படையல் வைக்கும் 'டார்லிங்': பட விமர்சனம்

காதலியை கரம் பிடிப்பதற்காக, ஐந்து வில்லன்களையும் தேடி பிடித்து ஆவியிடம் கதிர் ஒப்படைத்தாரா, நிஷா உடலில் இருந்து ஆவி வெளியேறியதா இல்லையா என்பதெல்லாம் மிச்ச கதை.

கேட்பதற்கு அறுத பழசான படங்களின் பார்முலா மாதிரி இருந்தாலும், திரைக்கதை, காமெடி கொண்டு ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளார் இயக்குநர் ஷாம் ஆண்டன். பேய் உருவாக்கும் அச்ச உணர்வு, நண்பர்கள் செய்யும் காமெடி ரவுசு என இருவேறு உணர்வுகளையும் ஒருசேர கலந்து கொடுத்து விருந்து படைத்துள்ளார் இயக்குநர். சபாஷ்!

யாமிருக்க பயமே திரைப்பட பாணியிலேயே திரைக்கதை பயணித்தாலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. மந்திரிந்த முந்திரியை சாப்பிட்டுவிட்டு பேயிடம் மாட்டிக்கொள்ளும் சாப்பாட்டு ராமன் கதாப்பாத்திரம் கருணாசுக்கு. ரொம்ப நாளைக்கு அப்புறம் கருணாஸ், பழைய கருணாசாய் திரும்பிவந்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷுக்குதான் நடிப்பு வரமாட்டேன் என்று சத்தியம் செய்கிறது. முதல் படம் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம். ஹீரோயின் நிக்கி கல்ராணி, ரசிகர்களை ஏமாற்றாத அளவுக்கு கவர்ச்சி காண்பித்துள்ளார். ஆவி இறங்கும் வேளைகளில், தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

பொங்கல் வருகையில் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி, போட்ட பணத்துக்கு மேல் பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுக்கப்போகும் படம் டார்லிங்காகத்தான் இருக்கும் என்று 'பெட்' கட்டுகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

 

ஆஸ்கர் விருதை தவறவிட்டார் ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான்

நியூயார்க்: ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் இல்லை. இதனால் மீண்டும் ஆஸ்கர் பெறும் வாய்ப்பை இழந்துவிட்டார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக ஒன்று அல்ல இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தார். அதன் பிறகு அவர் மீண்டும் ஆஸ்கர் விருதை பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான விருந்துக்கு பரிந்துரை செய்ய தகுதியான படங்கள் பட்டியலில் அவர் இசையமைத்த தி ஹன்ட்ரட் புட் ஜர்னி, மில்லியன் டாலர் ஆர்ம் ஆகிய ஹாலிவுட் படங்களும், ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படமும் இடம்பெற்றது.

ஆஸ்கர் விருதை தவறவிட்டார் ஆஸ்கர் மன்னன் ஏ.ஆர். ரஹ்மான்

இந்நிலையில் 87வது ஆஸ்கர் விருதுக்கான சிறந்த ஒரிஜினல் ஸ்கோருக்கான பரிந்துரை பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஏ.ஆர்.ரஹ்மான் பெயர் இல்லை. இதனால் அவர் ஆஸ்கர் விருதை தவறவிட்டுள்ளார்.

இது குறித்து ரஹ்மான் கூறுகையில்,

எனக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை. கடவுள் என்னிடம் அன்பாக உள்ளார் என்று நினைக்கிறேன். இது என் நீண்ட பயணத்தில் ஒரு நிறுத்தம் அவ்வளவு தான் என்றார்.

இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் பிப்ரவரி மாதம் 22 ம் தேதி நடைபெற உள்ளது.