எலியும் பூனையுமாக ஊரு... நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி!

கிராமத்துப் பின்னணியில் உயிரோட்டமான நகைச்சுவையுடன் வரும் படங்கள் வெற்றி பெற்று வருகின்றன. இந்த வெற்றி வரிசையில் இடம் பெற ஒரு வித்தியாச தலைப்புடன் வருகிறது 'யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளவை'.

தமிழ்நாட்டில் பிரபலமான இந்தப் பழமொழிக்கு விளக்கம் தேவையில்லை. இந்தப் பெயரையே தலைப்பாக வைத்து அறிமுக இயக்குநர் சுவாமிராஜ் படத்தை இயக்கியுள்ளார் .

yogiyan varan somba thooki ulla vai

விஜய் ஆர். நாகராஜ் நாயகனாகவும், ப்ரியா மேனன் நாயகியாகவும் அறிமுகாகின்றனர். தவிர சிங்கம்புலி, சுப்புராஜ், நெல்லை சிவா, தென்னவன், , ஹலோ கந்தசாமி,வெங்கல்ராஜ், போண்டாமணி என தெரிந்த நகைச்சுவை முகங்களும் படத்தில் உண்டு.

yogiyan varan somba thooki ulla vai

இரண்டு ஊர்கள் கதாபாத்திரங்கள் போல படத்தில் வருகின்றன. இரண்டு ஊர்களுக்கு இடையில் ஜென்மப் பகை. எலியும் பூனையுமாக அந்த ஊர்க்காரர்கள் இருக்கிறார்கள். பகையான ஊர்களிடையே உறவாட வருவது போல காதலர்கள் உருவாகிறார்கள். அதாவது எலியும் பூனையுமாக உள்ள ஊர்களிலிருந்து நகமும் சதையுமாக ஒரு காதல் ஜோடி உருவாகிறது. ஊர்ப்பகை இவர்களின் காதலால் பெரிதானதா மாறியதா என்பதே கதையாம்.

yogiyan varan somba thooki ulla vai

காதலர்களை சேர்ந்து வைப்பதாக சிங்கம்புலி எடுக்கும் முயற்சிகள் படத்தில் விலாநோக சிரிக்க வைக்கும் காட்சிகள். 'யோக்கியன் வாரான் செம்பை தூக்கி உள்ளவை' என்கிற தலைப்பு சிங்கம் புலிக்குத்தானாம்.

படத்தில் 6 பாடல்கள் ஆதிஷ் உத்திரியன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை கேடிஎப்சி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.

படத்தில் வரும் கானாபாலா பாடிய பாடலான

'அன்பு கெட்ட பொண்ணு மேல
ஆசை உனக்கு எதுக்குடா
அவசரமா எதையும் செய்யும்
பொண்ண தூர ஒதுக்குடா
இதயம் இல்லா பொண்ண நெனச்சி
ஏங்குறத நிறுத்துடா
பாதை மாறி போகும் மனச
பக்குவமா திருத்துடா'- என்ற பாடல் பெரிய அளவில் பேசப்படும் என்கிறார் இயக்குநர்.

yogiyan varan somba thooki ulla vai

இப்படத்தின் இசை நேற்று பிக் எப் எம் மில் வெளியிடப்பட்டது. தயாரிப்பாளர் சங்கத் துணைத் தலைவர் பி.எல். தேனப்பன், நடிகர்கள் சிங்கம்புலி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

yogiyan varan somba thooki ulla vai
 

'போர்க்களத்தில் ஒரு பூ படம் வரவிடாமல் தடுத்தார் எஸ்வி சேகர்!'- இயக்குநர் குற்றச்சாட்டு

போர்க்களத்தில் ஒரு பூ படத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளார் இயக்குநர் கணேசன்.

இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ் பெண் இசைப்பிரியா, சிங்கள ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து, ‘போர்க்களத்தில் ஒரு பூ' என்ற படம் தயாரிக்கப்பட்டது. இசைப்பிரியாவாக தான்யா நடித்துள்ளார்.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இளையராஜா இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் எப்போதோ வெளிவரவேண்டியது. ஆனால் சென்சார் குழு இழுத்தடிப்பதால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்தியாவின் நட்பு நாடான இலங்கைக்கு எதிரான காட்சிகள் இருப்பதால் படத்தை வெளியிடக் கூடாது எனத் தடைவிதித்துள்ளது சென்சார் போர்டு.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் பூர்வீகம், தமிழ்நாடு. வசிப்பது, பெங்களூருவில். 6 கன்னட படங்களை இயக்கியுள்ளேன்.

நான் இயக்கிய முதல் தமிழ்ப் படம் ‘போர்க்களத்தில் ஒரு பூ'. இலங்கையில், ஊடகவியலாளர் இசைப்பிரியா கற்பழிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதை உலகுக்கு காட்டும் விதமாக ‘போர்க்களத்தில் ஒரு பூ' படத்தை இயக்கினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான் என்னை இந்த படத்தை இயக்க தூண்டியது.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இந்த படத்தை முதன் முதலாக கடந்த மே மாதம் தணிக்கைக்கு அனுப்பினேன். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், திரையிட அனுமதி மறுத்தார்கள். அதைத்தொடர்ந்து படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பினேன். மறுதணிக்கை குழுவின் தலைவராக இருந்த எஸ்.வி.சேகரும், தமிழ்நாடு தணிக்கை குழு அதிகாரி பழனிச்சாமியும் படத்தைப் பார்த்துவிட்டு, அனுமதி கொடுக்க மறுத்து விட்டார்கள். அதன்பிறகு படத்தை டெல்லிக்கு அனுப்பினேன். அங்கு சில காட்சிகளை நீக்கச் சொன்னார்கள்.

அவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கிவிட்டு, மீண்டும் அனுமதி கோரி படத்தை அனுப்பினேன். இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட காட்சியை நீக்க சொன்னார்கள். அதற்கு நான் மறுத்ததால் மீண்டும் படத்துக்கு அனுமதி சான்றிதழ் கொடுக்க மறுத்து, படத்துக்கு தடை விதித்து விட்டார்கள்.

S Ve Shekar caused for porkalathil oru poo ban

இந்த படம், தமிழ் ஈழத்தை நியாயப்படுத்துவதாக-விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக இருப்பதாகவும், படத்தை வெளியிட்டால் இந்தியா-இலங்கை உறவு பாதிக்கும் என்றும் தணிக்கை குழுவினர் கூறுகிறார்கள். இதை எதிர்த்து, நான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளேன்," என்றார்.

 

அஞ்சுக்கு ஒண்ணு படத்துக்கு மிரட்டல்.. பொன் குமாருக்கு இயக்குநர் கடும் கண்டனம்!

அஞ்சுக்கு ஒண்ணு படத்தை வெளிவராமல் விட மாட்டோம் என்று கூறியுள்ள கட்டட சங்க தொழிலாளர் தலைவர் பொன் குமாருக்கு படத்தின் இயக்குநர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இயக்குநர் ஆர்வியார், தயாரிப்பாளர் எவர்கிரீன் எஸ் சண்முகம் கூறுகையில், "ஒரு நாளிதழில் கட்டிட தொழிலாளர் மத்திய சங்க தலைவர் பொன் குமார் பேரண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த 'அஞ்சுக்கு ஒண்ணு' திரைப்படத்தில் சித்தாள் பெண்களை பாலியல் ரீதியாக கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டதாக தவறான தகவலை பத்திரிக்கை வாயிலாக தெரியப்படுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.

Anjukku Onnu director condemns Pon Kumar

மேலும் இப்படத்தை பார்க்காமலேயே தணிக்கை குழுவினரால் அனுமதிக்கப்பட்ட காட்சிகளை நீக்கச் சொல்வதற்கு பொன்குமாருக்கு என்ன உரிமை உள்ளது?

அப்படியே சித்தரிக்கப்பட்டிருக்குமாயின் பொன்குமார் படத்தின் தயாரிப்பாளரையோ அல்லது இயக்குநரையோ தொடர்புகொண்டு விளக்கம் கேட்டிருக்கலாம். அல்லது திரைப்பட சங்கத்தையோ, இயக்குநர் சங்கத்தையோ தொடர்புகொண்டு நியாயத்தைக் கேட்டிருக்கலாம்.

அதையெல்லாம் விட்டுவிட்டு பத்திரிகை வாயிலாக திரைப்படத்தை விமர்சிப்பதற்கும், தடைசெய்யக் கோருவதற்கும் இவர் யார்? இதனால் எங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை பொன்குமார் ஏற்றுக் கொள்வாரா? எதற்காக பொய்யான விமர்சனத்தை வெளியிட வேண்டும்?

இத்திரைப்படம் வெளியிடுவதற்கான வேலைகளும் நடந்துகொண்டிருக்கையில் இவருடைய விளம்பரத்தால் வியாபாரத்திற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பொன்குமார் இப்படி ஒரு விமர்சனத்தை வைக்க என்ன காரணம். சுய விளம்பத்திற்காக திரைப்படத்தை விமர்சிக்கிறாரா? இல்லை தயாரிப்பாளரை மிரட்டி லாபம் தேட முயலுகிறாரா? இப்படியே ஒவ்வொரு இயக்கமும் காரணமே இல்லாமல் போர்க்கொடி தூக்கினால் திரைப்படத்துறையின் நிலை என்னாவது? திரைப்படத் துறையை நம்பி வாழும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் நிலைமை என்ன? இத்தொழிலை நம்பி பணம் முதலீடு செய்யும் முதலாளியின் நிலை என்ன?," என கேள்வி எழுப்பினர்.

 

பாபி சிம்ஹா ரஜினியாகிவிட முடியுமா?- டி சிவாவின் அதிரடிப் பேச்சு

ஒரு நடிகர் ஒன்றிரண்டு சுமாரான வெற்றிப் படங்களைக் கொடுத்த உடனே அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று அழைக்கும் கெட்ட வியாதி தமிழ் சினிமாக்காரர்களைத் தொற்றி ரொம்ப காலமாகிவிட்டது.

இப்போது இந்த கெட்ட வியாதிக்காரர்கள் அடுத்து தொங்கிக் கொண்டிருப்பது பாபி சிம்ஹாவை. ஐ மேடையில் அர்னால்டின் சட்டைக் காலரை இழுத்து அசிங்கப்படுத்தி டென்ஷனாக்கி அனுப்பினாரே... அதே பாபி சிம்ஹாதான்.

Bobby Simha never becomes Rajini, says T Siva

இவரைப் பார்க்கும்போதெல்லாம், இவர் அப்படியே பில்லா, ரங்கா, ஜானி காலத்து ரஜினி மாதிரியே இருக்கிறார் (அட காமாலைக் கண்ணனுங்களா...) என்று மேடைக்கு மேடை சிலர் அடிக்கிற ஜால்ராவின் காது ஜவ்வு அந்து போகிறது.

இவர்கள் தாங்களாகவே இப்படி உளறுகிறார்களா.. அல்லது இவர்தான் கூலிக்கு ஆள்வைத்து கூவ வைக்கிறாரா என்று கேட்கும் அளவுக்குப் போய்விட்டது நிலை. இப்படி இவர்கள் போட்ட ஜால்ராவில் மயங்கிப்போய், குரல், நடை, ஸ்டைல் என அனைத்திலும் ரஜினியைக் காப்பியடிக்க ஆரம்பித்துள்ளார் பாபி.

சமீபத்தில் நடந்த ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இதை நேரடியாகப் பார்த்து, நங்கென்று ஒரு குட்டு வைத்திருக்கிறார் அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா.

சிவாவின் அந்தப் பேச்சுக்கு செம ரெஸ்பான்ஸ். பாபி சிம்ஹாவை ரஜினியுடன் ஒப்பிட்டுப் பேசியதை எந்த அளவுக்கு ஜீரணிக்க முடியவில்லை என்று காட்டுவதாக இருந்தது ரசிகர்களின் அந்த கைத்தட்டல்.

சிவா பேசியது இதுதான்:

இங்கு பேசுன எல்லாரும் பாபி சிம்ஹாவை அடுத்த ரஜினியைப் பார்க்குற மாதிரியிருக்குன்னு பேசுனாங்க.

ரஜினியாவறது அவ்வளவு சுலபம் இல்லங்க. அவரால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் விநியோகஸ்தர்கள் தியேட்டர்காரர்கள் ஏராளம். அப்படியே தன் படம் நஷ்டப்பட்டாலும் அந்த நஷ்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிற பழக்கம் ரஜினிக்கு உண்டு.

இதையெல்லாம் பாபி சிம்ஹாவும் வளர்த்துக்கணும். அதற்குள் அவரை ரஜினி இடத்திற்கு வருவார் என்று கூறுவது பொருத்தமாகாது," என்றார்.

'பாபி சிம்ஹா ரஜினியாவாரா மாட்டாரான்னு ஜோசியம் சொல்றவங்க அப்படியே மனோபாலாவின் பாம்புச் சட்டை ஆபீஸ் பக்கம் போங்க... பாபி பத்தி அவர் புலம்பறதையும் கொஞ்சம் கேட்டுட்டு வாங்க' - டி சிவா பேசியதைக் கேட்ட பிறகு, அருகிலிருந்த இயக்குநர் ஒருவர் அடித்த கமெண்ட் இது!

 

லயோலா கல்லூரி விழாவில் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படக்குழு

லயோலா பொறியியல் கல்லூரியின் எஞ்சினியா எனப்படும் கலை விழாவை இன்று நடிகர் ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் த்ரிஷா இல்லைனா நயன்தாரா படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை துவக்கி வைத்து பேசினர்.

Trisha Illanna Nayanthara crew at Loyola College event

முதலில் பேசிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், 'நாம் காணும் கனவை நோக்கி ஓடினால் நிச்சயம் அது ஒரு நாள் நிறைவேறும். நான் கல்லூரி காலங்களில் படிக்காமல் கண்ட பகல் கனவு இன்று நினைவாகி உள்ளது. நான் உங்கள் முன் இப்போது இயக்குனராக நிற்கிறேன். எனக்கு என் பள்ளி காலத்தில் இருந்தே இயக்குனராக வேண்டும் என்று ரொம்ப ஆசை அப்போதில் இருந்தே நான் கதை எழுதுவது; படம் பார்ப்பது என்று பெரிய அளவில் தயாராகி வந்தேன். ஆனால் நான் பொறியியல் தான் படிக்க வேண்டும் என்று என் அம்மா உறுதியாக இருந்ததால் நான் பி.இ படித்தேன். அதன் பின் சினிமா இயக்க வேண்டும் என்று அம்மாவிடம் சொனேன். அரியரை கிளியர் செய்தால் படம் இயக்க செல்லலாம் என்றார். என் மேல் அவ்ளோ நம்பிக்கை. ஆல் கிளியர் செய்துவிட்டு இப்போ உங்கள் முன் இயக்குனராக நிற்கிறேன். என் தந்தையின் கனவோடு சேர்த்து என் கனவும் நிஜமாகிவிட்டது. த்ரிஷா இல்லைனா நயன்தாரா படம் ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை என்னை நம்பிய ஒரே ஆள் ஜி.வி. பிரகாஷ் தான் அவருக்கு நன்றி.

Trisha Illanna Nayanthara crew at Loyola College event

மாணவர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்கள் கனவை நிஜமாக்க வேண்டும்," என்றார்.

அடுத்ததாக பேசிய ஜி.வி.பிரகாஷ் குமார், "நான் கல்லூரிக்கே சென்றதில்லை. கல்லூரி வாழ்க்கை இனிமையானது அதை ஒரு துளி கூட மிஸ் செய்துவிட கூடாது," என்றார். விழாவில் நடந்த பிளாஷ் மோப் நடனம் நன்றாக இருந்தது என வாழ்த்தினார்.

Trisha Illanna Nayanthara crew at Loyola College event

மாணவர்கள் அவரை பாடச் சொல்லி கேட்டனர். அவர் பாட்டுக்கு ஏக ரெஸ்பான்ஸ்.

 

இந்தியாவில் முதல்முறையாக சினிமா தொழிலாளர்களுக்கு பயிற்சி!- கமல் முயற்சி

திரைத் துறை பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் பங்களிப்புடனேயே இயங்குகிறது. தற்போது கிட்டத்தட்ட 35 திரைத்துறை சார்ந்த கூட்டமைப்புகள் இருக்கின்றன. இதில் இருப்பவர்களது திறனாய்வுக்கும், பயிற்சிக்கும் சரியான உள்கட்டமைப்போ, தளமோ தற்போது இல்லை.

இதனால் அகில இந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவரான ஜி.சிவாவின் முயற்சியினாலும், ஃபிக்கி அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபையின் தலைவர் கமல்ஹாசனின் வழிகாட்டுதலின்படியும், 3 நாள் அடிப்படை பயிற்சிப் பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Skilled training for cinema employees

கிட்டத்தட்ட 10,000 தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ள இதில், திரைத் துறையை சேர்ந்த தேசிய மற்றும் சர்வதேச பிரமுகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நிபுணர்கள் என பலர் பங்கேற்கவுள்ளனர்.

இந்த பயிற்சி பட்டறைக்காக, நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரத்தில், மூன்று நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை திரைப்பட சங்கம் அறிவித்துள்ளது.

Skilled training for cinema employees

ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் சபை, இந்திய தொழில் மற்றும் வர்த்தக கூட்டமைப்பின் ஓர் அங்கமாகும். இதன் மூலம் 2022-ஆம் ஆண்டுக்குள் 11.24 லட்சம் தொழிலாளர்கள் பயிற்சி பெறவுள்ளனர். மேலும் இந்த சபை பிரதம மந்திரியின் கவுஷல் விகாஸ் யோஜ்னா திட்டத்தில் பங்கேற்று இந்தியா முழுவதிலும் 5000 மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளது.

 

அந்தப் படத்திலிருப்பது 'சூப்பர் ஸ்டார்' இல்லை!- இயக்குநர் ரஞ்சித் விளக்கம்

கபாலி ரஜினி கெட்டப் என்ற பெயரில் கடந்த 12 மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பைக் கிளப்பிக் கொண்டிருந்த அந்தப் படத்திலிருப்பது ரஜினியே அல்ல என்று இயக்குநர் பா ரஞ்சித் மறுத்துள்ளார்.

ஜடாமுடி, முகம் முழுக்க நாடகக் கலைஞர் மாதிரி மேக்கப் போட்டு செல்ஃபி எடுக்கும் போஸில் ஒரு ஸ்டில் நேற்று இரவு இணையத்தில் வெளியாகி, 'யார் இந்த நடிகர், கண்டுபிடியுங்கள்!' என்று கேட்டிருந்தனர்.

It is not Rajinikanth, says Ranjith

இதனை சிலர் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட இதர சமூகத் தளங்களில் பகிர, இது கபாலி ரஜினிதான் என்று ரசிகர்கள் பேச, கருத்து கூற ஆரம்பித்துவிட்டனர். விடிவதற்குள் அந்த புகைப்படம் பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது. அது கபாலி ரஜினிதான் என்று 99 சதவீதம் எல்லோரும் நம்ப ஆரம்பித்த நிலையில், அதுகுறித்து மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் ரஞ்சித்.

இந்தப் படத்தில் இருப்பது ரஜினியே அல்ல.. என்று அவர் தெரிவித்துவிட்டார்.

நடிகர் மோகன் ராம் அதற்கு முன்பே, 'நான் நன்கு விசாரித்துவிட்டேன், இது ரஜினியல்ல," என்று தெரிவித்திருந்தார்.

It is not Rajinikanth, says Ranjith

இந்த நிலையில், அந்தப் படத்தில் இருப்பது டிவியிலிருந்து சினிமாவுக்கு நடிக்க வந்துள்ள மா கா பா ஆனந்த் என்பவர்தான் என்று கூற ஆரம்பித்துள்ளனர்.

ச்சே... இந்த டெம்ப்டேஷனைக் குறைக்க.. அட்லீஸ்ட், ஒரு அஃபிஷியல் ஸ்டில்லையாவது கொடுத்துடுங்கப்பா!

 

கபாலி ரஜினியா இது... சமூக வலைத் தளங்களில் பரபரக்கும் புதிய படம்!

நேற்று இரவு முதல் சமூக வலைத் தளங்களில் பரபரத்துக் கொண்டிருக்கும் செல்ஃபி படம் இது.

கபாலியில் 'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் கெட்டப் இதுதான் என்ற தலைப்போடு வெள்ளிக்கிழமை இரவு 10 மணியிலிருந்து படு வேகமாக உலா வந்து கொண்டுள்ளது.

Is it Kabali Rajinikanth?

இது கபாலி கெட்டப்பா.. இதில் இருப்பவர் ரஜினிதானா? என நம்ப முடியாமல் ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

பல ரசிகர்கள் இந்தப் படத்திலிருப்பவர் ரஜினி என்பதை நம்ப முடியாமல் போலியான படம் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர். காரணம் அவரது மீசை மற்றும் தாடியின் அமைப்பு. இப்போது முழுக்க ஒரிஜினல் தாடி மீசையுடன் வலம் வரும் ரஜினி, எதற்காக ஒட்டு மீசை மாதிரி வைக்கப் போகிறார் என்கிறார்கள்.

'இல்லை.. ரஜினி ஒரு மாறுபட்ட கெட்டப்பில் எடுத்துக் கொண்டிருக்கும் செல்ஃபி இது' என்கிறார்கள் சிலர், அந்த மூக்கு மற்றும் கண்களை வைத்து.

கபாலீஸ்வரா.. சீக்கிரம் கன்பர்ம் செய்யப்பா!