சீனா செல்லும் ரஜினி: சிகிச்சைக்கா, கோச்சடையானுக்காகவா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வரும் 10ம் தேதி சீனாவுக்கு கிளம்புகிறாராம்.

ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு எங்கும் பயணம் செய்யாமல் உள்ளார். வெளிவரும் படங்களை கூட தனது வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் பார்த்து வருகிறார்.

சீனா செல்லும் ரஜினி: சிகிச்சைக்கா, கோச்சடையானுக்காகவா?

சென்னையில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டும் தான் பங்கேற்கிறார். முடிந்த அளவுக்கு அவர் ஓய்வில் உள்ளார். இந்நிலையில் கடந்த வாரம் மோகன்லாலின் சென்னை ஈஞ்சம்பாக்கம் வீட்டில் நடந்த பார்ட்டிக்கு சென்றார்.

இந்நிலையில் ரஜினி வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி சீனாவுக்கு ரகசிய பயணம் செய்வதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அவர் சீனாவுக்கு எதற்கு செல்கிறார் என்று தெரியவில்லை. கோச்சடையான் வேலையாக அவர் சீனா செல்வதாகக் கூறப்படுகிறது.

 

விஜய், அஜீத் படங்களுக்கு அரசு வைத்த ஆப்பு!

ஜில்லா, வீரம் இரண்டு படங்களுக்குமே "வரி விலக்கு இல்லை' என கறாராக அரசு கூறிவிட்டதால், விநியோகஸ்தர்களுக்கு 20 சதவீத பணத்தை திருப்பித் தந்திருக்கிறார்கள் இந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள்.

ஜில்லா, வீரம் படங்களுக்கு எப்படியும் வரிவிலக்கு கிடைத்துவிடும் என்பதால் அதைக் கருத்தில் கொண்டே வியாபாரம் பேசி விற்றுள்ளனர்.

விஜய், அஜீத் படங்களுக்கு அரசு வைத்த ஆப்பு!

ஆனால் படம் வெளியாவதற்கு முதல்நாள் வரை வரிவிலக்கு கிடைக்கவில்லை. ரிலீசான பிறகும் அதற்கான அறிகுறியே இல்லை.

எனவே படத்தை வாங்கியவர்கள் இரு பட தயாரிப்பு அலுவலகத்தையும் முற்றுகையிட்டனர்.

"வரி விலக்கு கிடைப்பது மாதிரி தெரியவில்லை. அதனால் கொடுத்த பணத்தில் 20 சதவிகிதத்தை திருப்பிக் கொடுங்கள்," என்று கேட்டுள்ளனர்.

4 கோடி ரூபாய்க்கு "ஜில்லா'வையும் மூன்றரை கோடி ரூபாய்க்கு "வீர'த்தையும், திருச்சி ஏரியாவுக்கு விற்றிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதில் ஜில்லாவுக்கு வாங்கியதிலிருந்து ரூ 80 லட்சத்தை திருப்பி விநியோகஸ்தருக்கு தந்திருக்கிறார் தயாரிப்பாளர்.

இதே போல வீரம் படத்துக்கு ரூ 70 லட்சத்தை திருப்பித் தர வேண்டி வந்ததாம். இதே மாதிரி மற்ற ஏரியாக்களை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கும் பணத்தை திருப்பித் தந்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

இந்த இரு படங்களுக்கு மட்டுமல்ல, இனி வெளியாகும் பெரிய பட்ஜெட் படங்கள் ஒன்றிற்குக் கூட வரிவிலக்கு கிடையாது என அரசு முடிவெடுத்திருப்பதை, நேற்று நாம் செய்தியாக வெளியிட்டது நினைவிருக்கலாம்!

 

ஜில்லா, வீரம் வசூல்... அரசுக்கு லாபம் மட்டும் 6 கோடி!

ஜில்லா மற்றும் வீரம் படங்கள் பொங்கல் சீஸனில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியதில் அரசுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.

ஜில்லா, வீரம் வசூல் குறித்து ஆளுக்கு ஒரு தகவலைப் பரப்பி வருகிறார்கள் கோடம்பாக்கத்தில்.

ஆனால் இதுவரை இரு படங்களும் ரூ 30 கோடிக்கு மேல் தியேட்டர் வசூலாகவே சம்பாதித்துள்ளதாக அரசுக்கு காட்டியுள்ளனர். தியேட்டர்காரர்களே ப்ளாக்கில் விற்கும் டிக்கெட் விலையை கணக்கில் கொண்டால் இந்த வசூல் இன்னும் அதிகமாக இருக்கும்.

ஜில்லா, வீரம் வசூல்... அரசுக்கு லாபம் மட்டும் 6 கோடி!

ஆனால் டிக்கெட் விலைப்படி இந்தக் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இரண்டு படங்களுக்குமே வரிவிலக்கு இல்லாததால், ரூ 6 கோடி வரை அரசுக்கு லாபமாகவே கிடைத்துள்ளது. அதாவது பெருநகரப் பகுதி அரங்குகளுக்கு 20 சதவீதமும், கிராமம் சார்ந்த பகுதிகளுக்கு 10 சதவீதமும் வரி விதிக்கிறது அரசு.

ஜில்லாவும் வீரமும் 70 கோடி, 80 கோடி வசூலித்துவிட்டதாக படத் தயாரிப்பாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இந்த வசூல் கணக்கை உண்மையாகவே அரசுக்கு இவர்கள் சமர்ப்பித்தால்.. மக்களுக்குத்தானே லாபம்? செய்வார்களா?

 

விலங்குகளின் புதிய தேவதை எமி ஜாக்ஸன்!

ஃபெடா அமைப்பின் விளம்பரப் படத்தில் விலங்குகளின் புதிய தேவதையாக நடித்துள்ளார் எமி ஜாக்ஸன்.

2009-ல் மிஸ் டீன் வேர்ல்ட் பட்டம் பெற்றவர் எமி ஜாக்ஸன். தமிழில் 'மதராசப்பட்டினம்', 'தாண்டவம்‘ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விண்ணைத் தாண்டி வருவாயா இந்திப் பதிப்பிலும் இவர்தான் நாயகி. தற்போது ஷங்கரின் ‘ஐ' படத்தில் விக்ரம் ஜோடியாக நடிக்கிறார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் பூனை மற்றும் நாய் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் மீது அன்பு செலுத்தி வருகிறார்.

விலங்குகளின் புதிய தேவதை எமி ஜாக்ஸன்!

தற்போது அவர் விலங்குகளை காப்பாற்றி சிகிச்சை வழங்கும் ‘ஃபெடா' அமைப்பில் இணைந்துள்ளார்.

ஒவ்வொரு வீட்டிலும் விலங்குகளை வைத்து பாதுகாக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த அமைப்பு ஒரு விளம்பரப் படத்தை எடுத்துள்ளது.

இந்த விளம்பரப்படத்தில் விலங்குகளை காப்பாற்றும் தேவ தூதராக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான நிக்கி லியோன்ஸ் இந்த விளம்பர படத்தை இயக்கியுள்ளார்.

 

என்னை தொழில் ரீதியாக முடக்க சதி!- கவுதம் மேனன்

சென்னை: என்னை தொழில் ரீதியாக முடக்க சிலர் சதி செய்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் இயக்குநர் கவுதம் மேனன்.

விண்ணை தாண்டி வருவாயா' படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 1 கோடியை கவுதம் மேனன் தரவில்லை என்று தயாரிப்பாளர் ஜெயராமன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கில் கவுதம் மேனன் கைதாகும் சூழல் எழுந்துள்ளது.

என்னை தொழில் ரீதியாக முடக்க சதி!- கவுதம் மேனன்

இதுகுறித்து கவுதம் மேனன் கூறுகையில், "என் தொழிலை முடக்கி போடுவதற்காகவே இதுபோன்ற புகார்கள் கூறப்படுகின்றன. நான் வேறு நபர்களுடன் இணைந்து படங்கள் தயாரிப்பது அவர்களுக்கு பிடிக்கவில்லை.

நான் எப்போது படவேலைகளை துவங்குகிறேனோ அப்போதெல்லாம் இதுபோன்ற இடையூறுகளை ஏற்படுத்துகின்றனர்.

சூர்யாவை வைத்து படம் இயக்குவதாக அறிவித்தபோதே முதல் மிரட்டல் வந்தது. வழக்குப் போட்டார்கள். அதன் பிறகு சிம்பு, அஜீத் படங்கள் பற்றி அறிவிப்பு வெளியிட்டதும் மீண்டும் வழக்கு போட்டார்கள்.

இப்போது அஜீத் பட வேலையை துவங்க இருப்பதால் மீண்டும் கோர்ட்டுக்கு போய் உள்ளனர்.

என் பக்கத்து நியாயங்களை விளக்கி பதில் மனு தாக்கல் செய்து உள்ளேன். ஏற்கனவே இந்த புகாரை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது என்பதையும் தெரிவித்து உள்ளேன்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் போன்றோர் இப்பிரச்சினையில் தீர்வு காண முன் வந்துள்ளனர். இந்த விவகாரத்தை தயாரிப்பாளர் சங்கத்துக்கு கொண்டு செல்ல இருக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பிப்ரவரி 10ம் தேதி சிம்பு வீட்டில் 'டும் டும் டும்'

பிப்ரவரி 10ம் தேதி சிம்பு வீட்டில் 'டும் டும் டும்'

சென்னை: சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் நடக்கவிருக்கிறது.

சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவரது திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி வெகு விமரிசையாக நடக்கவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை டி. ராஜேந்தரும், அவரது மனைவி உஷாவும் மும்முரமாக செய்து வருகின்றனர். டி.ராஜேந்தர் குடும்பத்துடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுள்ளார்.

இதனால் அவர் மகளின் திருமணம் குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடுகிறார்.

சிம்புவிடம் உங்களுக்கு திருமணம் எப்பொழுது என்று கேட்டால் முதலில் தங்கச்சிக்கு முடியட்டும் என்று கூறி வந்தார். இந்நிலையில் இலக்கியாவுக்கு திருமணம் நடக்கவிருக்கிறது.

அப்படி என்றால் விரைவில் சிம்புவின் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாமா?

 

"ஜில்லா" பார்ப்பது "கொழுப்பு" - உதயன் விமர்சனத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!

யாழ்ப்பாணம்: நடிகர் விஜய் நடித்த ஜில்லா திரைப்படம் பற்றிய "உதயன்" நாளேட்டின் விமர்சனத்தைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் சில இளைஞர்கள் ஈடுபட்டனர். ஆனால் ஈழத் தமிழருக்கு பிரச்சனைகள் இருக்கும்போது சினிமா நடிகருக்காக போராடுவதா என அந்த இளைஞர்களை வட மாகாண சபை அமைச்சர் ஐங்கர நேசன் விரட்டியடித்திருக்கிறார்.

உதயன் நாளிதழின் ஞாயிறு இணைப்பான சூரியகாந்தியில் விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தின் விமர்சனம் வெளியாகி இருந்தது. அதில் "இந்தத் திரைப்படத்தைப் பார்க்க திரையரங்குக்குப் போய் மூன்று மணி நேரத்தை வீணடிப்பது கொழுப்பு அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?" என்று எழுதப்பட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 14 இளைஞர்கள் நேற்று உதயன் பத்திரிகை அலுவலகம் முன்பாக பதாகைகள் ஏந்தி கண்டன போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த இலங்கை வடக்கு மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் ஐங்கர நேசன், நடிகனுக்கு கட் அவுட் வைக்கிறீர்களே.. நீங்கள் தமிழன் .. இங்குள்ள தமிழர்கள் உறவுகளைக் காணவில்லை என்று அழுது புலம்புகின்றனர்.. ஜெனிவாவில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்.. அதற்கெல்லாம் போராடாமல் ஒரு நடிகருக்காக இப்படி நிற்கிறீர்களே? அதுவும் ஒரு பத்திரிகை விமர்சனம் எழுதியதற்காக போராட வந்திருக்கிறீர்களே? என்று கடுமையாக சாடினார்.

பின்னர் சிறிது நேரத்தில் அங்கு நின்ற இளைஞர்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினர்.

http://onlineuthayan.com/News_More.php?id=653622591922315069

 

விஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'

சென்னை: விஜய்யை வைத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்

ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யுடன் சேர்ந்து முதன்முதலாக பணியாற்றிய படத்திற்கு துப்பாக்கி என்று பெயர் வைத்தனர். கடந்த 2012ம் ஆண்டில் ரிலீஸான துப்பாக்கி ஹிட்டானது.

விஜய்-முருகதாஸ் பட தலைப்பு 'துப்பாக்கி' 2 அல்ல 'வாள்'

இதையடுத்து விஜய்-முருகதாஸ் மீண்டும் சேர்ந்து படம் பண்ண விரும்பினர். இதற்கிடையே விஜய் தலைவா படத்தில் நடித்தார். அதையடுத்து நேசன் இயக்கத்தில் ஜில்லா என்ற ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

ஜில்லாவை அடுத்து விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி துவங்குகிறது. படத்திற்கு துப்பாக்கி 2 என்று பெயர் வைக்கப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் விஜய்-முருதாஸ் படத்திற்கு வாள் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.