என்டர் தி ட்ராகனில் புரூஸ்லீயுடன் நடித்த ஜிம் கெல்லி மரணம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: புரூஸ்லீயின் என்டர் தி ட்ராகன் படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் படங்களில் நடித்த ஜிம் கெல்லி புற்று நோயால் மரணமடைந்தார். அவருக்கு வயசு 67.

ஜிம்கெல்லி அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்தவர். என்டர் தி ட்ராகன் அவரை முக்கிய நடிகராக அடையாளம் காட்டியது. அந்தப் படத்தில் பெரும்பாலான நடிகர்கள் ஆசியர்களாக இருந்தனர். அவர்களுக்கு மத்தியில் வித்தியாசமான முடியலங்காரத்துடன் கராத்தே சண்டை போட்டு அனைவரையும் கவர்ந்தார் கெல்லி.

என்டர் தி ட்ராகனில் புரூஸ்லீயுடன் நடித்த ஜிம் கெல்லி மரணம்!

‘என்டர் தி டிராகன்' படம் தவிர திரீ தி ஹார்ட் வே, பிளாக் பெல்ட் ஜோன்ஸ் மற்றும் பிளாக் சாமுராய் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

நேற்று முன்தினம் ஜிம் கெல்லி மரணம் அடைந்தார். இந்த தகவலை அவரது முன்னாள் மனைவி மரில்யன் டிஷ்மான் தெரிவித்துள்ளார். அவர் புற்றுநோயால் அவதிப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறினார்.

கடந்த 2010-ம் ஆண்டில் ஒரு இணையதளத்துக்கு அளித்த பேட்டியின்போது, "புரூஸ்லியுடன் ‘என்டர் தி டிராகனில்' நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடன் நடித்தது எனது வாழ்க்கையில் கிடைத்த இனிய அனுபவங்களில் ஒன்றாகும். அவருடன் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் நடித்தேன்," என தெரிவித்துள்ளார்.

 

நான் தமிழங்க... வேட்டிதான் என் உடை, என் அடையாளம்! - தனுஷ்

நான் தமிழங்க... வேட்டிதான் என் உடை, என் அடையாளம்! - தனுஷ்

தமிழ்நாட்டில், தமிழ்க் குடியில் பிறந்தவர்கள் கூட, நடிகரான பிறகு வடநாட்டு உடைகள் அல்லது இங்கிலீஷ் உடைகளை விரும்பி அணியும் காலம் இது.

ஆனால் நடிகர் தனுஷ் அவர்களில் விதிவிலக்கு. உடை விஷயத்தில் அவர் எப்போதுமே விரும்பி அணிவது வேட்டி சட்டைதான்.

பெரும்பாலும் சினிமா விழாக்களுக்கு அவர் வேட்டியில்தான் வருவார். வெளி நிகழ்ச்சிகளிலும் அப்படியே. அட, வட இந்தியாவில் நடந்த விழா ஒன்றில் கூட வேட்டி கட்டிக் கொண்டு போயிருந்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அவரிடம் இதுகுறித்து கேட்டபோது, "நான் வேட்டி - சட்டையில் இல்லாமல் வேறு உடையில் வந்தால்தான் நீங்கள் ஆச்சர்யப்பட வேண்டும். என்னைப் பார்த்து ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

நான் தமிழங்க... வேட்டி சட்டையை அணிய இதைவிட சிறப்பான காரணம் தேவையில்லையே... இதுதான் என் அடையாளம். எங்கே போனாலும் இந்த அடையாளத்தை நான் தொடர விரும்புகிறேன். இதைவிட வசதியான உடை வேறு எதுவும் இல்லை.

ஏதோ ஸ்டைலுக்காக, விளம்பரத்துக்காக இப்படி உடை அணிவதாக நினைக்க வேண்டாம்," என்றார்.

 

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? - விஷால் காட்டம்

அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கொரு நியாயமா? -  விஷால் காட்டம்

சென்னை: அஜீத், விஜய்க்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா என்று விஷால் கோபத்தில் உள்ளாராம்.

விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தை வேந்தர் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் அஜீத்தின் பெயரிடப்படாத படத்தையும் வேந்தர் மூவீஸ் தான் ரிலீஸ் செய்கிறதாம். அந்த 2 படங்களையும் பார்க்காமலே வாங்கியுள்ளனர்.

இந்நிலையில் விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடித்துள்ள பட்டத்து யானை படத்தை வெளியிடுவது குறித்து வேந்தர் மூவீஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்களோ முதலில் படத்தைப் போட்டுக் காட்டுங்கள் அதன் பிறகு வாங்குவது பற்றி முடிவு செய்யலாம் என்றார்களாம். இதைக் கேட்ட விஷால் கடுப்பாகிவிட்டாராம்.

விஜய், அஜீத் படங்களை மட்டும் பார்க்காமல் வாங்கியுள்ளீர்கள். அதே போன்று என் படத்தையும் வாங்கிக்கொள்ள வேண்டிது தானே என்றாராம் விஷால். அதற்கு வேந்தர் மூவிஸ் தரப்பில், அஜீத், விஜய் இருவருக்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்கள். அவர்கள் படத்தை வெளியிட்டால் போட்ட பணத்தை எடுத்துவிடலாம். உங்களுக்கு அப்படி இல்லையே என்று கூறினார்களாம்.

இதையடுத்து விஷால் படத்தை வாங்கும் முயற்சியை வேந்தர் மூவிஸ் கைவிட்டுவிட்டதாம். இப்போது ரெட்ஜெயன்ட் உள்ளிட்ட நிறுவனங்களிடம் பேச்சு நடத்தி வருகிறார்களாம் பட்டத்து யானை தரப்பில்.

 

ரஹ்மான் ஸ்டுடியோவை நெருங்க எட்டு வருஷம் ஆச்சு!- இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ரஹ்மான் ஸ்டுடியோவை நெருங்க எட்டு வருஷம் ஆச்சு!- இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

சென்னை: ஏ ஆர் ரஹ்மானின் ஸ்டுடியோவை நெருங்கவே எனக்கு எட்டு ஆண்டுகள் ஆகின, என்றார் இயக்குநர் ஏஆர் முருகதாஸ்.

பைன் போக்கஸ் பட நிறுவனம் சார்பாக ஆஜூ மற்றும் சௌந்தர்ராஜன் தயாரிப்பில், 'சில்லுன்னு ஒரு காதல்' கிருஷ்ணா இயக்கத்தில் ஆரி, சுவதா நடிக்கும் படம் ‘நெடுஞ்சாலை'.

சத்யா இசையில் தயாராகும் இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் நடந்தது.

விழாவில் இசையமைப்பாளர் இசைபுயல் ஏ.ஆர்..ரஹ்மான் கலந்துகொண்டு முதல் பாடல் சிடியை வெளியிட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பெற்றுக்கொண்டார்.

அதன் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:

இயக்குனர் கிருஷ்ணா நண்பராக அறிமுகம் ஆகும் முன்பு, அவருடைய ‘சில்லுன்னு ஒரு காதல்' படம் எனக்கு அறிமுகம் ஆனது. அதன் பிறகு மூன்று தடவை சந்தித்திருப்பேன். அவரிடம் இந்தப் படத்தில் பர்சனலா பிடிக்கிற விஷயம் புதுமுகங்களை அறிமுகப்படுத்தியதுதான். ஹீரோ, ஹீரோயின், பாடலாசிரியர், பாடகர் என் பலரை அறிமுகப்படுத்தி உள்ளார். அதற்கு தைரியம், உறுதி வேண்டும். எனக்கு அது ரொம்ப பிடிச்சிருந்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் சத்யாவை நான் ‘எங்கேயும் எப்போதும்' படத்தில் அறிமுகப்படுத்தும் முன்பு, கிருஷ்ணாதான் அவரை கண்டுப்பிடித்தார். அவருடைய படத்தின் பாடல்களை கேட்டுத்தான் இயக்குனர் சரவணன், சத்யவை என்னிடம் அறிமுகப்படுத்தினார். அவருக்கு நல்ல இடம் இருக்கு. விஷுவல்ல யாரை பாராட்டுறதுன்னே தெரியல. ஒருவருக்கு ஒருவர் போட்டிபோட்டு பிரமாதமா வேலை செய்திருக்காங்க.

ரஹ்மான் சாரை இன்ஷ்பிரேஷனா எடுத்துக்கிட்டு சத்யா வேலை செய்திருக்கிறார்.
நான் 1990களில் உதவி இயக்குனராக இருந்த போது டாக்டர் சுப்பராயன் நகரில் தங்குவதற்கு அறை தேடினேன். அப்போ அங்கு பேச்சுலருக்கு இடம் கிடைக்கவே இல்லை. இருந்தாலும் அங்கு அறை எடுத்து தங்கினேன். அதற்க்கு காரணம் அங்கு ரஹ்மான் சாரோட ரெக்காடிங்க் ஸ்டுடியோ இருந்தது.

என் அறையின் மொட்டை மாடியில் நின்று பார்த்தால் ரஹ்மான் சாரின் ஸ்டுடியோ தெரியும். இரவில் சுப்பராயன் நகரே இருட்டில் கருப்பாக இருந்தாலும், அவரது ஸ்டுடியோ மட்டும் வெளிச்சத்தில் பளிச்சுன்னு தெரியும். இப்போது எந்த படத்துக்கு பாடல் வேலை நடக்குது என்று எனக்கு நானே கேட்டுக்கொள்வேன்.

அங்கிருந்து அவரிடம் சென்று கம்போஸ் பண்ண எட்டு வருஷம் எனக்கு ஆனது. அவருடன் ஒரு படம் பண்ணினேன். அந்த நாட்கள் மறக்க முடியாத அனுபவம்.
நான் வெளி இடங்களுக்கு செல்லும் போது ரஹ்மான் சார் ஊரில் இருந்து வருகிறேன் என்பேன். அந்த அளவுக்கு ரஹ்மான் புகழ் பெற்றவர். சத்யா அவரை இன்ஸ்பிரேஷனா எடுத்துக்கிட்டு வரணும்.

இயக்குனர் கிருஷ்ணாவும் நிறைய போராடி வந்திருக்கிறார். போராட்டம் கஷ்டமானது. நிறுத்தத்தை தாண்டி பஸ் நிக்கும் போது, பஸ்ஸ பிடிக்க ஒருவன் ஓடுவான். அந்த பஸ் புறப்பட்டுச்சுன்னா அவன் பின்னாலே ஓடிப்போய் துரத்தி பிடிச்சி பஸ்ல ஏறுவான். அவன் பஸ்ஸை பிடிக்க வேண்டும் என்று அங்கு நிற்பவர்கள் நினைப்பார்கள். அது மாதிரி கிருஷ்ணாவை நான் பார்க்கிறேன். இந்த நெடுஞ்சாலையை பிடிச்சி அவர் வேகமா போகணும். என்னுடைய வாழ்த்துக்கள்," என்றார்.

பிறகு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், "தயாரிப்பாளர் தாணு சார் மூலமாக எனக்கு இயக்குனர் கிருஷ்ணா அறிமுகமானார். அவர் கதை சொல்லும் பொது எமோஷனாக சொல்வார். அது எனக்கு பிடித்திருந்தது.

பெரிய நடிகர்களின் படத்தை போல இந்த நெடுஞ்சாலை படத்தை குவாலிட்டியா பெரிய புரஜக்டா எடுத்திருக்கிறார். படம் பண்ணினால் குவாலிட்டியா பண்ணனும்.
இப்போது ரெண்டு, மூணு படம் பேசிக்கிட்டு இருக்கேன். இந்தியில் பத்து படம் தயாராக இருந்தாலும் புதுசா குவாலிட்டிய படம் இருந்தால்தான் போறேன். இந்த படத்துல கடுமையான உழைப்பு தெரிகிறது," என்றார்.

படத்தின் இயக்குனர் கிருஷ்ணா பேசுகையில், ரகுமானின் ஸ்டூடியோவுக்குள் போகும் போது கோவிலுக்குள் செல்வது போன்ற உணர்வு இருக்கும். அங்கு கேட்டது உடனே கிடைக்கும். நல்ல உள்ளங்கள் அங்கு நிறைய இருக்கும். சில்லுன்னு ஒரு காதல் படம் செய்த போது ஒன்றரை ஆண்டு அவரிடம் பழகிருக்கேன். இரவு பகல் தூங்காமல் வேலை செய்வார்.

எப்போது தூங்குவீர்கள் என்று கேட்பேன். நாற்பது வயது தாண்டுவதற்குள் நிறைய உழைக்கணும் என்பார். அந்த உழைப்புக்குத்தான் இரண்டு கைகளிலும் ஆஸ்கார் விருது பெற்றார்.

இயக்குனர் முருகதாஸ் படங்கள் எனக்கு கமர்சியலாக படம் செய்ய உதவியாக இருந்திருக்கிறது. அதை இந்த நேரத்தில் சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன்," என்றார்.

விழாவில் இயக்குனர் பிரபுசாலமன், சமுத்திரகனி, எங்கேயும் எப்போதும் சரவணன், தாமிரா, நடிகை காயத்ரி மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன், சாட்டை தயாரிப்பாளர் ஜான் மேக்ஸ் மற்றும் ஜெர்ரி, ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். விழாவில் இயக்குனர் பாக்யராஜ் மலர்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

விழாவுக்கு வந்த அனைவரையும் மக்கள் தொடர்பாளர் மௌனம் ரவி வரவேற்றார். நிகழ்ச்சிகளை நகைச்சுவை நடிகர் பாலாஜி தொகுத்து வழங்கினார்.

 

நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல..: ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன்!

நான் ஓரினச் சேர்க்கையாளன் அல்ல..: ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன்!

சிட்னி: தாம் ஒரு ஓரினச் சேர்க்கையாளரா என்று கேட்கப்படும் கேள்விகளால் தாம் விரக்தி அடைந்திருப்பதாக ஹாலிவுட் நடிகர் ஹ்யூ ஜாக்மேன் வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் மனைவி டிபோர்ரா லீயுடன் பங்கேற்ற ஜாக்மேன், தம்மைப் பற்றிய வதந்திகள் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூறினார்.

மனைவி டிபோர்ரா கூறுகையில், அவர் ஓரினச் சேர்க்கையாளர் எனில் நல்லது.. அவரே அதை சொல்லுவார்.. ஆனால் உண்மையில்லாத ஒன்றைப் பற்றி தொடர்ந்து பேசுவது சரியில்லை என்றார்.

இது தற்போதுதான் பேசப்படுகிற விவகாரமும் அல்ல.. கடந்த பிப்ரவரி மாதமே ஜாக்மேன் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்று தகவல்கள் பரவி இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.


 

அரசியலுக்கு அஸ்திவாரம் போடும் பஞ்சு மூட்டை நடிகை?

சமீபத்தில் விழா ஒன்றிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருந்த மச்சான் நடிகை, தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளாராம்.

அதாவது, சாலையில் கவனமாக செல்ல வேண்டும் என்பதே அது. போன் பேசியபடியோ அல்லது என் சிந்தனையிலோ வண்டி ஓட்டாதீர்கள் என பொது நலன் கருதி தகவல்களை வெளியிட்டுக் கொண்டே வந்த நடிகை, திடீரென, ‘நான் மட்டும் அரசியலில் இருந்து, ஆட்சியில் அமர்ந்திருந்தால், இப்படி வண்டி ஓட்டுபவர்களுக்கு ஆயிரக் கணக்கில் அபராதம் போடுவேன்' என சந்து கேப்பில் சிந்து பாடினாராம்.

விழாவுக்கு வந்திருந்தவர்களுக்கு வந்த சந்தேகம் என்னவென்றால், ‘இம்மா பெரிய பஞ்சு மூட்டைக்குள், இப்படியொரு அரசியல் ஆசை ஒளிந்திருக்கிறதா? என்பது தான்.

 

இமயமலையில் சிவகார்த்திகேயன்: மிஸ் பண்ணும் சுள்ளான்

இமயமலையில் சிவகார்த்திகேயன்: மிஸ் பண்ணும் சுள்ளான்

சென்னை: சிவகார்த்திகேயன் ஷூட்டிங்கிற்காக இமய மலை சென்றுள்ளதால் அவரை மிஸ் பண்ணுவதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.

தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் படத்தில் ஹீரோவாக நடித்தவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில் நயன்தாராவை அழைத்து வந்து தன்னுடன் ஆடவிடாமல் தனுஷ் குத்தாட்டம் போட்டுவிட்டாரே என்று சிவகார்த்திகேயன் வருத்தப்பட்டார். இருப்பினும் தனுஷும், சிவகார்த்திகேயனும் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.

இந்நிலையில் தனுஷ் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

சிவகார்த்திகேயன் மிஸ்ஸிங். அவர் இமய மலையில் ஷூட்டிங்கில் இருப்பதாக கிடைத்த தகவலைக் கேட்டு நாங்கள்(நான் அனி சதீஷ்) கவலையாக உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

பதிலுக்கு சிவகார்த்திகேயன் ட்விட்டரில், சர். தேனி மலையடிவாரத்தில் தான் ஷூட்டிங். அதை யாரோ இமய மலை என்று புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். உங்களை விட்டுட்டு எங்கே போவேன், எப்படி போவேன் என்று கேட்டுள்ளார்.

அடடா சிவகார்த்திகேயனுக்கு தனுஷ் மீது இவ்வளவு பாசமா?

 

வடிவேலுவுக்கு 42 மனைவிகள், 56 பிள்ளைகள்!

ஜெக ஜால புஜபல தெனாலிராமன் படத்தில் வடிவேலுவுக்கு 42 மனைவிகள், 56 பிள்ளைகள் இருப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம்.

இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடித்து வரும் புதிய படம், ஜெக ஜால புஜபல தெனாலிராமன். இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. டி.இமான் இசையமைக்கிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தி முடித்துள்ளது படக்குழு. கிட்டத்தட்ட 40 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன.

வடிவேலுவுக்கு 42 மனைவிகள், 56 பிள்ளைகள்!

முதலில் பாடல் காட்சியை படமாக்கிய அவர்கள் அதில் வடிவேலுவுக்கு, 42 மனைவிகளும், 56 பிள்ளைகளும் இருப்பது போன்று எடுத்துள்ளனர்.

இப் படத்துக்கா பிரத்யேக பயிற்சிகளை எடுத்துக்கொண்டு நடித்தாராம் வடிவேலு. ஏற்கெனவே அவர் இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் நடித்திருப்பதால், அதன் சாயல் இல்லாத மாதிரி நடிக்க பயிற்சி மேற்கொண்டாராம்.

தொடர்ந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை மதுரை உள்பட தென்மாவட்டங்களில் நடத்தப் போகிறார்களாம்.

 

சிங்கம் 2 - சென்னை, செங்கல்பட்டு, கோவையில் வெளியாவதில் சிக்கல்!

சென்னை: வரும் 5-ம் தேதி வெளியாகும் சூர்யாவின் சிங்கம் 2 படம் சென்னை, செங்கல்பட்டு, கோவையில் மட்டும் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சூர்யா - அனுஷ்கா - ஹன்சிகா - விவேக் - சந்தானம் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள சிங்கம் 2 படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் முந்தைய படமான மாற்றான் சரியாகப் போகாத நிலையில், அவரும் இந்தப் படத்தை பெரிதும் நம்பியுள்ளார்.

சிங்கம் 2 - சென்னை, செங்கல்பட்டு, கோவையில் வெளியாவதில் சிக்கல்!  

பிரமாண்ட பொழுதுபோக்குப் படமாக உருவாகியுள்ள சிங்கம் 2 வரும் வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகிறது.

தமிழகத்தில் மட்டும் 600 தியேட்டர்களுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகிறது. உலகம் முழுவதும் 2400 அரங்குகளில் வெளியாகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் மல்டிப்ளெக்ஸ்கள் அதிகம் உள்ள சென்னை - செங்கல்பட்டு - கோவை ஆகிய நகரங்களில் மட்டும் சிங்கம் 2 வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மல்டிப்ளெக்ஸ்களுடன் வருவாய் பகிர்வு முறையில் ஏற்பட்டுள்ள தகராறு காரணமாகவே இந்த சிக்கல் நீடிக்கிறது. இதனால் இன்னும் முன்பதிவு தொடங்கப்படாமல் உள்ளது.

இன்று மாலை அல்லது நாளைக்குள் பிரச்சினை தீரும் என சிங்கம் 2 தரப்பில் தெரிவித்தனர்.

 

வதந்தியை பொய்யாக்கிய ஃபாக்ஸ் - ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை தயாரிக்கிறது!

வதந்தியை பொய்யாக்கிய ஃபாக்ஸ் - ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் படத்தை தயாரிக்கிறது!

சென்னை: ராஜா ராணி படத்துக்குப் பிறகு ஏஆர் முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனமும் பிரிவதாக கடந்த சில தினங்களாக வதந்திகள் உலா வந்தன.

இப்போது அந்த வதந்தியை பொய்யாக்கியிருக்கிறது ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம்.

ஹாலிவுட்டின் முன்னணி தயாரிப்பு நிறுவனம் ஃபாக்ஸ், இந்தியாவில் ஃபாக்ஸ் ஸ்டார் என்ற பெயரில் தயாரிப்பில் இறங்கியது. தமிழ், இந்திப் படங்களைத் தயாரித்தது. தமிழில் ஏ ஆர் முருகதாஸின் சொந்தப்பட நிறுவனத்துடன் இணைந்து எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி படங்களைத் தயாரித்தது. இப்போது ராஜா ராணி படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் ராஜா ராணியுடன் முருகதாஸ் - பாக்ஸ் ஸ்டார் கூட்டணி முறிந்துவிட்டதாக வதந்தி கிளம்பியது.

ஆனால் அது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில், 'தங்களின் அடுத்த இந்திப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்குவார்' என ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தப் படம் 2014-ம் ஆண்டு தயாராகிறது. இந்த அறிவிப்பை இயக்குநர் ஏஆர் முருகதாஸும் உறுதிப்படுத்தியுள்ளார்.