சென்னை: குளியலறை மற்றும் படுக்கை அறைகளில் ரகசிய கேமராக்கள் வைக்கப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தால், ஹோட்டல்களில் தங்கவே நடிகைகள் பயப்படுகிறார்களாம்.
இண்டர்நெட், வாட்ஸ் அப் போன்றவற்றில் சமீபகாலமாக நடிகைகள் சிலரின் அந்தரங்கப் படங்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. இப்படங்கள் அவர்கள் தங்கி இருந்த ஹோட்டல் அறைகளில் ரகசிய கேமரா வைத்து படமாக்கப் பட்டிருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது.
அதிலும், சமீபத்தில் சின்ன பிளவர் நடிகையின் நிர்வாணக் குளியல் காட்சி வாட்ஸ் அப்களில் வேகமாகப் பரவி வருகிறது. அது மார்பிங் செய்யப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அவரது வளர்ச்சி பிடிக்காமலேயே சில விஷமிகள் இந்த சதிச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது.
இதனால், மற்ற நடிகைகள் மனதில் அச்சம் உண்டாகியுள்ளதாம். இந்த ஆபாச படங்களை பார்த்த பிறகு ஹோட்டல்களில் தங்குவதற்கு நடிகைகள் தயங்குவதாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
படப்பிடிப்புகளில் கேரவன்களிலோ அல்லது அங்குள்ள ஏதேனும் ஒரு வீட்டிலோ தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்யும்படி படக்குழுவினரிடம் நடிகைகள் வற்புறுத்துகிறார்களாம்.