துபாய்: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் நடைபெறுகிறது.
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. விழாவில் 200க்கும் மேற்பட்ட திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.
விழாவை ஆர்யா, ஸ்ரேயா சரண், தெலுங்கு நடிகர் ராணா, இந்தி நடிகர் சோனு சூத் ஆகியோர் தொகுத்து வழங்குகின்றனர். நடிகர்கள் மோகன் லால், பிரித்விராஜ், தனுஷ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, சொஹைல் கான், நடிகைகள் ஸ்ரீதேவி, அசின், காஜல் அகர்வால், பிரியாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
விருது வழங்கும் விழாவில் நடிகைகள் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, தமன்னா, ஸ்ரேயா, சார்மி, ரம்யா, ரிச்சா உள்ளிட்டோர் நடனமாடுகிறார்கள். இசையமைப்பாளர்கள் அனிருத், தேவி ஸ்ரீபிரசாத், பாடகி உஷா உதூப்பின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவை கண்டு ரசிக்க விரும்புவோர் +971529719667, +971505865375, +971529719660 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும். அலல்து http://www.synergyutsevents.com/SIIMA2013.asp என்ற இணையதளத்திற்கு சென்றும் முன்பதிவு செய்யலாம்.
டிக்கெட் விவரம் வருமாறு,
விஐபி டிக்கெட்( 2 நாட்களுக்கு) - 1000 திர்ஹம்
ஒரு நாளுக்கு கோல்ட் டிக்கெட் - 150 திர்ஹம்
ஒரு நாளுக்கு சில்வர் டிக்கெட் - 60 திர்ஹம்