'ரஜினி படம் வெளியாகி இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை ரிலீஸ் பண்ணுங்க!'

சென்னை: பொங்கலுக்கு வரவிருப்பதாக அறிவிக்கப்பட்ட கமலின் விஸ்வரூபம் 2, இரு வாரங்கள் தள்ளி ஜனவரி 26-ம் தேதி வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

வரும் பொங்கல் அன்று பெரிய நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகின்றன.

'ரஜினி படம் வெளியாகி இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை ரிலீஸ் பண்ணுங்க!'

குறிப்பாக மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள கோச்சடையான் படம் வெளியாகிறது.

அதே தினத்தில் அஜீத் நடித்த வீரம் படத்தை வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர். விஜய் நடித்த ஜில்லாவும் ஜனவரி 10ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

திரையரங்க உரிமையாளர்கள் தங்கள் அரங்குகளை கோச்சடையானுக்கே தர விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் கிடைக்கும் அரங்குகளில் ஜில்லாவையும் வீரம் படத்தையும் வெளியிடப் போவதாக பிடிவாதம் பிடித்துள்ளனர்.

இந்த நிலையில் கமல் நடித்த விஸ்வரூபம் படத்தை பொங்கலன்று வெளியிடாமல், ஜனவரி 26-ம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இது திரையரங்க உரிமையாளர்களுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் படங்கள் குறைந்தது 4 வாரங்கள் வரையிலாவது ஓடும் என்பதால் உடனடியாக கமலுக்கு அரங்குகள் தர முடியாத நிலை உள்ளது.

எனவே ரஜினி படம் வெளியான இரு வாரங்கள் கழித்து மற்ற படங்களை வெளியிடுமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சம்பந்தப்பட்ட படங்களின் தயாரிப்பாளர்களிடமும் இதனை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை- அமீர்கான்

மும்பை: கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சாதனைகள் புரிந்து, இப்போது ஓய்வை அறிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை- அமீர்கான்

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த ‘லகான்' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

எனவே சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று கருதுகின்றனர், சச்சின் படத்தை எடுப்பவர்கள்.

இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், "நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாருமிருக்க முடியாது. நிச்சயம் நடிப்பேன், அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும்," என்றார்.

 

டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை- அமீர்கான்

மும்பை: கிரிக்கெட் சாதனையாளர் சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட்டில் பெரும் சாதனைகள் புரிந்து, இப்போது ஓய்வை அறிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

டெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை- அமீர்கான்

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சச்சின் டெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார். அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுத்த ‘லகான்' படத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

எனவே சச்சின் டெண்டுல்கர் வேடத்தில் அவரையே நடிக்க வைக்கலாம் என்று கருதுகின்றனர், சச்சின் படத்தை எடுப்பவர்கள்.

இதுகுறித்து அமீர்கான் கூறுகையில், "நான் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகன். அவர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்னை விட மகிழ்ச்சி அடைபவர் யாருமிருக்க முடியாது. நிச்சயம் நடிப்பேன், அந்தப் படம் பெரிய அளவில் பேசப்படும்," என்றார்.

 

இந்த கும்கி, ஹாலிவுட்டிலிருந்து வருதுங்கோ!

உலகளவில் ஆக்ஷன் ஹீரோக்களுக்கு மிக பெரிய வரவேற்பு எப்போதுமே உண்டு.

ஆக்ஷன் ஹீரோக்களாக உலகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரிசையில் புருஸ்லி, ஜாக்கிசான், அதன் பிறகு டோனிஜா!

டோனிஜா ஏற்கனவே நடித்து சூப்பர் ஹிட் ஆன 'ஓங் பேக் 1' என்ற படம் உலக அளவில் மாபெரும் வசூல் புரட்சியை ஏற்படுத்தியது.

தற்போது பத்து வருடங்களுக்குப் பிறகு 'ஓங் பேக் 1' படத்தில் இணைந்த இயக்குனர் பிரச்சாய் பிங்கே, ஸ்டன்ட் இயக்குனர் கிட்டிகேரி, டோனிஜா மூவரும் டாம் யம் கூங் 2 (Tom Yum Goong 2) என்ற படத்துக்காக இணைந்துள்ளனர்.

இந்தப் படத்தை தமிழில் கும்கி வீரன் என்று மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

இந்த கும்கி, ஹாலிவுட்டிலிருந்து வருதுங்கோ!

"ஓங் பேக் எப்படி ஆக்ஷன் படமாக பேசப் பட்டதோ அதற்கு இணையாக "கும்கி வீரன்" என்ற படமும் ஆக்ஷன் விஷயத்தில் பரபரப்பாகப் பேசப்படும். 20 நிமிடம் ஓடும் பைக் சேசிங் ஷாட்ஸ் ஒன்றை படமாக்கிய விதத்தில் யாருமே மிரண்டு போவார்கள். ஐஎம்டிபி என்ற அமைப்பு இந்த படத்திற்கு 7.3 என்று ரேட்டிங் கொடுத்திருக்கிறது.

இந்த கும்கி, ஹாலிவுட்டிலிருந்து வருதுங்கோ!

வசனத்தை ராஜா எழுதுகிறார். இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் சார்பாக பிரோஸ் மற்றும் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஜி.ஆர்.ஆர்.ரகு, சிவன், செந்தில் இருவரும் இந்த படத்தை வெளியிடுகிறார்கள். இவர்கள் ஜாக்கிசான் நடித்த சிஇஸட் 12 உள்ளிட்ட பல ஆக்ஷன் படங்களை வெளியிட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு நிச்சயம்!- தயாரிப்பாளர் அறிவிப்பு

சென்னை: அஜீத் நடித்துள்ள வீரம் படத்தின் முதல் விளம்பரம் இன்று வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் - தமன்னா, விதார்த் நடித்துள்ள படம் வீரம். பழம்பெரும் நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

பொங்கலுக்கு வெளி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள ' வீரம் ' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்தே படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு.

அஜீத்தின் வீரம் பொங்கலுக்கு நிச்சயம்!- தயாரிப்பாளர் அறிவிப்பு

மங்காத்தாவிலிருந்து அவர் கடைப்பிடிக்கும் நரைத்த தலை, தாடி தோற்றம்தான் இதிலும். ஒரே ஒரு மாறுதல் வேட்டி - சட்டை.

'வீரம் ' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் முற்றுப் பெற உள்ளன.

வீரம் படம் நிச்சயம் பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் என்று பட தயாரிப்பாளர்கள் வெங்கட்ராம ரெட்டி மற்றும் பாரதி ரெட்டி உறுதியாக கூறினார்.

பொங்கலுக்கு ரஜினியின் கோச்சடையான் வெளியாகிறது. இந்தப் படத்துக்கே பெரும்பாலான அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் வீரம் படத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ஜீவா, விமல், அதர்வாவை வைத்து மைக்கேல் ராயப்பன் ஒரே நேரத்தில் தயாரிக்கும் 3 படங்கள்!

சென்னை: விஜயகாந்த் கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவும் பிரபல தயாரிப்பாளருமான மைக்கேல் ராயப்பன் ஒரே நேரத்தில் 3 புதிய படங்களைத் தயாரிக்கிறார்.

இவற்றில் ஜீவா, விமல் மற்றும் அதர்வா நாயகர்களாக நடிக்கிறார்கள்.

நாடோடிகள், கோரிப்பாளையம், பட்டத்து யானை போன்ற படங்களைத் தயாரித்த மைக்கேல் ராயப்பன் அடுத்து, 3 புதிய படங்களை ஒரேநேரத்தில் தயாரிக்கிறார்.

அதில் ஒரு படத்தில், ஜீவா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி முடிவாகவில்லை. ‘சிங்கம்புலி' படத்தை இயக்கிய சாய்ரமணி இந்தப் படத்தை இயக்க, டி.இமான் இசையமைக்கிறார்.

ஜீவா, விமல், அதர்வாவை வைத்து மைக்கேல் ராயப்பன் ஒரே நேரத்தில் தயாரிக்கும் 3 படங்கள்!

இன்னொரு படத்தில், அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். இந்தப் படத்துக்கும் டி.இமான் இசையமைக்க, வெற்றிமாறனிடம் உதவி டைரக்டராக இருந்த ரவி அரசு இயக்குகிறார். இந்த படத்துக்கு, ‘ஈட்டி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மற்றொரு படத்தில், விமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை கண்ணன் இயக்குகிறார்.

 

பீட்சா 2: வில்லா- விமர்சனம்

-எஸ் ஷங்கர்

Rating:
2.0/5

பீட்சா என்ற புத்திசாலித்தனமான த்ரில்லர் படத்தை எடுத்த தயாரிப்பாளர், அந்தப் படத்தின் டைட்டிலை மட்டும் வைத்து லாபம் பார்க்க முயன்றிருக்கிறார். விளைவு... த்ரில்லர் என்பது மருந்துக்கும் இல்லாமல், செயற்கையான காட்சி அமைப்புகளால் எரிச்சல் மட்டுமே மிஞ்சுகிறது!

பீட்சாவுக்கும் இந்தப் புதிய பீட்சா 2-வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, படத்தில் ஒரே ஒரு காட்சியில் 3 செகண்டுகள் காட்டப்படும் பீட்சாவைத் தவிர!

பீட்சா 2: வில்லா- விமர்சனம்

தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை என தவிக்கும் ஜெபின் (அசோக் செல்வன்) ஒரு வளரும் எழுத்தாளர். காதலி ஆர்த்தியும் (சஞ்சிதா) நண்பனும் மட்டுமே இவரைப் புரிந்தவர்கள். தந்தை நாசர் தான் சாகும்போது ஒரு பெரிய பங்களாவை மட்டுமே விட்டுப்போகிறார். அந்த பங்களாவுக்குப் போகும் ஜெபின், அங்கே தந்தை வரைந்த சில ஓவியங்களைப் பார்க்கிறார். அந்த ஓவியங்களில் உள்ளதனைத்தும் ஒவ்வொன்றாக அரங்கேற, பயந்துபோய் வீட்டை விற்க முயல்கிறார். அப்போது பல எதிர்பாராத (நாம் நன்கு எதிர்ப்பார்த்த) நிகழ்வுகள் நடக்கின்றன.

இந்தப் படத்தில் எந்தக் காட்சியுமே ஒரு பரபரப்பைத் தருவதாகவோ, எதிர்ப்பாராத அதிர்ச்சியைத் தருவதாகவோ இல்லை. ஒரு த்ரில்லர் படத்துக்குரிய இந்த இரண்டுமே இல்லாததால் பல காட்சிகள் செயற்கையாய் தோன்றுகின்றன. வலிந்து ஒரு வண்ணத்தை (டோன்) இந்தப் படத்துக்கென வைத்திருக்கிறார் இயக்குநர். த்ரில்லர் படம் என்றால் எல்லாக் காட்சியும் இருட்டிலேயே இருக்க வேண்டும் என்ற தியரியை இன்னும் எத்தனை காலத்துக்குப் பிடித்துக் கொண்டிருக்கப் போகிறார்களோ.. வீட்டில் அவ்வளவு விளக்குகள் இருந்தாலும், கதாபாத்திரங்கள் அத்தனையும் இருட்டுக்குள்ளேயே தட்டுத்தடுமாறிக் கொண்டிருப்பது காமெடியாக உள்ளது.

பீட்சா 2: வில்லா- விமர்சனம்

ஒரு காட்சி... அதில் பழைய கிராமபோனில் ஏதோ ஒரு ப்ரெஞ்ச் இசையை ஓலிக்க விட்டிருக்கிறார் ஹீரோ. அடுத்த நொடி, பக்கத்திலிருக்கும் அந்த பிரமாண்ட பியானோவில் வீடே அதிருமளவுக்கு வாசிக்கிறார். கிராமபோன் பாடிக் கொண்டிருக்கும்போது, எதற்காக பியானோவையும் இசைக்கிறார்? இப்படி முரண்களுக்குப் பஞ்சமில்லை.

ஆவிகள், பில்லி, சூனியம் என்பதெல்லாம் ஒருவித அனுமானங்கள். மூட நம்பிக்கைகளின் இன்னொரு கடுமையான பக்கம் என்பதுதான் உண்மை என விஞ்ஞானம் மெய்ப்பித்திருக்கும் நிலையில், அந்த கருமத்தையே புதிய விஞ்ஞானமாக இந்தப் படத்தில் சித்தரித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த மாதிரி முட்டாள்தனங்களை அடித்துவிரட்ட மட்டுமே சினிமா எனும் அறிவியல் சாதனத்தைப் பயன்படுத்த வேண்டும்!

பீட்சா 2: வில்லா- விமர்சனம்

பேன்டஸியை... ஒரு கற்பனை உலகை திரையில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் மூட நம்பிக்கைகளைக் கொண்டாடுவதை அனுமதிக்கவே கூடாது. பில்லி சூனிய வியாபாரிகளுக்கு வேண்டுமானால் இந்த மாதிரி படங்கள் உபயோகப்படும்!

ஹீரோவாக வரும் அசோக் செல்வன், படிய வாரிய தலையுடன், எப்போதும் கறுப்பு நிறத்தில் டக்இன் செய்த பேன்ட் சட்டையுடன் நடமாடிக் கொண்டே இருக்கிறார். எதற்கெடுத்தாலும் யோசித்துக் கொண்டு எங்கோ பார்க்கிறார். அளந்து அளந்து பேசுகிறார். சொந்த அண்ணனால் ஒரு தம்பியும் அவன் குடும்பமும் கொல்லப்படுவது முன்கூட்டி தெரிந்தும்கூட அதை முழுசாக சொல்லாமல் ஊரை விட்டுப் போயிடுங்க என்று மைதா மாவுத்தனமாக சொல்கிறார். அந்தப் பாத்திரத்தின் இந்தத் தன்மைகளே, பார்வையாளனை எரிச்சலுக்குள்ளாக்குகிறது.

சஞ்சிதாவின் நடிப்பில் சொல்ல ஒன்றுமே இல்லை. அவர் தோன்றும் முதல்காட்சியில் அந்த பங்களாவைப் பற்றி சிலாகிப்பதே செயற்கையாக உள்ளது. அந்த செயற்கைத்தனத்தை அவர் கடைசி வரை தொடர்கிறார்.

பீட்சா 2: வில்லா- விமர்சனம்

ஹீரோ - ஹீரோயின் இருவருமே இந்தப் படத்துக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்துகிறார்கள்.

நாசர், எஸ்ஜே சூர்யா போன்றவர்கள் ஒரு காட்சியில் வந்துபோகிறார்கள். பொன்ராஜாவாக வரும் அந்த இளைஞர் மட்டுமே இயல்பாக நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு பிரமாதம் என்று சொல்வதற்கில்லை. 'கடுப்பேத்தறார் மைலாரட்' எனும் அளவுக்குதான் ஒளிப்பதிவாளரின் லைட்டிங்கும் கோணங்களும் உள்ளன. பேய் வீடு என்பதைக் காட்ட, கேமிராவைக் குலுக்கிக் கொண்டே இருக்கிறார் மனிதர்!

பாடல்கள் எந்த வகையிலும் படத்துக்குக் கைகொடுக்கவில்லை. பின்னணி இசை சுமார்.

வலிந்து திணிக்கப்பட்ட மாதிரி எழுதப்பட்ட திரைக்கதைதான் படத்தின் மைனஸ். பீட்சாவில் ஒரு உச்சகட்ட புத்திசாலித்தனம் இருந்தது. அதுதான் படத்தை ஜெயிக்க வைத்தது. இந்தப் படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் 'நாங்கள் ஒரு திகில் படம் எடுக்கிறோம் பாருங்க' என்பது போன்ற ஒரு விளம்பரத்தனம் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது. அதுதான் படத்தின் ஆகப் பெரிய மைனஸ்!