உத்தமவில்லன் படத்தில் கால் மணி நேரக் காட்சிகள் "கட்"!

சென்னை : உத்தமவில்லன் படம் நீளமாக இருப்பதாகக் கருதியால், தற்போது அதில் 15 நிமிடக் காட்சிகளை படக்குழுவினர் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் உத்தமவில்லன். பல்வேறு தடைகளைத் தாண்டி இப்படம் நேற்று ரிலீசானது.

இப்படத்தில் கமலுடன், ஆண்ட்ரியா, பூஜா குமார், இயக்குனர் கே.பாலச்சந்தர் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

15 minutes shots reduced in Uthama villain ?

இப்படம் முதலில் 2 மணி நேரம் 53 வினாடிகள் ஓடுவதாக இருந்தது. படம் ரொம்பவும் நீளமாக இருப்பதாக படக்குழுவினர் கருதியதால், தற்போது இந்த படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் படம் முன்பைவிட விறுவிறுப்பாகவும், அனைவரும் ரசிக்கக் கூடியதாகவும் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

 

‘ஹாஹாஹா... நீ அதை விட கொள்ளை அழகுடா’... ஷாரூக்கை கலாய்த்த சிஸ்டர்ஸ் !

மும்பை: பாலிவுட் பாட்ஷா என அழைக்கப் படும் ஷாரூக், தனது கடைசி மகனின் புகைப்படத்தையும், தனது சிறு வயது படத்தையும் இணைத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஐம்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார் ஷாரூக். அவரது மூன்றாவது மகன் அப்ராமுக்கு இரண்டு வயதாகிறது.

இந்நிலையில், சமீபத்தில் ஷாரூக்கிற்கு திடீரென ஒரு சந்தேகம் வந்துள்ளது. அதாவது தனது மகன் அப்ராம், தான் சிறுவயதில் இருப்பது போன்றே இருக்கிறானா என்பது தான் அது. இது தொடர்பாக அவர் தனது சகோதரிகளிடம் கேட்டுள்ளார்.

அதற்கு அந்த பாசக்கார சகோதரிகள், ‘இல்லப்பா, நீ அப்ராமை விட ரொம்ப அழகா இருந்தே' என சிரித்துக் கொண்டே கூறியுள்ளனர்.

இத்தகவலை ஷாரூக்கே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். கூடவே தன்னை அழகென்று கூறிய சகோதரிகளை ‘பாசக்காரர்கள்' என ஷாரூக் பாராட்டியுள்ளார்.

கூடவே, தனது சிறுவயது புகைப்படத்துடன், அப்ராமுடையதையும் இணைத்து அவர் வெளியிட்டுள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள் பலர், அப்ராம் அப்படியே ஷாரூக்கின் ஜெராக்ஸ் காப்பி போல் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 

ப்ரீ கேஜி "மிஸ்" ஆக மாறிய நயன்தாரா!

சென்னை: ஜீவா ஜோடியாக நடிக்கும் திருநாள் படத்தில் நயன்தாரா ப்ரீகேஜி டீச்சராக நடிக்கிறாராம்.

நயன்தாராவும், ஜீவாவும் ஏற்கெனவே ‘ஈ' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். தற்போது, மீண்டும் இவர்கள் இருவரும் திருநாள் என்ற படத்தில் ஜோடி சேர்ந்துள்ளனர். இப்படத்தை பி.எஸ்.ராம்நாத் இயக்குகிறார்.

Nayanthara to play a KG teacher

திருநாள் குறித்து ராம்நாத் கூறுகையில், ‘திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு ஹோம்லி வேடம். இவர் ஃப்ரி கேஜி டீச்சராக வருகிறார். இந்த கதாபாத்திரம் கோலிவுட் ரசிகர்களுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஜீவா கிராமத்து ரவுடி வேடத்தில் வருகிறார். ஜீவாவுக்கு முந்தைய படங்களைவிட இந்த படம் வித்தியாசமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பை கும்பகோணத்தில் இந்த மாதத்தில் தொடங்கவிருக்கிறோம்' என்றார்.

 

நீங்க கட்டி வைக்கிறீங்களா, இல்ல நானா கட்டிக்கட்டா?: அப்பாவை மிரட்டிய ஹீரோ

சென்னை: மகனுக்கு கேரளாவில் தனது பணக்கார உறவுக்காரரின் மகளை திருமணம் செய்து வைக்க நினைத்த முன்னாள் ஹீரோயின் கவலையில் உள்ளாராம்.

இந்த இயக்குனர், நடிகரால் முருங்கைக்காயின் மவுசு ஒரு காலத்தில் அதிகரித்தது. அவரது நடிகை மனைவி பல காலம் கழித்து தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளார். அவர்களின் மகளும், மகனும் கோலிவுட்டில் ஜொலிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் இயக்குனரின் மகனுக்கும், டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினிக்கும் விரைவில் திருமணம் செய்ய நிச்சயித்துள்ளனர். இந்த திருமணத்தில் மணமகனின் பெற்றோருக்கு விருப்பம் இல்லையாம். கட்டினால், இந்த பெண்ணைத் தான் கட்டுவேன் என மகன் அடம்பிடித்தாராம். நீங்கள் திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நானாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என மிரட்டினாராம். இதனால் வேறு வழியின்றி திருமணத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்களாம்.

அப்பாவும், அம்மாவும் ஒரு காலத்தில் ஹீரோ, ஹீரோயினாக நடித்தனர். வயதான பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் அவர்களின் வாரிசுகளால் திரை உலகில் தங்கள் திறமையை வெளிப்படுத்த முடியவில்லையே என்ற கவலையாம்.

இந்நிலையில் மகனுக்கு கேரளாவில் உள்ள தனது பணக்கார உறவுக்காரரின் மகளை திருமணம் செய்து வைக்க நடிகை ஆசைப்பட்டாராம். அவரது ஆசை நிராசையானதில் கவலையில் உள்ளாராம்.