கமர்சியல் படம் ஏன் சுசீந்திரன் பதில்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கமர்சியல் படம் ஏன் சுசீந்திரன் பதில்

6/10/2011 3:08:23 PM

சுசீந்திரன் கூறியது: 'வெண்ணிலா கபடி குழுÕ, 'நான் மகான் அல்லÕ, 'அழகர் சாமியின் குதிரைÕ படங்கள் வித்தியாசமான கதைக் களங்களில் அமைந்தது. அடுத்து இயக்கும் 'ராஜபாட்டைÕ, காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகிறது. இதில் மெல்லிய காதலும் இழையோடும். திடீரென கமர்ஷியல் களத்துக்கு மாறியது ஏன் எனக் கேட்கிறார்கள். Ôநான் மகான் அல்லÕ கமர்சியல் படம்தான். மாறி மாறி படம் தருவது நல்ல மாற்றமாக இருக்கும் என நம்புகிறேன். 'தில்Õ, 'தூள்Õ, 'சாமிÕ போல் படுவேகமான காட்சிகளை கொண்ட இக்கதையை விக்ரமிடம் சொன்னபோது, 'மிகவும் பிடித்திருக்கிறது. இதுபோல் வேடம் செய்து நீண்ட நாள் ஆகிவிட்டது. இப்போதுள்ள காலகட்டத்தில் இப்படியொரு படம் நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தேன்Õ என்று கூறி உடனே ஒப்புக்கொண்டார். ஏற்கும் வேடத்தில் எப்போதுமே தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் விக்ரம், இதில் ஜிம் பாய் வேடத்தில் நடிக்கிறார். இதற்காக சிறப்பு கவனம் எடுத்து தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். ஹீரோயின் தீக்ஷா சேத். இவர் தெலுங்கில் 'வான்டட்Õ படத்தில் நடித்தவர். முக்கிய வேடத்தில் இயக்குனர் கே.விஸ்வநாத் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தொடங்கிவிட்டது.

 

கிசு கிசு - ஹீரோ கால்ஷீட்டுக்கு தவம் கிடக்கும் வில்லன்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

ஹீரோ கால்ஷீட்டுக்கு தவம் கிடக்கும் வில்லன்

6/10/2011 3:09:14 PM

நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…

புதுப்புது வில்லன் நடிகர்கள் வந்துட்டதால் சரணமான ராஜ் நடிகரு ஃபீல்ட் அவுட் ஆயிட்டாரு. ரசிகர்கள் தன்னை மறந்துடுவாங்கன்னு ஃபீல் பண்ண¤னவரு திடீர்ன்னு படம் இயக்கப்போறதா அறிவிச்சாரு… அறிவிச்சாரு… நிஜ லவ் ஸ்டோரியை ஒருத்தர் சொல்ல, அதையே படமாக்குறதுன்னு முடிவு பண்ணிட்டாராம். இதுக்காக தெரிஞ்ச ஹீரோ, ஹீரோயினுங்ககிட்ட கால்ஷீட் கேட்டு தவம் கிடக்கிறாராம்… கிடக்கிறாராம்…

தல நடிக்கிற பார்ட் 2 படத்துக்கு ஷா கேமராமேன்தான் ஒளிப்பதிவு பண்றதா இருந்தாரு… இருந்தாரு… Ôஇன்னொரு படத¢துல பிசியா இருக்கேன். கொஞ்ச நாள் பொறுத்துக்குங்க. வந்துர்றேÕன்னு ஒளிப்பதிவு கேட்டாராம்… கேட்டாராம்… Ôஅதெல்லாம் முடியாதுÕன்னு தல நடிகரு சொன்னதால ஒளிப்பதிவை மாத்திட்டாங்களாம்… மாத்திட்டாங்களாம்…

காட்டன் வீர ஹீரோவோட படத்துக்கு இன்னும் ஹீரோயின் கிடைக்கல… கிடைக்கல… பெரும்பாலான காட்சிகள்ல ஹீரோயினுக்கும் வாய்ப்பு இருக்காம். இதனால ஷூட்டிங் நடத்துறதுல சிக்கல¢ ஏற்பட்டிருக்காம்… ஏற்பட்டிருக்காம்… ஷூட்டிங்கை நிறுத்திட்டு ஹீரோயினை வலை வீசி தேடுறாங்களாம்… தேடுறாங்களாம்…

 

காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

காதலன் கிடைக்கவில்லை : பிரியாமணி வருத்தம்!

6/10/2011 3:07:17 PM

பிரியாமணி கூறியது: பிருத்விராஜுடன் எனக்கு காதல் என்று கிசுகிசு வந்தது. அவரது திருமணத்துக்கு பிறகு அந்த கிசுகிசு ஓய்ந்தது. அதே வேகத்தில் தெலுங்கு ஹீரோ சுமந்துடன் காதல் என்று கிளப்பி விட்டார்கள். நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவரைப் பற்றி என் குடும்பத்தினருக்கு நன்கு தெரியும். எங்களுக்குள் ரொமான்ஸ¢ இல்லை. காதலும், கல்யாணமும் எனக்காக காத்திருக்கிறது. எனக்குகேற்ற காதலனை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. எனவே திருமணம் என்பது நீண்ட நாள் கழித்தே நடக்கும். நடிப்பில்தான் கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறேன். இதற்கிடையில் என்னை படம் இயக்கும்படி நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள். அதற்கு நிறைய கற்க வேண்டும், நிறைய அனுபவம் வேண்டும் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். இப்போதைக்கு நடிப்பு மட்டும்தான். முதலில் இதில் ஒரு நிறைவு கிடைக்கட்டும், அதன்பிறகு இயக்குவது பற்றி சிந்திப்பேன். கேமராவுக்கு பின்னால் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. அதற்கான நேரம் வரும்போது நிச்சயம் படம் இயக்குவேன்.

 

முதல் இடம் படத்துக்காக ஏவிஎம்மில் பிரமாண்ட செட்!


பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு பிரமாண்ட செட் போடுவதில் ஏவிஎம்முக்கு நிகரில்லை.

ஆனால், அவுட்டோர் ஷூட்டிங் அதிகரித்த பிறகு, இந்த செட் வழக்கம் கொஞ்சம் குறைந்துவிட்டது.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்துள்ள ஏவிஎம், தனது அடுத்த படத்துக்காக பிரமாண்ட செட் போட்டுள்ளது.

இது சண்டைக்காட்சிக்காக போடப்பட்ட செட். ஆரம்பத்தில் இந்தக் காட்சியை தஞ்சையில் உள்ள சந்தனப் பேட்டை, சவுக்கு, மூங்கில், வாள் பட்டறை என வித்தியாசமான சூழலில் எடுக்கத்திட்டமிட்டார்களாம். ஆனால் சூழ்நிலை இடம் தராததால் அதை அப்படியே ஏவிஎம்மில் பிரமாண்ட செட்டாக போட்டுவிட்டார்களாம்.

பெரிய அளவில் இந்த செட் பேசப்படும் என்கிறார்கள் ஏவிஎம் நிறுவனத்தினர்.

ஆர் குமரன் இயக்கும் இந்தப் படத்தில் விதார்த் - கவிதா நாயர் நடிக்கிறார்கள். இளவரசு, திருமுருகன், அப்புக்குட்டி, யோகி தேவராஜ், ரேகா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

விரைவில் வெளியாகத் தயாராகிவருகிறது முதல் இடம்.
 

'அக்கா ஒரு ஆட்டம் போடுங்க!' - குடிமகன் கலாட்டா... குலுங்கிய நமீதா!!


கற்றோருக்கு மட்டுமல்ல, நமீதா மாதிரி நடிகைகளுக்கும் செல்லுமிடமெல்லாம் சிறப்புதான்...

எங்கே போனாலும் கூட்டத்துக்கும் சுவாரஸ்ய தகவல்களுக்கும் குறைவில்லை.

சமீபத்தில் திருச்சியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்தார் நமீதா. திருச்சியிலிருந்து உள்ளடங்கிய பக்கா கிராமம் அது.

நெற்றி மேட்டில் கைவைத்தபடி உற்று நோக்கினாலும் ஒரு ஆள் தென்படாத பொட்டல் வெளியில் நிகழ்ச்சியை வைத்திருந்தார்கள். ஆனால் என்ன ஆச்சர்யம்... நமீதா வருகிறார் என்று கூறிய சில மணி நேரங்களில் சுத்துப்பட்டு கிராமங்களில் உள்ள அத்தனை பேரும் வயது வித்தியாசமின்றி குவிந்து விட்டனர்.

கூட்டத்தைப் பார்த்த நமீதாவுக்கு ஏக சந்தோஷம். வழக்கம்போல மச்சான்ஸ் மச்சான்ஸ் என அவர் ஐஸ் மழை பொழிய, வந்திருந்த குடிமகன் ஒருவர் "நமீதாக்கா அப்படியே ஒரு ஆட்டம் போடுக்கா.., " என்ற கூவ, அதைப் புரிந்து கொண்ட நமீதா அப்படியே வெட்கத்தில் முகம் சிவந்தது, எந்தப் படத்திலும் பார்க்காத அழகு!

பின்னர் அவர் கூறுகையில், "இந்த அன்புதான் தமிழ் ரசிகர்களிடம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஐ லவ் டமில் மச்சான்ஸ்", என்றார்.
 

யோகா... 'சினேகா ஆஹா'!


முன்பைவிட புதுப் பொலிவோடு காட்சி தருகிறார் புன்னகை இளவரசி சினேகா. காரணம்… யோகா!

ஆம், சினேகா இப்போது யோகாவில் மிகத் தீவிரமாக உள்ளாராம்.

எப்படி இந்த மாற்றம்?

“இந்த பொலிவுக்கும் அழகுக்கும் காரணம் யோகா தான். தினமும் 2 மணி நேரம் யோகா பயிற்சி செய்கிறேன். இது எனக்கு நல்ல பலனை அளித்துள்ளது. சாப்பாடு விஷயத்திலும் கட்டுப்பாட்டுடன் இருக்கிறேன். நிறைய நேரங்களை என் குடும்பத்தினருடன் செலவிட விரும்புகிறேன்,” என்றார்.

சினேகா தற்போது முரட்டுக்காளை, விடியல், நூற்றுக்கு நூறு படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ரஜானா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தியில் மேட் டேட் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

ஆனால் எந்த மொழிக்குப் போனாலும் சினேகா தவறாமல் போடும் கண்டிஷன்: நீச்சல் உடையில் நடிக்க வற்புறுத்தாதீர்கள், என்பதுதானாம்!

 

'ஏன் போட்டோ எடுத்தே?' - ஆண்ட்ரியாவின் அலட்டல்


சினிமா விழாக்களுக்கு வரும் திரையுலக பிரபலங்கள், குறிப்பாக நடிகைகளை வளைத்து வளைத்து போட்டோ எடுப்பது, புகைப்படக்காரர்களின் வாடிக்கை.

இதனைப் புரிந்து கொண்டு, பல நடிகைகளும் படு கவர்ச்சியான உடைகளில் வருவார்கள். புகைப்படக்காரர்களுக்கும் நடிகைகளுக்குமான ஒரு ரகசிய புரிந்து கொள்ளல் இது!

ஆனால் சில நடிகைகள் இப்படி போட்டோ எடுப்பதை விரும்புவதில்லை. அதாவது தமிழ்நாட்டில் மட்டும்தான் இந்தக் கெடுபிடி. ஆந்திரா, மும்பை என்று போனால் அதிகபட்ச ஆடைக் குறைப்பும், அட்டகாச போஸ்களும் தரத் தயங்குவதில்லை.

இப்படிப்பட்ட நடிகைகள் பட்டியலில் முதல் இரு இடங்கள் அனுஷ்கா மற்றும் ஆன்ட்ரியாவுக்குத்தான்.

அனுஷ்கா தன்னை படமெடுக்க வருபவர்களிடம், எக்ஸ்ட்ரா பைசா தருவீங்களா, என்று கேட்டு மிரள வைக்கிறார் என்றால், ஆண்ட்ரியா கதை தனி. தன்னைப் படமெடுத்த புகைப்படக்காரரை கூப்பிட்டு மிரட்டி, எடுத்த போட்டோவையே அழிக்க வைத்துள்ளார்.

சமீபத்தில் நடந்த எக்ஸ்மேன் பிரிமியர் ஷோவுக்கு வந்திருந்த ஆண்ட்ரியாவை ஒரு இணையதள புகைப்படக்காரர் படமெடுத்துவிட்டார். உடனே அவரை அருகில் அழைத்த ஆண்ட்ரியா, “என்னைக் கேட்காமல் எப்படி படமெடுக்கலாம்” என கோபமாகக் கேட்டதுடன், கேமிராவைப் பிடுங்கி, அதிலிருந்த புகைப்படங்களை அழித்துவிட்டாராம்.

உடனே பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த நடிகர் ஜெயம் ரவி, ஆண்ட்ரியாவுக்காக பரிந்து கொண்டு வந்துவிட்டார்.

“தம்பி குடிச்சிருக்கியா.. அதெப்படி நீ எங்களை போட்டோ எடுக்கலாம். நீ எந்தப் பத்திரிகை, ஐடி கார்ட் காட்டு…?” என்றெல்லாம் எகிற, அமைதியாக ஒதுங்கிப் போய்விட்டாராம் புகைப்படக்காரர்.

“புகைப்படமெடுக்க வருந்தி வருந்தி அழைத்த சத்யம் சினிமா நிர்வாகத்தையல்லவா அவர் நியாயமாகக் கேட்டிருக்க வேண்டும். இன்னொன்று இந்த பிரிமியர் ஷோ சமாச்சாரமெல்லாமே ஒரு விளம்பரம்தானே… விளம்பர நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு புகைப்படம் எடுக்கக் கூடாது என்றால் எப்படி!”, என்று குமைந்தார் சம்பந்தப்பட்ட புகைப்படக்காரர்!!

 

முதல் பார்வையிலேயே கவனம் ஈர்த்த கன்னடத்து ப்ரணிதா


உதயன் படத்தில் அருள் நிதியுடன் ஜோடி போடுகிறார் கன்னடத்து ப்ரனிதா.

இயக்குநரின் முதல் பார்வையிலேயே அவரை கவர்ந்து விட்டாராம் இந்த ப்ரணிதா.

வம்சம் படத்தின் மூலம் ஹீரோவானார் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த அருள் நிதி. கருணாநிதியின் மகன் தமிழரசுவின் மகன் இவர். இப்போது உதயன் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடி போட்டிருப்பவர்தான் ப்ரணிதா.

இந்தப் படத்துக்காக நாயகியைத் தேடி அலைந்த இயக்குநரின் கண்ணில் பட்டார் ப்ரணிதா. முதல் பார்வையிலேயே ப்ரணிதா, இயக்குநரைக் கவர்ந்து விட்டாராம்.

கன்னடத்துப் பைங்கிளியான ப்ரணிதா, கன்னடத்தில் வெளியான போக்கிரி படத்தில் நடித்திருக்கிறார். பாவா என்ற படத்திலும் நடித்தவர்.

உதயன் பட வாய்ப்பை உடனே ஏற்றுக் கொண்ட ப்ரணிதா படப்பிடிப்புக்காக சென்னைக்கு வந்தபோது இயக்குநரைப் போலவே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டாராம்.

யாரப்பா இது என்று அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் நடிப்பில் அசத்திய ப்ரணிதாவுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வாய்ப்பு உள்ளது. ரசிகர்களை இவர் வெகு சீக்கிரம் கவர்ந்து விடுவார் என்கிறார்கள் படக் குழுவினர்.

இந்தப் படத்தில் இன்னொரு விசேஷமும் உள்ளது. ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் ஒரு பாடலுக்கு பாடியுள்ளார். கத்ரிகோபால் நாத்தின் மகன் மணிகான் கதிரிதான் படத்தின் இசையமைப்பாளர். அவருடைய சாய்ஸாம் ஸ்ருதி.

 

'பெப்சி' தொழிலாளர் பிரச்சினை: படப்பிடிப்பு ரத்து


சென்னை: சம்பள உயர்வு கேட்டு பெப்சி தொழிலாளர்கள் போராட்டம் தொடங்கியுள்ளதால், நேற்று ஒரு படத்தின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டது.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு வருகிறார்கள். இதுதொடர்பாக தொழிலாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சம்பள உயர்வு பிரச்சினை காரணமாக ஒரு தமிழ் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த படத்தின் பெயர், 'பொன்மாலைப் பொழுது.' கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார். ஏ.சி.துரை டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு, பெங்களூரில் நடைபெற்று வந்தது.

திடீரென்று, "தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (பெப்சி) தீர்மானித்துள்ளபடி சம்பள உயர்வு கொடுத்தால்தான் வேலை செய்வோம்'' என்று படப்பிடிப்பில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் கூறியதால், பெங்களூரில் நடைபெற்று வந்த 'பொன்மாலைப்பொழுது' படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர்-நடிகைகள் உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் சென்னை திரும்பினார்கள்.

நாளொன்றுக்கு ரூ 350 முதல் 500 வரை பெற்று வந்த ஊழியர்கள் தற்போது ரூ 2000 சம்பளம் கோரியுள்ளனர்.
 

உருது மொழியில் வாழ்க்கை வரலாறு எழுதும் தர்மேந்திரா!


பாலிவுட்டின் சாதனை நாயகன் தர்மேந்திரா தனது வாழ்க்கை வரலாற்றை எழுதுகிறார், ஆனால் இந்தியிலோ ஆங்கிலத்திலோ அல்ல, உருது மொழியில்!

இந்தப் புத்தகத்தில், ஒரு நடிகனாக மாற, 23 வயதிலி்ருந்து தான் பட்ட கஷ்டங்களை அவர் விரிவாகவே சொல்லப் போகிறாராம்.

நடிகராக வருவதை லட்சியமாகக் கொண்டு மும்பை வந்த தர்மேந்திரா, நடிப்புத் திறமைக்காக ஒரு பத்திரிகை நடத்திய போட்டியில் வெற்றிபெற்றார். அதன் பிறகும் அவருக்கு ஒரு ஆண்டு வரை வாய்ப்புக் கிடைக்கவில்லையாம். இந்த காலகட்டத்தில் அவர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியிருக்கிறார்.

தான் பட்ட இந்த சிரமங்கள் இளைஞர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த வாழ்க்கை வரலாற்றை அவர் எழுதுகிறாராம்.

இந்த புத்தகத்தில் தனது இரு திருமணங்கள், ஹேமமாலினியுடனான காதல், மற்ற நடிகைகளுடன் தன்னை இணைத்துப் பேசப்படக் காரணமாக இருந்தவை பற்றியும் விவரிக்கப் போகிறாராம் இந்த ஷோலே ஹீரோ!

ஹேமமாலினியை திருமணம் செய்து கொள்வதற்காகவே முஸ்லிமாக மாறினார் தர்மேந்திரா என்று சொல்லப்படுவதுண்டு. அதையும் இதில் எழுதுவாரா... பார்க்கலாம்!