மணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா!

பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளர் விஜய் டிவி ரம்யா முதல் முதலாக சினிமாவில் நடிக்கிறார். மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், சினிமா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவராகவும் உள்ளார் ரம்யா.

மணிரத்னம் படம் மூலம் பெரிய திரைக்கு வரும் டிவி தொகுப்பாளினி ரம்யா!

இதுவரை தொலைக்காட்சிகளில் மட்டுமே தோன்றி வந்த இவர் ஓகே கண்மணி என்ற தற்காலிகப் பெயர் கொண்ட படத்தில் நடிக்கிறார். இதனை மணிரத்னம் இயக்குகிறார்.

துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிக்கும் இந்தப் படம் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் கதாநாயகியுடன் வரும் வேடத்தில் ரம்யா நடிக்கிறார். இதற்காக டெல்லியில் முகாமிட்டு நடித்து வருகிறார் ரம்யா.

இதற்கு முன் மொழி படத்தில் ஒரு காட்சியில் வந்து போனார் ரம்யா.

 

ஷாட் ரெடி என்று கூறும் வரை அமைதியாக இருப்பார்.. - விஜய் பற்றி சமந்தா

விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள் தொடர்ந்து அவர்களின் புகழ் பாடுவது வழக்கமான விஷயம்.

தெலுங்கு சினிமாக்காரர்கள் இணைந்து ஹூட் ஹூட் புயல் பாதிப்புக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியொன்ற சமீபத்தில் நடத்தினர். இதில், ராம் சரண், சமந்தா, காஜல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதில் சமந்தாவிடம் விஜய் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சமந்தா பதில் அளித்தார்.

ஷாட் ரெடி என்று கூறும் வரை அமைதியாக இருப்பார்..  - விஜய் பற்றி சமந்தா

அவர் கூறுகையில், ''விஜய் மிகவும் அமைதியானவர்; அதிகம் பேச மாட்டார். 'ஷாட் ரெடி' என்று கூறும் வரை அமைதியாக இருப்பார்.

'ஷாட் ரெடி' என சொன்னால் போதும். அடுத்த நொடியே அவருக்குள் அப்படி ஒரு சக்தி வந்துவிடும். ஒவ்வொரு ஷாட்டிலும் சுற்றி இருப்பவர்களுக்கு ஆச்சர்யம் கொடுப்பார்.

அந்த வகையில் விஜய் ஒரு ஸ்ப்ளிட் பெர்சனாலிட்டி ஹீரோ என்றுதான் சொல்ல வேண்டும்," என்றார்.

 

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

சென்னை: சின்ன பட்ஜெட்டில் தயாராகும் படங்களின் நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிட்டால் கடன்காரனைப் போலப் பார்க்கிறார்கள் விஐபிக்கள் என்றார் இயக்குநர் பேரரசு.

புதுமுகங்கள் நடித்துள்ள பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

இதில், நடித்துள்ள சந்தோஷ் குமார், பாபுஜி, வி.டி.ராஜா, கீர்த்தி, சுமோ சிவா, டான்ஸ் ராஜா, ஹரே ராம் சக்கரவர்த்தி, அகிலா, இயக்குனர் வி.டி. ராஜா, இசையப்பாளர்கள் ஆர்.ஆர்.கார்த்திக்-பாலபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் திருப்பாச்சி, சிவகாசி போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பேரரசு, கண்ணெதிரே தோன்றினாள் படத்தை இயக்கிய ரவிச்சந்திரன், சமூக சேவகர் பாலம் கல்யாண சுந்தரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விழாவில் இயக்குனர் பேரரசு பேசும்போது, ‘‘இந்த படத்தைப் போல் குறைந்த முதலீட்டில் எடுக்கப்படும் படங்களின் விழாக்களுக்கு வி.ஐ.பி.க்கள் வர மிகவும் தயக்கம் காட்டுகிறார்கள்.

இதுபோன்ற படங்களை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. அவர்களை பட விழாவிற்கு அழைக்கச் சென்றால், கடன்காரர்களை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள். உண்மையில் சினிமாவை நேசிப்பவர்கள் இம்மாதிரி சிறு முதலீட்டில் உருவான பட விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும்.

சின்ன படங்களின் விழாவுக்கு கூப்பிட்டால் கடன்காரனைப் போல பார்க்கிறார்கள் விஐபிகள் - பேரரசு

வெற்றி என்பது யாருக்கும் நிலையானதல்ல. ஒரு படம் தோல்வி அடைந்தால், அந்த இயக்குனரின் சரக்கு தீர்ந்து விட்டது என்று வாழ்க்கையில் வெற்றி கண்டு இருப்பவர்கள் நினைப்பது தவறு. நாங்கள் ஒன்றும் மதுபானக் கடை சரக்கு அல்ல. நாங்கள் திரும்பவும் வெற்றி அடைவோம்.

இப்படத்தின் பாடல் மற்றும் டிரெய்லர் ரசிக்கும்படியாக இருந்தது. நகைச்சுவை படத்திற்கான அனைத்து சிறப்பம்சமும் இந்த டிரெய்லரில் இருக்கிறது,'' என்றார்.

 

சன் குடும்ப விழாவிற்கு வந்த குஷ்பு… ரெட் கார்பெட் வரவேற்பு

சென்னை: காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த குஷ்பு மீண்டும் சன் குடும்பத்திற்குள் எப்படி வந்தார் என்று ஆச்சரியப்படுகிறீர்களா? சன் டிவி வழங்கிய விருது வழங்கும் நிகழ்ச்சியில்தான் குஷ்பு பங்கேற்றார்.

சன் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் சிறப்பாக நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சன் டிவி., ‘சன் குடும்பம் விருதுகள்' என்ற பெயரில் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. சின்னத்திரை கலைஞர்களின் திறமையை அங்கீகரிக்கவும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

சன் குடும்ப விழாவிற்கு வந்த குஷ்பு… ரெட் கார்பெட் வரவேற்பு

18 சீரியல்கள்

சன் டி.வி.யில் தினமும் காலை முதல் மாலை வரை, ‘சொந்த பந்தம்', ‘பொம்மலாட்டம்', ‘தேவதை', ‘மரகத வீணை', ‘பொன்னூஞ்சல்', ‘இளவரசி', ‘வள்ளி', ‘கல்யாணப்பரிசு', ‘பிள்ளை நிலா', ‘முந்தானை முடிச்சு', ‘பாசமலர்', ‘நாதஸ்வரம்', ‘தெய்வ மகள்', ‘வம்சம்', ‘தென்றல்', ‘வாணி ராணி', ‘சக்தி', ‘அழகி' ஆகிய பதினெட்டு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்தத் தொடர்களில் இருந்தே விருதுக்குரியவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

26 பிரிவுகளில் விருதுகள்

சிறந்த கதாநாயகன், கதாநாயகி, அப்பா, அம்மா, மாமியார், மருமகள், அண்ணன், தங்கை, வில்லன், வில்லி, நகைச்சுவை நடிகர், நடிகை, இயக்குனர், ஒளிப்பதிவாளர், வசனகர்த்தா, திரைக்கதை, இசை உட்பட மொத்தம் 26 பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டன.

பிரம்மாண்டவிழா

ஒவ்வொரு பிரிவில் இருந்தும் நான்கு பேர் பரிந்துரைக்கப்பட்டு அதில் ஒருவருக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான விழா, மாமல்லபுரத்தில் உள்ள கான்புளூயன்ஸ் கன்வென்சன் சென்டரில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்றது.

சிறந்த கதாநாயகன்

இந்த வருடம் சிறந்த கதாநாயகன் விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ தொடரில் நடிக்கும் ஸ்ரீகுமார், ‘நாதஸ்வரம்' தொடரில் நடிக்கும் திருமுருகன், ‘தெய்வமகள்' தொடரில் நடிக்கும் கிருஷ்ணா, ‘தென்றல்' தொடரில் நடிக்கும் தீபக் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சிறந்த நாயகி

சிறந்த கதாநாயகி விருதுக்கு ‘வாணி ராணி' ராதிகா, ‘நாதஸ்வரம்' ஸ்ருத்திகா, ‘தெய்வமகள்' வாணி போஜன், ‘தென்றல்' ஸ்ருதி ஆகிய 4 பேர் பரிந்துரைக்கப்பட்டனர்.

சிறந்த ஜோடி

சிறந்த ஜோடிக்கான விருதுக்கு ‘பொம்மலாட்டம்‘ ஸ்ரீகுமார்-ஸ்ரீஷா, ‘தென்றல்' தீபக்-ஸ்ருதி, ‘நாதஸ்வரம்' திருமுருகன் - ஸ்ருத்திகா, ‘பொன்னூஞ்சல்' விஸ்வா- அபிதா பரிந்துரைக்கப்பட்டனர்.

வாழ்நாள் சாதனையாளர்

கடந்த 16 ஆண்டுகளாக சன் டிவி சீரியலில் ராதிகாவிற்கு அப்பாவாக நடிக்கும் ரவிகுமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

சிறந்த அக்கா, அண்ணன்

சிறந்த அக்காவாக சீமா, சிறந்த சகோதரனாக - ஸ்டாலின்

சிறந்த துணை நடிகராக பப்லு, சிறந்த துணை நடிகையாக பப்லு, சிறந்த துணை நடிகையாக அனுராதா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த மருமகன் விஸ்வா தேர்வு செய்யப்பட்டார். ஆனால் என்னகாரணமே விருது வாங்க அவர் வரவில்லை.

நெகிழ்ந்த பப்லு

சிறந்த துணை நடிகர் விருது பெற்ற நடிகர் பப்லு என்ற பிரிதிவிராஜ், தனது மகன், மனைவி கையினால் விருது பெற்றார். அந்த தருணத்தை நெகிழ்ச்சியுடன் அனுபவித்தாக கூறினார்.

ராதிகாவின் நினைவுகள்

நிகழ்ச்சியில் மனோபாலா, நளினி ஜோடியின் காமெடி நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. அரண்மனை படத்தை உல்டா செய்திருந்தனர். ராதிகா, ரம்யா கிருஷ்ணனிடம் அவர்களின் பழைய நினைவுகளை பேட்டி எடுத்தார் மனோபாலா.

சிறந்த வில்லிகள்

விழாவில் சிறந்த வில்லிகளாக வள்ளியில் இந்திரசேனாவாக நடித்த ராணியும், தெய்வமகள் தொடரில் நடித்த காயத்ரியும் தேர்வு செய்யப்பட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

குடும்ப விழாவில் குடும்பமாக

சின்னத்திரை கலைஞர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொண்டனர். சின்னத்திரை கலைஞர்களின் நடனம், நகைச்சுவை நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

கூடுதல் கவர்ச்சியில் ஓவியா

சின்னத்திரை நடிகர்களுக்கான விருதுவிழா என்றாலும் வெள்ளித்திரை நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். நடிகைகள் ஆண்ட்ரியா, பூஜா, ராய் லட்சுமி, பூர்ணா, விசாகா சிங், நந்திதா, ஓவியா ஆகியோர் கலைநிகழ்ச்சிகளில் நடனமாடி பார்வையாளர்களை மகிழ்வித்தனர். நிகழ்ச்சியில் ஓவியாவின் கவர்ச்சி கூடுதலாகவே இருந்தது.

ஒரே புகழ்மழைதான்

நடிகர்கள் விஜய் சேதுபதி, ஜெயப்பிரகாஷ், விடிவி கணேஷ், ஆதி, கிருஷ்ணா, ஷாம், வசந்த் விஜய், வைபவ், வெங்கட்பிரபு, சிவா, ஆரி, திலீபன் இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரபு சாலமன், சரண், கண்ணன், துரை, பாடலாசிரியர் விவேகா உட்பட பலர் கலந்துகொண்டதோடு சன்டிவி நிறுவனத்திற்கு ஒரே புகழ்மழை பொழிந்தனர் என்பதுதான் சிறப்பம்சம்.

குஷ்பு மேட்டருக்கு வருவோம்

இந்த விழா மாமல்லபுரத்தில் நடைபெற்று இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. சன்டிவியில் நேற்று ஒருபகுதியைத்தான் ஒளிபரப்பினார்கள் அடுத்த பகுதி வரும் 7ஆம் தேதி ஒளிபரப்பாக உள்ளது. எனவே எந்த கட்சியிலும் இல்லாத போதுதான் குஷ்பு சன்டிவி நிகழ்ச்சியில் பங்கேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் எனவே அவர் சன் குடும்ப விழாவில் பங்கேற்றது காங்கிரஸ் கட்சியினருக்கு ஆச்சரியமாக இருக்காது என்றே நம்பலாம்.

 

அப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி! - பாலம் கல்யாணசுந்தரம்

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க.. அப்பாதான் இல்லை. எனவே உங்களை அப்பாவாக தத்தெடுக்கிறேன் என்று கூறி பாலம் கல்யாணசுந்தரத்தை அப்பாவாக்கிக் கொண்டாராம் ரஜினி.

இந்த சம்பவத்தை இன்று நடந்த பெருமாள் கோயில் உண்டசோறு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கல்யாணசுந்தரமே சொன்னார்.

இந்த விழாவில் பேசிய அவர், ‘‘நான் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் கலந்து கொள்வதில்லை. இப்படத்தின் இயக்குனர் ராஜா விழாவில் கலந்த கொள்ள வந்து கூப்பிட்டார். ஒரு முறைக்கு 10-முறை அழைத்தார். ஒருமுறை வந்து கூப்பிட்டாலே வந்து விடுவேன் என்று அவரிடம் கூறிவிட்டு விழாவிற்கு வந்தேன்.

அப்பாவாக என்னைத் தத்தெடுத்தார் ரஜினி! - பாலம் கல்யாணசுந்தரம்

ரூ 30 கோடி

என்னைப் பற்றி இங்கு பலர் புகழந்து பேசினார்கள்.

எனது சேவையைப் பாராட்டி அமெரிக்காவில் எனக்கு விருதுடன் 30 கோடி ரூபாய் பணமும் கிடைத்தது. அந்த பணத்தை அங்குள்ள தொண்டு நிறுவனத்திற்கு நன்கொடை செய்தேன். அது நான் சம்பாதித்த பணம் அல்ல. மேலும் எனக்கு குழந்தைகள் இல்லை. ஆகவே, நான் அதை நன்கொடை செய்தேன்.

அம்மா அறிவுரை

இந்த நேரத்தில் எனது அம்மா சொன்ன அறிவுரைதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவர், ‘வாழ்க்கையில் பேராசை கூடாது. ஒரு நாளைக்கு ஒரு உயிருக்காவது உதவி செய்ய வேண்டும். சம்பாதிக்கிற பணத்தில் 10-ல் ஒரு பங்கை நல்ல காரியங்களுக்கு செலவழிக்க வேண்டும்' என்றார். எனது அம்மா சொன்னதை நான் கடைபிடித்து வருகிறேன்.

பென்சன் பணம்

நான் ஓய்வு பெறும்போது எனக்கு 10 லட்சம் ரூபாய் கிடைத்தது. எனக்கு குழந்தை இல்லாததால் அந்த பணத்தை நன்கொடை செய்தேன்.

தத்தெடுத்த ரஜினி

இது தொடர்பாக எனக்கு ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஜினி, 'எனக்கு இரு மகள்கள் உள்ளனர். அப்பா தான் இல்லை. ஆகவே, பாலம் கல்யாணசுந்தரத்தை தந்தையாக தத்தெடுத்துக் கொள்கிறேன்' என்று கூறினார்.

பெரிய விஷயம்

குழந்தைகள் இல்லாத நான் நன்கொடை செய்தது பெரிய விஷயம் இல்லை. ஆனால், குழந்தைகள் உள்ள ஒருவர் இது போல் நன்கொடை செய்துள்ளார். ஆனால், அவர் பெயர் வெளியே தெரியவில்லை,'' என்றார்.

பில் கிளின்டன் இந்தியா வந்தபோது அப்துல் கலாம் மற்றும் பாலம் கல்யாண சுந்தரம் ஆகிய இருவரையும் மட்டும்தான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார்: சமந்தா

ஹைதராபாத்: விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகை சமந்தா, தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். விஜய்யுடன் நடித்தது பற்றி கூறுமாறு மகேஷ் சமந்தாவிடம் கேட்டார்.

விஜய் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதிரியும், பின்னால் ஒரு மாதிரியும் இருப்பார்: சமந்தா

அதற்கு சமந்தா கூறுகையில்,

விஜய் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருப்பார். இயக்குனர் மட்டும் அவரிடம் எதுவும் செய்யாமல் இருக்குமாறு கூறினால் 2 மணிநேரம் ஆனாலும் கூட அவர் யாருடனும் பேசாமல் அமைதியாக இருப்பார். ஆனால் கேமராவுக்கு முன்பு வந்துவிட்டால் நடிப்பில் அசத்துவார். அமைதியாக இருக்கும் இவரா கேமராவுக்கு முன்னால் இப்படி நடிக்கிறார் என்று வியப்பாக இருந்தது.

ஒரு வேளை அவருக்கு ஸ்பிளிட் பர்சனாலிட்டியோ என்று கூற நினைத்துள்ளேன். நகைச்சுவை, நடனம், சண்டை காட்சிகள் என்று எந்த காட்சியாக இருந்தாலும் அசத்துவார். அவர் கேமராவுக்கு முன்னால் ஒரு மாதரியும், பின்னால் வேறு மாதிரியும் இருப்பார் என்றார்.

 

உத்தம வில்லனுக்கு பெரும் சிக்கல்... கமலுடன் பஞ்சாயத்து நடத்தும் தியேட்டர்காரர்கள்!

கமல் ஹாஸன் நடித்த விஸ்வரூபம் 2, உத்தமவில்லன், பாபநாசம் என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாக வேண்டும். பட வேலைகள் அனைத்தும் முடிந்துவிட்டன. ஆனால் தாமதமாகிக் கொண்டிருக்கிறது ரிலீஸ்.

கமலின் ஆரம்ப காலத்தில் கூட இப்படியொரு நிலை இருந்ததில்லை. ஆனால் அவரை உலகநாயகன் என ரசிகர்கள் கொண்டாடும் தருணத்தில் இப்படியொரு சிக்கல். தாமதத்துக்கு பல்வேறு விளக்கங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு அவரது எந்தப் படத்தையும் வெளியிட முடியாது எனும் அளவுக்கு நிலையை சிக்கலாகியிருக்கிறது.

இந்த சிக்கலைத் தீர்க்க தீவிரமாக பஞ்சாயத்து நடந்து வருகிறது. இதில் கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனே நேரடியாகப் பங்கெடுத்து வருகிறார்.

சிக்கலுக்கு முக்கிய காரணம் காம்பெடிஷன் கமிஷன் ஆப் இந்தியா என்ற அரசு அமைப்பில் நடந்துவரும் வழக்கு.

'விஸ்வரூபம்' படத்துக்கு போதிய அரங்குகள் கிடைக்காத சூழலில், படத்தை முதலில் டி.டி.எச். மூலம் நேரடியாக வீடுகளிலும், பின்னர் தியேட்டர்களிலும் வெளியிடப் போவதாக கமல் அறிவித்ததார்.

உத்தம வில்லனுக்கு பெரும் சிக்கல்... கமலுடன் பஞ்சாயத்து நடத்தும் தியேட்டர்காரர்கள்!

இதைக் கடுமையாக எதிர்த்து திரையரங்க உரிமையாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பின்னர் சமரசமாகி, 400 அரங்குகளை படத்துக்கு ஒதுக்கியதெல்லாம் நினைவிருக்கலாம்.

இடையில் முறுகல் நிலை தொடர்ந்தபோது, "தொழில் செய்வது என் உரிமை. அதை முடக்கப் பார்க்கிறார்கள்' என டெல்லியில் உள்ள காம்ப்பெடிட்டிவ் கமிஷன் ஆஃப் இந்தியாவில் வழக்குப் போட்டார் கமல். இதையடுத்து, தமிழ்நாடு திரையரங்க உரிமை யாளர் சங்கத் தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர்செல்வம், இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர், மக்கள் தொடர்பாளர் ஆர்.ராமானுஜம், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் "அபிராமி' ராமநாதன் மற்றும் சென்னை-செங்கை திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவர் அருள்பதி உள்ளிட்ட 13 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது கமிஷன்.

இந்த வழக்கிற்கு ஆதாரமாக 'விஸ்வரூபம்' படத்தை வெளியிடக்கூடாது' என தமிழ் நாடு திரையரங்க உரிமையாளர் சங்க லெட்டர்பேடில் எழுதப்பட்ட தீர்மானத்தை தாக்கல் செய்திருந்தார் கமல் அண்ணன் சந்திரஹாஸன் .

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி 13 பேரும் பதில் வழக்கு தாக்கல் செய்ய, அது தள்ளுபடியாகிவிட்டது.

ஏற்கெனவே ஒஸ்தி படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என தியேட்டர்கள் உரிமையாளர் சங்கம் அறிவித்து, அதை ரிலையன்ஸ் வழக்காக காம்பெடிடிவ் கமிஷனில் தாக்கல் செய்ய, அதில் சங்ககத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனவே இந்த முறை வழக்கில் தமக்கு எதிரான தீர்ப்பு வந்தால் பெரிய பாதிப்பு இருக்கும் என்தால் வழக்கை வாபஸ் பெற வைக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது தியேட்டர்கள் சங்கம் தரப்பு.

வழக்கு தீராவிட்டால் படம் வெளியாகாது என உத்தமவில்லன் படத் தயாரிப்பாளரான லிங்குசாமிக்கு தெரிவித்துவிட்டார் அருள்பதி. உடனே கமல் அண்ணன் சந்திரஹாஸனிடம் இந்த விஷயத்தை போஸ் தெரிவிக்க, பஞ்சாயத்து ஆரம்பமானது.

உட்லண்ட்ஸ் அரங்கில் அருள்பதி, சந்திரஹாஸன், போஸ், பன்னீர்செல்வம் உள்பட ஐந்து பேர் பங்கேற்க பேச்சு தொடங்கியது.

'விஸ்வரூபம் விஷயத்தில் எல்லாம் சுமூகமாக முடிந்து, கமலும் எங்களுக்கு மோதிரமெல்லாம் அணிவித்த நிலையில், இந்த வழக்கை எப்படி தொடர்ந்து நடத்தலாம்.. அதை வாபஸ் வாங்க வேண்டும்,' என அருள்பதி கோரிக்கை வைக்க, இனி வழக்கை வாபஸ் வாங்க முடியாது. காரணம் அது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை என்று கூறினாராம் சந்திரஹாஸன்.

'வழக்கை வாபஸ் பெறும் வழி எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்க' என்று கேட்டுள்ளார், மூத்த வழக்கறிஞரான சந்திரஹாஸன்.

இது அருள்பதி தரப்பை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. என்ன ஆனாலும் சரி இந்த முறை படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது. ஆனால் அதை வெளிப்படையாக செய்யக்கூடாது என்ற உறுதியோடு கலைந்திருக்கிறார்கள்.

இந்த பேச்சுவார்த்தை நடந்தததையும், உத்தம வில்லன் வெளியீட்டுக்கு சிக்கல் இருப்பதையும் சந்திரஹாஸனும் ஒப்புக் கொண்டார்.

உத்தம வில்லன் வெளியீட்டுக்கு முன்பே காம்பெடெடிவ் கமிஷன் வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் எனத் தெரிகிறது. அது திரையுலகையே புரட்டிப் போடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

கலைத்த ரசிகர் மன்றங்களை திரும்பவும் ஆரம்பிக்க அஜித் திட்டம்! ரசிகர்களின் அன்பால் முடிவு!!

சென்னை: கலைத்த தனது ரசிகர் மன்றங்களை மீண்டும் தொடங்குவது குறித்து குறித்து அல்டிமேட் ஸ்டார் அஜித் யோசித்து வருவதாக தெரிகிறது.

பல பெரிய நடிகர்களுக்கும் தங்களது பெயரில் ரசிகர் மன்றங்கள் வைத்துள்ளனர். அதில் ஒருசிலரை தவிர பெரும்பான நடிகர்கள் தங்களது ரசிகர்களை எப்போதுமே சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இந்த நடிகர்கள் தங்கள் படங்கள் ரிலீசாகும்போது, ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டுவது. திரையரங்குகளில் தங்களுக்கு ராட்சத கட்-அவுட்கள் வைத்து பாலபிஷேகம் செய்வது போன்ற விஷயங்களுக்காகத்தான் ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரசிகர் மன்றங்களை தங்களுக்கு பெரிய பலம் என்று பெருவாரியான நடிகர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

கலைத்த ரசிகர் மன்றங்களை திரும்பவும் ஆரம்பிக்க அஜித் திட்டம்! ரசிகர்களின் அன்பால் முடிவு!!

ஆனால் அஜித் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு ஒரு முடிவை எடுத்தார். தனக்கிருந்த ரசிகர் மன்றங்கள் அனைத்தையும் கலைத்தார். இருப்பினும் ரசிகர்கள் அவரை விடுவதாக இல்லை. அவரது பிறந்த நாள் மற்றும் படங்கள் வெளியாகும்போது தாங்களது சொந்த பணத்திலேயே கட்அவுட்கள் வைத்து வருகிறார்கள். அஜித்தின் சமீபத்திய படங்களும் முன்பை விட வசூலை வாரிக்குவித்து வருகின்றன.

இது அஜித்துக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளது. மன்றமே இல்லேன்னு சொல்லியும் தன் மீது இவ்வளவு அன்பும், உயிரும் வைத்திருக்கும் ரசிகர்களுக்காக மீண்டும் ரசிகர் மன்றத்தை நடத்தலாமா? என்று தனது சகாக்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம் அஜித்.

மீண்டும் மன்றம் ஆரம்பித்தால் அதை எப்படி நடத்த வேண்டும், மன்றத்தில் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என கூடவே பல நிபந்தனைகளையும் போடப் போகிறாராம் அஜித். மீண்டும் ரசிகர்மன்றத்தை திறந்தால் அதில் உறுப்பினர்களாக உள்ள ரசிகர்கள் நற்பணியை மட்டுமே செய்ய வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சிக்கும் மன்றம் சார்பிலோ தனிப்பட்ட முறையிலோ ஆதரவு அளிக்கக் கூடாது.

அதேபோல எந்த ஒரு அரசியல் கட்சியுடன் ரசிகர் மன்றக்கொடியையும் சேர்த்து பறக்க விடக் கூடாது என்று இப்படி பல கண்டிஷன்கள் போடப்பட உள்ளதாம். என்ன.. இனி அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தானே?

 

சிவாவுக்காக சைவத்துக்கு மாறிய அஜீத்

சென்னை: சிறுத்தை சிவாவின் படத்திற்காக உடல் எடையை குறைக்க அஜீத் சைவத்திற்கு மாறியுள்ளார்.

அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்துள்ள என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. படத்தின் டீஸர் வரும் 4ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்க அஜீத் தனது உடல் எடையை குறைத்து கும்மென்று ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவாவுக்காக காய்கறியும், பழமும் சாப்பிடும் அஜீத்

என்னை அறிந்தால் படத்தை அடுத்து அஜீத் தன்னை வைத்து வீரம் படத்தை எடுத்த சிவாவின் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார். அந்த படத்தில் அஜீத் ஸ்லிம்மாக இருக்க வேண்டுமாம். அதனால் அவர் மூன்று வேலையும் காய்கறிகள், பழங்களை தான் சாப்பிடுகிறாராம்.

சைவத்திற்கு மாறியுள்ள அஜீத் தற்போதே 3 கிலோ எடையை குறைத்துள்ளாராம். பூசினாற் போல் இருந்த அஜீத் கௌதமுக்காக கும்மென்று ஆனார். தற்போது சிவாவுக்காக ஒல்லியாகிறார்.

உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் அஜீத்துக்கு ஒன்றும் புதிதன்று.

 

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள் - நடிகர் பரத்

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும் இப்போது எதிரிகளாகி விட்டார்கள் என்று 'நட்சத்திர பேட்மிண்டன் லீக்' அறிமுக விழாவில் பரத் பேசினார்.

இது பற்றிய விவரம் வருமாறு:

நட்சத்திர கிரிக்கெட்டைப் போலவே அடுத்து பிரபலமாக இருக்கிறது நட்சத்திர பேட்மிண்டன் (இறகுப் பந்துப் போட்டி). க்ரீன் க்ரூப் ஆப் கம்பெனியின் ஏற்பாட்டில் SBL எனப்படும் 'ஸ்டார் பேட்மிண்டன் லீக்' ( Star's Badminton League) சென்னையில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும்  இப்போது எதிரிகளாகி விட்டார்கள் - நடிகர் பரத்

இதன் அறிமுகவிழா சென்னை ஃபோரம் விஜயா மாலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

விழாவில் பிரபல பின்னணிப் பாடகர்கள் பாடல்களைப் பாடினார்கள். நடன இயக்குநர் அமைப்பில் நடனக் கலைஞர்கள் நடனம் ஆடினர்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் ஸ்டார் பேட்மிண்டன் லீக்கில் கலந்து கொள்ளப் போகும் அணிகள் அறிமுகப் படுத்தப் பட்டன.

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும்  இப்போது எதிரிகளாகி விட்டார்கள் - நடிகர் பரத்

ஸ்ரீகாந்த்

'சென்னை ஃப்ளிக்கர்ஸ்' (Chennai Flickers ) அணியின் தலைவரும், உரிமையாளருமான ஸ்ரீகாந்த், 'என் ப்ரண்டப் போல யாரு மச்சான் 'பாடலைப் பாடி ஆரம்பித்தார்.

தொடர்ந்து ஸ்ரீகாந்த் பேசும் போது, ''இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் கணேஷ் தான் ஒரு செயல் வீரர் என்று நிரூபித்து இருக்கிறார். இன்று மதத்துக்குப் பிறகு எல்லாராலும் பேசப் படுவது விளையாட்டுதான். எல்லாரையும் இணைப்பதும் விளையாட்டுதான். கிரிக்கெட் வளர்ந்து விட்ட இந்தச் சூழலில் பேட்மிண்டனுக்கு முக்கியத்துவம் தரும் இம் முயற்சி வரவேற்புக்குரியது.

நண்பர்களான ஸ்ரீகாந்தும் ஷாமும்  இப்போது எதிரிகளாகி விட்டார்கள் - நடிகர் பரத்

இது ஒரு ஆரம்பம்தான். பெரிய கட்டடத்துக்கான முதல் செங்கல் இன்று எடுத்துவைக்கப் பட்டிருக்கிறது. இது பெரிதாக வரும்; வளரும். மற்ற அணியின் தலைவர்கள் பரத், ஷாம் எல்லாரும் என் நண்பர்கள்தான். ஆனாலும் இது சரியான போட்டியாக இருக்கும். நட்சத்திரங்களை வைத்து ஸ்டார் நைட் போன்ற விழாக்கள் வைப்பதை விட்டுவிட்டு இப்படி விளையாட்டு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும்," என்றார்.

பரத்

அடுத்த அணியான 'சென்னை ஸ்மாஷர்ஸ்'(Chennai Smashers) உரிமையாளரான நடிகர் பரத் பேசும் போது, "கிரிக்கெட் எனக்குப் புதுசில்லை. ஐந்து ஆண்டுகளாக கிரிக்கெட் ஆடி வருகிறேன். இதில் எனக்கு அணித் தலைவர் பொறுப்பு தந்ததற்கு நன்றி. என்னுடன் மோதும் ஷாம், ஸ்ரீகாந்த் இருவருமே எனக்கு சகோதரர் போன்றவர்கள். நண்பர்கள் போன்றவர்கள். இப்போது எதிரிகளாகி விட்டார்கள். ஆனால் எங்களுக்குள் போட்டி இருக்கும்;வேறுவழியில்லை ஆரோக்கியமான போட்டி இருக்கும்," என்றார்.

ஷாம்

முன்றாவது அணியான 'சென்னை ராக்கெட்ஸ்' (Chennai Racquets) அணியைச் சேர்ந்த ஷாம் பேசும் போது, "முதலில் இப்படிப்பட்ட முயற்சியில் இறங்கியுள்ள கணேஷுக்கு நன்றி. பாராட்டுகள். இவர் இதற்கு முன் ஸ்டார் கிரிக்கெட் நடத்தினார். சின்னத்திரை நட்சத்திரங்களையும் வெள்ளித்திரை நட்சத்திரங்களையும் கிரிக்கெட்டில் மோதவிட்டார். பாண்டிச்சேரியில் நடத்திய அந்தப் போட்டியில் நான் கலந்து கொண்டேன். பிரமாண்டமாக நடத்தினார். பிரமாதமாக வெற்றியும் பெற்றார். ஒரு சாரிட்டிக்காக அதில் வசூலானதை எங்கள் முன்பாக அதே மேடையிலேயே கொடுத்தார். அப்படிப்பட்ட நல்ல இதயம் உள்ளவர் அழைத்ததால் மூன்று பேருமே மறுக்காமல் ஒப்புக் கொண்டோம். ஏதோ நடித்தோம் போனோம் என்ற இல்லாமல் நாமும் நல்ல விஷயங்களில் ஈடுபட வேண்டும் நல்ல விஷயங்களில் இடம் பெற வேண்டும் என்று நான் உடனே ஒப்புக் கொண்டேன். இதில் ஆடும் எங்களுக்குள் ஈகோ, பொறாமை எல்லாம் கிடையாது மகிழ்ச்சியுடன் கலந்து கொள்கிறோம். இதில் விளையாடும் போது வயது குறைந்த உணர்வு, எங்களுக்குள் இருக்கிற சிறு பையனை வெளிக் கொண்டு வரும் உணர்வு வருகிறது. " என்றார்.

தங்கள் அணிகளின் பெயர்கள் பற்றிக் கூறும் போது ''பேட்மிண்டனில் படார் என்று அடிப்பது 'பிளிக்'. ஜெயிக்கபோவது பிளிக்கர்ஸ்தான்," என்றார் ஸ்ரீகாந்த் .

''என்னதான் ராக் கெட் வைத்து ப்ளிக் அடித்தாலும் கடைசியில் ஸ்மாஷ் அடித்தால் தான் சூப்பர்," என்றார் பரத்.

''ராக்கெட் இல்லாமல் ப்ளிக்கோ, ஸ்மாஷோ அடிக்க முடியாது. ராக்கெட் இல்லாமல் பேட்மிண்டனே இல்லை,'' என்றார் ஷாம்.

நிகழ்ச்சியில் சுற்றிலும் குழுமியிருந்த பார்வையாளர்கள் மத்தியில் ஒவ்வொரு அணியின் டிஷர்ட்டும் வண்ணமய ஒளியுடன் ஒலியும் அதிர அறிமுகம் செய்யப் பட்டது. அணியின் டி ஷர்ட்டை அமைப்பாளர் கணேஷ் அறிமுகம் செய்தார்.

இந்நிகழ்ச்சியில் நடிகை அனுராதா, அவரது மகள் அபிநயஸ்ரீ, நடிகர்கள் பானுசந்தர், பவர்ஸ்டார் சீனிவாசன், அசோக், ப்ருத்வி, கிரண், முன்னா, அருண், சரண், தருண், பிளேடு சங்கர், ஆரி, சூரி, பாபா பாஸ்கர் மாஸ்டர், நடிகைகள் நிரோஷா, ஜெனிபர், மணிஷா, ஸ்வாதி, அலீஷா அப்துல்லா, சஞ்சனா, ஐஸ்வர்யா ராஜேஷ், காயத்ரி, யாஷ்மித், சாரா ,பாடகர்கள் நவின், க்ரிஷ் ஐயர், இசையமைப்பாளர்கள் நிவாஸ் பிரசன்னா, தரண்குமார் ஆகியோரும் மேடையில் தோன்றி அணிகளை ஊக்கமூட்டினர்:

இந்த ஸ்டார் பேட்மிண்டன் லீக் 2015 ஜனவரியில் சென்னை போரம் விஜயா மாலில் நடைபெறவுள்ளது.

 

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது ஷங்கரின் ஐ!

பெரிய படங்களுக்கிடையிலான மோதலைத் தவிர்க்கவும், போட்ட பணத்தை முடிந்தவரை எடுக்கவும் ஷங்கரின் ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாகவே திரையிடுகின்றனர்.

பொங்கலுக்கு ஆம்பள, ஐ, என்னை அறிந்தால் ஆகிய மூன்று படங்கள் வெளியாவதில் உறுதியாக உள்ளன.

பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பே வருகிறது ஷங்கரின் ஐ!  

இவற்றில் ஐ மிகப் பிரமாண்ட பட்ஜெட் படம். ரூ 150 கோடிக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். உலகளவில் 20000 (இருபதாயிரம்) அரங்குகளில் வெளியிடப் போவதாக அதன் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் இப்போதைய நிலபவரப்படி 5000 அரங்குகளாவது கிடைக்குமா என்பதே உண்மை.

தமிழகத்தில் உள்ள மொத்த அரங்கிலும் வெளியிட முயற்சிக்கின்றனர். ஆனால் 3 படங்கள் வெளியாவதால் தலா 300 அரங்குகள் கிடைத்தாலே பெரிய விஷயமாகிவிட்டது.

இந்த நெருக்கடியைத் தவிர்க்க, ஐ படத்தை பொங்கலுக்கு ஒரு வாரம் முன்பாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். அப்படி வெளியிட்டால் 500 அரங்குகளுக்கு மேல் கிடைக்கும். ஒரு வாரம் வசூல் பார்த்த பிறகு, 300 அரங்குகளாகக் குறைத்துக் கொள்ளலாம் என்று திட்டம். அப்படிச் செய்தால், விஷால் மற்றும் அஜீத் படங்களுக்கும் போதிய அரங்குகள் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது.

இந்த ஏற்பாடு விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் ஏற்புடையதாக உள்ளது.

 

அரைகுறை ஆடை அணிந்த நடிகை கவ்ஹர் கானுக்கு பளார் விட்ட வாலிபர்

மும்பை: மும்பையில் டிவி நிகழ்ச்சிக்காக ஷூட்டிங்கில் இருந்த பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் அரைகுறை ஆடை அணிவதாகக் கூறி பார்வையாளர் ஒருவர் அவரை அறைந்துள்ளார்.

மும்பை பிலிம்சிட்டியில் பாலிவுட் நடிகை கவ்ஹர் கான் கலந்து கொண்ட டிவி நிகழ்ச்சி ஷூட்டிங் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. அவர் டிவியில் இசை ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இந்த ஷோவின் இறுதி நிகழ்ச்சியை தான் ஷூட் செய்து கொண்டிருந்தனர். அப்போது பார்வையாளர்களில் ஒருவரான முகமது அகில் மாலிக்(24) என்பவர் மேடையில் ஏறி கவ்ஹர் கானை தொட முயன்றார். அவர் எதிர்க்கவே மாலிக் கானை கன்னத்தில் அறைந்தார். முஸ்லீமாக இருந்து கொண்டு அரை குறை ஆடை அணிந்து சீப்பான பாடல்களுக்கு உங்களால் எப்படி நடனம் ஆட முடிகிறது என்று மாலிக் கவ்ஹர் கானை கேட்டார்.

அரைகுறை ஆடை அணிந்த நடிகைக்கு பளார் விட்ட வாலிபர்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் ஓடிவந்து மாலிக்கை பிடித்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

மாலிக் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு அவர் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

கவ்ஹர் கான் கடந்த ஆண்டு நடந்த பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகை, அவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன்: ஷில்பா ஷெட்டி

லக்னோ: தான் பிரதமர் நரேந்திர மோடியின் மிகப் பெரிய ரசிகை என்று பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் பி.சி. ஜுவல்லர் நகைக்கடையை திறந்து வைக்க பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை அழைத்திருந்தார்கள். ஷில்பா வரும் செய்தி அறிந்து ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு குவிந்துவிட்டனர். அத்தனை கூட்டத்திற்கு மத்தியில் வந்து நின்ற காரில் இருந்து இறங்கி வந்து ஷில்பா நகைக்கடையை திறந்து வைத்தார்.

தன்னைப் பார்க்க இத்தனை ரசிகர்கள் கூடியதை பார்த்து ஷில்பா நெகிழ்ந்துவிட்டார். நகைக்கடையை திறந்து வைத்த ஷில்பாவிடம் செய்தியாளர்கள் பிரதமர் மோடி பற்றி கருத்து தெரிவிக்குமாறு கேட்டனர்.

நான் மோடியின் மிகப் பெரிய ரசிகை, அவரைப் பற்றி பேசிக்கிட்டே இருப்பேன்: ஷில்பா ஷெட்டி

அதற்கு அவர் கூறுகையில்,

நான் பிரதமர் மோடிஜியின் மிகப் பெரிய ரசிகை. அவரைப் பற்றி பேசினால் அவர் அந்த நல்லதை செய்தார், இதை செய்தார் என்று பேசிக் கொண்டே இருப்பேன் என்றார்.

மோடியின் சுத்தமான இந்தியா சவாலை பாலிவுட்காரர்கள் பலரும் ஏற்றுள்ளனர். அவர்களை பாராட்டி மோடியும் ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ஜிவி பிரகாஷ் மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்த பேய்ப் படம்!

இது நகைச்சுவை திகில் படங்களின் காலம். இந்த ரகப் படங்களுக்குதான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் இருக்கிறது.

அதை உணர்ந்து ஜி.வி.பிரகாஷ் குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டார்லிங்' சிரிக்க மட்டுமல்ல ரசிக்க, பயமுறுத்த வரும் படமாக உருவாகி வருகிறது.

ஜிவி பிரகாஷ் மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்த பேய்ப் படம்!

சுமார் 50 படங்களுக்கு இசையமைத்துள்ள ஜி.வி.பிரகாஷ் முதலில் நாயகனாக நடிக்கத் தொடங்கிய படம் ‘பென்சில்' என்றாலும் ‘டார்லிங்' முந்திக் கொண்டு வெளிவரவிருக்கிறது.

தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்' படத்தின் ரீமேக்தான் இந்த ‘டார்லிங்'. அல்லு அரவிந்தின் கீதா ஆர்ட்ஸ் நிறுவனமும் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் இப்படத்தை இணைந்து தயாரிக்கின்றன. சாம் ஆண்டன் இயக்குகிறார்.

ஜி வி பிரகாஷ்

‘டார்லிங்' பற்றி கதாநாயகனும் பாடகி சைந்தவியின் டார்லிங்குமான ஜி.வி.பிரகாஷ் பேசும் போது , "நான் யதேச்சையாக ஸ்டுடியோ க்ரீன' ஞானவேல்ராஜா சாரைச் சந்தித்தேன். ‘பென்சில்' படம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது எடுத்த சில காட்சிகளை பார்த்தார். அவருக்குப் பிடித்திருந்தது. அன்றே இந்த படம் பற்றிக் கூறினார். ‘பிரேம கதா சித்ரம்' ஒரு ஹாரர் படம். தெலுங்கில் மட்டுமல்ல கன்னடத்திலும் பெரிய வெற்றி பெற்ற படம். இதை தமிழில் எடுப்பது பற்றிப் பேசினார். நடிப்பது என்று முடிவு செய்தேன். இதன் தயாரிப்பில் கீதா ஆர்ட்ஸ், ஸ்டுடியோ கீரீன் என்று இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்தது கூடுதல் மகிழ்ச்சி.

அந்த ஒரிஜினல் படம் ‘பிரேம கதா சித்ரம்'தை விட காட்சி அமைப்பிலும் ஒலி அமைப்பிலும் சிறப்பாக பிரமாதமாக அமையும்படி நிறைய உழைத்திருக்கிறோம். ஒரு வெற்றிப் படத்தை மறுபடி எடுக்கும்போது அதைவிட மேம்பட்ட தரத்தில் எல்லா வகையிலும் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறோம். நான் நடித்த முதல் படம் ‘பென்சில' என்றாலும் வெளிவரும் முதல் படமாக ‘டார்லிங்' படம் இருக்கும்," என்றார்.

சான் ஆன்டன்

படத்தின் இயக்குநர் சாம் ஆண்டன் கூறுகையில், "இது எனக்கு முதல்படம். நண்பர் லெட்சுமணன் மூலம் இந்த வாய்ப்பு வந்தது. தெலுங்கில் பெரிய வெற்றி பெற்ற ‘பிரேம கதா சித்ரம்'த்தின் எடுத்துக் கொண்டு தமிழுக்காக நிறைய மாற்றங்கள் செய்துள்ளோம். வித்தியாசப்படுத்தி எடுத்திருக்கிறோம்.

ஹாரர், காமெடி, லவ், வித்தியாசம் என்று தரமான கமர்ஷிpயல் கதையாக படம் உருவாகியுள்ளது. ஹாரரும், ஹியூமரும் புதுவித சேர்க்கையாக படத்தில் பேசப்படும். படம் நன்றாக வர தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர் கொடுத்த சுதந்திரம்தான் காரணம். கேட்டதெல்லாம் கொடுத்தார். அதனால்தான் நினைத்தபடி எடுக்க முடிந்தது.

சுமார் ஐம்பது படங்களுக்கு இசையமைத்தவர் என்றாலும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் கொடுத்த ஒத்துழைப்பு பெரியது. மீண்டும் மீண்டும் நடிக்கச் சொன்னாலும் அலுத்துக் கொள்ளாமல் நடித்தவர். படக்குழுவையே கஷ்டப்பட வைத்தேன். கதாநாயகன் உள்பட பலரையும் பல நாட்கள் தூங்கவிடவில்லை.

ஜிவி பிரகாஷ் மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்த பேய்ப் படம்!

நாயகி நிக்கி கலராணி நடித்திருக்கிறார். கருணாஸ் தன்னை புதிய பரிமாணத்தில் வெளிப்படுத்தி சிரிக்க வைத்துள்ளார். பால சரவணனும் அப்படித்தான். ‘நான் கடவுள்' ராஜேந்திரன் ஏற்றுள்ள வேடமும் பேசப்படும். கிருஷ்;ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். 35 நாட்களில் திட்டமிட்டு 33 நாட்களில் முடித்ததற்கு அவரது அசுர உழைப்புதான் காரணம். தயாரிப்பாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் பெரிய விஷயம். என்ன கேட்டாலும் செய்து கொடுத்தார்கள்.

ஜி.வி.பிரகாஷ் இரண்டு, மூன்று நாட்கள் தூங்காமல் நடித்துக் கொடுத்தார். அதுமட்டுமல்ல அருமையான பாடல்களையும் போட்டுக் கொடுத்துள்ளார். அதில் குறிப்பாக ‘அன்பே அன்பே', 'உன் விழிகள் பாடல்கள்..' என் பேவரைட் என்பேன். பாடல்களில் மட்டுமல்ல பின்னணி இசையிலும் பிரமாதப் படுத்தியிருக்கிறார்," என்றார்.

‘டார்லிங்' டிசம்பர் மாத்தில் வெளியாகிறது.

 

பேய்ப் படங்கள் எடுக்க ஆசைப்படும் பிரபு தேவா

பிரபுதேவாவுக்கு இப்போது புது ஆசை வந்திருக்கிறது. ஒரு பேய்ப்படம் எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அஜய் தேவ்கான்- சோனாக்சி சின்ஹாவை வைத்து ஆக்சன் ஜாக்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த டிசம்பர் மாதம் அந்தப் படம் வெளியாகிறது.

தங்கர்பச்சான் இயக்கத்தில் அவர் எப்போதோ நடிக்க ‘களவாடிய பொழுதுகள்' படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது.

பேய்ப் படங்கள் எடுக்க ஆசைப்படும் பிரபு தேவா

இந்த நிலையில் பேய் படங்கள் இயக்க பிரபுதேவா முடிவு செய்துள்ளார். தமிழ் பட உலகில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால், அதே பாணியில் தமிழ், இந்தியில் படங்கள் இயக்க முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து பிரபுதேவா கூறும்போது, ‘‘நான் ஆக்ஷன் படங்களையும் காமெடி படங்களையும் எடுத்திருக்கிறேன். அடுத்து ‘திகில்' நிறைந்த பேய் படம் எடுக்க முடிவு செய்துள்ளேன். முதலில் அப்படியொரு படத்தை இந்தியில் தரப் போகிறேன். அடுத்து தமிழில்," என்றார்.

தமிழில் ஹிட்டடித்த ஏதாவது ஒரு பேய்ப் படம் விரைவில் இந்தி பேசக்கூடும் என்று தெரிகிறது.

 

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி இரண்டாம் பாகம் தயாராகிறது!

விஷால் - லிங்குசாமி முதல் முதலாக இணைந்த சண்டக்கோழி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அதற்கு இணையான வெற்றியை அதன் பிறகு இருவருமே கண்டதில்லை எனும் அளவுக்கு அந்தப் படம் அமைந்தது.

விஷால் - லிங்குசாமி கூட்டணியில் சண்டக்கோழி இரண்டாம் பாகம் தயாராகிறது!

இப்போது மீண்டும் அதே கூட்டணி இணையவிருக்கிறது. இது சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகமாக வரவிருக்கிறது.

அஞ்சானுக்குப் பிறகு கார்த்தி நடிக்கும் எண்ணி ஏழு நாள் படத்தை இயக்கப் போகிறார் லிங்குசாமி. இந்தப் படம் முடிந்த கையோடு விஷாலுடன் இணைந்து சண்டக்கோழி இரண்டாம் பாகம் எடுக்கிறார்.

அநேகமாக இந்தப் படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரியும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்சும் தயாரிக்கக் கூடும் என்கிறார்கள்.