ஜெயலலிதாவுக்கு பத்திரிக்கை வைத்த சினேகா

Sneha Invites Jaya Her Wedding   
சினேகா முதல்வர் ஜெயலலிதாவுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா திருமணம் வரும் 11ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் நடக்கிறது. காதலில் விழுந்த அவர்கள் தங்கள் விருப்பத்தை பெரியவர்களிடம் தெரிவிக்க அவர்களும் பச்சைக் கொடி காட்டிவிட்டனர்.

தற்போது சினேகாவும், பிரசன்னாவும் அனைவருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் சினேகா தனது குடும்பத்தாருடன் சென்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பத்திரிக்கை வைத்து கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதற்கு முதல்வரும் நிச்சயம் வருவதாக வாக்களித்துள்ளார். அதனால் சினேகா திருமணத்தில் முதல்வரைக் காணலாம் என்று தெரிகிறது.

திருமணத்திற்கு பிறகு சினேகா விரும்பினால் நடிக்கலாம் என்று பிரசன்னா சொல்லிவிட்டார். அதனால் திருமணத்திற்கு பிறகு சினேகா நடிப்பதும், நடிக்காமல் இருப்பதும் அவர் கையில் தான் உள்ளது. கடந்த 12 ஆண்டுகளாக சினேகா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினேகா, பிரசன்னா இருவரும் முடித்துக்கொடுக்க வேண்டிய படங்கள் இன்னும் உள்ளதால் அவர்கள் திருமணம் முடிந்த பிறகு நடித்துக் கொடுக்கவிருக்கிறார்கள்.
 
வாலு சிம்புவுக்கு ஜோடி ஹன்சிகா

Hansika Simbu Join Again Vaalu
வாலு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி சாரி வெறும் ஹன்சிகா தேர்வாகியுள்ளார்.

நிக் ஆர்ட்ஸ் சிம்புவை வைத்து எடுக்கும் படம் வாலு. புதிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். சிந்தனை செய் இயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் தான விஜய். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிம்புவுக்கு யாரை ஜோடியாகப் போடுவது என்று ஒரு அலசு அலசினர். இறுதியாக சிக்கியது ஹன்சிகா.

நிக் ஆர்ட்ஸ், சிம்பு, ஹன்சிகா மீண்டும் சேரும் படம் தான் வாலு. ஏற்கனவே சிம்பு நடிக்கும் வேட்டை மன்னனை நிக் ஆர்ட்ஸ் தயாரிக்க அதில் ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் ஒன்று சேர்கிறது.

வேட்டை மன்னன் முடிந்த பிறகு வாலு துவங்ப்படும் என்று தெரிகிறது.

இது குறித்து நாயகன் சிம்பு கூறுகையில்,

வாலு படத்தில் எனக்கு ஜோடியாக ஹன்சிகா நடிக்கிறார். இது காதல் பிளஸ் நகைச்சுவை கலந்த படமாக இருக்கும். இந்த படத்தை பற்றி இதற்கு மேல் எதுவும் கூற முடியாது என்றார்.
 
திரிஷாவைத் திருப்திப்படுத்த தமன்னா நீக்கம்!

Lisa Hayden Endrendrum Punnagai   
என்றென்றும் புன்னகை படத்தில் தமன்னாவை ஒப்பந்தம் செய்ய த்ரிஷா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து அவருக்கு பதிலாக பிரபல மாடல் லிசா ஹேடன் நடிக்கிறார்.

ஜீவாவுடன் த்ரிஷா முதன் முதலாக ஜோடி சேரும் படம் என்றென்றும் புன்னகை. அதில் இன்னொரு ஹீரோயின் தேவை என்று நினைத்த இயக்குனர் அகமது, தமன்னாவை தேர்வு செய்துள்ளார். இந்த செய்தி த்ரிஷா காதுக்கு எட்டவே, இந்த படத்தில் ஒரு ஹீரோயின் என்று சொல்லிவிட்டு இப்போ தமன்னாவை ஒப்பந்தம் செய்ய நினைத்தால் எப்படி. படத்தில் எனது முக்கியத்துவம் குறைந்துவிடுமே என்று மல்லுக்கு நின்றுள்ளார்.

த்ரிஷாவின் கோபத்தைப் பார்த்த இயக்குனர் சற்றே இறங்கி வந்து சமாதானம் செய்துள்ளார். சரி, சரி இன்னொரு ஹீரோயின் போட்டால் அவர் தமிழ், தெலுங்கு அல்லாத மொழிகளில் நடிப்பவராக இருக்க வேண்டும் என்று த்ரிஷா கன்டிஷன் போட்டுள்ளார். வேறு வழியின்றி இயக்குனர் தமன்னாவை எடுக்காமல் பாலிவுட் நடிகையும், பிரபல மாடலுமான லிசா ஹேடனை ஒப்பந்தம் செய்துள்ளார்.

அதன் பிறகே த்ரிஷா கூலாகியுள்ளாராம். த்ரிஷாவின் செல்லப்பெயர் ஹனியாம். ஆனால் அவரை அவ்வாறு அழைக்க சிலருக்கு மட்டுமே அனுமதி கொடுத்துள்ளார்.
 
''இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன்''...செளமியா அன்புமணிக்கு முருகதாஸ் சவால்!

A R Murugadoss S Poser Sowmya Anbumani
துப்பாக்கி படத்தில் விஜய் சுருட்டு பிடிப்பது போல இடம் பெறும் காட்சிக்கு டாகட்ர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா தலைமையிலான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், சினிமாப் பட வசனத்தை குறிப்பிட்டு ஒரு படத்தைப் போடடு நேரடியாகவே சவால் விட்டுள்ளார் இயக்குநர் ஏ.ஆர்.முருதகாஸ்.

துப்பாக்கி படத்தின் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டனர். அதில், அசல் படத்தில் அஜீத் சுருடடுடன் காட்சி அளித்ததைப் போன்று விஜய் சுருட்டு பிடித்தபடி இருக்கும் காட்சி இடம் பெற்றிருந்தது. இதற்கு பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக பசுமைத்தாயகத்தின் மாநில தலைவர் செளமியா அன்புமணி வெளியிட்ட அறிக்கையில்,

'வீ கிரியேஷன்ஸ்' நிறுவனத்தின் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கும் `துப்பாக்கி' எனும் திரைப்படத்தின் விளம்பரம் சுவரொட்டிகள் மூலம் கடந்த 1-ந் தேதி சென்னை நகரில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

`துப்பாக்கி' திரைப்படத்தின் இந்த விளம்பரத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு புகைப்பிடிக்கும் காட்சி விளம்பரங்களில் இடம்பெற்றுள்ளது இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

மத்திய அரசு, தமிழக அரசு, மத்திய திரைப்பட தணிக்கைத்துறை, நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து அதிகார அமைப்புகளும் திரைப்படங்களில் புகைபிடிக்கும் காட்சிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசாணையை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள நிலையில், விளம்பரங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெறுவது சட்டப்படி குற்றம் என்கிற உண்மையை அறிந்த பின்னரும், `துப்பாக்கி' திரைப்பட தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தரும், இயக்குனரும், நடிகரும், `துப்பாக்கி' திரைப்படத்தின் விளம்பரத்தில் புகைப்பிடிக்கும் காட்சியினை இடம் பெறச்செய்து சட்டத்தை அப்பட்டமாக மீறியுள்ளனர்.

எனவே இந்திய அரசின் புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தினை மீறி, குற்றமிழைத்துள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தமிழக அரசை பசுமைத்தாயகம் அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கோரியிருந்தார்.

பசுமைத் தாயகத்தின் இந்தக் கோரிக்கைக்கு தற்போது இயக்குநர் முருகதாஸின் டிவி்ட்டரில் விஜய் ரசிகர்களும் பிறரும் பகிரங்கமாகவே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதில் உசசமாக முருகதாஸே, ஒரு படத்தைப் போட்டு இவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று அதிரடியாக கூறியுள்ளார்.

ஒரு இந்திப் படத்தில் இடம் பெற்ற, ஒருவன், இன்னொருவனை கீழே தள்ளி கொலை செய்வது போன்ற காட்சி அடங்கிய பட போஸ்டர் அது. அந்தப் படத்தைப் போட்டு, இதுவும் விளம்பரம்தான், இவனை நிறுத்தச் சொல்லு நான் நிறுத்துறேன் என்று கமென்ட் போட்டுளளார முருகதாஸ்.

எங்க போய் நிக்கப் போகுதோ இது...!
 
பரதேசியில் பூஜா இல்லை, தன்ஷிகாவாம்

Pooja No Longer Paradesi   
பாலாவின் பரதேசி படத்தில் இருந்து நடிகை பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறார்.

இயக்குனர் பாலா இயக்கும் பரதேசி படத்தில் பூஜா தான் நாயகி என்று அறிவிப்பு வெளியானது. நீண்ட நாட்களாக கோலிவுட்டில் காணாமல் போன பூஜா இதன் மூலம் மறுபிரவேசம் செய்கிறார் என்றெல்லாம் கூறப்பட்டது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து பூஜா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் அரவாண் புகழ் தன்ஷிகா நடிக்கிறாராம்.

படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து பூஜா கூறுகையில்,

நான் வேறொரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். அந்த பட ஷூட்டிங்கிற்காக ஆஸ்திரேலியா செல்கிறேன். கால்ஷீட் பிரச்சனையால் தான் பாலா படத்தில் நடிக்க முடியவில்லை என்றார்.

பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வாங்கினார் பூஜா. அதன் பிறகு கடந்த 2010ம் ஆண்டு வெளிவந்த துரோகி படத்தில் கௌரவ வேடத்தில் வந்த பூஜாவை அடுத்து பார்க்கவே முடியவில்லை. இனி எப்பொழுது தான் கோலிவுட்டுக்கு வருவாரோ தெரியவில்லை.
 
'தல' கூட நடிக்க ஒரு பைசா கூட வேண்டாம்..பிந்து மாதவி

Bindu Madhavi Longs Act With Ajith

அஜீத் குமாருடன் நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார் நடிகை பிந்து மாதவி.

ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு ஹீரோவுடன் நடிப்பது வாழ்க்கையின் லட்சியமாக இருக்கும். அந்த வகையில் நடிகை பிந்து மாதவிக்கு அஜீத் குமாருடன் நடிப்பதே லட்சியமாம். ஒரு படத்திலாவது ‘தல’ கூட நடித்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்.

அது மட்டுமல்ல அஜீத் கூட நடிப்பது என்றால் பைசா சம்பளம் வேண்டாம் என்கிறார். இது மட்டுமல்ல பிந்து மாதவி பள்ளியில் படித்த காலத்தில் இருந்து அஜீத்தின் தீதீதீவிர ரசிகையாம். அஜீத்தின் எந்த படம் வந்தாலும் முதல் நாளே அடித்துபிடித்து போய் பார்த்துவிட்டு தான் மறு வேலையாம்.

இந்தியில் சக்கைப்போடு போட்ட தி டர்ட்டி பிக்சரை தமிழில் ரீமேக் செய்தால் சில்க் வேடத்தில் நடிக்கத் தயார் என்று அவர் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது ட்ர்ட்டியாக நடிக்கவிருப்பது உயர்ந்த மனுஷி அனுஷ்கா.

ஆந்திராவில் பிறந்தவராக இருந்தாலும் பிந்து படித்தது எல்லாம் வேலூர் விஐடியில்தான். அப்போதுதான் மாடலிங்கில் நுழைந்தார், அப்படியே சினிமாவிலும் விழுந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சனி பகவான் கோவில் வாசலில் ஷகீலாவை வைத்து ஷூட்டிங்-பக்தர்கள் டென்ஷன்

Shakeela Shooting Make People Tensed In Tirunallar   

திருநள்ளாரில் உள்ள புகழ் பெற்ற சனி பகவான் கோவில் வாசலை அடைத்தபடி பயங்கர கவர்ச்சி நடிகை ஷகீலாவை வைத்து ஷூட்டிங் நடத்தியதால் மக்கள் கடும் எரிச்சலடைந்தனர்.

பொது இடங்களில் மக்கள் அதிகம் செல்லும் இடங்களில், குறிப்பாக ஆன்மீகத் தலங்களில் சினிமாக்காரர்கள் செய்யும் அட்டாகசத்திற்கு அளவே இல்லாமல் போய் விட்டது.

கோவில்களில் படப்பிடிப்பு என்ற பெயரில் அவர்கள் நடந்து கொள்வது கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகங்களை சுழிக்க வைப்பதாக உள்ளது. இந்த நிலையில் திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலில் ஷகீலாவை வைத்து நடந்த படப்பிடிப்பால் மக்கள் கடுப்பாகி விட்டனர்.

ரவி என்பவர் தானே ஹீரோவாக நடித்து, இயக்கி உண்மை என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங்கை திருநள்ளார் கோவில் நளன் குளம், கோவில் ராஜகோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைத்திருந்தனர்.

கோவில் வாசலை கிட்டத்தட்ட முக்கால்வாசி அடைத்தபடி படப்பிடிப்பை நடத்தினர். அதில் கவர்ச்சி நடிகை ஷகீலா, காமெடியன்கள் வையாபுரி, போண்டா மணி, அல்வா வாசு, பாண்டு உள்ளிட்டோர் கலந்து கொண்டு காமெடி செய்வதாக காட்சி.

இதனால் பக்தர்களால் கோவிலுக்குள்ளே போகவும் முடியவில்லை, உள்ளிருந்து வெளியேறவும் முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகினர். ஷகீலாவை யாரும் எதுவும் செய்து விடாமல் தடுக்கும் வகையில், படப்பிடிப்புக் குழுவினர் வேறு ஏகப்பட்ட பந்தாக்களைச் செய்தபடி இருந்தனர்.

போலீஸாரின் முழு பாதுகாப்புடன் ஷூட்டிங் தொடர்ந்ததால் மக்கள் கடும் அதிருப்தியைடந்தனர்.