தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்

Rating:
3.0/5

நடிகர்கள்: சித்தார்த், சந்தானம், ஹன்சிகா, கணேஷ் வெங்கட்ராம்

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

இசை: சத்யா

பிஆர்ஓ : ஜான்சன்

தயாரிப்பு: யுடிவி

இயக்கம்: சுந்தர் சி

வழக்கமான காமெடி ப்ளஸ் ரொமான்டிக் கதையை புத்தம் புது ஹைடெக் பாலீஷில் கொடுத்திருக்கிறார் சுந்தர் சி, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படம் மூலமாக.

சும்மா சொல்லக்கூடாது.. முதல் காட்சியிலிருந்து, கடைசி காட்சி வரை அந்த கலகலப்பு குறையாமல், எந்தக் காட்சியிலும் எழுந்து போகவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் சுந்தர் (பாடல் காட்சியில் கூட ஹன்சிகாவுக்காக அப்படியே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருக்கிறார்கள் மக்கள்... ரசிகன்டா!).

தீயா வேலை செய்யணும் குமாரு - விமர்சனம்  

ஐடி எஞ்ஜினீயர் சித்தார்த்துக்கு கூட வேலை பார்க்கும் ஹன்சிகா மீது காதல். ஆனால் அதை சொல்லத் தயங்கி, ஐடியா மணியான சந்தானத்திடம் (பேரு மோக்கியா!) போகிறார். அந்த ஐடியாவை ஒர்க் அவுட் பண்ணப் பார்க்கும்போது, கணேஷ் ஹன்சிகாவை உஷார் பண்ணப் பார்க்கிறார். கணேஷ் - ஹன்சிகா காதலிக்காமலிருக்க கொஞ்சம் கிக்கிரி பிக்கிரி வேலை பார்க்கிறார்கள் சந்தானமும் சித்தார்த்தும். விளைவு... ஹன்சிகாவுடன் காதல் ஒர்க் அவுட் ஆகிறது சித்தார்த்துக்கு. அப்புறம்தான் தெரிகிறது சந்தானத்தின் தங்கைதான் ஹன்சிகா என்பது. இப்போது ஹன்சிகா - சித்தார்தைப் பிரிக்க சந்தானம் ஏகப்பட்ட திட்டம் போடுகிறார். அதைத் தாண்டி இருவரும் சேர்ந்தார்களா என்பது க்ளைமாக்ஸ்!

ஐடி இளைஞன் வேடம் முற்றிப் போன சித்தார்த்துக்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை. அவரும் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு என்னென்னமோ செய்கிறார். ஆனால் அவ்வளவாக எடுபடவில்லை. சந்தானம் வந்தால்தான் சித்தார்த் காட்சிகளை ரசிக்க முடிகிறதென்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

படத்தின் ஹீரோ கிட்டத்தட்ட சந்தானம்தான். ஆனால் அவரது கேரக்டர் அப்படியா மைடியர் மார்த்தாண்டனில் வரும் கவுண்டமணியின் Extended Role! என்ன.. அதில் ஒரு ஐடியாவுக்கு கட்டுக்கட்டாக காசு வாங்குவார் கவுண்டர்... சந்தானம் இதில் க்ரெடிட் கார்ட் தேய்க்கச் சொல்கிறார். ஆயிரம் சொல்லுங்க.. ஒரிஜினல் ஒரிஜினல்தான்!

ஹன்சிகாவை இதுவரை யாரும் இப்படி செக்ஸியாக எக்ஸ்போஸ் பண்ணதில்லை என்று சொல்ல வைத்திருக்கிறார் சுந்தர் சி.

கோபி அமர்நாத் ஒளிப்பதிவு நிஜமாகவே கண்களுக்கு இதம். அட, சுந்தர் சி படமாய்யா இது என்று கேட்க வைக்கின்றன பல ஷாட்கள்!

சத்யாவின் இசையில் எந்தப் பாட்டும் மனதில் நிற்கவில்லை.

படத்தின் பெரும் பலம் வசனங்கள். ஒரு கூட்டணியே இதற்காக தீயாய் வேலை செய்திருக்கிறது. நொடிக்கொரு சரவெடியாய் சிரிப்பை அள்ளுகின்றன.

சிரிப்பு சினிமாவோ.. சீரியஸ் சினிமாவோ... காலம், ரசனை மாற மாற, தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்வது படைப்பாளிக்கு முக்கியம். அதை நன்றாக உணர்ந்திருப்பவர் இயக்குநர் சுந்தர் சி.

படத்தில் குறைகள் இருந்தாலும், ஏன் எதற்கு என்று கேட்காமல் சிரித்துக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்... அதுதான் இந்தப் படத்தின் வெற்றி!

-எஸ்.ஷங்கர்

 

விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்

விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்

சென்னை: விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்.

விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்.

 

தலைவா... முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!

அசினுக்குப் பிறகு முதல் முறையாக சொந்தக் குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை'யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால்.

அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான்.

தலைவா... முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!  

ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார்.

இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா.

பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது.

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண்டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகிவிட்டார்," என்றார்.

 

இவற்றில் எந்தப் படத்தைதான் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்?

இவற்றில் எந்தப் படத்தைதான் பண்ணுவார் சூப்பர் ஸ்டார்?

கடந்த சில தினங்களாக ரஜினி கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பார் என்றும், இல்லையில்லை ஷங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்றும் செய்திகள் பரபரத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் இரண்டையுமே ரஜினி தரப்பிலோ சம்பந்தப்பட்ட இயக்குநர்கள் தரப்பிலோ ஒருவரும் உறுதிப்படுத்தவில்லை.

சில தினங்களுக்கு முன் ஒரு வார இதழ், கோச்சடையான் படம் முடிய இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவைப்படுவதால், அதற்கு முன் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி ஒரு படம் நடிக்கப் போவதாகவும், இரண்டு மாதங்களில் இந்தப் படம் முடிந்து விடும் என்றும், அந்தப் படம் எடுத்து முடிக்கும் வரை விஷயத்தை ரகசியமாக வைத்திருக்குமாறு ரஜினி கேட்டுக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தது.

இந்த செய்தி தொடர்ந்து ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தபோதே, முன்னணி ஆங்கில நாளிதள் ஒன்று தன் பங்குக்கு இன்னொரு பரபரப்பைக் கொளுத்திப் போட்டது.

இயக்குநர் ஷங்கர் ரஜினியைச் சந்தித்து ஒரு ஒன்லைன் சொன்னதாகவும், அது பிடித்துப் போய், அடுத்த படமாகவே இதைச் செய்யலாம் என ரஜினி சொன்னதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தது.

இந்த இரண்டு செய்திகளுமே உண்மையாக வாய்ப்பிருக்கிறதா?

ரஜினி தரப்பில் விசாரித்தால், 'அவரையும் அவர் படங்களையும் பற்றி தினமும் அவரவர் இஷ்டத்துக்கு எழுதுகிறார்கள். ஒருவரும் குறைந்தபட்சம் விசாரிக்கக் கூட முயற்சிப்பதில்லை. இந்த பரபரப்பு எப்படி கிளம்பியதோ அப்படியே மறந்தும்போகும். அதனால்தான் அதைப் பற்றி நாங்கள் அலட்டிக் கொள்வதில்லை. புதிய செய்தி ஏதாவது இருந்தால் அதை அதிகாரப்பூர்வமாக ரஜினி சாரே தருவார்," என்கிறார்கள்.

 

நேரமே சரியில்லை: மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்ட வடிவேலு

நேரமே சரியில்லை: மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்ட வடிவேலு

சென்னை: ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்திற்கு ஒளிப்பதிவாளர் கிடைக்காததால் வடிவேலு மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

அரசியல் கட்சிக்காக தீவிர பிரச்சாரத்தில் இறங்கி தேமுதிக தலைவர் விஜயகாந்தை தாறுமாறாகப் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார் வடிவேலு. தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சிக்கு வர தேமுதிக எதிர்கட்சியானதால் வடிவேலுவின் சினிமா வாழ்க்கைக்கு பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அவர் சினிமாவை விட்டு விலகி 2 ஆண்டுகளாக மதுரையில் இருந்தார்.

இந்நிலையில் 2 ஆண்டுகள் கழித்து ஜெகஜால புஜ பல தெனாலிராமன் படத்தில் நடிக்க சென்னைக்கு வந்தார். அந்த படத்தை ஒழுங்காக திட்டமிடாததால் ஒரே குளறுபடியாம். முதலில் படத்தை ஒளிப்பதிவு செய்த சகாதேவன் ஷூட்டிங்கில் நடந்த குளறுபடிகளால் டாட்டா காட்டிவிட்டு சென்றுவிட்டாராம்.

அடுத்ததாக கோபிநாத் வந்தார் அவரும் வந்தவேகத்தில் சென்றுவிட்டார். மூன்றாவதாக விஜய் மில்டன் ஒளிப்பதிவை கவனிக்க வந்தார். என்ன நடந்ததோ அவரும் சென்றுவிட்டார். இதனால் தற்போது ஒளிப்பதிவாளர் கிடைக்காமல் திணறுகிறார்களாம். இதையெல்லாம் பார்த்த வடிவேலு அப்செட்டாகி மீண்டும் மதுரைக்கே சென்றுவிட்டாராம்.

 

சிறையில் பவர்: திரையில் லிட்டில் பவர் ஸ்டார்

சிறையில் பவர்: திரையில் லிட்டில் பவர் ஸ்டார்

சென்னை: பவர் ஸ்டார் பல்வேறு மோசடி வழக்குகளில் சிறைக்குள் இருக்கிறார். இந்நிலையில் லிட்டில் பவர் ஸ்டார் திரைக்கு வந்துள்ளார்.

டாக்டர் சீனிவாசன் தனக்குத் தானே பவர் ஸ்டார் என்று பட்டம் அளித்துக் கொண்டு சுய விளம்பரம் செய்து வந்தார். இந்நிலையில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த பவரை சந்தானம் கலாய்த்து கலாய்த்து அவரின் மார்க்கெட்டை ஏற்றிவிட்டார். இந்த படத்தை அடுத்து பவருக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துவிட்டன.

இந்நிலையில் அவர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பவர் சிறையில் இருக்கையில் கோலிவுட்டில் நடிக்க வந்துள்ள குமரி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற பொருளாளர் அய்யப்பன் தன்னை லிட்டில் பவர் ஸ்டார் என்று கூறிக் கொள்கிறார். எனக்கு தமிழகத்தில் மட்டும் 25 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள் தெரியுமா என்று லிட்டில் பவர் கூறி வருகிறார்.

அவர் இயக்குனர் ரவி தம்பி இயக்கத்தில் தடை செய்யப்பட்ட பகுதி என்ற படத்தில் காமெடி காட்சிகளில் நன்றாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. மேலும் விஜய்யின் ஜில்லாவிலும் காமெடி கதாபாத்திரத்தில் வருகிறாராம் லிட்டில் பவர்.

ஒரு பவரே முடியல, இதுல லிட்டில் பவர் வேறையா?

 

இவங்க படத்துக்கு வேற பேரே கிடைக்கலையாக்கும்!: கடுப்பில் நடிகை

சென்னை: சிரிப்பழகி நடிகை தனது பெயரை வைத்து புதுப்படம் ஒன்று எடுக்கப்படுவதால் கடுப்பில் உள்ளாராம்.

அழகான சிரிப்புக்கு பெயர்போன நடிகையின் பெயரை வைத்து வில்லங்கமான தலைப்பில் படம் ஒன்றை எடுக்கின்றனர். படத்தின் தலைப்பை பார்க்கும் யாரும் ஓஹோ, இது அந்த நடிகையைப் பற்றிய படமா என்று நினைப்பார்கள். அப்படி ஒரு தலைப்பு.

அந்த தலைப்பு சிரிப்பழகியின் சிரிப்பை பாதித்துள்ளதாம். நல்லாத் தான் இவர்களின் படத்திற்கு வேற தலைப்பு எதுவும் கிடைக்கவில்லையா? என் பெயர் தான் கிடைத்ததா என்று குமுறிக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் தலைப்பை மாற்றக் கோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முயற்சிப்பதாக பேச்சு அடிபடுகிறது.