திவ்யா காதலுக்கு திடீர் பிரச்னை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

திவ்யா காதலுக்கு திடீர் பிரச்னை!

8/19/2011 5:28:12 PM

கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிநாட்டு தொழில் அதிபர் ரபேலுடன் நெருங்கிப் பழகி வருகிறார் திவ்யா. காதல் விஷயத்தில் இந்த ஜோடி ரகசியம் காத்து வந்தது. சமீபத்தில் பெங்களூரில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் திவ்யா-ரபேல் ஜோடியாக பங்கேற்றபோது இவர்களின் காதல் அம்பலத்துக்கு வந்தது. ரபேலின் பெயரை தனது முதுகில் பச்சை குத்தி இருப்பதுடன், 'ரபேலை தன் வாழ்வில் பெற்றது இறைவன் கொடுத்த வரம்’ என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

சமீபகாலமாக இந்த காதல் ஜோடிக்கிடையே பிரச்னை முளைத்திருப்பதாக கூறப்படுகிறது. திவ்யாவை செல்போனில் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ரபேல், இப்போதெல்லாம் தொடர்பு கொள்வதில்லையாம். திவ்யா தொடர்பு கொண்டாலும் ரபேல் பதில் அளிப்பதில்லையாம். இந்நிலையில் திவ்யா தோழிகளிடம் பேசும்போது, 'கன்னட படங்களில் பிஸியாக இருக்கிறேன். திருமணம் பற்றி இப்போது யோசிக்கவில்லை’ என சொல்கிறாராம்.

 

கௌதம் மேனன் படத்தில் ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கௌதம் மேனன் படத்தில் ஜீவா!

8/19/2011 9:49:20 AM

விஜய்யை வைத்து யோஹன். அத்தியாயம் ஒன்று படத்தை அடுத்த வருடம் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதற்கு முன்…? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கை முடித்து வெளியிட வேண்டும். அப்படியும் நாட்கள் மீந்து போகுமே? அந்த இடைவெளியில் ‌‌ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டிருப்பதாக‌த் தெ‌ரிகிறது. வந்தான் வென்றான் படத்தை முடித்த ‌‌ஜீவா தற்போது ஷங்க‌ரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூப்பர் ஹீரோவாக நடிக்கும் மிஷ்கினின் முகமூடி இருக்கிறது. ஜனநாதனின் படமும் உள்ளது. இதற்கு நடுவில் கௌதம் படத்திலும் நடிக்கயிருக்கிறார்.

 

பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!


நடிகர் சிம்பு நேரடியாக மோதாமல் பின்னால் மறைந்திருந்து குத்துகிறார் என்று நடிகர் ஜீவா குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமாவில் இப்போது முட்டிக் கொண்டு நிற்கும் இரு ஹீரோக்கள் சிம்பு- ஜீவா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், ‘கோ.’ இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் தொடர்பாக சிலம்பரசனுக்கும், ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது.

சிம்பு என்றுமே என் நண்பரில்லை!

இந்த நிலையில், நடிகர் ஜீவா நேற்று நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்தார். அப்போது, சிலம்பரசனுடன் நடக்கும் மோதல் பற்றி ஜீவாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல,” என்றார்.

இப்போது வந்தான் வென்றான், முகமூடி படங்களில் நடிக்கும் ஜீவா, எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

 

சிறுநீரகக் கோளாறு... இயக்குநர் டி.கே.போஸ் மரணம்!


சென்னை: சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் டி கே போஸ் நேற்று மரணமடைந்தார்.

திருக்கல்யாணம், சின்னஞ்சிறு கிளியே, என்னை விட்டுப்போகாதே, ராசாவே உன்னை நம்பி, கவிதை பாடும் அலைகள், சமீபத்தில் வெளியான கொடைக்கானல் உள்பட பல படங்களை இயக்கியவர் டி.கே.போஸ். இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று பகல் 11 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் டைரக்டர் பாரதிராஜா, இணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் டி.கே.போஸ் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

மரணம் அடைந்த டி.கே.போசுக்கு வயது 66. அவருடைய சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம் சிராவயல். அவருக்கு பத்மா என்ற மனைவியும், தேன்மொழி என்ற வளர்ப்பு மகளும் இருக்கிறார்கள்.

டி.கே.போசின் உடல் தகனம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

 

2 முறை தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜான்சன் மரணம்!


சென்னை: பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜான்சன் மாரடைப்பால் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

கேரள இசையமைப்பாளர் ஜான்சன் நூற்றுக்கணக்கான மலையாள சினிமா பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். 2 முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் கேரள மாநில அரசின் விருதை 5 முறை பெற்று உள்ளார்.

சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இசையமைப்பாளர் ஜான்சன் மறைவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.

சக இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருச்சூரில் இன்று நடக்கிறது.