படப்பிடிப்புக்கு வந்து விட்டு கேரவனுக்குள் போய் படுத்துத் தூங்கும் 'பொடி' ஹீரோ!

சென்னை: பொடியங்க படம் மூலம் ஹீரோவான நடிகர் படப்பிடிப்பு தளத்தில் கேரவனில் தூங்குகிறாராம்.

சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த அந்த மூன்று எழுத்து நடிகர் பாண்டி இயக்குனரின் பொடியங்க படம் மூலம் ஹீரோவானார். அதையடுத்து வேகமாக இல்லாவிட்டாலும் நிதானமாக வளர்ந்து கொண்டு தான் இருக்கிறார்.

அவர் நடிப்பில் அண்மையில் வெளியான பேக் படம் நன்றாக ஓடியது. இதனால் மகிழ்ச்சியில் இருந்தார் நடிகர். அந்த படம் ஓடியதும் நடிகர் படப்பிடிப்புக்கு வந்தால் அவரின் அதிகாரம் தூள் பறக்கிறதாம். மேலும் படப்பிடிப்புக்கு வந்தால் கேமரா முன்பு வந்து நிற்காமல் கேரவனுக்குள் படுத்து தூங்குகிறாராம். எழுப்பினால் கோபப்படுகிறாராம்.

அப்படியே எழுந்து வந்தாலும் தூக்கத்திலேயே கேமரா முன்பு வருகிறாராம். இதே போன்று இவர் தொடர்ந்து நடந்து கொண்டால் கஷ்டம் என்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.

ஒரு படம் ஓடினால் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு கடினமாக உழைக்காமல் இந்த நடிகர் என்ன என்றால் இப்படி அக்கப்போரு செய்கிறாரே என்று கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கிறார்கள்.

 

கிராவிட்டி புண்ணியத்தால்.. போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சான்ட்ரா புல்லக்!

வாஷிங்டன்: ஹாலிவுட்டில் கை நிறைய சம்பளம் வாங்கும் நடிகையாக உருவெடுத்துள்ளார் சான்ட்ரா புல்லக். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் அவர் 51 மில்லியன் டாலர் அளவுக்கு சம்பாதித்துள்ளார். இது 2வது இடத்தைப் பிடித்துள்ள ஜெனீபர் லாரன்ஸை விட 17 மில்லியன் டாலர் அதிகமாகும்.

கடந்த வருடம் இந்தப் பட்டியலில் ஏஞ்செலீனா ஜூலி முதலிடத்தைப் பிடித்திருந்தார். அதற்கு முன்பு அதாவது 2012 பட்டியலில் கிறிஸ்டன் ஸ்டூவர்ட் முதலிடத்தைப் பெற்றிருந்தார்.

போர்ப்ஸ் இதழ் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிராவிட்டி புண்ணியத்தால்.. போர்ப்ஸ் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சான்ட்ரா புல்லக்!

சான்ட்ரா புல்லக்....

உலகிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக சான்ட்ரா புல்லக் உயர்ந்துள்ளதாக போர்ப்ஸ் கூறுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவரது ஆஸ்கர் விருது பெற்ற கிராவிட்டி படத்தின் மிகப் பெரிய வெற்றிதான் காரணம்.

கிராவிட்டியில் பங்கு...

கிராவிட்டி படத்திலிருந்து சான்ட்ராவுக்கும் ஒரு பெரும் பங்கு லாபத்திலிருந்து போயுள்ளதாக போர்ப்ஸ் கூறுகிறது.

7 ஆஸ்கர் விருதுகள்...

50 வயதான சான்ட்ரா நடித்த கிராவிட்டி படம் 7 ஆஸ்கர் விருதுகளை வாங்கிக் குவித்தது நினைவிருக்கலாம். உலக அளவில் இப்படம் 716 மில்லியன் டாலர் வசூலையும் ஈட்டியது.

முதலிடம்...

கடந்த 2010ம் ஆண்டு அதிக வருவாய் ஈட்டிய நடிகைகள் வரிசையில் சான்ட்ரா முதலிடத்தைப் பிடித்திருந்தார். தற்போது மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

2வது இடத்தில்...

23 வயதான ஜெனீபர் லாரன்ஸ் 34 மில்லியன் டாலருடன் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

3வது இடத்தில் ஜெனீபர்...

ஜெனீபர் அனிஸ்டனுக்கு இந்தப் பட்டியலில்3வது இடம் கிடைத்துள்ளது. அவரது சம்பாத்தியம் 31 மில்லியன் டாலர்.

ஏஞ்செலீனாவுக்கு 5வது இடம்...

கியானித் பால்த்ரோ 4வது இடத்தையும், ஏஞ்செலீனா ஜூலி 5வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஸ்கார்லெட்....

அடுத்தடுத்த இடங்களை காமரூன் டயஸ், ஸ்கார்லெட் ஜோஹன்சன், அமி ஆடம்ஸ், நதாலி போர்ட்மேன், கிறிஸ்டன் ஸ்டூவர்ட் ஆகியோர் பெற்றுள்ளனர்.

3வது இடம் தான்...

அதேசமயம், ஹாலிவுட்டிலும் கூட நம்ம ஊரைப் போல நடிகர்களுக்குத்தான் அதிக சம்பளம் தருகிறார்கள். நடிகர்கள் வரிசையில் சான்ட்ராவை வைப்பதாக இருந்தால் அவருக்கு 3வது இடம்தான் கிடைக்கும்.

மொத்த வருமானம்....

நடிகர், நடிகைகளைப் பொறுத்தமட்டில் டாப் 10 நடிகர்களின் மொத்த வருவாய் 419 மில்லியன் டாலராக இருக்கிறது. அதேசமயம் டாப் 10 நடிகைகளின் மொத்த சம்பளம் 226 மில்லியன் டாலர்தான்.

 

ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா படத்தின் இறுதிக் காட்சியை கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் படமாக்கவிருக்கிறார்கள்.

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் ‘லிங்கா'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இவர்களுடன் பிரபு, ராதாரவி, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானம், கருணாகரன், ஜெகபதிபாபு, தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

ஷிமோகாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் லிங்கா இறுதிக் காட்சி படப்பிடிப்பு!

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஷிமோகா என்ற இடத்தில் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். கதைக்கேற்ற சூழலும் இட அமைப்பும் ஷிமோகாவில் சரியாக இருப்பதால் அங்கு வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார்களாம்.

ஆகஸ்ட் 18-ந் தேதி இந்த படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இதில் அனுஷ்காவும் சோனாக்ஷி சின்ஹாவும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி ‘லிங்கா'வை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். அதற்கான வேலைகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளது படக்குழு. இப்படத்தை ராக்லைன் வெங்கேடஷ் தயாரிக்கிறார்.

 

மோசடி புகார்... 'ஈகோ' இயக்குநரை போலீஸ் தேடுகிறது!

ஈகோ திரைப்படத்தின் இயக்குநர் மீது தயாரிப்பாளர் மோசடி புகார் கொடுத்துள்ளதால், இயக்குநரைத் தேடுகிறது போலீஸ்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான படம் 'ஈகோ'. இப்படத்தின் எஃப் எம். எஸ்- ஓவர்சீஸ் உரிமை அதாவது வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை எஃப் சி எஸ் கிரியேஷன்ஸ் வாங்கியிருந்தது.

முதலில் உரிமை பெற்ற வேந்தர் மூவிஸ் நிறுவனத்திலிருந்து விநாயகம் என்பவர் உரிமை வாங்கியிருந்தார். அவரிடமிருந்து சங்கர நாராயணன் என்பவர் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து வீரசேகரன், கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, பாக்கணும்போல இருக்கு, தொட்டால் தொடரும் ஆகிய படங்களின் தயாரிப்பு நிறுவனமான எஃப் சி எஸ் கிரியேசன்ஸ் ஓவர்சீஸ் உரிமையைப் பெற்றிருந்தார்

மோசடி புகார்...  'ஈகோ' இயக்குநரை போலீஸ் தேடுகிறது!

மலேசியாவில் படத்தை வெளியிட மலேசியாவின் ஆஸ்ட்ரோ டிவியை எஃப் சி எ ஸ் சார்பில் அணுகியிருக்கின்றனர். அதே நேரத்தில் இன்னொருவரும் தங்களிடம் 'ஈகோ' பட உரிமை இருப்பதாக வந்திருக்கிறார். எது அதிகாரப்பூர்வமானது என குழம்பிய டிவி நிர்வாகம் விவரம் கேட்டுள்ளது.

தாங்கள் உரிமை பெற்றுள்ளதாகக் கூறிய அந்த நபர் படத்தின் இயக்குநர் சக்திவேல் கொடுத்ததாக ஒரு கடிதத்தை மட்டுமே காட்டியிருக்கிறார். அது ஒரு சாதாரண லெட்டர் பேட் கடிதம். அதில் தயாரிப்பாளர் கையெழுத்து மட்டுமே இருந்தது. எவ்வித சட்டப்பூர்வ நடை முறைகளும் பின்பற்றப்படவில்லை. சக்திவேலை போன் மூலமும் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயாரிப்பாளரும் கிடைக்கவில்லை.

மோசடி புகார்...  'ஈகோ' இயக்குநரை போலீஸ் தேடுகிறது!

வேந்தர் மூவிஸில் கேட்ட போது நாங்கள் சட்டப்பூர்வமாகவே முறைப்படியே முதலில் விநாயகம் என்பவரிடம் கொடுத்துள்ளோம் என்றார்கள்.

பொறுத்துப் பார்த்த சேதுராமன் போலீசுக்குப் போய்விட்டார். மோசடி, ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப் பட்டுள்ளது.

நீதி மன்ற வழிகாட்டுதலின் படி முதல் தகவல் அறிக்கை ஆர்.5 விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் தலைமறைவாக இருக்கும் இயக்குநர் சக்திவேலைத் தேடி வருகிறார்கள்.

 

மீண்டும் பரபரப்பானார் யுவன்.. அடுத்தடுத்து வெளிவரும் புது ஆல்பங்கள்!

ரொம்ப பிஸியாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மத மாற்றம், தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினை என கொஞ்ச காலம் செய்திகளில் பிரதானமாக இருந்தவர், இப்போது தான் இசையமைக்கும் படங்களுக்காக செய்திகளில் இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

100 படங்களுக்கு இசையமைத்துள்ள யுவன் சங்கர் ராஜா, இப்போது ஒரு டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார்.

தற்போது சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘அஞ்சான்' படத்திற்கு இவர் இசையமைத்துள்ளார். சூர்யாவின் அடுத்தடுத்த இரு படங்களுக்கும் யுவன்தான் இசையமைக்கிறார்.

மீண்டும் பரபரப்பானார் யுவன்.. அடுத்தடுத்து வெளிவரும் புது ஆல்பங்கள்!

மேலும் இவரது இசையில் ‘தரமணி', 'இடம் பொருள் ஏவல்', ‘வை ராஜா வை', ‘வானவராயன் வல்லவராயன்', 'யட்சன்', நீயெல்லாம் நல்லா வருவடா.. போன்ற படங்களும் உருவாகிவருகின்றன.

விஷால் நடிக்கும் பூஜை மற்றும் ஆம்பள ஆகிய படங்களுக்கும் யுவன்தான் இசையமைக்கிறார்.

இந்த தமிழ்ப் படங்கள் தவிர, பாலிவுட்டில் ராஜா நட்வர்லால், தெலுங்கில் ராம்சரண் தேஜாவின் கோவிந்துடு அந்தரிவாடுலே ஆகிய படங்களுக்கும் யுவன் இசையமைத்து வருகிறார்.

 

தேசியக் கொடியை இடுப்பில் கட்டிய மல்லிகா ஷெராவத்... நோட்டீஸ் விட்ட கோர்ட்!

ஹைதராபாத்: தேசியக் கொடியை தாறுமாறாகப் பயன்படுத்தி சர்ச்சயைில் சிக்கியவர்களின் வரிசையில் நடிகை மல்லிகா ஷெராவத்தும் சேர்ந்துள்ளார். தேசியக் கொடியை இடுப்பில் கட்டி போட்டோவிற்கு போஸ் கொடுத்து புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் மல்லிகா ஷெராவத்.

"டர்ட்டி பாலிட்டிக்ஸ்" என்று பெயரில் உருவாகி வரும் புதிய படமொன்றில் மல்லிகா நடித்து வருகின்றார். நாடு முழுதும் ஒட்டப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர்கள்தான் தற்போது புதிய சர்ச்சைக்கு வழிகோலியுள்ளன.

தேசியக் கொடியை இடுப்பில் கட்டிய மல்லிகா ஷெராவத்... நோட்டீஸ் விட்ட கோர்ட்!

அப்போஸ்டர்களில் தேசியக் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டு, சுழக் விளக்குகள் உள்ள அரசு வாகனத்தின் மேல் மல்லிகா அமர்ந்திருக்கும் புகைப்படம் இடம் பெற்று அனைத்து தரப்பினரையும் திடுக்கிடச் செய்துள்ளது.

இதனால் வெகுண்டெழுந்த தனகோபால் ராவ் என்பவர் ஹைதராபாத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தேசியக் கொடி அவமதிப்பு சட்டத்தின் அடிப்படையில் மல்லிகா ஷெராவத், படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோரை தண்டைனைக்கு உள்ளாக்க வேண்டும். மேலும், இதுபோன்ற கீழ்த்தரமான போஸ்டர்களுக்கும் தடை விதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இம்மனுவானது நேற்று விசாரணைக்கு வந்தது. அதனை தலைமை நீதிபதி கல்யாண் ஜோதி சென் குப்தா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர், குற்றச்சாட்டு தொடர்பாக 3 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்ய தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கூறி, மத்திய அரசு, படத்தின் தயாரிப்பாளார், நடிகை மல்லிகா ஷெராவத் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

 

விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்

ஹரி இயக்கத்தில் விஷால் இப்போது தயாரித்து, நடித்து வரும் பூஜை படத்தின் வெளியீட்டு உரிமையை வாங்கியது எஸ்ஆர்எம் குழுமத்தைச் சேர்ந்த விஷாலின் பூஜையை வாங்கியது வேந்தர் மூவீஸ்  

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் பூஜை படம் வரும் தீபாவளிக்கு வெளியாகத் தயாராகிறது. விஷால் ஜோடியாக இந்தப் படத்தில் ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார். சத்யராஜ், ராதிகா, கௌசல்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தாமிரபரணிக்குப் பிறகு ஹரி, விஷால், யுவன் சங்கர் ராஜா கூட்டணி சேர்ந்திருக்கும் படம் இது.

இந்தப் படத்தை வெளியிடும் உரிமையை பாரிவேந்தரின் வேந்தர் மூவீஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஏற்கெனவே விஷால் தயாரித்த பாண்டிய நாடு மற்றும் நான் சிகப்பு மனிதன் படங்களையும் வேந்தர் மூவீஸ்தான் வெளியிட்டது. அந்தப் படங்களின் வெற்றி, விஷாலின் அடுத்தடுத்த படங்களையும் வேந்தர் மூவீஸை வாங்க வைத்துள்ளது.

 

மீலோ எவரு கோடீஸ்வரடு: டிவியிலும் சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா

தெலுங்கு தொலைக்காட்சி வரலாற்றிலேயே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்திருக்கும் நிகழ்ச்சி மீலோ எவரு கோடீஸ்வரடு. டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 40வது எபிசோடுடன் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் நாகார்ஜுனா. இவர் இப்போது மா தெலுங்கு தொலைக்காட்சியில் மீலோ எவரு கோடீஸ்வரடு (உங்களில் யார் கோடீஸ்வரர்) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

மீலோ எவரு கோடீஸ்வரடு: டிவியிலும் சூப்பர் ஸ்டார் ஆன நாகார்ஜுனா

சின்னத்திரையில் நாகர்ஜூனா

'கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியின் தெலுங்கு வடிவாக்கமான 'மீலோ எவரு கோடீஸ்வரடு' என்ற நிகழ்ச்சி 'மா' தொலைக்காட்சியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. நாகர்ஜூனா நடத்தும் இந்த நிகழ்ச்சி பெண் ரசிகைகளிடமும் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாம்.

ஆந்திரா மக்கள் வரவேற்பு

திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நேரத்தில் சாலையில் போக்குவரத்து குறைந்து விடுகிறதாம். அந்த அளவிற்கு இந்த நிகழ்ச்சி மீது மோகம் கொண்டு திரிகிறார்கள் ஆந்திர மக்கள்.

ரசிகர்களுக்கு நன்றி

"இந்த நிகழ்ச்சி எனக்கு மிகுந்த மன நிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறது. இதன் மூலம் சாதாரண மக்கள் மனதிலும் நான் இடம் பிடித்திருக்கிறேன். இந்த அளவுக்கு நிகழ்ச்சியை உயர்த்தி பிடித்த மக்களுக்கு என் நன்றி" என்கிறார் நாகர்ஜுனா.

எகிறிய டிஆர்பி

ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பினார் பொழுதுபோக்கு சேனல்களில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது நாகர்ஜூனாவின் கோடீஸ்வரன் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் விளம்பர வருவாய் சில கோடியை தாண்டியிருக்கிறதாம்.

நடிகர், நடிகையர் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் நடிகைகள் வித்யாபாலன், ஷ்ரேயா, லட்சுமி மஞ்சு, இளம் ஹீரோவான அல்லரி நரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பல லட்சம் பரிசினை தட்டிச்சென்றுள்ளனர்.

சிரஞ்சீவி கலகலப்பு

சமீபத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி கலந்து கொண்டு நிகழ்ச்சியை கலகலப்பூட்டினார். நாகார்ஜுனாவின் தனிப்பட்ட அழைப்பின் பேரில் சிரஞ்சீவி இந்த நிகழ்ச்சியில் வந்து கலந்து கொண்டதாகவும் தொலைக்காட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் முடிவு

டிஆர்பி ரேட்டிங்கில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் 40வது எபிசோடுடன் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

 

ராஜபக்சே கூட்டாளிகள் பணத்தில் தயாரித்திருந்தால் கத்தியை வெளியிடவே கூடாது! - விடுதலைச் சிறுத்தைகள்

சென்னை: நடிகர் விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள கத்தி படம், ராஜபக்சே கூட்டாளிகளின் பணத்தில் தயாரிக்கப்பட்டது என்றால், அதனை வெளியிடவே கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கூறியுள்ளது.

இனப்படுகொலையாளன் ராஜபக்சேவின் கூட்டாளிகள் தயாரித்து கத்தி பட வெளியீடு பெரும் அரசியல் பிரச்சினையாகிவிட்டது.

ராஜபக்சே கூட்டாளிகள் பணத்தில் தயாரித்திருந்தால் கத்தியை வெளியிடவே கூடாது! - விடுதலைச் சிறுத்தைகள்

இந்தப் படத்தை வெளியிட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்துள்ளன.

இந்த விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு பற்றி மாநில செய்தி தொடர்பாளர் வன்னியரசு கூறியுள்ளதாவது:

பட இயக்குனரும்,தயாரிப்பாளரும் எங்களை சந்தித்தனர்.தயாரிப்பு நிறுவனம் குறித்து விளக்கம் அளித்தனர். எங்களது முடிவை நாங்கள் இன்னும் கூற வில்லை.

இலங்கை இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் 'கத்தி' திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தால் அதை வன்மையாக கண்டிக்கிறோம். அப்படத்தை தமிழகத்தில் திரையிடக்கூடாது.

இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தவர்களின் பணத்தில் தயாரிக்கப்பட்ட படம் என்றால் இயக்குனரும்,தயாரிப்பாளரும் பதில் சொல்லியே ஆக வேண்டும்," என்று கூறியுள்ளார் வன்னியரசு.

 

அட ஆமீரு... அம்மணமா போஸ் கொடுத்தது கூட அட்ட காப்பியாமே!

பிகே படத்துக்காக ஆமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பது கூட சொந்த ஐடியா இல்லையாம். எழுபதுகளில் வெளியான ஒரு போர்ச்சுக்கீசிய பாடகரின் வீடியோவிலிருந்து சுட்டது என மும்பை பத்திரிகைகள் அம்பலமாக்கியுள்ளன.

ஆமீர் கான் நடித்த ‘பி.கே' திரைப்படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களில் வெளியாகின. அதில், அவர் ஒரு பழைய டேப் ரிக்கார்டரால் தனது முக்கிய பாகத்தை மட்டும் மறைத்தபடி நிர்வாணமாக காட்சி அளித்தார் ஆமீர்கான்.

அட ஆமீரு... அம்மணமா போஸ் கொடுத்தது கூட அட்ட காப்பியாமே!

சர்ச்சை

அவரது இந்த புதிய ஆபாசப் படம் பெருத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக வக்கீல் ஒருவர் அளித்த புகாரின்பேரில், அமீர்கான் மீது வழக்குபதிவும் செய்யப்பட்டுள்ளது.

'அம்மண காப்பி'

இது ஒரு பக்கம் என்றால், இந்த அம்மணப் பட ஐடியா கூட ஆமீருக்கோ படக்குழுவுக்கோ சொந்தமானதில்லையாம். அதையும் வெளிநாட்டுப் படத்திலிருந்துதான் காப்பியடித்திருக்கிறார்கள் என்று மும்பை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்ச்சுகல் ஆல்பத்திலிருந்து

1973-ம் ஆண்டு போர்ச்சுக்கீசிய இசையமைப்பாளர் கியூம் பெர்ரைரோஸ் என்பவர் தயாரித்த ஆல்பம் ஒன்றில், ஒரு இசைக்கருவியை கையில் பிடித்தவாறு நிர்வாணமாக காட்சி அளித்தார். இந்த காட்சியை அப்படியே காப்பியடித்து ஆமீர் கானை நிர்வாணமாக போஸ் கொடுக்க வைத்துள்ளனர்.

தூம் 3-லும்...

ஏதோ இந்த ஒரு படத்தில்தான் இப்படி என்றில்லை. ஆமீர்கான் மற்றும் பாலிவுட்டின் பிரபல நடிகர்களின் பெரும்பாலான படங்களில் போஸ்டர் உள்பட பல காட்சிகள் மேற்கத்திய படங்களிலிருந்து காப்பியடிக்கப்பட்டவைதானாம்.

ஆமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியான ‘தூம்-3' படத்தின் முதல் காட்சியே தி டார்க் நைட் படத்திலிருந்து உருவியதுதானாம்.

இன்னும் இருக்கு...

‘ரான் ஓன்', ‘ராம் லீலா' மற்றும் ‘அஞ்சனா அஞ்சானி' போன்ற படங்களின் போஸ்டர்கள், காட்சிகள் பல ஹாலிவுட்டிலிருந்து சுட்டவைதானாம்!

 

அஞ்சலியை வைத்து பேய் படம் எடுத்த தெலுங்கு இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

ஹைதராபாத்: அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற பேய் படத்தை எடுத்துள்ள தெலுங்கு இயக்குனர் ராஜ் கிரணுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அஞ்சலியை வைத்து பேய் படம் எடுத்த தெலுங்கு இயக்குனர் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி

சித்தி பிரச்சனையை அடுத்து ஆந்திராவில் செட்டிலான அஞ்சலி தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் புதுமுக இயக்குனர் ராஜ் கிரண் என்பவர் அஞ்சலியை வைத்து கீதாஞ்சலி என்ற ஹாரர் காமெடி படத்தை எடுத்துள்ளார். படத்தில் அஞ்சலி தான் கீதாஞ்சலி.

கீதாஞ்சலி படத்தை வரும் 8ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் இதுவரை சென்சார் போர்டு சான்றிதழ் வழங்கவில்லை. இதை நினைத்து கவலைப்பட்ட ராஜ் கிரணக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த படத்தை எம்.வி.வி. சத்யநாராயணா தயாரிக்க திரைக்கதை எழுதியுள்ளார் கோனா வெங்கட். படத்தில் ஹர்ஷ்வர்தன் ரானே, பிரம்மானந்தம், ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஞ்சலி சிறு இடைவேளைக்கு பிறகு தற்போது மீண்டும் கோலிவுட் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வைரமுத்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சென்னை: கவிஞர் வைரமுத்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

முதுகுத் தண்டுவட வலி காரணமாக கவிஞர் வைரமுத்துவுக்கு சில தினங்களுக்கு முன் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.

வைரமுத்துவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினி!

சிகிச்சைக்குப் பின்னர் ஓய்வெடுத்து வந்த வைரமுத்துவை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து உடல் நிலையை விசாரித்தார். சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார். அவருக்கு மலர்ச் செண்டு தந்த ரஜினி, விரைவில் பூரண குணம் அடைய வாழ்த்தினார்.

வைரமுத்துவும் ரஜினியும் நெருங்கிய நண்பர்களாகும். தொடர்ந்து ரஜினியின் படங்களுக்கு வைரமுத்துதான் பாடல்கள் எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

‘சில்க்’ அஞ்சலி ஐயிட்டம் நடிகையானால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்... இயக்குநர் பேச்சால் பரபரப்பு

ஹைதராபாத்: படு கவர்ச்சியாக நடித்து வரும் நடிகை அஞ்சலி தான் அடுத்த சில்க் ஸ்மிதா என தெலுங்குப்பட இயக்குநர் ஒருவர் தெரிவித்துள்ள கருத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அறிமுகப் படங்களில் குடும்ப குத்துவிளக்காகத் தோன்றிய நடிகை அஞ்சலி, சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். சூர்யாவின் சிங்கம் -2 படத்தில் கூட ஒரு பாடலுக்குத் தோன்றி கவர்ச்சி நடனம் ஆடியிருந்தார் அஞ்சலி.

இடையில் கொஞ்சகாலம் தனிப்பட்ட சில பிரச்சினைகளால் சினிமாவை விட்டு விலகியிருந்த அஞ்சலி தற்போது மீண்டும் நடிக்கத் துவங்கியுள்ளார்.

‘சில்க்’ அஞ்சலி ஐயிட்டம் நடிகையானால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம்... இயக்குநர் பேச்சால் பரபரப்பு

கவர்ச்சி மழை...

தற்போது ‘கீதாஞ்சலி' என்ற தெலுங்கு படத்தில் தாராள ஆடை குறைப்புடன் நடித்து வருகிறாராம் அஞ்சலி.

தமிழிலும்...

தமிழில் ஜெயம் ரவியுடன் நடித்து வரும் படத்திலும் அஞ்சலி கவர்ச்சியாக நடித்து வருகிறார் எனக் கூறப்படுகிறது.

சில்க் ஸ்மிதா படம்...

இதற்கிடையே, கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமாக பல மொழிகளில் வெற்றி பெற்றது.

ஷகிலா வாழ்க்கைப்படம்....

இதனால், அடுத்து கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கையை படமாக்க முயற்சிகள் நடந்து வருகிறதாம். இதில் ஷகிலா வேடத்தில் அஞ்சலி நடிக்கப் போவதாக செய்திகள் பரவி உள்ளன.

ஷகிலாவாக அஞ்சலி...

சமீபகாலமாக அஞ்சலி கவர்ச்சியாக தோன்றுவதாலேயே, அவரை ஷகிலா கேரக்டருக்கு தேர்வு செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அஞ்சலி தான் அடுத்த சில்க் ஸ்மிதா என தெலுங்கு டைரக்டர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐயிட்டம் நடிகை...

ஹைதராபாத்தில் நடந்த தெலுங்கு பட விழா ஒன்றில் பங்கேற்ற தெலுங்கு இயக்குநர் ஒருவர்,‘‘அஞ்சலி மறைந்த நடிகை சில்க்ஸ்மிதாவை போல் கவர்ச்சியாக இருக்கிறார். சிங்கம்-2 படத்தில் அஞ்சலி ஆடிய குத்தாட்டம் பிரமாதமாக இருந்தது. அஞ்சலி மட்டும் குத்தாட்ட நடிகையாக மாறினால் கோடி கோடியாய் சம்பாதிக்கலாம்'' எனப் புகழ்ந்துள்ளார்.

அஞ்சலி கோபம்...

ஆனால், இயக்குநரின் பேச்சை ரசிக்காத அஞ்சலி, சில்க்ஸ்மிதாவுடன் தன்னை ஒப்பிட்டு பேசியதால் கோபமாகி அவ்விழாவில் இருந்து பாதியிலேயே வெளியேறி விட்டாராம்.