'கரீனாவை திருமணம் செய்தாலும் ரூ 1000 கோடி சொத்துகளின் காப்பாளர் சயீப் அலிகான்!'

Saif Can Be Custodian After Marriage Kareena Kapoor   

போபால்: கரீனா கபூரைத் திருமணம் செய்து கொண்டாலும், ரூ 1000 கோடி வக்பு வாரிய சொத்துகளுக்கு காப்பாளராக சயீப் அலிகான் பொறுப்பேற்க எந்த தடையும் இல்லை என்றும், எந்த மதத்தைச் சேர்ந்தவரை வேண்டுமானாலும் அவர் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் மத்தியப் பிரதேச வக்பு வாரியம் அறிவித்துள்ளது.

படோடி சமஸ்தானத்தின் நவாபாக இருந்தவர் மன்சூர் அலிகான். அவர் கடந்த ஆண்டு மறைந்த பிறகு, அவர் மகன் சயீப் அலி கான் நவாபாக தொடர்கிறார்.

இந்த குடும்பத்துக்கு போபாலில் மட்டும் 2000 ஏக்கரில் சொத்துகள் உள்ளன. தவிர வக்பு வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ 1000 கோடி சொத்துகளுக்கு மன்சூர் அலிகானின் மகள் சபா சுல்தான் பாதுகாவலராக (முத்தவல்லி) உள்ளார்.

அவர் அந்தப் பொறுப்பிலிருந்து விலக நேர்ந்தால், அப்போது சயீப் அலிகான்தான் முத்தவல்லியாக பொறுப்பேற்க வேண்டும். ஆனால் அவர் இஸ்லாமியர் அல்லாத கரீனாவை திருமணம் செய்வதால், அவருக்கு அந்த பொறுப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது. இதனை எழுப்பியவர் சயீபின் அத்தை மகன் பைஜ் பின் ஜங்.

ஆனால் இந்தக் கேள்வி தேவையற்றது என மத்தியப் பிரதேச வக்பு வாரிய தலைவர் குப்ரான் ஆசாம் தெரிவித்துள்ளார்.

 

விவாகரத்தான, அழகான, எதற்கும் தயாராக உள்ள ஆண் வேண்டும் - சோனாவின் அறிவிப்பு

Sona Wants Marry Divorsee

சென்னை: மேரேஜா.. சீச்சீ... எனக்கு ஆண்களைப் பிடிக்கவே பிடிக்காது. ஆண்களோடு வாழவே முடியாது, என்றெல்லாம் தத்துவம் பொழிந்து வந்த சோனா, இப்போது திருமணம் செய்ய ஆசையாக இருப்பதாகக் கூறிவருகிறார்.

சோனா ‘கோ‘, ‘குரு என் ஆளு', ‘பத்து பத்து', ‘குசேலசன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘கனிமொழி' படத்தை தயாரிக்கவும் செய்தார்.

தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கும் முயற்சியில் இப்போது ஈடுபட்டு உள்ளார்.

ஆரம்பத்தில் ஆண்களைப் பிடிக்காது என்று கூறிவந்தாலும், ஆண்களுடன் எல்லா பார்ட்டிகளிலும் தவறாமல் கலந்து கொண்டு கலாட்டா செய்து வந்தார்.

இப்போது, தனது டுவிட்டரில், "விவாகரத்தான, அழகான, புத்திசாலியான ஒருவரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. என்னை நன்றாக புரிந்து கொள்பவராகவும், எதையும் ஸ்போர்டிவாக எடுத்துக் கொள்பவராகவும் அவர் இருக்க வேண்டும்.. சீக்கிரம் கல்யாணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகப் போகிறேன், " என தெரிவித்துள்ளார்.

சோனா தயார்.... யாராவது இருக்கீங்களா?

 

ஹாலிவுட் நடிகையின் படுக்கை அறை சில்மிஷங்கள் டேப் விற்பனைக்கு!

Actress Minka Kelly S Sex Tape Sale

நியூயார்க்: சார்லிஸ் ஏஞ்செல்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை மிங்கா கெல்லியும், அவரது முன்னாள் காதலரும் 'மும்முரமாக' இருந்த வேளையில் படம் பிடிக்கப்பட்ட வீடியோ டேப் விற்பனைக்கு விலை பேசப்பட்டு வருகிறதாம்.

இந்த டேப்புடன் சிலர் பெரும் தொகைக்கு விலை பேசி வருவதாக ஒரு ஹாலிவுட் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது. மிங்கா சிறு வயதுப் பெண்ணாக இருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. அந்த வீடியோ 30 நிமிடம் ஓடுவதாகவும், அதில் மிங்காவும், அவரது முன்னாள் காதலர்களில் ஒருவர் இடம் பெற்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மிகவும் தொழில் முறையிலான ஷூட்டிங்காக இது தெரியவில்லை. டிவி மானிட்டர் மீது கேமராவை நிறுத்தி வைத்து படுக்கை அறைக் காட்சிகளைப் படம் பிடித்துள்ளனராம். பின்னணியில் மிங்கா நடித்த ஒரு படத்தின் பாடல் ஒலிக்கிறதாம்.

இந்த டேப் செய்தி குறித்து மிங்கா இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

 

எல்லோரும் இங்க வாங்க.. சன்னி லியோன், பிடிதா சண்டையைப் பாருங்க!

Sunny Leone Has Nothing New Show I Have Bidita Bag

சாதாரணப் பெண்கள் இருவர் சண்டை போட்டாலே அந்தஇடம் ஒரு மாதிரியாகிப் போகும், காதெல்லாம் வலிக்கும், 'கேட்கவே'முடியாது... அதுவே பிரமாண்டக் கவர்ச்சியுடன் வலம் வரும் பெண்கள் சண்டை போட்டால் எப்படி இருக்கும்... அப்படி ஒரு சண்டை பாலிவுட்டில் ஆரம்பித்துள்ளது.

சமீபத்தில்தான் பிபாஷா பாசுவை பூனம் பாண்டே சகட்டு மேனிக்கு திட்டித் தீர்த்திருந்தார். இந்த நிலையில் சன்னி லியோனை வம்புக்கிழுத்துள்ளார் பிடிதா பேக் என்கிற புதுமுக நடிகை.

From Sydney With Love என்ற படத்தின் மூலம் அறிமுகமாகும் நடிகைதான் பிடிதா பேக். ஆகஸ்ட்டில் படம் தியேட்டர்களுக்கு வரவுள்ளது. இந்த நிலையில் ஜிஸ்ம் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ள சன்னி லியோனைப் பிடித்து வாங்கு வாங்கென்று வாங்கியுள்ளார் பிடிதா.

ஏங்க உங்களுக்கு இப்படி ஒரு ஆங்காரம் என்று அவரிடம் கேட்டால், உலகத்துக்கே எல்லாவற்றையும் காட்டி விட்டார் சன்னி லியோன். பிறகு இந்தப் படத்தில் என்னத்தைப் பெரிதாக காட்டி விட்ப போகிறார். காட்டுவதற்கு அவரிடம் என்னதான் மிச்சம் உள்ளது. ஆனால் நான் அப்படி இல்லை. புத்தம் புதுமுகம். எனது கவர்ச்சி புதுசு, அழகு புதுசு. அப்படியே காட்டுவதை விட அளவோடும், ஒளிவு மறைவாகவும் காட்டும் கவர்ச்சிதான் கிளர்ச்சியைக் கூட்டக் கூடியது. அந்த வகையில் சன்னியை விட என்னிடம் காட்ட நிறையவே இருக்கிறது என்றார் அதிரடியாக.

மேலும் அவர் கூறுகையில், சன்னி லியோனைப் பெரிய கவர்ச்சி நடிகை என்கிறார்கள். உண்மையில் அவர் ஒரு ஆபாசப் பட நடிகை. அதில் கூட அவர் உலகின் முன்னணியில் இருந்ததில்லை. எனவே அவரைப் பற்றி பெரிதாக ஊதி விடுவதை அனைவரும் நிறுத்த வேண்டும் என்றார் பொறுமியபடி...

சன்னி என்ன பதில் சொல்லப் போகிறாரோ....?

 

சினிமா டிக்கெட் விலையை குறைக்க வலியுறுத்தி முதல்வரை சந்திக்க விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு

Tn Film Distributors Meet Jaya

தென்காசி: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து சினிமா டிக்கெட் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தி மனு கொடுப்பது என்று தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பின் கூட்டம் குற்றலாம் ஐந்து அருவியில் உள்ள தனியார் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாலை ராஜா தலைமை தாங்கினர். தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார்.

இந்த கூட்டத்தில் மதுரை, நெல்லை, தஞ்சை, வேலூர், திருச்சி, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தமிழக திரை அரங்குகளில் வசூலிக்கப்படும் கட்டணங்களை குறைக்க வேண்டி முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

தற்போது முதல்வர் கொடநாட்டில் இருப்பதால் அவர் சென்னை திரும்பியதும் மனு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

'ஜிஸ்ம் 2 வயசு வந்தவங்களுக்கான பக்கா 'ஏ' படம்தான்!' - பூஜா பட்

Jism 2 The Adults For The Adults Pooja Bhatt    | சன்னி லியோன்  

மும்பை: ஜிஸ்ம் 2 படம் ஒரு பக்கா ஏ படம். வயசு வந்தவர்களால், வயசு வந்தவர்களுக்காக எடுக்கப்பட்ட படம் இது, என நடிகையும் இயக்குநருமான பூஜா பட் கூறியுள்ளார்.

கனடிய பலான பட நடிகை சன்னி லியோன் முதல் முறையாக கொஞ்சூண்டு உடையுடன் நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு வருகிறது ஜிஸ்ம் 2.

இந்தப் படத்துக்கான விளம்பரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன.

பட் கேம்பிலிருந்து வரும் ரொம்ப போல்டான படம் என்றுவேறு மார்த்தட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் படம் குறித்து இயக்குநர் பூஜா பட் கூறுகையில், "இந்தப் படம் வயசு வந்தவங்களுக்காக வயசு வந்தவர்களால் எடுக்கப்பட்ட படம். ஒரு பெண்ணின் பார்வையில் இந்தப் படத்தைத் தந்திருக்கிறேன். ஏ சான்றிதழ் வாங்கியாச்சு.

படத்தில் டபுள் மீனிங் வசனங்கள் கிடையாது. டாய்லெட் சீனெல்லாம் இல்லை. அதையெல்லாம் மற்றவர்கள் எடுக்கட்டும் என விட்டுவிட்டேன். இது பக்கா அடல்ட்ஸ் ஒன்லி படம். இந்த மாதிரி படங்கள் பார்க்கத்தான் எக்கச்சக்க ஆடியன்ஸ் இருக்காங்க. அவங்களை நம்பித்தான் எடுத்திருக்கேன்," என்றார்.

சன்னி லியோனுக்கு ஜோடியாக அருணோதய் சிங், ரன்தீப் ஹூடா நடித்துள்ளனர்.

 

போச்சு போச்சு... என் மார்க்கெட்டே போச்சு!- புலம்பும் மீரா

Meera Jasmin Angry On Newcomers   

கொச்சி: புது நடிகைகள் வரவால் தனது மார்க்கெட் போய்விட்டதாக புலம்ப ஆரம்பித்துள்ளாராம் மீரா ஜாஸ்மினன்.

தமிழ், மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் மீரா ஜாஸ்மின். அவரது நடிப்புத் திறமைக்கு இணையானது அவர் கிளப்பும் பிரச்சினைகளும்.

மலையாளத்தில் மீரா ஜாஸ்மின் என்றாலே 'ட்ரபிள்மேக்கர்' என்ற பெயர் உண்டு. கூடவே அவரது காதல் பிரச்சினைகளும் சேர்ந்து கொள்ள, புதுப்படங்களுக்கு அவரை யாரும் ஒப்பந்தம் செய்யவில்லை. தற்போது 'லிசமாயிடே வீடு' என்ற மலையாள படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

தமிழில் அவர் கடைசியாக நடித்தவை மம்மட்டியான், ஆதி நாராயணா போன்றவைதான்.

இப்போது உருவாகும் பெரும்பாலான படங்களில் புது நடிகைகள்தான் நடித்து வருகின்றனர்.

மேலும், ரீமா கல்லிங்கல், காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்களும் களத்தில் கடும்போட்டியைத் தர, அதை சமாளிக்க முடியாமல் தடுமாறிப் போயுள்ளாராம் மீரா.

இதுகுறித்து அவர் கூறுகையில், "திறமைக்கு மதிப்பு குறைந்துவிட்டது. அனுபவசாலிகளை நல்ல ரோல்களில் நடிக்க கூப்பிடுவதில்லை. ஈகோ பிரச்சினைதான் இதற்குக் காரணம். புதியவர்களுக்கு நான் எதிரி இல்லை. ஆனால் புதியவர்களுக்காக இருப்பவர்களை ஓரம்கட்டுவது சரியா?" என்று கேட்டுள்ளார்.

 

படத்தை விளம்பரப்படுத்த அஜ்மீர் தர்காவுக்கு வருவதா?: தர்கா தலைவர் ஆவேசம்

அஜமீர்: தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக அஜ்மீர் தர்காவுக்கு நடிகர்கள், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் வருவதற்கு தர்காவின் நிர்வாகி ஜெய்னுல் ஆபிதீன் அலி கான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

இஸ்லாத்தில் நடனம் மற்றும் படங்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதி்ல்லை. தற்போது சினிமாவில் ஆபாச காட்சிகளே அதிகளவில் உள்ளது. இது இஸ்லாமிய சட்டத்திற்கு எதிரானது. இந்த படங்களைப் பார்த்து தான் சமுதாயம் கெட்டுப் போகிறது. தங்கள் படம் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதற்காக திரை நட்சத்திரங்கள் தர்காவுக்கு வருகின்றனர். அப்படியே தங்கள் படத்திற்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். ஒரு தர்காவில் இது போன்று படத்திற்கு விளம்பரம் தேடுவதைப் பொறுத்துக் கொள்ள முடியாது.

படத்தை ஹிட்டாக்க ஆபாச காட்சியைக் காட்டுவார்கள். ஆனால் அந்த படத்தை விளம்பரப்படுத்த, ஹிட்டாகட்டும் என்று வேண்ட அஜ்மீர் தர்காவுக்கு வருவது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தி்ல் இஸ்லாமிய அறிஞர்கள் அமைதி காப்பது ஆச்சரியமாக உள்ளது. இஸ்லாமிய அறிஞர்களும், உலமாக்களும் இந்த விவகாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பாலிவுட் தயாரிப்பாளர் ஹிமேஷ் ரேஷமய்யா பர்தா அணிந்தும், கத்ரீனா கைப் ஸ்கர்ட் அணிந்தும் வந்தனர். இந்த நட்சத்திரங்கள் எல்லாம் தங்கள் பட ரிலீஸுக்கு முன்பு சங்கராச்சாரியார் மடத்திற்கோ அல்லது குருத்வாராவுக்கோ போக வேண்டியது தானே? என்றார்.

ஆனால் தர்காவின் காதிம் குதுப்தீன் சாகி கூறுகையில்,

யாரும் தர்காவுக்கு விளம்பரத்திற்காக வருவதில்லை. பாலிவுட் நட்சத்திரங்கள் கடந்த 23 ஆண்டுகளாக இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவற்கு தடை போடுவதாக அறிவித்த அதிகாரிகளுக்கு அந்த அதிகாரம் கிடையாது. கான் விளம்பரத்திற்காக இப்படி கூறியிருக்கிறார் என்றார்.

டெல்லியில் உள்ள பிரபல தர்காவின் ஹசரத் நிஜாமுத்தீன் கூறுகையில், அஜ்மீர் தர்கா தலைவர் இஸ்லாத்தின் பெயரில் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார். வியாபார நோக்கத்துடன் பாலிவுட் நட்சத்திரங்கள் தர்காவுக்கு வருவதாகக் கூறுவது முற்றிலும் தவறு என்றார்.

அனைவருக்கும் கடவுளின் அருள் தேவை. தர்காவுக்கு செல்ல பிரபலங்களுக்கு தடை விதித்திருப்பது நியாயமன்று. தர்கா அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு அந்த தடையை நீக்குமாறு வேண்டுகோள் விடுப்பேன் என்று பாலிவுட் நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார்.

 

ஒரு காலத்தில் பேய் பங்களாவாக இருந்த ராஜேஷ் கன்னாவின் ஆசீர்வாத

Rajesh Khanna S Bungalow Aashirwad Was Haunted

மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவின் பங்களா ஆசீர்வாத் ஒரு காலத்தில் பேய் பங்களா என்று அழைக்கப்பட்டதாம்.

60களில் மும்பையின் பந்த்ரா பகுதியில் உள்ள கார்ட்டர் ரோட்டில் இருந்த 2 அடுக்குமாடி கொண்ட பாழடைந்த பங்களாவை அப்பகுதியினர் பேய் பங்களா என்று தான் அழைத்தனர். அதனால் அதை வாங்க யாரும் முன்வரவில்லை. அப்போது பாலிவுட் நடிகர் ராஜேந்திர குமார் அந்த பங்களாவை ரூ.60,00க்கு வாங்கினார். அங்கு பேய் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து அவர் பூஜை செய்துவிட்டு குடியேறினார். பங்களாவுக்கு தனது மகள் டிம்பிள் பெயரை வைத்தார். அந்த வீட்டுக்கு வந்த பிறகு அவரின் பல படங்கள் ஹிட்டாகின. அவருக்கு பெயரும், புகழும் கிடைத்தது.

அதன் பிறகு அவர் பாலி ஹில் பகுதியில் இன்னொரு பங்களாவை கட்டி அதற்கும் டிம்பிள் என்றே பெயரிட்டார். தொடர்ந்து கார்ட்டர் ரோட்டில் உள்ள பங்களாவை மறைந்த பாலிவுட் நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு ரூ.3.5 லட்சத்திற்கு விற்றார். ராஜேஷ் கன்னாவும் அந்த பங்களாவின் பெயரை டிம்பிள் என்றே வைக்க ஆசைப்பட்டார். ஆனால் ராஜேந்திர குமார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஆசீர்வாத் என்று பெயர் சூட்டினார்.

ராஜேஷ் கன்னா ஆசீர்வாதில் குடியேறிய பிறகு அவரை வெற்றி மகள் விடாமல் துரத்தினாள். அவரது படங்கள் சக்கைபோடு போட்டன. இதையடுத்து அவர் இந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டாரானார். பின்னர் டிம்பிள் கபாடியாவை மணந்தார். சிறிது காலம் கடந்து அவரது படங்கள் தோல்வியடையத் துவங்கின.

ராஜேஷ் கன்னாவின் மனைவியும், மகள்களும் அவரை விட்டுப் பிரிந்து சென்றனர். கூடவே வெற்றித் திருமகளும் ஆசீர்வாதை விட்டு வெளியேறினாள். அதன் பிறகு அவர் படங்கள் இன்றி திண்டாடினார். ஆசிர்வாதில் இருக்க பயந்து தூங்க மட்டுமே வீட்டுக்கு வந்தார். அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டு அண்மையில் இறந்தார்.

அந்த பங்களாவை ராஜேஷ் கன்னாவின் நினைவாக அருங்காட்சியமாக மாற்ற அவரது மகள்கள் முடிவு செய்துள்ளனர். அது என்ன தான் ஒரு காலத்தில் பேய் பங்களாவாக இருந்தாலும் தற்போது அதைப் பார்ப்பவர்கள் ராஜேஷ் கன்னாவின் பங்களா என்று தான் கூறுகிறார்கள்.

 

ஷங்கரின் 'ஐ'யில் தீபிகாவும் நடிக்கிறார்!

Deepika Shankar S I   

விக்ரம் மார்க்கெட் மீது நம்பிக்கை குறைந்துவிட்டதோ என்னவோ... ஷங்கரின் இயக்கத்தில் உருவாகும் ஐ படத்தில் நாளுக்கு நாள் நட்சத்திரங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகிறது.

விக்ரம், ஏமி ஜாக்சன், சந்தானம், சுரேஷ் கோபி என முதலில் ஒரு நட்சத்திரப் பட்டாளத்தை அறிவித்திருந்தார் ஷங்கர்.

அதில் லேட்டஸ்ட் வரவாக இருந்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். ஆம்... அவரும் ஒரு வேடத்தில் வருகிறாராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த முதல் பாடலை விக்ரம், ஏமி ஜாக்சனை வைத்து ஏ.வி.எம்மில் படமாக்கிவிட்ட ஷங்கர், இப்போது இன்னொரு முக்கிய பெண் பாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம்.

படத்தின் பிற்பகுதியில் வரும் இவ்வேடத்திற்கு பாலிவுட் முன்னணி நாயகி தீபிகா படுகோனிடம் பேச்சு நடத்தி வெற்றியும் பெற்றுவிட்டாராம்.

தீபிகா படுகோன் தற்போது தமிழில் ரஜினியின் கோச்சடையானில் நடிக்கிறார். சில இந்திப் படங்கள் வேறு கைவசமிருந்தாலும், கால்ஷீட்டை சில மாதங்கள் கழித்து தந்தால் போதும் என ஷங்கர் கூறியதால் ஓகே சொல்லிவிட்டாராம்!

 

ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழ் பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்று திடீர் தடை வித¤க்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பை உள்ளிட்டவற்றை கடைகளில் விற்க சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, குப்பை போடக்கூடாது என்று இயக்குனர் வசந்த் கட்டுப்பாடு வித்திருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:

Ôமூன்று பேர் மூன்று காதல்Õ என்ற படம் இயக்கி வருகிறேன். அர்ஜுன், சேரன், விமல் நடிக்கின்றனர். கோவையில் ஷூட்டிங் நடக்கிறது. எனது படங்களில் சமூக கருத்துக்களை வலியுறுத்தி இருக்கிறேன். Ôசத்தம் போடாதேÕ படத்தில் குடிக்கு அடிமையானவர்களின் பிரச்னை பற்றி கூறினேன். இப்படத்தை தொடங்குவதற்கு முன் போதைக்கு அடிமையானோருக்கான குறை கேட்கும் கூட்டம் ஒன்றில் பங்கேற்றேன். அவர்களின் சோகக் கதைகள் என்னை கண்ணீர் சிந்த வைத்தது. இது பற்றி படத்தில் புதிய கருத்தை கூறி இருந்தேன். சமூக அக்கறையுடன் படங்கள் எடுக்கும்போது அதை நாமும் பின்பற்ற வேண்டும் என்று எண்ணுகிறேன். தற்போது எனது பட ஷூட்டிங்கில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது, ஷூட்டிங் நடக்கும் இடத்தில் குப்பை போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறேன்.


 

கிசு கிசு - கைவிரிச்ச ஹீரோயின்

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news
நல்ல காலம் பொறக்குது...
நல்ல காலம் பொறக்குது...

பாக்ய இயக்கம் தலமைல மல்லுவுட் பெஸ்ட் ஆக்டர் செலக்ஷன் நடந்துச்சாம்... நடந்துச்சாம்... அறிவிப்பு வந்த ரெண்டு நாளைக்கப்புறம் சிலர் எதிர்ப்பு குரல் எழுப்புறாங்களாம்... எழுப்புறாங்களாம்... பெஸ்ட் ஆக்டர், இயக்கம், படம்னு எதையும் சரியா செலக்ட் பண்ணல. இதைவிட பெஸ்ட் படம், நடிகர், இயக்கமெல்லாம் இருக்காங்கனு அப்ஜெக்ட் பண்றாங்களாம். அதுவும் மூத்த திலக ஆக்டரு இடையில லால் நடிகர் மேல உர்ரா இருந்தாரு. இப்போ பெஸ்ட் ஆக்டர் அவார்டு ஏன் லாலுக்கு கொடுக்கலைனு நேரடியாவே திலக நடிகரு கேக்குறாராம்... கேக்குறாராம்...

தலய இயக்கிய 28 கிரிக்கெட் இயக்கத்துக்கு இப்ப பஞ்ச் நடிகரை இயக்க ஆசை வந்திருக்காம்... வந்திருக்காம்... காட்டன் வீர ஹீரோ படத்த இயக்குறதுல பிஸியா இருந்தாலும் தன்னோட அடுத்த படத்துக்கு பஞ்ச் ஹீரோவை பிக்ஸ் பண்ற முயற்சில இருக்காராம். இந்த விஷயத்த தூதர் மூலமா நடிகர் காதுல போட்ட இயக்கம், இப்போவே ஸ்கிரிப்ட் தயாரிப்புல கவனம் செலுத்துறாராம். ஆனா, பஞ்ச் நடிகரோ இன்னமும் கிரீன் சிக்னல் கொடுக்கலையாம்... கொடுக்கலையாம¢...

சாலம இயக்கம் எலிபென்ட் கதையை இயக்குறாராம்... இயக்குறாராம்... இது லட்சுமியான ஹீரோயின் அறிமுகமாகுறாரு. சின்ன பசங்கள வச்சி படம் எடுத்த இயக்கம் தன் படத்துக்கு நடிகைகிட்ட டேட் கேட்டாராம்... கேட்டாராம்... இதோ அதோன்னு இழுத்தடிச்சி கடைசில கையை விரிச்சிட்டாராம். இதுக்கு காரணம் சாலம இயக்கம்தானாம். 'பட ரிலீஸுக்கு பிறகு பெரிய ஸ்டார் படத்துல நடிக்கக்கூட சான்ஸ் வரும். இப்பவே சின்ன படங்கள்ல நடிச்சா அந்த சான்ஸ மிஸ் பண்ண வேண்டி இருக்கும்Õனு காதுல ஓதுனாராம். இதை கேட்டு பசங்க இயக்கத்துக்கு நோ சொல்லிட்டாராம்... நடிகை நோ சொல்லிட்டாராம்... அந்த சின்ன படத்துல நடிச்சா, தன்னோட பட பிசினஸ் பாதிக்கலாம்கிறதால இயக்கம் இப்படி செஞ்சாராம்... செஞ்சாராம்...


 

ராஜேஷ் கன்னா காதலி திடீர் பல்டி

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவின் சொத்து மீது ஆசை இல்லை என்று கூறி அவரது பங்களாவை  விட்டு வெளியேறினார் அனிதா அத்வானி. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னா, கடந்த 18ம் தேதி மரணம் அடைந்தார். இந்நிலையில் அவரது ரகசிய காதலி அனிதா அத்வானி பற்றி தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மும்பை பாந்த்ராவில் உள்ள ஆஷிர்வாத் பங்களாவில் கடந்த 8 வருடமாக அவர் ராஜேஷ் கன்னாவுடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இப்பிரச்னையால் மனைவி டிம்பிள் கபாடியா ராஜேஷ் கன்னாவை விட்டு பிரிந்து வாழ்த்தார்.

ராஜேஷ் கன்னா மறைந்தவுடன் அவரது கடைசி ஆசைப்படி அவர் வாழ்ந்த ஆஷிர்வாத் பங்களாவை நினைவு இல்லம் ஆக்க வேண்டும் என்று குடும்பத்தினர் மற்றும் பாலிவுட் திரையுலகினர் கூறினார். ஆனால் இதற்கு அனிதா எதிர்ப்பு தெரிவித்ததுடன் தன்னை வீட்டிலிருந்து வெளியேற்ற சதி நடக்கிறது என்று புகார் கூறினார். வீட்டிலிருந்து வெளியேற்றினால் நடவடிக்கை எடுப்பேன் என டிம்பிள் கபாடியாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். இதனால் பங்களாவை நினைவு இல்லம் ஆக்கு வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் அனிதா தனக்கு ராஜேஷ் கன்னா சொத்து மீது ஆசை இல்லை என்று பல்டி அடித்திருக்கிறார். ஆஷிர்வாத் பங்களாவிலிருந்து வெளியேறிய அவர் கிராண்ட் ரோடில் உள்ள வீட்டில் தனது சகோதரியுடன் தங்கி இருக்கிறார்.

இது பற்றி அனிதா நேற்று கூறியதாவது: ராஜேஷ் கன்னாவின் விருப்பப்படி ஆஷிர்வாத் பங்களா மியூசியம் ஆக வேண்டும். என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. ராஜேஷ் கன்னாவின் சொத்தை அடைய வேண்டும் என்ற பேராசையோ, எண்ணமோ எனக்கு கிடையாது. அவரது சொத்து மக்களுக்குத்தான் போய் சேர வேண்டும். அவரது பங்களாவை தாராளமாக மியூசியம் ஆக்கலாம் என்றார்.


 

எமிக்கு போட்டியாக லண்டன் நடிகை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எமி ஜாக்ஸனுக்கு போட்டியாக தமிழுக்கு வருகிறார் இன்னொரு லண்டன் நடிகை. 'மதராஸ பட்டணம்' படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்ஸன். இந்தி, தமிழ் என்று வரிசையாக நடித்து வரும் அவர் ஷங்கர் இயக்கும் 'ஐ' படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கிறார். எமியை தொடர்ந்து மற்றொரு லண்டன் நடிகை அனாரா தமிழுக்கு வருகிறார். 'காதலே என்னை காதலி' என்ற படத்தில் அறிமுகமாகிறார். இதில் சந்தோஷ் ஹீரோ.

இதுபற்றி இயக்குனர் ஷான் கூறும்போது, ''லண்டன் பெண்ணை தமிழ் பையன் ஒருவன் காதலிக்கிறான். வெளிநாட்டு பெண்ணை காதலனின் பெற்றோர் ஏற்க மறுக்கின்றனர். அவர்கள் மனதை அனாரா எப்படி கவர்ந்து மருமகள் ஆகிறார் என்பது கதை. இதற்காக தமிழ் படத்துக்கு ஏற்ற ஹீரோயின் தேடினோம். லண்டன் பத்திரிகைகளில் ஹீரோயின் தேவை விளம்பரம் கொடுத்தோம். அதை பார்த்து 50 வெள்ளைக்கார பெண்கள் வந்தனர். அவர்களில் கருத்த கூந்தலுடன் தமிழ்ப் பெண் முகச்சாயலில் இருந்த அனாராவை தேர்ந்தெடுத்தோம். லண்டனிலேயே முழு படமும் ஷூட்டிங் நடந்துள்ளது. நிழல்கள் ரவி, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆங்கில நடிகர் ராய் வில்லன். விமல் ராஜ் இசை. சரவணன் ஒளிப்பதிவு. பொன் சிவா துரை, அருண் கொலின், சண்முகநாதன் தயாரிப்பு.


 

விஜய் டிவியில் புதிய மெகா தொடர்

Television news, small screen news, chinnathirai news, television serials, chinnathirai serials, online chinnathirai serial
விஜய் டிவியில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் காஞ்சனா என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகிறது. பூஜா இத்தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். காஞ்சனா தொடரை விருவிருப்பாகவும், மர்மங்கள் நிறைந்த தொடராகவும் வழங்விருக்கிறார் அழகர். வரும் ஜூலை 23ம் தேதி முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது காஞ்சனா என்ற புத்தம் புதிய மெகா  தொடர்.


 

பாலிவுட் நடிகர்நடிகைகளுக்கு புது கட்டுப்பாடு

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
மேக்கப் மேன், உதவியாளர்களுக்கு நடிகர், நடிகைகளே சம்பளம் தர வேண்டும் என பாலிவுட் தயாரிப்பாளர்கள் கட்டுப்பாடு விதித்துள்ளனர். கோலிவுட் நடிகர்களே இனி தங்கள் உதவியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்று பல ஆண்டுகளாக தயாரிப்பாளர்கள் கூறி வருகின்றனர். இது பேச்சளவிலேயே உள்ளது. இதே கோரிக்கையை பாலிவுட் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வைத்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த கட்டுப்பாட்டை பாலிவுட் ஸ்டார்கள் ஏற்றுள்ளனர். இதுபற்றி இந்தி திரைப்பட மற்றும் டி.வி தயாரிப்பாளர்கள் கில்ட் துணை தலைவர் முகேஷ் பட் கூறும்போது, ''ஏற்கனவே சேவை வரி தயாரிப்பாளர்களின் தலையில் இடியாக விழுந்துள்ளது. இந்நிலையில் சில நடிகர், நடிகைகளின் உதவியாளர்கள் அதிக சம்பளம் கேட்கின்றனர். சில டிரைவர் மற்றும் உதவியாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையும், மேக்கப் மேன் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் ரூ.40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் கேட்கின்றனர். இனி நடிகர்கள்தான¢ தங்கள் பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். இதை தயாரிப்பாளர்கள் தலையில் சுமத்தக்கூடாது" என்றார். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஷாருக்கான், ஆமிர் கான், அஜய் தேவகன், அக்ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன், கேத்ரினா கைப், ரன்பீர் கபூர், சல்மான் கான் ஆகியோர் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். சைப் அலிகான், கரீனா கபூர், தீபிகா படுகோன் ஆகியோர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இம்மாதம் முதலே இந்த கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.


 

மாற்றுத்திறனாளி இயக்குனருக்காகப் பறந்து வந்த 'அழகி' மோனிகா!

Monica Honours Her Director

சென்னை: ஒரு மாற்றுத் திறனாளி இயக்குநரின் முதல் பட விழாவுக்காக, கேரளாவில் படப்பிடிப்பிலிருந்த மோனிகா விமானத்தில் வந்து கலந்து கொண்டு திரும்பினார்.

குறும்புக்காரப் பசங்க என்ற படத்தில் நடித்துள்ளார் மோனிகா. இந்தப் படத்தின் இயக்குநர் டி சாமிதுரை ஒரு மாற்றுத் திறனாளி.

படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரசாத் லேபில் நடந்தது. கலைப்புலி தாணு, இயக்குநர் மனோஜ்குமார் உள்பட பலர் பங்கேற்று இசை குறுந்தட்டை வெளியிட்டனர்.

விழாவுக்கு வந்திருந்த மோனிகாவுடன் பேசினோம்...

'குறும்புக்காரப் பசங்க'ளுடன் உங்களுக்கு என்ன வேலை..?

குறும்புக்கார பசங்கள்ல ஒருத்தரா வர்ற ஹீரோ சஞ்சீவுக்கு நான் தான் ஜோடி... நானும் கிராமத்துக் குறும்புகள் நிறைந்த சிந்து என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்...

முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பசுமையான இடங்கள்லதான் முழுப்படமும் நடந்துச்சு... இயக்குனர் சாமிதுரை திட்டமிட்டபடி 45 நாட்களில் படப்பிடிப்பை நடத்தினார்... இதுல என்ன விஷேசம்னா, குறும்புக்கார பசங்கதான் முழுக்க முழுக்க கள்ளக்குறிச்சியில் எடுக்கப்பட்ட முதல் படம்...

கதாநாயகன சஞ்சீவுடன் நடித்த அனுபவம்..?

சஞ்சீவ் நல்ல திறமையான நடிகர்... அவருடன் நடிப்பதை ஒரு போட்டியாக எடுத்துக் கொண்டுதான் நடித்தேன்... மற்றபடி படத்தின் பெயரில் தான் குறும்பு இருக்கிறதே தவிர நல்ல அன்பான டீம்...

ஒரு மாற்றுத்திறனாளி இயக்குனர் படத்தில் நடித்திருப்பது எப்படி இருந்தது..?

முதன் முதலாக இயகுனர் சாமிதுரையைச் சந்தித்த போது...இவர் எப்படி படம் பண்ணப்போகிறார் என்றுதான் யோசித்தேன். ஆனால் அவரது கதை சொல்லும் திறமை.. நடிகர்கள் உட்பட.. அத்தனை கலைஞர்களிடமும் வேலை வாங்கிய விதம் என்னை வியக்க வைத்தது. அவரது புத்திசாலித்தனம் மற்றும் ஆளுமையை அவரது இணை இயக்குனர்கள் மாரி மற்றும் சீனு ஆகியோர் மூலம் வெளிப்படுத்தினார்...

அழகில அறிமுகமானதிலிருந்து குறும்புக்கார பசங்க வரை அதே அழகியாகவே இருக்கிறீர்களே எப்படி..?

எல்லாம் கேமராமேன் கைவண்ணம்தான்! எப்பவுமே நான் அழகா இருக்கிறேன் என்றால் அதற்குக் காரணம், நான் எப்பவுமே உள்ளத்தை மகிழ்ச்சியாக வைத்திருப்பதுதான். எனக்குக் கிடைத்த வாழ்க்கையை நான் மகிழ்ச்சியாகச் சந்திக்கிறேன்... ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியாகவே கடக்க ஆசைப்படுகிறேன்...

சமீபத்தில் திரைக்கு வந்த வர்ணம் ,முத்துக்கு முத்தாக ஆகிய படங்களில் நல்ல வேடங்களில் நடித்திருந்தும் தமிழில் அவ்வளவாக உங்களைப் பார்க்க முடியவில்லையே!

நான் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து எனக்கு ஆத்ம திருப்தி அளிக்கும் படங்களில் மட்டுமே நடிக்கிறேன். தவிர மலேசியத் தமிழ்ப் படம் ஒன்றில் நடித்திருக்கிறேன். தொடர்ந்து கன்னடப் படம் ஒன்று...அப்புறம் 'கதைபறையும் போள்' இயக்குனர் மோகனன் இயக்கத்தில் 'தற்சமயம் 916' என்ற மலையாளப்படம்... தமிழில்தான் இப்பொழுது குறும்புக்கார பசங்க வெளியாக இருக்கிறதே!

பேட்டி முடிந்த கையோடு கோழிக்கோடுக்கு பறந்தார் மோனிகா!

 

ஒரே பிரஷ்ஷில் பல் விளக்கிய ராஜேஷ் கன்னாவும், டினா முனீமும்!

Why Dimple Kapadia Left Rajesh Khan

மும்பை: ராஜேஷ் கன்னா போய் விட்டார். ஆனால் அவரைப் பற்றிய செய்திகளுக்கு இப்போதைக்கு மறைவு இல்லை போலும். அடுத்தடுத்து அவரைப் பற்றிய செய்திகள், ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ராஜேஷ் கன்னாவும், அவரது காதல் மனைவி டிம்பிள் கபாடியாவும் ஏன் பிரிந்தார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் காதல் மன்னனான ராஜேஷ் கன்னா, 1973ம் ஆண்டு டிம்பிள் கபாடியாவை மணந்தார். அப்போது டிம்பிளுக்கு வயது வெறும் 16தான். ஆனால் கன்னாவுக்கோ 31 ஆகும். இத்தனை பெரிய வயது வித்தியாசம் இருந்தாலும் கூட அவர்களின் காதலுக்கு அது இடையூறாக வரவில்லை. மாறாக நெருக்கமான அன்பையும், உறவையும் தொடர்ந்து அவர்கள் மண வாழ்க்கையையும் ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகத்தான் நடத்தினர்.

ராஜேஷ் கன்னாவை மணந்த ஆறு மாதத்தில் டிம்பிளின் முதல் படமான பாபி வெளியானது. ஆனால் அதன் பின்னர் டிம்பிள் நடிக்கக் கூடாது என்று ராஜேஷ் கன்னா தடை போட ஆரம்பித்தார். ஆரம்பத்தில் அவரை சமாதானப்படுத்தி தொடர்ந்து நடித்து வந்த டிம்பிள் பின்னர் ராஜேஷ் கன்னாவை சமாளிக்க முடியாமல் 1984ம் ஆண்டு அவரிடமிருந்து விலகி வந்தார். தொடர்ந்து படங்களில் நடித்தார். பின்னர் படங்களைக் குறைத்துக் கொண்டு தனது இரு மகள்களுக்காக வாழ ஆரம்பித்தார்.

இந்த நிலையில்தான் அப்போது ஹாட்டான நாயகியாக இருந்த டினா முனீமும், ராஜேஷ் கன்னாவும் காதலில் விழுந்தனர். இந்தக் காதல் படு நெருக்கமாக போக ஆரம்பித்தது. மற்றவர்களைப் போல தங்களது உறவை இவர்கள் மறுக்கவில்லை, மறைக்கவில்லை.வெளிப்படையாக ஒத்துக் கொண்டனர். இருவரும் ஆழமாக காதலிப்பதாகவும் அறிவித்தனர்.

மேலும் இருவரும் சேர்ந்தும் வாழ்ந்தனர். ஒரே பிரஷ்ஷில்தான் பல் துலக்குவார்கள். ஒரே சோப்பைத்தான் போட்டுக் கொள்வார்கள். அந்த அளவுக்கு நெருக்கமாகிக் கிடந்தனர்.

ஆனால் பின்னாளில், டினாவும் ராஜேஷைப் பிரிந்தார். அப்போது அவர் கூறுகையில், யாரையும் காதலிக்கும் மன நிலை இப்போது ராஜேஷ் கன்னாவுக்கு இல்லை என்று கூறினார். தன்னை மணந்து கொள்ளுமாறு டினா வலியுறுத்தியதாகவும், ஆனால் அதை ராஜேஷ் கன்னா ஏற்கவில்லை என்றும், இதனால்தான் அவர்களது காதல் முறிந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் டினா முனீம், தொழிலதிபர் அனில் அம்பானியை மணந்தார். அத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கமலுடன் கும்கி டீம் சந்திப்பு - இசை வெளியீட்டு விழாவுக்கு அழைப்பு

Kumki Team Invites Kamal Haasan   

சென்னை: கும்கி படத்தின் இசைவெளியீட்டு விழா அழைப்பிதழ் கோலிவுட்டின் சினிமா ஆர்வலர்கள் பலரையும் வியப்பிலாழ்த்தியிருக்கிறது. காரணம் அதன் ஆடம்பரம் அல்ல... அழகு!

இந்தியாவில் இப்படியெல்லாம் கூட அழகான பிரதேசங்கள் இருக்கின்றவா என்று கேட்க வைத்துள்ளது, அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள வனப்பகுதிகளின் புகைப்படங்கள்.

படத்தின் மீது புதிய எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது இந்த அழைப்பிதழ்.

நாளை மறுநாள் நடக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு கமல்ஹாஸனை நேரில் சந்தித்து இந்த அழைப்பிதழைக் கொடுத்தபோது, அந்தப் படங்களையெல்லாம் ஆர்வத்துடன் பார்த்த கமல், இயக்குநர் பிரபு சாலமனைப் பார்த்து ஒரு புன்னகை சிந்தினாராம். அவரது அதிகபட்ச பாராட்டு அது!

அருகில் அழைத்து தோளில் கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டவர், படம் குறித்து ரொம்ப நேரம் பேசினாராம்.

பின்னர், நடிகர் பிரபு (அவர் மகன் விக்ரம் பிரபுதான் ஹீரோ), படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி ஆகியோருக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார் கமல்.

சத்யம் திரையரங்கில் காலை 9 மணிக்கு நடக்கும் இந்த இசைவெளியீட்டு விழாவில் கமல்தான் சிறப்பு விருந்தினர். முதல் இசை குறுந்தகட்டை அவர் வெளியிட, நடிகர் சூர்யா பெற்றுக் கொள்கிறார்.

 

நதிகள் இணைப்பு ஒன்றுதான் இந்தியாவைக் காக்கும் - கவிஞர் வைரமுத்து

Nationalisation Rivers Only Can Sav

தஞ்சாவூர்: நதிகள் இணைப்பு மட்டுமே எதிர்வரும் நாட்களில் தேசத்தைக் காக்கும். இல்லையேல் இந்திய ஒற்றுமைக்கு ஆபத்து வந்துவிடும் என்றார் கவிஞர் வைரமுத்து.

தஞ்சையில் திங்கள்கிழமை நடந்த ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவிஞர் வைரமுத்து, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் கூறுகையில், "இந்தியாவில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும். இல்லையென்றால் இந்திய ஒருமைப்பாடு சிதறி விடும். நதிகளை இணைப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என்று சிலர் கூறுவது தவறானது.

ரஷியாவில் நதிகளை இணைப்பதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இந்தியாவில் அந்த சிரமம் ஏற்படாது. உலக அளவில் நதிகள் இணைப்புக்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

தொழில்நுட்பம் நிறைந்த நூற்றாண்டாக கருதும் இந்த 21 ஆம் நூற்றாண்டில் நதிகள் இணைப்பு என்பது சாத்தியமான ஒன்றுதான். இரண்டு மாநிலங்களுக்கு இடையில் உரிமை உள்ள போதே சிக்கல் வரும் நிலையில், பல மாநிலங்களை நதி கடக்கும் போது சிக்கல் ஏற்படுவது இயல்புதான்.

மதத்தினாலோ, ஜாதியினாலோ, இனத்தினாலோ ஒருமைப்பாடு வராது. நதிகளை இணைத்து திரவச்சங்கிலி என்ற முடிச்சால் மட்டுமே ஒருமைப்பாடு ஏற்படும்.

இந்தியாவுக்கு உபரிநீரும், உபரி மின்சாரமும் தேவைப்படுகிறது. இதனை உருவாக்கினால் மட்டுமே இந்தியா வல்லரசாக முடியும். இந்தியாவிலுள்ள 40 சதவீதம் நிலங்களுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் நதிகளால் மட்டுமே தண்ணீர் கிடைக்கிறது.

உலகளவில் 33 சதவீதம் வனமாக இருக்க வேண்டும். நாம் ஒரு மரத்தை வெட்டினால் 3 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.

இந்தியாவில் கால்நடைகள் இழப்பிற்கு பின்னரே இயற்கை விவசாயம் குறையத் தொடங்கியது. ஆடு, மாடுகளை செல்வமாக பாவித்த நாம் இப்போது அதனை இழந்து விட்டோம். வணிக நோக்கத்தால் நமது மரபுவழித் தத்துவங்கள் மறுதலித்து விட்டன. 3 ஆம் உலகப்போர் புத்தகம் தற்போது 3-வது பதிப்பு அச்சாகி வருகிறது. மூன்றாம் உலகப் போரும், புவிவெப்பமயமாதலும் என்ற குறுந்தகடு பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம்," என்றார்.

 

'குண்டக்க மண்டக்க' படங்களை லீக் செய்த பாக்.நடிகை மதிரா!

Mathira Naked Pictures Leaked

கராச்சி: வீணா மாலிக்கின் காலம் முடிவடைவதைப் போலத் தோன்றுகிறது. அவர் புறப்பட்டு வந்த அதே பாகிஸ்தானிலிருந்து ஒரு புதிய கவர்ச்சிப் பிரளயம் கிளம்பியுள்ளது. பாகிஸ்தான் நடிகை மதிரா, தனது செல்போன் மூலம் எடுத்த கவர்ச்சிகரமான, நிர்வாணப் புகைப்படங்களை அவரே லீக் செய்துள்ளார்.

பாகிஸ்தானைச் சேர்ந்தவர் மதிரா. கவர்ச்சிப் புரட்சியில் புதிதாக இணைந்துள்ள கலக்கல் நடிகை. வீணா மாலிக்கை தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடுவார் போல. அந்த அளவுக்கு கவர்ச்சியில் புதிய புதிய கோணங்களைக் காட்டி வருகிறார்.

முன்பு ஒருமுறை பாகிஸ்தான் மாடல் வக்கால் பதானுடன் இணைந்து ஒரு பத்திரிக்கைக்காக டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்து பயமுறுத்தினார். இந்த இந்த நிலையில், தற்போது தனது ரூமில் சுதந்திரமாக இருந்தபோது எடுக்கப்பட்ட செல்போன் படங்களை லீக் செய்து பயமுறுத்தியுள்ளார்.

பாஜி ஆன்லைன் என்ற டிவி ஷோவை தொகுத்து வழங்கி வரும் மதிரா, இந்தப் புகைப்படங்களில் நிர்வாணமாகவும் காணப்படுகிறார். கக்கூஸில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படமும் உள்ளது. மார்பழகைக் காட்டும் வகையிலான புகைப்படமும் உள்ளது. என்ன வளம் இல்லை என்னிடம் என்று அவர் கேட்பது போல உள்ளது அவரது கவர்ச்சிப் புகைப்படங்கள்.

மதிராவின் இந்தப் புகைப்படங்கள் புதிய புயலைக் கிளப்பியுள்ளன. வீணாவைப் போல இவரும் பாலிவுட் பக்கம் வந்தாலும் வரலாம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை அவர் வந்தால்,வீணாவின் கதி அதோ கதிதான் என்றும் கூறுகிறார்கள்.

 

முற்றிலும் கவர்ச்சிகரமான கரீனா... 'ஹீரோயின்' போஸ்டர் வெளியீடு!

Official Poster Heroine Finally   

முற்றிலும் கவர்ச்சிகரமான அவதாரத்தில் கரீனா கபூர் காணப்படும் ஹீரோயின் பட போஸ்டரை வெளியிட்டுள்ளார் இயக்குநர் மது பண்டர்கர்.

இந்தியில் உருவாகியுள்ள படம்தான் ஹீரோயின். முதலில் ஐஸ்வர்யா ராய்தான் இதில் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் கர்ப்பமாகி விட்டதால் நடிக்க முடியாமல் போய் பின்னர் கரீனா கபூர் ஒப்பந்தமானார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் கரீனா கபூர் வரலாறு காணாத கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டரை வெளியிட்டுள்ளார் மது.

இதில் கவர்ச்சிகரமான ஷிம்மரி டேங்க் டாப் உடையில், ஒரு படுக்கையில் மல்லாக்க படுத்துக் கிடக்கிறார் கரீனா. அவரைச் சுற்றிலும் ஏராளமான பத்திரிகைகள் கிடக்கின்றன. காலியான மதுக் கோப்பையும் அருகே கவிழ்ந்து கிடக்கிறது.

இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள மது, ரசிகர்கள் இதை ரசிப்பார்கள் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

ஒரு இந்தி நடிகையின் கதைதானாம் இந்தப் படத்தின் கதை. செப்டம்பர் 14ம் தேதி திரைக்கு வருகிறதாம்.