கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஜெயில் மட்டும் பத்தாது.. கொடிய தண்டனை வேண்டும்! - அமிதாப்

Amitabh Bachchan Numb Over Rape News

மும்பை: 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன் என்று பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

டெல்லியில் 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி தற்போது உயிருக்கு போராடி வருகிறாள். இந்த சம்பவம் பற்றி அமிதாப் பச்சன் இன்று தனது பிளாக்கில் எழுதியுள்ளதாவது:

மிகக் கொடூரமான சம்பவம் இது. 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவன் விலங்கை விட கேவலமானவன். இரண்டு நாட்களாக குழந்தையை காணமல் பெற்றோர்கள் தவித்த நிலையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் போலீஸ் இருந்துள்ளது.

நமது சமூகத்தில் என்ன நடக்கிறது? ஏன் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதுபோன்ற குற்றங்களுக்கு மக்கள் மன்றத்தில் நீதி வழங்கவேண்டும். குற்றவாளிகளை ஜெயிலில் போடுவது மட்டும் போதாது. அதைவிட கொடூரமான தண்டனைக்கு ஏற்றவர்கள் இவர்கள்.

பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவது தீவிரவாதத்தை விட கொடுமையானது என்றும் அமிதாப்பச்சன் குறிப்பிட்டுள்ளார்.

 

சரஸ்வதி சபதம் படத்துக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ்!

Legal Notice Saraswathy Sabatham

சென்னை: சரஸ்வதி சபதம் தலைப்பை புதிய படத்துக்கு சூட்டுவதை எதிர்த்து சிவாஜி ரசிகர்கள் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

சிவாஜி கணேசன், சாவித்திரி, பத்மினி நடித்து 1966-ல் வெளியான புராண படம் 'சரஸ்வதி சபதம்'. மிகப் புகழ்பெற்ற இந்தப் படத்தின் தலைப்பை புதிய படம் ஒன்றிற்கு சூட்டியுள்ளனர்.

இதற்கு சிவாஜி கணேசன் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி.பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோர் இந்தத் தலைப்பைப் பயன்படுத்தத் தடை கோரி வந்தனர்.

பட உரிமையாளர்களிடம் அனுமதி பெற்றுத்தான் தலைப்பை பயன்படுத்துவதாக தயாரிப்பு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் ஆகியோருக்கு சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திர சேகரன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், "சரஸ்வதி சபதம் பெயரில் படம் எடுப்பது சிவாஜி ரசிகர்களை புண்படுத்துவதாக உள்ளது. இப்படத்துக்கான விளம்பரங்களில் மது அருந்தும் பார் இடம் பெற்றுள்ளது. திருவிளையாடல், சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, கர்ணன் போன்றவை இந்துக்கள் மற்றும் ரசிகர்களின் சென்டிமென்ட் சம்பந்தப்படடவை. அந்த பெயர்களை புதுப்படங்களுக்கு பயன் படுத்த கூடாது. எனவே தலைப்பை மாற்ற வேண்டும். இல்லையேல் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அஜீத் படத்துக்கு தலைப்பு வலை இல்லை!- விஷ்ணுவர்தன்

Ajith Vishnuvardhan Film Is Not Valai

அஜீத் படத்துக்கு வலை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தன் கூறியுள்ளார்.

அஜீத் – நயன்தாரா, ஆர்யா – டாப்ஸி நடித்துள்ள புதிய படத்துக்கு இதுவரை அதிகாரப்பூர்வமாக பெயர் அறிவிக்கப்படவில்லை.

தல, வலை என தினந்தோறும் ஒரு பெயர்கள் அடிபட்டன. ஆனால் எதையும் இயக்குநரும் ஹீரோவும் உறுதிப்படுத்தவில்லை. படப்பிடிப்பு கூட முடிந்துவிட்டது. அஜீத்தும் அடுத்த பட வேலைகளில் இறங்கிவிட்டார்.

இந்த நிலையில் ரசிகர்களே ஒரு முடிவுக்கு வந்து, வலை என பெயர் சூட்டிவிட்டனர். படத்தின் டிசைன் கூட வெளியானது. பலரும் இந்தப் படத்தின் தலைப்பு வலைதான் போலிருக்கு என நினைத்துக் கொண்டிருக்கையில், இப்போது ‘இல்லையில்லை… தலைப்பு இன்னும் வைக்கவில்லை,’ என மறுப்பு தெரிவித்துள்ளார் விஷ்ணுவர்தன்.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்தனிடம், உங்க படத்துக்கு எப்போதான் தலைப்பை வெளியிடுவீங்க என்று கேட்டபோது, ‘இந்தப் படத்துக்கு இரு தலைப்புகளை யோசித்து வைத்துள்ளேன். ஆனால் நிச்சயம் வலை என்பது தலைப்பல்ல. பின்னர் அறிவிப்போம்,” என்றார்.

வரும் மே 1-ம் தேதி அஜீத் பிறந்த நாள் என்பதால், ஒருவேளை அன்று அறிவிப்பார்களோ என்னமோ!

 

வை ராஜா வை- ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் இரண்டாவது படம்!

Aishwarya Next Movie Vai Raja Vai

சென்னை: ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது இரண்டாவது படத்தை இயக்கும் பணியில் மும்முரமாக உள்ளார்.

கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் புதிய படத்துக்கு வை ராஜா வை என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த கடல் படத்தில் நாயகனாக நடித்த கவுதம் கார்த்திக்தான் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற கலைஞர்களை ஒப்பந்தம் செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவின் முதல் படம் 3. தனுஷ் – ஸ்ருதிஹாஸன் நடித்த அந்தப் படம் மிகப் பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையே வெளியாகி தோல்வியைச் சந்தித்தது.

இப்போது எந்த பெரிய அறிவிப்போ, பரபரப்போ இல்லாமல் தனது அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா. ‘இந்தப் படம் ரசிகர்களைக் கவரும் வகையில் அமையும்,” என்று அடக்கமாக சொல்லிவிட்டு, வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்.

 

மிரட்டும் முன்ஜென்மம்... சூர்யபுத்திரி சீரியலில் திருப்பம்

Kutti Pathmini S Serial Surya Puthri

சூர்யபுத்திரி தொடரில் இனி முன்ஜென்மக் கதை ஒளிபரப்பாகப் போகிறது. நிழல்கள் ரவி குடும்பத்திற்கு வரும் சிக்கல்கள் எதனால் என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்து கொள்ளலாம்.

சூர்ய புத்திரி தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் கிருஷ்ணாவாக நடிக்கும் லாவண்யாவுக்கு எதனால் ராம் (நிழல்கள் ரவி) குடும்பத்தினரின் மீது பகை என்பதையும், கிருஷ்ணா தான் சூர்யபுத்திரி என்பதையும், இனி ஒளிபரப்ப உள்ளனர்.

பல ஜென்மங்களுக்கு முன் சூர்யபுத்திரி எப்படியெல்லாம் ராம் குடும்பத்தினரால் பாதிக்கப்பட்டாள் என்பதையும், பிரமாண்டமான முறையில் காட்சிப்படுத்தியிருக்கிறார்களாம்.

முன்ஜென்ம கதையை கையில் எடுத்திருப்பதால் அதுதொடர்பான பல காட்சிகள் சின்னத்திரை ரசிகர்களை வியப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் என்கிறார், சூர்ய புத்திரி தொடரின் தயாரிப்பாளர் குட்டிபத்மினி.

இந்த தொடரில் நிழல்கள் ரவி, ஏ.ஆர்.எஸ், குட்டிபத்மினி, லாவண்யா, ஸபர்ணா, ராஜா, ராஜ்குமார், ஆர்யா, நேபால், குமரேசன், ஸ்ரீதேவி, ஸ்ரீவித்யா, நேஹா, ஸ்வேதா, தீபா, சுஜாதா, டிவி.ராமானுஜம் ஆகியோர் நடித்துள்ளனர். வைஷ்ணவி மீடியா ஒர்க்ஸ் லிமிடெட் சார்பில் தயாரித்துள்ளார் குட்டிபத்மினி, தமிழ் பாரதி இயக்கியுள்ளார்.

 

சிவந்தி ஆதித்தனுக்கு ரஜினி, இளையராஜா, அஜீத் அஞ்சலி!

Rajini Ilayarajaa Ajith Pay Homage Sivanthi Adityan

சென்னை: மறைந்த பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் இளையராஜா உள்பட திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.

தினத்தந்தி அதிபர், கல்வியாளர், விளை யாட்டு ஆர்வலர் சிவந்தி ஆதித்தன் நேற்று இரவு மரணமடைந்தார்.

அவருக்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச் செயலர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

திரையுலகினரும் போயஸ் கார்டன் சென்று தங்கள் இரங்கலை சிவந்தி ஆதித்தன் உடலுக்கு செலுத்தி வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேரில் சென்று சிவந்தி ஆதித்தன் உடலுக்கு மாலை அணிவித்து தன் இரங்கலைத் தெரிவித்தார்.

Ajith pay homage to Sivanthi Adityanஇசைஞானி இளையராஜா, சிவகுமார், அஜித்-ஷாலினி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர்கள் டி.ராஜேந்தர், பாக்கியராஜ்-பூர்ணிமா, ராஜேஷ், விவேக், உதயநிதி ஸ்டாலின், மன்சூர் அலிகான், எம்.எஸ்.பாஸ்கர், சின்னி ஜெயந்த், நடிகை குஷ்பு-,சுந்தர்சி,நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதிஸ்டாலின் உள்பட பலரும் நேரில் சென்று அஞ்சலி தெரிவித்தனர்.

 

குடும்பத்தோட பார்க்கிற மாதிரி நான் எடுக்கும் முதல் படம் கங்காரு! - இயக்குநர் சாமி

Director Saami Next Kangaru

‘உயிர்’, ‘மிருகம்’, சிந்துச் சமவெளி என கான்ட்ராவர்சி படங்களையே தொட்டுப் பார்த்து பரபரப்புக்குள்ளாகிய இயக்குனர் சாமியின் அடுத்த படம் கங்காரு.

அமைதிப்படை 2 தயாரித்த ‘வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ்’ தயாரிப்பில் சுரேஷ் காமாட்சி, வி.ரவிச்சந்திரன் தயாரிக்க, இவர்களுடன் இணைந்து முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து இயக்குகிறார் சாமி.

இந்தப் படம் குறித்து சமீபத்தில் சாமியிடம் பேசினோம். அந்த சந்திப்பிலிருந்து…

அது என்ன கங்காரு?

வாழ்கையில சந்தோஷம், துக்கம், அழுகை, சிரிப்பு, பாசம்னு ஏதோ ஒரு விஷயத்தை தெரிஞ்சோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ சுமந்துகிட்டுதான் திரியறோம். அப்படி மனசாலும், உடம்பாலும் ஒரு ஜீவனை இன்னொரு ஜீவன் வாழ்நாளெல்லாம் சுமந்து திரிவதுதான் ‘கங்காரு’.

எப்போதும் போல இதுவும் சர்ச்சைக் கதையா?

ரெண்டு விஷயங்களை கோடிட்டு காட்ட விரும்புகிறேன் . சிந்து சமவெளி படத்தின் புரோமோஷனுக்காக ஒரு தனியார் தொலைக்கட்சிக்கு சென்றிருந்தேன். ‘சரவணன் மீனாட்சி’ புகழ், ‘கண்பேசும் வார்த்தைகள்’ ஹீரோ செந்தில்தான் என்னை பேட்டி எடுத்தார். அப்போது அவர் என்னிடம், ஏன் சர்ச்சைக்குரிய படங்களையே எடுக்குறீங்க? ஏன் வேறு மாதிரி எடுக்கலைன்னு கேட்டார். அப்போது அவருக்கு நான் சொன்ன பதில் எனக்கு நானே வைத்துக்கொண்ட ஒரு பரிசோதனை முயற்சின்னுதான் சொல்லணும்.

எனக்கு நல்ல படம் எடுக்ககூடாதுன்னு ஒண்ணும் இல்லை. எனக்கு சர்ச்சைக்குரிய படம் பண்ணத்தான் வாய்ப்பு கிடைச்சது. அதுவுமில்லாம முந்தைய ரெண்டு சர்ச்சைக்குரிய படங்களும் ஓடினதால மூணாவது படமும் அப்படியே எடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இப்போ சொல்றேன்.. தமிழ் ரசிகர்களுக்கு சொரணை இருந்தால் என் ‘சிந்து சமவெளி’ படத்தை புறக்கணிக்கட்டும். பார்க்காமல் தவிர்க்கட்டும்.. அப்போ நான் என் ரூட்டை மாற்றிக்கொள்கிறேன் என்று அவரிடமும் மக்களிடமும் சவால் விட்டேன். மக்களும் அந்த படத்தை தவிர்த்தாங்க. நானும் இப்போ என் ரூட்டை மாத்திக்கிட்டேன்”.

அடுத்து அதே சிந்து சமவெளி படத்துக்காக சமூக ஆர்வலர்களும், சமுதாயக் காவலர்களும் என் வீட்டை, காரை அடித்து நொறுக்கினார்கள். அந்த சமயத்துல எங்கம்மா ஏம்பா இப்படி நடக்குது? குடும்பத்தோட உக்கார்ந்து பார்க்குற மாதிரி ஒரு படம் எடுக்கக்கூடாதான்னு கேட்டாங்க. இதோ தமிழ் நாட்டுல உள்ள அம்மாக்களுக்கு மட்டுமல்ல; உலகம் முழுக்க உள்ள எல்லா அம்மாக்களுக்கும், என் அம்மாவுக்காகவும் சேர்த்து ஒரு படம் எடுக்குறேன். அது இந்த கங்காரு. தாய்ப்பாசத்துக்கு உட்சபட்ச உதாரணம் கங்காரு.

ஏன் பாலியல் ரீதியான களம் பக்கம் போனீங்க?

உயிர் படத்துக்கான கதை உருவான சமயம் அந்த அண்ணி நல்லவங்களாத்தான் இருந்தாங்க. காதலுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டு சாவாதீங்க. காதலை விட உயிர் பெருசு என்பதை சொல்ற ஒரு நல்ல கதையாத்தான் அது இருந்தது. அந்தக் கதையை கேட்ட எல்லா தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கதை நல்லா இருக்கு ஆனா ஏதோ ஒன்னு குறையுதுன்னு சொன்னாங்க. அப்போ என்கிட்டே இருந்த உதவியாளர் ஒருவர் அண்ணி கேரக்டரை நெகட்டிவ்வா மாத்திடலாம்னு சொன்னார். அப்படி நான் மாத்தினதுக்கப்புறம் ஐந்து கம்பனியில அட்வான்ஸ் கொடுத்தாங்க. ஆறாவதா ஆர். பாலாஜி சார் எடுத்தார்.

அதன்பிறகு நான் பண்ண நினைச்ச படம் விளையாட்டை மையமா வைத்து சதம்னு ஒரு படம். அது இருபத்தைந்து லட்ச ரூபா செலவு பண்ணி தொடர முடியாமல் போனது. அதன்பிறகு கிடைத்த படம் மிருகம். அதை சர்ச்சைக்குரிய படம்னு சொல்ல முடியாது. எய்ட்ஸ் சம்பந்தப்பட்ட படம்கிறதால செக்ஸையும் சேர்த்து சொல்லவேண்டியிருந்தது.

அதன்பிறகு பண்ணிய படம் ராஜ்கிரணுடன் சரித்திரம். சிலம்ப விளையாட்டை மையமா வச்சி எடுத்த படம். தொண்ணூறு சதவீதம் முடிச்சும் மீதிய முடிக்க முடியல. அந்த சமயத்துல எனக்கு கிடைச்ச வாய்ப்புதான் சிந்து சமவெளி. அந்த படத்தின் தயாரிப்பாளரும் நிர்வாகத் தயாரிப்பாளரும் சர்ச்சைக்குரிய கதைதான் வேணும்னு கேட்டாங்க. அப்போ ரஷ்ய எழுத்தாளர் இவான் துர்கேனிவ்வோட முதல் காதல் என்கிற குறு நாவல் பற்றி சொன்னேன். அதையே தமிழுக்கேற்ப மாற்றி செய்யச் சொன்னாங்க. அப்படி உருவானதுதான் சிந்துசமவெளி.

சினிமாவுல கவனிக்கப்படணும்.. ஒரு இடத்தைப் பிடிக்கணும்கிறதுக்காக ஓடுற இயக்குனர்களில் நானும் ஒருத்தன். எனக்கு கிடைச்ச வாய்ப்பை பயன்படுத்திக்கிட்டு கதைக்கான நேர்மையோட ஒவ்வொரு படத்தையும் எடுத்திருக்கேன். நேர்மையோடான்னு நீங்க கேக்குறது புரியுது. உதாரணமா, சிந்துசமவெளி படத்தில் நிறைய செக்ஸ் காட்சிகளை வைத்திருக்க முடியும். ஹீரோயினை இன்னும் தோலுரித்துக் காட்சிப்படுத்தியிருக்க முடியும். அப்படிப்பட்ட கதை அது. எல்லா விதத்திலும் இடம்கொடுக்கக்கூடிய அந்த படத்தில் நான் எந்த இடத்திலும் சதைக் காட்சிகள் வைக்கவில்லை. மாறாக கதையில் கவர்ச்சி இருந்தது. காட்சிகளில் அதைத் தவிர்த்திருக்கிறேன். இதிலிருந்து செக்ஸ் களத்திற்கு நானாக விரும்பிச்சென்றேனா அல்லது தள்ளப்பட்டேனா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

”ஒருவேளை சிந்துச் சமவெளி வெற்றி பெற்றிருந்தால்?”

எந்தவொரு இயக்குனருக்கும் ஒரே மாதிரி படமெடுப்பது சலிப்பூட்டும் விஷயமே. போதும் ரூட்டை மாத்து என்று வேறுவிதமாகத்தான் பயணப்பட்டிருப்பேன். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் இதுதான் உண்மை. அதுக்கு நான் தயாராகத்தான் இருந்தேன். அதன் தொடக்கம்தான் கங்காரு.

‘கங்காரு டீம் பத்தி சொல்லுங்க?’

அர்ஜுனா என்ற பையனை அறிமுகம் செய்கிறேன். பிரணயா, சுப்ரியா என்று இரு புதுமுக நாயகிகளும் அறிமுகமாகின்றனர். தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, மற்றும் பல புதிய முகங்களும் நடிக்கின்றனர். கதை என் உதவியாளர் எஸ் டி சாய் பிரசாத்துடையது. நான் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி இயக்குகிறேன். கவிப்பேரரசு வைரமுத்து எல்லா பாடல்களையும் பட்டை தீட்டி தந்திருக்கிறார். பாடல்கள் உங்களை நிச்சயம் உலுப்பும். பாடகர் ஸ்ரீநிவாஸ் தமிழில் இசையமைக்கும் முதல் படம் இது. முப்பத்தைந்து படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்த ராஜரத்தினம் காமிராவை கையாள, கலையை தோட்டாதரணி கவனிக்கிறார்.

 

நடிகை ஆசை காட்டி மோசடி - இயக்குநர் மீது டிவி நடிகை புகார்

சென்னை: படத்தில் கதாநாயகி ஆக்குவதாகக் கூறி ரூ 4 லட்சம் பணத்தைப் பறித்துவிட்டதாக சினிமா இயக்குநர் ஒருவர் மீது புகார் கூறியுள்ளார் டிவி நடிகை விஜயலட்சுமி.

சென்னை ரெட்ஹில்ஸ் பாடியநல்லூரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர் நேற்று தனது கணவர் தர்மாவுடன் வந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் பேசுகையில், "இலங்கையைச் சேர்ந்த நான் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டேன். டி.வி. தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. துளசி உள்பட டி.வி. தொடர்களில் நடித்தேன்.

இந்த நிலையில், என்னை சினிமாவில் கதாநாயகி ஆக்குவதாக சொல்லி இயக்குநர் ர் ஒருவர் ஆசை காட்டினார். அவரது ஆசை வார்த்தையில் மயங்கி ரூ.4 லட்சம் பணம் மற்றும் ஏராளமான நகைகளை அவரிடம் கொடுத்தேன்.

ஆனால் அவர் என்னை கதாநாயகி என்று விளம்பர படுத்தியதோடு சரி. ஏமாற்றிவிட்டார். இப்போது அவர் ஒரு பெரிய மோசடி பேர்வழி என்று தெரிய வந்துள்ளது.

வேலை வாங்கி தருவதாக நிறைய பேரிடம் மோசடி செய்துள்ளார். வங்கியில் கடன் வாங்கித் தருவதாகவும், வீட்டுவசதி வாரியத்தில் நிலம் வாங்கித் தருவதாகவும் பல பேரிடம் பணம் சுுட்டி உள்ளார்.

இப்போது என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி புகார் மனு கொடுத்துள்ளேன். என்னோடு மேலும் இருவரும் புகார் கொடுத்து இருக்கிறார்கள்," என்றார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.அவரது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கும்படி மாதவரம் துணை கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார் கமிஷனர்.