ஐபிஎல் போன்று கால்பந்து பிரீமியர் லீக்: கொல்கத்தா அணியை வாங்க ஷாருக் திட்டம்

டெல்லி: ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கிய பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அடுத்தாக கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க திட்டமிட்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளைப் போன்று கால்பந்து பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் ஐஎம்ஜி-ரிலையன்ஸின் ஆதரவில் இந்த போட்டிகள் நடக்கவிருக்கின்றன. இந்த போட்டிகளில் ஐபிஎல் போன்றே பல்வேறு அணிகள் விளையாடுகின்றன.

அதில் கொல்கத்தாவுக்காக விளையாடும் அணியை வாங்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் திட்டமிட்டுள்ளார்.

ஐபிஎல் போன்று கால்பந்து பிரீமியர் லீக்: கொல்கத்தா அணியை வாங்க ஷாருக் திட்டம்

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் முதலில் டெம்போ அணியை வாங்க திட்டமிட்டேன். ஆனால் தற்போது புதிய லீக் போட்டிகள் நடக்கவிருக்கின்றன. அதனால் அதில் விளையாடும் கொல்கத்தா கால்பந்து கிளப்பை வாங்க விரும்புகிறேன் என்றார்.

அடுத்த ஆண்டின் துவக்கத்தில் நடக்கும் கால்பந்து பிரீமியர் லீக்கில் 8 கிளப்புகள் மோதவிருக்கின்றன. 10 வாரங்கள் நடக்கும் இந்த போட்டிகளில் 176 வீரர்கள், 72 பிரபல சர்வதேச வீரர்கள் விளையாடுகின்றனர். வரும் 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி துவங்கி மார்ச் 30ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கும்.

 

'ராஜா தி ராஜா'... லண்டன் இசைமேடையில்... இசைஞானியும் உலக நாயகனும்!

லண்டன்: ஐரோப்பாவில் முதல் முறையாக இசைஞானி இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

லண்டன் நகரில் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி நடக்கும் இந்த பிரமாண்ட இசை நிகழ்ச்சியில் இசைஞானியுடன் மேடையைப் பகிர்ந்து கொள்பவர் உலகநாயகன் கமல் ஹாஸன்.

'ராஜா தி ராஜா'... லண்டன் இசைமேடையில்... இசைஞானியும் உலக நாயகனும்!

தி ஓ 2 அரங்கில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் திரையிசையில் பிரபலமாக விளங்கும் எஸ்பி பாலசுப்ரமணியன், ஜெயச்சந்திரன், கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, எஸ்பி ஷைலஜா, கார்த்திக், சின்மயி உள்பட ஏராளமான பாடகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்த முறை இசைஞானி இசையில் கமல்ஹாஸனும் மேடையில் பாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சிறந்த பாடகராகவும் திகழும் கமல்ஹாஸன், தன் சினிமா வாழ்க்கையில் அதிகப் பாடல்கள் பாடியிருப்பது இளையராஜா இசையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜா தி ராஜா எனும் தலைப்பில் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், டிக்கெட்டுகள் வேகமாக விற்றுக் கொண்டிருக்கின்றன.

 

எரவாடா சிறையில், ‘பார்ட் டைம்’ வேலை செய்யும் சஞ்சய்தத்

எரவாடா சிறையில், ‘பார்ட் டைம்’ வேலை செய்யும் சஞ்சய்தத்

மும்பை: மும்பை குண்டு வெடிப்பில் கைதாகி சிறையில் உள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தனது ஓய்வு நேரங்களில் சிறை அலுவலகப் பணிகளைச் செய்கிறாராம்.

பிரபல ஹிந்தி நடிகரான சஞ்சய் தத், மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தற்போது எரவாடாச் சிறையில் உள்ளார். அங்கு அவருக்கு பேப்பர் பை செய்யும் தொழில் செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது.

ஆனாலும், தனது வேலை நேரம் போக மீதி நேரங்களில் ஓய்வெடுக்காமல், சுறுசுறுப்பாக சிறை அலுவலர்களுக்கு உதவி செய்கிறாராம் சஞ்சய். நல்ல கல்வியறிவு பெற்றவராக இருப்பதால், அலுவலகப் பணிகளைத் திரம்பட செய்து முடிக்கிறாராம்.

அலுவகப் பணிகள் முடிவடைந்த பிறகு கிடைக்கும் நேரத்தில் தனது காதல் மனைவி மானயாதத்திற்கு கடிதம் எழுத அமர்ந்து விடுகிறாராம் சஞ்சய் தத்.

 

ஆர்யா பெயரில் ட்விட்டரில் போலிக் கணக்கு!

ஆர்யா பெயரில் ட்விட்டரில் போலிக் கணக்கு!

சென்னை: தன் பெயரில் போலியாக ஒரு பக்கத்தை யாரோ ட்விட்டரில் தொடங்கி, தொடர்ந்து பதிவிட்டு வருவதாக நடிகர் ஆர்யா புகார் தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் இணையத்தில் நடிகர்களின் பெயர்களில் போலி கணக்குகள் தொடங்கி, அதில் அவர்களின் படங்கள் மற்றும் பர்சனல் விஷயங்களைப் பகிர்வது தொடர்ந்து நடக்கிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெயரில் அவரே அப்டேட் செய்வது போது பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பக்கங்கள் உள்ள நிலையில், மற்ற நடிகர்கள் எம்மாத்திரம்?

டிவிட்டரில் (https://twitter.com/aryaactor) என்ற பெயரில் ஆர்யா இயங்கி வருவதாகக் கூறப்பட்டது.

அதை நம்ப வைக்கும் வகையில், அஜித்துடன் ஆர்யா நடித்து வரும் 'ஆரம்பம்' படத்தின் இசை வெளியீட்டு எப்போது நடைபெறும் என்ற தகவல் வெளியானது.

அந்த இணையத்தில், "அனைவருமே 'ஆரம்பம்' இசை வெளியீடு எப்போது என்பதில் ஆர்வமாக இருக்கிறீர்கள். தற்போது வரை யுவன்சங்கர் ராஜாவின் பிறந்த நாளான ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியிடலாம் என்று தீர்மானித்து இருக்கிறோம். ஏதாவது மாற்றம் இருந்தால் கூறுகிறேன்" என்ற தகவல் வெளியானது.

படத்தின் தலைப்பையே வேண்டுமென்றே ஒன்றரை ஆண்டுகள் இழுத்தடித்து பப்ளிசிட்டி கிரியேட் பண்ண ஆரம்பம் குழுவினருக்கு இது பேரதிர்ச்சியைத் தந்தது.

உடனே ஆர்யா, "நான் டிவிட்டர் இணையத்திலேயே இல்லை. எனது பெயரில் இயங்கி வருவது போலியானது. 'ஆரம்பம்' இசை வெளியீடு குறித்து வெளியான தகவல்கள் குறித்து மிகவும் கவலையாக இருக்கிறது" என்று தெரிவித்திருக்கிறார்.

என்னமோ போங்கப்பா..!