மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 'காமெடி கிங்' கவுண்டமணி!

மீண்டும் ஹீரோவாக நடிக்கிறார் 'காமெடி கிங்' கவுண்டமணி!

சென்னை: தமிழ் சினிமா உள்ளவரைக்கும் தலைமுறைகளைத் தாண்டி நிற்கும் காமெடி கிங்காகக் கருதப்படும் கவுண்டமணி, மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். வாய்மை என்ற படத்தில் டாக்டராக நடிக்கும் அவர், அடுத்து இயக்குநர் வெற்றிமாறன் தயாரிக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இன்றைய காமெடியன்கள் யாராலும் இட்டு நிரப்ப முடியாத அளவுக்கு நீக்கமற நிறைந்திருப்பவர் கவுண்டர் என செல்லமாக (சாதிப் பெயர் இல்லீங்) அழைக்கப்படும் கவுண்டமணி.

கவுண்டமணி -செந்தில் கூட்டணி இணைந்தே 450 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்கள். கவுண்டமணி மட்டுமே 750 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். இதில் ஹீரோவாக மட்டும் நடித்த படங்கள் 12.

எவ்வளவோ வாய்ப்புகள் வந்தும், தங்கம் படத்துக்குப் பிறகு நடிக்காமல் ஒதுங்கியிருந்த கவுண்டமணி, தற்போது 'வாய்மை' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து கவுண்டரை கவுரவிக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் ஒரு படத்தில் அவரை நாயகனாக நடிக்க வைக்கிறார். வெற்றி மாறனின் உதவியாளர்களுள் ஒருவர்தான் இந்தப் படத்தை இயக்கப் போகிறாராம்.

படத்தின் கதையைக் கேட்டும் சம்மதமும் சொல்லிவிட்டார் கவுண்டர் என்கிறார்கள்.

அட்ரா சக்க.. அட்ரா சக்க... அட்ட்ரா சக்க!

 

நடிகை கனகா மீது போலீஸ் நடவடிக்கை கோரி தந்தை புகார்!

சென்னை: சமூகத்தில் தன்னை தவறானவனாகச் சித்தரித்து வரும் தன் மகள் கனகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் போலீசில் புகார் கூறியுள்ளார்.

நடிகை கனகாவின் தந்தை தேவதாஸ் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

அம்மனுவில், "என் மனைவியும் நடிகையுமான தேவிகா, மகள் கனகா பிறந்ததும் என்னிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். அதன்பிறகு கனகாவை கண்ணும்கருத்துமாக நான்தான் வளர்த்து வந்தேன். இடையில் என்னென்னவோ ஆகிவிட்டது. இந்நிலையில் என் மகள் என்னை சமூகத்தில் ஒரு தவறான மனிதனைப்போல சித்தரிக்கிறாள்.

நடிகை கனகா மீது போலீஸ் நடவடிக்கை கோரி தந்தை புகார்!

நான் அவளை பைத்தியக்காரி என்று சொல்லிவருவதாகவும், அவளது சொத்துக்களை அபகரிக்க முயலுவ தாகவும் அவதூறு பரப்பி வருகிறாள். இதனால் அவள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு குறித்து போலீசார் விசாரணை செய்வதாக தேவதாஸிடம் கூறி அனுப்பி வைத்தனர்.

 

சேரன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கமிஷனருக்கு உத்தரவு!

சேரன் மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கமிஷனருக்கு உத்தரவு!

சென்னை: இயக்குனர் சேரனின் மகள் தாமினியை இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காதல் பிரச்சினையில் சிக்கியுள்ள தாமினி மயிலாப்பூர் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தாமினியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி, தாமினியின் காதலன் சந்துருவின் தாயார் ஈஸ்வரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுவை அவசர வழக்காக விசாரிக்கும்படி கேட்டுக்கொண்ட ஈஸ்வரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, "தாமினியை காதலித்த வாலிபர் சந்துருவை அடி ஆட்களை அனுப்பி கொலை செய்துவிடுவதாக திரைப்பட இயக்குனர் சேரன் மிரட்டியுள்ளார். இது குறித்து தாமினி கொடுத்த புகாரில் போலீசார் விசாரணை என்ற பெயரில் அவரை காப்பகத்தில் அடைத்து வைத்துள்ளனர். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும். திருமண வயது வந்த பெண்ணை பலவந்தமாக இப்பசி அடைத்து வைத்துள்ளது தவறு," என்றார்.

இதை கேட்ட நீதிபதிகள், ஈஸ்வரி தாக்கல் செய்த மனு அவசர வழக்காக எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பிற்பகல் அந்த மனு விசாரிக்கப்படும் என்றும் அறிவித்தனர்.

மேலும் இந்த வழக்கு விசாரணையின்போது இயக்குனர் சேரன் மகள் தாமினியை நீதிமன்றத்தில் போலீசார் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும், இதற்கான நடவடிக்கையை போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தாமினி புகாரின் பேரில் சேரன், சந்துரு இருவர் மீதுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

இவன் வேற மாதிரியை அறிமுகப்படுத்தும் 'தலைவா'

இவன் வேற மாதிரியை அறிமுகப்படுத்தும் 'தலைவா'

சென்னை: விக்ரம் பிரபுவின் இவன் வேற மாதிரி பட டிரெய்லர் தலைவா படத்தின் இடைவேளையில் வரவிருக்கிறது.

கும்கி படம் மூலம் ஹீரோவான விக்ரம் பிரபவு சரவணன் இயக்கத்தில் இவன் வேற மாதிரி படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு புதுமுகம் சுரபி ஜோடியாக நடித்துள்ளார். படத்தை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வினியோக உரிமையை யுடிவி வாங்கியுள்ளது.

இந்நிலையில் இவன் வேற மாதிரி டிரெய்லரை தலைவா பட இடைவேளையில் ரிலீஸ் செய்யும் உரிமையை வாங்கியுள்ளனர். விஜய்யின் தலைவா வரும் 9ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவிருக்கிறது.

அதன் இடைவேளையில் இவன் வேற மாதிரி டிரெய்லர் வந்தால் நல்ல விளம்பரம் தான்.

 

ஷாருக்கானை சந்திக்க பயந்து நடுங்கிய தீபிகா படுகோனே

மும்பை: தீபிகா படுகோனே முதன்முதலாக ஷாருக்கானை பார்க்க பயந்தாராம்.

தீபிகா படுகோனே ஃபரா கான் இயக்கிய ஓம் சாந்தி ஓம் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் பாலிவுட் பாதுஷா ஷாருக்கானுடன் நடித்து பெயரும் புகழும் பெற்றார்.

இந்நிலையில் அவர்கள் ரோஹித் ஷெட்டியின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். ஷாருக்கும், தீபிகாவும் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஷாருக்கானை சந்திக்க பயந்து நடுங்கிய தீபிகா படுகோனே

அத்தகைய விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா கூறுகையில்,

ஷாருக்கானை முதன்முதலாக பார்க்க எனக்கு பயமாக இருந்தது. ஃபரா தான் என்னை ஷாருக்கின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். முதன்முதலாக ஷாருக்கை பார்க்கச் சென்றபோது யஷ் சோப்ரா ஹீரோயின் போன்று வெள்ளை சல்வார் கமீஸில் சென்றேன். பாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக இருக்க வேண்டும் என்றால் ஸ்டிரெயிட்டான கூந்தல், வெள்ளை நிற ஆடை அணிவது அவசியம் என்றார்.

 

சேரன், அமீர் பேட்டியை லைவாகப் பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!

இயக்குநர் சேரன மற்றும் அமீர் போன்றவர்கள் பிரஸ் மீட் வைத்து தன் குடும்பத்தைப் பற்றி கேவலமாகப் பேசியதை டிவியில் லைவாகப் பார்த்து கொதித்துப் போயுள்ளனர் சந்துரு குடும்பத்தினர்.

தனது மகள் தாமினி - சந்துரு காதல் விவகாரம் குறித்து இயக்குநர் சேரன் தனது மனைவியுடன் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசினார். அப்போது டைரக்டர் அமீரும் உடன் இருந்தார். இந்த பேட்டியின் போது சேரனும், அமீரும் சந்துருவை பற்றியும் அவரது குடும்பத்தினர் பற்றியும் பல்வேறு கருத்துக்களை கூறினார்கள்.

சேரன் பேசும்போது ‘‘சந்துரு நல்லவனாக திரும்பி வந்தால் பின்னர் பார்க்கலாம்'' என்றார்.

சேரன், அமீர் பேட்டியை லைவாகப் பார்த்து அதிர்ந்த சந்துரு குடும்பம்!

ஆனால் அமீர் கூறும் போது, "அந்தப் பையன் தவறானவன்.. அவன் குடும்பமே கிரிமினல் குடும்பம்.. அவங்கக்கா யாரு.. அவங்களோட இப்போதைய புருசன் யாரு.. இதையெல்லாம் உளவுத் துறை விசாரிக்கணும்..." என்றார்.

இதனை டி.வி. நேரடி ஒளிபரப்பில் பார்த்துக் கொண்டிருந்த சந்துருவும், அவரது சகோதரிகளும், குடும்பத்தினரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தங்களை பற்றி அவதூறான கருத்துக்களை கூறியதை கேட்டதும் அவர்கள் கொதிப்படைந்தனர்.

இது பற்றி சந்துருவின் சகோதரி பத்மா கூறும் போது, ‘‘எங்கள் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு டைரக்டர் சேரனும், அமீரும் நிச்சயம் ஒரு நாள் பதில் சொல்ல வேண்டியிருக்கும். அவர்கள் கூறியவை அபாண்டமான பழி, எங்கள் பெயரைக் கெடுக்கும் முயற்சி இது,'' என்றார்.

சந்துரு கூறும்போது, "தாமினியை அருகில் வைத்து கொண்டு சேரன் இப்படி சொல்வாரா.. என்னை சினிமாவிலிருந்து விரட்ட அவர்கள் அப்படி பேசுகிறார்கள்," என்றார்.

 

ஆபாச சைகை காட்டியதாக பெண் புகார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

ஆபாச சைகை காட்டியதாக பெண் புகார்: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

சென்னை: பெண்ணுக்கு ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாசமாக திட்டியதாகவும் எழுந்த புகாரை அடுத்து திரைப்பட இசையமைப்பாளரும் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் ஞாயிறன்று கைது செய்யப்பட்டார்.

நீலாங்கரை அருகில் உள்ள பாலவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஜேம்ஸ் வசந்தன். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகி தற்போது திரைப்பட இசையமைப்பாளராக உயர்ந்துள்ளார்.

இவர், சுப்பிரமணியபுரம், பசங்க, ஈசன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். எனினும் விஜய் டிவியில் டிவி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருக்கிறார்.

ஜேம்ஸ் வசந்தனுக்கும் அவரது பக்கத்து வீட்டில் உள்ள ராதா வேணுபிரசாத் (65) என்ற பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் சனிக்கிழமை தன்னை ஜேம்ஸ் வசந்தன் ஆபாச சைகை காட்டியதாகவும், ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறி ராதா வேணுபிரசாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக நீலாங்கரை போலீசார் வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனை கைது செய்தனர். பின்னர் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸார் அழைத்துச் சென்றனர். ஆனால் மாஜிஸ்திரேட்டு இல்லாததால் செங்கல்பட்டுக்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் தரப்பில் கேட்டபோது, இந்த வழக்கு பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று தெரிவித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய ஜேம்ஸ் வசந்தன், என் மீது என்ன வழக்கு போட்டு உள்ளார்கள் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தீவிரவாதியை கைது செய்வது போல் 40-க்கும் மேற்பட்ட போலீசார் என் வீட்டுக்குள் புகுந்து அழைத்து வந்தனர்.

புகார் கொடுத்த பெண் கமிஷனர் ஜார்ஜ்க்கு வேண்டப்பட்ட பெண். எனவே எளிதாக என்மீது பொய் வழக்கு போட்டு கைது செய்துள்ளனர். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் உள்ள பெண், எனது இடத்தை கேட்டார். நான் தரமறுத்துவிட்டேன். அதற்காக என் மீது பொய் வழக்கு போட்டு உள்ளனர். இதில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.