மீண்டும் தெலுங்கில் 'மாட்லாடப்' போகும் ஷ்ரியா


தமிழில் கிட்டத்தட்ட சுத்தமாக வாய்ப்பில்லாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஷ்ரியா. இதனால் மீண்டும் தெலுங்குப் பக்கம் கவனத்தைத் திருப்புகிறார்.

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் காலடி வைத்த நடிகை ஷ்ரியா. தமிழிலும், தெலுங்கிலும் அலை பரப்பிய அவர், தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் வரவே தமிழிலேயே செட்டிலானார்.

குடும்பப் பாங்கான வேடத்தில் நடிக்க அவர் விரும்பினாலும், காஸ்ட்யூமுக்கு ஏற்ற வகையில் அவரது உடல்வாகு இல்லாததால், தொடர்ந்து கவர்ச்சிகரமாக வலம் வந்தார் ஷ்ரியா.

இருப்பினும் தற்போது ஷ்ரியா அலை தமிழில் அடங்கி விட்டது. இதையடுத்து மீண்டும் தெலுங்குக்குத் திரும்புகிறார் ஷ்ரியா. அல்லரி நரேஷ் ஜோடியாக புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

நாராயணா என்பவர் இயக்கும் இப்படம் பெரும் பொருட் செலவில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் மூலம் தெலுங்கில் தனது அலையை மீண்டும் பரப்பத் தயாராகி விட்டார் ஷ்ரியா. இந்தியில் வெளியான தீவானா மஸ்தானா பாணியில் படம் இருக்குமாம். வம்சி கிருஷ்ணா இப்படத்தைத் தயாரிக்கிறார்.
 

எந்திரனால் பெரும் நஷ்டம்- சன் பிக்சர்ஸ் மீது குவியும் புகார்கள்!


மிகப் பெரிய வசூலை எட்டியதாக கூறப்பட்ட எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் கூறத் தொடங்கியுள்ளது திரையுலகினரை மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க உருவாகிய படம் எந்திரன். முதலில் இப்படத்தைத் தயாரிப்பதாக இருந்தது ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம்தான். ஆனால் திடீரென படத்தை சன் டிவி பக்கம் கொண்டு போனார் ஷங்கர். ஐங்கரன் பட நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் ஒத்துப் போகவில்லை என்று அப்போது பேசப்பட்டது.

சன் டிவி பக்கம் எந்திரன் வந்ததும் மிகப் பெரிய பொருட் செலவில் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. பணத்தை வாரியிறைத்து படத்தை உருவாக்கி வெளியிட்டனர்.

இந்தியாவிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு இப்படம் வசூலை வாரிக் கொட்டியதாக கூறப்பட்டது. சன் டிவியிலும் படத்திற்கு மிகப் பெரிய பில்ட்டப் கொடுத்து விளம்பரப்படுத்தி வந்தனர்.

இப்படத்தால் அனைத்துத் தரப்பினரும் மிககப் பெரிய பலனையும், லாபத்தையும் அடைந்ததாகவும், தமிழ் சினிமா வரலாற்றில் இப்படி ஒரு வசூல் வந்ததே இல்லை என்றும் கூறி வந்தனர்.

ஆனால் இப்போது எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கூறத் தொடங்கியுள்ளதால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்த 6 தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் படத்தால் ரூ. 1.55 கோடி அளவுக்கு தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக கூறி புகார் கொடுத்துள்ளனர். புகாரில், சன் பிக்சர்ஸ் தலைமை செயலதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்சேனா, அய்யப்பன் ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளனர்.

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஏடிஎஸ்சி திரையரங்கம், திருப்பூரைச் சேர்ந்த கே.எஸ். மற்றும் கஜலட்சுமி திரையரங்குகள், ராமநாதபுரத்தை சேர்ந்த ரமேஷ் தியேட்டர், ராஜபாளையம் ஆனந்த், பழனி சினிவள்ளுவர் ஆகிய திரையரங்குகளின் உரிமையாளர்கள் தனித்தனியே புகாரை அளித்துள்ளனர்.

அதில்,

எந்திரன் திரைப்படத்தை சதவீத அடிப்படையில் ஒப்பந்தம் செய்து பணத்தை டெபாசிட் செய்து படத்தை பெற்று எங்களது தியேட்டர்களில் வெளியிட்டோம். இந்த படத்தின் மூலம் எங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது. இந்த நஷ்டத்தை கழித்துக் கொண்டு டெபாசிட் பணத்தில் பாக்கியை தர வேண்டும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை அணுகினோம்.

ஆனால் அவர்கள் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. பல முறை கேட்டும் முறையான பதிலையும் சொல்லவில்லை. திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் மூலம் கேட்டபோது இதோ தருகிறோம், அதோ தருகிறோம் என கூறி வேண்டுமென்றே அலைக்கழித்து வந்தனர்.

இதனால் தற்போது திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் நாங்கள் தனிப்பட்ட முறையில் புகார் தெரிவித்துள்ளோம். எங்களுக்கு தர வேண்டிய 1கோடியே 55 லட்சத்து 16,431 ரூபாயை பெற்றுத்தர வேண்டும் என கோருகிறோம்.

இதில், பொள்ளாச்சி ஏடிஎஸ்சி ரூ.40,10 761, திருப்பூர் கே.எஸ். ரூ.10,32,956, கஜலட்சுமி ரூ.28 லட்சம். ராமநாதபுரம் ரமேஷ் ரூ.27,00,016, ராஜபாளையம் ஆனந்த் ரூ.27,98,114, பழனி சினிவள்ளுவர் ரூ.21,83,600 நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்த ஆறு பேரைத் தவிர மேலும் பல தியேட்டர் உரிமையாளர்கள் எந்திரன் பட நஷ்டம் தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எந்திரன் படத்தால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் புகார் கொடுக்கத் தொடங்கியிருப்பது திரையுலகில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
 

ஹாலிவுட்டில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை ஏஞ்சலினா ஜூலி


ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஜெஸிக்கா பார்க்கர் ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளனர்.

பிரபல வர்த்தக இதழான போர்ப்ஸ் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கடந்த 2010 மே முதல் 2011 மே எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, சாரா ஆகியோர் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடம் பெற்றுள்ளனர்.

ஏஞ்சலினா ஜூலி நடித்த சால்ட் மற்றும் தி டூரிஸ்ட் ஆகிய படங்கள் கடந்த ஆண்டு வெளியாகின. இவை உலக அளவில் மிகப் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அந்த படங்களுக்கு ஊதியமாக தலா 138 கோடி ரூபாய் அவர் பெற்றுள்ளார். தற்போது ஏஞ்சலினாவின் ஒரு படத்திற்கான சம்பளம் 140 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோன்று தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்ற சாரா ஜெஸிக்கா பார்க்கர் 138 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளதாக போர்ப்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கு அடுத்த படியாக பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் அனிஸ்டன் 130 கோடி ரூபாய் ஊதியம் பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்ம ஊரில் இப்போதுதான் ஒரு கோடியைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் நமது ஹீரோயின்கள்.. நம்மவர்கள் போக வேண்டிய தூரம் ரொம்ப ரொம்ப ஜாஸ்திதான்...
 

கிசு கிசு - நச்சரிக்கும் ஹீரோயின்... கூல் செய்யும் ஹீரோ...

Kollywood news, bollywood news, hollywood news, Cinema news, movie review, cinema in tamil, tamil cinema news

நச்சரிக்கும் ஹீரோயின்… கூல் செய்யும் ஹீரோ…

7/9/2011 12:18:22 PM

நல்லகாலம் பொறக்குது…
நல்லகாலம் பொறக்குது…

ஒண்ணு எட்டு சைபர் படத்துல நடிச்ச பிரிய ஆனந்த நடிகைக்கு எதிர்பாத்தபடி வாய்ப்பு வரலையாம்… வரலையாம்… அதனால சமூக பணில கவனத்தை செலுத்தறாராம்… குழந்தை தொழிலாளர் ஒழிப்புல தீவிரம் காட்டறாராம்… கால்ஷீட் டைரி ஃப்ரியா இருக்கிறதால சீக்கிரமே நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட போறாராம்… அதுக்காக பார்க்கிற நடிகருங்கிட்டயெல்லாம் நிகழ்ச்சிக்கு வரணும்னு நச்சரிக்கிறாராம்… இதனால நடிகையை பார்த்தா ஹீரோங்க எஸ்ஸாயிடறாங்களாம்… ஆயிடறாங்களாம்…

அகராதியான படத்தை சாண்டல்வுட்ல ரீமேக் பண்றாங்கன்னு சிலந்தி ஹீரோயினுக்கு தகவல் வந்துச்சாம்… வந்துச்சாம்… உடனே வாரி சுருட்டிகிட்டு எழுந்தவரு, அந்த சான்ஸ் வேற யாருக்கும் போகாம இருக்கறதுக்காக ரொம்ப டிரை பண்ணினாராம்… அதுக்கு கை மேல பலன் கிடைச்சிருக்காம்… வாய்ப்ப வளைச்சுபோட்டு நினைச்சபடி ஹீரோயினாயிட்டாராம்… ஆயிட்டாராம்…

பசங்க ஹீரோவுக்கு எதிர்பாத்தபடி படங்கள் ஹிட்டாகலையாம்… ஆகலையாம்… அடுத்து நடிக்கற பீரியட் படமாவது ஹிட்டாகணும்னு வேண்டிக்கிறாராம்… இதுல சறுக்கினா, அப்புறம் பின்னுக்கு தள்ளிடுவாங்கன்னு கூட இருக்கறவங்க எச்சரிக்கை பண்றதால,, 'பீரியட் படம்தான் நான் நடிக்கற படத்துலயே முக்கிய படம். இனிமே இப்படியொரு படம் கிடைக்காது'ன்னு டைரக்டருக்கு ஐஸ்மேல ஐஸ் வச்சி கூல்படுத்தறாராம்… கூல்படுத்தறாராம்…

 

நடிகைக்கு இமேஜ் தேவை!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

நடிகைக்கு இமேஜ் தேவை!

7/9/2011 12:16:55 PM

பாவனா கூறியது: தமிழ், மலையாளம், கன்னட படங்களில் நடிக்கிறேன். மலையாளத்தில் இமேஜ் பற்றி கவலை கிடையாது. நல்ல படங்கள் அமைந்ததால் கவனம் செலுத்துகிறேன்.  கோலிவுட், டோலிவுட்டில் ஹீரோக்களுக்கு இமேஜ் முக்கியம். அதுபோல் நடிகைகளுக்கும் இமேஜ் தேவைப்படுகிறது. நடிகையாக அடியெடுத்து வைத்தபோது கிளாமராக நடிக்கக்கூடாது என்றுதான் எண்ணினேன். ஆனால் சில படங்களில் அப்படி நடிக்க வேண்டி இருந்தது. தவிர்க்க முடியவில்லை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. தமிழ், தெலுங்கில் கிளாமர் வேடங்களில் நடித்ததால் கிளாமர் இமேஜ் இருந்தது. மலையாள படங்களில் அப்படியில்லை. தமிழில் 'அசல்' படத்துக்கு பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தது. எல்லாம் ஒரே பாணியிலிருந்ததால் ஏற்கவில்லை. ரசிகர்கள் என்னை இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள். அதற்காக நன்றி. அர்த்தமுள்ள வேடங்களாக வந்தால் தமிழில் நடிப்பேன்.

 

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் "சின்னக்குயில்" சித்ரா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மீண்டும் இசை பயணத்தை தொடங்கினார் ‘சின்னக்குயில்’ சித்ரா!

7/9/2011 12:14:08 PM

தனது மகள் இறந்த சோகத்தில் சில மாதங்களாக பின்னணி பாடாமல் இருந்த சித்ரா, மீண்டும் திரையுலகிற்கு திரும்பியுள்ளார். Ôபூவே பூச்சூட வாÕ படத்தில் `சின்னக்குயில் பாடும் பாட்டுக் கேட்குதா…' எனப் பாடி சிறியவர்கள் முதல் பெரியவர் வரை அனைவரையும் தனது இதமான குரலால் ஈர்த்தவர் பாடகி சித்ரா. இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரால் திரையுலகுக்கு அறிமுகப்படுத் தப்பட்டவர். பூர்வீகம் கேரளா என்றாலும் தமிழ் சினிமா மூலம் தேசிய அளவில் பிரபலமானார். இதுவரை 15 ஆயிரம் பாடல்களைப் பாடி, ஆறு முறை தேசிய விருதுகளையும் தட்டி வந்துள்ளார்.

தனது பாடல்களால் மக்களை மகிழ்வித்த சித்ரா, மிகப்பெரிய சோகத்தை சில மாதங்களுக்கு முன் சந்தித்தார். அவரது அன்பு மகள் நந்தனா துபாயில் நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். சித்ராவால் இந்த இழப்பை தாங்க முடியவில்லை. பாடுவதையே நிறுத்தினார். பல வாய்ப்புகள் வந்தும் பாட மறுத்து வந்தார். இந்நிலையில், இப்போது மலையாளத்தில் வெளியாகும் ஒரு படத்தில் பாட சம்மதித்தார். `இஷ¢டம் + ஸ்நேகம் = அம்மாÕ என்ற படத்துக்காக ஒரு பாடல் பாடும் வாய்ப்பு வந்ததும் அவர் ஏற்றுக்கொண்டார். இது ஒரு தாய் தன் மகள் மீது கொண்டிருக்கும் பாசத்தை சொல்லும் பாடல். எம்.ஜி. ஸ்ரீகுமார் இசையில் அந்தப் பாடல் சமீபத்தில் சென்னையிலுள்ள ரெக்கார்டிங் தியேட்டரில் பதிவானது. பாடிக்கொண்டு இருக்கும்போதே தன்னையும் மீறி வந்த அழுகையை சித்ராவால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் கதறி அழுதுவிட்டார். அப்போது அங்கிருந்தவர்கள் கண் கலங்கினர். இயக்குனர், இசையமைப்பாளர் சித்ராவை தேற்றினார்கள். Ôஇப்போதுதான் அவர் பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இனி சினிமாவில் தொடர்ந்து அவர் பாடுவார்Õ என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தன.

 

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

வைரமுத்து பிறந்தநாள் சூரியன் எஃப்.எம். கவிதை போட்டி!

7/9/2011 12:09:46 PM

கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு, சூரியன் எஃப்.எம் கவிதை போட்டியை நடத்துகிறது. 'வைரத்தின் நிழல்கள்' என்ற இந்தப் போட்டி, ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது. நேயர்கள் 'பூமியை வாழவிடு' என்ற தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்ப வேண்டும். சிறந்த கவிதைகளை எழுதியவர்களுக்கு வைரமுத்து பரிசு வழங்கி கவுரவிக்கிறார். கவிதைகளை அனுப்ப வேண்டிய முகவரி: 'வைரத்தின் நிழல்கள்', சூரியன் எஃப்.எம், 73, முரசொலி மாறன் டவர்ஸ், மெயின் ரோடு, எம்.ஆர்.சி நகர், சென்னை-28. வைரமுத்துவின் பிறந்த நாள் விழாவை, கவிஞர்கள் திருநாளாக, வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகிறது. இந்தாண்டு, வரும் 13-ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கொண்டாடுகிறது. இதில், மலேசிய கவிஞர்கள் சி.மா.இளங்கோ, வே.ராஜேஸ்வரி ஆகியோருக்கு வைரமுத்து விருது வழங்குகிறார். விழாவுக்கு மலேசிய அமைச்சர் சுப்ரமணியம், கூட்டுறவு காவலர் டான்ஸ்ரீ சோமசுந்தரம், முன்னாள் மத்திய அமைச்சர் டத்தோ சுப்ரமணியம் முன்னிலை வகிக்கின்றனர். மலேசிய அரசின் கூட்டமைப்புப் பிரதேசம், நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் தலைமை தாங்குகிறார்.

 

தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தமிழில் கவனம் செலுத்தாதது ஏன்?

7/9/2011 12:08:26 PM

'இந்த வருடம் 3 தெலுங்கு படங்களில் நடிக்கிறேன். அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன்' என்றார் தமன்னா. அவர் மேலும் கூறியதாவது: தனுஷுடன் நான் நடித்துள்ள 'வேங்கை' ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் எனது நடிப்பை எல்லோரும் பாராட்டுகிறார்கள். தனுஷுடன் நான் நடித்துள்ள இரண்டாவது படம் இது. ஏற்கனவே 'படிக்காதவன்' படத்தில் நடித்திருந்தேன். சினிமா துறையில் எனக்கு நண்பர்கள் என்று சிலர்தான் இருக்கிறார்கள். அதில் தனுஷ் ஒருவர். 'வேங்கை'யில் பாடல் காட்சிகளில் எங்கள் கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள். தமிழில் அடுத்து படங்கள் இல்லையே என்கிறார்கள். தற்போது தெலுங்கில் 3 படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை. இந்தப் படங்களுக்குப் பிறகு அடுத்த வருடம் தமிழில் கவனம் செலுத்துவேன். இவ்வாறு தமன்னா கூறினார்.




 

செப்டம்பரில் ராணா ஷூட்டிங் : தீபிகாவிடம் பேசினார் ரஜினி!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

செப்டம்பரில் ராணா ஷூட்டிங் : தீபிகாவிடம் பேசினார் ரஜினி!

7/9/2011 12:00:15 PM

சிங்கப்பூரில் இருந்து தீபிகா படுகோனிடம் பேசிய ரஜினிகாந்த், விரைவில் 'ராணா' ஷூட்டிங் தொடங்கும் என்று கூறியுள்ளார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, அங்குள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார் ரஜினிகாந்த். உடல்நிலை குணமாகிவரும் ரஜினி, 'ராணா' படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனுக்கு கடந்த இரு தினங்களுக்கு முன் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, 'உடல் குணமாகிவருகிறது. விரைவில் படத்தின் ஷூட்டிங் தொடங்கும். சொன்ன நேரத்தில் ஷூட்டிங் ஆரம்பிக்காவிட்டாலும் விரைவில் நல்லபடியாக தொடங்கும். உடனடியாக சென்னைக்கு திரும்பமுடியவில்லை. தனிமையாக இருக்க வேண்டும் என்பதால் சிங்கப்பூரிலேயே இருக்கிறேன்' என்று கூறியுள்ளார் ரஜினி.

இதை உறுதிபடுத்திய தீபிகா, ரஜினியுடன் பேசியது இனிமையான அனுபவம். அவருடன் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளும் தினத்தை ஆவலாக எதிர்பார்க்கிறேன்' என்று கூறியுள்ளார். 'ராணா' படத்தின் இணை தயாரிப்பாளர் டாக்டர் முரளி மனோகரிடம் கேட்டபோது, 'மீண்டும் ஷூட்டிங் ஆரம்பிப்பது பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம். செப்டம்பரில் கண்டிப்பாக ஷூட்டிங் தொடங்கும்' என்றார். 'ரஜினியின் உடல்நிலை பற்றி வந்த வதந்திகள் அவரை பாதித்துள்ளது. அதை போக்க நினைக்கும் ரஜினி, அதற்காகவே விரைவில் ஷூட்டிங்கில் பங்கேற்க நினைக்கிறார். இதன் காரணமாகத்தான் தீபிகாவிடமும் ரஜினி பேசியுள்ளார்' என்று 'ராணா' பட வட்டாரங்கள் தெரிவித்தன.

 

ஜீவிதா, ராஜசேகருக்கு ரூ. 500 அபராதம்!


கோர்ட் அனுப்பிய சம்மனுக்குப் பதிலளிக்காத நடிகர் ராஜசேகர் மற்றும் அவரது மனைவி நடிகை ஜீவிதாவுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

ஆந்திராவின் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள 9வது மாஜிஸ்திரேட் கோர்ட் சமீபத்தில் ஜீவிதா, ராஜசேகருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. சிரஞ்சீவியின் கண் மற்றும் ரத்த வங்கி குறித்து அவதூறான கருத்துக்களைக் கூறியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இருவரையும் நேரில் ஆஜராகுமாறு கூறி ஜீவிதா, ராஜசேகருக்கு கோர்ட் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் இருவரும் வரவில்லை. இதையடுத்து கடந்த ஜூன் 27ம் தேதி இருவருக்கும் தலா ரூ. 500 அபராதம் விதித்து, நேரில் ஆஜராக வேண்டும் இல்லாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று மாஜிஸ்திரேட் எச்சரித்திருந்தார்.

இதையடுத்து நேற்று ஜீவிதாவும், ராஜசேகரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். ரூ. 500 அபராதத்தைக் கட்டினர். இதையடுத்து வழக்கு ஆகஸ்ட் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
 

காஜலின் 'வெள்ளை' மனசு!


ஒவ்வொருவருக்கும் ஒரு சென்டிமென்ட் இருக்கும். காஜல் அகர்வாலுக்கு வெள்ளைதான் சென்டிமென்ட் கலராம்.

எந்த விஷயத்தை ஆரம்பித்தாலும் அப்போது வெள்ளை நிறம் இருப்பது போலப் பார்த்துக் கொள்வாராம் காஜல்.

எந்தப் படத்தின் ஷூட்டிங்காக இருந்தாலும் முதல் காட்சியின்போது வெள்ளை நிற சுடிதாரில்தான் வருவாராம். அப்போதுதான் அந்தப் படம் சிறப்பாக ஓடி பெரும் வெற்றி பெறும் என்பது அவரது நம்பிக்கை.

தமிழிலும், தெலுங்கிலும் உலா வந்த காஜல் அகர்வால் தற்போது இந்தியிலும் தனது கலைச் சேவையை விரிவுபடுத்தியுள்ளார். தமிழில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற சிங்கம் படத்தை அதே பெயரில் அஜய் தேவ்கன் நடிக்க ரீமேக் செய்துள்ளனர். தமிழில் அனுஷ்கா நடித்த வேடத்தில் காஜல் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கின்போதும் கூட முதல் காட்சியில் வெள்ளை நிற சல்வார் கமீஸ் அணிந்துதான் நடித்தாராம் காஜல்.

சரி, பாலிவுட் விஜயம் எப்படி இருக்கிறது என்று கேட்டால், நீண்ட நாள் காத்திருப்பு இது. இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. இருப்பினும் காத்திருப்பு வீணாகவில்லை. அருமையான கதை, அட்டகாசமான படம். எனக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது என்றார் காஜல்.

எல்லாவற்றிலும் வெள்ளை இருப்பது பார்த்துக் கொள்ளும் காஜல், சம்பளத்தையும் வெள்ளையாகத்தானே வாங்குறீங்க..?
 

பிராச்சி @ பிரச்சினை தேசாய்!


பிராச்சி தேசாயால் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளது தடையறத் தாக்க திரைப்பட குழு. படத்தைத் தொடர முடியாமல் பெரும் தவிப்புக்குள்ளாகி விட்ட இக்குழுவினர் தற்போது பிராச்சியை நீக்கி விட்டு மமதா மோகன்தாஸை நாயகியாக்கியுள்ளனர்.

அப்படி என்ன செய்து விட்டார் பிராச்சி?. மகிழ் திருமேனி இயக்கும் இப்படத்தில் நடிக்குமாறு பிராச்சி தேசாயை அணுகியுள்ளனர். பெரும் சம்பளம் கேட்டார் பிராச்சி. அதற்கும் ஓ.கே. சொல்லி புக் செய்துள்ளனர். மார்ச் 7ம் தேதி படப்பிடிப்பு தொடங்கியது. பிராச்சியும் வந்தாராம். ஆனால் படப்பிடிப்பில் பங்கேற்காமல், மும்பைக்குக் கிளம்பிப் போய் விட்டார். அப்பாவுக்கு உடல் நலம் சரியில்லை என்பது அவர் சொன்ன காரணம். அதற்குப் பிறகு வரவே இல்லையாம்.

தொடர்பு கொண்டு கேட்டபோது இப்படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று கூறி விட்டாராம். தற்போது இந்திப் படம் ஒன்றில் அவர் புக் ஆகியுள்ளதாக மகிழ் திருமேனிக்குத் தகவல் வந்துள்ளதாம்.

இதனால் பெரும் ஏமாற்றமாகியுள்ளது தடையறத் தாக்க படக் குழு. பெரும் தொகையை அட்வான்ஸ் ஆக வாங்கிக் கொண்டு இப்படி பிராச்சி டேக்கா கொடுத்திருப்பது மிகவும் தவறான செயல் என்று கூறியுள்ள படத் தயாரிப்பாளர், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளாராம். ஆனால் தயாரிப்பாளர் சங்கமோ ஏகப்பட்ட உள்நாட்டுக் குழப்பத்தில் இருப்பதால் இப்போதைக்கு பிராச்சி குறித்து விசாரிக்காது என்று கூறப்படுகிறது.

பிராச்சி பிரச்சின ஒருபக்கம் இருந்து வரும் நிலையில் தற்போது அவருக்குப் பதில் புதிய நாயகியை கண்டுபிடித்துள்ளனர். அவர் மமதா மோகன்தாஸ். முதலில் இவரைத்தான் நாயகியாக்குவது குறித்து யோசித்துள்ளனர். பின்னர்தான் பிராச்சி பக்கம் திரும்பினார்கள். தற்போது பிராச்சி பிரச்சினையாகவே மீண்டும் மம்தாவை நாடியுள்ளனராம்.

இப்படத்தில் பெமினா மிஸ் இந்தியா பட்டம் வென்ற ராகுல்ப்ரீத் சிங்கும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.நாயகனாக அருண் விஜய் நடிக்கிறார். திங்கள்கிழமையன்று மம்தா மோகன்தாஸ் படப்பிடிப்பில பங்கேற்கிறாராம்.

அப்புறம் என்ன, இனி தடையறத் தாக்க வேண்டியதுதானே...!
 

ஸ்வீட்ஹார்ட் 'நீல்', டார்லிங் 'சோனம்': டுவிட்டரில் பாராட்டு மழை


டுவிட்டரில் நடிகர் நீல் நிதின் முகேஷ், நடிகை சோனம் கபூரை டார்லிங் என்று சொல்ல பதிலுக்கு சோனம் நீலை ஸ்வீட்ஹார்ட் என்று செல்லமாக அழைக்க பாலிவுட் நடப்பது அறியாது விழி்க்கிறது.

நீல் நிதின் முகேஷும், சோனம் கபூரூம் சேர்ந்து அப்பாஸ்-மஸ்தானின் பிளேயர்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் ஒருவரின் நடிப்பைப் பற்றி இன்னொருவர் டுவிட்டரில் புகழந்து தள்ளியுள்ளனர். அந்த ஜில் ஜில் பேச்சு இதோ...

சோனம் டுவீட்:

நேற்று நீல் நிதின் முகேஷுடன் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. நடனம் ஆடும்போது என் காலில் மிதித்தபோதிலும், அவர் ஒரு ஸ்வீட்ஹார்ட்.

நீல் டுவீட்:

என் டார்லிங் சோனம் கபூரூடன் படபிடிப்பு அருமையாக நடந்தது. நான் அவருக்கு பல தொல்லைகள் கொடுத்தேன். அவர் அருமையானவர்.

பிளேயர்ஸ், தி இத்தாலியன் ஜாப் என்னும் ஆங்கிலப் படத்தின் ரீமேக் ஆகும். இதில் இவர்கள் இருவர் தவிர அபிஷேக் பச்சன், பிபாஷா பாசு, பாபி தியோல், ஓமி வைத்யா மற்றும் சிக்கந்தர் கேர் ஆகியோரும் நடிக்கின்றனர்.