லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் குந்த்ராவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டவர் ஷில்பா. திருமணத்திற்குப் பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராக செயல்பட்டு வருகிறார். சினிமாவில் நடிக்க முன்பு போல இப்போது அவருக்கு வாய்ப்புகள் வரவில்லை. சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை ஷில்பா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் நடிப்புக்கு குட்பை சொல்லியுள்ளார் ஷில்பா. இதுகுறித்து அவர் கூறுகையில், இதுதான் நடிப்புக்கு டாடா சொல்ல சரியான நேரம். திருமணத்திற்குப் பின்னர் என்னால் பல பொறுப்புகளில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் ஷில்பா.
தற்போது தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை நிராகரித்து வருகிறாராம் ஷில்பா. ஷில்பாவைத் தேடி ஹீரோயின் வாய்ப்புகள் அதிகம் வருவதில்லையாம். குத்துப்பாட்டுக்கு ஆடுவதற்கும், கெஸ்ட் ரோலில் நடிப்பதற்கும்தான் நிறைய வாய்ப்பு வருகிறதாம்.
இப்போது சினிமாவை விட்டு முழுமையாக விலகி விட முடிவு செய்துள்ள ஷில்பா, ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகத்திலும், தான் மேற்கொண்டு வரும் பிற தொழில்களிலும் முழுக் கவனத்தை செலுத்தப் போகிறாராம்.