விடிய விடிய கடலை போடும் ரப்பர் பாடியும்... "லிங்கா" லேடியும்!

மும்பை: ரப்பர் பாடி நடிகர்-இயக்குனரும், ஸ்டைல் நடிகரின் நாயகி என்று பெருமையாக பேசிய நடிகைக்கும் இடையே நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து வருகிறதாம்.

நம்பர் நடிகையுடன் காதல் முறிந்த பிறகு மும்பையில் செட்டிலாகிவிட்டார் அந்த ரப்பர் பாடி நடிகர்-இயக்குனர். பாலிவுட் நடிகர்கள் அவர் இயக்கத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் நடிகருக்கும், அவர் இயக்கத்தில் நடித்த வாரிசு நடிகைக்கும் இடையே காதல் என்று பலகாலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

விடிய விடிய கடலை போடும் ரப்பர் பாடியும்...

இந்நிலையில் இயக்குனருக்கும், கன்னட நடிகை ஒருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகின. ஆனால் வாரிசு நடிகைக்கும், ரப்பர் பாடிக்கும் இடையே தான் நாளுக்கு நாள் நெருக்கம் அதிகரித்து வருகிறதாம்.

இருவரும் நள்ளிரவில் சந்திக்கிறார்களாம். அவ்வாறு சந்திக்கையில் இரவு நேரம் செல்வது கூடத் தெரியாமல் விடிய விடிய பேசுகிறார்களாம். வாரிசு நடிகையுடன் பெரும்பாலும் பாலிவுட்டின் சீனியர் ஹீரோக்கள் தான் நடித்து வருகிறார்கள்.

இளம் ஹீரோக்கள் அவருடன் ஜோடியாக நடிக்க மறுக்கிறார்கள். அவருடன் நடித்தால் நாங்கள் அவரின் தம்பி போல இருப்போம், வேறு நடிகைய ஒப்பந்தம் செய்யுங்கள் என்கிறார்களாம் இளம் ஹீரோக்கள்.

எந்த ஹீரோ என்ன கூறினால் எனக்கென்ன, நான் இப்படித் தான் இருப்பேன் என கூறும் துணிச்சலானவர் அந்த நடிகை.

 

பத்து எண்றதுக்குள்ள... ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!- சமந்தா

சமந்தாவுக்கு தமிழில் பெரிய ஹிட் ராசி இல்லை என்றாலும், தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் வந்தபடிதான் உள்ளன.

நீதானே என் பொன்வசந்தம், அஞ்சான் என சமந்தா நடித்த பெரிய படங்கள் சரியாகப் போகாத நிலையில், கத்தி ஓரளவு அவருக்குக் கைகொடுத்தது.

பத்து எண்றதுக்குள்ள... ரொம்பவே கஷ்டப்பட்டுட்டேன்!- சமந்தா

அதைத் தொடர்ந்து விக்ரம் ஜோடியாக பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா, தனுஷ் ஆகியோரது படங்களிலும் இவர்தான் நாயகி.

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில்தான், தான் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளதாக சமந்தா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "விஜய் மில்டன் இயக்கிய 'கோலி சோடா' படம் என்னை மிகவும் கவர்ந்தது. அவருடைய இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

நெடுஞ்சாலையில் நடைபெறும் விறுவிறுப்பான சம்பவங்களை திரைக்கதையாக கொண்ட படம், 'பத்து எண்றதுக்குள்ள.' இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களில் மிகவும் கஷ்டப்பட்டு நடித்த கதாபாத்திரம், இதுதான்," என்கிறார்.

 

‘நோ ப்ராப்ளம்’... கன்னடத்தில் சிவ்ராஜ் குமாருக்காக ‘கொலைவெறி’ பாடிய தனுஷ்!

சென்னை: நடிகர் தனுஷ் கன்னடப் படமொன்றில் பாடல் பாடியுள்ளார். அப்பாடலின் வரி, ‘நோ ப்ராப்ளம்' எனத் தொடங்குகிறது.

தேசிய விருது வாங்கிய நடிகர் தனுஷ், சிறந்த பாடகர், பாடலாசிரியர் என்பது அனைவருக்கும் தெரியும். ஏற்கனவே, அவர் தனது புதுக்கோட்டையிலிருந்து சரவணன், தேவதையைக் கண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட பலப் படங்களில் பாடியுள்ளார்.

‘நோ ப்ராப்ளம்’... கன்னடத்தில் சிவ்ராஜ் குமாருக்காக ‘கொலைவெறி’ பாடிய தனுஷ்!

3 என்ற படத்தில் இவர் பாடிய ‘ஒய் திஸ் கொலைவெறி' பாடல் பட்டித் தொட்டியெங்கும் சென்றது. அதேபோல், அனேகன் படத்தில் இடம்பெற்ற ‘டங்காமாரி' பாடலும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் விரும்பப் படும் பாடலாக உள்ளது.

இதனால், தொடர்ந்து மற்ற நடிகர்களின் படங்களில் பாடும் வாய்ப்பும் தனுஷிற்கு வந்த வண்ணம் உள்ளது. அவற்றில் தமிழ்ப்படங்கள் மட்டுமின்றி, பிற மொழிப்படங்களும் அடக்கம்.

நடிப்பில் பிசியாக இருப்பதால், அவற்றில் குறிப்பிட்ட பாடல்களை மட்டுமே தேர்வு செய்து தனுஷ் பாடி வருகிறார். இந்நிலையில், கன்னட படத்திற்காக பாடல் ஒன்றை அவர் பாடியுள்ளார்.

‘நோ ப்ராப்ளம்’... கன்னடத்தில் சிவ்ராஜ் குமாருக்காக ‘கொலைவெறி’ பாடிய தனுஷ்!

கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவ்ராஜ் குமார், வஜ்ரகயா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு தனுஷ் பாடினால் நன்றாக இருக்கும் என்று கருதி, அவரை பாட வைத்துள்ளனர்.

‘நோ பிராபிளம்' எனத் தொடங்கும் இந்தப் பாடல் அனைவரும் ரசிக்கும் வண்ணம் இருக்கும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 

‘ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே’... தான் படித்த பள்ளியிலேயே ஷூட்டிங் நடத்திய தனுஷ்!

சென்னை: தனது புதிய படத்தின் படப்பிடிப்பை தான் படித்த பள்ளியிலேயே நடத்தியுள்ளார் நடிகர் தனுஷ்.

வேலையில்லா பட்டதாரி பட வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் வேல்ராஜ் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் தனுஷின் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்துள்ளனர்.

இப்படத்தின் முதல்பாதி படப்பிடிப்பு நடந்து முடிந்து விட்டது. இரண்டாம் பாதி படப்பிடிப்பு தனுஷ் படித்த பள்ளியில் நடைபெற்றது.

தான் படித்த பள்ளியிலேயே படப்பிடிப்பு நடைபெறுவது குறித்த தனது மகிழ்ச்சியை, தனது டுவிட்ட ர் பக்கத்தில் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது பள்ளி நண்பரும், இப்புதிய படக்குழுவைச் சேர்ந்தவருமான நண்பருடன் சேர்ந்து பள்ளி வளாகத்தில் எடுத்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

மேலும், ‘இந்தப் பள்ளியில் தான் நான் எல்.கே.ஜி. முதல் 10ம் வகுப்பு வரைப் படித்தேன்' என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இப்புதிய படத்தினை தனுஷின் ஒண்டர்பார் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். இது குறித்து தனுஷ் மற்றும் அனிருத் இருவரும் செல்ஃபி வீடியோ போஸ்ட் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

ரூ.100+ கோடியில் பிரமாண்டமாக தயாராகும் விஜய்யின் 'புலி'

சென்னை: விஜய் நடித்து வரும் புலி படம் ரூ. 118 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறதாம்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புலி படம் பற்றி தான் பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படத்தில் ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா என இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் ஸ்ருதிக்கு அதிக முக்கியத்துவம் என்று கூறப்படுகிறது.

ரூ.100+ கோடியில் பிரமாண்டமாக தயாராகும் விஜய்யின் 'புலி'

ஹன்சிகா பாவம் ஒருதலையாக விஜய்யை காதலித்துவிட்டு செல்வாராம். புலி படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் தலைக்கோணம் பகுதியில் நடந்து வருகிறது. படக்குழுவினர் அடர்ந்த காட்டுப் பகுதியில் காட்சிகளை படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் படத்தின் பட்ஜெட் பற்றி தெரிய வந்துள்ளது. ரூ.118 கோடிக்கும் மேல் செலவு செய்து படத்தை எடுக்கிறார்கள். புலியை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

ஸ்ருதி, ஹன்சிகா ஆகிய இருவருக்கும் தமிழ் தவிர தெலுங்கிலும் நல்ல மார்க்கெட் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

சூர்யாவின் மாஸ் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

சூர்யா நடிக்க ஸ்டுடியோ கிரீன் தயாரித்துள்ள மாஸ் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போய்விட்டது.

மே 1-ம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்ட இந்தப் படம், இப்போது மே 15-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் மாஸ் ரிலீஸ்.. அதிகாரப்பூர்வ தேதி அறிவிப்பு

வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் திட்டமிட்டபடி நடந்து முடிந்தது. விரைவில் பாடல்களும் வெளியாக உள்ளன.

படத்தை மே 1-ம் தேதி வெளியாகப் போவதாக ஞானவேல் ராஜா முதலில் அறிவித்திருந்தார். அப்போதுதான் கமல் ஹாஸன் நடித்த உத்தம வில்லன் படமும் அதே மே 1ம் தேதி வெளியாகும் என்று அறிவித்தனர்.

இதனால் படத்தை 15 நாட்கள் தள்ளிப்போட்டுள்ளனர் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தினர்.

 

ஜாம்பவான்கள் ஜகா வாங்க... கமலுடன் தில்லாக மோதும் ரஜினி மகள்!

உத்தம வில்லன் ரிலீசாவதால், அதனுடன் மோதத் தயங்கி ஜாம்பவான்களே ஜகா வாங்கினாலும், மே 1-ம் தேதி தன் வை ராஜா வை படத்தை வெளியிடும் ஐஸ்வர்யா தனுஷ் மாற்றிக் கொள்ளவில்லை.

முதலில் ஏப்ரல் 17-ம் தேதிதான் உத்தம வில்லனை வெளியிடுவதாக இருந்தார்கள். ஆனால் சென்சார் ஆவதில் சிக்கல் இருந்ததால் மே 1-ம் தேதிக்கு தள்ளிப் போட்டார்கள்.

இதனால் ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2 படங்கள் சிக்கலின்றி வெளியாகிவிட்டன.

ஜாம்பவான்கள் ஜகா வாங்க... கமலுடன் தில்லாக மோதும் ரஜினி மகள்!

மே 1-ம் தேதியன்று மாஸ், புறம்போக்கு என்கிற பொதுவுடைமை, வை ராஜா வை படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கமல் படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால், மாஸ் மற்றும் புறம்போக்கு மே 15-ம் தேதிக்கு தள்ளிப் போய்விட்டன.

ஆனால் ஐஸ்வர்யா தனுஷ் மட்டும் ரிலீஸ் தேதியை மாற்றிக் கொள்ளவில்லை. ஏற்கெனவே அறிவித்தபடி மே 1-ம் தேதி உத்தம வில்லனுடன் மோதுகிறது வை ராஜா வை!

 

சூர்யாவுடன் மோதுகிறார் ஜெயம் ரவி!

உத்தம வில்லன் வருதே... போட்டி ஹெவியா இருக்குமே என்று மே 15-க்குத் தள்ளிப் போனது சூர்யாவின் மாஸ்.

ஆனால் சோதனை பாருங்கள்... அந்தத் தேதியிலும் ஏக மோதல்கள்.

சூர்யாவுடன் மோதுகிறார் ஜெயம் ரவி!

அன்றுதான் தன் படம் புறம்போக்கை வெளியிடுகிறார் ஜனநாதன். ஜோதிகா நடித்துள்ள 36 வயதினிலேவும் அன்றுதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு படமும் அன்று களத்தில் குதிக்கிறது. அதுதான் ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட்.

லஷ்மன் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா மற்றும் பூனம் பஜ்வா நடித்துள்ளனர். மேலும் இவர்களுடன் வம்சி கிருஷ்ணா, கணேஷ் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். டி இமான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்து இறுதிக்கட்ட பணிகளையும் படக்குழுவினர் முடித்து விட்டனர். மே 15ம் தேதி படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆக மே 15- ம் தேதி 5 படங்கள் தயாராக நிற்கின்றன. கடைசி நேரத்தில் எந்தெந்த படங்கள் பின்வாங்கப் போகின்றனவோ!

 

பழைய ஃபார்முக்கு திரும்பினார் மணிரத்னம்..'ஓ காதல் கண்மணி'க்கு ரசிகர்கள் பாராட்டு!

சென்னை: ஜாம்பவான் இயக்குநர், மணிரத்னத்தின், ஓ காதல் கண்மணி படம் குறித்து ரசிகர்கள் நேர்மறை விமர்சங்களை கூறிவருகின்றனர். மணிரத்னம் தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள்.

மவுனராகம், அக்கினி நட்சத்திரம், நாயகன், தளபதி, ரோஜா, பாம்பே, அலைபாயுதே போன்ற தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த படைப்புகளை பிரசவித்த இயக்குநர் மணிரத்னம், மீண்டும் காதல் கதையோடு களமிறங்கியுள்ள படம், ஓ காதல் கண்மணி. துல்கர் சல்மான், நித்யா மேனன் காம்போவின் கெமிஸ்டிரியை, டிரைலர்களில் பார்த்த ரசிகர்கள் இது மற்றுமொரு அலைபாயுதேவாகத்தான் இருக்கும் என்று கனவு கோட்டை கட்டினர்.

பழைய ஃபார்முக்கு திரும்பினார் மணிரத்னம்..'ஓ காதல் கண்மணி'க்கு ரசிகர்கள் பாராட்டு!

இதனிடையே படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்களின் கமெண்டுகள், வெளிவர ஆரம்பித்துவிட்டன. பெரும்பாலான கமெண்டுகள், மணிரத்னம், தனது பழைய ஃபார்முக்கு வந்துவிட்டதாகவே கூறுகின்றன.

ஏனெனில், அலைபாயுதேவுக்கு பிறகு 15 வருடங்களில் மணிரத்னம் கொடுத்த 5 படங்களில் நான்கு படங்கள் மிக மோசமான தோல்வியை அடைந்தன. அதில், கன்னத்தில் முத்தமிட்டால் மட்டுமே படைப்பு ரீதியாக தப்பியது.  எனவே, கிட்டத்தட்ட, மணிரத்னத்தின், கமர்சியல் தேவைக்கான வாழ்வா, சாவா படமாகவே, ஓ காதல் கண்மணி பார்க்கப்பட்டது. அந்த ஆசிட் டெஸ்டில் மணிரத்னம் பாஸ் ஆகிவிட்டார்.

தற்காலத்து அப்பர்-மிடில் கிளாஸ் இளைஞர்களின் வாழ்க்கை முறையை படமாக்கியுள்ளதன் மூலம், இளைஞர் கூட்டத்தை தன்பக்கம் இழுத்துள்ளார் மணிரத்னம் என்கின்றனர் படம் பார்த்தோர். அதேநேரம், ஏ மற்றும் பி பிரிவு ஆடியன்சைதான் படம் குறி வைத்துள்ளது என்பதும் கருத்தாக உள்ளது. அது மணிரத்னத்தின் வழக்கமான பாணிதான் என்பதால் பாதகமில்லை.

படம் குறித்து, பாசிட்டிவ் ரிவியூக்கள் வர ஆரம்பித்துள்ளதாக, நடிகர் சூர்யா, நடிகை குஷ்பு போன்றோரும் தங்களது டிவிட்டர் தளத்தில் சிலாகித்துள்ளனர்.

ரஹ்மானின் இசையில் வெளியான மெண்டல் மனதில் பாடல் ஏற்கனவே, பட்டிதொட்டியெல்லாம் பட்டையை கிளப்புகிறது. இந்நிலையில், பிசி ஸ்ரீராமுடன் மீண்டும் சேர்ந்துள்ள மணிரத்னம், இப்படத்தில், விஷுவல் கம் இசை ட்ரீட் வைத்துள்ளார். அதிலும், பறந்து செல்லவா பாடல் காட்சியில், ரஹ்மானுக்கும், ஸ்ரீராமுக்கும், யார் பெரியவர் என்ற போட்டியே நடந்துள்ளதாக சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். முதல் பாதியைவிட இரண்டாம் பாதி மேலும் அருமையாக இருப்பதாக மவுத்-டாக்குகள் வந்தவண்ணம் உள்ளன.

முதல் பாதியில் பேட்டின் விளிம்பில் பட்டு பவுண்டரிக்கு பறந்த பந்துகள், இரண்டாம் பாதியில், நடு பேட்டில் நச்சென்று பட்டு சிக்சர்களுக்கு பறக்கின்றனவாம்..ஃபார்முக்கு வந்த மணிரத்னம் என்ற பேட்ஸ்மேனிடமிருந்து..

 

பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

சென்னை: பெப்சி அமைப்புக்கு எதிராக போட்டி சினிமா தொழிலாளர் சங்கத்தை உருவாக்கினார் நடிகர் மன்சூர் அலிகான். இந்த புதிய அமைப்பை வாழ்த்தி தொடங்கி வைத்தார் கங்காரு படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

அதிரடி என்ற படத்தை தயாரித்து இயக்கி வருகிறார் மன்சூர் அலிகான். சமீபத்தில் இதன் படப்பிடிப்பில் பெப்சி தொழிலாளர்கள் பங்கேற்காமல் வெளியேறினர்.

பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

இதனால் நீதிமன்ற உத்தரவு பெற்று வேறு தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட படைப்பாளிகளின் ஒருங்கிணைந்த இந்திய கூட்டமைப்பு (டாப்சி- TOFCII) என்ற பெயரில் புதிய சங்கத்தை துவக்கியுள்ளார்.

இதனை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார் அமைதிப்படை 2, கங்காரு படங்களின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த சங்கத்தில் நடிகர், நடிகைகள், ஒளிப்பதிவாளர்கள், நடன கலைஞர்கள், ஸ்டன்ட் பயிற்சியாளர்கள், கலை இயக்குனர்கள், பாடல் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் ரூ.2 ஆயிரம் செலுத்தி உறுப்பினராகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெப்சிக்கு எதிராக மன்சூர் அலிகானின் டாப்சி: தொடங்கி வைத்தார் சுரேஷ் காமாட்சி!

தொடக்க விழாவில் மன்சூர்அலிகான், ஜே.எம்.ஆரூண், பூவை ஜேம்ஸ், விடுதலை சிறுத்தைகள் வன்னியரசு, தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, திருமலை, ராஜா, தங்கராஜ், கே.பி. குணசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இச்சங்கத்தின் தலைவராக மன்சூர்அலிகான், செயலாளராக சந்திரசேகர், துணைத் தலைவராக லயன் ஆர்.எம்.தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகள், நலத் திட்டங்களை அறிவித்தார் மன்சூர் அலிகான்.

 

ஹாலிவுட்டிலும் அதே கதைத் திருட்டுப் பஞ்சாயத்து!

கோடம்பாக்கத்தில் தயாராகும் பெரும்பாலான படங்களின் மூலம் எது என்று இன்றைய சினிமா ரசிகர்களே அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்ந்து சமூக வலைத்தளங்களில் காயப்போட்டு விடுகிறார்கள். அது எவ்வளவு பெரிய இயக்குநர் அல்லது நடிகரின் படமாக இருந்தாலும்.

இங்குதான் இந்த கதைத் திருட்டுப் பஞ்சாயத்து என்று பார்த்தால், மெகா ஹாலிவுட் படமான அவெஞ்சர்ஸ் இயக்குநர் ஜோஸ் வோடன் மீதும் இதே பஞ்சாயத்து.

வோடன் இதற்கு முன்பு இயக்கிய ‘தி கேபின் இன் தி வுட்ஸ்' படத்தை எழுதி இயக்கினார். பாக்ஸ் ஆபீஸ் பெரிய ஹிட்டடித்த படம் இது.

ஹாலிவுட்டிலும் அதே கதைத் திருட்டுப் பஞ்சாயத்து!

இந்தப் படத்தின் கதை தன்னுடைய 'தி லிட்டில் வைட் டிரிப்' நாவலின் அப்பட்டமான காப்பி என்றும், நாவலில் உள்ளதைப் போல 25 காட்சிகள் படத்தில் இருப்பதாகவும் பிரபல எழுத்தாளர் பீட்டர் கல்லாகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் தனக்கு ஏற்பட்ட இழப்புக்கு ரூ 62.25 கோடி நஷ்ட ஈடு தரவேண்டும் என்றும் கோரி இயக்குநர் ஜோஸ் வோடன் மீது பீட்டர் கல்லாகர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

ரூ 20 கோடி செலவில் 55 கோடியை அள்ளிய காஞ்சனா 2.. அதிரி புதிரி பிஸினஸ்!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா 2 படத்தின் பிஸினஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.

இந்தப் படத்தை நீ நான் என்று முட்டி மோதி வாங்கியுள்ளனர். அட, சிலர் பலத்த சிபாரிசெல்லாம் பெற்று வந்து படத்தை வாங்கியுள்ளனர்.

இந்தப் படத்துக்கு ராகவா லாரன்ஸ் செலவழித்த தொகை ரூ 20 கோடி. ஆனால் இதுவரை ஆகியுள்ள பிஸினஸ் மட்டுமே 55 கோடி ரூபாய்.

ரூ 20 கோடி செலவில் 55 கோடியை அள்ளிய காஞ்சனா 2.. அதிரி புதிரி பிஸினஸ்!

எல்லா ஏரியாவிலுமே நான்கைந்து விநியோகஸ்தர்கள் முட்டி மோதி இந்தப் படத்தை வாங்கியுள்ளனர். அதுமட்டுமல்ல, எம்ஜி எனும் மினிமம் கியாரண்டி முறையில் படத்தை வாங்கியுள்ளனர். இன்றைய நாளில் மினிமம் கியாரண்டியில் லாரன்ஸ் மாதிரி நடிகர்கள் படம் பிஸினஸ் ஆவது மிகப் பெரிய சாதனை.

படத்தின் சேட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமைகள், பிற மாநில உரிமைகள் எல்லாமாக ரூ 55 கோடியை ரிலீசுக்கு முன்பே குவித்திருக்கிறது காஞ்சனா 2.

படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்துள்ளார். சன் பிக்சர்ஸ் பின்னர் அவருடன் இணைந்து கொண்டது. ராம நாராயணனின் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.

 

அப்பாடக்கர் ஜெயம் ரவியின் பல்பு பாட்டு!

எத்தனையோ ஹீரோக்கள் பாடகர்களாக அவதாரம் எடுக்க, தானும் அந்த ரூட்டில் குதித்துவிட்டார் ஜெயம் ரவி.

சுராஜ் இயக்க, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ள அப்பாடக்கர் படத்தில் பாடகராகிவிட்டார் ஜெயம் ரவி.

அப்பாடக்கர் ஜெயம் ரவியின் பல்பு பாட்டு!

இப்படத்திற்காக தமன் பிரபலமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்து வருகிறார். முதலில் முன்னணி இசையமைப்பாளரான இமானை அழைத்து வந்து ஒரு பாடலுக்கு பாட வைத்தார்.

பிறகு சிம்புவை வைத்து ‘குத்து சாங் மா நீ... ஹிட்டு சாங் மா நீ...' என தொடங்கும் குத்துப் பாடலை பாட வைத்தார். இந்நிலையில் தற்போது ஜெயம் ரவியையும் பாடகராக அறிமுகம் செய்துள்ளார்.

ஜெயம் ரவி இப்படத்தில் ‘பல்பு வாங்கிட்டேன் மச்சான் பல்பு வாங்கிட்டேன்...' எனத் தொடங்கும் பாடலை பாடியுள்ளார்.

இந்தப் பாடலை தேவா மற்றும் விவேக்குடன் இணைந்து பாடியுள்ளார் ஜெயம் ரவி. காமெடி கலந்த பொழுது போக்கு படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

 

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதாவை தோற்கடித்த நடிகர் ராஜேந்திர பிரசாத்

ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் சங்கத் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட நடிகை ஜெயசுதாவை 85 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் நடிகர் ராஜேந்திரபிரசாத்.

தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு கடந்த மாதம் 29ஆம்தேதி தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு நடிகை ஜெயசுதாவும், நடிகர் ராஜேந்திர பிரசாத்தும் போட்டியிட்டனர். ஜெயசுதாவுக்கு ஏற்கனவே இச்சங்கத்தில் தலைவராக இருந்த தெலுங்குதேச எம்.பி. முரளிமோகன் ஆதரவு தெரிவித்து இருந்தார்.

தெலுங்கு நடிகர் சங்க தேர்தல்: ஜெயசுதாவை தோற்கடித்த நடிகர் ராஜேந்திர பிரசாத்

ராஜேந்திர பிரசாத்துக்கு நடிகர் சிரஞ்சீவி குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர். அரசியல் ரீதியாக இந்த மோதல் மாறியது. எனவே தேர்தலில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி நடிகர் கல்யாண் ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

நீதிமன்றம் உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிபதி திட்டமிட்டபடி தேர்தலை நடத்தலாம் என்றும் அந்த தேர்தலை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும் ஓட்டு எண்ணிக்கையை நிறுத்தி வைக்கும் படியும் தெரிவித்தார்.

நடிகர் சங்க தேர்தல்

நீதிமன்ற நிபந்தனைபடி கடந்த மாதம் 29ஆம்தேதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கல்யாண் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

ஓட்டு எண்ணிக்கை

நீதிமன்ற தடை நீங்கியதால் தேர்தலில் பதிவான ஓட்டுகள் இன்று எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 702 ஓட்டில் 394 ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இதில் ராஜேந்திர பிரசாத் 85 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

ராஜேந்திரபிரசாத் வெற்றி

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேந்திரன பிரசாத் 237 ஓட்டுகள் பெற்று இருந்தார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஜெயசுதாவுக்கு 152 ஓட்டுகளே கிடைத்தது. செயலாளர் மற்றும் 5 பதவிகளுக்கான தேர்தலிலும் ராஜேந்திரபிரசாத் அணியே வெற்றி பெற்றது.

 

என் ரூம்ல இவ தங்குவா.. நானும் தங்குவேன்.. கல்யாணம் ஆகலை... ஓஹோ.. காதல் கண்மணி!

சென்னை: அலைபாயுதேவில் தாலி கட்டிக் கொண்டு காதலர்கள் தனித்தனியாக வாழலாம் என்று கற்றுக்கொடுத்த இயக்குநர் மணிரத்னம், ஓ காதல் கண்மணி படத்தில், தாலி கட்டாமல் ஒன்றாக வாழலாம் என்று சித்தரித்துள்ளார். இதனால், விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மணிரத்னம் இயக்கத்தில் 2000மாவது ஆண்டில் வெளியாகி, இளைஞர்களிடம் டிரெண்ட் செட்டராக மாறிய திரைப்படம் அலைபாயுதே.

என் ரூம்ல இவ தங்குவா.. நானும் தங்குவேன்.. கல்யாணம் ஆகலை... ஓஹோ.. காதல் கண்மணி!

இப்படத்தின் நாயகிக்கு, நாயகன் ரிஜிஸ்டர் ஆபீசில் வைத்து தாலி கட்டிவிடுவார். ஆனால், காதலர்கள் தங்களது வீடுகளிலேயே தனித்தனியாக வாழ்வார்கள். இந்த படம் ரிலீசான பிறகு, நிறைய காதலர்கள், அந்த பாணியில் தாலி கட்டிக் கொண்டனர். இதனால், ஊடகங்களில் 'அலைபாயுதே' பாணியில் திருமணம் செய்த காதல் ஜோடி என்று தலைப்பு போட்டு செய்தி வெளியிடும் நிலை உருவானது.

இதன்பிறகு தனது வழக்கமான முத்திரையை பதிக்க முடியாமல் இருந்த மணிரத்னம், இதோ, இன்று மீண்டும் ஒரு சர்ச்சை சப்ஜெக்டோட களமிறங்கியுள்ளார் மணிரத்னம். இப்போது தாலியே இல்லாமல் குடித்தனம் நடத்த வைத்துள்ளார் மணிரத்னம்.

திருமணத்தில் விருப்பமில்லாத ஹீரோ, ஹீரோயின்கள், ஒரே வீட்டில் லிவ்விங் டு கெதராக வாழ்வதாக ஓ காதல் கண்மணி படத்தில் காட்டியுள்ளார் மணிரத்னம். அதையும் மிக சாதாரணமாக ஜோடிகள் எடுத்துக்கொள்வதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி தாம்பத்தியமும் அரங்கேறுகிறது.

அலைபாயுதே தாலி பாணியில், வருங்காலத்தில் இதேபோல லிவ்விங் டு கெதர் சர்வ சாதாரணமாக போக, இந்த படம் ஒரு டிரெண்ட் செட்டராக மாற வாய்ப்புள்ளது. இதனாலேயே, படம் எதிர்ப்புக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது. லிவ்விங் டு கெதர் நடக்கவில்லையா, அதைத்தானே காட்டியுள்ளோம் என்று படைப்பாளி கேட்கலாம், ஆனால், எங்கோ ஓரிரு இடங்களில் நடப்பதை, பொதுவில் காண்பித்தால், அது பெரும்பாலானோரின், குற்ற உணர்ச்சியை அறுந்து போக செய்யும் என்பதை படைப்பாளிகள் உணர வேண்டாமா?

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, ஓ காதல் கண்மணியின் ஒரு டயலாக் இதோ:

"அப்பா, என் ரூம்ல இவ தங்கறா"

"அப்போ நீ?"

"நானும் அங்கயேதான் தங்குவேன்"

"ஓ...மேரேஜே பண்ணியாச்சா?"

"இல்ல..அதுல நம்பிக்கை இல்ல"

 

'தல' பிறந்தநாளில் ரிலீஸ் இல்லை: ஜகா வாங்கும் 'வா டீல்'

சென்னை: மே மாதம் 1ம் தேதி பல படங்கள் ரிலீஸ் ஆவதால் வா டீல் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது என நடிகர் அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குனர் சிவஞானம் இயக்கியுள்ள படம் வா டீல். இந்த படத்தில் அருண் விஜய் ஜோடியாக கார்த்திகா நாயர் நடித்துள்ளார். ஆக்ஷன், காமெடி, காதல் கலந்த வா டீல் படத்தை ஃபெதர் டச் என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது.

இந்த படம் மே மாதம் 1ம் தேதி ரிலீஸாகும் என்று அருண் விஜய் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அஜீத்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி பல படங்கள் வெளியாக உள்ளன. இதனால் அருண் விஜய் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

காலை வணக்கம்! மே 1ம் தேதி பல படங்கள் ரிலீஸாவதால் வா டீல் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்களை உங்களுக்கு தெரிவிப்பேன் என அவர் கூறியுள்ளார்.