மீண்டும் நடிக்க வருகிறார் விஜயகாந்த் - இந்த முறை மகன் ஹீரோ... இவர் கெஸ்ட் ரோல்!

Vijayakanth Decides Appear Silver Screen Again

சென்னை: விருதகிருக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமலிருந்த விஜயகாந்த், மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். ஆனால் இந்த முறை ஹீரோவாக அல்ல. மகன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.

அரசியலில் மிக்த தீவிரமாக இறங்கி, எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆன பிறகு, சினிமாவைத் தவிர்த்து வருகிறார் விஜயகாந்த்.

கடைசியாக 2010-ம் ஆண்டு விருதகிரி என்ற படத்தை நடித்து இயக்கினார். அந்தப் படம் அவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதற்கு அடுத்த ஆண்டு நடந்த தேர்தலில் விஜயகாந்த் கட்சி அதிமுக கூட்டணி துணையுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. விஜயகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிவிட்டார்.

இதனால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். ஆனாலும் தன் மகன் சண்முகப் பாண்டியனை ஹீரோவாக்கும் முயற்சியில் தீவிரமானார். இதற்காக பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார். இப்போது ஒரு கதையை முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சண்முகப் பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் அந்த படத்தில் விஜயகாந்தும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தமிழ் சினிமாவில் இப்போது முன்னிலையில் இருக்கும் விஜய், சூர்யா போன்றவர்கள் திரையுலகில் ஒரு இடம் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தன் படங்களில் அவர்களை இடம்பெற வைத்து பிரபலமாக்கி, முன்னுக்கு வர உதவியவர் விஜயகாந்த். விஜய்க்கு ஒரு செந்தூரபாண்டியும், சூர்யாவுக்கு ஒரு பெரியண்ணாவும் அமைந்ததுபோல, தன் மகனுக்கும் இந்த புதிய படம் அமைய வேண்டும் என்பது விஜயகாந்த் ஆசை.

கூடவே, அதிமுகவில் தன் கட்சி கரைந்து கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் திரைப்பிரவேசம் செய்து நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும் என்றும் கருதுகிறாராம்.

 

மீண்டும் 'தொடையைச் சுட்டுக் கொள்ள' தயாராகும் நடிகை!

நடிகரோ நடிகையோ சொந்தப் படம் தயாரிக்க முடிவெடுத்து களத்தில் இறங்கி கையைச் சுட்டுக் கொள்வது வாடிக்கையாக நாம் பார்ப்பதுதான்.

அந்த வகையில் நடிப்பில் முன்னணியில் இருந்தபோதே தயாரிப்புக் களத்தில் இறங்கிய ஒரு நடிகை, கையை மட்டுமல்ல, கடன்காரரிடம் சிக்கி தொடையையும் சுட்டுக் கொள்ளும் அளவுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகளைச் சந்தித்தார்.

வீடுவாசலைக் கூட இழக்க வேண்டிய நிலை. தொடர்ச்சியாக செக் மோசடி வழக்கு சிந்துபாத் கதை மாதிரி நீண்டுகொண்டே போனது. இப்போதும் கூட ஒன்றிரண்டு வழக்குகள் உயிரோடு இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சினிமாவிலிருந்து காணாமலே போய்விட்ட இந்த நடிகை, திடீரென ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து குழந்தை கூட பெற்றுக் கொண்டார்.

இப்போது மீண்டும் சினிமா படம் எடுக்க வருகிறார். முதலீடு... 'அன்பூஸ், போத்ராஸு'க்கெல்லாம் அவசியமில்லையாம். வெளிநாட்டில் வெயிட்டாக சம்பாதித்து வைத்திருக்கும் கணவரின் பணம்தான் தயாரிப்பு முதலீடாம்.

'நல்ல கதை இருந்தா... ரூம் போட்டு வைய்ங்க... நானே சென்னைக்கு வந்து கேட்டு, அப்பவே முடிவு செய்யறேன்', என்கிறாராம்!

 

இதுவரை தமிழ் சினிமா சொல்லத் தயங்கிய 'சினேகாவின் காதலர்கள்’... கவுரவ வேடத்தில் சினேகா!

சென்னை: சினேகாவின் காதலர்கள் என்ற பெயரில் புதிய படம் ஒன்று உருவாகிறது. பத்திரிகையாளர் முத்துராமலிங்கன் இயக்கும் இந்தப் படத்தில் முற்றிலும் புதுமுகங்களே நடிக்கின்றனர்.

இந்தப் படம் குறித்து இயக்குநர் சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தமிழ் சினிமாவை இதுவரை கவ்விக் கொண்டிருந்த 'மசாலா சூதுகள்' விடைபெறும் 'நேரம்' வந்து விட்டது. பஞ்ச் டயலாக், பறந்துபறந்து அடிக்கும் ஃபைட்டு, குத்துப்பாட்டு போன்ற வெத்துவேட்டுக்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, 'புதுசா எதாவது சொல்லுங்க பாஸ்' - என்று கேட்கும் தமிழ் சினிமா ரசிகனின் வேட்கைக்கு தீனியாக வருகிறது சினேகாவின் காதலர்கள்.

முற்றிலும் புதுமுகங்களுடன், இதுவரை தமிழ்சினிமா சொல்லத்தயங்கிய சங்கதியை செல்லுலாய்ட் சபைக்கு கொண்டு வரும் படமாக, தயாராகிறது சிநேகாவின் காதலர்கள்.

நட்பு - காதல் - காமம் இவற்றினூடாக பயணப்படும் ஒரு இளம் பெண்ணின் ரகஸிய உலகை அவளே சிநேகத்துடன் பகிர்ந்து கொள்ளும் படம் இது.

ஆண்கள் கோலோச்சும் உலகத்தில், உறவுகளுக்குள் தன்னைத் தொலைத்து விடாமல் ‘தன் சுயத்தை'க் கண்டறிய / காத்துக்கொள்ளப் போராடும் 21ஆம் நூற்றாண்டுப் பெண் சிநேகா. தமிழ்ச் சமூகத்தின் காதல் பற்றிய பழைய கற்பிதங்களைக் கேள்விக்குள்ளாக்கி ‘காதல்' என்பதற்கான புதிய அர்த்தங்களை எழுதிப்பார்க்கிறாள் அவள். ஆண் - பெண் உறவுகளை பெண்களின் பார்வையில் பேச முற்படுகிறது ‘சிநேகாவின் காதலர்கள்'.

journalist muthuramalincoln turns film director

கவுரவ வேடத்தில் சினேகா...

மற்றபடி நடிகை சிநேகாவுக்கும் இந்தக் கதையில் இடம்பெறும் சிநேகாவுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தவித தொடர்பும் இல்லை. அதை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில் அவரே ஒரு குட்டி கவுரவ வேடத்தில் நடிக்கவும் கூடும்.

துணிச்சலான சிநேகா, அவரது வாழ்வில் கடந்து செல்லும் 4 இளைஞர்களின் பாத்திரம் மற்றும் முக்கிய பாத்திரங்களுக்கான தேர்வு துரிதமாக நடைபெற்று வருகிறது. பாடல்களுக்கான இசைக் கோர்ப்பு இம்மாதம் இறுதியில் துவங்க, ஜுன் இறுதியில் கொடைக்கானலில் படப்பிடிப்பு துவங்கி, மதுரை பெங்களூர்கள் வழியாக ஆகஸ்டில் படப்பிடிப்பு முடிவடைகிறது.

முத்துராமலிங்கன்

தமிழன் திரைப்பட நிறுவனம் சார்பாக, ‘தமிழன் தொலைக்காட்சியின் நிறுவனர் கா.கலைக்கோட்டுதயம் அளவான பொருட்செலவில் இப்படத்தை தயாரிக்க, அவருடன் இணை தயாரிப்பாளராக கரம் கோர்க்கிறார் அமலா கலைக்கோட்டுதயம். கடைசிவரை பிரபலமே ஆகாத பத்திரிகையாளரும், சில முன்னணி இயக்குனர்களின் பின்னணியில் இருந்து அவர்களது வெற்றிக்கு அரும்பாடுபட்டவருமான முத்துராமலிங்கன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.

இசைக்கு முக்கியத்துவம் உள்ள, இசையில் புதிய ஒரு அனுபவத்தைக் கொடுக்கவல்ல, எட்டுப்பாடல்கள் இடம்பெறும் இப்படத்துக்கு அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்ப்பேராசிரியர் இரா.ப்ரபாகர் இசையமைக்கிறார். பாடல்கள் நெல்லைபாரதி. தயாரிப்பு நிர்வாகம் அருள். மக்கள் தொடர்பு நிகில்முருகன்.

'சிநேகாவின் காதலர்கள்' திரை தரிசனம் அநேகமாக டிசம்பராக இருக்கக்கூடும்!"

 

தில்லு முல்லு 2 படத்திற்கு தடை கோரிய விசுவின் மனு தள்ளுபடி: படம் நாளை ரிலீஸ்

Thillu Mullu 2 Is Trouble Free

சென்னை: தில்லு முல்லு 2 படத்திற்கு தடைவிதிக்கக் கோரிய இயக்குனர் விசுவின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தை தில்லு முல்லு 2 என்ற பெயரில் எடுத்துள்ளனர். இதில் ரஜினி கதாபாத்திரத்தில் சிவா நடித்துள்ளார். படம் நாளை ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் படத்திற்கு தடை விதிக்கக் கோரி இயக்குனர் விசு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது,

தில்லு முல்லு படத்துக்கு நான் தான் திரைக்கதை, வசனம் எழுதியுள்ளேன். தற்போது அந்த படத்தை "தில்லு முல்லு 2" என்ற பெயரில் வேந்தர் மூவிஸ் தயாரித்து உள்ளது. இதற்கு என்னிடம் அனுமதி கேட்கவில்லை. எனவே "தில்லு முல்லு 2" படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி சுதாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேந்தர் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நடராஜன் கூறுகையில்,

கோல்மால் என்ற இந்தி படம் தமிழில் தில்லு முல்லு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தை தயாரித்த நிறுவனத்திற்கு உரிய பணம் கொடுத்துவிட்டு தான் தில்லு முல்லு 2 தயாரிக்கப்பட்டுள்ளது. விசுவின் வசனத்தையோ, திரைக்கதையையோ பயன்படுத்தவில்லை. அதனால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

இதையடுத்து விசுவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

பண்ணையார் மகளாக சினேகா..!

பண்ணையாரும் பத்மினியும் படத்தில் நடிகை actress sneha pannayaarum padminiyum

ஒரு பண்ணையார் தன் பிரிமியர் பத்மினி கார் மீது வைத்திருக்கும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பப்படும் இந்தப் படத்தில் பண்ணையார் வேடத்தில் நடிக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இந்தப் படத்தில் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்க சினேகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

பண்ணையாரின் மகளாக இதில் நடிக்கிறார் சினேகா.

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வரும் சினேகாவுக்கு, கதாநாயகிக்கு நிகரான வேடம் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

டி.எம். சௌந்தர்ராஜனுக்கு அஞ்சலி செலுத்தாத சிவாஜி வாரிசுகள்?

சென்னை: பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜனுக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வாரிசுகள் அஞ்சலி செலுத்தவில்லையாம்.

பிரபல பாடகர் டி.எம். சௌந்தர்ராஜன் அண்மையில் காலமானார். அவருக்கு திரையுலகினிர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும் முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் ஒரு முக்கியமான திரைக்குடும்பம் அவருக்கு அஞ்சலி செலுத்தவில்லையாம்.

sivaji s family fails pay respect to tms

டிஎம்எஸ் எம்.ஜி.ஆருக்கு பாடினால் மக்கள் திலகம் தான் பாடிகிறாரோ என்று நினைக்கத் தோன்றும். அதே டிஎம்எஸ் சிவாஜி கணேசனுக்கு பாடினால் நடிகர் திலகம் தன் குரலில் தான் பாடுகிறாரோ என்று தோன்றும். அந்த அளவுக்கு குரலை மாற்றி பாடுவார். அவர் சிவாஜி கணேசனுக்கு ஏகப்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.

இந்நிலையில் டிஎம்எஸ்ஸின் இறுதிச் சடங்கிலோ, அதன் பிறகு நடந்த துக்க நிகழ்ச்சிகளிலோ சிவாஜி கணேசன் வாரிசுகள் யாரும் கலந்து கொள்ளவில்லையாம். அவர்கள் வராதது தான் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

 

யுவன் சங்கர் ராஜா ஆல்பத்தில் நடிக்கிறார் அப்துல் கலாம்!

Abdul Kalam Yuvan S New Album

சென்னை: முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் ஆல்பத்தில் நடிக்கிறார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

இந்திய இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் கனவு நாயகன் என்றால் அது அப்துல் கலாம்தான்.

அவரது கொள்கைகளை அடிப்படையாக வைத்து 'எதிர்கால இந்தியா, இளைஞர்களின் கையில்...' என்ற கருத்துடன் ஒரு ஆல்பத்தை உருவாக்குகிறார் யுவன் சங்கர் ராஜா.

இந்த ஆல்பத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்பதால், அவரிடமே கேட்டுள்ளார் யுவன்.

இரு வாரங்களுக்கு முன் டெல்லி சென்று அப்துல் கலாமை நேரில் சந்தித்து இந்த ஆல்பம் குறித்து விளக்கியுள்ளார் யுவன்.விஷயத்தைக் கேட்டதும் அவரும் ஒப்புதல் கொடுத்துள்ளார்.

கலாமுடன் இணைந்து பணியாற்றுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் யுவன், இதற்கு முன் எந்த ஆல்பமும் இப்படி பிரபலமடைந்ததில்லை என்று சொல்ல வைக்கும் அளவுக்கு தீவிரமாக வேலையில் இறங்கியுள்ளார்.

 

சென்னையில் நடிகரை கடத்தி சிறை வைத்த கும்பல்: தப்பி வந்து போலீசில் புகார்

சென்னை: சென்னையில் புது நடிகர் கடத்தி சிறை வைக்கப்பட்டார். கடத்தல் கும்பலிடம் இருந்து தப்பி வந்த அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

அவர் பெயர் தயா சுப்பிரமணியன் (30). அவர் தெரிவித்துள்ள புகார் மனுவில், "நான் இயக்குநர் ஆகும் ஆசையில் 4 படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். கடந்த செவ்வாய்க்கிழமை புதிதாக சினிமா படம் எடுப்பது தொடர்பாக பேசவேண்டும் என்று என்னை ஒருவர் என்னை அழைத்துச் சென்றார்.

வளசரவாக்கத்தில் அவரது அலுவலகத்திற்கு சென்றதும், அங்கிருந்த 7 பேர் திடீரென்று என்னை தாக்கினார்கள். உருட்டு கட்டையால் அடித்தார்கள். காலையில் இருந்து மாலை வரை அறை ஒன்றில் அடைத்து வைத்தார்கள். எனக்கு சாப்பாடு கொடுக்காமல் பட்டினி போட்டார்கள். வெற்று தாளில் கையெழுத்து வாங்கினார்கள். பின்னர் நேற்று இரவு 7 மணி அளவில் அவர்களிடம் இருந்து நான் தப்பி வந்துவிட்டேன்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் வேண்டுகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

எதற்காக அவரைக் கடத்தினார்கள், பணத்தகராறா, பெண் விவகாரமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர் போலீசார்.

 

இளையராஜா... மணிவண்ணன் பற்றிய தரக்குறைவான கமெண்ட்ஸ்!- முகம் சுழிக்க வைக்கும் பாரதிராஜா!

Bharathiraja Worst Comments On Ilayaraja Manivannan

இசைஞானி இளையராஜா சகோதரர்கள் வெறும் 10 ரூபாயோடு வந்தவர்கள் என்றும், இயக்குநர் மணிவண்ணன் ஒரு பிச்சைக்காரனைப் போன்றவர் என்றும் மிகக் கேவலமாகக் கூறி வெறுப்பைச் சம்பாதித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

கடந்த மூன்று வாரங்களாக விகடன் மேடையில் வாசகர்கள் கேள்விக்கு தமிங்கிலீஷில் பதிலளித்து படுத்தி வருகிறார் பாரதிராஜா. 25 சதவீதம் தப்புத்தப்பான ஆங்கிலமும், மீதி தமிழுமாக 'கொன்னு கொலையெடுக்கின்றன' அவரது பதில்கள்!

எதிர்ப்பார்த்தது போலவே பாரதிராஜாவிடம் அதிக அளவு இளையராஜா பற்றியே கேள்விகள் வருகின்றன. இது அவரை மகா கடுப்பாக்கியிருக்கிறது.

இந்த வாரம், இளையராஜாவைத் தவிர உங்களுக்கு நெருக்கமான நண்பன் யார் என்ற கேள்விக்கு, 'இளையராஜாவின் அண்ணன் ஆர் டி பாஸ்கர்தான் என் நெருக்கமான நண்பன். அவன் மூலமாத்தான் ராஜாவே எனக்குப் பழக்கமாகி, என் நாடகங்களுக்கு மியூஸிக் பண்ணான். அப்புறம் நான் சென்னைக்கு வந்து தங்கி, சினிமா வாய்ப்புத் தேடிட்டு இருந்த சமயம், அப்படி இப்படினு காசை மிச்சம் பிடிச்சு நாடகம் நடத்த 270 ரூபாய் சேர்த்துவெச்சேன். திடீர்னு ஒருநாள் விடிகாலையில பாஸ்கர், ராஜா, அமரன் மூணு பேரும் என்னோட அறைக்கு வந்து கதவைத் தட்டினாங்க. 'உன்னை நம்பி வந்துட்டோம்பா... இதுதான் கையிருப்பு'னு ஒரே ஒரு 10 ரூபாய் தாளைக் கண்ல காமிச்சாங்க. அப்புறம் என்ன... நாடகத்துக்காகச் சேர்த்த பணமெல்லாம் நட்புக்காகச் செலவாச்சு. பிகாஸ்... பாஸ்கர் என் நண்பன்!," என்று கூறியுள்ளார்.

இதுவாவது பரவாயில்லை, இயக்குநர் மணிவண்ணன் பற்றி பாரதிராஜா கூறியுள்ள பதில் மகா கேவலமாக அமைந்துள்ளது. பல வாசகர்களின் கடுமையான வெறுப்பைச் சம்பாதித்துள்ளது.

அவர் கூறியுள்ள பதிலின் ஒரு பகுதி...

"மணிவண்ணனுக்குக் கல்யாணம் நடந்த கதை தெரியுமா? என் அம்மாவுக்குத் தெரிஞ்ச ஒரு பெண், மயிலாப்பூர்ல என் நண்பர் ஆறுமுகத்தின் வீட்டில் அவருடைய பாதுகாப்பில், என் கண்காணிப்பில் இருந்துச்சு. அந்தப் பெண்ணுக்கு நானும் ஆறுமுகமும் அவருடைய பிராமண சமூகத்தில் மாப்பிள்ளை தேடிட்டு இருந்தோம்.

ஒரு முறை மணிவண்ணனையும் அழைச்சுட்டு அந்த மயிலாப்பூர் வீட்டுக்குப் போயிட்டு கார்ல திரும்பிட்டு இருந்தோம். அப்போ அந்தப் பொண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் விஷயமாப் பேசிட்டே வந்தோம். அப்போ எங்க பேச்சுக்கு இடையில் குறுக்கிட்ட மணிவண்ணன், 'அந்தப் பெண்ணை நானே கல்யாணம் பண்ணிக்கிறேனே'னு சட்டுனு கேட்டுட்டான். அப்போதைக்கு நான் எதுவும் சொல்லாம, என் மனைவிகிட்ட இது சம்பந்தமா பேசினேன். 'ஒரு வருஷம் போகட்டுங்க. அப்பவும் அவர் இதே பிடிவாதத்தோட இருந்தா... அவருக்கே அந்தப் பெண்ணைக் கட்டிவெச்சுடலாம்'னு அவங்க சொன்னாங்க.

ஒரு வருஷம் போனது. 'மணிவண்ணன் அந்தப் பொண்ணு ஞாபகமாவே இருக்கான். பேசாம கட்டி வெச்சிடுங்க'னு சித்ரா லட்சுமணன் என்கிட்ட வந்து சொன்னான். 'சரி'னு முடிவெடுத்து, அந்தப் பொண் ணுக்கு என் கைக்காசுல இருந்து பத்து பவுன் நகை போட்டு, அந்தப் பெண்ணுக்கும் மணிவண்ணனுக்கும் கல்யாணம் பண்ணிவெச்சேன். அப்புறம் 'காதல் ஓவியம்' படத்தின் வசனத்தை அவனை எழுதச் சொன்னேன். அந்தப் படத்தின் டப்பிங் வேலை நடந்துட்டு இருக்கும்போது அதுல கலந்துக்காம, என்னைத் தேடி வீட்டுக்கு வந்தான் மணிவண்ணன். 'நான் தனியாப் படம் டைரக்ஷன் பண்ணப்போறேன்'னு சொன்னான். உடனே, மனசார ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிவெச்சேன்.

மணிவண்ணன் நல்ல படிப்பாளி, சிறந்த அறிவாளி. என்ன ஒண்ணு... வாயைத் திறந்தா, எல்லாமே பொய் பொய்யாத்தான் கொட்டும்.

ஒரு ராஜா கதை இருக்குமே... வீதில கஷ்டப் பட்டுட்டு இருந்த ஒரு பிச்சைக்காரனை அரண்மனைல தங்கவெச்சான் அந்த ராஜா. ஆனா, அரண்மனையின் நளபாகவிருந்து அந்தப் பிச்சைக்காரனுக்கு அலர்ஜி ஆகிடுச்சு. 'இவன் பிச்சை எடுத்த தெருவுல இருக்குற பத்து வீடுகள்ல இருந்து சோறு வாங்கிட்டு வந்து இவனுக்குப் போடுங்க'னு சொன்னார் ராஜா. அப்படியே செஞ்சாங்க... பிச்சைக்காரனுக்கு உடம்பு சரியாப்போச்சு. அப்பிடி, மணிவண்ணனை அரண்மனைக்கு அழைச்சுட்டு வந்தது என் தப்புதான்!''

-இப்படிக் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த அமைதிப் படை 2-இசை வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பற்றி பேசிய மணிவண்ணன், 'பாரதிராஜாவுக்கு தன்னைத் தவிர யாருமே இயக்குநர் இல்லை என்ற நினைப்பு உண்டு. அதனால் எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார்," என்று கூறியிருந்தார். அதற்கு பதிலுக்கு பதில் தருவதாக நினைத்து இப்படிக் கூறியுள்ளார் பாரதிராஜா.

 

அவசர சிகிச்சைப் பிரிவில் கவிஞர் வாலி.. கவலையில் திரையுலகம்!

Vaali Admitted Icu

சென்னை: காவியக் கவிஞர் என்று இலக்கிய உலகிலும் வாலிபக் கவிஞர் என திரையுலகிலும் புகழப்படும் கவிஞர் வாலி, உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் 'கண்ணதாசனுக்குப் பின் கவிஞரென்றால் அது இவர்தான்' என புகழப்படுபவர் வாலி. வர்த்தக ரீதியிலான சினிமா பாடல்கள் மட்டுமல்ல, இலக்கியவாதிகள் அதிசயிக்கும் அளவுக்கு காவியங்கள் படைப்பதிலும் வாலி நிகரற்றவர்.

எந்த அரசியல்வாதியுடனும் இலக்கியவாதியுடனும் இசையமைப்பாளருடனும் சிக்கலில்லாத உறவைப் பேணுவதில் வாலி ஒரு சிறந்த உதாரணம்.

தன்னை வளர்த்து விட்டவர்கள், வாழ்க்கை தந்தவர்கள் அனைவரிடத்திலும் இன்று வரை நன்றி பாராட்டுவதில் வாலிக்கு இணையாக ஒருவரையும் சொல்ல முடியாது. இதனால் திரையுலகில் அனைவருக்கும் இனியவராக வாலி திகழ்கிறார்.

காலையில் இளையராஜாவிடம் பாட்டெழுதும் அவர், மாலையில் ரஹ்மானுக்கும் பாட்டெழுதுவார். இருவருமே அவர் மீது அன்பைப் பொழிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சில ஆண்டுகளுக்கு முன் கவிஞர் வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்து மறுபிறவி எடுத்து வந்தார். அவ்வப்போது உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, மூன்று தினங்களுக்கு முன் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனே அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உடல் நிலையில் முன்னேற்றம் தெரிந்தாலும், அவர் இன்னும் பூரண குணமடையவில்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வாலியின் உடல் நிலைக் குறித்து கேள்விப்பட்டதும் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் நலம் பெற பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

செப்டம்பரிலேயே விஸ்வரூபம் 2?

Viswaroopam 2 Hit Screens September

சென்னை: கமல் நடித்து இயக்கியுள்ள விஸ்வரூபம் படத்தை செப்டம்பர் மாதத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் 2 படத்தை இந்த ஆண்டு வெளிக் கொணர்வதில் தீவிரமாக உள்ளார் கமல்ஹாஸன். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

ஆஸ்கர் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை தீபாவளிக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்தார் கமல். ஆனால் இந்த தீபாவளிக்கு ரஜினியின் கோச்சடையான் வரும் என்று தெரிகிறது.

எனவே தன் முடிவை மாற்றிக் கொண்ட கமல், மிச்சமிருக்கும் காட்சிகளை சென்னை மற்றும் புனேவில் படமாக்கிவிட்டு, செப்டம்பரிலேயே படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம்.

' விஸ்வரூபம் 2' வெளியீட்டுக்கு தயாரானவுடன், அதை வெளியிடும் பொறுப்பை ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் கொடுத்துவிட்டு, லிங்குசாமி தயாரிக்கும் படத்தினை இயக்கப் போகிறார் கமல்.