ராட்டினம் - இன்னும் ஒரு இயல்பான சினிமா!

Rattinam One More Good Cinema   
எந்தவித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக வெளியாகும் சில படங்கள், அப்படியே பார்ப்பவர் மனதைக் கட்டிப்போடும்.

சமீபத்தில் இந்த மாயத்தை நிகழ்த்திய படம் வழக்கு எண் 18/9. அடுத்து ராட்டினம்!

வெகு இயல்பான இந்தப் படத்தை எஸ் தங்கசாமி என்ற புதியவர் இயக்கியுள்ளார்.

கத்தி, ரத்தம், தாமிரபரணிக் கரையோர கொலைகள் என வன்முறை பூமியாக மட்டுமே காட்டப்பட்டு வந்த தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை, இத்தனை இயல்பாகவும் அழகாகவும் காட்டிய படம் என்றால் அது ராட்டினம்தான்.

இயக்குநர் மட்டுமல்ல, நடிகர் நடிகைகள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என எல்லோருமே இந்தப் படத்தில் புதுசுதான்.

ஆனால் அப்படியொரு சுவடே தெரியாத அளவுக்கு மிக இயல்பாக இந்தப் படம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படம் குறித்து இயக்குநர் தங்கசாமி நம்மிடம் கூறுகையில், "நான் இதற்கு முன் கனகு, நவீன் முத்துராமன் ஆகியோரிடம் பணியாற்றியுள்ளேன். கடைசியாக மார்கழி 16 படத்தில் பணியாற்றினேன்.

மனித மனம் விசித்திரமானது. ஒரு நேரத்தில் இருக்கும் மனநிலை உறுதியாக உள்ளது போல தெரிந்தாலும், நேரத்துக்கேற்ப அது மாறிவிடும். ஒரு ராட்டினம் போல மேலே போய் கீழே வந்து சுற்றிக் கொண்டே இருக்கும் இயல்புடையதுதான் மனசு, என்பதை தூத்துக்குடி வட்டாரப் பின்னணியில் கூறியுள்ளேன்," என்றார்.

நாளை வெளியாகவிருக்கும் ராட்டினம் படத்தின் முன்னோட்டக் காட்சி பார்த்த அனைவரும் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்களாம்!

விமர்சனத்தை நாளை எதிர்பாருங்கள்!
Close
 
 

தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக…..

Sunday Feature Film Competition Sun Tv Vijay Tv
புதுப்படங்கள் வந்தாலே தியேட்டரில் ஓடுகிறதோ இல்லையோ சில மாதங்களில் அல்லது சில வாரங்களிலேயே தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பிவிடுவார்கள். அந்த வரிசையில் சன் டிவியில் வரும் வாரம் தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக ‘பவானி’ ஒளிபரப்பாகிறது.

அதேசமயம் அமலாபால், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி? படம் பற்றி விஜய் டிவியில் முன்னோட்டம் வருகிறது. அது ஒருவேளை ஞாயிறு போடலாம் என்று எதிர்பார்க்கலாம்.

சன் டிவியில் பவானி படம் முன்னோட்டம் போட ஆரம்பித்திருக்கிறார்கள். சினோகாவின் திருமணப் பரிசாக இந்த திரைப்படத்தை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

எப்பவுமே மாலையில்தான் சன் டிவியில் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகும். இந்த வாரம் ஞாயிறு பவானி படம் காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது. ஒருவேளை விஜய் டிவியில் காதலில் சொதப்புவது எப்படி? ஒளிபரப்பினால் அந்த ரசிகர்களை கவர்வதற்கான போட்டியோ என்னவோ?

எது எப்படியோ இந்த வாரம் இரண்டு புது திரைப்படங்கள் ஒரே நேரத்தில் வெவ்வேறு டிவியில் ஒளிபரப்பாகும் போலிருக்கிறது. திரைப்பட ரசிகர்கள் பார்த்து ரசிக்கலாம். ரசிகர்களின் ஓட்டு அமலாபாலுக்கா, சினேகாவிற்கா என்பதை டிஆர்பி ரேட்டிங் சொல்லிவிடும்.
Close
 
 

மதன் பாப் பாட்டு தர்பார்: இந்த வார விஐபி பா. விஜய்

Madan Bop S Paattu Darbar Sun Tv Program
சன் டிவியில் ஞாயிறுக்கிழமை தோறும் காலையில் ஒளிபரப்பாகும் பாட்டு தர்பார் நிகழ்ச்சியில் இந்த வார விஐபியாக கவிஞர் பா. விஜய் பங்கேற்கிறார். அவரிடம் அனல் பறக்கும் கேள்விகளை கேட்டு பதில் பெறுகிறார் மதன் பாப்.

ஞாயிறு தோறும் காலை 10 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய இசை நிகழ்ச்சி, பாட்டு தர்பார். நடிகர் மதன்பாப் தயாரித்து வழங்கும் இந்த நிகழ்ச்சி மூன்று பகுதிகளைக் கொண்டது.

காலத்தை வென்ற பாடல்கள் பலமுறை நம்மனதை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த பாட்டுக்கான பின்புலம் தெரிய வந்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாகும். உங்கள் விருப்பத்துக்குரிய பாடல்களை அந்த பாடல்களுக்குப் பின்னணியில் உள்ள சுவாரஸ்ய சம்பவங்களை சொல்லி தற்போதுள்ள பின்னணி பாடகர்கள் அந்தப்பாடலை பாடுவார்கள். இந்த பகுதிக்கு `பாட்டோட கதை கேளு' என்று பெயர்.

இரண்டாவது பகுதி `சிரிப்பு மழை'. நகைச்சுவைக் கலைஞர்கள் பங்கு பெற்று தங்கள் அதிரடி நகைச்சுவையாலும், மிமிக்ரி செய்தும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர்.

மூன்றாவது பகுதியில் `என் கேள்விக்கென்ன பதில்' நிகழ்ச்சி இடம் பெறுகிறது. இதில் பிரபலமான வி.ஐ.பி.களிடம் நடிகர் மதன்பாப் அதுவரை யாரும் கேட்டிராத அனல் பறக்கும் கேள்விகளைக் கேட்டு பதில் பெறுகிறார். இந்த வார விஐபி கவிஞர் பா. விஜய் பங்கேற்று தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

கிரியேட்டிவ் கோம்ப் தயாரிக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் மதன்பாப்பின் மகன் அர்ச்சித், மகள் ஜனனி இருவரும் பாடுகிறார்கள். இருவரும் சினிமா பின்னணி பாடகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கம் குறித்து பேசிய மதன்பாப், ஒரு காப்பி ஷாப்பில் நடப்பது மாதிரியான நிகழ்ச்சி. அதனால் பிரமாண்ட செட் போட்டு படமாக்கி வருகிறோம் என்றார். நீங்களும் பாருங்களேன் ஞாயிறு கொண்டாட்டத்தில் சுவாரஸ்யமான நிகழ்ச்சியை பார்த்த திருப்தி கிடைக்கும்.
Close
 
 

'நான் ஈ'... ரூ 5 கோடிக்கு விற்பனையாகி சாதனை!

Rs 5 Cr Naan E    | சமந்தா   
தெலுங்கில் தயாராகி தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீசாகவிருக்கும் நான் ஈ படம்ரூ 5 கோடிக்கு விலைபோயுள்ளது.

எந்த தெலுங்கு டப்பிங் படத்துக்கும் கிடைக்காத விலை இது என்று கோலிவுட்டில் வாய் பிளக்கிறார்கள்.

தெலுங்கில் 'ஈகா' என்ற பெயரில் இந்தப் படம் வெளியாக உள்ளது. நானி, சமந்தா, சுதீப் நடித்து இருக்கும் இப்படத்திற்கு மரகதமணி இசையமைத்து இருக்கிறார்.

இந்திய சினிமாவில் கிராபிக்ஸ் காட்சிகளின் உச்சம் என்று சொல்லும் அளவுக்கு பல நாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களின் உழைப்பு இதில் உள்ளதாம்.

தெலுங்கு படத்தின் தமிழ் டப்பிங்கிற்கு இதுவரை எந்த ஒரு படத்திற்கு இல்லாத அளவிற்கு 5 கோடி ரூபாய்க்கு விலை போய் இருக்கிறது. தமிழ் பட டிவி உரிமையை சன் டி.வி 3.35 கோடிக்கு கொடுத்து வாங்கி இருக்கிறது.

இது குறித்து ராஜமவுலி கூறுகையில், "நான் ஈ' தியேட்டர் ரிலீஸ் உரிமையை 5 கோடி ரூபாய்க்கு விற்றோம். அதிக விலைக்கு விற்றுவிட்டோமோ என கவலை கொண்டோம். பின்னர் சேட்டிலைட் உரிமை 3.35 கோடிக்கு விலைபோனது. இப்போது, குறைவான விலைக்கு உரிமைகளை விற்றுவிட்டோமோ என கவலைப்பட்டோம்!" என்று தெரிவித்துள்ளார்.

படத்தில் சமந்தா மட்டுமே இங்கு நன்கு அறிமுகமான நடிகை. மற்றுபடி ஈதான் படத்தின் நம்பிக்கை நட்சத்திரம்.

ஈ காப்பாற்றுமா... கவுத்திடுமா... பார்க்கலாம்!
Close
 
 

இறப்பதற்கு முன் குழந்தை நட்சத்திரம் தருணி அனுப்பிய எஸ்.எம்.எஸ்.

India Taruni Said Her Goodbyes Before The Plane Crash
மும்பை:  நேபாள விமான விபத்தில் பலியான குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் சுற்றுலா கிளம்புவதற்கு முன்பு தனது தோழிகளிடம் நான் உங்களைப் பார்ப்பது இது தான் கடைசி என்று ஜோக்கடித்துள்ளார். ஆனால் அது உண்மையாகிவிட்டது வருத்தத்திற்குரியது.

நேபாள விமான விபத்தில் குழந்தை நட்சத்திரம் தருணி சச்தேவ் மற்றும் அவரது தாய் கீதா சச்தேவ் உள்பட 15 பேர் பலியாகினர். தருணி சுற்றுலா கிளம்பும் முன்பு தனது நண்பர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது தான் நேபாளம் மற்றும் பெங்களூருக்கு சுற்றுலா செல்வதைக் கூறி, இது தான் நான் உங்களை கடைசியாகப் பார்ப்பது என்று கூறியுள்ளார். இதைக் கேட்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடையவே, இல்லை.. இது வெறும் ஜோக் என்று தெரிவித்துள்ளார்.

உங்களை எல்லாம் நான் சந்திப்பது இது தான் கடைசி என்று தருணி் சொன்னார் என்று அவரது தோழி வ்ரிதி தெரிவித்தார். சுற்றுலா செல்லும் முன்பு எப்பொழுதும் இல்லாத பழக்கமாக அவர் தனது நண்பர்களை ஆரத் தழுவி பிரியா விடை பெற்று சென்றுள்ளார். மேலும் தான் சிறு, சிறு சண்டை போட்டவர்களை சந்தித்து சமாதானம் ஆகியுள்ளார். இதைப் பார்த்த நண்பர்கள் தருணிக்கு என்னாகிவிட்டது, எல்லாம் புதிதாக இருக்கிறதே என்று வியந்துள்ளனர்.

தருணியின் நெருங்கிய தோழி தனுஷ்கா பிள்ளை கூறியது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. தருணி விமானத்தில் ஏறுவதற்கு முன்பு விமானம் விபத்துக்குள்ளானால் எப்படி இருக்கும் என்று அவருக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். கடைசியாக ஐ லவ் யூ என்று எஸ்.எம்.எஸ். அனுப்பியுள்ளார். பதிலுக்கு தனுஷ்கா ஐ லவ் யூ டூ அனுப்பியதை பார்ப்பதற்குள் தருணி செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார்.

தருணி மற்றும் அவரது தாயின் உடல் நேற்று மாலை 3 மணிக்கு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடல்கள் மோசமான நிலையில் இருந்ததால் சவப்பெட்டிகள் திறக்கப்படவில்லை. அனைவரும் அஞச்லி செலுத்திய பிறகு மாலை 5 மணிக்கு சான்டா க்ரூஸ் மயானத்தில் உடல்கள் தகனம் செய்யப்பட்டன.
Close
 
 

இரண்டாவது நாயகியாக நடிப்பது ஏன்?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'சமர்' படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பது ஏன் என்பது குறித்து சுனேனா கூறியதாவது: தற்போது 'நீர்ப்பறவை'யில் நடிக்கிறேன். இதுவரை நடித்த கேரக்டர்களில் இருந்து முற்றிலும் வித்தியாசமானது. எனக்கு திருப்புமுனையாக அமையும். 'மைக் செட் பாண்டி'யில் பணக்காரப் பெண்ணாக வருகிறேன். 'சமர்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடிப்பது பற்றி கேட்கிறார்கள். இரண்டாவது நாயகி என்பதைவிட, மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். எனது கேரக்டர் படத்தில் திருப்புமுனையாக இருக்கும். இதுபோன்ற முக்கிய வேடத்தில் நடிக்கும்போது இரண்டாவது நாயகி, மூன்றாவது நாயகி என்று பார்க்க தேவையில்லை. இப்போது நான் நடிக்கும் படங்களில் அமைதியான, சாந்தமான கேரக்டர்கள் அமைந்துள்ளது. இதில் திறமையான நடிகை என்று பெயர் வாங்கிவிட்டு, பிறகு கிளாமரான, ஆர்ப்பட்டமான வேடங்களில் நடிப்பேன்.


 

சிவாஜி வீட்டில் படமான மிரட்டல்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மெஜஸ்டிக் மல்டி மீடியா தயாரிக்கும் படம், 'மிரட்டல்'. விநய், ஷர்மிளா, பிரபு, சந்தானம், கஞ்சா கருப்பு, மன்சூரலிகான், பாண்டியராஜன் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, டி.கண்ணன். இசை, பிரவீன் மணி. பாடல்கள்: வாலி, பா.விஜய், கபிலன். இப்படத்தின் பாடல் சி.டியை வெளியிட்ட இயக்குனர் ஆர்.மாதேஷ், நிருபர்களிடம் கூறியதாவது: விநய்க்கு இருக்கும் 'சாக்லெட் பாய்' இமேஜை இப்படம் மாற்றும். ஷர்மிளாவுக்கு கூத்துப்பட்டறையில் நடிப்பு மற்றும் தமிழில் பேச பயிற்சி அளிக்கப்பட்டது. சந்தானம், கஞ்சா கருப்பு கூட்டணி சிரிக்க வைக்கும். லண்டன் பாராளுமன்றம் மீது விமானம் பறந்து செல்ல விசேஷ அனுமதி வாங்கி படப்பிடிப்பு நடத்தினோம். மேலும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மத்தியிலும், ஐதராபாத் நிஜாமுக்குச் சொந்தமான பிரமாண்ட பங்களாவிலும், சென்னையில் சிவாஜி வீட்டின் உட்புறமும் முக்கிய காட்சிகள் படமானது. கோபத்தால் எதையும் சாதிக்க முடியாது. எவ்வளவு பெரிய பிரச்னையையும் சுலபமாகவும், காமெடியாகவும் எடுத்துக்கொண்டு அணுகினால் அது காணாமல் போய்விடும் என்ற மெசேஜை சொல்லும் இப்படம், இம்மாதம் வருகிறது.


 

அண்ணன், தம்பி பிரச்னை கதை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்ரீ நாச்சியார் அம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி தயாரிக்கும் படம், 'மீன்கொத்தி'. அவர் மகன் அஜய் கிருஷ்ணா, ஷோபனா நாயுடு ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை எழுதி, இயக்கும் சஞ்சய்ராம் கூறுகையில், ''ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பிக்கு இடையே ஏற்படும் சொத்துப் பிரச்னை காரணமாக உண்டாகும் பகை, அடுத்த தலைமுறையை எந்தளவு பாதிக்கிறது என்பதைச் சொல்லும் கதை இது. உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடக்கிறது. அடுத்த மாதம் ரிலீசாகிறது'' என்றார்.


 

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத், ஆர்யா

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
'பில்லா' ரீமேக்கிற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்துக்கு பெயர் முடிவாகவில்லை. ஏ.எம்.ரத்னம் வழங்கும் ஸ்ரீசத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.ரகுராம் தயாரிக்கிறார்.
அஜீத், ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். நயன்தாரா, டாப்ஸி ஹீரோயின்கள். கதை, திரைக்கதையை சுபா, விஷ்ணுவர்தன் எழுதுகின்றனர். ஒளிப்பதிவு, பி.எஸ்.வினோத். இசை, யுவன்சங்கர்ராஜா. வசனம், சுபா. வரும் 31ம் தேதி மும்பையில் படப்பிடிப்பு தொடங்குகிறது. விஷ்ணுவர்தன் கூறுகையில், 'கதைக்குப் பொருத்தமான டைட்டில் தேடுகிறேன். தற்போது லொகேஷன் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளேன். ஷூட்டிங் தொடங்கிய பிறகு மற்ற விவரங்களை சொல்கிறேன்' என்றார்.


 

நானும் என் காதலும் இதயம் திரையரங்கம் ஆனது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ராம்கி ராமகிருஷ்ணன் எழுதி இயக்கி, கலை இயக்கம் செய்து தயாரிக்கும் படம், 'இதயம் திரையரங்கம்'. ஆனந்த், ஸ்வேதா ஜோடி. வில்லியாக கவிதா நடிக்கிறார். படம் குறித்து ராம்கி ராமகிருஷ்ணன் கூறியதாவது: 'நானும் என் காதலும்' பெயர், 'இதயம் திரையரங்கம்' என மாற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் இதயத்திலும் ஆயிரம் எண்ணங்கள் இருக்கும். அதை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதை பொறுத்து வாழ்க்கை அமையும். உழைப்பை மட்டும் நம்பும் சிலர், ஜாதகத்தை நம்பி செயல்படும் சிலர், கடவுள் நம்பிக்கையுள்ள சிலர். இவர்களின் செயல்பாடுகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள் மற்றும் இவர்களுக்கு மத்தியில் தங்கள் காதலை வளர்க்கும் ஜோடிகளின் நிலை என்ன என்பதைச் சொல்லும் கதை. விரைவில் படம் ரிலீசாகிறது.


 

ஹாங்காங்கில் ஷூட்டிங் முடிந்தது : சென்னை திரும்பினார் ரஜினிகாந்த்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாங்காங்கில் 'கோச்சடையான்' படிப்பிடிப்பு முடிந்து இன்று அதிகாலை சென்னை திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா, தயாரித்து இயக்கி வரும் 'கோச்சடையான்' படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. ரஜினி, தீபிகா படுகோன் நடிக்கின்றனர். தீபாவளிக்கு வெளிவரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2 மாதங்களுக்கு முன்பு ரஜினிகாந்த், அவரது மகள் சவுந்தர்யா, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் படப்பிடிப்பு குழுவினர் லண்டனுக்கு சென்று 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி வந்தனர். அதன் பின்பு கேரள மாநிலத்திலும் படப்பிடிப்பு நடந்தது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி அதிகாலை படப்பிடிப்புக்காக ஹாங்காங் சென்றார் ரஜினிகாந்த். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு இன்று அதிகாலை 1.30 மணிக்கு கேத்தே பசிபிக் ஏர்லைன் விமானத்தில் ரஜினிகாந்த், சென்னை திரும்பினார். அவரது வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதனால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் இல்லை. ஆனால் அவர் விமானத்தில் இருந்து இறங்கி காரில் ஏற வந்தபோது அவரை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள், கையை அசைத்து கொண்டு காரை நோக்கி ஓடினர். அப்போது அங்கிருந்த விமான நிலைய போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். ரசிகர்களை பார்த்து ரஜினி கையை அசைத்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.


 

கோச்சடையான் ஷூட்டிங்கில் மகனுக்கு பயிற்சி : ஜாக்கி ஷெராப் மகிழ்ச்சி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஹாங்காங்கில் நடந்த ரஜினி பட ஷூட்டிங்கில் தனது மகன் டைகருடன் பங்கேற்றார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். ரஜினி நடிக்கும் படம் 'கோச்சடையான். இதன் ஷூட்டிங் லண்டனிலும் பின்னர் கேரளாவிலும் நடந்தது. இதையடுத்து ஹாங்காங்கில் நடந்த ஷூட்டிங்கில் பங்கேற்க கடந்த வாரம் புறப்பட்டு சென்றார் ரஜினி. இப்படத்தில் மன்னர் வேடத்தில் நடிக்கிறார் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப். அவர் இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு தனது மகன் டைகரை அழைத்து சென்று, திரும்பியுள்ளார். இது பற்றி ஜாக்கி கூறும்போது, கடந்த வாரம் கோச்சடையான் படத்திற்காக ஹாங்காங் சென்றேன்.

உடன் என் மகன் டைகரையும் அழைத்து சென்றேன். புதிய தொழில் நுட்பத்தில் இப்படம் உருவாகிறது. இது எனக்கு புது அனுபவம். என் மகனும் விரைவில் சினிமாவில் நடிக்க உள்ளார். நடிப்பு அனுபவத்தை நேரில் காண்பதற்காக ஹாங்காங் ஷூட்டிங்குக்கு  அழைத்துச் சென்றேன். 20 வருடங்களுக்கு பிறகு இப்படத்தில் ரஜினியுடன் நடிக்கிறேன். தமிழில் ஆரண்ய காண்டம்Õ படத்தில் நடித்தேன். இது இரண்டு தேசிய விருது வென்றது. அடுத்த படம் ரஜினியுடன் நடித்து வருகிறேன். 3வது படமும் பிரபல நடிகருடன் நடிப்பதாக இருக்கும் என்றார்.


 

ஹரிப்பிரியா வீட்டில் சிபிஐ ரெய்டு?

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எடியூரப்பா, அவரது மகன்கள், மகள் வீட்டில் நேற்று திடீர் ரெய்டு நடந்தது. அப்போது எடியூரப்பாவின் மகனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி நடிகை ஹரிப்பிரியாவின் வீட்டிலும் ரெய்டு நடந்ததாக கன¢னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. முரண், வல்லக்கோட்டை படங்களில் நடித்திருப்பவர் ஹரிப்பிரியா. இவர் இப்போது கன்னட படங்களில் நடிப்பதால், பெங்களூரில் வசிக்கிறார். கடந்த 3 வருடங்களாகவே இவருக்கும் கர்நாடக முன்னாள¢ முதல்வர் எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் உலவுகிறது. சதாசிவநகர் பகுதியில் உள்ள ஹரிப்பிரியா வீடு மற்றும் அவரது கார் ஆகியவற்றுக்கு விஜயேந்திராதான் பைனான்ஸ் செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று எடியூரப்பா மற்றும் அவரது மகன்கள், மகள், மருமகன் வீடுகளில் குவாரி முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிரடியாக சோதனை நடத்தியது. எடியூரப்பா மகனுடன் ஹரிப்பிரியா தொடர்பில் இருப்பதால் அவரையும் சிபிஐ கண்காணித்து வந்ததாகவும்,

அவரிடமும் விசாரணை மற்றும் வீட்டில் ரெய்டு நடந்ததாகவும் சான்டல்வுட்டில் தகவல் பரவியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து ஹரிப்பிரியா கூறும்போது, Ô'என்னை யாரோ சிக்கலில் மாட்ட வைக்க முயல்கிறார்கள். எடியூரப்பா மகனை நான் எந்த நேரத்திலும் சந்தித்தது கிடையாது. அவருடைய பெயர்கூட எனக்கு தெரியாது. சினிமா மூலம் கிடைத்த எனது சொந்த பணத்தில்தான் வீடு, கார் வாங்கினேன். இதெல்லாம் இலவசமாக கிடைக்கிறது என்றால் நான் ஏன் நடிக்கப் போகிறேன். அதன் மூலம் எதற்கு வாழ்க்கையை நடத்தப்போகிறேன். இந்த வதந்தியால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் என் வீட்டை ரெய்டு செய்யப்போகிறார்கள்? தவறான தகவல் அடிப்படையில் ரெய்டு செய்ய முடிவு செய்தால் என் வீட்டில் உள்ள ஆவணங்களை அவர்கள் சோதித்து பார்க்கலாம். அப்போதுதாவது எனது உண்மை நிலை எல்லோருக்கும் புரியும் என்றார்.


 

சைபர் கிரைம் குற்றங்கள் படமாகிறது

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆண்டனி தயாரிக்கும் படம், 'ஏன் இந்த மயக்கம்'. ராஜீவ்குமார், ரித்தியா, சொர்ணா நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வேல்முருகன். இசை, சித்தார்த் பாபு. பிரபுதேவா உதவியாளர் ஷக்தி வசந்தபிரபு இயக்குகிறார். அவர் கூறுகையில், "இப்போது செல்போன் இல்லாதவர்களே இல்லை. மாணவர்கள் முதல் முதியோர்கள் வரை செல்போன் போதையில் மூழ்கியுள்ளனர். அதுபோலத்தான் இணையதளமும். இப்போது சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் விளைவுகளை இப்படம் சொல்கிறது" என்றார்.


 

இன்று குரு பெயர்ச்சி: கல்லா கட்டும் தொலைக்காட்சிகள்

Guru Peyarchi Jaya Tv Live Show
சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என எந்த கிரகங்கள் இடம் பெயர்ந்தால் ஜோசியர்கள் காட்டில் பணமழை பெய்யும். ஆனால் இந்த கிரகங்களின் பெயர்ச்சியை தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்வதால் அவர்களின் காட்டில் விளம்பரதாரர்கள் வாயிலாக பண மழை கொட்டோ கொட்டென்று கொட்டுகிறது.

இன்று மாலையில் குரு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ( அவர் பாட்டுக்கு அவர் வேலையை பார்க்கட்டுமே). இதை வைத்து பரிகாரம் பூஜை என்று ஜோசியர்கள் தங்கள் பங்குக்கு ஆரம்பித்து விடுவார்கள். குரு பெயர்ச்சியாகட்டும் அப்புறம் திருமண யோகம்தான் உங்க பெண்ணுக்கு என்று கூறி கல்லா கட்டுவார்கள்.

இப்பொழுது தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்து விட்டார்கள். குருபகவான் கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் தொலைக்காட்சிகளில் பார்த்து சாமிகும்பிட்டுவிட்டு இருந்த இடத்தில் இருந்தே தங்கள் வேலையை தொடங்கலாம். இதில் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு என்ன லாபம் என்று கேட்கிறீர்களா? வேறென்ன விளம்பர வருமானம்தான்.

ஜெயா ப்ளஸ் டிவியில் காலையில் நம்ம நேரம் நிகழ்ச்சியில் குரு பெயர்ச்சியை ஒட்டி ஒவ்வொரு ராசிக்காரர்களும் செய்யவேண்டிய பரிகாரத்தை நேரலையில் கூறினார். பஞ்ச குரு ஸ்தலத்திற்கு செல்ல முடியாதவர்களுக்கு பரிகாரம் வேறு அவர் கூறினார். அதாவது வலம்புரி சங்கு வைத்து வீட்டிலேயே பரிகாரம் செய்து கொள்ளலாமாம். எந்த பிரச்சினை என்றாலும் எங்களை கேளுங்கள் நாங்கள் இருக்கிறோம் என்று அவர் கூறியதுதான் நிகழ்ச்சியின் ஹைலைட்.

ஜெயா டிவியில் இன்று மாலை குருப்பெயர்ச்சியை ஒட்டி தஞ்சை மாவட்டம் திட்டை அருள்மிகு வஷிஸ்டேஸ்வரர் கோவிலில் இருந்து சிறப்பு நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நேரடியாக செல்ல முடியாதவர்கள் குரு பகவானை பார்த்து பக்தியுடன் வணங்கிக்கொள்ளலாம்.

குருப்பெயர்ச்சியை வைத்து இன்னும் என்னென்ன காமெடி நடக்கப்போகிறதோ தெரியவில்லை.

சரி அது கிடக்கட்டும் உங்களுக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கு?
Close
 
 

3 பட நஷ்டம்: ரஜினியை மீண்டும் இழுக்கும் நட்டி!

Natty Again Drags Rajini For Movie
3 படப் பிரச்சினை இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. இந்தப் படத்தின் நஷ்டம் குறித்து முதல் குற்றச்சாட்டை வைத்தவர், படத்தை தெலுங்கில் விநியோகித்த நட்டி குமார்.

ரஜினிகாந்த் தலையிட்டு, இந்த நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இது மீடியாவில் பெரிய அளவு பரபரப்பைக் கிளப்பியது.

ஆனால் உடனடியாக ரஜினி, 'தனக்கும் 3 படத்துக்கும் எந்த வகையிலும் சந்பந்தமில்லை. இதுதொடர்பாக தன்னை இணைத்து செய்தி வெளியிட வேண்டாம். விநியோகஸ்தர்கள் தன்னைத் தொடர்பு கொள்ள வேண்டாம்," அறிக்கை வெளியிட்டிருந்தார் ரஜினி.

ரஜினி அறிக்கை வெளியானதும் சுதாரித்துக் கொண்ட நட்டி குமார், "நான் ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கவில்லை. ரஜினி மகள் படம் என்பதால் வாங்கி வெளியிட்டோம்," என்று சமாளித்தார்.

ஆனால் அத்துடன் அவர் நிற்கவில்லை. தனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு தனுஷ், ஐஸ்வர்யா மற்றும் கஸ்தூரிராஜாதான் காரணம் என ஹைதராபாத் போலீசில் புகார் தந்தார்.

3 பட விவகாரத்தில் சம்பந்தமே இல்லாத ரஜினி பெயர் தேவையின்றி மீடியாவில் அடிபட்ட போது கூட அமைதியாகவே இருந்த படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா, நிலைமை விபரீதமாவதை உணர்ந்து இப்போது நட்டி குமாருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருவதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த நிலையில் மீண்டும் ரஜினி பெயரை இழுக்க ஆரம்பித்துள்ளார் நட்டி குமார்.

அவர் கூறுகையில், "ரூ 6 கோடி கூட தேறாத 3 படத்தை ரூ 80 கோடி வரை விற்றுள்ளனர். இதில் தெலுங்கு உரிமை ரூ 5 கோடி (ஆனால் நட்டிகுமார் இதில் ரூ 2.5 கோடிதான் கொடுத்துள்ளார்). தங்கள் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொண்ட 3 படத் தயாரிப்பாளர்கள், ரசிகர்களை ஏமாற்றிவிட்டனர். கொலவெறி பாட்டை செலவே இல்லாமல் மலிவாக எடுத்துவிட்டனர்.

இந்தப் படத்தை தெலுங்கில் விளம்பரப்படுத்த வருவதாக வாக்குறுதியளித்த தனுஷும் ஐஸ்வர்யாவும் வராமல் ஏமாற்றிவிட்டனர். எனவேதான் இத்தனை பெரிய நஷ்டம். மகள் ஐஸ்வர்யாவுக்கு வங்கியில் இருந்த கடனை ரஜினிகாந்த் அடைத்ததாக நான் கேள்விப்பட்டேன். எனவே 3 பட நஷ்ட விவகாரத்தில் ரஜினி தலையிட்டு சரிசெய்ய வேண்டும்," என்றார்.

சூப்பர் ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெரிய சவால் என்று இப்போது புரிகிறதா?
Close
 
 

சின்னத்திரையில் சித்த வைத்தியர்கள்!

Siddha Doctors Program Television
வாலிப வயோதிக அன்பர்களே! என்று ஆரம்பித்து உங்களுக்கு குழந்தை இல்லையா எங்க மருத்துவனைக்கு வாங்க என்பது வரை சின்னத்திரையில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இது இந்த மருத்துவர்களே ஸ்லாட் எடுத்து செய்யும் நிகழ்ச்சி என்பதால் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வருமானம்தான். ஆனால் திடீரென்று பார்க்கும் நேயர்களுக்குத்தான் திண்டாட்டம்.

வின் டிவியில் ஆரம்பத்தில் இருந்தே சித்த மருத்துவர் ஒருவர் நிகழ்ச்சி வழங்கி வருகிறார். அவருடைய வேலையே காலையில் பேச ஆரம்பித்தால் தாத்தா காலத்தில் இருந்து இந்த சிகிச்சை செய்வதை பக்கம் பக்கமாக செய்வார்.

ஆண்மை குறைபாட்டில் ஆரம்பித்து சித்த மருத்துவ வயாக்கரா வரை சொல்லிவிட்டுதான் நிறுத்துவார்.

அதேபோல் ஜெயா ப்ளஸ், வசந்த் டிவிகளில் ஒரு டாக்டர் குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு பற்றி கேள்விகளுக்கு விளக்கம் அளிப்பார். அதற்கு ஒரு தொகுப்பாளர் வேறு. ஜெயா டிவியில் இன்றைக்கு காலையில் சோரியாசிஸ் நோய்க்கு அழகான தொகுப்பாளினி கேள்வி கேட்க அதற்கு மருத்துவர் ஒருவர் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.

இவர்கள் டிவியில் காசு செலவழித்து தங்களை விளம்பரப்படுத்திக்கொள்ள காரணமே இந்த டிவி புகழ், அந்த டிவி புகழ் என்று தங்கள் பெயருக்கு முன்னாள் போட்டுக்கொள்ளத்தான். இந்த மருத்துவர்கள் காசு கொடுத்துதான் டிவியில் பேசுகிறார்கள் என்று எத்தனை பேருக்கு தெரியும்?. அப்புறம் இந்த நாளில் இந்த ஊரில் குறிப்பிட்ட லாட்ஜில் இருப்போம் அங்கு வந்து பாருங்கள் என்று கூறிவிட்டு ஏமாந்தவர்களிடம் முடிந்த வரை காசை கறப்பதும் ஒரு கலையாகிவிட்டது.

இப்படித்தான் சென்னையில் மான்கறி வைத்தியம் செய்கிறேன் என்று கூறி லட்சக்கணக்கில் ஏமாற்றிய சித்த வைத்தியர் ஒருவர் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

நேயர்கள் இனியாவது இதுபோன்ற வைத்தியர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்கின்றனர் சமூக நல ஆர்வலர்கள்.
Close
 
 

துப்பாக்கியில் நான் நடிக்கவே இல்லை! - சரத் மறுப்பு

Sarath Kumar Declines His Role Thuppakki
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் துப்பாக்கியில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார், அதை விஜய்யே இயக்குகிறார் என்கிற ரேஞ்சுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன கடந்த சில தினங்களாக.

ஆனால் இதெல்லாம், பத்திரிகை / இணையதளங்களைப் பார்த்துதான் தானே தெரிந்து கொண்டதாகக் கூறியுள்ளார் சம்பந்தப்பட்ட நடிகரான சரத்குமார்.

இதுகுறித்து சரத்குமார் கூறுகையில், "எனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இப்போதுதான் சென்னை திரும்பினேன். உடனே ஏகப்பட்ட போன்கால்கள், துப்பாக்கியில் நடிப்பது குறித்து.

கடந்த சில தினங்களாக வெளியான செய்திகளைப் பார்த்துதான் துப்பாக்கியில் நான் முக்கிய வேடத்தில் நடிப்பதே தெரிந்தது! இதில் எந்த உண்மையும் இல்லை. தவறான செய்தி. குறைந்தபட்சம் விசாரிக்காமல் கூட வெளியிட்டுவிடுவதா?

மல்டி ஹீரோ சப்ஜெக்டில் நடிப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் இன்றைய தேதிக்கு தமிழில் ரஜினி சாருடன் கோச்சடையான், மலையாளத்தில் சில படங்கள், கன்னடத்தில் படங்கள் என நான் ரொம்ப பிஸி. விரைவில் சினேகாவும் நானும் நடித்த விடியல் படம் வெளியாகவிருக்கிறது," என்றார்.
Close
 
 

சினேகா - பிரசன்னாவுக்கு ரஜினி தந்த திருமணப் பரிசு!

Superstar Rajini Gift Sneha Prasanna
புதுமணத் தம்பதிகள் சினேகா - பிரசன்னாவை தன் வீட்டுக்கே வரவழைத்து திருமணப் பரிசு வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கடந்த மே 11-ம் தேதி நடந்த தங்கள் திருமணத்துக்கு வருமாக சூப்பர் ஸ்டாருக்கு அழைப்பிதழ் கொடுத்திருந்தனர் சினேகாவும் பிரசன்னாவும். ஆனால் ரஜினியால் இந்த திருமணம் அல்லது அதன் பிறகு திரையுலகினருக்காக நடத்தப்பட்ட பிரத்தியேக வரவேற்பில் பங்கேற்க முடியவில்லை. கோச்சடையான் பணிகளில் அவர் பிஸியாக இருந்தார்.

இந்த நிலையில் சினேகாவையும் பிரசன்னாவையும் தன் வீட்டுக்கே வரவழைத்து அவர்களுக்கு திருமணப் பரிசு வழங்கி, இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஸ்ரீராகவேந்திரர் உருவப்படத்தின் ஆயில் பெயின்டிங்கை இருவருக்கும் அன்புப் பரிசாக அளித்த ரஜினி, இருவருக்கும் திருமண வாழ்த்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பிரசன்னா கூறுகையில், "இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதது. சூப்பர் ஸ்டாரின் அன்புப் பரிசோடு வாழ்க்கையைத் தொடங்குகிறோம்," என்றார்.
Close
 
 

பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் ஒய்.ஜி. மகேந்திரன்

Yg Mahendra Pittsburgh Tamil Sangam Event   
பிட்ஸ்பர்க்: பிட்ஸ்ப்ர்க் தமிழ்ச் சங்கம் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த 4ம் தேதி பிட்ஸ்பர்க்கில் உள்ள வெங்கடேஸ்வரா கோவில் அரங்கில் நாடகம் நடந்தது.

பென்சில்வேனியா பகுதியில் உள்ள பிட்ஸ்பர்க்கில் வாழும் தமிழ் மக்கள் இணைந்து பிட்ஸ்பர்க் தமிழ்ச் சங்கத்தை துவங்கியுள்ளனர். இந்த சங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 23ம் தேதி அங்கீகாரம் பெற்றது. தமிழ் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை வளர்க்கும் நோக்கில் இச்சங்கம் துவங்கப்பட்டுள்ளது. சங்கம் துவங்கப்பட்ட பிறகு முதல் நிகழ்ச்சியாக ஒய்.ஜி.மகேந்திரனின் நகைச்சுவை நாடகத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. வெங்கடா 3 என்று பெயரிடப்பட்ட அந்த நாடகம் வெங்கடேஸ்வரா கோவில் அரங்கில் கடந்த 4ம் தேதி நடந்தது. ஒய்.ஜி. மகேந்திரன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாகவும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

அரங்கம் நிரம்பி வழிந்தது. நாடகத்தைப் பார்த்த மக்கள் குலுங்கி, குலுங்கி சிரித்ததில் அரங்கமே அதிர்ந்தது. சிகாகோவைச் சேர்ந்த திரிவேணி ஆர்ட்ஸ் அகாடமியினர் பிற கதாபாத்திரங்களில் நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஒய்.ஜி. மகேந்திரன் நடித்தார்.

நாடகம் பார்க்க வந்தவர்களுக்கு சிறப்பான உபசரி்ப்பு செய்யப்பட்டது. இந்த முயற்சியை அனைவரும் பாராட்டினர். மேலும் மூத்த தமிழ் மக்கள் சிலர் சங்கத்தை வாழ்த்திப் பேசினர். நாடகத்தில் நடித்தவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த இளம் தமிழர்கள் பாராட்டப்பட்டனர்.

இந்த நிகழ்ச்சி வெற்றி பெற்றதையடுத்து வரும் ஆகஸ்ட் மாதம் நார்த் பார்க்கிற்கு சுற்றுலா செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.
Close