பத்த வைத்த பிரபல நடிகை: சிம்புவுடன் பேசுவதை நிறுத்திய ஹன்சிகா

பத்த வைத்த பிரபல நடிகை: சிம்புவுடன் பேசுவதை நிறுத்திய ஹன்சிகா

சென்னை: பிரபல நடிகை ஒருவரால் சிம்பு, ஹன்சிகா காதலில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம்.

சிம்புவும், ஹன்சிகாவும் தாங்கள் காதலிப்பதை மறைத்து வைக்காமல் அறிவிப்பு வெளியிட்டனர். அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவின் பிறந்தநாளுக்கு பெரிய கேக்கை பரிசாக அளித்தார். அவர்கள் இருவரும் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த போட்டோவெல்லாம் வெளியானது. அடடா இருவரும் நல்ல காதலில் உள்ளனர் என்று நினைத்தால் அவர்களுக்குள் லடாய் ஏற்பட்டுள்ளதாம்.

பிரபல நடிகை ஒருவர் அண்மையில் சென்னை வந்தபோது ஹன்சிகாவுக்கு போன் போட்டு பேசியுள்ளார். காதலில் விழுந்த ஹன்சிக்கு வாழ்த்து தெரிவித்த கையோடு சிம்புவை பற்றி உனக்கு தெரியாதா என்று ஒரு குண்டை போட்டுள்ளார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சிம்பு தன்னை காதலிப்பதாக தெரிவித்ததாகவும் ஆனால் வயது வித்தியாசத்தால் தான் அதை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தாராம்.

இதையடுத்து இந்த பய நம்மளத் தான் காதலிக்கிறான் என்று நினைத்தால் ஆளாளுக்கு புரபோஸ் பண்ணி இருக்கானே என்று ஹன்சி நொந்துவிட்டாராம். மேலும் தனது நலம் விரும்பிகளும் சிம்புவை பற்றி நல்ல விஷயங்கள் எதுவும் கூறாததால் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டாராம்.

 

சோலோவாகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

சென்னை: சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் போட்டியே இல்லாமல் சோலோவாக இன்று களமிறங்குகிறது.

இந்த ஆண்டு சிவகார்த்திகேயனுக்கு ரொம்ப நல்ல ஆண்டு. அவர் நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல் இரண்டுமே வெற்றிப் படங்கள்.

சோலோவாகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!

இவற்றைத் தொடர்ந்து இன்று கேடிபில்லா கில்லாடி ரங்கா படத் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் இன்று வெளியாகிறது.

விஷாலின் மதகஜராஜா இன்று 800 தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், அந்தப் படம் தள்ளிப் போனதால் சோலோவாகக் களமிறங்குகிறது வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

படத்துக்கு ஏக விளம்பரம் என்பதால் பெரிய ஓபனிங் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

சோலோவாகக் களமிறங்கும் சிவகார்த்திகேயன்!  

பூர்ணம் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், சூரி, ஸ்ரீதேவிகா நடித்துள்ளனர். டி இமான் இசையில் ஏற்கெனவே பார்க்காதே, ஊதா கலரு ரிப்பன் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன.

இந்தப் படமும் ஜெயித்தால், இந்த ஆண்டு ஹாட்ரிக் நாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இடம்பெறுவார்.

 

'முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல...' - வேந்தர் மூவீஸ் பிரஸ் ரிலீஸ் இது!

சென்னை: முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல திரையுலகில் பல படங்களை வெளியிடத் தோள் கொடுத்து வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம், என அந்த நிறுவனத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிறுவனம் இனி சிறிய பட்ஜெட் படங்களையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கை:

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல திரையுலகில் பல படங்களை வெளியிடத் தோள் கொடுத்து வருகிறது வேந்தர் மூவீஸ் நிறுவனம். இந்நிறுவனப் பெயர் சம்பந்தப் பட்டு விட்டாலே அந்தப் படத்தின் வணிகத் தகுதி கூடி பார்வையாளர் பரப்பளவும் அதிகரித்து வந்திருக்கிறது.

'முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல...' - வேந்தர் மூவீஸ் பிரஸ் ரிலீஸ் இது!

அரவான் தொடங்கி...

வேந்தர் மூவீஸ் 'அரவான்' படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்து, 'சகுனி' 'எதிர்நீச்சல்' போன்று விரிந்து அண்மைப் படமான 'தலைவா' வரை தயாரிப்பு, வெளியீடு என 28 படங்களை வழங்கியுள்ளது.

மலையாளத்திலும்...

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் பிரவேசிக்கும் இந்நிறுவனம், திலீப் நடிக்கும் 'நாடோடி மன்னனை' அடுத்த மாதம் வெளியிடுகிறது. தமிழில் வெற்றி பெற்ற 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை மலையாளத்தில் தயாரிக்க இருக்கிறது. 'நேரம்' படநாயகன் நவின்பாலி நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை நடிகை அம்பிகாவின் தம்பி சுரேஷ் இயக்குகிறார்.

மாருதி கிரியேஷன்ஸ்

இதுவரை பல வகையிலான பெரிய பெரிய பிரமாண்டப் படங்களில் பங்களிப்பு செய்த வேந்தர் மூவீஸ், தனது சகோதர நிறுவனமாக "மாருதி கிரியேஷன்ஸ்" என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.

சஞ்சீவி மூலிகை மாதிரி..

"இராமாயணத்தில் மூர்ச்சையாகிக் கிடந்த ராம, லெட்சுமணனை அனுமனான அந்த மாருதி ,சஞ்சீவி மூலிகை மலையைக் கொண்டு வந்து மீட்டார். அது போல இந்த மாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம், தரமான புதிய சிறுமுதலீட்டுப் படங்களைத் தேர்ந்தெடுத்து மீட்டு வெளியிடும். வெளிச்சம் பெற வேண்டிய சிறு படங்களுக்கு
இது அரிய வாய்ப்பாக அமையும். சின்ன படங்களில் நல்ல படங்களுக்கு இனிக் கவலை இல்லை என்று திரையுலகினர் வரவேற்பார்கள் என்பது நிச்சயம்," என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ் மதன்

இது பற்றி வேந்தர் மூவீஸ் எஸ்.மதன் கூறும் போது "வேந்தர் மூவீஸ் இதுவரை 28 படங்களை வழங்கியுள்ளது. எல்லாமே வெற்றிப் படங்கள். வேந்தர் மூவீஸ் சம்பந்தப் பட்டு விட்டாலே அந்தப் படத்தின் வணிகமதிப்பும் வெற்றி வாய்ப்பும் அதிகரித்து வந்திருக்கிறது. இந்நிலையில் பட்ஜெட் படங்கள் எனப்படும் சிறு முதலீட்டுப் படங்களை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்டுள்ளதுதான் மாருதி கிரியேஷன்ஸ் நிறுவனம். தகுதியுள்ள தரமான படங்களை இதன் மூலம் வெளியிட இருக்கிறோம். இது திரையுலகில் புதிய வெளிச்சமாக இருக்கும் என்று நம்பலாம்,'' இவ்வாறு எஸ்.மதன் கூறினார்.

'முல்லைக்குத் தேர் கொடுத்த பாரிவேந்தன் போல...' - வேந்தர் மூவீஸ் பிரஸ் ரிலீஸ் இது!

டி சிவா

தயாரிப்பாளர் டி சிவாதான் மாருதி கிரியேஷன்ஸின் கௌரவ ஆலோசகர். இவர்தான் ஆரம்பத்தில் வேந்தர் மூவீஸின் ஆலோசகராகவும் இருந்தார். இவரது சொந்த நிறுவனம்தான் அம்மா கிரியேஷன்ஸ்.

 

குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள்! - நடிகை மதுபாலா

குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள்! - நடிகை மதுபாலா

சென்னை: தான் முன்பு பரபரப்பாக நடித்த காலத்தில் குட்டைப் பாவாடை அணியச் சொல்லி நிர்ப்பந்தித்தார்கள். அதற்கு ஒப்புக் கொள்ளாததால் எனக்கு பல வாய்ப்புகள் பறிபோயின, என நடிகை மதுபாலா தெரிவித்துள்ளார்.

தொன்னூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி போன்ற படங்களில் நடித்தவர் மதுபாலா. பாலச்சந்தரின் அழகன் படத்திலும் நடித்துள்ளார்.

திருமணமாகி கணவர், இரு பெண் குழந்தைகள் என செட்டிலான மதுபாலா, மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தனது மறுபிரவேசம் குறித்து அவர் கூறுகையில், "நடிகையாக இருந்தபோது ரொம்ப கஷ்டப்பட்டேன். குட்டைப் பாவாடை, நீச்சல் உடை அணியச் சொல்லி இயக்குனர்கள் பலர் நிர்ப்பந்தித்தனர். என் உடம்பு வாகுக்கு அது சரிப்படாது என்று மறுத்தேன்.

இதனால் நிறைய படவாய்ப்புகளை இழந்தேன். இயக்குநர்கள் பாலச்சந்தர், மணிரத்னம் போன்றோர்தான் என்னை புரிந்து கொண்டு என் உடம்புக்கு ஏற்ற ஆடைகளை அணியச் செய்தனர்.

காதல் திருமணம் செய்து கொண்டேன். இருமகள்கள் உள்ளனர். அவர்களும் வளர்ந்துவிட்டனர். எனவே நடிக்க வந்துள்ளேன். தமிழ் படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்," என்றார்.

 

விஸ்வரூபம் 2... இந்திய தேசிய முஸ்லிம் லீக் உருவில் ஆரம்பமானது முதல் எதிர்ப்பு!

சென்னை: கமலஹாசனின் ‘விஸ்வரூபம்2' படத்துக்கு முதல் எதிர்ப்பு கிளம்பி விட்டது. இந்தப் படமும் இஸ்லாமியருக்கு எதிரான காட்சிகளைக் கொண்டிருப்பதாக இந்திய தேசிய முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

‘விஸ்வரூபம்' படத்தின் முதல் பாகம் வெளியானபோது ஏற்பட்ட நெருக்கடிகள் உலகறிந்தது. தமிழக அரசே தடை விதித்து, பின்னர் சமரச முயற்சியால், சில காட்சிகளைப் பலி கொடுத்த பிறகு அந்தப் படம் வெளியனது நினைவிருக்கலாம்.

விஸ்வரூபம் 2... இந்திய தேசிய முஸ்லிம் லீக் உருவில் ஆரம்பமானது முதல் எதிர்ப்பு!   

அதுபோல் ‘விஸ்வரூபம் 2' படமும் இப்போது பிரச்சினைக்குள்ளாகியுள்ளது. இந்த படத்தையும் கமலே இயக்கி நடித்துள்ளார். தீபாவளி அல்லது நவம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இந்த நிலையில் படத்துக்கு முதல் எதிர்ப்புக் குரல் கிளம்பிவிட்டது.

இப்படம் குறித்து இந்திய தேசிய முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜவஹர்அலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கமலஹாசன் நடித்து இயக்கி வரும் விஸ்வரூபம் பார்ட்-2 தீபாவளிக்கு வர இருப்பதாகவும், விஸ்வரூபம் படத்தை போன்று இப்படத்திலும் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து முஸ்லிம்களின் மனம் புண்படும்படியான காட்சிகள் இருப்பதாகவும் தகவல் வந்துள்ளதை கண்டு மிகவும் வேதனை அடைந்துள்ளோம். சகோதரர் கமலஹாசன் தொடர்ந்து முஸ்லிம்களை காயப்படுத்தி படம் எடுத்து வருவதும் பிறகு கருத்து சுதந்திரம் என்று பேசி அதன் மூலம் படத்தை விளம்பரப் படுத்தி கொள்வதும் நல்ல கலைஞனுக்கு அழகல்ல.

யார் மனதையும், காயப்படுத்தி திரைப்படம் எடுப்பதை நிறுத்தி கொள்ள வேண்டும். டாம் 999 மற்றும் மெட்ராஸ் கபே போன்ற திரைப்படங்கள் ஏன் தமிழகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை படைப்பாளி புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ‘விஸ்வரூபம்2' திரைப் படத்தில் முஸ்லிம்களை காயப்படுத்தும் காட்சிகள் இல்லாதவாறும் சமூக ஒற்றுமையை பறைசாற்றும் விதமாகவும் திரைப்படத்தை எடுத்து காயப்பட்டுள்ள இஸ்லாமியர்களின் நெஞ்சங்களில் மருந்து தடவ வேண்டும் என்று கமலஹாசனை இந்திய தேசிய முஸ்லிம் லீக் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

சென்னை: ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் தலைவா படம் பட்டபாட்டை பார்த்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டார். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்று கூறிவிட்டார்.

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில்,

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்றார்.

ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மதகஜராஜா இன்று ரிலீஸ் இல்லை!

சென்னை: விஷாலின் மதகஜராஜா படம் இன்று ரிலீஸ் ஆகவில்லை. பைனாஸ்சியர்கள் சிக்கல் நீடிப்பதால், படம் நாளை அல்லது அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

விஷால் - அஞ்சலி - வரலட்சுமி நடித்துள்ள படம் மதகஜராஜா. சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்தை ஜெமினி நிறுவனம் தயாரித்தது.

கடந்த பொங்கலுக்கே வெளியாக வேண்டிய இந்தப் படம், ஜெமினி நிறுவனத்தின் பழைய கடன்களால் முடங்கிப் போனது.

மதகஜராஜா இன்று ரிலீஸ் இல்லை!  

கடைசியாக விஷால் பெரும் முயற்சி எடுத்து, பல கோடிகள் கொடுத்து வாங்கி தன் சொந்த நிறுவனத்தின் பெயரில் வெளியிட முனைந்தார். படம் சிறப்பாக வந்திருப்பதால், நம்பிக்கையுடன் பெரும் செலவில் விளம்பரங்கள் செய்தார் விஷால்.

இந்த நிலையில், திடீரென ஜெமினி நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளுக்கு பணம் கொடுத்தவர்கள், இந்தப் படம் வெளியாகும் முன் தங்களின் மொத்தக் கடன்களையும் அடைத்தாக வேண்டும் என மல்லுக்கு நிற்க, டென்ஷனில் விஷால் மருத்துவமனைக்கு போக வேண்டியதாயிற்று.

கடந்த இரு தினங்களாக விஷால் தரப்புக்கும் பைனான்சியர்களுக்குமிடையிலான பேச்சு முடிவுக்கு வராததால், மதகஜராஜா வெளியீடு இன்று நிறுத்தப்பட்டது.

படம் நாளை வெளியாகிவிடும் என நடிகை குஷ்பு நம்பிக்கை தெரிவித்துள்ளார். அப்படி வெளியாகாவிட்டால் அடுத்த வெள்ளிக்கு தள்ளிப் போகலாம் என்கிறார்கள்.