பாகுபலி பார்க்க முடியலையே... சோகத்தில் துபாய் ரசிகர்கள்!

பாகுபலி படத்தை உலகமே பார்த்து ரசித்துக் கொண்டாடிய முதல் நாளில், அந்தப் படத்தைப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார்கள் துபாய்வாசிகள்.

துபாயில் பல மொழி மக்கள் வசித்தாலும், தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு வெளியாகும் தமிழ்ப் படங்களை ஹிட்டடிக்க வைப்பதில் பெரும் பங்கு இவர்களுக்கு உண்டு.

Duabi fans upset over Bahubali

பாகுபலி படம் குறித்த எதிர்ப்பார்ப்பு காரணமாக, இந்தப் படத்தை தமிழில் பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்தனர்.

நேற்று துபாயில் இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் மட்டும் வெளியாகின. ஆனால் படத்துக்காக ஆவலுடன் காத்திருந்த பல ஆயிரம் தமிழ் ரசிகர்கள் ஏமாந்துவிட்டனர். காரணம் அறிவித்த அரங்குகளில் தமிழ்ப் பதிப்பு வெளியாகவில்லை.

காலை மற்றும் பிற்பகல் காட்சிகளுக்கு தமிழ்ப் பதிப்பு வெளியாகாததால், ரசிகர்கள் பலரும் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெற்றனர். சிலரோ, இந்தி, தெலுங்காக இருந்தாலும் பரவாயில்லை என படத்தைப் பார்த்தார்களாம்.

 

ரஜினியின் புதிய படம்.. தலைப்பு ரெடி.. ஹீரோயின் ரெடி... லொகேஷனும் ஓகே.. ஆகஸ்டில் ஷூட்டிங்!

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் அனைத்து முன் தயாரிப்புப் பணிகளும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. இன்னொரு அறிவிப்புடன் ஷூட்டிங் கிளம்பப் போகிறது படக் குழு.

லிங்காவுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படத்தை மெட்ராஸ் படம் தந்த ரஞ்சித் இயக்குகிறார். இது எந்த மாதிரி கதை, ரஜினியின் வேடம் என்ன என்பது குறித்து எந்த தகவலும் கசியாமல் ரகசியம் காக்கிறார்கள்.

Rajini's new movie shooting in August 1st week

படத்தின் தலைப்பு, ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நாயகி, எங்கே ஷூட்டிங் நடத்துகிறார்கள் போன அனைத்து விஷயங்களும் முடிவு செய்யப்பட்டுவிட்டன.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. ஆனால் அதற்கு முன்பே ஊடகங்களில் விஷயம் வெளியாகிவிட்டதால், அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு பெரிய தாக்கம் ஏற்படாமல் போனது.

எனவே படத்தின் தலைப்பு உள்பட எந்த விஷயத்தையும் வெளியிடாமல் வைத்துள்ளனர். ஆகஸ்ட் முதல் வாரம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிகிறது.

 

மரண அடி அடிச்சாயே பெண்ணே...- அஸ்லாம் பாடிய முதல் கானா பாட்டு!

நாட்டாமை படத்தில் ‘நான் உறவுக்காரன்' பாடல் மூலம் ஒரு பின்னணி பாடகராக அறிமுகமானவர் அஸ்லாம். அதன்பிறகு வித்யாசாகர், எஸ்.ஏ.ராஜ்குமார் ஆகியோர் இசையில் பாடல்களை பாடிய இவர் மீது, இந்தியில் ‘ரங் தே பசந்தி' படம் மூலம் புகழ் வெளிச்சம் பாய்ச்சினார் ஏ.ஆர்.ரஹ்மான்.

தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சில்லுனு ஒரு காதல், வரலாறு, குரு, அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் பாடியுள்ளார்.

Aslam's first Gana song

ரஹ்மானின் இசைக்குழுவில் முக்கிய இடம்பிடித்த அஸ்லாம், இசை நிகழ்ச்சிகளுக்காக வெளிநாடு சென்று வந்தார். அங்கே எல்லாம் கானா பாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதைக் கவனித்த அஸ்லாம், தன் பங்கிற்கு தானும் ஒரு அதிரிபுதிரியான கானா பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.

கானா பாடியது பற்றி அஸ்லாம் என்ன சொல்கிறார்..?

"இன்றைக்கு கானா பாடல்கள் என்பவை தவிர்க்க முடியாதவை ஆகிவிட்டன. படங்களின் புரமோஷனுக்கு கூட அவைதான் பயன்படுகின்றன. உலக அளவில் கானாவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.. அதனால் நானும் கானா பாடலாம் என முடிவு செய்திருந்த நேரத்தில் என் நண்பரும் இசையமைப்பாளருமான சந்தோஷ் என்னை புதுமுகங்கள் நடிக்கும் "டுமீல் குப்பம்" என்னும் படத்திற்காக அணுகினார்.

ஸ்ரீ பிலிம் மீடியா தயாரிக்கும் அந்த படத்தில் "மரண அடி அடிச்சாயே பெண்ணே.." என்ற கானா பாடலை பாடியுள்ளேன். அந்த பாடலுக்காக சந்தோஷ் எழுதியிருந்த வரிகள் என்னை ரொம்பவே கவர்ந்தன.

Aslam's first Gana song

குறிப்பாக,

"சென்ட்ரல் ஸ்டாண்டுனா ஓட்டேரிதான்
உன் கூட சுத்துற வேலைக்கு நா ரெடிதான்
காசிமேடு கப்பலு பாசிபோல
லைப்புலாங்கு ஓட்டணும் ஒங்கூடவே.."

என சென்னை ஏரியாவை ரவுண்டப் பண்ணி பாடல் எழுதியுள்ளார் சந்தோஷ்.. இவர் ஏற்கனவே மாலுமி படத்தில் கானா பாலாவுக்காக ஒரு பாடல் எழுதியவர்தான்.. இந்த கானா பாடல் எனது இன்னொரு பரிமாணத்தை காட்டும்," என்கிறார் உறுதியாக.

 

போலீஸ் கம்ப்ளெயின்ட் கொடுக்கலாமா?- ஆலோசனை கேட்கும் ஸ்ரீதிவ்யா

தன் பெயரில் போலி ஆபாச வீடியோ ஆன்லைனில் உலா வருவது குறித்து காவல் துறையின் உதவியைக் கோரப் போகிறாராம் ஸ்ரீதிவ்யா.

பிரபல நடிகைகளின் பெயர்களில் தொடர்ந்து ஆபாசப்படங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவற்றில் எது நிஜம் எது போலி என்றெல்லாம் யாரும் யோசிப்பதே இல்லை.

Sridivya to file complaint against abusive video

இன்றைக்கு எந்த நடிகையின் வீடியோ வந்திருக்கிறது? என வாட்ஸ்ஆப்பை கிளறியபடி காத்திருக்கின்றனர்.

கடந்த காலங்களில் ராதிகா ஆப்தே, லட்சுமி மேனன், ஹன்சிகா, ராய் லட்சுமி, நேற்று முன்தினம் நயன்தாரா என பலரது நிர்வாண, ஆபாச வீடியோக்கள் வந்தன.

நேற்று நடிகை ஸ்ரீதிவ்யாவின் நிர்வாண வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது.

குடும்ப குத்துவிளக்கு போல திரையில் நடித்தும் ஸ்ரீதிவ்யாவா இது என பலரும் அவர் காதுபடவே கமெண்ட் அடிப்பதால் நொந்து போன ஸ்ரீதிவ்யா, போலீசில் புகார் தந்தால் பலனிருக்குமா என பலரிடமும் ஆலோசனைக் கேட்டுள்ளார்.

அவரது சீனியர் நடிகைகள் பலரின் கதைகளைக் கூறி, கண்டிப்பா கொடுங்க என நட்புகள் அட்வைஸ் தரவே, விரைவில் கமிஷனர் அலுவலகத்துக்கு செல்ல முடிவு செய்துள்ளா ஸ்ரீதிவ்யா.

 

உதைன்னா உதை... இது கவுண்டமணி உதை!

எவர்கிரீன் காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் 'எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது' என்ற படத்தின் ஷூட்டிங் படுவேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் இந்தப் படத்துக்காக கவுண்டமணி பங்கேற்ற சண்டைக் காட்சிகள் மதுரையில் நடந்தது.

Goundamani in Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

மதுரையில் பரபரப்பான மாட்டுதாவணி, தெப்பக்குளம் நத்தம் ரோடு போன்ற நடந்த இந்த சண்டைக் காட்சியை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் படமாக்கினார்.

3 நாட்கள் கொஞ்சமும் களைப்பின்றி அதிரடி சண்டை காட்சியில் நடித்துள்ளார் கவுண்டமணி. மிகவும் சிறப்பாக இந்த சண்டைக்காட்சி அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர். கவுண்டரிடம் அடிவாங்கும் காட்சியில் நடித்த ஸ்டன்ட் கலைஞர்கள்.. கவுண்டரின் வேகம் இந்த வயதிலும் ஆச்சர்யப்படுத்துவதாகக் கூறினர்.

Goundamani in Enakku Veru Engum Kilaigal Kidaiyathu

இந்தப் படத்தில் கவுண்டமணி ஜோடியாக தெலுங்கு நடிகை சனா நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, சௌந்தரராஜா, சதுரங்கவேட்டை வளவன், ஜிகிர்தண்டா ராமச்சந்திரன் மற்றும் பின்னணி பாடகர் வேல்முருகன், ஒளிப்பதிவாளர் டீ.கண்ணன், வாசகன் போன்றோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் சுசிந்திரன் உதவியாளர் கணபதி பாலமுருகன் இயக்கும் இப்படத்தின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது.

 

'புலி ஸ்டில்களை திருட்டுத்தனமா ரிலீஸ் பண்ணிட்டாங்க' - தயாரிப்பாளர் புகார்

விஜய் நடித்துள்ள புலி படத்தின் ஸ்டில்களை சிலர் திருட்டுத் தனமாக இணையத்தில் வெளியிட்டு தங்களை டென்ஷனாக்கி வருவதாகக் கூறி, போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர்.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் ஆகியோர் நடித்துள்ள படம் ‘புலி'. இப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர், விஜய் பிறந்த தினத்தில் வெளியிட ‘புலி' படக் குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

Leaking Puli stills online... producer lodged complaint

ஆனால், விஜய் பிறந்தநாளுக்கு 12 மணி நேரத்திற்கு முன்பே இப்படத்தின் புகைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டார்களாம். இதனால், ‘புலி' படக்குழுவினர் அதிர்ச்சிக்குள்ளானர்கள்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான தயாரிப்பாளர்கள் சிபு தமீம்ஸ், பி.டி.செல்வகுமார் ஆகியோர் இணையதளத்தில் திருட்டுத்தனமாக புகைப்படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தற்போது சென்னை கமிஷனர் ஜார்ஜிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

புகாரை பெற்றுக்கொண்ட கமிஷனர், குற்றவாளிகளை கண்டுபிடிக்க சைபர் கிரைமுக்கு உத்தவிட்டுள்ளார். எனவே துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. மேலும், ‘புலி' படத்தின் புகைப்படங்களை வெளியிட்டவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தில் பணிபுரிந்த அனைவரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். புகைப்படங்களை வெளியிட்டவர்கள் யார் என்று தெரிந்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஏற்கெனவே, ‘புலி' படத்தின் டீசரை திருட்டுத்தனமாக வெளியிட்ட மிதுன் என்ற வாலிபரை காவல் துறையில் கண்டுபிடித்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவல்களை நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்த தயாரிப்பாளர் பிடி செல்வகுமார், அதிகாரப்பூர்வமான செய்தி மற்றும் படங்களை விரைவில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்குத் தரவிருப்பதாகக் கூறினார்.

 

ராமானுஜர் பாக்குறயா? கேட்கும் கருணாநிதி... நழுவும் மாஜிக்கள்

கலைஞர் தொலைக்காட்சியில் கருணாநிதியின் கை வண்ணத்தில் உருவான ராமானுஜர் காவியம் ஒளிபரப்பாகிறது. இதுவரை 25 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகிவிட்டது. ஒவ்வொரு எபிசோடும் சுவாரஸ்யங்களுடன் செல்கிறது. இந்த தொடரை திமுகவினர் பார்க்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறாராம் கருணாநிதி.

மதத்தில் புரட்சி செய்த மகான் ராமானுஜரின் பிறப்பு தொடங்கி அவரது வாழ்வில் நடைபெற்ற பல்வேறு சம்பவங்களை தன்னுடைய பாணியில் அழகான வசனங்களுடன் கூறி வருகிறார் கலைஞர் கருணாநிதி.

Ramanujar Serial telecast on Kalaignar TV

அவ்வப்போது சின்னச் சின்ன நையாண்டி வசனங்களும் இடம் பெறத் தவறுவதில்லை. ராமானுஜரின் ஜாதகம் பார்க்கும் காட்சியில் ஒரு பாட்டி, தன்னுடைய மலரும் நினைவுகளை கூறும் தருணத்தில், "தான் வெங்கடேசனை பெற்றேடுத்தேன் என்று கூற "திருமலை வெங்கடேசனா பாட்டி?" என்று கேட்கிறார் ஒருவர். "இல்லை இல்லை... என் மகன் வெங்கடேசன்" என்று கூறுகிறார் பாட்டி.

அதற்கு அவரோ, " பாட்டி, வெங்கடேசனைத் தொடர்ந்து வரதராஜன், திருவரங்கன், ஆதிகேசவன் என்று வேறு யாரையும் பெற்றெடுக்கவில்லையா பாட்டி?" என்று கேட்கிறார்.

ஏன் இல்லை அடுத்தடுத்து 9 ஆண்டுகளில் 9 ஆண்சிங்கங்களை பெற்றெடுத்தேன் என்று கூறி பெருமிதப்படுகிறார். உடன் அவர் தன்னுடைய மனைவியிடம், பெரியபிராட்டி, "திருமணமானதில் இருந்து குழந்தைகளை பெற்றெடுப்பதையே இந்த பெண் சிங்கம் முழுநேர வேலையாக செய்திருக்கும் போலிருக்கிறதே என்று கூறி நையாண்டி செய்கிறார்.

Ramanujar Serial telecast on Kalaignar TV

உலகம் போற்றும் உத்தமர்

தொடர்ந்து ராமானுஜரின் ஜாதகத்தைக் கணித்த மாமா, ராமானுஜர் ஊர் போற்றும்படி மட்டுமல்ல உலகமே போற்றும்படி இருப்பார் என்று கூறி பெற்றோர்களையும், உறவினர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துக்கிறார்.

தெய்வக்குழந்தை

"ராமானுஜன் சாதாரண குழந்தையல்ல எண்ணெய் ஆடும் செக்கில் இருந்து தெறித்து விழுந்த எள்" என்று ஜாதகம் கணித்துக்கூறுகிறார் பெரியப்பா.

இவன் பெரிய பரோபகாரியாக இருப்பான். மனிதர்களுக்கு இடையே உள்ள பேதங்களை களைய வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பான் என்றும் கூறுகிறார் ஜாதகம் கணித்தவர்.

ராமானுஜரின் விருப்பம்

ராமானுஜரின் எதிர்காலத்தில் என்னவாக வருவார் என்பதை அறியவும் அவரது விருப்பம் எது என்று அறிந்து கொள்ள ஒரு சோதனை வைக்கின்றனர். ஒரு தட்டில் கொழுக்கட்டை, ஒரு தட்டில் தானியங்கள், ஒரு தட்டில் பொன் நகைகள், ஒரு தட்டில் திவ்ய பிரபந்தம் என குவித்து வைத்திருக்கின்றனர். இதில் ராமானுஜர் எதை எடுப்பார் என்பதை ஆவலுடன் பார்க்க ராமானுஜரோ தன்னுடைய பிஞ்சுப் பாதங்களால் நடந்து சென்று திவ்ய பிரபந்தத்தை எடுக்கிறான். உடனே அனைவருமே மகிழ்ச்சியடைகின்றனர்.

விழிக்கும் மாஜிக்கள்

ராமானுஜரின் கதைக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று இதனை எழுதும் கருணாநிதிக்கு தனி ஆர்வம் இருக்கத்தான் செய்கிறது. அதனால்தான் தன்னை சந்திக்கும் மாஜி அமைச்சர்களைப் பார்த்து டிவியில் ராமானுஜர் தொடர் பாக்குறயாயா? என்று கேட்கிறாராம் கருணாநிதி.அதைக் கேட்டு விழிக்கும் மாஜிக்கள் இல்லை தலைவரே இனிமேல் பார்க்கிறோம் என்று கூறி தப்பித்து விடுகின்றனராம்.

Ramanujar Serial telecast on Kalaignar TV

நழுவும் மாஜிக்கள்

திமுகவினர் பலரும் ராமானுஜர் பார்ப்பதில்லை என்பதால் தலைவர் நம்மை கேட்டால் என்ன பதில் சொல்வது என்று யோசித்து, அறிவாலயம் போனாலும் கருணாநிதியின் பார்வையில் படாமல் போய்விடுகிறார்களாம். மானாட மயிலாட பற்றி கேட்டால் மாஜிக்கள் சொல்லியிருப்பார்களோ என்னவோ? ராமானுஜரை பார்க்க அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது?