இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்துத்துக்குப் பிறகு விஜய் சேதுபதியின் ஜோடியாக மீண்டும் நடிக்கிறார் நந்திதா.
சீனு ராமசாமி இயக்கத்தில் மற்றும் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு நடிப்பில் உருவாகும் படம் 'இடம் பொருள் ஏவல்'.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக முதலில் ஒப்பந்தமானவர் மனீஷா யாதவ். ஆனால் இவர் அந்த வேடத்துக்குப் பொருத்தமில்லை என்று கூறி நீக்கினார் சீனு ராமசாமி.
ஆனால் தனக்கு சீனி ராமசாமி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக மனீஷா செய்தி பரப்பினார். பின்னர் நடிகர் சங்கத்துக்குப் புகார் போனது. அவர்கள் விசாரித்ததில் மனீஷா கூறியது பொய் என்பது அம்பலமானது.
உடனே கொடைக்கானல் குளிர் ஒத்துக் கொள்ளாததால் படப்பிடிப்பிலிருந்து வந்துவிட்டதாக மனீஷா தெரிவித்தார்.
இதற்கிடையில், மனீஷாவுக்கு பதில் அந்த மலை கிராம பெண் வேடத்துக்கு நந்திதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி. இவர், ஏற்கெனவே ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இருவரும் இரண்டாவது முறையாக இணையும் படம் இது.
அதேசமயம் மனிஷா படத்தில் வரும் இன்னொரு கதாபாத்திரத்தில் மனீஷா விரும்பினால் நடிக்கலாம் என்று சீனு ராமசாமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முதன்முறையாக இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதுகிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.