என்னைப் பொறுத்தவரை அமைதிதான் நிரந்தரம். ஆன்மீகத்தையே நாடுகிறேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சமீபத்தில் தொடங்கிய சென்னை தின கொண்டாட்டத்தில் ஒரு பகுதியாக ரஜினி குறித்த சிறப்புரையை வழங்கினார் நடிகர் மோகன்ராம்.
அவர் இரண்டு மணி நேரம் ரஜினி பற்றி பேசினார். ரஜினி குறித்த இடையிடையே ஆடியோ விஷூவல்கள் காட்டப்பட்டன.
நிகழ்ச்சியின் ஹைலைட்டாக அமைந்தது, மோகன் ராமுக்காக ரஜினி அளித்த சிறிய ஆடியோ பைட்.
அந்த ஆடியோ பேட்டியில் ரஜினி கூறுகையில், "இளம் வயதில் நான் எதையும் ஆர்வமாகவே கற்றுக்கொண்டிருந்தேன்.
எந்த விஷயமாக இருந்தாலும் நான் விரும்பி கற்றுக்கொண்டிருந்த நேரம். ‘இன்னும் நீங்கள் கற்றுக்கொண்டிருக்கிறீர்களா?' என்கிறார்கள். கற்றுக் கொள்வது முடிவற்ற விஷயம்.
ஆனால் நான் ஆன்மிகத்தை நாடுகிறேன். அமைதியை தேடுகிறேன். சந்தோஷம் வரும், போகும். ஆனால் நிரந்தரமாக இருப்பது அமைதி மட்டும்தான்,' என்றார்.