சித்ராங்கதாவையும் பிடித்தார் ஜான் ஆப்ரகாம்!

Tags:


காதலி பிபாஷா பாசுவை விட்டுப் பிரிந்த வேகத்தில் ஏராளமான தோழிகளை அடுத்தடுத்து பெற ஆரம்பித்திருக்கிறார் ஜான் ஆப்ரகாம். இவர்களில் யாரை அவர் அடுத்து தீவிரமாக காதலிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பாலிவுட்டில் பரபரப்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீண்ட காலமாக காதலித்து வந்த பிபாஷாவும், ஜான் ஆப்ரகாமும் தற்போது விலகி விட்டனர். இருவரும் சுதந்திரப் பறவையாகியுள்ள நிலையில் ஜான் ஆப்ரகாம் அடுத்த வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்.

சமீபத்தில் அவரும் தீபிகா படுகோனும் நெருக்கமாக பழக ஆரம்பித்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல ஜெனீலியாவுடனும் நெருங்கிப் பழகுகிறார் ஜான் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது சித்ராங்கதா சிங்குடனும் ஜான் நெருங்கிப் பழக ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இருவரும் தேஸி பாய்ஸ் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்துத்தான் இந்த நட்புத் தீ பற்றிக் கொண்டதாம். இருவரும் ஷூட்டிங்கின்போது ஒருவரை ஒருவர் பாராட்டித் தள்ளிக் கொள்கின்றனராம். புகழ் மழை பொழிகிறதாம். மனம் விட்டுப் பேசிக் கொள்கிறார்களாம்.

இருவருக்கும் இடையே படத்தில் நெருக்கமான காட்சிகளும் எக்கச்சக்கமாக உள்ளதாம். அதில் இருவரும் எந்தவிதமான சங்கோஜமும் இல்லாமல் நெருக்கமாக நடித்துள்ளனராம்.

இருவருக்கும் ஜோடிப் பொருத்தம் அபாரம் என்று யூனிட்டில் வேறு பேசி வருவதால், இருவருக்கும் இடையிலான நட்பும், நெருக்கமும் ஏகத்திற்கு அதிகரித்து விட்டதாம்.

இருந்தாலும் இது வெறும் நட்புதான் என்று இருவரது தரப்பிலும் கூறுகிறார்கள். ஆனால் வெறும் நட்பா அல்லது பெரும் உறவுக்கு முன்னோட்டமா என்பது போகப் போகத்தான் தெரியும்.
 

வேண்டாம் பாலிவுட்! - அனுஷ்கா

Tags:



தெலுங்குப் படங்கள் ஆர்ப்பாட்டமானவை… தமிழ்ப் படங்கள் யதார்த்தமானவை, ரசிகர்களை ஈர்ப்பவை. இந்தப் படங்களில் நடிப்பதே போதும். இந்தியில் நடிக்க ஆர்வமில்லை, என்று கூறியுள்ளார் நடிகை அனுஷ்கா.

தெலுங்கில் முன்னணி நடிகை அனுஷ்கா. சிங்கம், வேட்டைக்காரன் போன்ற தமிழ் படங்களில் நாயகியாக நடித்தவர் அனுஷ்கா. தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், ” தெலுங்குப் படங்கள் ஆர்ப்பாட்டமானவை. ஆனால் தமிழ்ப் படங்கள் ஆழமானவை… யதார்த்தத்தைப் பிரதிபலிப்பவை. எனக்கு இந்த இருவகைப் படங்களிலும் நடிப்பது சுவாரஸ்யமாக உள்ளது.

வானம் படத்தில் விலைமாது கேரக்டரில் நடித்தேன். அதன் ஒரிஜினல் படமான வேதம் படத்திலும் இதே கேரக்டரை நான் செய்திருந்தேன். எந்த மொழியில் அந்தப் படத்தை ரீமேக் செய்தாலும் அந்த வேடத்தை நானே செய்ய விரும்புகிறேன்.

ஒரு யோகா டீச்சராக என் வாழ்க்கையை ஆரம்பித்தேன். 12 வயதிலிருந்து யோகா செய்கிறேன். தினமும் குறைந்தது ஒரு மணி நேரமாவது யோகா செய்து விடுவேன். சூரிய நமஸ்காரம், ஆசனங்களை மட்டும் 108 தடவை செய்வேன்.

ஷில்பா ஷெட்டி போல் யோகா ஆல்பம் வெளியிடு வீர்களா என்று என்னிடம் கேட்கின்றனர். அந்த அளவு யோகாவில் நான் மேதை இல்லை. இன்னும் ஒரு மாணவி போலவே என்னை உணர்கிறேன். எனது குரு பரத் தாகூர் அது போன்று ஆல்பம் வெளியிடலாம்.

விக்ரமுடன் இணைந்து நடிக்க ஆர்வம் இருந்தது. தெய்வத்திருமகள் படத்தில் அது நிறைவேறி உள்ளது. சிங்கம் படத்தை இந்தியில் ரீமேக் செய்து அதில் நடிக்க அழைத்தனர். நான் மறுத்து விட்டேன். தென்னிந்திய மொழி படங்களே எனக்குப் போதும்”, என்றார்.

 

அழகுச் சிலை கரீனாவுக்கு லண்டனில் மெழுகுச் சிலை

Tags:



மும்பை: லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் நடிகை கரீனா கபூரின் மெழுகுச் சிலை வைக்கப்பட உள்ளது.

பாலிவுட்டின் நம்பர் ஒன் ஹீரோயின் கரீனா கபூர். பெரிய படமா, கூப்பிடு கரீனாவ என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். நடிக்க வந்த புதிதில் கொளுக், மொழுக் என்றிருந்த கரீனா தற்போது சைஸ் ஜீரோவாக உள்ளார்.

லண்டனில் உள்ள மேடம் டுசாட்ஸ் மியூசியத்தில் தங்கள் கனவுக் கன்னி கரீனா கபூரின் மெழுகுச் சிலையை வைக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பட்டாளம் வேண்டுகோள் விடுத்தது. இதையேற்று தற்போது கரீனாவுக்கு மெழுகுச்சிலை வைக்கப்படவுள்ளது.

கரீனா, ஆமிர் கானுடன் புதுவையில் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். அது முடிந்தவுடன் இங்கிலாந்து சென்று இது குறித்து அதிகாரிகளை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே மேடம் டுசாட்ஸில் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான், சல்மான் கான், ரித்திக் ரோஷன் மெழுகுச் சிலைகள் உள்ளன. இந்த வரிசையில் இப்பொழுது கரீனாவும் சேர்ந்துள்ளார்.

 

ராகுல் பட்டுடன் இணைந்து சினிமா எடுக்க விரும்பிய தீவிரவாதி ராணா!

Tags:



சிகாகோ: மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி ராணா, இந்தியில் இயக்குநர் மகேஷ் பட்டுடன் சேர்ந்து திரைப்படம் தயாரிக்க விரும்பியதாக மற்றொரு குற்றவாளியான டேவிட் ஹேட்லி பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

சிகாகோ நீதிமன்றத்தில் இன்றைய வழக்கு விசாரணையின்போது, ராணாவின் வழக்கறிஞர் பேட்ரிக் ப்ளேகன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போது அவர் இத்தகவலைத் தெரிவித்தார்.

தனது படத்தில் பிரபல இந்திப்பட தயாரிப்பாளர் மகேஷ் பட் மகன் ராகுல் பட்டுடன் இணைந்து பணியாற்ற ராணா விரும்பினார் என்றும் ஹேட்லி கூறியுள்ளார். மகேஷ் பட் உதவாததால் தன்னால் சினிமாவில் பிரகாசிக்க முடியவில்லை என ராகுல் பட் கூறினாராம். எனவே பாகிஸ்தானின் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளின் பின்னணியில் ஒரு படம் எடுக்கத் திட்டமிட்டிருந்தார்களாம்.

ஆனால், அவரால் தனது திரைப்படக் கனவை நிறைவேற்ற முடியவில்லை. சினிமாவில் ஈடுபடுவது லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என்பதால் ராணாவின் ஆசை நிறைவேறவில்லை என்றும் ஹேட்லி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

பொது இடத்தில் லிப் டு லிப்: தீபிகா படுகோன் மீது போலீசில் புகார்!

Tags:



சென்னை: விஜய் மல்லையா மகனுடன் கிரிக்கெட் மைதானத்தில் லிப் டு லிப் கிஸ் அடித்து பரபரப்பேற்படுத்திய நடிகை தீபிகா படுகேன் மீது சென்னை போலீசில் புகார் கொடுத்துள்ளது இந்து மக்கள் கட்சி.

அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் திருவல்லிக்கேணி போலீசில் நடிகை தீபிகா படுகோனே மீது இன்று புகார் அளித்தார்.

அதில், “நடிகை தீபிகா படுகோனே பொது இடங்களில் கலாச்சாரத்துக்கு எதிராகவும் அறுவறுக்கத்தக்க ஆபாச செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் பெங்களூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியை காண வந்திருந்த தீபிகா படுகோனே அணியின் தலைவர் சித்தார்த் மல்லையாவை உதட்டோடு உதடு முத்தமிட்டார்.

மைதானத்தில் இக்காட்சியை கண்டவர்கள் அதிர்ச்சியானார்கள். இது இந்திய கலாச்சாரத்துக்கு விரோதமாகவும் பெண்மையை சீரழிக்கும் வகையிலும் இருந்தது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இப்போட்டியை காண தீபிகா படுகோனே வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சேப்பாக்கம் மைதானத்திலும் தீபிகா படுகோனே ஆபாசமாக நடந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம். பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளும் தீபிகா படுகோனேவை சேப்பாக்கம் ஸ்டேடியத்துக்குள் அனுமதிக்கக்கூடாது,” என்று கூறியுள்ளார்.

 

எஸ்ஏ சந்திரசேகரனுக்கு இடைக்காலத்தடை!

Tags:



சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தொடர இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர்-இயக்குநர் பாபு கணேஷ் தொடர்ந்த வழக்கில் சென்னை சிட்டி கோர்ட் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. தயாரிப்பாளர் சங்க விதிகளுக்கு எதிராக எஸ்.ஏ. சந்திரசேகரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று பாபு கணேஷ் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுக்குழு கூடி தேர்தல் நடத்தும் வரை எஸ்.ஏ.சி. நியமனத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பாபுகணேஷ் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்த மனுவை ஏற்றுக் கொண்ட சிவில கோர்ட், எஸ்.ஏ.சந்திரசேகரன் பதவி தொடர தடைவிதித்து, அது குறித்து பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

 

மனைவி, மகளுடன் சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் பயணம்

Tags: English, nbsp



சென்னை: பார்வையாளர்களைக் கட்டுப்படுத்தவும், இடம் மாறி சிகிச்சை பெற்றால் புத்துணர்ச்சியாக இருக்கும் என்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபல சிறுநீரக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். இதற்காக இன்று இரவு ரஜினியை அழைத்துக் கொண்டு அவர்கள் சிங்கப்பூர் செல்கின்றனர்.

ஆரம்பத்தில் லண்டனுக்கு சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போவதற்குப் பதில் அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரிலேயே அதி நவீன வசதிகள் நிறைய கிடைப்பதால் அங்கு செல்லலாம் என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தற்போது ரஜினியின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு இருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். கட்டுப்பாட்டுடன் கூடிய சாப்பாட்டை சாப்பிட்டபடி, டிவி பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.

  Read:  In English 
 

நடிகை ஹேமமாலினி வீட்டுக்குள் சிறுத்தை புகுந்தது

Tags: English, nbsp



மும்பை: அருகே மலத் என்ற இடத்தில் ஹேமமாலினியின் பங்களா உள்ளது. இந்த பங்களாவுக்குள் இன்று ஒரு சிறுத்தை புகுந்து விட்டது. இதையடுத்து வனத்துறைக்குத் தகவல் போனது.

தற்போது வனத்துறை ஊழியர்கள் குழு ஹேமமாலினியின் பங்களாவுக்கு விரைந்துள்ளது. சிறுத்தை புகுந்த வீட்டில் தற்போது ஹேமமாலினி இல்லை.

  Read:  In English