ஜெய் இயக்கும் ஆந்திரா மெஸ்

‘ஷோ போட் (Show boat)' ஸ்டூடியோஸ் என்ற புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் படத்தின் தலைப்பு 'ஆந்திரா மெஸ்'. விளம்பரப் படங்களை இயக்கும் ஜெய் இந்த படத்தினை இயக்குகிறார்.

இப்பொழுதெல்லாம் தமிழ்சினிமாவிற்கு வித்தியாசமான தலைப்பை வைக்க ஆரம்பித்துவிட்டனர் இயக்குநர்கள்.

ஜெய் இயக்கும் ஆந்திரா மெஸ்

ரசிகர்களைக் கவரும் வண்ணம் தலைப்பு சூட்டியுள்ள படங்கள் சட்டென்று பிரபலமாகிவிடுகின்றன. எனவேதான் வித்தியாசமான தலைப்புகளைப் புதிய இயக்குனர்களை யோசிக்க வைக்கிறது.

சில்லறை குற்றங்களில் ஈடுபட்டு வரும் நால்வர், சிறுவயதில் ஏற்பட்ட ஒரு பொதுவான துயரத்தின் அடிப்படையில் சேர நேர்கிறது . அடிப்படை சந்தோஷங்கள் எதையும் இழக்க மன மில்லாமல் , யாருக்கும் அடிபணியாமல் வாழ நேரிடும் அவர்களது வாழ்கை பயணமே 'ஆந்திரா மெஸ்'.

இப்போதெல்லாம் அறிமுக இயக்குநர்கள் புதிது புதிதாக யோசிக்கின்றனர். இந்த படத்தின் இயக்குநர் ஜெய் அறிமுக இயக்குநர்தான். ‘ஷைத்தான்' பட இசையமைப்பாளர் பிரசாந்த் பிள்ளை இசையமைக்கும். ரேணிகுண்டா ஸ்டைலில் இந்தப் படம் தயாராகியுள்ளது என்கின்றனர்.

 

இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளியாகாத முதல் வெள்ளிக்கிழமை!

இந்த ஆண்டில் ஒரு படம் கூட வெளியாகாத முதல் வெள்ளிக்கிழமை!

விசேஷ நாட்களைத் தவிர, மற்ற காலங்களில் புதிய தமிழ்ப் படங்கள் வழக்கமாக வெளியாகும் தினம் வெள்ளிக்கிழமை.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது மூன்றுமுதல் அதிகபட்சம் ஒரு டஜன் படங்கள் வரை வெளியாவது வழக்கம். சின்ன பட்ஜெட் படங்கள், பிறமொழிப் படங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கிய கணக்கு இது.

ஆனால் இந்த ஆண்டில் முதல் முறையாக இன்றுதான் (வெள்ளி) ஒரு தமிழ்ப் படம் கூட வெளியாகவில்லை.

காரணம், புதிய படங்கள் வெளியாகும் பெரும்பாலான தியேட்டர்களில் தீபாவளிப் படங்களான பாண்டிய நாடு, ஆரம்பம், அழகுராஜா போன்றவை வெளியாகியுள்ளன.

இவற்றில், பாண்டிய நாடு படத்துக்கு, அதன் ரிலீசுக்குப் பிறகு கூடுதலாக 75 தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதனால் இன்று வெளியாகவிருந்த சில சின்ன படங்களுக்கு தியேட்டர்களே கிடைக்கவில்லை. இவை அடுத்த வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் தீபாவளிப் படங்களுக்கு 15 நாட்கள் வரை வசூலிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சுமார் என்று சொல்லப்படும் படம் கூட, இந்த இடைவெளியில் போதுமானவரை வசூலித்துவிட முடியும் என்பதால் தயாரிப்பாளர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

 

வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்ட்டியில் அஜீத், கார்த்தி

வெங்கட் பிரபுவின் பர்த்டே பார்ட்டியில் அஜீத், கார்த்தி

சென்னை: இயக்குனர் வெங்கட் பிரபுவின் பிறந்தநாள் விழாவில் அஜீத் குமாரும், கார்த்தியும் கலந்து கொண்டனர்.

இயக்குனர் வெங்கட் பிரபு நேற்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடினார். முன்னதாக நள்ளிரவில் அவருக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்துள்ளனர் திரை உலக நண்பர்கள்.

சென்னை ஈசிஆரில் உள்ள ஒரு இடத்தில் தான் இந்த பார்ட்டி நடந்துள்ளது. இதில் வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி அமரன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா, நடிகர்கள் ஜெய், வைபவ், தங்கை வாசுகி பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டியில் வெங்கட்டின் மங்காத்தா நாயகன் அஜீத் குமாரும், பிரியாணி நாயகன் கார்த்தியும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர்.

பார்ட்டிக்கு ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா, எஸ்ஆர் பிரபு ஆகியோரும் வந்துள்ளனர். நேற்று மதியம் ஆர்கேவி ஸ்டுடியோவில் குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் வெங்கட். விருந்தில் கலந்து கொண்ட ஒரு குழந்தைக்கும் அன்று தான் பிறந்தநாள் என்பதை தெரிந்து கொண்ட அவர் அந்த குழந்தையுடன் சேர்ந்து கேக் வெட்டினார்.