கேரள அரசு திரைப்பட விருது தேர்வு கமிட்டி தலைவராக பாக்யராஜ் நியமனம்

கேரள அரசு திரைப்பட விருது தேர்வு கமிட்டி தலைவராக இயக்குனர் பாக்யராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள படம், நடிகர், நடிகை, தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. கடந்த 2011ம் ஆண்டுக்கான கேரள அரசு திரைப்பட விருது தேர்வு கமிட்டி இப்போது அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜை கேரள அரசு தேர்வு செய்துள்ளது. விருதுக்காக 40 மலையாள படங்களும், 4 டாக்குமென்டரி படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த பட்டியலிலில் உள்ள படங்களை தேர்வு குழுவினர் வரும் 7ம் தேதி முதல் பார்த்து சிறந்த படங்களைத் தேர்வு செய்கின்றனர். வரும் 15ம் தேதிக்கு பிறகு விருது பட்டியல் வெளியிடப்படும்.
 

தமிழ் சினிமாவைக் கெடுத்தவர் - பிரபல தயாரிப்பாளர் மீது கரு பழனியப்பன் கடும் தாக்கு

Director Karu Pazhaniyappan Allegation Top Producer    | அமரா படங்கள்  

அமரா என்றொரு படம். புதியவர்கள் அமரன், சோனு நடித்துள்ளனர். ஜீவன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் அரங்கில் நடந்தது. இயக்குநர் கே.பாக்யராஜ், வெற்றிமாறன், தனஞ்செயன், பிரபுசாலமன், கரு.பழனியப்பன், கலைப்புலி எஸ் சேகரன் ஆகியோர் பங்கேற்ற இந்த விழாவில், இயக்குநர் கரு பழனியப்பனின் பேச்சு பெரும் பரபரப்பைக் கிளப்பிவிட்டது.

இவரது பேச்சின் வீடியோ இன்றைக்கு ஊடகங்களிலும் பரபரப்பார உலா வர ஆரம்பித்துள்ளது.

அப்படி என்ன பேசினார் பழனியப்பன்?

இதோ: மேடையில் இருக்கும் இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் சபையில் இருப்பவர்களுக்கும் எனது வணக்கம். அமரா படத்தின் இயக்குனர் ஜீவனை, எனக்கு அவரது தம்பி சுகுமார் மூலமாகத் தான் தெரியும். ஏனென்றால் சுகுமார் ஒரு சுறுசுறுப்பான மனிதர்.

ஸ்டில் ஃபோட்டோகிராஃபராக நான் பார்த்த சுகுமார் இன்று கேமராமேனாக வளர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு காரணம் அவரது அண்ணன் ஜீவன் தான். ஜீவன் ஒளிப்பதிவு செய்திருந்த ‘சாட்டை' படத்தை சமீபத்தில் பார்த்தேன். அவ்வளவு அற்புதமாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிடைத்த வாய்ப்பையே விடாமல் பயன்படுத்திக் கொண்ட ஜீவன் அவர் இயக்கிய படத்தை பிரம்மாதமாக எடுத்திருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

சினிமாவில் போட்டி என வந்துவிட்டால் ‘பாக்க பாக்க பிடிக்கும்;பாத்த உடனே பிடிக்கும்' என்று வரும். ஆனால் இமானை பொருத்த வரையில் அவர் பெயரை கேட்டாலே பிடிக்கும்.

அந்த மனிதன் எப்படி 24 மணி நேரமும் சிரித்துக் கொண்டே இருக்கிறான் என நான் பலமுறை வியந்துள்ளேன். நிகழ்ச்சி ஆரம்பித்ததிலிருந்து எல்லோரும் பூடகமாகவே பேசிக்கொண்டிருக்கின்றனர். சேகரன் சார் ரொம்பவே கோவமா பேசினார். தமிழ் சினிமா கெட்டுப் போனதுக்கு யார் காரணம் யார் காரணம்னு கேட்கிறார். நான் சொல்கிறேன் அதற்கு தனஞ்செயன்தான் காரணம்.

யுடிவி தயாரிக்கும் ‘முகமூடி' என்ற படத்திற்கு ஒரு முழு பக்கம் செய்தித்தாள் விளம்பரம் கொடுத்துள்ளார். ஏனென்று கேட்டால் இந்திப் படங்களில் அப்படித்தான் கொடுக்கிறார்கள் என்று சொல்கிறார். இந்தி படங்களில் கொடுத்தால் நீங்களும் வடநாட்டு பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்துக் கொள்ளுங்கள். ஏன் தமிழ் பத்திரிக்கைகளில் விளம்பரம் கொடுக்கிறீர்கள்.

பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு ‘குவாட்டர்' பாட்டில் அளவில் தான் விளம்பரம் கொடுக்க வேண்டும் என கொண்டு வந்த முடிவை நீங்கள் மீறினால் மற்றவர்களும் உங்களை காரணம் காட்டி இரண்டு பக்க விளம்பரம் கொடுக்க மாட்டார்களா? நான் கண்டிப்பாக என் படத்திற்கு இரண்டு பக்க விளம்பரம்தான் கொடுப்பேன். என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்.

உங்களை கண்டிக்க ஆள் இல்லை. அவர்கள் படத்தை நீங்கள் வாங்காவிட்டால் என்ன செய்வது என்ற பயத்திலே எதையும் கேட்காமல் அமைதியாக இருந்துவிடுகின்றனர். நான் சொல்கிறேன் என கோபித்துக்கொள்ளாதீர்கள்.

தனஞ்செயன் சார் நீங்கள் அனைவருமே நன்றாக வியாபாரம் ஆகும் படத்தை வாங்கி நல்ல தயாரிப்பாளர் என்ற பெயர் பெறுகிறீர்கள்.

நாங்கள் நல்ல படங்களை எடுத்து அதை விற்க போராடுகிறோம். அது தான் சிக்கல். தனஞ்செயன் விளம்பரம் கொடுத்து ரசிகர்களை இழுத்து படம் பார்க்க யாரும் இல்லை எனக் கூறுகிறார். ஜீவன் நல்ல படத்தை எடுத்து ரசிகர்களை இழுத்து தனஞ்செயனை தோற்கடிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன் வரவேற்கிறேன்," என்றார்.

 

பரதேசியை முடித்தார் பாலா!

Bala Completes Paradesi

ஆச்சர்யம் ஆனால் உண்மை... என்பது போல, அவன் இவனுக்குப் பிறகு பாலா தொடங்கிய அடுத்த படமான பரதேசி படப்பிடிப்பும் சீக்கிரமே முடிந்துவிட்டது.

அதர்வா நடிக்கும் இந்தப் படத்தில் தன்ஷிகா நாயகியாக நடிக்கிறார். பாலாவுக்கு இது ஆறாவது படம்.

மலையாளத்தில் வெளியான எரியும் பனிக்காடு என்ற நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில் வேதிகா, உமா ரியாஸ்கான் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பவர் ஸ்டார் எனப்படும் சீனிவாசன் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மொத்தம் 80 நாட்கள் நடந்த படப்பிடிப்பு, சமீபத்தில் குற்றாலத்தில் நிறைவடைந்தது. பாலாவின் படம் என்றால் மாதக் கணக்கில்தான் கெடு சொல்வார்கள். அவன் இவன் படத்திலிருந்துதான் நாள் கணக்குக்கு அது மாறியுள்ளது.

முதல்முறையாக பாலா படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கவிருக்கிறது. பாடல் வெளியீட்டுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார்கள்.

 

என்னை நரகத்திலிருந்து மீட்டவர் மனைவி கீதாஞ்சலி - செல்வராகவன்

Selvaragavan Praises His Wife

என்னை நரகத்திலிருந்து மீட்டவர் என் மனைவி கீதாஞ்சலி என்று கூறியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

இயக்குனர் செல்வராகவனுக்கும் கீதாஞ்சலிக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது. முதல் ஆண்டு திருமண நாள் விழாவை இரண்டாம் உலகம் படப்பிடிப்பில் செல்வராகவன் கொண்டாடினார்.

வெளிநாட்டு நிபுணர்களை வைத்து இந்த படத்துக்கு தொழில்நுட்ப பணிகளை செய்து வருகிறார் செல்வராகவன். ஆர்யா, அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இந்தப் படம் தனது கனவுப்படம் என்று கூறிவருகிறார் செல்வா.

முதல் வருட திருமண நாளையொட்டி தனது ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "திருமணமாகி ஓராண்டு ஆகிறது. இந்த ஒரு வருடம் எனக்கு மகிழ்ச்சியும், போரானந்தத்தையும் அளித்து உள்ளது. இதற்காக என் மனைவி கீதாஞ்சலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நரகத்திலிருந்த என்னை அவர்தான் மீட்டு, சொர்க்கத்தை காட்டி இருக்கிறார். இந்த அற்புதமான வாழ்க்கையை தந்த மனைவி கீதாஞ்சலிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

 

கார்த்தியுடன் பிரியாணி போடப்போகும் ரிச்சா

Richa Spice Up Venkat Prabhu Biriyani

வெங்கட் பிரவு கார்த்தியை வைத்து எடுக்கும் பிரியாணி படத்தின் நயாகி ரிச்சா கங்கோபத்யாயவாம்.

மங்காத்தாவை அடுத்து வெங்கட் பிரபு சூர்யாவை வைத்து தான் படம் எடுப்பதாக இருந்தது. ஆனால் சூர்யா படுபிசியாக இருப்பதால் அவரது தம்பி கார்த்தியை வைத்து பிரியாணி என்ற பெயரில் படம் எடுக்கிறார். இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே படத்தின் நாயகி சமந்தா என்று கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் கார்த்தியோடு ஜோடி போடப் போவது சமந்தா இல்லை மயக்கம் என்ன, ஒஸ்தி நாயகி ரிச்சா கங்கோபத்யாய என்று தெரிய வந்துள்ளது. சமீப காலமாக கை வசம் தமிழ் படங்களே இல்லாத ரிச்சாவுக்கு இந்த படம் கிடைத்துள்ளதில் பெரு மகிழ்ச்சியாம். இருக்காத பின்ன பிரியாணி தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் அல்லவா ரிலீஸ் செய்யப்படுகிறது.

கௌதம் மேனன் படத்தில் இருந்து விலகிய ரிச்சாவுக்கு வெங்கட் பிரபு ட்ரீட் கிடைத்துள்ளது.

 

லண்டனில் குப்பை அள்ளிய அனுஷ்கா, விக்ரம்

Vikram Anushka Clean Up The Mess   

லண்டனில் தாண்டவம் படப்பிடிப்பின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு பேப்பர்களை அள்ள அனுஷ்காவும், விக்ரமும் உதவி செய்துள்ளனர்.

இயக்குனர் ஏ.எல். விஜய் விக்ரம், அனுஷ்கா, ஏமி ஜாக்சன், லக்ஷ்மி ராய் உள்ளிட்டோரை வைத்து எடுக்கும் படம் தாண்டவம். இந்த படத்தின் பெரும்பாலான பகுதி லண்டனில் படமாக்கப்பட்டது. இதற்காக படக்குழுவினர் லண்டனில் தங்கி படப்பிடிப்பை நடத்தினர். கதைக்காக ஒரு காட்சியில் பட்டாசுகளை வெடித்துள்ளனர். நம்ம ஊராக இருந்தால் படக் குழுவினர் பட்டாசு வெடித்துவிட்டு அந்த இடத்தை குப்பைக் காடாக போட்டுச் சொன்றாலும் ஒன்றும் இல்லை. ஆனால் வெளிநாடுகளில் அப்படி செய்ய அந்நாட்டு சட்டம் இடம் கொடுக்காதல்லவா.

அதனால் அவர்கள் வெடித்த பட்டாசால் குவிந்த குப்பையை படக்குழுவினரே அள்ளிப் போட்டுள்ளனர். வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்பதால் குறைவான ஆட்களையே அழைத்துச் சென்றுள்ளனர். ஆட்கள் இல்லாததால் படத்தின் நாயகன் விக்ரமும், அனுஷ்காவும் கூட குப்பையை அள்ள உதவியுள்ளனர்.

அடடா இதுவல்லவா கடமை உணர்ச்சி....

 

விவகாரத்தானவரை காதலிக்கும் சோனாக்ஷி சின்ஹா?

Is Sonakshi Sinha Dating Divorcee
பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான பன்ட்டி சச்தேவாவை டேட் செய்கிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹா தந்தை வழியில் நடிக்க வந்துள்ளார். அவர் நடிக்கும் படங்களில் பெரும்பாலும் 40களைத் தாண்டிய மூத்த நடிகர்கள் தான் ஜோடியாக உள்ளனர். அவர் அறிமுகமான தபாங்கில் 40ஜ தாண்டிய சல்மான் கான் ஜோடியாக நடித்தார். அதன் பிறகும் சல்மான் கான், அக்ஷய் குமார் என்று வயதில் மூத்த நடிகர்களுடனேயே ஜோடி சேர்ந்து வருகிறார்.

மூத்த நடிகர்களுடன் அவர் ஜோடி சேர்வதால் இளம் ஹீரோக்கள் சோனாக்ஷியுடன் டூயட் பாட அஞ்சுகின்றனர். படத்தில் தான் 40களைத் தாண்டியவர்களுடன் ஜோடி சேர்கிறார் என்று பார்த்தால் நிஜத்திலும் அவர் 40ஐ தொட்ட பன்ட்டி சச்தேவாவை டேட் செய்கிறார். சச்தேவா பிரபலங்களின் மேனேஜராக உள்ளார். விவாகரத்தானவர். சல்மான் கான் தம்பி சொஹைல் கானின் மைத்துனர். அவர் தான் சோனாக்ஷியின் விளம்பரங்களுக்கு மேனேஜராக உள்ளார்.

பன்ட்டி ஏற்கனவே முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென், மாடலும், நடிகையுமான நேஹா தூபியா ஆகியோரை டேட் செய்துள்ளார். அண்மையில் சத்ருகன் சின்ஹா உடல் நிலை பாதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பன்ட்டியும் அங்கு தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோனாக்ஷிக்கு என்ன டேஸ்டோ...
 

அடாத மழை... அம்மண போஸ்... சூடேற்றும் ரோஸ்லின் கான்!

Once Again Rozlyn Khan Strips Nude   
ஆ ஊன்னா அம்மண போஸ் கொடுக்கும் பூனம் பாண்டேவை மறக்கடிக்கும் அளவுக்கு அட்டகாசமாக படங்களை வெளியிட்டுள்ளார் பிரபல மாடலும் நடிகையுமான ரோஸ்லின் கான்.

மும்பையில் கொட்டும் மழையில் அவர் நிர்வாணமாக போஸ் கொடுத்து போட்டோ ஷூட் செய்துள்ளார்.

மகா மெலிதான ஒரு வெள்ளையுடை. அதனூடே அப்பட்டமாகத் தெரியும் பிரா - பேன்டீஸ். இந்த உடையில் மழையில் நனைந்தபடி ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்துள்ள அவர், கடைசியில் எல்லா உடைகளையும் கடாசிவிட்டு, பிறந்த மேனியாக மழையில் நனைகிறார்.

அவர் மழையை அனுபவிக்க, கேமரா லென்ஸ்கள் அவர் மேனியை ரசிக்க.. செம ரகளையான மழை போட்டோ ஷூட் அது.

நிர்வாண போஸுக்கு ரோஸ்லின் ஒன்றும் புதியவரல்ல. ஏற்கெனவே தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடைகளைத் துறந்து நிர்வாண போஸ் கொடுத்தவர்தான் ரோஸ்லின்!
 

'சினேகா - பிரசன்னா பிரிவுக்குக் காரணம் என்ன?'

Whats Reason Behind The Separation Sneha Prasanna   

கொஞ்சம் ஷாக்காதான் இருக்கும். ஆனால் மேட்டர் நீங்க நினைப்பதல்ல.

இன்று காலை நாளேடுகளை புரட்டியதும் பலரும் அக்கறையோடு 'இப்போதானே கல்யாணம் ஆச்சு... அதுக்குள்ள ஏன் இப்படியொரு செய்தி அபசகுனமா?' என்று கேட்டுக் கொண்டனர்.

ஆனால் இது நிஜமான பிரிவல்ல... 'விளம்பரம்'!

பிரசன்னாவும் சினேகாவும் சேர்ந்து ஒரு செல்போன் கம்பனிக்கான விளம்பரப் படத்தில் நடித்தனர். அதில் வரும் டயாலாக் இது. புதுசா திருமணமானவர்களைப் பிரித்து ஆடி மாசம் பெண் வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம்.

அதே போல் இப்போ புதுசா கல்யாணமான சினேகா - பிரசன்னாவை பிரிக்கிறதாம் இந்த ஆடிமாசம்.

அந்த பிரிவே தெரியாம இருக்க 'எங்ககிட்ட போன் வாங்கி சேர்ந்து இருங்க' என்று சொல்கிறது அந்த விளம்பரம்.

திருமண வீடியோவை விற்று காசு பார்த்தாச்சு... அடுத்து பிரிவு என்ற விஷயத்தையும் விளம்பரமாக்கி பணம் பார்த்திருக்கிறது இந்த புது ஜோடி.. பலே ஜோடிதான்!
 

புது இயக்குநர் ரவிக்குமாருடன் நடிகை சுஜிபாலா நிச்சயதார்த்தம் - ஷகீலா, அல்போன்சா வாழ்த்து!

Actress Sujibala Engeged With Ravikumar
சந்திரமுகி, அய்யா வழி, கிச்சா வயது 16, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில் நடித்த சுஜிபாலாவுக்கு விரைவில் திருமணம் நடக்கிறது. புதிய இயக்குநர் ரவிக்குமாரை மணக்கிறார் அவர்.

தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் சுஜிபாலா.

இந்த படத்தை ரவிக்குமார் என்பவர் இயக்கி, அவரே கதாநாயகனாகவும் நடிக்கிறார். படப்பிடிப்பின் போது ரவிக்குமாருக்கும், சுஜிபாலாவுக்கும் காதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சுஜிபாலாவின் பெற்றோரிடம் ரவிக்குமார் தங்கள் காதலைத் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதம் கேட்டார். சுஜிபாலாவின் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை நாகர்கோவில் கொய்யன் விளையில் உள்ள திருமண மண்டபத்தில் சுஜிபாலா - ரவிக்குமார் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

நடிகைகள் ஷகீலா, அல்போன்சா, கும்தாஸ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இதுபற்றி சுஜிபாலா கூறுகையில், "தற்போது நான் உண்மை மற்றும் விஷாலுடன் ஒரு படம் என சில படங்களில் நடித்து வருகிறேன். ரவிக்குமார் என்னை காதலித்தார். திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். நான் எனது பெற்றோரின் சம்மதத்தை பெறுமாறு கூறினேன். அவரும் எனது பெற்றோரை சந்தித்து திருமணத்துக்கு சம்மதம் வாங்கினார். நேற்று எங்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அக்டோபர் மாதம் திருமணம் நடக்கிறது," என்றார்.
 

மீடியாவுக்கு வந்தது எதிர்பாராதது: 'தங்கம்' தொடர் ஜோதி

Thangam Serial Actress Joythi Interview
சன் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் "தங்கம்' தொடரில் ரம்யாவின் தங்கையாக வந்து எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர் ஜோதி. எஞ்சினியரிங் படித்துவிட்டு சின்னத்திரைக்கு வந்தது எப்படி என்று கூறுகிறார் படியுங்களேன்.

நான் ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்கு பெண். என்ஜினீயரிங் படித்துவிட்டு ஹைதராபாத்தில் உள்ள மல்டி நேஷனல் கம்பெனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. படிப்பை விட்டுவிட்டு நடிகையாக வருவேன் என்று நான் நினைத்து கூட பார்த்ததில்லை. ஆனால் விதி என்னை சினிமாவில் கொண்டு வந்து விட்டுவிட்டது.

ராடான் மீடியாவில்தான் நான் முதன் முதலில் நடித்தேன். ஒருமுறை ராதிகா மேடம் "தாலிபிரமா' என்கிற தெலுங்கு தொடருக்காக மேக் - அப் டெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்தார்கள் என்று கேள்விப்பட்டு என் பெற்றோர்கள் சம்மதத்துடன் போய் பார்த்தேன். அந்தத் தொடரில் எனக்கு நிரோஷாவோட மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்படி தான் என் சின்னத்திரை பயணம் தொடங்கியது. முதல் தொடரே எனக்கு ஆந்திராவில் நல்ல பெயரைக் கொடுத்தது. அதன் பிறகு ஹன்ஷா விஷன் தயாரித்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து ஏ.வி.எம்.மின் "சொர்க்கம்' தொடர் மூலமாக தான் முதன் முதலில் தமிழில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்போழுது நிறைய தமிழ் தொடர்களில் நடித்து வருகிறேன்.

தங்கம் தொடரில் ரம்யாகிருஷ்ணன் தங்கை ரமாவாக நடித்து வருகிறேன். அவங்களைப் போல பெரிய ஹீரோயின்கூட நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதை அடுத்து கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஏ.வி.எம்.மின் "உறவுக்கு கை கொடுப்போம்' என்கிற தொடரில் நடித்து கொண்டிருக்கிறேன்.

தெலுங்கு எனது தாய் மொழி என்பதால் அதில் நடிப்பதில் எனக்கு அவ்வளவு பெரிய சிரமம் ஒன்றும் தெரியவில்லை. தமிழில் நடிக்க வந்த புதிதில் எனக்குத் தமிழே தெரியாது. எங்கே எப்படி பேச வேண்டும் என்று தெரியாது. இப்போது கொஞ்சம் கொஞ்சமாகத் தமிழ் கற்றுக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ரொம்ப நன்றாகவே தமிழ் பேசுவதாக எல்லோரும் சொல்கிறார்கள்.

தெலுங்கில் இரண்டு தொடர்கள் நடித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் முன்று தொடர்கள் நடிக்கிறேன். இரண்டு மொழிகளிலும் நடிப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சென்னைக்கும், ஆந்திராவுக்கும் மாறி மாறி போய் வரும் போது சில நேரங்களில் நான் சென்னையில் இருக்கிறேனா அல்லது ஆந்திராவில் இருக்கிறேனா என்று குழப்பமாக இருக்கும். இரண்டு மொழியிலும் நடிப்பதில் என்ன கஷ்டம் வந்தாலும் அதை எதிர்த்து போராடி பெரிய இடத்துக்கு வர வேண்டும். சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் நிறைய இருக்கிறது.

எனக்கு தமிழ் இன்டஸ்ட்ரி ரொம்ப பிடித்திருக்கிறது. நிறைய தமிழ் தொடர்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது. தமிழ் மக்கள் மரியாதையாகப் பழகுகிறார்கள். "தங்கம்' தொடருக்குப் பிறகு நிறைய தமிழ் மக்களிடம் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

ஆந்திராவில் உள்ள மக்களுக்கு என்னை நன்றாக அடையாளம் தெரியும். பொது இடங்களில் அல்லது ஷாப்பிங் போகும் போது எங்காவது பார்த்து விட்டால் என் பக்கத்தில் வந்து பேசுவார்கள், நலம் விசாரிப்பார்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள் நான் நடிக்கும் தொடர்களைப் பற்றி விமர்சிப்பார்கள். இப்படி அவர்கள் என் மீது அன்பு செலுத்தும்போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அதே போல் தங்கம் தொடரில் நடிக்க ஆரம்பித்த பிறகு தமிழ் மக்களிடம் இருந்தும் நல்ல வரவேற்பு இருக்கிறது என்று மகிழ்ச்சி பொங்க கூறினார் ஜோதி.
 

அமீர் கானின் ‘சத்யமேவ ஜெயதே’ ரேட்டிங்சரிகிறதா

Aamir Khan S Debut Show Satyamev Jayate Sees A Steady
அமீர்கான் தொகுத்து வழங்கும் ‘சத்யமேவ ஜெயதே' நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை சரிந்து வருவதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்தி திரைப்பட நடிகர் அமீர்கான் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ ‘சத்யமேவ ஜெயதே', ஸ்டார் ப்ளஸ், டிடி, ஸ்டார் விஜய் ஆகிய தொலைக்காட்சிகளில் ஞாயிறுதோறும் 11.30 மணியளவில் ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சி பற்றி பெரிய அளவில் எதிர்பார்ப்பு கிளம்பியதால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. நிகழ்ச்சி தொடங்கிய மே மாதத்தில் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியை 3.8 சதவிகிதம் பேர் பார்த்துள்ளதாக TVR எனப்படும் Television Viewer Ratings தெரிவித்துள்ளது. அதுவே ஜூன் மாதத்தில் வெறும் 2.9 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே பார்த்துள்ளனர். அதே சமயம் மாதுரி தீக்ஷித் இயக்கியுள்ள Jhalak Dikhhla Jaa தொடர் 4.1 சதவிகிதம் பார்வையாளர்கள் ரசித்துள்ளனர்.

சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி. அதேசமயம் மாதுரி தீக்ஷித்தின் நிகழ்ச்சி நடனம் தொடர்புடைய நிகழ்ச்சி என்பதால் பார்வையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கக் கூடும் என்று சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த ரேஸில் புதிதாக அமிதாப் பச்சனின் கோன் பனேகா குரோர்பதி இணையப்போகிறது. கடந்த ஆண்டு கோன் பனேகா குரோர்பதி சீசன் 4 நிகழ்ச்சியை 6.4 சதவிகித பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக தொலைக்காட்சி ரேட்டிங்கில் தெரியவந்துள்ளது. இந்த நிகழ்ச்சியைப் போன்று வேறு எந்த நிகழ்ச்சிக்கும் இதுவரை பார்வையாளர்கள் எண்ணிக்கை கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமீர்கான் டிஆர்பி என்பது மாறுதலுக்கு உட்பட்டது. ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒன்று முதலில் வரும் என்று கூறியுள்ளார். ஆனால் தன்னுடைய சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி நிச்சயம் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுவே அந்த நிகழ்ச்சியின் வெற்றியை நிர்ணயித்து விடும் என்றும் கூறியுள்ளார்.

சத்ய மேவ ஜெயதே நிகழ்ச்சியில் மருத்துவத்துறை பற்றியும் மருத்துவர்களின் கட்டணக்கொள்ளை பற்றியும் அமீர்கான் பேசியது நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
 

அரசியலுக்கு வருவேன் - இயக்குநர் அமீர்

Ameer Wishes Enter Politics
ஓட்டுப்போடும் ஒவ்வொருவருக்கும் அரசியலில் இறங்க தகுதி உள்ளது. ஏதாவது நல்ல காரியம் செய்யும் நிலைமையில் இருக்கும்போது... நிச்சயம் அரசியலுக்கு வருவேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் அமீர்.

இயக்குநர் - நடிகர் என பரபரப்பாக இருந்த அமீர், இப்போது பெப்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தமிழ் சினிமாவை கட்டுப்படுத்தும் சக்திகளில் ஒன்றாக மாறியுள்ளார் அமீர்.

இதைத் தொடர்ந்து அமீர் அரசியலில் குதிக்கக் கூடும் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து அமீர் சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில், "அரசியல் களம் இறக்கினால் என்ன தப்பு? எப்போது ஓட்டு போட வாக்குச்சாவடிக்குப் போறோமோ, அப்போதே அதில் பங்கு பெறவும் நமக்குத் தகுதி இருக்கிறதுதானே?

'ம்க்கும்... நீங்களும் அரசியலுக்கு வந்துட்டீங்களா?' என்று சலிப்புக் கேள்வியை எதிர்கொள்ளும் நிலையில் என் அரசியல் பிரவேசம் இருக்காது. சும்மா குற்றம் சொல்லிவிட்டு மட்டும் இருக்காமல், ஏதாவது நல்ல காரியம் செய்யும் நிலைமையில் இருக்கும்போது... நிச்சயம் அரசியலுக்கு வருவேன்!'' என்று கூறியுள்ளார்.
 

நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது: “தென்றல்’ தீபா

Tenral Deepa S Personal Interview
"தென்றல்' தொடரில் கதாநாயகி துளசியின் தோழியாக வந்து அனைவரையும் போட்டு வாங்கும் படாதபாடுபடுத்தும் கதாபாத்திரம் தீபா. சின்னப்பெண்ணாக இருப்பதோடு துறுதுறு பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர். தீபாவின் (ஹேமலதாவின்) சீரியல் பயணம் பற்றி அவரிடமே கேட்டு தெரிந்து கொள்வோம்.

என் தாய்மாமன்கள் உதய்குமார்- சுரேஷ் இருவரும் சினிமாத்துறையில்தான் இருக்கிறார்கள். ஒரு மாமா, மணிரத்னம் சார் இயக்கிய "நாயகன்' படத்தில் நடித்திருக்கிறார். அவர் ஷூட்டிங் போகும் போது என் பாட்டி எங்களை எல்லாம் அங்கு அழைத்துப் போவார்கள். இப்படி போன போது எனக்கு ரஜினி சாரோட "பாட்ஷா' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ரகுவரன் சாரோட பெண்ணாக வரும் சின்னகுழந்தை நான்தான். இப்படித்தான் சினிமாத் துறைக்குள் வந்தேன்.

"சூர்ய வம்சம்' போன்ற படங்களிலும் நடித்துள்ளேன். நடிப்பு என் ரத்தத்தோடு கலந்துவிட்டது.

எங்கள் குடும்பம் பெரியது. எனக்கு இரண்டு அண்ணன், இரண்டு அக்கா இருக்கிறார்கள். நான்தான் வீட்டில் கடைசி பெண். அண்ணன்கள், அக்காவுக்கு எல்லாம் திருமணம் ஆகிவிட்டது. எல்லாருமே எனக்கு ரொம்ப துணையாக இருப்பாங்க. நான் நடிப்பது எல்லாருக்குமே ரொம்பப் பிடிக்கும். அக்கா, மாமா, சித்தப்பா, சித்தி என்று எல்லாருமே என் நடிப்பை விரும்பிப் பார்ப்பார்கள்

ராடன் நிறுவனத்தின் "சித்தி' தொடர்தான் எனக்கு முதல் தொடர். அந்த முதல் தொடரிலேயே எனக்கு நல்ல அங்கீகாரம் கிடைத்தது. அடுத்து "மனைவி' என்ற தொடரில் நடித்தேன். அதன்பிறகு ஒரு சிறிய இடைவெளி.

"விஜய்' டிவியில் "கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தேன். எனக்கு அதில் நன்றாக நடிக்கக் கூடிய வேடம் கிடைத்தது. அந்தத் தொடர் என் வயதுக்குரிய தொடராக அமைந்தது. பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்திருந்தேன். அதற்குப் பின் இப்போது "தென்றல்' தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

"கனா காணும் காலங்கள்' தொடரில் எனக்கு அமைதியான கேரக்டர். அதற்கு நேர் எதிரான கேரக்டர் "தென்றலி'ல் வரும் தீபா கேரக்டர். வெளியே எங்காவது போகும் போது "தீபா வராங்கன்னு' சொல்கிறார்கள். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

பெரிய திரையில் இருந்து வாய்ப்புகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. எனக்கு பொருத்தமான நல்ல ரோலில்தான் நடிக்கவேண்டும் என்று ரொம்ப உறுதியாக இருக்கிறேன். சும்மா வந்து நின்றுவிட்டுப் போக எனக்கு ஆசையில்லை. ஒரே படம் நடித்தாலும் எல்லாருடைய மனதிலும் நிற்கும்படி நடிக்கவேண்டும்.

சின்ன வயதிலிருந்தே நடிப்பின் மீது எனக்கு ஆர்வம் அதிகம். ஒரு நல்ல நடிகையாகத்தான் வரவேண்டும் என்று எப்போதுமே நினைத்துக் கொண்டிருப்பேன். அந்த ஆசை இன்று ஓரளவு நிறைவேறியிருக்கிறது.இந்த மாதிரியான கேரக்டரில்தான் நடிக்கவேண்டும் என்று நினைக்காமல் எல்லாவிதமான கேரக்டர்களும் நடிக்கணும் என்பது என்னுடைய ஆசை என்று கூறிவிட்டு மலர்ச்சியாய் சிரித்தால் ஹேமா. வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.
 

நடிகர் சங்க சொத்துக்களில் முறைகேடு..சரத், ராதாரவி மீது திமுக நடிகர் பூச்சி முருகன் வழக்கு!

Dmk Actor Sues Nadigar Sangam President Sarathradharavi
சென்னை: உறவினர்களான நடிகர்கள் ராதாரவியும், சரத்குமாரும் இணைந்து நடிகர் சங்க சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தி வருகிறார்கள்.எனவே இருவரும் தலைவர், துணைத் தலைவர் பொறுப்புகளில் செயல்படுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று நடிகர் சங்க உறுப்பினரும், திமுக இலக்கிய அணியைச் சேர்ந்தவருமான பூச்சி முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பூச்சி முருகனும், நடிகர் சங்க உறுப்பினரான காஜா முகைதீன் ஆகியோர் இணைந்து தாக்கல் செய்துள்ள மனுவில்,

சென்னை தி.நகர் அபிபுல்லா சாலையில், நடிகர் சங்கத்துக்கு 18 கிரவுண்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 150 கோடி ரூபாய். சங்கத்துக்கு இடம் வாங்கி, அதில் கட்டடம் கட்டப்பட்டதில், சினிமா துறையில் சிறந்து விளங்கிய கே.சுப்ரமணியன், என்.எஸ்.கிருஷ்ணன், சகஸ்ரநாமம், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோரின் பங்களிப்பு பெரிது.

பெரும்பான்மை உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறாமல், சங்கத்தின் கட்டடம் தரைமட்டமாக ஆக்கப்பட்டது. இது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தது மட்டுமல்லாமல், நடிகர் சங்க அறக்கட்டளையை நம்பிக்கை மோசடி செய்தது போலாகும்.

ஏழைக் கலைஞர்களின் குடும்பத்துக்கு கல்வி, மருத்துவ வசதிகளை அளிப்பது தான், அறக்கட்டளையின் நோக்கம். அறக்கட்டளையானது நிர்வாக அறங்காவலர் சரத்குமார், அறங்காவலர் ராதாரவி ஆகியோரை கொண்டு இயங்குகிறது. இவர்கள் இருவரும் உறவினர்கள். இவர்களின் நடவடிக்கைகள், பல்வேறு கேள்விகளை உறுப்பினர்களின் மனதில் எழுப்பியுள்ளது.

அறக்கட்டளையின் போர்டு இன்னும் அமைக்கப்படவில்லை. இந்த இரண்டு பேரும் தான் அறக்கட்டளை தொடர்பான முடிவுகளை எடுக்கின்றனர். சங்கத்தின் பொதுச் செயலர் என்கிற முறையில் ராதாரவி, சொத்துகளுக்கான குத்தகையை சரத்குமார் பெயரில் வழங்கினார். அறக்கட்டளையின் சொத்தில் வர்த்தகத் திட்டத்தை மேற்கொள்ள, சட்டப்பூர்வமான ஏஜன்ட் ஆக சரத்குமாரை, ராதாரவி நியமித்து, பவர் ஆப் அட்டர்னி கொடுத்துள்ளார்.

இவ்வாறு குத்தகை, பவர் ஆப் அட்டர்னி வழங்க, இவர்களுக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. மேலும், 2010ம் ஆண்டு நவம்பரில், 150 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை, எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது.

அறக்கட்டளை போர்டை நியமிக்காமல், சொத்து பரிவர்த்தனையில் ஈடுபட, சரத்குமார், ராதாரவிக்கு அதிகாரமில்லை. குத்தகை ஒப்பந்தம் மேற்கொண்ட பின், சிறப்பு பொதுக்குழுவைக் கூட்டி, ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துடன் செய்து கொண்ட குத்தகை ஒப்பந்தத்துக்கு, சங்கத்தின் முன் அனுமதியை முதலில் பெறவில்லை. சிறப்பு பொதுக் குழுவில் தான் பெறப்பட்டது.

அறக்கட்டளை போர்டு அமைக்காமல், இரண்டு பேரும் செயல்பட்டுள்ளனர். எனவே, எஸ்.பி.ஐ., சினிமா நிறுவனத்துக்கு சரத்குமார், ராதாரவி வழங்கிய குத்தகை செல்லாது என உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

இந்த மனுவைப் பரிசீலித்த நீதிபதி சுப்பையா, சரத்குமார், ராதாரவிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
 

குடிகாரிகள் என்பதா...: 'சந்திரா' பட விழாவில் சனா கான் மீது ஸ்ரேயாவும் பாய்ச்சல்!

Actress Shriya Blasts Sana Khan  
"வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள், புகைக்கிறார்கள் என்று கூறிய சனாகான் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்று நடிகை ஸ்ரேயா கூறினார்.தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் தயாராகும் `சந்திரா' என்ற படத்தில், ஸ்ரேயா இளவரசியாக நடித்து வருகிறார். இந்த படத்தை பல சர்வதேச விருதுகளை வென்ற ரூபா ஐயர் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்புக்காக சென்னை வந்த ஸ்ரேயா, நுங்கம்பாக்கத்தில் உள்ள `போர்ப்ரேம்' தியேட்டரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

கேள்வி:- ரஜினிகாந்த், விஜய், விக்ரம் போன்ற பெரிய கதாநாயகர்களுடன் நடித்துவிட்டு, இப்போது கணேஷ் வெங்கட்ராமுடன் நடிக்கிறீர்களே... அது பற்றி...

பதில்: `சந்திரா' படத்தில் கதைதான் கதாநாயகன். கதையும், என் கேரக்டரும் பிடித்துவிட்டால் எனக்கு ஹீரோ யார் என்பது பற்றி கவலை இல்லை.

கேள்வி: சந்திராவில் இளவரசியாக நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

பதில்: இளவரசி மேக்கப் போட்டு என்னை அலங்கரித்தபோது, அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பின்போது இயக்குநர் உள்பட அனைவரும் என்னை ஒரு இளவரசியாகவே நடத்தினார்கள். சந்தோஷமாக இருந்தது. எங்கள் வீட்டில் எப்போதுமே என்னை ஒரு இளவரசி போலவே நடத்தி வருகிறார்கள். ஏதோ ஒரு ஜென்மத்தில் நான் இளவரசியாக இருந்திருக்கலாம்...

சனாகானுக்கு கண்டனம்

கேள்வி: வட இந்திய நடிகைகளை விட, தென்னிந்திய நடிகைகள்தான் அதிகமாக குடிக்கிறார்கள் என்று சனாகான் கூறியிருக்கிறாரே, அதுபற்றி உங்கள் கருத்து?

பதில்: சொந்த விஷயங்களை எல்லாம் வெளிப்படையாக விமர்சிக்கக் கூடாது. அப்படி விமர்சித்தால், யாராக இருந்தாலும் கண்டிக்கலாம். சனாகான் அப்படி சொல்லியிருந்தால், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். மற்றவர்களை பற்றி எப்போதுமே தப்பாக பேசக்கூடாது. என்னைப் பற்றியோ, என் சொந்த விஷயங்களை பற்றியோ கூட, நான் வெளியில் பேசுவதில்லை. தேவைப்பட்டால் மட்டும் ட்விட்டரில் எழுதுவேன்.

கேள்வி:- ஆங்கில படத்தில் நீங்கள் நடிப்பதாகக் கூறப்பட்டதே... என்ன ஆயிற்று?

பதில்: அந்த தகவல் உண்மைதான். தீபா மேத்தா இயக்கும் 'மிட் நைட் சில்ரன்' என்ற ஆங்கில படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்,'' என்றார்.

பின்னர் சந்திரா படம் குறித்து அதில் நடித்துள்ள விவேக், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் பேசினர்.

இயக்குநர் ரூபா ஐயர், படத்தின் தயாரிப்பாளர்கள் ரவிராஜகோபால், பிரசாத், இசையமைப்பாளர் கவுதம் ஸ்ரீவத்சவா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 

5 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோ திரைப்பட விழாவில் ரஜினியின் சிவாஜி!

Rajini S Sivaji Tokyo Film Festival
ரஜினியின் சிவாஜி - தி பாஸ் படம் வரும் செப்டம்பர் மாதம் ஜப்பானில் நடக்கும் பிரபலமான டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

தமிழ் சினிமாவையே தலைகீழாகப் புரட்டிப் போட்ட படம் சிவாஜி தி பாஸ்.

வசூல், மார்க்கெட்டிங், பொழுதுபோக்கு என அனைத்திலும் ட்ரென்ட்செட்டப் படம் என்றால் சிவாஜிதான்.

ஷங்கர் இயக்கத்தில், ஏவிஎம் தயாரிப்பில் வெளியாகி தமிழ், தெலுங்கு, இந்தி என அத்தனை ஏரியாக்களிலும் அதிரடி வசூல், ஏராளமான விருதுகளைக் குவித்த இந்தப் படம் வெளியாகி 5 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது மேலும் ஒரு பெருமையாக டோக்கியோ நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

ஜப்பானிய ரசிகர்களுக்கு, ரஜினியின் சிவாஜி படம் திரையிடப்படும் செய்தி மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளது.

செப்டம்பர் 14, 15 மற்றும் 16-ம் தேதிகளில் இந்த விழா நடக்கிறது. இந்த மூன்று நாட்களுமே சிவாஜி திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள படத்தின் நாயகி ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.