சினிமா நூற்றாண்டு விழாவில் லீடருக்கு கடைசி, பைக் பிரியருக்கு 4வது வரிசையில் சீட்

சென்னை: சினிமா நூற்றாண்டு விழாவில் லீடருக்கு கடைசி வரிசையிலும், பைக் பிரியர் நடிகருக்கு 4வது வரிசையிலும் தான் சீட் ஒதுக்கப்பட்டதாம்.

சினிமா நூற்றாண்டு விழாவுக்கு லீடர் நடிகரை அழைக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. இந்நிலையில் அவர் அழைக்கப்பட்டு விழாவிலும் வந்து கலந்து கொண்டார். ரசிகர் பட்டாளம் உள்ள அவருக்கு விஜபிக்கள் அமரும் இடத்தில் கடைசி வரிசையில் சீட் ஒதுக்கியிருந்தார்கள். நடிகரும் சத்தமில்லாமல் அங்கு அமர்ந்து கொண்டார்.

இதை பார்த்த பிற நடிகர்கள் அவரை முன்னால் உள்ள இருக்கையில் வந்து அமருமாறு கேட்டார்களாம். ஆனால் லீடர் மறுத்துவிட்டாராம். மேலும் நிகழ்ச்சியில் முக்கிய கலைஞர்கள் குறித்த கிளிப்பிங்ஸ் போட்டுக் காட்டினர். அதில் லீடரின் போட்டோவே இல்லையாம். இதனால் லீடருக்கு வருத்தமாகிவிட்டதாம்.

இதே போன்று பைக் பிரியர் நடிகருக்கும் 4வது வரிசையில் தான் சீட் ஒதுக்கி இருந்தார்களாம்.

 

தீபாவளிக்கு மூணு படம் ரெடி... ஆனா ரெண்டு படத்துக்குதான் தியேட்டர் இருக்கு!

சென்னை: தீபாவளி ரேஸ் கிட்டத்தட்ட ஆரம்பமாகிவிட்டது. தியேட்டர் பிடிப்பதில் தயாரிப்பாளர்கள் முட்டி மோதியதில் 700 அரங்குகள் வரை கிடைத்திருக்கின்றன புதுப்படங்களுக்கு.

வரும் நவம்பர் 2-ம் தேதி தீபாவளிப் பண்டிகை. தமிழ் சினிமாவின் முக்கியமான பாக்ஸ் ஆபீஸ் சீசன்களுள் ஒன்று தீபாவளி.

தீபாவளிக்கு மூணு படம் ரெடி... ஆனா ரெண்டு படத்துக்குதான் தியேட்டர் இருக்கு!

முன்பு மாதிரி நூறு தியேட்டர்களில் படம் வெளியானால் போதும் என்ற நிலை இப்போது இல்லை. முடிந்தவரை அதிக அரங்குகளில் திரையிட்டு முதல் வாரத்திலேயே வசூலை எடுக்கப் பார்ப்பதால், ஒவ்வொரு படத்துக்கும் அதிக அரங்குகள் தேவைப்படுகின்றன.

இந்த தீபாவளிக்கு அஜீத் நடித்த ஆரம்பம், கார்த்தி நடித்த ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் இரண்டாம் உலகம் ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

தீபாவளிக்கு மூணு படம் ரெடி... ஆனா ரெண்டு படத்துக்குதான் தியேட்டர் இருக்கு!

இந்த மூன்று படங்களுக்கும் குறைந்தது 900 அரங்குகள் தேவைப்படுகின்றனவாம்.

ஆனால் இதுவரை முட்டி மோதியதில் 700 அரங்குகள்தான் கிடைக்கும் என்ற நிலை. அஜீத் படத்துக்கு மட்டும் குறைந்தது 400 அரங்குகள் வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார்களாம்.

தீபாவளிக்கு மூணு படம் ரெடி... ஆனா ரெண்டு படத்துக்குதான் தியேட்டர் இருக்கு!

கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்கு 350 தியேட்டர்கள் கண்டிப்பாக வேண்டும் என பிடிவாதமாக உள்ளார்களாம். இதில் இரண்டாம் உலகத்துக்கு எப்படி தியேட்டர்கள் தருவது என குழப்பத்தில் உள்ளார்களாம் தியேட்டர்காரர்கள்.

இதனால் இரண்டு படங்கள் மட்டுமே தீபாவளிக்கு ரிலீசாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

 

மணிவண்ணன் மகன் திருமணம் - சத்யராஜ், விவேக் வாழ்த்து

மறைந்த இயக்குநர் மணிவண்ணன் மகன் ரகுவண்ணனுக்கும் ஈழப் பெண் அபிக்கும் சென்னையில் திருமணம் நடந்தது.

நடிகர் சத்யராஜ் முன் நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். திரையுலகைச் சேர்ந்த விவேக், ஆர் கே செல்வமணி போன்றவர்கள் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

மணிவண்ணன் உயிரோடு இருந்த போதே, கடந்த மார்ச் முதல் வாரத்தில் ரகுவண்ணன் - அபி திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அமைதிப் படை 2 வெளியான பிறகு ஜூன் மாதத்தில் திருமணத்தை நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

மணிவண்ணன் மகன் திருமணம் -  சத்யராஜ், விவேக் வாழ்த்து

ஆனால் அந்த ஜூன் மாதத்தில்தான் மணிவண்ணன் அகால மரணமடைந்தார். அவர் மரணமடைந்த சில வாரங்களில் மணிவண்ணன் மனைவி செங்கமலமும் மரணமடைந்தார்.

இதனால் ரகுவண்ணன் திருமணமும் தள்ளிப் போனது.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரகுவண்ணன் - அபி திருமணம் சென்னையில் நடந்தது.

நடிகர் சத்யராஜ் முன்நின்று இந்தத் திருமணத்தை நடத்தி வைத்தார். நடிகர் விவேக், ஆர்கே செல்வமணி உள்ளிட்டோர் திருமணத்தில் பங்கேற்று வாழ்த்தினர்.

 

முதல் முறையாக லயோலா கல்லூரியில் பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு!

சென்னை: விஷாலின் பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு முதல் முறையாக லயோலா கல்லூரியில் நடந்தது.

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் தயாரித்து நடித்துள்ள படம் பாண்டிய நாடு. விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார் விஷால்.

லட்சுமி மேனன் நாயகியாக நடித்துள்ளார்.

முதல் முறையாக லயோலா கல்லூரியில் பாண்டிய நாடு படத்தின் இசை வெளியீடு!

இந்தப் படத்தின் ஒற்றைப் பாடல் வெளியீட்டு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை லயோலா கல்லூரியில் நடந்தது.

ஒத்தக்கடை ஒத்தக்கடை என்று தொடங்கும் பாடலை லயோலா கல்லூரி முதல்வர் ஜோஸ் சுவாமிநாதன் வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் டீன் ஜான் பிரகாஷ், இயக்குநர் பிரான்சிஸ் சேவியர், அருட்தந்தை ஜெபமாலை ராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் பாண்டிய நாடு இயக்குநர் சுசீந்திரன், நடிகை லட்சுமி மேனன், நாயகன் விஷால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

பெப்பர்ஸ் டிவியில் எழுத்தாளர் பாலகுமாரன்

பெப்பர்ஸ் டிவியில் எழுத்தாளர் பாலகுமாரன் பங்கேற்று தான் படித்த புத்தகங்களைப் பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

பெப்பர்ஸ் டிவியில் எழுத்தாளர் பாலகுமாரன்

பெப்பர்ஸ் டிவியில் வாரந்தோறும் வியாழன் பகல் 11.30 மணிக்கு" படித்ததில் பிடித்தது " என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

புத்தக பிரியர்களுக்கு வாரம்தோறும் பல அறிய புத்தங்களை அறிமுகப்படுத்தும் பயனுள்ள நிகழ்ச்சி இது.

பிரபல எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகையாளர்கள் பல துறை சார்ந்த பிரபலங்கள் தாங்கள் படித்த புத்தகங்களில் பிடித்த விஷயங்களைப் பற்றி நேயர்களுடன் பகிர்ந்துகொள்கிறார்கள்.

பெப்பர்ஸ் டிவியில் எழுத்தாளர் பாலகுமாரன்

இந்த வாரம் படித்ததில் பிடித்தது நிகழ்ச்சியில் முன்னணி எழுத்தாளர் பாலகுமாரன் பங்கேற்று தான் படித்த புத்தகங்களைப் பற்றி நேயர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.

 

சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்துக்கு தலைப்பு ரவுடி அல்ல - லிங்குசாமி

சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்துக்கு தலைப்பு ரவுடி அல்ல - லிங்குசாமி

சென்னை: சூர்யாவை வைத்து தான் இயக்கும் புதிய படத்துக்கு ரவுடி என்று தலைப்பிடப்பட்டுள்ளதாக வந்த செய்திகளை இயக்குநர் லிங்குசாமி மறுத்துள்ளார்.

சிங்கம் 2 படத்துக்குப் பிறகு லிங்குசாமி படத்தில் நடிக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு சமந்தா ஜோடியாக நடிக்கிறார்.

இந்தப் படம் குறித்து தொடர்ந்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

அதில் ஒன்று, படத்துக்குத் தலைப்பு முடிவு செய்யப்பட்டுவிட்டதாகவும், ரவுடி என இப்போதைக்கு தலைப்பு வைத்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இப்போது அதனை மறுத்துள்ளார் லிங்குசாமி.

"சூர்யாவை வைத்து நான் இயக்கும் படத்திற்கு தலைப்பு 'ரவுடி' என மீடியாக்களில் செய்தி உலவுகிறது. அது உண்மையல்ல.. உண்மையான தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும்...", என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

திருமணம் முடிந்த கையோடு டைவர்ஸ் பண்ண வைத்து விடுவார்களோ... கலக்கத்தில் நடிகர்

சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட ‘பையன்கள்' நடிகர் அவர். திருமண வரவேற்பு நிகழ்ச்சியை மட்டும் சென்னையில் வைத்திருந்தார்.

இடையில், பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தாராம் புது மாப்பிள்ளை. தங்களது காதல், கல்யாணம் பற்றிக் கேள்வி கேட்பார்கள் என எதிர்பார்த்த நடிகருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாம். வந்திருந்தவர்களில் பெரும்பான்மையானோர் ஜாக்பாட்டாக கிடைத்த வாய்ப்பான கவர்ச்சி கன்னியுடன் நடிக்கும் வாய்ப்புப் பற்றியே கேட்டுத் துளைத்தார்களாம்.

வெறுத்துப் போன நடிகர், கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் வெறுத்துப் போய் நழுவப் பார்த்தாராம். உடனிருந்தவர்கள் சமாதானப் படுத்தி அமர வைத்தார்களாம்.

கல்யாணம் ஆன உடனேயே டைவர்ஸ் பண்ண வச்சுடுவாங்க போலயே என் நொந்து கொண்டாராம் நடிகர்.

 

அம்மா ஆட்சியில் தமிழ் திரையுலகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது: தாணு அறிக்கை

சென்னை: அம்மாவின் ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை எவரும் மறுக்க

இயலாது என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

அம்மா ஆட்சியில் தமிழ் திரையுலகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது: தாணு அறிக்கை

இந்திய சினிமா நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசின் பங்களிப்பாக ரூ.10

கோடியை மனமுவந்து அளித்துள்ள முதல்- அமைச்சர் புரட்சித் தலைவிக்கு திரையுலகம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

வேறு எந்த அரசும், பிற மாநில முதல்வர்களும் இவ்விழாவை சிறப்பாகக் கொண்டாட முன் வராத நிலையில், தமிழக முதல்வர் ரூ.10 கோடி வழங்கியதோடு அல்லாமல், தொடர்ந்து பல உதவிகளைச் செய்து வருவதை திரையுலகம் நன்கறியும்.

தமிழ்த் திரையுலகம் அம்மா அவர்களை இருகரம் கூப்பி வணங்குகிறது. சதி லீலாவதி படத்தின்

மூலம் அறிமுகமானவர் மக்கள் திலகம் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். 1936-ல் வெளிவந்த இப்படத்தை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.

பராசக்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 1952-ல் வெளிவந்த

இப்படத்தை இயக்கியவர்கள் கிருஷ்ணன்- பஞ்சு. தமிழக முதல்வராக மூன்று முறை பதவியேற்றுள்ள புரட்சித் தலைவியும் திரையுலகில் பட்டொளிவீசி
மாசிலாப் புகழ் பெற்றவர்.

அவர் நடித்த முதல்படமே வெண்ணிற ஆடை! புனிதத்தின் அடையாளமாய், சமாதானத்தின் குறியீடாய்

விளங்கும் வெண்ணிறமே தூய்மைக்கு எடுத்துக்காட்டு! அவ்வண்ணமே நல்லாட்சி புரிந்து வரும் அம்மாவின் ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் மேலும் புத்துணர்ச்சி பெற்றுள்ளதை எவரும் மறுக்க இயலாது.

தமிழ்த் திரையுலகிற்கு தாயுள்ளத்துடன் தொடர்ந்து உதவி வரும் அம்மாவின் கரத்தை
வலுப்படுத்துவதே, தமிழ்த் திரையுலகம் அவருக்குச் செய்யும்

நன்றிக் கடனாகும். தமிழ்த்திரை உலகில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் ராஜ நடை
போட்டுக் கொண்டிருந்த வேளையில், அடுத்த தலைமுறைக்கு

அடையாளம் காணப்பட்ட சிலரில் ரஜினிகாந்தும் ஒருவர். 1975-ம் ஆண்டு தமிழ்த்திரை உலகுக்கு
பொற்காலம் என்றே சொல்ல வேண்டும். இந்த

ஆண்டில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

ஆண்டுகள் பல உருண்டு ஓடிவிட்டாலும், அன்றும் இன்றும் என்றும் மக்கள் மத்தியில் சூப்பர்
ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார். 1978-ம் ஆண்டு

வரை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினிகாந்த், பைரவி படத்தில்
கதாநாயகனாக நடித்தார். கலைஞானம் தயாரித்த

இப்படத்தை எம்.பாஸ்கர் இயக்கி இருந்தார். பைரவி 2.6.1978-ல் வெளியாகி பெரும் வெற்றி
பெற்றது. பைரவி படத்தின் சென்னை வினியோக உரிமையை

வாங்கினேன். இப்படத்தின் போஸ்டரை மிகப் பிரமாண்டமாக, அதாவது ஆறு துண்டுகள் கொண்ட மெகா
சைஸில் அடித்தேன்.

பிளாசா தியேட்டரில் ரஜினிகாந்திற்கு முப்பத்தஞ்சு அடியில் கட்-அவுட் வைத்தேன். பைரவி
வெளியான ராஜகுமாரி தியேட்டருக்குச் சென்று படம்

பார்த்துக் கொண்டிருந்த போது தான் அந்த இனிய சம்பவம் நிகழ்ந்தது. படத்தின் இடைவேளையின்
போது விநியோகஸ்தர் எங்கே? என்று ரஜினி கேட்க,

உடனே என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைக்க என் கையை இறுக்கிப் பிடித்த ரஜினி,
பப்ளிசிட்டி மிகவும் பிரமாதம்! என்று கட்டிப் பிடித்துப்

பாராட்டினார்.

பாராட்டு மழையில் நனைந்த நான், அடுத்த நாள் செய்தித்தாளில் தி கிரேட் சூப்பர் ஸ்டார்
ரஜினியின் பைரவி என்று விளம்பரம் செய்திருந்தேன். அதைப்

பார்த்த ரஜினி மிகவும் டென்ஷன் ஆகிவிட்டார். தயாரிப்பாளர் கலைஞானமும், டைரக்டர் பாஸ்கரும்
என்னைத் தேடி வந்து, ரஜினி மிகவும் வருத்தம்

அடைந்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற பெரிய நட்சத்திரங்கள் இருக்கும்போது, என்னை
சூப்பர் ஸ்டார்னு விளம்பரம் செய்தால், அவர்கள் மனம்

புண்படுமே! என்று வருத்தப்பட்டதாகச் சொன்னார். என்னைப் பொறுத்த வரை ரஜினி சூப்பர்
ஸ்டாராகத் தெரிகிறார் என்று சொன்னேன்.

அன்று நான் சொன்னதும், செய்ததும் சரியே என்று காலம் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.
ரஜினிகாந்த் புதிதாக ஒரு படத்தில் நடிக்க

வேண்டுமானால், முதலில் அவருக்குக் கதை பிடிக்க வேண்டும், ஒரு தடவைக்கு இரண்டு தடவை
கதை கேட்பார். அதன் பின்னரே முழு மனதோடு

படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார். எந்தக் கஷ்டம் வந்தாலும் பின் வாங்கமாட்டார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒரு சிலரை நான் நன்கறிவேன். அவர்கள்
அனைவருமே, ‘எங்கள் கூட்டத்திலேயே ரஜினி

ஒருத்தர் தான் சூப்பர் ஸ்டாராகி இருக்கிறார். எங்களில் வேறு யாராவது ரஜினியைப் போல்
சூப்பர் ஸ்டாராகி இருந்தால் இவரைப் போல் எளிமையாக

பழைய நட்பை மறக்காமல் பழகி இருப்பார்களா என்று சந்தேகம் தான்! என்று குறிப்பிட்டுள்ளதை
நான் பலமுறை கேட்டுள்ளேன்.

வெற்றியின் உச்சத்திற்கு உயர்ந்திட்டாலும், இன்றும் ரஜினிகாந்த் அடக்கத்துடனும் எளிமையுடனும்
அனைவரிடமும் நடந்து கொள்வதை கண் கூடாகக்

கண்டு வருகிறோம். சொகுசு மாளிகையில், குளுகுளு அறையில், பஞ்சு மெத்தையில்
புரள்வதையே விரும்பும் சிலரிடையே ரஜினி வித்தியாசமாகக்

காணப்படுகிறார். ஆம்... இவருக்குப் பிடித்த இடங்கள் இரண்டு! ஒன்று பூஜையறை; மற்றொன்று
இமயமலை! தமிழ்த்திரைக்குக் கிடைத்திட்ட மாபெரும்

பொக்கிஷங்களில் ரஜினிகாந்த் பிரதானமானவர் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

Kalaipuli S. Thanu said in a statement that the Tamil cine industry has
got refreshed in Amma's rule.