"பிரபா ஒயின்ஸ் ஓனர்" புகழ் நடிகர் செல்லத்துரை மரணம்!

காமெடி நடிகர் செல்லத்துரை சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74. மறைந்த செல்லத்துரைக்கு 2 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர்.

நடிகர் செல்லத்துரை 'தூறல் நின்னு போச்சு' படத்தில் அறிமுகமானார். அதற்குப் பிறகு 350 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுள்ளார். வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

பிரபா ஒயின்ஸ்ஷாப் ஓனர்

வடிவேலு நடித்த காமெடிகளில் பிரபலமானது ‘பிரபா ஒயின் ஷாப் ஓனர்' காமெடி. ஒயின்ஷாப்புக்குள் மாட்டிக்கொள்ளும் வடிவேலு வீட்டில் மனைவியுடன் ஜாலியாக இருக்கும் ஓனர் செல்லத்துரைக்கு போன் போட்டு பண்ணும் டார்ச்சர் இன்றைக்கும் டிவிக்களில் பிரபலம்.

தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட படங்களில் சிறு சிறு வேடங்களில் செல்லத்துரை நடித்துள்ளார்.

சிறுநீரகக் கோளாறு

கடந்த சில மதங்களாக, சிறுநீரகப் பிரச்னை காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த செல்லதுரை 3 நாட்களுக்கு முன் உயர் ரத்த அழுத்தம் காரணமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று மரணமடைந்தார். அவரது இறுதி சடங்கு வடபழனி சுடுகாட்டில் நடைபெற்றது.

 

பூங்கொத்து அனுப்பி வாழ்த்து... கண்கள் சிவக்க... உதடு துடிக்க... கோபத்தில் நடிகர்!

சென்னை : மகன் பட விழாவுக்கு வருவதாக உறுதி அளித்து விட்டு, கடைசி நேரத்தில் பூங்கொத்து மட்டும் அனுப்பிய உச்ச நடிகர்கள் மீது கண்கள் சிவக்க கோபத்தில் இருக்கிறாராம் கப்பல் கட்சி தலைவர்.

தன் மகன் நாயகனாக அரிதாரம் பூசும் இப்படத்திற்கு மயிலு மகளை நாயகியாக்கி முதலில் பப்ளிக்குட்டி தேட முயற்சித்தார் நடிகர். ஆனால், அது பலிக்கவில்லை. எனவே, ஆடியோ விழாவையாவது பிரம்மாண்டமாக நடத்தி அனைவரின் கவனத்தையும் கவர முயற்சித்தார்.

இதற்காக முன்கூட்டியே, தமிழின் உச்ச நடிகர்கள் இருவரிடம் ‘நேரில் வந்து வாழ்த்த வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். அவர்களும் ‘அப்படியே' என உறுதி அளித்தனர். இந்தச் செய்தி ஊடகங்களிலும் பரபரப்பாக வெளியானது.

ஆனால், சொன்னபடி படவிழாவில் கலந்து கொள்ளாமல், ‘வாக்கு' தவறி விட்டார்கள் உச்ச நடிகர்கள் இருவரும். நேரில் விழாவில் கலந்து கொள்ளாமல், பூங்கொத்து மட்டும் அனுப்பி தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

இதனால் ஏமாற்றமடைந்த தலைவர், உச்ச நடிகர்கள் இருவர் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.

தலைவர் கோபத்திற்காக விழாவில் பங்கேற்று தலைவியின் கோபத்தைச் சம்பாதித்துக் கொள்ள விரும்பாததால் தான் உச்ச நடிகர்கள் விழாவைப் புறக்கணித்து விட்டதாக கூறுகிறார்கள் விசயம் தெரிந்தவர்கள்.