நார்வே தமிழ் திரைப்பட விழா: வெங்காயம், வாகை சூட வா உள்பட 15 தமிழ்ப் படங்கள் தேர்வு


தமிழ் சினிமாவுக்கென்றே சர்வதேச அளவில் நடக்கும் நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்க 15 தமிழ்ப் படங்கள் தேர்வாகியுள்ளன.

வரும் ஏப்ரல் மாதம் 25-ம் தேதி முதல் - 29-ம் தேதி வரை ஐந்து நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெற உள்ளது.

வசீகரன் இசைக்கனவுகள், அபிராமி கேஷ் அண்ட் கேரி ஆதரவோடு, இம்முறை நார்வேயைச் சேர்ந்த அமைப்புகள் சில இணைந்து இந்த விழாவை நடத்துகின்றன.

இதுகுறித்து திரைப்பட விழா குழு இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

மிகப்பெரிய சர்வதேச திரைப்பட விழாவாக உருவெடுத்துள்ள இந்த நார்வே தமிழ் திரைப்பட விழா குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தமிழ்ப் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இதில் பங்கேற்க மிகுந்த ஆர்வம் காட்டி வந்தனர். தங்கள் படங்களை போட்டிக்காக அனுப்பி வைத்துள்ளனர். குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தங்களுடைய படைப்புகளை அனுப்பிய வண்ணம் உள்ளனர்.

இவ்வாறு கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள், திரைப்பட விழா குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட திரைப்படங்களிலிருந்து 15 படங்களை குளோரியா செல்வநாதன் (ஜெர்மனி) தலைமையிலான 7 பேர் கொண்ட நார்வே தமிழ் திரைப்பட விழா குழு தேர்வு செய்து அறிவித்துள்ளது.

தேர்வாகியுள்ள படங்கள்:

நார்வே தமிழ் திரைப்பட விழா - தமிழர் விருது 2012

01.அழகர்சாமியின் குதிரை
02.வெங்காயம்
03.வாகை சூடவா
04.கோ
05.ஆரண்ய காண்டம்
06.தீராநதி - பிரான்ஸ்
07.எங்கேயும் எப்போதும்
08.போராளி
09.மயக்கம் என்ன
10.பாலை
11.உச்சிதனை முகர்ந்தால்
12.வர்ணம்
13.மகான் கணக்கு
14.ஸ்டார் 67 (Star 67 - கனடா)
15.நர்த்தகி

இந்த விழாவுக்காக தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் குறித்த விவரம் வரும் 25.02.2012 அன்று வெளியாகும். இந்த விழாவில் தமிழர் விருதுக்கான போட்டியில் பங்குபெறாமல், விசேஷ பிரிவில் சுபாஷ் கலியன் இயக்கிய பாலம் கல்யாணசுந்தரத்தின் ஆவணப்படம், அன்னக்கிளி ஆர் செல்வராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில் வெளியான பச்சைக்குடை போன்ற படங்கள் திரையிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவை உலகளவில் கொண்டு செல்லும் பெரும் முயற்சி இது. இந்த முயற்சி முழுமையான வெற்றியை அடைய, இந்தி சினிமாவின் உலகளாவிய வீச்சு மற்றும் வர்த்தகத்தை மிஞ்சும் வகையில் தமிழ் சினிமா படைப்புகள் அமைய, தமிழ் சினிமாவின் அனைத்து படைப்பாளிகளையும், துணை நிற்குமாறு வேண்டுகிறோம்.

இந்த திரைப்பட விழா என்பது ஏதோ தனிப்பட்ட ஒரு நிகழ்வு என்று எண்ணாமல், தமிழ் சினிமாவை கவுரவப்படுத்தும், உலக அளவுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாகக் கருதி இயக்குநர்கள், கலைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து பங்கேற்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

-இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
 

வேண்டாம் வன்முறைக் காட்சிகள்! - தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு நார்வே திரைப்பட விழாக் குழுவின் வேண்டு


தமிழ்ப் படைப்பாளிகளின் படங்கள் உலக அரங்கில் அனைத்து நாடுகளிலும் திரையிடப்பட, வன்முறைக் காட்சிகளைத் தவிர்க்க வேண்டும் என நார்வே திரைப்பட விழாக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து நார்வே திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

அன்பான தமிழ் சினிமா படைப்பாளிகளே...

உங்கள் படைப்புகள் ரசிகர்களின் சுகமான இளைப்பாறல்கள். இன்றைக்கு தமிழர்கள் இல்லாத நாடில்லை. அங்கெல்லாம் தமிழ் சினிமாவை கொண்டுசெல்வதும், கலை ரீதியாக மட்டுமல்ல, வர்த்தக ரீதியாகவும் தமிழ்ப் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும் முயற்சியில் நார்வே தமிழ் திரைப்பட விழா குழு இறங்கியுள்ளது.

நார்வே தமிழ் திரைப்பட விழா தவிர, மற்ற நாடுகளில் நடக்கும் திரைப்பட விழாக்களிலும் தமிழ்ப் படங்களை எடுத்துச் செல்லும் முயற்சியையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். இது தவிர, தமிழ் சினிமாவுக்கென்று புதிய சந்தையை உலக நாடுகளில் உருவாக்குவதிலும் ஓரளவு வெற்றி கண்டு வருகிறோம்.

எங்களது இந்த முயற்சிக்கு தமிழ்ப் படைப்பாளிகளின் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது.

சர்வதேச அரங்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு கலாச்சாரம், சமூகக் கட்டுப்பாடுகள் நிலவுகின்றன. அவற்றை மனதில் கொண்டு படமெடுக்கும்போது, மிக எளிதாக அந்த நாடுகளில் படங்களை திரையிட முடியும். எந்த தடையும் வராது.

உதாரணத்துக்கு வன்முறைக் காட்சிகள், மிகவும் உறுத்தலான சண்டை காட்சிகளுக்கு நார்வே போன்ற நாடுகளில் அனுமதியில்லை. அங்கு இந்த வயதுக்கு இந்த மாதிரி படங்கள், காட்சிகள்தான் பார்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. எனவே வன்முறை மற்றும் பாலுணர்வு காட்சிகள் அதிகமிருந்தால் அங்கே அதனை வயதில்லா படம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். அதாவது எந்த வயதுக்காரர்களும் பார்க்க முடியாத படமாகிவிடும்.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் நிறைய உள்ளது. இந்த முறை நமது திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்ய நினைத்த சில படங்களை, இம்மாதிரி காட்சிகள் காரணமாக தேர்வு செய்ய முடியாமல் போனது.

சர்வதேச சமூகச் சூழலைப் புரிந்து காட்சியமைப்பில் படைப்பாளிகள் கவனம் செலுத்தினால், அவர்களின் படங்களை உலகின் எந்த மூலையிலும் கொண்டுபோக முடியும். படைப்பாளிகளின் சுதந்திரத்தில் தலையிடுவதாகக் கருதாமல், தங்கள் படைப்புக்கள், ஆங்கிலம், இந்திப் படங்கள் மாதிரி அனைத்து தரப்பினரையும் போய்ச் சேர ஒரு டிப்ஸ் ஆக இந்த யோசனையை செவிமடுக்குமாறு கோருகிறோம்.

நார்வே தமிழ் திரைப்பட விழாக் குழு என்றென்றும் தமிழ்ப் படைப்புகள் மேம்பட்டு நிற்கவும், உலகளாவிய சந்தையில் முன்னணி வகிக்கவும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

விஷால் படத்தில் இருந்து வெளியேறினார் பிரகாஷ்ராஜ்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
த்ரிஷா நடிக்கும் படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறினார். விஷால், த்ரிஷா முதன்முறையாக ஜோடியாக நடிக்கும் படம் 'சமரன்'. இதை திரு இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை' படத்தை இயக்கியவர். இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்க முதலில் அரவிந்த சாமியிடம் பேசப்பட்டது. இப்படம் மூலம் அவர் ரீ என்ட்ரி ஆவார் என்று திரையுலகினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் நடிக்க வருவதற்கு மறுத்துவிட்டார். இதையடுத்து அந்த வேடத்துக்கு பிரகாஷ்ராஜ் பேசப்பட்டார். முதலில் நடிப்பதாக ஒப்புக்கொண்டார். இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் ஒரு மாதம் தள்ளிப்போனது. நடிகர்களின் கால்ஷீட் பிரச்னையும் ஏற்பட்டது. இப்போது படத்தில் இருந்து பிரகாஷ்ராஜ் வெளியேறி இருக்கிறார். தற்போது இந்த வேடத்திற்கு மனோஜ் பாஜ்பாய் தேர்வாகி உள்ளார். இவர், இந்தியில் பிரபல நடிகர். தற்போது 'சமரன்' ஷூட்டிங் பாங்காக்கில் நடக்கிறது. விஷால், பாஜ்பாய், த்ரிஷா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக உள்ளன.


 

ஒலிப்பதிவு தரம் குறைந்து விட்டது : ரசூல் பூக்குட்டி

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
இசைப்புயல் ரகுமானுடன் ஆஸ்கார் விருது வென்ற இன்னொரு இந்தியர் ரசூல் பூக்குட்டி. தமிழில் எந்திரன் மற்றும் நண்பன் படங்களுக்கு ஒலிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து ஒலிப்பதிவு செய்த படங்களை தியேட்டரில் பார்க்கும்போது அதன் 40 சதவீத ரிசல்ட்தான் வெளிப்படுகிறது என்று அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தியேட்டரில் ஒலிப்பதிவு சாதனங்களின் தரம் குறைவாகவே இருக்கிறது என்கிறார் ஆஸ்கர் விருது வென்ற ரசூல் பூக்குட்டி.


 

திருட்டு டிவிடி விற்பனை : சில்க் படம் முதலிடம்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
இந்தியில் தயாரான சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படம், திருட்டு டிவிடி விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது என்றார் தயாரிப்பாளர் ஏக்தா கபூர். தமிழ் கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தி யில் தயாரான படம் 'தி டர்ட்டி பிக்சர்'. இதில் சில்க் வேடத்தில் வித்யா பாலன் நடித்தார். ஏற்கனவே சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் முன்னணி இடத்தை பிடிக்கவில்லை. இப்படத்துக்கு பிறகு பாலிவுட்டில் தனக்கென ஒரு இடம் பிடித்தார். படம் வெளியான 2 மாதத்தில் இதன் ஒரிஜினல் டிவிடி மும்பையில் வெளியிடப்பட்டது. இது பற்றி பட தயாரிப்பாளர் ஏக்தா கபூர் கூறும்போது, ''இந்திய சினிமாவிலேயே அதிகபட்சம் திருட்டு டிவிடியில் பார்க்கப்பட்ட படம் 'டர்ட்டி பிக்சர்'தான். இவ்வளவு விரைவாக படத்தின் ஒரிஜினல் டிவிடி வெளியிட்டது பற்றி கேட்கிறார்கள். அப்படி செய்யாவிட்டால் இதன் திருட்டு டிவிடி விற்பனை, பட ரிலீஸில் கிடைத்த வசூலையே தாண்டிவிடும். எனவேதான் உடனடியாக டிவிடி வெளியிடப்படுகிறது'' என்றார். இதுபற்றி வித்யாபாலன் கூறும்போது, ''நல்ல படங்களை கொடுக்கும் எண்ணத்துடன்தான் நடிக்கிறேன். நிறைய படங்கள் ஓடவில்லை. எதுவும் நம் கையில் இல்லை என்பதை 'தி டர்ட்டி பிக்சர்' வெற்றி எடுத்துக்காட்டி இருக்கிறது. இப்படம் 2 மாதத்தில் ரீ ரிலீஸ் செய்தபோது மறுபடியும் ஒரு வசூல் சாதனை நிகழ்த்தியது. டிவிடியும் சாதனை புரியும். சில்க் வேடத்தில் நடித்ததற்காக எனக்கு அதிகபட்சமாக விருதுகள் கிடைத்தது" என்றார்.


 

புயல் நிவாரண நிதிக்கு முதல்வரிடம் கமல்ஹாசன் ரூ.15 லட்சம் வழங்கினார்

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
புயல் நிவாரண நிதிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர் கமலஹாசன் ரூ.15 லட்சத்தை இன்று வழங்கினார். தானே புயல் நிவாரண பணிக்காக தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு அமைப்புகள், தனி நபர்கள் என பலரும் முதல்வரிடம் நிதி அளித்து வருகின்றனர். நடிகர் கமலஹாசன் இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு வந்தார். முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து, நிவாரண நிதியாக ரூ.15 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

பின்னர், வெளியே நிருபர்களிடம் கமலஹாசன் கூறுகையில், தானே புயல் நிவாரண நிதிக்கு என்னாலான நிதியை வழங்கி உள்ளேன். இது சிறுதுளிதான் என்றாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயன்படும் என்றார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பன்னீர் செல்வம் ரூ.20 லட்சத்துக்கான காசோலையை முதல்வரிடம் வழங்கினார்.


 

இது எங்கள் குடும்பச் சண்டை : ஷாரூக்

bollywood news, latest bollywood news, tamil bollywood news, bollywood latest news, bollywood masala, cinema news
நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின் அக்னிபாத் பட விருந்தில் சிரிஷ் குந்தரை அடித்துவிட்டார் ஷாரூக்கான். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அடித்துக்கொண்ட இருவரையும் சமாதானப்படுத்தினர், ஃபராகானின் சகோதரர் சஜித் கானும் பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவும்.

இதன் விளைவு நேற்று மும்பை மன்னாட்டில் உள்ள ஷாரூக்கான் வீட்டுக்கு ஃபராகானும் சிரிஷ் குந்தரும் சென்றனர்! குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாரூக்கான்.


 

கையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளி... - ஹைதராபாத் ரசிகர்களிடம் கசங்கிய அமலா!


காதலில் சொதப்புவது எப்படி படத்தின் தெலுங்குப் பதிப்பு பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அமலா பாலை ரசிகர்கள் கையைப் பிடித்து இழுத்து, இடுப்பைக் கிள்ளியதில் உடலில் நகக்கீறல்கள் ஏற்பட்டன.

இந்தப் படத்தில் சித்தார்த் ஜோடியாக நடிக்கிறார் அமலா. தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. சென்னையில் கடந்த வாரம் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. அவ்விழாவுக்கு அமலாபால் வரவில்லை.

பட விழாவை திட்டமிட்டு புறக்கணித்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பின. அன்றைய தினம் பரீட்சை இருப்பதாக அவர் பொய் கூறியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஹைதராபாத்தில் நடந்த இப்படத்தின் தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவில் அமலாபால் பங்கேற்றார்.

தெலுங்கில் ஏற்கெனவே அறிமுகமானவர் அமலா. மேலும் அவரது தமிழ்ப் படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகியுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அவநர் பிரபலம்.

எனவே அமலா பாலை காணபடவிழா நடந்த அரங்கம் எதிரில் தெலுங்கு ரசிகர்கள் குவிந்தனர். விழா முடிந்து அமலாபால் வெளியே வந்த போது ஆட்டோ கிராப் வாங்குவது போல் சுற்றி வளைத்தனர்.

இதனால் கூட்டத்தில் அவர் சிக்கிக் கொண்டார். சிலர் அமலாபாலின் கையை பிடித்து இழுத்தனர். இடுப்பில் கை போட்டனர். இதனால் அவர் உடம்பில் நகக்கீறல்கள் பட்டு காயமும் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு அங்கு நின்ற பாதுகாவலர்கள் விரைந்து சென்று ரசிகர்கள் பிடியில் இருந்து அமலாபாலை மீட்டு போலீஸ் வண்டியில் அனுப்பி வைத்தனர்!
 

பெப்சி உண்ணாவிரதம்... அனுமதி கிடைக்குமா?


சினிமா தொழிலாளர்கள் அமைப்பு பெப்சி நடத்தவிருக்கும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி கொடுக்காமல் இருப்பதால், அடுத்து என்ன செய்வது என யோசித்து வருகின்றனர் நிர்வாகிகள்.

திரைப்பட தொழிலாளர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தன்னிச்சையாக சம்பள உயர்வு பட்டியலையும் அவர்கள் அறிவித்து உள்ளனர்.

இதனால் தயாரிப்பாளர் சங்கம், பெப்சியுடன் உள்ள உறவை துண்டித்துள்ளது. தயாரிப்பாளர்கள் தங்கள் விருப்பம் போல் தொழிலாளர்கள் வைத்து படத்தை எடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்து உள்ளது. இதற்கிடையில் சம்பளத்தை உயர்த்திதராத படங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் மறுத்துவிட்டனர்.

இதனால் உள்ளூர், வெளியூர்களில் நடந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. சூர்யா, ஜீவா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்கள் படங்களும் முடங்கியது. தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையே சமரசம் ஏற்படுத்த ரகசியமாக நடந்த முயற்சிகள் தோல்வி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 படங்கள் பாதிப்பு

போராட்டம் நீடிப்பதால் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பில் உள்ளனர். சுமார் 50 படங்களின் படப்பிடிப்புகள் முடங்கி யுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் பெப்சி சங்கத்தினர் சம்பள உயர்வு கேட்டு குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர். எம்.ஜி.ஆர். சமாதி முன் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்கின்றனர்.

ஆனால் அதற்கு போலீசார் அனுமதி அளிக்கமாட்டார்கள் என தெரிகிறது. அடுத்தவாரம் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த ஆலோசித்து வருகின்றனர்.

இதற்கிடையே, இந்தப் பிரச்சினையில் முதல்வர் தலையிட்டு சமாதானப்படுத்த இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
 

ஹன்சிகா மீது நயன் நலம் விரும்பிகள் காட்டம்!


நடிகை நயன்தாரா, இயக்குனர் பிரபுதேவா உறவு அத்துக்கொள்ளும் நிலையில் இருப்பதற்கு ஹன்சிகா மோத்வானியே காரணம் என்று நயன்தாராவுக்கு நெருக்கமான வட்டாரம் காட்டமாக உள்ளது.

நடிகை நயன்தாரா மீது காதல் கொண்டதும் பிரவுதேவா தனது மனைவி ரமலத் மற்றும் பிள்ளைகளைப் பிரிந்துவிட்டார். அவர்கள் திருமணத் தேதி இன்று அறிவிக்கப்படும், நாளை அறிவிக்கப்படும் என்று காலம் ஓடியது தான் மிச்சம். தற்போது திருமணத் தேதி அறிவிக்கப்படும் முன்பே அவர்கள் பிரிந்துவிடுவார்கள் போன்று. திருமணத்திற்குப் பிறகு நயன் நடிப்பதை பிரபுதேவா விரும்பாததால் அவர் தெலுங்கில் நடித்த ஸ்ரீ ராம ராஜ்யம் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று அறிவித்தார்.

அதற்குப் பிறகு எத்தனையோ பேர் இவ்வளவு தருகிறோம், அவ்வளவு தருகிறோம் நடிக்க வாருங்கள் என்று அழைத்தும் நயன் சம்மதிக்கவே இல்லை. இந்நிலையில் தற்போது நாகர்ஜுனா நடிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். பிரவுதேவா தன் பாட்டுக்கு புதுப் படங்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர்கள் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்று கோலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே 2 பெண்கள் உள்ள பிரபுதேவாவின் வாழ்க்கையில் கொழுக், மொழுக் நடிகை ஹன்சிகா மோத்வானி புகுந்ததால் தான் நயன்-பிரபுதேவா உறவு முறியப்போகிறது என்று நயனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

எப்போ, ஹன்சிகாவுடன் எங்கேயும் காதல் படத்தில் பிரபுதேவா இணைந்து பணியாற்றினாரோ அப்போதே எல்லாம் முடிந்து விட்டதாகவும் அவர்கள் புலம்புகிறார்களாம்.

அது சரி..!
 

குடும்பத்துக்குள்ள அடிதடியெல்லாம் சாதரணமப்பா! - சமாதானமான ஷாரூக் - சிரிஷ்!


குடும்பம் என்று இருந்தால் அடிதடி சண்டை இருக்கத்தான் செய்யும். இதெல்லாம் சாதாரணம். பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, என்றார் நேற்று இயக்கநர் ஃபராகான் கணவர் சிரிஷ் குந்தரை புரட்டியெடுத்த ஷாரூக்கான்.

நேற்று முன்தினம் சஞ்சய் தத்தின் அக்னிபாத் பட விருந்தில் சிரிஷ் குந்தரை அடித்துவிட்டார் ஷாரூக்கான். இந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களுக்குள் அடித்துக்கொண்ட இருவரையும் சமாதானப்படுத்தினர், ஃபராகானின் சகோதரர் சஜித் கானும் பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலாவும்.

இதன் விளைவு நேற்று மும்பை மன்னாட்டில் உள்ள ஷாரூக்கான் வீட்டுக்கு ஃபராகானும் சிரிஷ் குந்தரும் சென்றனர்!

ஷாரூக்கானை நேரில் சந்தித்து இருவரும் மனம் விட்டுப் பேசினர். பின்னர் வெளியில் வந்த சிரிஷ், "அன்றைக்கு என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியாது. அவரவருக்குத் தெரிந்ததை சொல்லிவிட்டனர். ஆனால் நாங்கள் எங்களுக்குள் இருந்த மன வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டோம். இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள்," என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "சண்டை நடக்காத பார்ட்டி ஏது... அன்று நன்றாகக் குடித்திருந்தோம். ஏதோ விவாதம்... மனதுக்குள் இருந்த ஆத்திரத்தை கொட்டிவிட போதை ஒரு வாய்ப்பு... அப்படி வந்த சண்டைதான் அது. இப்போது எல்லாம் சரியாகிவிட்டது. முன்னை விட நாங்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டோம். குறிப்பாக எனக்கும் ஷாரூக்கானுக்கும் இருந்த பிரச்சினை மட்டுமல்ல... என் மனைவி ஃபராவுக்கும் ஷாரூக்குக்கும் இருந்த வேறுபாடுகள் கூட நீங்கிவிட்டன. இந்த சண்டை கூட நல்லதுக்குதான்," என்று கூறியுள்ளார்.

இயக்குநர் ஃபராகான் கூறுகையில், "நாங்கள் ஷாரூக் வீட்டில் 3 மணி நேரம் இருந்தோம். பேசினோம், சிரித்தோம், நெகிழ்ந்தோம், அழுதோம்... இப்போது எல்லாம் நல்லபடியாக முடிந்தது. என் தம்பிக்கும், தயாரிப்பாளர் நாடியாவாலாவுக்கும் நன்றி," என்றார்.

இதுகுறித்து ஷாரூக்கான் தனது ட்விட்டரில், "குடும்பத்துக்குள் சண்டை வருவது போலத்தான் இது. எல்லாம் நன்மைக்கே," என்று தெரிவித்துள்ளார்.
 

ஷாருக் மனைவி ரொம்ப ஹாட்!...'ஜொள்'கிறார் ரித்திக் ரோஷன்!


பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி ரொம்ப ஹாட் என்று நடிகர் ரித்திக் ரோஷன் தெரிவி்ததுள்ளார்.

பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக் கானின் மனைவி கௌரி 2 குழந்தைகளுக்கு தாயான பிறகும் சிக்கென்று இருக்கிறார். அப்படி கட்டுக்கோப்பாக உடம்பை வைத்திருக்கும்போதே ஷாருக் பிரியங்கா சோப்ரா இடையே தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன. இந்நிலையில் கௌரி கான் ரொம்ப ஹாட் என்று நடனத்தாலும், பார்வையாலும் வசீகரிக்கும் ரித்திக் ரோஷன் சொல்லியுள்ளார்.

ரித்திக் சொல்வது உண்மை தான். நடிக்காவிட்டாலும் பாலிவுட் நடிகை போன்று உடல்வாகு உள்ளவர் கௌரி. கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வோக் பத்திரிக்கையின் அட்டையில் கௌரியின் படம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கௌரியை பாலிவுட்டின் முதல் பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தனர்.

கடந்த 2009ம் ஆண்டில் அவர் தனது கணவர் ஷாருக்குடன் சேர்ந்து இயக்குனர், பேஷன் டிசைனர் கரண் ஜோஹாரின் பேஷன் ஷோவில் கேட் வாக் செய்தார். தற்போது ஷாருக் பிரியங்கா சோப்ராவுடன் அதிக நேரம் செலவழிப்பதால் கௌரி டென்ஷனில் உள்ளார். இது குறித்து கணவரிடம் கேட்டால் தகராறு தான் என்று பாலிவுட்டில் பரவலாகப் பேசப்படுகிறது. இது குறித்து ஷாருக்கும் வாய்திறக்கவில்லை, பிரியங்காவும் அமைதி காத்து வருகிறார்.

இப்படி இருக்கையில் ஏன் ரித்திக் ரோஷன் அப்படிச் சொன்னார் என்பது தெரியவில்லை..!
 

சரண்யா 'அப்படி' நடிக்கிறாரா?


நடிகை சரண்யா தான் நடிக்கும் மழைக் காலம் படத்தில் ஆடையில்லாமல் ஒரு காட்சியில் தோன்றுகிறாராம்.

நடிகைகள் ஆடையில்லாமல் நடிப்பதை பெரிய விஷயமாகப் பார்த்த காலம் மலையேறிவிட்டது. முதலில் பாலிவுட் நடிகைகள் ஆடை துறக்க ஆரம்பித்தனர். அண்மையில் கன்னடத்தில் பூஜா காந்தி அவ்வாறு நடித்தார். தற்போது தமிழில் சரண்யா ஆடை இழந்துள்ளார்.

காதல் படத்தில் சந்தியா தோழியாக நடித்து புகழ் பெற்றவர் சரண்யா. அடுத்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் பேராண்மை. தற்போது அவர் மழைக்காலம் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆடையில்லாமல் நடித்துள்ளாராம்.

ஒரு கலைக் கல்லூரியில் தன்னை ஒரு ஓவியன் வரைய ஏதுவாக ஆடையின்றி தோன்றி நடித்தாராம். அதாவது டைட்டானிக் படத்தில் லியோனார்டோ வரைய கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்த மாதிரி. ஹாலிவுட் நடிகையான கேட் வின்ஸ்லெட் போஸ் கொடுத்தே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழில் சரண்யாவின் போஸ் விவகாரம் எவ்வளவு பரபரப்பை எற்படுத்தவிருக்கிறதோ. சென்சார் பிரச்சனையால் சரண்யா போஸ் கொடுத்த காட்சி நிழல் போன்று தான் காண்பிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

போலி ஆவணங்கள் மூலம் ரூ 25 லட்சம் கடன் பெற்ற சத்யராஜ் பட தயாரிப்பாளர் கைது!


சென்னை: போலி ஆவணங்கள் மூலம் வங்கியில் கடன் வாங்கி ரூ.25 லட்சம் மோசடி செய்ததாக சத்யராஜ் நடித்த படத்தைத் தயாரித்த வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார்.

52 வயதான வரதராஜன் சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்வர். நடிகர் சத்தியராஜை வைத்து சுயேச்சை எம்.எல்.ஏ என்ற படத்தை தயாரித்துள்ளார். மேலும் சில படங்களையும் தயாரித்துள்ளார். ஆனால் அந்த படங்கள் இன்னும் வெளிவரவில்லை.

இவர் ஆயில் நிறுவனமும் நடத்தி வந்தார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு தங்கசாலை தெருவில் உள்ள தேனா வங்கி கிளையில் ரூ.25 லட்சம் கடன் பெற்று இருந்தார். போலி ஆவணம் மூலம் இந்த கடன் தொகையை பெற்று மோசடியில் ஈடுபட்டதாக இவர்மீது புகார் கொடுக்கப்பட்டது.

இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ரவிவர்மன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். தயாரிப்பாளர் வரதராஜன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். இவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 

வாய்ப்பு கொடுத்து தமன்னாவை கடுப்பேற்றிய இயக்குனர்


இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் தன் மார்க்கெட் அடியாகவில்லை என்று நடிகை தமன்னா கொதித்து விட்டாராம்.

வாமனன் பட இயக்குனர் அகமது, ஜீவாவை வைத்து படம் ஒன்று எடுக்கிறார். இதில் ஜீவாவுக்கு 2 ஜோடிகள். முதல் ஜோடியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஜீவா, த்ரிஷா முதல் முறையாக இந்த படத்தில் இணைகின்றனர்.

இரண்டாவது நாயகியையும் பெரிய ஆளாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இயக்குனர் தனது மேனேஜரை தமன்னா வீட்டுக்கு அனுப்பியுள்ளர்.

மேனேஜரும் தமன்னாவை சந்தித்து கதை சொல்லியுள்ளார். கதையை கேட்ட அவர் த்ரிஷாவுக்கு பதிலாக நான் நடிக்க வேண்டுமா அல்லது அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டுமா என்று கோபத்துடன் கேட்டுள்ளார்.

அதற்கு மேனேஜர் சேர்ந்து தான் ஆக்ட் கொடுக்கோணும் என்று சொல்லியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்து விட்டாராம் தமன்னா.

இரண்டாவது நாயகியாக நடிக்கும் அளவுக்கெல்லாம் எனது மார்க்கெட் அடியாகவில்லை. மேலும் எனக்கு அந்த நிலையும் வராது என்று போய் உங்கள் இயக்குனரிடம் கூறுங்கள் என்று விரட்டி விட்டாராம்.

அத்..சரி...!
 

ரூ. 40 லட்சத்தில் கழுத்திலிருந்து வயிறு வரை தொங்கும் நெக்லஸ்-வாங்குகிறார் கரீனா!


பாலிவுட் நடிகை கரீனா கபூர் தனது திருமணத்திற்காக ராஜ பரம்பரையினர் அணிவது போன்ற ஒரு நெக்லஸுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் விலை வெறும் ரூ.40 லட்சம் தான்.

பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூருக்கும், பட்டோடியின் நவாப் மற்றும் நடிகரான சைப் அலி கானுக்கும் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் திருமணம் நடக்கிறது. பல ஆண்டுகளாக காதலர்களாக வலம் வந்த அவர்கள் தற்போது திருமண பந்தத்தில் இணையப் போகின்றனர். இது சைப் அலி கானுக்கு இரண்டாவது திருமணம் ஆகும். அவருக்கு முதல் மனைவி மூலமாக ஒரு மகளும், மகனும் உள்ளனர். ஆனால் கரீனாவுக்கு இதுதான் முதல் கல்யாணம்.

கரீனா கபூர் திருமணத்தன்று அணிய ராஜ பரம்பரையினர் அணிவது போன்ற நெக்லஸுக்கு ஆர்டர் கொடுத்துள்ளார். அதன் விலை ரூ.40 லட்சம் ஆகும். ராஜ்காட்டில் உள்ள ஒரு பாரம்பரிய நகை தயாரிப்பாளரிடம் இந்த நெக்லஸுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. 400 கிராம் தங்கத்தில் செய்யப்படும் நெக்லஸில் விலை உயர்ந்த கற்கள் பதிக்கப்படும்.

கழுத்தில் தொடங்கி வயிறு வரைக்கும் வரும் இந்த நெக்லஸை செய்யவே 2 மாதமாகுமாம். சைப் அலி கான் தனது வருங்கால மனைவிக்கு பெரிய வைரக் கல் பதித்த மோதிரத்தைக் கொடுத்து அசத்த திட்டமிட்டுள்ளாராம்.

அசத்துங்க பாய்..!
 

பாரதிராஜா படத்திலிருந்து அமீர் விலகல்?


கடந்த சில தினங்களாகவே கோடம்பாக்கத்தில் பெரும் புகைச்சல். எந்நேரமும் பெரும் தீயாக மாறிவிடும் அளவுக்கு கனன்று கொண்டிருக்கிறது சினிமா தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையிலான பகைமை.

காரணம், பெப்சியின் ஊதியப் பிரச்சினை. இனி ஊதிய ஒப்பந்தமெல்லாம் கிடையாது... எங்கள் இஷ்டம்தான் என்று தயாரிப்பாளர்கள் தடாலடியாக அறிவித்துவிட்ட நிலையில், பெப்சி அடுத்த கட்ட போராட்டத்தை ரொம்ப கவனத்துடன் முன்னெடுத்துள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் சங்கத் தலைவர் பாரதிராஜா தயாரிப்பாளர்கள் பக்கம் நிற்கிறார். இனி எனக்கு வசதியான ஆட்களை வைத்து வேலை வாங்கிக் கொள்கிறேன் என தனது பரிவாரத்துடன் போய் தேனியில் முகாமிட்டுவிட்டார், தனது அன்னக் கொடியும் கொடி வீரனும் படத்துக்காக.

ஆனால் இந்தப் படத்தின் நாயகன் இயக்குநர் அமீர் பெப்சியின் பக்கம் நிற்கிறார். பெப்சியின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இயக்குநர் சங்க பொதுச் செயலர் என்ற முறையில் இயக்குநர்களின் சம்பள உயர்வை அமீரே அறிவித்துவிட, இது இன்னும் புகைச்சலைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில், அன்னக் கொடியும் கொடிவீரனும் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் பாரதிராஜா. ஆனால் படப்பிடிப்புக்குப் போக வேண்டிய அமீரோ சென்னையிலேயே உட்கார்ந்துவிட்டார்.

இதனால் பாரதிராஜாவின் படத்திலிருந்து அமீர் விலகல் என்று செய்திகள் றெக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளன. விஷயத்தை உறுதிப்படுத்தாமல் இயக்குநர் பாரதிராஜா மவுனம் காக்கிறார். இந்தப் பக்கம் அமீரோ, பாரதிராஜாவின் ரியாக்ஷனைப் பார்த்துவிட்டு பேசலாம் என அமைதி காக்கிறார்.

ஏற்கெனவே இந்தப் படத்துக்கு ஹீரோவாக ஒப்பந்தமானவர் இயக்குநர் பார்த்திபன். பின்னர் என்ன காரணத்தாலோ, பார்த்திபனை சொல்லாமல் கொள்ளாமல் கழட்டிவிட்டு அமீரை ஹீரோவாக்கினார் பாரதிராஜா. மீண்டும் பார்த்திபனை நாடுவாரோ...

மறுபடியும் மொதல்லருந்தா... !
 

இரவு விருந்து.... தோழி ஃபராகான் கணவரைப் புரட்டியெடுத்த ஷாரூக்கான்!


மும்பை: அக்னிபாத் வெற்றி விழா விருந்துக்கு வந்த பிரபல பெண் இயக்குநர் ஃபராகானின் கணவரும் இயக்குநருமான சிரீஷ் குந்தை கடுமையாக அடித்து உதைத்தார் நடிகர் ஷாரூக்கான்.

ஃபராகானும் ஷாரூக்கும் ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி நடிகர் சஞ்சய் தத் நடிப்பில் வெளியான அக்னிபாத் படம் வெற்றியடைந்ததை முன்னிட்டு மும்பை புறநகரில் உள்ள உணவகத்தில் சஞ்சய் தத் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். நடிகர் ஷாருக்கான் விருந்துக்கு வந்தார்.

விருந்து நடந்து இடத்திற்குள் நுழைந்த ஷாருக்கான் அங்கு நின்று கொண்டிருந்த இயக்குநர் சிரிஷ் குந்தரை நோக்கி வேகமாக சென்றார். பின்னர் திடீரென அவருடைய நீளமான தலைமுடியை பிடித்து இழுத்து கீழே தள்ளினார். சிரிஷ் குந்தர் முகத்தில் ஷாருக்கான் மாறிமாறி குத்தியதாகக் கூறப்படுகிறது.

இதைப் பார்த்த உணவகத்தின் உரிமையாளரான பாபா தீவான் தலையிட்டு ஷாருக்கானை பிடித்து வேறுபக்கமாக அழைத்துச் சென்றார். ஆனால் அவரை வெளியேறச் சொன்னார் ஷாரூக். உடனே சஞ்சய் தத் தலையிட்டு, ஷாரூக்கை அழைத்துச் சென்றுவிட்டாராம். அவர் மட்டும் வராமலிருந்திருந்தால் நிலைமை மிக மோசமாகிவிட்டிருக்கும் என்கிறார்கள்.

பின்னர் இயக்குநர் சிரிஷ் குந்தர், விருந்து நடந்த இடத்திலிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது அவருடைய முகம் முழுவதும் வீங்கி காணப்பட்டது.

சிரிஷ் குந்தரின் மனைவி பிரபல இயக்குநர் ஃபராகான் ஆவார். இவரும், ஷாருக்கானும் நெருக்கமான நண்பர்களாக இருந்தனர். ஷாரூக் தனது மே ஹுன் நா மற்றும் ஓம் ஷாந்தி ஓம் படங்களை இயக்கும் வாய்ப்பை ஃபரா கானுக்கு தந்திருந்தார். ஏராளமான படங்களில் ஷாரூக்கானுக்காக நடனம் அமைத்தவர் அவர்தான். ஆனால் தீஸ் மார் கான் படத்தில் ஃபராகான் அக்ஷய் குமாரை ஒப்பந்தம் செய்ய, பிரச்சினை ஆரம்பமானது.

சிரீஷ் குந்தரும் ஒரு காலத்தில் ஷாரூக்கின் நண்பராக இருந்தார். ஆனால் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஷாரூக்கை மோசமாக கமெண்ட் அடித்துக் கொண்டிருந்தார். இதனால் அவர் இயக்கிய ஜோக்கர் படத்துக்கு ஷாரூக் கால்ஷீட் கொடுக்கவில்லை. அந்த கோபத்தில், ஷாரூக்கின் ரா ஒன் படம் குறித்து கேவலமான விமர்சித்திருந்தாராம் சிரிஷ்.

இந்த நிலையில், நேற்றைய விருந்துக்கு வந்த ஷாரூக்கை மிகவும் கோபப்படுத்தும் விதத்தில் சிரீஷ் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அந்த கோபத்தில்தான் ஷாரூக் வெளுத்தாராம். எனினும் இதுபற்றி போலீசில் புகார் தரப்போவதில்லை என்று பாராகான் தெரிவித்து உள்ளார்.

"ஒருவரை அடிப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அது மோசமான விஷயம் என்றும் அடிக்கடி கூறுவார் ஷாரூக். அவரா இப்படிச் செய்தார் என்று ஆச்சர்யமாக உள்ளது," என்றார் ஃபாராகான்.

இந்த சண்டையின் போது நேரில் பார்த்த அனைவருமே, ஷாரூக் பக்கம் தவறில்லை என்றே குறிப்பிட்டுள்ளனர்.

2008-ம் ஆண்டு கத்ரீனா கைஃபின் பிறந்த நாள் விருந்தில் ஷாரூக்கானும் சல்மான் கானும் கைகலப்பில் இறங்கி பெரும் பிரச்சினையானது நினைவிருக்கலாம்!
 

29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!


இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.

ரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

இந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது.

நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.
 

இனி நோ ரீமேக்... ஒரிஜினல்தான்! - ஷங்கர்


சென்னை: இனி ரீமேக் படங்களை எடுக்கவே மாட்டேன். நண்பன்தான் எனது கடைசி ரீமேக் படம். இனிவரும் படங்களை ஒரிஜினலாகவே எடுப்பேன், என்று கூறியுள்ளார் இயக்குநர் ஷங்கர்.

ரஜினியின் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு ஷங்கர் விஜய்-ஜீவா-ஸ்ரீகாந்தை வைத்து இயக்கிய படம் 'நண்பன்'.

பொங்கலுக்கு ரிலீசான இந்தப் படம் நகர்ப்புறங்களில் பரவாயில்லை எனும் அளவுக்கு ஓடினாலும், கிராமம் சார்ந்த பகுதிகளில் பெரிதாகப் போகவில்லை. இதன் தெலுங்குப் பதிப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்துள்ளன. ஆந்திராவில் பெரும்பாலானோர், இந்தப் படத்தின் ஒரிஜினல் இந்திப் பதிப்பான 3 இடியட்ஸைப் பார்த்துவிட்டதால், இந்த 'சினேகிதடு' தங்களைக் கவரவில்லை என்று கூறியுள்ளனர்.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து பேச ஆரம்பித்துள்ளார் ஷங்கர்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "நண்பன் படம் இந்தியிலிருந்து அப்படியே எந்தக் காட்சியும் மாறாமல் ரீமேக் செய்ப்பட்டது. 3 இடிட்ஸையும் மாற்றக்கூடாது, அதேநேரம் ஒரிஜினல் படத்தில் இருந்த உணர்வும் வேண்டும் என்பதால் நிறைய சவால் இருந்தது எனக்கு.

விஜய்யை அவரது வழக்கமான பாணியிலிருந்து மாற்ற முயற்சித்தேன். '3 இடியட்ஸ்' படத்தை விடவும் பாடல்கள் இதில் நன்றாக இருந்ததாக பாராட்டினார்கள். ரீமேக் படத்தை இயக்கியது எனக்கு புது அனுபவமாக இருந்தது. 3 இடியட்ஸ் இயக்குநர் ராஜ்குமார் ஹிராணி கூட நண்பனை பாராட்டினார்.

ஆனால் இனி ஒருபோதும் ரீமேக் படங்களை இயக்கமாட்டேன். நண்பன்தான் அந்த வகையில் முதலும் கடைசியுமான ரீமேக்.

சொந்தத் தயாரிப்புகள்...

நான் தயாரித்த பல படங்கள் நன்றாக ஓடவில்லை. இதனால் நிறைய பணத்தை இழந்துவிட்டேன். நானே என் கை காலை சுட்டுக்கொண்டேன். அவற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறேன். அடுத்து தயாரிப்பதற்காக நல்ல கதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

அடுத்த ஹீரோ யார்? விக்ரம், அஜீத், சிரஞ்சீவி?

இவர்களில் யாருமில்லை. எந்தக் கதையையும் முடிவு செய்யவில்லை. எந்த ஹீரோவுடனும் இன்னும் பேசவில்லை. நிறைய கதைகள் மனதில் உள்ளன. அடுத்த படம் ஒரிஜினல் கதையாகவே இருக்கும். என்ன படம் என்பது குறித்து மார்ச்சில் அறிவிப்பேன். இப்போது விடுமுறையை அனுபவிக்கிறேன்," என்றார்.

இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர் நீங்களா என்று கேட்ட போது, "இதில் பெரிய சந்தோஷமில்லை. இந்தியாவிலேயே அதிக நம்பிக்கையான இயக்குநர் என்ற பெயர் கிடைத்தால்தான் சந்தோஷம்," என்றார் ஷங்கர்.
 

கோச்சடையான் பூஜை போட்டாச்சு!


சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் 'கோச்சடையான்' பூஜை நேற்று முன்தினம் சத்தமின்றி நடந்து முடிந்துவிட்டது.

கே எஸ் ரவிக்குமார் இயக்க மேற்பார்வையில், சௌந்தர்யா இயக்கும் இந்த அனிமேஷன் 3 டி படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திப் பட்டாளமே களமிறங்கியுள்ளது. சரத்குமார், கத்ரீனா, சினேகா, நாசர் என முன்னணிக் கலைஞர்கள் கைகோர்த்துள்ளனர்.

கேஎஸ் ரவிக்குமார் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கத்தை மேற்பார்வை செய்கிறார். Motion Capturing தொழில்நுட்பத்துடன் ஹாலிவுட் படம் 'அவதார்' போல கோச்சடையான் உருவாக்கப்படுகிறது.

இந்தப் படத்தின் ஆயத்த வேலைகளில் கடந்த சில மாதங்களாக தீவிர ஈடுபட்டு வந்தனர் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மற்றும் சௌந்தர்யா ரஜினி.

இந்த நிலையில், கோச்சடையான் படத்தின் பூஜை எந்த ஆடம்பரமும் விளம்பரமும் இல்லாமல் சனிக்கிழமை நடந்தது.

இதுகுறித்து லதா ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், "இன்று மறக்க முடியாத நாள். மறக்க முடியாத தருணம். பூக்கள், ஆரத்தி, தேங்காய் உடைப்பு என கோச்சடையான் பூஜை. என் கணவர் மீண்டும் மேக்கப் நாற்காலியில்... கோச்சடையானுக்கு வாழ்த்துகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

பூஜை நடந்தது குறித்து சௌந்தர்யாவும் உறுதி செய்தார். அதேநேரம், படப்பிடிப்பு தொடங்கும் நாளில் விசேஷமாக ஒரு பூஜை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.
 

மார்ச் 11-ம் தேதி நடிகை ரீமா சென்னுக்கு கல்யாணம்.. டெல்லியில் ஆடம்ப ஏற்பாடுகள்!


டெல்லி: வருகிற மார்ச் 11-ம் தேதி நடிகை ரீமா சென்னுக்கும் டெல்லி ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்குக்கும் திருமணம் நடக்கிறது.

தமிழின் முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். மின்னலே படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து விக்ரம், விஜய் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்தார்.

கடந்த ஆண்டு வெளியான செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பிறகு தமிழில் அவருக்குப் படமில்லை. சமீபத்தில் ராஜபாட்டை படத்தில் விக்ரமுடன் ஒரு படத்தில் ஆடினார்.

இந்த நிலையில், சமீபத்தில் அவரது நீண்ட நாள் காதலரான ஓட்டல் அதிபர் ஷிவ் கரண் சிங்குடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் இதுகுறித்த செய்திகளை அவர் மறுத்து வந்தார்.

இப்போது உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார். ரீமா-ஷிவ் கரண் சிங் திருமணம் வரும் மார்ச் 11-ம் தேதி தலைநகர் டெல்லி அருகே உள்ள மணமகனின் பண்ணை வீட்டில் விமரிசையாக நடக்கிறது. அரசியல் பிரபலங்கள், சினிமா புள்ளிகள் என திரளானோர் இதில் பங்கேற்க உள்ளனர்.

மணமகன் கரண் சிங், மோகா, ஷ்ரூம், ஸ்மோக் ஹவுஸ் கிரில் ஆகிய ஓட்டல்களுக்கு சொந்தக்காரர். முக்கிய நகரங்களில் இவற்றின் கிளைகளும் உள்ளன. எனவே நிறைய தொழிலதிபர்களும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

திருமண உடைகள் மிக ஆடம்பரமாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான புதிய டிசைன்களில் நகைகள் வாங்கப்பட்டுள்ளன.

தமிழ் நடிகர் நடிகைகளுக்கும் இந்த திருமணத்துக்கு அழைப்பிதழ் கொடுக்கிறார் ரீமா சென். இதற்காக விரைவில் சென்னையில் முகாமிட உள்ளாராம்.
 

அரிவாளை கீழே போடுங்கய்யா...! - இளையராஜா


சினிமாவில் இன்றைக்கு அரிவாள், ரத்தம் என வன்முறை அதிகரித்து வருகிறது. ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள், என்றார் இசைஞானி இளையராஜா.

ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள செங்காத்து பூமியிலே படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளையராஜா கூறுகையில், "செங்காத்து பூமியிலே வன்முறைக்கு எதிரான படம். இன்றைய காலகட்டத்தில் அப்படி வந்திருக்கும் ஒரே படம் என்று கூடச் சொல்லலாம்.

இப்படத்தின் இயக்குனர் ரத்னகுமார் என்னிடம் இசையமைக்க கேட்டபோது வழக்கமான “என்ன... அருவா வெட்டு குத்து படம் தானா, வன்முறையை விதைச்சிட்டு என்னத்த அறுவடை பண்ணப் போறீங்க” என்று கேட்டேன். உடனே படத்தை முடிச்சிட்டு வந்து போட்டுக் காட்டினார்.

ஒரு நல்ல கருத்தை சொல்லும் படமாக இருந்ததால் இசையமைக்க ஒப்புக் கொண்டேன்.

மனிதனாகப் பிறக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்... இந்த வாழ்க்கையை மனிதன் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டாமா... கோபத்தின் வெளிப்பாடுதான் வன்முறை. கோபத்தின் ஆயுதத்தை தூக்குவதற்கு முன் தனது குடும்பத்தையும், குழந்தைகளையும் நினைத்து பார்த்தால் ஆயுதம் ஏந்த வேண்டும் என்ற எண்ணம் வராது.

ஆயுதத்தை கீழே போடுங்கள், அன்பை உபயோகியுங்கள். வன்முறை காணாமல் போகும். இதைத்தான் செங்காத்து பூமியிலே படம் பிரதிபலிக்கிறது. பெண்கள் நிச்சயம் பார்க்க வேண்டும். அப்போதுதான் வன்முறையின் வலி புரியும். தென் தமிழகத்து மக்களின் வாழ்க்கை, வலிகளை மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் ரத்னகுமார்.

இது போன்ற சிறு பட்ஜெட் படங்களுக்கு, கதையுள்ள கருத்துள்ள படங்களுக்கு பத்திரிகையாளர்கள் ஆதரவு தந்து உற்சாகப்படுத்தி வரவேற்க வேண்டும். பெரிய நடிகர்கள் படங்களுக்கு மட்டுமே ஆதரவு என்ற நிலைமை மாற வேண்டும். நல்ல கதைகளுக்கு நடிகர்கள் தேவை இல்லை," என்றார்.

ஏற்கெனவே, "வன்முறை, அரிவாள் கலாச்சாரம் அதிகமாக உள்ள படங்களுக்கு இசையமைக்க மாட்டேன். நீ அரிவாள கீழே போடுய்யா... இசை அமைக்கிறேன்," என இயக்குநர் அமீரிடமே சொன்னவர் இளையராஜா என்பது குறிப்பிடத்தக்கது.
 

சினிமா இயக்குநர்கள் சம்பள உயர்வு... அறிவித்தார் அமீர்!


சென்னை: தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குநர்களின் சம்பள உயர்வை நேற்று சங்கத்தின் செயலர் அமீர் அறிவித்தார்.

தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து இயக்குநர் அமீர் நிருபர்களிடம் கூறுகையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனமும், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் நிர்வாகிகளுடன் பேசி புதிய ஊதியங்கள் மற்றும் பணிகளுக்கான வரைமுறைகள் குறித்து 10-04-2008 அன்று கையெழுத்திட்டு கொண்ட ஒப்பந்தம் 3 ஆண்டுகள் முடிந்து காலாவதியாகி விட்டது.

அதனால், எங்கள் சங்கத்தை சேர்ந்த இயக்குனர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்களின் நலன் கருதி ஊதியத்தை உயர்த்தி, முறைப்படி தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் 27-05-2011 அன்று கொடுத்தும், பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும், ஒரு வருட காலத்துக்கும் மேலாக காத்திருந்தும் எந்த தீர்வும் எட்ட முடியாத நிலை உள்ளது.

எனவே, தற்கால சூழலுக்கு ஏற்றாற்போல் இயக்குனர்கள் மற்றும் முக்கியமாக இணை, துணை, உதவி இயக்குனர்களின் நலன் கருதி புதிய ஊதிய உயர்வை நாங்கள் அறிவிக்கிறோம்.

அதன் விவரம்:

தயாரிப்பாளருடன் ஒப்பந்தம் செய்து கொள்ளாத நிலையில், திரைப்படத்தில் சிக்கல் ஏற்படும்போது, அந்த படத்தின் ஊதியமாக இயக்குனருக்கு ரூ.10 லட்சம் தரப்பட வேண்டும். இணை, துணை, உதவி இயக்குனர்களுக்கு ஏற்படும் பட்சத்தில் இணை இயக்குனருக்கு ரூ.4 லட்சம், துணை இயக்குனருக்கு ரூ.3 லட்சம், முதல் நிலை உதவி இயக்குனருக்கு ரூ.2 லட்சம், 2-ம் நிலை உதவி இயக்குனர்களுக்கு ரூ.1 லட்சம் என்று தரப்படவேண்டும்.

இயக்குனர்கள் மற்றும் இணை, துணை, உதவி இயக்குனர்கள் படப்பிடிப்பில் பணிபுரியும் நேரங்களில் கீழ்க்கண்டவாறு தினப்படி வழங்க வேண்டும்.

இயக்குநருக்கு உள்ளூராக இருந்தால் (நாளொன்றுக்கு) ரூ.1,000, வெளியூராக இருந்தால் ரூ.1,200, இணை இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.500, வெளியூராக இருந்தால் ரூ.600, துணை இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.400, வெளியூராக இருந்தால் ரூ.500, முதல் நிலை உதவி இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.300, வெளியூராக இருந்தால் ரூ.400, 2-ம் நிலை உதவி இயக்குனருக்கு உள்ளூராக இருந்தால் ரூ.200, வெளியூராக இருந்தால் ரூ.300 வழங்கப்படவேண்டும்.

தலைப்பு பதிவு

தயாரிப்பாளர் சங்கம், வர்த்தக சபை, கில்டு ஆகிய இடங்களில் திரைப்படங்களின் தலைப்பை பதிவு செய்வதை போல் இனி வரும் காலங்களில், இயக்குனர்களின் சங்கத்திலேயே படத்தலைப்பை பதிவு செய்து கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது," என்றார்.

இயக்குநர்கள் சங்க துணைத்தலைவர் சமுத்திரகனி, பொருளாளர் ஜனநாதன், இயக்குநர்கள் பிரபு சாலமன், ஸ்டான்லி, ஜெகன், அஸ்லாம், பாலசேகரன் ஆகியோர் இந்த அறிவிப்பின் போது உடனிருந்தனர்.

அமீரின் அறிவிப்பு பின்னர் தீர்மானமாக கையெழுத்திடப்பட்டு தரப்பட்டது.
 

தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! - உருக வைத்த முத்துக்குமார்


தாயை இழந்த எனக்கு துணையாக வந்தது இசைஞானியின் இசைக்கரங்களே. அன்று பிடித்த அவரது கரங்களை இன்றுவரை நான் விடவில்லை என்றார் பிரபல பாடலாசிரியர் கவிஞர் நா முத்துக்குமார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பிரகாஷ் ராஜின் தோணி பட இசைவெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை மாலை நடந்தது.

இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள படம் அது. படத்தின் இசைவெளியீட்டை, இளையராஜாவுக்கு சிறப்பு செய்யும் விதத்தில் அமைத்திருந்தார் பிரகாஷ் ராஜ்.

இதுவரை தன் வாழ்க்கையிலேயே முதல் முறையாக தான் இசையமைத்த பட இசை விழாவில் அந்தப் படப் பாடல்களை லைவாக இசைக்க வைத்து, வந்திருந்தவர்களுக்கு ஆனந்த அதிர்ச்சி தந்தார் இளையராஜா.

நான்கு பாடல்கள் இசைக்கப்பட்டன. நான்கும் முத்தான பாடல்கள் என்று சொல்லும் அளவுக்கு மிக இனிமையாக, அர்த்தமுள்ளதாக அமைந்திருந்தது சிறப்பு.

இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள், சாதனையாளர்கள், இளையராஜாவின் அபிமானிகள் அத்தனை பேரும் குவிந்திருந்தனர். மாலை 7 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி, இரவு 9.30ஐ தாண்டிய பிறகும் நீடித்தது. ஆனால் ஒருவரும் வெளியில் எழுந்து செல்லவில்லை. அப்படியொரு ஈர்ப்புடன் அமர்ந்து நிகழ்ச்சியை ரசித்தனர்.

இளையராஜாவுடனான தங்கள் அனுபவங்கள், அவரது இசையின் சிறப்பு, இளையராஜா எனும் அற்புதமான கலைஞனின் தொழில்முறை நேர்த்தி என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர் பிரபலங்கள்.

இயக்குநர்களின் ஆதர்ச நாயகனாகக் கருதப்படும் மகேந்திரன், இயக்குநர் சிகரம் எனப் புகழப்படும் பாலச்சந்தர், எஸ்பி முத்துராமன், இயக்குநர்கள் பார்த்திபன், கேஎஸ் ரவிக்குமார், ஆர் வி உதயகுமார், ஜெயம் ராஜா, ராதா மோகன் என ஒவ்வொருவர் பேசியதையும் தனித்தனி கட்டுரைகளாகவே வெளியிடலாம். அத்தனை சிறப்பாக அமைந்தது பேச்சு.

குறிப்பாக நாசரின் பேச்சு, சுவாரஸ்யமிக்கதாக அமைந்தது.

இந்த விழாவின் ஹைலைட் என்றால் அது கவிஞர் நா முத்துக்குமாரி்ன் பேச்சு. அந்தப் பேச்சை கண்கலங்காமல் கேட்டவர்கள் அநேகமாக வெகு சிலராகத்தான் இருந்திருப்பார்கள்.

அவரது பேச்சு முழுவதுமாக:

இசைஞானி அவர்களுக்காக முதல்முறையாக நான் தோணி திரைப்படத்திற்காக அனைத்து பாடல்களையும் எழுதியிருக்கிறேன். ஜூலி கணபதி படத்துக்காகத்தான் அவரை நான் முதல் முறையாக என் குருநாதர் பாலுமகேந்திராவுடன் சந்தித்தேன். அந்த சந்திப்பு மறக்க முடியாதது. ஒரு பரீட்சை எழுதப்போகும் மாணவனின் பதைப்புடன் அவர் அறைக்குச் சென்றேன்.

எனக்குத் தந்த மெட்டுக்கு...

‘எனக்குப் பிடித்தப் பாட்டு அது உனக்குப் பிடிக்குமே
என் மனது போகும் வழியை உன் மனது அறியுமே
எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’

என்ற பல்லவியை அவருக்குக் கொடுத்தேன். படித்துப் பார்த்துவிட்டு ‘நன்றாயிருக்கிறது பல்லவி..! ஒரு சின்ன திருத்தம் செய்யலாமா?’ என்று கேட்டார். ‘தாராளமாக ஐயா’ என்று சொன்னேன்.

‘எனக்குப் பிடித்த நிலவு அது உனக்குப் பிடிக்குமே’ என்ற வரியை ‘என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே’ என்று மாற்றினால் அர்த்தம் இன்னும் சிறப்பாக இருக்குமென்றார். நான் எழுதிய வரிகளை விட பத்துமடங்கு சிறப்பாக இருக்கிறது என்று பரவசப்பட்டுப் போனேன்.

அன்று எனக்கு ஒன்று புரிந்தது. பாடலில் திருத்தம் என்பது சிதைப்பது அல்ல; செதுக்குவது என்று. அதன் பின்னர் நிறைய பாடல்கள் எழுதினேன். ஒவ்வொரு முறை அவர் அறைக்குள் நுழையும்போதும் என் கைகால்கள் நடுங்கத் துவங்கும்.

அவர் எப்போதும் என்னை அமரவைத்து, நகைச்சுவையாகப் பேசி என்னை இயல்புக்குக் கொண்டுவருவார். ஒவ்வொரு முறை பாடல் எழுதும்போதும் அவரிடம் ஒரு புதிய விஷயத்தை நான் கற்றுக்கொள்வேன். எப்படி எளிமையாக எழுத வேண்டும்… எப்படி மக்களுக்குப் புரியும் வகையில் எழுத வேண்டும்… போன்ற பல விஷயங்களை அவரிடம்தான் கற்றுக்கொண்டேன்.

‘தோணி’ திரைப்படத்தின் கம்போஸிங்கிற்கு "முத்துக்குமாரையும் கூட்டி வாருங்களேன்," என்று சொல்லியனுப்பியிருந்தார். போயிருந்தேன். அது ஒரு பரவச அனுபவம். முதல் முறை அவருடன் கம்போசிங்கில். ஒரு முக்கால் மணி நேரத்தில் வரிசையாக 5 டியூன்களைப் போடுகிறார். நான் கண்களை மூடி அமர்ந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். கடவுளிடம் நேரடியாகப் பேசுபவர்கள் குழந்தைகளும் இசைக் கலைஞர்களும் என்று சொல்வார்கள். அந்த தருணத்தில் அதை நான் கண்டுகொண்டேன்.

என் மகனுக்கு தினமும் கண்ணே கலைமானே...

இன்றைக்கும் நான் இசைஞானியின் பாடல்களைக் கேட்காமல் தூங்குவதில்லை. என் மகனுக்கு நான் தினமும் பாடும் தாலாட்டு ‘கண்ணே கலைமானே’ பாடல்தான். ஒரு பாடலாசிரியராக என்னுடைய குருவாக அவரை நினைக்கிறேன். ஒரு சில பாடல்களே அவர் திரைப்படத்திற்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதிய பாடல்களுக்கு இன்றைக்கும் நான் ரசிகன். அழகி திரைப்படத்தில் எழுதியிருப்பார்…

"கோயில் மணிய யாரு ஏத்துறா?
தூண்டா வெளக்க யாரு ஏத்துறா ?
ஒரு போதும் அணையாம நின்று எரியணும்..”

அதே படத்தின் வேறொரு பாடலில்...

“இருள் தொடங்கிடும் மேற்கு - அங்கு
இன்னும் இருப்பது எதற்கு?
ஒளி தொடங்கிடும் கிழக்கு
உண்டு பொதுவினில் ஒரு விளக்கு”

இதை எந்தக் கவிஞனும் எழுதி விடலாம். ஆனால் அதன்பின்னர் வரும் 'ஒளி இருக்குமிடம் கிழக்குமில்லை மேற்குமில்லை' என்ற வரிகள் அத்தனை சிறப்பானவை. அதே போல நாடோடித் தென்றல் படத்தில்,

'யாரும் விளையாடும் தோட்டம்
தினந்தோறும் ஆட்டம் பாட்டம்
போட்டாலும் பொறுத்துக் கொண்டு
பொன்னு தரும் பூமி இந்த மண்ணு நம்ம சாமி
கோபங்கள் வேண்டாம் கொஞ்சம் ஆறப்போடு
ஆறோடும் ஊரைப் பாத்து டேரா போடு'

என்ற வரிகள். இந்த பூமியை, மண்ணை அவர் நேசிக்கும் அழகை அத்தனை அற்புதமாக்ச சொல்லியிருப்பார்.

நான் சிறுவயதில் தாயை இழந்தவன். அந்தத் தனிமை எப்போதும் என்னுடன் இருந்துகொண்டே இருக்கும். அப்போது ‘ஆவாரம்பூ’ படத்தில் ஒரு பாடல் கேட்டேன்.

ஆலோலம் பாடி அசைந்தாடும் காற்றே..!
அதைக்கேட்டு தூங்கும் ஆவராம்பூவே..!
தனியானால் என்ன துணை இங்கே நான் பாடும் பாட்டுண்டு

இந்த வரிகளைக் கேட்டவுடன் அவரின் இசைக் கரங்களை நான் பிடித்துக்கொண்டேன். அதன் பின்னர் வரும்,

தாய் இழந்த துன்பம் போலே
துன்பம் அது ஒன்றுமில்லை
பூமி என்ற தாயும் உண்டு
வானம் என்ற தந்தை உண்டு
நீங்கிடாத சொந்தம் என்று
நீரும் காற்றும் எங்கும் உண்டு

என்ற வரிகள் எனக்கு தன்னம்பிக்கை அளித்தன. அன்று பிடித்த அவரின் இசைக் கரங்களை இன்றுவரை நான் விடவில்லை," என்றார்.

அதுவரை நிசப்தத்தில் இருந்த அரங்கம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து அதிர்ந்தது!
 

ஜெனிலியாவுக்கு தடையே போட மாட்டேன்..ரித்தேஷ்


திருணத்திற்கு பிறகு ஜெனிலியா நடிக்க நான் தடைபோட மாட்டேன் என்று அவரது வருங்கால கணவர் ரித்தேஷ் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.

நடிகை ஜெனிலியா இந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் திருமணம் வரும் பிப்ரவரி மாதம் 3ம் தேதி மும்பையில் நடக்கிறது. இந்நிலையில் ஜெனிலியா திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்று செய்தி வெளியானது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு ஜெனிலியா நடிக்க தான் தடைபோடப்போவதில்லை என்று ரித்தேஷ் தெரிவித்துள்ளார்.

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு துஜே மேரி கசம் என்ற படத்தில் சந்தித்து காதலில் விழுந்த ஜெனிலியா, ரித்தேஷ் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தேரே நால் லவ் ஹோ கயா என்ற படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் பிப்பரவரி 24ம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ரித்தேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

திருமணத்திற்குப் பிறகு ஜெனிலியா நடிக்க நான் தடைபோட மாட்டேன். அது அவரது விருப்பம். அவர் ஒரு அனுபவம் வாய்ந்த நடிகை. எங்களுக்கு இன்னும் ஒரு வாரத்தில் திருமணம் நடக்கவிருப்பதால் தான் தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி பேசுகிறேன். இல்லையென்றால் தனிப்பட்ட விஷயங்களை பொது இடங்களில் பேச விரும்பாதவன் நான்.

நானும், ஜெனிலியாவும் ஜோடி சேர்ந்துள்ள தேரே நால் லவ் ஹோ கயா படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கிறேன். பிப்பரவரி மாதம் நடக்கும் நட்சத்திர கிரிக்கெட் லீக் போட்டியில் விளையாடுகிறேன். ஹவுஸ்புல் 2 படத்திற்கு டப்பிங் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார்.
 

மூத்த நடிகர் இடிச்சபுளி செல்வராஜ் மரணம்


சென்னை: மூத்த நடிகர்களுள் ஒருவரான இடிச்சபுளி செல்வராஜ் மூச்சுத்திணறலால் மரணமடைந்தார். அவருக்கு வயது 72.

எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன் என சாதனைக் கலைஞர்களுடன் நடிக்க ஆரம்பித்தவர் இடிச்சபுளி செல்வராஜ். எம்ஜிஆரின் ஆயிரத்தில் ஒருவனில் நடித்தவர், பின்னர் அவரது பெரும் வெற்றிப் படங்களான `இதயக்கனி,' `உலகம் சுற்றும் வாலிபன்' ஆகியவற்றில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். சிவாஜியுடன் கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்றைய ஜாம்பவான்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியின் வேலைக்காரன், முத்து, படையப்பா போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.

கடந்த சில வருடங்களாகவே உடல்நலக்குறைவுடன் இருந்த அவருக்கு, நேற்று காலை 7 மணிக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை நந்தனம் சத்யமூர்த்தி நகரில் உள்ள வீட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இறுதிச் சடங்குகளுக்குப்பின், நேற்று மாலை 6 மணிக்கு கண்ணம்மாப்பேட்டை சுடுகாட்டில், அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

மரணம் அடைந்த இடிச்சபுளி செல்வராஜ், நடிகர் பாண்டுவின் உடன் பிறந்த அண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், பசந்தி என்ற மகளும் இருக்கிறார்கள்.
 

முதல்ல சூர்யா, இப்ப விஜய், எப்பூடி...காஜல் குஷி!


நடிகை காஜல் அகர்வால் ஒரே குஷியாக உள்ளாராம். அதற்கு காரணம் நடிகர்கள் சூர்யா மற்றும் விஜய்.

நடிகை காஜல் அகர்வால் ஆண்கள் பத்திரிக்கைக்கு அரை நிர்வாணப் போஸ் கொடுத்தார் என்று பிரச்சனை வந்தபோதிலும் அவர் காட்டில் ஜில்லென்று என்று மழைக் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறது. தெலுங்கில் முன்னணி நாயகர்களின் படங்களில் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது தவிர தமிழில் சூர்யாவுடன் மாற்றான் படத்தில் ஒப்பந்தமாகி ஷூட்டிங்கும் முடிந்துவிட்டது.

ஏற்கனவே தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவுடன் நடித்த பெருமிதத்தில் இருந்த காஜல் அடுத்து நம்ம இளைய தளபதி விஜயுடன் துப்பாக்கி படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார். அப்புறம் அவர் குஷியாக இருக்க மாட்டாரா என்ன. மாற்றான் ஷூட்டிங் முடிந்த கையோடு விஜயுடன் நடிக்க சென்றுவிட்டார் காஜல்.

ஏய், பார்த்தியா முதலில் சூர்யாவுடன் நடித்தேன். அந்த ஷூட்டிங் முடிந்த கையோடு தற்போது கோலிவுட்டின் இன்னொரு முன்னணி ஹீரோவான விஜய்யுடன் நடிக்கிறேன். இதெல்லாம் நான் செய்த பாக்கியம் தான் என்று தனது தோழிகளிடம் சொல்லி, சொல்லி பூரிக்கிறாராம்.

பத்திரிக்கை பிரச்சனைக்குப் பிறகு காஜலின் மார்க்கெட் சரியும் என்று நினைத்தவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றம் மட்டுமே. அது இப்போதைக்கு சரியாது என்றுதான் தெரிகிறது...!
 

முதல்முறையாக இளையராஜாவுடன் கைகோர்த்தார் கவுதம் மேனன்!!


தமிழ் சினிமா இசைக்கு 2012- நல்லவிதமாக அமையப் போவதற்கான அமர்க்களமான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன.

கடந்த சில ஆண்டுகளாக சத்தமே இசை என்று சத்தியம் பண்ணிக்கொண்டிருந்த கோலிவுட்டில், மீண்டும் சங்கீதம் மனதை வருடத் தொடங்கியுள்ளது.

இந்த வருடத்தின் ஆரம்ப மாதமான ஜனவரியில் தோணி, மயிலு என இளையராஜாவின் மிக இனிமையான இரண்டு இசைக் குறுந்தகடுகள் வெளியாகியுள்ளன. பெரும் போர்க்கள சத்தத்தில் சிக்கித் தவித்தவனுக்கு மென்மையான வருடல் மாதிரி அமைந்துள்ளன இந்தப் படங்களின் ஒவ்வொரு பாடலும்.

அடுத்த இனிய செய்தி, இயக்குநர் கவுதம் மேனன், இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்திருப்பது.

ராஜாவின் மிகத் தீவிரமான ரசிகர்தான் கவுதம் மேனன் என்றாலும், இதுநாள் வரை அவர் இளையராஜா இசையில் படம் எதுவும் செய்யவில்லை. இவர் பங்குதாரராக இருந்த நிறுவனம் தயாரித்த அழகர்சாமியின் குதிரையில் முதல்முறையாக இணைந்தார் தயாரிப்பாளர் என்ற முறையில். அந்தப் படம் பின்னர் க்ளவுட் நைன் கைக்கு மாறியது.

இப்போது நேரடியாக தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு இளையராஜாவை இசையமைக்குமாறு கவுதம் மேனன் கேட்க, அதற்கு இசைஞானியும் ஒப்புக் கொண்டார்.

அந்தப் படம்தான் 'நீதானே என் பொன் வசந்தம்'. என்பதுகளில் இளையராஜாவின் இசையில் வந்த அற்புதமான பாடலின் முதல் வரிதான் இந்தத் தலைப்பு. இந்தத் தலைப்பை இளையராஜாவின் இசை ரசிகன் என்ற முறையில் வைத்ததாக முன்பே கவுதம் மேனன் குறிப்பிட்டிருந்தார். ஆனால் அப்போது இசையமைப்பாளர் யார் என்பதை அவர் சொல்லவில்லை. ரஹ்மான் இசையமைக்கக் கூடும் என்று சொல்லப்பட்டது.

இதுநாள் வரை இந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்திருந்த கவுதம் இப்போது வெளிப்படையாக அறிவித்தார். "ஆம்... இசைஞானி இளையராஜா சார்தான் நீதானே என் பொன் வசந்தம் பட இசையமைப்பாளர். அவரது ரசிகன் என்ற முறையில், அவருடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுகிறேன். விரைவில் இசைக் கோர்ப்பு ஆரம்பமாக உள்ளது. என்னுடைய நீண்ட நாள் கனவு இது... இந்தப் படம் முடியும் வரை நான் கனவில் மிதக்கப் போகிறேன்,"என்றார்.

இதுகுறித்து இளையராஜாவிடம் கேட்டபோது, "ஆமாம்... இந்த ஆண்டு நான் சில முக்கியமான படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளேன். ஒன்று கவுதம் மேனன் படம். இன்னொன்று ராஜீவ் மேனன் படம். வேலை முடிந்ததும் விரிவாகப் பேசலாம்," என்றார்.

படத்தின் ஹீரோ ஜீவா கூறுகையில், "நீதானே என் பொன் வசந்தம் படத்தில் இளையராஜா + கவுதம் மேனன்... முழுக்க முழுக்க காதல் பாடல்கள். ஆம்... நம் இசைஞானி இசையில் நான் நடிக்கும் படம்... ஆஹா நினைப்பே சுகமாக உள்ளது," என்றார்.

ஆஹா... கோலிவுட் இசையின் பொற்காலம் திரும்பிடுச்சி!
 

இயக்குநரான லஷ்மி ராமகிருஷ்ணா!


தமிழ் சினிமாவில் 'அம்சமான ஆன்டி' என்று பெயரெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணா, அடுத்து இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார்.

பிரிவோம் சந்திப்போம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராமகிருஷ்ணா. தமிழில் இதுவரை 33 படங்கள் செய்துவிட்டார். தொலைக்காட்சி சீரியல்களிலும் வருகிறார்.

இப்போது இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார். தனது முதல் படத்துக்கு ஆரோகணம் என்று தலைப்பு வைத்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணா. சத்தமில்லாமல் படப்பிடிப்பை ஆரம்பித்தவர், இப்போது கிட்டத்தட்ட முடித்தேவிட்டார்.

தனது படம் குறித்து லட்சுமி ராமகிருஷ்ணா கூறுகையில், "அரைச்ச மாவையே அரைக்காமல் புதுசா, கொஞ்சம் நேர்மையா ஒரு படம் வந்தால் மக்கள் ரசிக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமா மௌனகுரு.

ஒரு சீரியஸான விஷயத்தை சீரியஸாகவே சொல்லாம ரொம்ப ஜாலியா சொல்லலாம். பாஸிட்டிவ்வா அணுகலாம் அப்படித்தான் ஆரோகணத்தை எடுத்திருக்கேன். மனசுக்கு நெருக்கமா நடந்த, பார்த்த ஒரு விஷயத்தை இதில் சொல்லி இருக்கேன்.

'ஆரோகணம்' படத்தை முதல் முதலாக என் சொந்த பேனரில், சொந்த பணத்தில் ஆரம்பித்தேன். ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி செய்யும் போது இன்னொருத்தர் காசில் விளையாட பயம் எனக்கு. முதல் பாதி முடித்து ஒரு டிவிடி யை மெடிமிக்ஸ் நிர்வாகத்தின் தலைவருக்கு அனுப்பிவைத்தேன். பார்த்துவிட்டு இந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்ற சொல்லி அவரே கையிலெடுத்துக்கொண்டார்.

நான் ரொம்ப பெரிய இயக்குநராகனும்னு படம் பண்ணவில்லை. எனக்கு இருக்கிற அறிவில் இந்த படத்தை பண்ணியிருக்கிறேன். சில விஷயங்களைச் சொல்லியிருக்கேன்," என்றார்.

சம்பத் , ஜெயப்பிரகாஷ் , விஜி சந்திரசேகர் , உமா பத்மநாபன், ராஜி, விஜயசாரதி ஆகியோருடன் விரேஷ், ஜெய் குஹேரனி என இரண்டு புதியவர்களை அறிமுகம் செய்கிறார் இந்தப் படத்தில் லட்சுமி.

சண்முக சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய யுத்தம் செய் படத்துக்கு இசை தந்த கே இசையமைக்கிறார். தேசிய விருது பெற்ற ‘ஆடுகளம்”, ‘ஈரம்” எங்கேயும் எப்போதும் படங்களின் எடிட்டர் கிஷோர் ஆரோகணத்தை எடிட் செய்கிறார்.

சரி... இந்தப் படத்தில் நீங்கள் நடிக்கவில்லையா என்றால்.... சிரித்தபடி, "கேஎஸ் ரவிக்குமார் ஸ்டைலை இந்தப் படத்தில் ஃபாலோ பண்றேன்", என்றார்!