காதல், திருமணத்திற்கு நான் ரெடி! 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் பேட்டி

மும்பை: உடன் சேர்ந்து வாழ துணை தேடிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் 63 வயதாகும், பாலிவுட்டின் முன்னாள் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன்.

பாலிவுட்டில் பலாத்கார சீன் எடுக்க வேண்டும் என்றால் எங்கே ஜீனத் அமன் என்றுதான் தேடுவார்கள் 1980களில். மிக ஆபாசமான பாலியல் பலாத்கார காட்சிகளில் நடித்தும், கவர்ச்சி நடனம் ஆடியும் பலரது தூக்கத்தை கெடுத்தவர் ஜீனத் அமன். 1985ம் ஆண்டு, மசார் கான் என்பவரை திருமணம் செய்து இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானார். இந்நிலையில் 1998ம் ஆண்டு மசார்கான் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதன்பிறகு மகன்களுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

காதல், திருமணத்திற்கு நான் ரெடி! 63வது பிறந்த நாள் கொண்டாடும் கவர்ச்சி நடிகை ஜீனத் அமன் பேட்டி

இம்மாதம் 19ம்தேதி ஜீனத் அமான் தனது 63வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய ஜீனத் அமன் புதிய வாழ்க்கை துணையை தேடுவதாக கூறினார். மேலும் அவர் தெரிவிக்கையில் "எனது இரு மகன்களும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்துவிட்டனர். இப்போது அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்க்கும் பக்குவம் கிடைத்துவிட்டது. இனிமேல் எனது வாழ்க்கையை பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது இதயத்தில் தற்போது யாரும் இல்லை என்றபோதிலும், யாரையாவது ஒருவரை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் உள்ளேன். காதலுக்கும், திருமணத்திற்கும் நான் தயாராக உள்ளேன். உலகில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நம்புகிறேன். காதல் இன்னும் உலகில் உள்ளது என்றும் நினைக்கிறேன். இவ்வாறு ஜீனத் அமன் தெரிவித்தார்.

 

சல்மான்கானுக்கு 49, தங்கை அர்பிதாவுக்கு 25..! ஏன் இந்த வயசு வித்தியாசம் தெரியுமா?

மும்பை: பாலிவுட் நடிகர் சல்மான்கானின் தங்கை அர்பிதாவுக்கு இரு தினங்களுக்கு முன்பு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும், 49 வயதான சல்மான் கானின் தங்கைக்கு இப்போதுதான் திருமணம் நடக்கிறதா? அப்படியானால் தங்கை இத்தனை நாட்களாக முதிர் கன்னியாக இருந்தாரா? என்பது போன்ற சந்தேகங்கள் பலருக்கும் எழுந்திருப்பது இயல்புதான். அதை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் கால ஓட்டத்தில் கொஞ்சம் பின்னோக்கி செல்ல வேண்டும்.

சல்மான் கானின் தந்தை சலிம்கான், பாலிவுட் படங்களில் நடிகராகவும், திரைக்கதை ஆசிரியராக இருந்தார். இவரது மனைவி சல்மா கான். இத்தம்பதிகளுக்கு சல்மான்கான், அர்பாஸ் கான், சோகைல் கான், அல்விரா கான் ஆகிய பிள்ளைகள் இருந்த நிலையில், பிறந்து சில மாதங்களே ஆன நிலையில் இருந்த அர்ப்பிதாவை சலிம்கான் தத்தெடுத்து வளர்த்தார்.

சல்மான்கானுக்கு 49, தங்கை அர்பிதாவுக்கு 25..! ஏன் இந்த வயசு வித்தியாசம் தெரியுமா?

எனவேதான், அண்ணன் சல்மான்கானுக்கு 49 வயதாகும் நிலையில், அர்ப்பிதாவுக்கு தற்போதுதான் 25 வயதானது. தத்தெடுத்த குழந்தை என்று நினைக்காமல் குடும்ப உறுப்பினர்கள் அனைவருமே அர்பிதாவுடன் மிகுந்த பாசம் காண்பித்தனர். அதிலும் சல்மானைவிட சோகைல்கான் தான் அர்பிதாவின் ஃபேவரைட் அண்ணனாம்.

லண்டன் காஹேஜ் ஆப் பேஷன் கல்லூரியில் பேஷன் மார்க்கெட்டிங் மற்றும் மேலாண்மை படித்த அர்ப்பிதாவுக்கு அவரது காதலன் ஆயுஷ் ஷர்மாவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

சல்மான்கான் 1965ம் ஆண்டு டிசம்பரில் பிறந்தவராகும், ஆனால் அர்பிதா 1989ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிறந்தவர். இதுதான் வயது வித்தியாசத்திற்கான காரணம்.

 

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

இயக்குநர் ருத்ரய்யாவின் முதல் படத்தின் நாயகனான கமல் ஹாஸன், அவருடனான தனது அனுபவங்கள் நினைவுகளை தி இந்து நாளிதழில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதோ கமலின் நினைவுப் பகிர்வு...

"சினிமாவில் எனது வழிகாட்டிகளில் ஒருவரான அனந்து தான் முதன்முதலில் ருத்ரய்யா குறித்து என்னிடம் பேசியது. 'திரைப்படக் கல்லூரியிலிருந்து புத்திசாலி மாணவர்' என குறிப்பிட்டார். ருத்ரய்யாவின் இயற்பெயர் ஆறுமுகம். அவரை அப்படித்தான் நாங்கள் முதலில் அறிந்திருந்தோம்.

சென்னை திரைப்படக் கல்லூரியில் தங்கப் பதக்கம் பெற்ற துடிப்புள்ள இளைஞர். அங்கு மாணவர்கள் யூனியனுக்குத் தலைவராக இருந்து தீவிரமாக செயல்படும் போராளியாகவே பெயர் பெற்றிருந்தார். தமிழ் சினிமாவை உருமாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த நான், ஆர்.சி. சக்தி, அனந்து ஆகியோர் அடங்கிய எங்கள் குழுவிற்கு சீக்கிரத்திலேயே நெருக்கமானார்.

சகலகலா வல்லவன் பட வெற்றி ருத்ரய்யாவுடன் நான் சேர்வதைத் தடுத்தது!- கமல்

நாங்கள் சந்தித்தால் மணிக்கணக்கில் எங்கள் பேச்சு நீளும் என்பதால் எங்களது சந்திப்பு குறித்து அச்சப்பட்டவர்களும் இருந்தனர். அபூர்வ ராகங்கள் திரைப்படத்தில் பிரசன்னா என்ற பாத்திரத்தில் ஒன்றி நடிப்பதற்கு ருத்ரய்யா எனக்கு உதவினார். அந்தப் பாத்திரத்தைப் போலவே ருத்ரய்யாவும் இடதுசாரி கொள்கை உடையவர் என்பதால், அவரால் எனக்கு சிறப்பாக வழிகாட்ட முடிந்தது. முதன்முதலில் ஆறுமுகத்துடன் எனது நினைவுகள் இதுவே.

எங்களது உரையாடல்கள் எனக்கு ஞாபகத்தில் உள்ளன. கோடார்ட், போலன்ஸ்கி, ரோஸெலினி, பிரெஸ்ஸான் ஆகிய இயக்குநர்களது படங்கள் எங்கள் பேச்சில் அடிக்கடி வந்து போகும். சென்னை திரைப்படக் கல்லூரியில் அவருக்கு இருந்த செல்வாக்கை வைத்து, வெளிநாட்டுத் திரைப்படங்களை வரவழைத்து, பார்த்து, அதை ஒரு நாள் தாமதமாக பூனே திரைப்படக் கல்லூரிக்கு அனுப்புவோம். எல்டாம்ஸ் சாலையில் ஒரு சிறிய திரைப்பட விழாவைப் போலவே இருக்கும்.

நாங்கள் பெருமைபட்டுக் கொள்ளுமாறு, தமிழ் சினிமாவை அடுத்தத் தளத்திற்கு எடுத்துச் செல்லுமாறு ஒரு திரைப்படத்தை எடுக்க நினைத்தோம். அதன் விளைவே 'அவள் அப்படித்தான்'.

கோபத்தால் உந்தப்பட்ட ஆளாக ஆறுமுகம் எனக்குத் தோன்றினார். ஒருவேளை அதனால்தான் தன் பெயரை ருத்ரய்யா என்று மாற்றிக் கொண்டார் என நினைக்கிறேன்.

அவரது முதல் படம் எங்கள் குழுவின் செல்லப் படமாக இருந்தது. அதனால் வெறும் பேச்சு மட்டுமல்ல, செய்தும் காட்டுவோம் என மற்றவர்களிடமிருந்து நாங்கள் வித்தியாசப்பட்டு நின்றோம். ஒரு வருடத்திற்கு 20 படங்கள் வரை நான் நடித்த காலகட்டம் அது. எனவே, என் ஓய்வு நேரத்தில்தான் படப்பிடிப்பு நடந்தது. அப்படி இருந்தும் படத்திற்கு எங்களால் சிறப்பான வடிவத்தைத் தர முடிந்தது.

அவள் அப்படித்தான் படத்தின் முதல் காட்சியில், நான் கேமராவைப் பார்த்து "கொஞ்சம் லெஃப்ட்ல உட்காருங்க" என்று கூறுவது, இடதுசாரி சிந்தனையை ரசிகர்கள் வளர்த்துக் கொள்ளவேண்டும் என ஊக்குவிக்கும் குறியீடுதான். அப்போதைய தமிழ் சினிமாவின் மீது இருந்த கோபத்தின் விளைவாகவே அவள் அப்படித்தான் துவங்கப்பட்டது. சலிப்பை ஏற்படுத்தும் படமாக அது மாற வாய்ப்பிருந்தது, ஆனால் அப்படி ஆகவில்லை.

பணத் தட்டுப்பாடு இருந்ததால் தொழில்நுட்ப ரீதியில் படத்துக்கு சிறப்பு சேர்க்க முடியாமல் போனது. அப்போது, இளையராஜா பிஸியாக இருந்தார். ஆனாலும் எங்களுக்காக அவரை வலுக்கட்டயமாக இசையமைக்க வைக்க முடிந்தது.

கையில் கிடைத்த கேமராவைக் கொண்டு, எங்களை வைத்து ருத்ரய்யா நடத்திய படப்பிடிப்பு ஆச்சரியமானதாக இருந்தது. எங்கள் நோக்கம் ஒழுங்காக இருந்ததால், சிறிய பட்ஜெட்டாக இருந்தாலும் அனந்து, ரஜினி, ஸ்ரீப்ரியா போன்றோர் படத்தில் இணைய ஒப்புக் கொண்டனர். பெண் விடுதலையைப் பற்றி அனந்து அப்போதே எழுதினார்.

படப்பிடிப்பு சமயத்திலும் நாங்கள் வெளிநாட்டுத் திரைப்படங்கள் குறித்து நிறையப் பேசுவோம். ஒவ்வொரு காட்சிக்கு முன்பும், இதை கோடார்ட் எடுத்தால் எப்படி எடுப்பார், கேமராவின் கோணம் எப்படி இருக்கும் என பேசிக் கொண்டிருப்போம். ஐந்து மாதங்கள், இரண்டு இரண்டு மணி நேரங்களாக எங்கள் படப்பிடிப்பு நடந்தது. படத்தைப் பார்த்தபோது வியப்பாக இருந்தது.

'ராஜா என்னை மன்னித்துவிடு' என்ற ருத்ரய்யாவின் இரண்டாவது படத்திலும் நான் நடிப்பதாக இருந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தை எங்களால் தொடங்க முடியவில்லை. அந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தது. ஆனால் 'சகலகலா வல்லவன்' போன்ற படங்களின் வெற்றி, எங்கள் கூட்டணியை தடுத்தது. தமிழ் சினிமாவில் ராஜபார்வைக்குப் பிறகு என் மீதான நம்பிக்கை மிகுந்தது. அதே வேளையில், 'சகலகலா வல்லவன்' திரைப்படத்தில் நான் நடித்தது ருத்ரய்யாவுக்கு பிடிக்கவில்லை.

வணிக ரீதியிலான படங்களில் நடிப்பதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டுதான் நாம் நினைக்கும் சிறந்த படங்களை எடுக்க முடியும் என்று அவரை சமாதனப்படுத்தியது என் நினைவில் உள்ளது. அப்போது அவர் 'கிராமத்து அத்தியாயம்' திரைப்படம் எடுத்தார். அதில் எங்களுக்குள் சில கருத்து வேறுபாடு நிலவியது. அந்தக் கரு எனக்குப் பிடித்திருந்தாலும், அவள் அப்படித்தானில் இருந்த அடர்த்தி அதில் இல்லை.

ருத்ரய்யா வித்தியாசமான மனிதர். சிறந்த விமர்சனங்களைவிட, வணிகரீதியிலான வெற்றியையே நாம் நினைவில் வைத்துக் கொண்டாடுவது பரிதாபகரமானது. ருத்ரய்யாவிடம் பல படங்களுக்கான கதைகள் இருந்தன. ஆனால், அவரால் இரண்டு படங்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இப்படிப்பட்ட கலைஞர்கள் விரக்தியடைக் கூடாது என்றுதான் மேற்கத்திய நாடுகளில் 'சன்டான்ஸ்' போன்ற திரைப்பட விழாக்கள் நடத்தப்படுகின்றன. அவள் அப்படித்தான் படத்தை நினைவுகூர்வதன் மூலம் மாற்று சினிமாவுக்கான தளத்தை அமைக்க சிலர் முயற்சிக்கலாம்.

தனது படைப்பின் மீது அதீதமான பெருமை கொண்டவராக ருத்ரய்யா இருந்தார். வேறு யாரிடமும் பணியாற்ற அவர் விரும்பவில்லை. சினிமாவைப் பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்ததால், தன்னை யாரும் கட்டுப்படுத்துவதை அவர் விரும்பவில்லை. தான் கட்டுப்படுத்துவதையே அவர் விரும்பினார். அவள் அப்படித்தான் திரைப்பட தயாரிப்பில் இருந்த தோழமை, மற்ற படங்களிலும் இருக்கும் என்று அவர் நினைத்தார். ஆனால் அது நடக்கவில்லை.

ஒரு வருடத்திற்கு முன்னால் அவரை சந்தித்தேன். அப்போதும்கூட, அடுத்த படம் எடுப்பதற்கான நம்பிக்கையை அவர் விட்டுவிடவில்லை. உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கலாம். படம் எடுப்பது போதையைப் போல. சிலர் விலகினாலும், சிலர் தொடர்ந்து முயற்ச்சித்திக் கொண்டே இருப்பார்கள். ருத்ரய்யா இரண்டாம் வகையைச் சேர்ந்தவர். அதற்காக அவரை நான் மதிக்கிறேன். துறையிலிருந்து அவருக்கும் இன்னும் உதவிகள் செய்யப்பட்டிருக்கலாம். பாரதியின் கவிதைகளுக்காக அவரை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்வது போல, ருத்ரய்யாவும் அவர் எடுத்த ஆகச் சிறந்த படத்திற்காக நினைவில் நிற்பார்.

தமிழ் சினிமாவின் அடித்தளத்தையே உலுக்கிய 'அவள் அப்படித்தான்' எடுத்ததற்காக இந்த உலகம் அவரை என்றும் நினைவுகூரும். இன்றும் கல்லூரி மாணவர்கள் பலர், படத்தைப் பார்த்து, இது எப்படி இவர்களால் சாத்தியமானது என்று யோசிக்கின்றனர். சினிமாவின் மீது காதல் கொண்ட ஒருவராக ருத்ரய்யா என் நினைவில் நிற்கிறார். ஒரு காட்சி சிறப்பாக வரவேண்டும் என்றால், தெர்மகோலை தூக்கிப் பிடிக்கும் வேலை செய்யவும் தயங்கமாட்டார் ருத்ரய்யா.

 

எங்கேயும் எப்போதும் கூட்டணி மீண்டும் இணையும் வலியவன்!

சென்னை: வலியவன் படத்துக்காக மீண்டும் இணைகிறார்கள் எங்கேயும் எப்போதும் சரவணன் மற்றும் ஜெய்.

எஸ்கே ஸ்டியோஸ் சார்பில் கே என் சம்பத் தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இந்தப் படத்தை சரவணன் இயக்க, ஜெய் நாயகனாக நடிக்கிறார்.

எங்கேயும் எப்போதும் கூட்டணி மீண்டும் இணையும் வலியவன்!

நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கிறார். இவர்களுடன் அழகம் பெருமாள், "பண்ணையாரும் பத்மினியும்" பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

மென்மையான காதலை மையமாக கொண்டது இத்திரைப்படம் என்கிறார் இயக்குநர் சரவணன்.

எங்கேயும் எப்போதும் கூட்டணி மீண்டும் இணையும் வலியவன்!

இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு சென்னையில் துவங்கி தொடர்ந்து டெல்லியில் நடைபெற்றது. மேலும் படத்தின் முக்கிய காட்சிகள் ஹரித்துவார் மற்றும் குளுமணாலியில் படமாக்க படவுள்ளது.

இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு நா முத்துக்குமார் பாடல்கள் எழுதுகிறார்.

 

சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி!

சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் கதையை உருவாக்குவதற்காக தனது உதவியாளர்களுடன் சுவிட்சர்லாந்து பறந்துள்ளார் இயக்குநர் ஹரி.

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்த பூஜை படம் சமீபத்தில் வெளியானது.

சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி!

இந்தப் படத்துக்குப் பிறகு சூர்யா நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ஹரி. இந்தப் படத்தின் கதை சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமாகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி!

இந்த நிலையில் புதிய படத்தின் கதையை உருவாக்குவதற்காக இயக்குநர் ஹரி, தனது உதவியாளர்கள் மூவருடன் நேற்று மாலை சுவிட்சர்லாந்துக்குக் கிளம்பினார்.

வழக்கமாக புதிய படத்துக்கு கதை விவாதிக்க, சென்னையில் தனி வீடு எடுத்து அலுவலகமாக மாற்றுவது வழக்கம். ஹரியோ தனது தற்காலிக அலுவலகத்தை சுவிட்சர்லாந்தில் போடுகிறார்.

சூர்யாவுக்காக கதை பண்ண உதவியாளர்களுடன் சுவிஸ் பறந்த ஹரி!

அப்படின்னா... தூத்துக்குடி, தாமிரபரணிக் கரையிலிருந்து வெளிநாட்டுக்கு ஷிப்டாகிறது கதைக் களம்?

 

வன்மம் விமர்சனம்

Rating:
2.5/5

எஸ் ஷங்கர்

நடிகர்கள்: விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனைனா, மதுசூதன் ராவ், ராஜா

ஒளிப்பதிவு: பாலபரணி

இசை: எஸ் எஸ் தமன்

பிஆர்ஓ: நிகில்

தயாரிப்பு: ஹிதேஷ் ஜெபக்

இயக்கம்: ஜெய்கிருஷ்ணா

கன்னியாகுமரியைக் கதைக் களமாகக் கொண்டு வந்திருக்கும் வன்மம், விஜய் சேதுபதிக்கு முதல் ஆக்ஷன் படம்.

விஜய் சேதுபதி - கிருஷ்ணா இருவரும் உயிர் நண்பர்கள். கிருஷ்ணா சுனைனாவைக் காதலிக்கிறார். அந்தக் காதலை கடுமையாக எதிர்க்கும் சுனைனாவின் அண்ணன் மதுசூதன், கிருஷ்ணாவைக் கொல்ல முற்பட, அதைத் தடுத்து நண்பனைக் காக்க விஜய் சேதுபதி முயல, எதிர்பாராதவிதமாக உயிரிழக்கிறார் மதுசூதன்.

வன்மம் விமர்சனம்

இந்த உண்மை தெரியாமல் மறைக்க ஏற்பாடுகள் செய்கிறார் விஜய் சேதுபதி. தனது செல்வாக்கு மற்றும் துணிச்சலைக் காட்டி போலீசை ஊமையாக்குகிறார்.

எல்லாம் நண்பனுக்காக. ஆனால் அந்த நண்பன் கிருஷ்ணா சந்தேகத்தோடு ஒரு வார்த்தையை விட, மனம் புண்படும் விஜய் சேதுபதி அந்த நிமிடமே கிருஷ்ணாவை ஒதுக்கிவிடுகிறார். இருவருக்கும் வன்மம் ஜென்மப் பகையாய் வளர்கிறது.

வன்மம் விமர்சனம்

இறந்துபோன மதுசூதன் குடும்பத்துக்கு ஆதரவாக விஜய் சேதுபதி செயல்பட, அந்த மதுசூதனின் எதிரியான ஜேபியிடம் சேர்கிறான் கிருஷ்ணா. பகை இன்னும் வீர்யமெடுக்கிறது. இந்தப் பகையை எப்படி இருவரும் வெல்கிறார் என்பது கடைசி ஒரு நிமிடக் காட்சி.

கதையில் பெரிய அழுத்தமில்லாததும், கிருஷ்ணாவின் பொருத்தமற்ற நடிப்பும் படத்தோடு நம்மை ஒன்றவிடாமல் செய்தாலும், விஜய் சேதுபதிக்காக இறுதிக் காட்சி வரை அமர்ந்திருக்கிறோம். அவரும் ஏமாற்றவில்லை. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஒரு இளைஞராகவே மாறியிருக்கிறார். வேட்டியை மடித்துக் கட்டியபடி புல்லட்டில் அவர் வருவதே தனி அழகுதான். ஆக்ஷன் காட்சிகளில் மிக அருமையாக நடித்துள்ளார். அதுவும் மதுசூதனுடன் மோதும் அந்தக் காட்சியில் அவர் உழைப்பும் படமாக்கப்பட்ட விதமும் அபாரம்.

வன்மம் விமர்சனம்

கிருஷ்ணாவுக்கு இந்த வேடமும் பொருந்தவில்லை, அவரும் உணர்ந்து நடித்ததாகத் தெரியவில்லை. சில காட்சிகளில் என்ன ரியாக்ஷன் காட்டுவதென்றே தெரியாமல் நிற்கிறார்.

சுனைனா இன்னும் ஒல்லிப்பிச்சானாக மாறியிருக்கிறார். சொன்ன வேலையைச் செய்துவிட்டுப் போகிறார். விஜய் சேதுபதிக்கு ஒரு ஜோடி இருக்கிறது. ஆனால் மூன்றே காட்சிகள்தான். பெரும்பாலும் அழுதுவடிந்துவிட்டுப் போகிறார் அந்தப் பெண்.

வன்மம் விமர்சனம்

கோபக்கார, ஆனால் நல்லவராக வரும் மதுசூதன், சூதின் வடிவாக வரும் ராஜா, முத்துராமன், போஸ் வெங்கட், விஜய் சேதுபதியின் தந்தையாக வரும் பெரியவர், மதுசூதனனின் ட்ரைவர் மற்றும் அடியாள்.. இவர்கள் தங்கள் பங்கை நிறைவாகவே செய்துள்ளனர்.

வன்மம் விமர்சனம்

இசை, பாடல்கள், பின்னணி இசை எதுவும் தேறவில்லை. ஆனால் பாலபரணியின் ஒளிப்பதிவு, நம்மை குமரி மாவட்ட லொகேஷன்களுக்கே அழைத்துப் போகிறது.

ஜெய்கிருஷ்ணாவுக்கு இது முதல் படம். காட்சிகளுக்கு தந்த முக்கியத்துவத்தை, கதையமைப்புக்குத் தரத் தவறியிருக்கிறார்.

வன்மம் விமர்சனம்

உயிரே போனாலும் நண்பனைக் காட்டிக் கொடுக்கமாட்டேன் என்று காலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் தமிழ் சினிமாவில், அப்படிக் காட்டிக் கொடுத்தாலும் அதை மன்னிக்கத் தெரிந்த பக்குவம் கொண்டதே நல்ல நட்பு என்று முடிகிறது படம். சாத்தியமா என்ன.. சொல்லுங்க மக்களே!

 

ரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி சென்சார் செல்கிறது!

சென்னை: ரஜினியின் ரஜினியின் லிங்கா நவம்பர் 24-ம் தேதி சென்சார் செல்கிறது!  

இப்போது படத்தின் கிராபிக்ஸ் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டன. நவம்பர் 24-ம் தேதி, அதாவது திங்களன்று இந்தப் படத்தை சென்சார் குழுவினர் பார்க்கின்றனர்.

சென்சார் சான்றிதழ் பெற்றபிறகு வெளியீட்டுத் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர்.

லிங்காவின் அனைத்து ஏரியாக்களும் ஏற்கெனவே விற்கப்பட்டுவிட்டன. தொலைக்காட்சி உரிமையை ஜெயா டிவி பெற்றுள்ளது.

 

உதவும் கரங்கள் மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

நடிகர் அருண் விஜய் தன்னுடைய பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் மையத்துக்கு சென்று அங்கிருந்த குழந்தைகள் இடையே கொண்டாடினார்.

உதவும் கரங்கள் மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு, உணவு வழங்கி, கேக் வெட்டி கொண்டாடினார் அருண் விஜய்.

உதவும் கரங்கள் மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

இதுகுறித்து அவர் கூறுகையில், "பிறந்த நாள் என்பது இல்லாதவர்கள் இடையே நாம் நெருங்கவும் , நம் வாழ்வின், பிறப்பின் அர்த்தத்தை தெரிந்துக் கொள்ளவும் வரும் நாளாகும். இந்த பிள்ளைகள் இடையே இந்த நாளை செலவழிப்பது என்பது மிகவும் மகிழ்ச்சிகரமானது. என்னுடைய வருகை இவர்கள் இடையே மகிழ்ச்சி தருமானால், மேலும் பல தருணங்கள் இவர்களுடன் இருக்க திட்டமிடுகிறேன்.

உதவும் கரங்கள் மையத்தில் பிறந்த நாள் கொண்டாடிய அருண் விஜய்

என் திரை உலக வாழ்க்கையில் முக்கியமான நாட்கள் இன்னும் சிறிது நாட்களில் மலர போகிறது. 'வா டீல்' மற்றும் அஜீத் சாருடன் இணைந்து நடித்து இருக்கும் 'என்னை அறிந்தால்' படங்கள் வெளியாக இருப்பது மகிழ்ச்சி ஊட்டுகிறது", என்றார்.

 

கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?

கோவா சர்வதேசத் திரைப்பட விழாவில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கோச்சடையான்' திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சியை ரஜினிகாந்த் புறக்கணித்துவிட்டார்.

2014-ம் ஆண்டுக்கான சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நடந்து வருகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் 75 நாடுகளை சேர்ந்த 179 படங்கள் திரையிடப்படுகின்றன. இவற்றில், சவுந்தர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து, ‘மோஷன் கேப்ச்சர்' தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ‘கோச்சடையான்' திரைப்படம் நேற்று திரையிடப்பட்டது.

கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?

இந்த படத்தின் திரையீட்டின்போது, கோச்சடையானில் கதாநாயகனாக நடித்திருந்த ரஜினிகாந்த் பங்கேற்பார் என விழா ஏற்பாட்டாளர்கள் முன்னர் அறிவித்திருந்தனர். ஆனால், ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை. அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் படத்தின் இயக்குனரான சவுந்தர்யா ஆகியோர் மட்டுமே பங்கேற்றனர்.

கோவாவில் 'கோச்சடையான்' படத்தை புறக்கணித்தாரா ரஜினி?

கோச்சடையான் திரைப்படம் விழாவில் திரையிடப்படுவதற்கு முன் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளவில்லை என்றும் அவர் வேறு சில பணிக்காக பெங்களூரு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தொகுப்பாளர்களால் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்யா ரஜினிகாந்த், "இந்த படத்தின் மூலம் எனக்கு சர்வதேசத் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்த படத்தின் மூலம் நான் சினிமாவுக்கு அறிமுகமானதை பெருமையாக கருதுகிறேன். எனது தந்தை இங்கு இல்லை. இந்தியாவில் முதன்முறையாக பர்ஃபார்மன்ஸ் கேட்ப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்தியாவுக்கு கொண்டுவர அவர் துணையாக இருந்தார்" என்றார்.

 

ஜோதிகாவின் தமிழ்ப் படம்... டெல்லியில் க்ளைமாக்ஸ்!

ஜோதிகா மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ள தமிழ்ப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி டெல்லியில் படமாக்கப்பட்டது.

சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகு படங்களில் நடிக்காமல் இருந்த ஜோதிகா, இப்போது ஹவ் ஓல்ட் ஆர் யூ என்ற மலையாளப் பட ரீமேக்கில் நடிக்கிறார்.

மலையாள நடிகர் திலீப் மனைவி மஞ்சு வாரியர், விவாகரத்து பெற்ற பிறகு நடித்து வெற்றி பெற்ற படம் இது. இதில் மஞ்சு வாரியர் கேரக்டரில் ஜோதிகா நடிக்கிறார்.

ஜோதிகாவின் தமிழ்ப் படம்... டெல்லியில் க்ளைமாக்ஸ்!

கணவனால் உதாசீனப் படுத்தப்பட்டு தாழ்வு மனப்பான்மையுடன் வருமானமின்றி கஷ்டப்படும் ஒரு பெண் அதில் இருந்து சக பெண்களுடன் இணைந்து வீட்டு மொட்டை மாடிகளில் காய்கறி தோட்டங்கள் வளர்த்து பொருளாதாரத்தில் உயர்ந்து தேசமே திரும்பி பார்க்கும்படி எப்படி புரட்சிக்கரமான பெண்ணாக மாறுகிறார் என்பதுதான் கதை.

ஜோதிகாவின் தமிழ்ப் படம்... டெல்லியில் க்ளைமாக்ஸ்!

இந்த புரட்சிப் பெண்ணை ஜனாதிபதியே அழைத்துப் பாராட்டுவது போல் படம் முடிகிறது.

ஜோதிகாவின் தமிழ்ப் படம்... டெல்லியில் க்ளைமாக்ஸ்!

இப்படத்தின் தமிழ் ரீமேக் படப்பிடிப்பு டெல்லியில் நடந்து வருகிறது. இதற்காக ஜோதிகா டெல்லியில் தங்கி நடித்து வருகிறார். முதலில் கிளைமாக்ஸ் காட்சியை இயக்குநர் ரோஷன் ஆண்ட்ரூஸ் படமாக்கினார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்தாலும், ஜோதிகா மிக இயல்பாக நடித்துக் கொடுத்தார்.

ஜோதிகாவின் தமிழ்ப் படம்... டெல்லியில் க்ளைமாக்ஸ்!

இந்தப் படத்தை நடிகர் சூர்யா தனது 2 டி எண்டர்டெயின்மென்ட் மூலம் தயாரிக்கிறார்.

 

கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டனர்! - ஸ்ரீதிவ்யா விளக்கம்

காட்டு மல்லி, நகர்ப்புறம் படங்களுக்கு நான் கொடுத்த தேதிகளை வீணடித்துவிட்டனர் என்று விளக்கம் அளித்துள்ளார் நடிகை ஸ்ரீதிவ்யா.

ஸ்ரீதிவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜீவா போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘காக்கிசட்டை', ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக பென்சில், விக்ரம் பிரபுவுடன் வெள்ளைத்துரை, அதர்வாவுடன் ஈட்டி படங்களில் நடித்து வருகிறார்.

கொடுத்த கால்ஷீட்டை வீணாக்கிவிட்டனர்! - ஸ்ரீதிவ்யா விளக்கம்

இவர் ஏற்கனவே காட்டுமல்லி, நகர்புறம் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு சில ஆயிரங்கள்தான் சம்பளம். இப்போது அரை கோடியை நெருங்கிவிட்டது அவர் சம்பளம்.

இந்த நேரத்தில் மீண்டும் அந்த பழைய படங்களில் நடிக்க அழைக்கின்றனர். ஆனால் நடிக்க தேதிகள் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டார் ஸ்ரீதிவ்யா.

இதனால் ஸ்ரீதிவ்யா மீது தயாரிப்பாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கூறியுள்ளனர் சம்பந்தப்பட்ட இரு படங்களின் தயாரிப்பாளர்களும்.

தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஸ்ரீதிவ்யா விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "நான் எல்லா படங்களுக்கும் ஒத்துழைப்பு கொடுத்து நடித்து வருகிறேன். என் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை.

காட்டுமல்லி படத்தில் நடிக்க இரண்டு வருடங்களுக்கு முன் ஒப்பந்தம் செய்யப்பட்டேன். ஆனால் அதன் படப்பிடிப்பு திடீரென நின்று போனது.

படப்பிடிப்பு குழுவினரிடையே நடந்த குழப்பங்களால் படவேலைகள் தொடர்ந்து நடக்கவில்லை. அதன்பிறகு தயாரிப்பாளர்களிடம் இருந்து எந்த தகவலும் எனக்கு வரவில்லை.

அதனால் வேறு படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து நடிக்க போய்விட்டேன். ‘காட்டுமல்லி' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் நடக்குமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. கொடுத்த கால்ஷீட்டையும வீணடித்துவிட்டு இப்போது வந்து நின்றால் நான் என்ன செய்வது?," என்றார்.

 

பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால்... இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத்குமார் நடிக்கும் புதிய படமான என்னை அறிந்தால் வரும் ஜனவரி மாதம் பொங்கலன்று வெளியாகும் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அஜீத்துக்கு ஜோடியாக இந்தப் படத்தில் அனுஷ்கா மற்றும் த்ரிஷா நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

பொங்கலுக்கு அஜீத்தின் என்னை அறிந்தால்... இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஏ எம் ரத்னம் தயாரித்துள்ள இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாவது இன்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் தரப்பில் அறிவித்துள்ளனர்.

அஜீத் இதில் இருவித தோற்றங்களில் நடித்துள்ளார். அதில் ஒன்று போலீஸ் வேடம். சமீபத்தில்தான் இதன் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றன.

விரைவில் படத்தின் இசை வெளியாக உள்ளது.

இந்தப் படம் பெங்கலுக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஜனவரி 13-ம் தேதியே வெளியாகிறது. இதைத் தொடர்ந்து வரும் 10 நாட்கள் தொடர்ந்து விடுமுறை தினங்கள் அல்லது சேர்ந்த மாதிரி விடுப்பெடுக்க வசதியான நாட்கள். எனவே இந்த பத்து நாட்களிலும் படம் பெரும் வசூலைக் குவிக்கும் என்று எதிர்ப்பார்க்கின்றனர்.

 

சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் ஒருகாலத்தில் சண்டைக்காரர்கள் தெரியுமா?.. சொல்வது அர்னால்டு

டெல்லி: நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் சண்டைக்காரர்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு பங்கேற்றார். அவர் பேசியதாவது:

சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் ஒருகாலத்தில் சண்டைக்காரர்கள் தெரியுமா?.. சொல்வது அர்னால்டு

1980களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே துறையில் இருந்தோம். எங்களில் ஒருவரை விட மற்றொருவர் எப்படி சிறப்பாக வெளிப்படுத்துவது என்பதிலேயே கவனம் செலுத்தினோம். அந்த நேரத்தில் எங்களுக்குள் எல்லாவற்றிலும் போட்டி இருந்தது. பாடி பில்டிங் முதல் படத்தில் எதிரிகளை கொன்று குவிப்பது, யார் படம் அதிக வசூலாகிறது என்பது வரை அனைத்திலும் கடும் போட்டி இருந்தது.

ஆனால், பத்தாண்டு கடும் போட்டிக்கு பிறகு 90களில் நாங்கள் நண்பர்களாகிவிட்டோம். எந்த ஒரு விஷயத்திலும் முதலில் உங்களை வெறுக்கும் ஒரு போட்டியாளர் தேவை. அதுதான் என்னை இந்த அளவு வளர்ச்சிக்கு கொண்டு வந்துள்ளது.

இப்போது நாங்கள் பக்குவமாக இருக்கிறோம். சில்வர்ஸ்டாரும் நானும் இணைந்து பல படங்களில் நடிக்கிறோம். நான் செய்யும் ஒவ்வொன்றையும் சிறப்பாக செய்யவே எப்போதும் விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பலமுறை தோல்வியை தழுவியிருக்கிறேன். ஆனால், ஒவ்வொருமுறை நீங்கள் தோல்வி அடையும்போதும் மீண்டும் எழுந்து இலட்சியத்தை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களை வெற்றியாளர் ஆக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

 

இந்தியாவுக்கு கிம் வரலையாமே? ஏமாந்த ரசிகர்கள்!

கடந்த ஒருவாரகாலமாகவே ஊடகங்களில் அதிகம் இடம் பிடித்தது கவர்ச்சி நடிகை கிம் கர்தாஷியானாகத்தான் இருக்கும். அவரது கவர்ச்சி போஸ்கள் வெளியானதில் இருந்தே பரபரப்பு பற்றிக்கொண்டது.

அதே சூட்டோடு சூட்டாக அவர் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க இந்தியா வருவதாக கூறப்படவே, ரசிகர்கள் அவரைக்காண ஆவலுடன் இருந்தனர். ஆனால் விசா பிரச்சனையால் கிம் கர்தாஷியான் வகை தற்போது ரத்தானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு கிம் வரலையாமே? ஏமாந்த ரசிகர்கள்!

தனியார் தொலைக்காட்சியில் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் ரியலிட்டி ஷோவான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் சனிக்கிழமையன்று கலந்து கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த மாடல் அழகியும் தொலைக்காட்சி நட்சத்திரமுமான கிம் கர்தாஷியன் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்தியா வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது.

இதனையொட்டி கிம் சார்பில் இருந்து ஒரு அறிக்கையும், நமஸ்தே இந்தியா என்ற தொடக்கத்துடன் வெளியிடப்பட்டது.இதனை தவிர பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது.

இந்த நிலையில் விசா தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகளால் அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டதாக அவரது தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது.

பிக் பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் சேனல் நடத்துகிறது. சல்மான் கான் இதன் ஒருங்கிணைப்பாளராக இருக்கிறார் இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் கலந்துரையாடுவதற்காக கிம் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரால் பங்கேற்க முடியாமல் போய்விட்டதுதான் ரசிகர்களுக்கு சோகமாகப் போய்விட்டது.

பிக்பாஸ்நிகழ்ச்சிக்கு பே வாட்ச் டி.வி நிகழ்ச்சி நடத்திய கவர்ச்சி நடிகை பமீலா ஆண்டெர்சன், டி வி நட்சத்திரம் ஜேட் குடி போன்றோரும் வந்து சிறப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நான் படம் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை- இளையராஜா விளக்கம்

சென்னை: நான் புதிய திரைப்படம் தயாரிப்பதாக வந்த செய்திகளில் உண்மையில்லை என்று இளையராஜா விளக்கம் அளித்துள்ளார்.

எண்பதுகளில் தனது சகோதரர் ஆர்டி பாஸ்கருடன் இணைந்து பாவலர் கிரியேஷன்ஸ் என்ற பெயரில் பல படங்களைத் தயாரித்துள்ளார் இளையராஜா. கோழி கூவுது, அலைகள் ஓய்வதில்லை, ராஜாதி ராஜா, சிங்கார வேலன் போன்றவையெல்லாம் பாவலர் கிரியேஷன்ஸ் படங்களே.

நான் படம் தயாரிப்பதாக வந்த செய்தியில் உண்மையில்லை- இளையராஜா விளக்கம்

இளையராஜா தனியாக இளையராஜா பிக்சர்ஸ் என்று தொடங்கி ஆனந்த கும்மி, கற்பூர முல்லை போன்ற படங்களைத் தயாரித்தார்.

பின்னர் படங்கள் தயாரிப்பதை நிறுத்திவிட்டது பாவலர் கிரியேஷன்ஸும் இளையராஜா பிக்சர்ஸும்.

இந்த நிலையில் இப்போது முன்னணி நாயகன் ஒருவரது கால்ஷீட்டை ராஜா பெற்றிருப்பதாகவும், விரைவில் படம் தயாரிக்கப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ள இளையராஜா, தனக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்லை என்றார்.

 

ஐந்து மீனவர்களைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி

சென்னை: தூக்கு தண்டனையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு தன் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஐந்து மீனவர்களைக் காப்பாற்றிய பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த அகஸ்டஸ், எமர்சன், வில்சன், பிரசாந்த், லாங்லெட் ஆகிய 5 மீனவர்களுக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்திருந்தது.

இந்த 5 மீனவர்களின் உயிரைக் காப்பாற்ற பிரதமர் மோடி எடுத்த முயற்சிகளும், ராஜ தந்திரங்களும் மிகவும் பாராட்டுக்குரியது.

ஐந்து மீனவர்களின் விடுதலையால் ஐந்து குடும்பங்கள் மட்டுமல்ல; ஒட்டுமொத்த தமிழகமே சந்தோஷம் அடைந்துள்ளது.

-இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 

மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு விஜய் வைத்த கோரிக்கை!

சென்னை: தமிழக மீனவர்கள் அச்சுறுத்தலின்றி தங்கள் தொழிலை மேற்கொள்ளத் தக்க வகையில் பாதுகாப்பு கொடுங்கள் என பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார் நடிகர் விஜய்.

போதைப் பொருள் கடத்தியதாக போடப்பட்ட பொய்க் குற்றச்சாட்டில் இலங்கை நீதி மன்றத்தால் தூக்கு தண்டனை பெற்ற 5 தமிழ் மீனவர்கள், பிரதமர் மோடியின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டனர்.

மீனவர்கள் விவகாரம்: பிரதமருக்கு விஜய் வைத்த கோரிக்கை!

இவர்கள் ஐந்து பேரும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிட்டனர்.

இவர்களைக் காப்பாற்றியதற்காக பிரதமர் மோடிக்கு விஜய் நன்றி கூறியிருந்தார். மேலும் மீனவர்கள் பாதுகாப்புக்கு ஆவண செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தினசரி கடலுக்குள் சென்று மீன் கிடைத்தால் மட்டுமே வாழ்க்கை என்று போராடுபவர்கள் மீனவர்கள். இப்படி தினம் தினம் வாழ்க்கையுடன் போராடும் மீனவர்களுக்கு இப்படி தேவையற்ற தொந்தரவுகள், மேலும் அச்சுறுத்தலையும் தரும்.

இந்த சமூக மக்கள் இனி வரும் காலத்திலாவது பயமின்றி நிம்மதியாக தொழில் செய்ய தகுந்த பாதுகாப்பை ஏற்படுத்தித் தர பிரதமர் மோடி முயற்சி எடுக்க வேண்டும் என்று இதன்மூலம் வேண்டுகோள் வைக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

 

பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு- திரையுலகினர் வாழ்த்து

சென்னை: சென்னையில் நடந்த நடிகர் பாண்டியராஜன் மகன் பல்லவராஜனின் திருமண வரவேற்பில் திரையுலகினர் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

நடிகரும் இயக்குநருமான பாண்டியராஜன் - வாசுகி தம்பதிகளின் மகன் பல்லவராஜனுக்கும் பல்லவிக்கும் திருமண வரவேற்பு நேற்று சென்னையில் நடந்தது.

பாண்டியராஜன் மகன் திருமண வரவேற்பு- திரையுலகினர் வாழ்த்து

இந்த நிகழ்ச்சிக்கு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரமுகர்கள் அனைவருமே நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினர்.

முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன், காங்கிரஸ் தலைவர் கே தங்கபாலு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன், முன்னாள் மேயர் மா சுப்பிரமணியன் ஆகியோர் மணமக்களை வாழ்த்தினர்.

இயக்குநர்கள் எஸ்பி முத்துராமன், கே பாக்யராஜ், பார்த்திபன், தரணி, வி சேகர், முக்தா வி சீனிவாசன், சேரன், ஜெயம் ராஜா, எஸ் ஏ சந்திரசேகரன், பேரரசு, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் ஜி தியாகராஜன், அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன், கே ராஜன் ஆகியோரும் நிகழ்ச்சிக்கு வந்து வாழ்த்தினர்.

நடிகர்கள் சிவகுமார், பிரபு, கவுண்டமணி, ராமராஜன், லிவிங்ஸ்டன், பரத், ராஜேஷ், விஜயகுமார், நடிகைகள் ரேகா, வடிவுக்கரசி, மீனா, அனுராதா, சரண்யா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

முன்னதாக திமுக தலைவர் கருணாநிதியிடம் அழைப்பிதழ் கொடுத்து வாழ்த்துப் பெற்றார் பாண்டியராஜன்.

 

முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை: மோகன்லால்

திருவனந்தபுரம்: முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை.ஆனால், என் பார்வையில், நீ முத்தமிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று நடிகர் மோகன்லால் கருத்து கூறியுள்ளார். முத்தப்போராட்டம் என்ற பெயரில் யாரும் பதற்றத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

கேரள மாநிலம் கொச்சியில் சில அமைப்பினர் கடந்த 2ஆம்தேதி ‘கிஸ் ஆப் லவ்' என்ற பெயரில் முத்தப் போராட்டம் நடத்தினர்.

முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை: மோகன்லால்

இதற்கு கல்லூரி மாணவ-மாணவிகள் மத்தியில் ஆதரவும், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியது. சமீபத்தில் சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் இந்தப் போராட்டத்தில் குதித்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தவே, பல்வேறு தரப்பினரும் இப்போராட்டம் குறித்து கருத்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த போராட்டம் பற்றி மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மோகன்லால், தனது வலைதளத்தில் கருத்து கூறியுள்ளார்.

பொதுமக்கள் தினமும் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதுபற்றி அரசியல்வாதிகள் அக்கறை காட்டுவது இல்லை. கலாச்சாரத்தை காப்பாற்றுவதாகக்கூறி விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில அமைப்புகளும் இதில் தங்களை இணைத்து கொள்கின்றன.

மாணவர்களும், மாணவிகளும் பேசி கொள்வதற்கு தடை விதிப்பது சரி அல்ல. அதே நேரம் முத்தப் போராட்டம் என்ற பெயரில் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இதனால் யாருக்கு என்ன பயன்?

ஆண், பெண் என்றாலே தவறான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது. நட்பு, அன்பு, சகோதர பாசம், தாய்-மகன் உறவு என எத்தனையோ பாசஉறவுகள் உள்ளன. அவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் சம்பவங்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், அரசியல் கட்சிகள் அக்கறை காட்டவில்லை. இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு எதிராக போராட வேண்டும்.

முத்தமிடுவதும், முத்தமிடாமல் போவதும் அவரவர் உரிமை.ஆனால், என் பார்வையில், நீ முத்தமிடக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.

ஒருவேளை இது போன்ற காட்சிகளை பார்ப்பவர்களுக்கு அது, அநாகரீகமாக தெரிந்தால் அவர்கள் அந்த இடத்தை விட்டு போய் விடலாம். இதுதான் அறிவார்ந்த செயலாக இருக்கும் என கருதுகிறேன்.

 

”ஆ” என்று அலறத்தான் போகின்றீர்கள் ஆ திரைப்படத்தைப் பார்த்தால் – இந்த வார வெளியீடு!

சென்னை: நீங்கள் எதற்கெல்லாம் "ஆ" என்று அலறுவீர்கள்? கரப்பான் பூச்சியைப் பார்த்தால், பல்லியைப் பார்த்தால் ஏன் பேயைப் பார்த்தாலும்தான்.

அப்படித்தான், தன்னுடைய புதிய திகில் திரைப்படத்திற்கு "ஆ" என்றே பெயர் வைத்துள்ளனர் "அம்புலி" படத்தின் இயக்குனர்களான ஹரி-ஹரேஷ் இரட்டையர்.

”ஆ” என்று அலறத்தான் போகின்றீர்கள் ஆ திரைப்படத்தைப் பார்த்தால் – இந்த வார வெளியீடு!

நள்ளிரவும் "ஆ" என்ற அலறலும் ஒன்றுக்கொன்று நெருக்கமானவை. நள்ளிரவு 12 மணியும், "ஆ" என்றஅலறலும் ரசிகர்களை உச்ச கட்டத்தில் பயமுறுத்தும் கூட்டணியாகும்.

"ஆ என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும். இந்த வார்த்தையைவிட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை தமிழ் மொழியில் கிடையேவே கிடையாது. அதனால்தான் இதனையே படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறோம்" என்கின்றனர் இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரேஷ்.

ஆவியுலகை பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் உலகமெங்கும் சுற்றி வரும்போது, அவர்களுக்கு ஏற்படும் பயங்கரமான அனுபவம்தான் இந்த "ஆ". ஐந்து வித்தியாசமான தளங்களில் நடக்கும் திகில் கதை இது.

ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஒரு ஆள் அரவமற்ற நெடுஞ்சாலை, வங்க கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஏடிஎம் ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்புதான் இந்த ஆ திரைப்படம்.

இப்படத்தில் "அம்புலி" கணேஷ், சிம்ஹா, மேஹ்னா, பாலா, எம் எஸ் பாஸ்கர், பாஸ்கி மற்றும் பலர் இதில் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இப்படத்தின் பாடல்களையே மிகவும் திகிலுடன் இரவு 12 மணிக்கு வெளியிட்டு பட்டையைக் கிளப்பினர் படக்குழுவினர்.